சாரு நிவேதிதா's Blog, page 145

September 16, 2022

Charu Nivedita Goes Home

https://artreview.com/charu-nivedita-... Published in the ArtReview Asia, Autumn 2022 issue
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 16, 2022 00:21

September 15, 2022

விருது: கடிதம்

அன்புள்ள சாரு நிவேதிதா சார்,                            உங்களுக்கு விஷ்ணுபுரம் விருது  கண்டிப்பாக அளிக்கப்படும் என்று உங்களையும், ஜெயமோகன் சாரையும் படிக்கும் எளிய வாசகர் கூட கணித்து விடக் கூடியதாகவே இருந்தது. ஆனால் எந்த வருடம் என்பதைத்தான் யாராலும் யூகிக்க முடியவில்லை. விஷ்ணுபுரம் விருது தரமான எழுத்தாளர்களை முன்வைப்பது. அது உங்களுக்கு நூறு சதவீதம் பொருந்தும். மற்றும் நீங்களும் ஜெயமோகன் சாரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 06:24

குகை வாழ்க்கை

அன்புள்ள சாருவுக்கு, இதுதான் நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். இப்போதும்கூட எழுத வேண்டுமென்று தோன்றியதற்குக் காரணம் உண்டு. பதினைந்து வருடங்களாக நான் உங்கள் வாசகி. ஆரம்பித்தில் சுஜாதா என்னுடைய அலமாரியை நிறைத்தவர். பிறகு ஜெயகாந்தன், எஸ். ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என வாசித்துவிட்டு ஒருசில கதைகளுடன் நிறுத்திவிட்டேன். தமிழிலக்கியத்தில் நான் கேள்விபட்ட முதல் அழகான புனைப்பெயர் உங்களுடையது. அதன் வசீகரம் அப்படி. எங்கோ எதிலோ உங்கள் பெயர் என்னை சற்று நிறுத்தியது.  உங்கள் புத்தகங்களை வாங்கி வாசித்தேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 15, 2022 05:42

September 14, 2022

பாறை

அடிக்கடி ஜெயமோகனை முன்னுதாரணமாகக் காண்பித்துக் கொண்டிருப்பார் என் ஆருயிர் நண்பர் ஒருவர்.  நிறைய மதிப்பெண் வாங்கும் பக்கத்து வீட்டுப் பையனை அடிக்கடி உதாரணம் காட்டும் ஓர் உன்னதத் தாயின் மனநிலையிலேயே இருப்பவர் அந்த நண்பர் என்பதால் அவர் சொல்வது எதையும் நான் காதில் போட்டுக் கொள்வதில்லை.  இருந்தாலும் அவரது பேரன்பின் காரணமாக அவரும் சொல்வதை நிறுத்துவதில்லை.  அப்படி அவர் சொல்லும் ஒரு விஷயம், ஜெயமோகன் ஒரு பாறை மாதிரி.  அவர் யார் கருத்தையுமே கேட்க மாட்டார்.  அவர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 22:32

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு

நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு வந்து சேர்ந்து விட்டது. கையெழுத்திட்டு பதிப்பகத்திடம் கொடுத்து அவர்கள் அதை குரியர் செய்ய வேண்டும். உங்கள் கைகளுக்குக் கிடைக்க இரண்டொரு தினங்கள் எடுக்கும். இதுவரை எனக்கு முகவரி தராத நண்பர்கள் உடனடியாக முகவரியை அனுப்பித் தாருங்கள். charu.nivedita.india@gmail.com
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 02:58

பாண்டிச்சேரி சந்திப்பு தொடர்பாக…

சந்திப்புக்கு வருபவர்கள் புகை பிடிக்கலாம். அது ஒரு திறந்த வெளி என்பதால் புகைக்குத் தடையில்லை. ஆனால் குடித்த சிகரெட் துண்டுகளை கண்ட இடத்தில் போடக் கூடாது. மேலும், பல புகைஞர்கள் செடி வைக்கப்பட்ட தொட்டிகளில் நசுக்கிப் போடுகிறார்கள். இதுவரை நான் வந்த எல்லா சமயங்களிலும் செடித் தொட்டிகளில் சிகரெட் துண்டுகளைப் பார்த்து அதையெல்லாம் எடுத்து எடுத்து குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் யார் வளர்த்தது? அவர்களைத்தான் சந்தித்துப் பேச விரும்புகிறேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். செடிக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 02:33

ஏன் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறீர்கள்?

எனக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது தொடர்பாக ஜெயமோகனின் வலைத்தளத்தில் தினமும் அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரமாகின்றன. என் வாசகர்கள் பலரிடமும் அவற்றைப் படிக்கிறீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் கூட படிப்பதாகத் தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை சாருவைப் படிக்காதவர்கள், இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கியிருப்பவர்கள், இதுவரை என் மீது வெறுப்பாக இருந்தவர்கள் என்று பல சாரார் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் கூட நீங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுதான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 14, 2022 00:47

September 12, 2022

நான்தான் ஔரங்ஸேப்…

முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2022 00:14

September 11, 2022

பாண்டிச்சேரி சந்திப்புக்கு வரலாமா?

வணக்கம் சாரு, மிக மிகத் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும், ஒரு வரி வாழ்த்துச் செய்திக்கு பதில் இந்த விருது குறித்த என் பார்வையை உங்களுக்குத் தெரியபடுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் நான் எதையும் எழுதும் நிலையில் இல்லை,  இப்பொழுது நிலைமை கொஞ்சம் சீராகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த விருது உங்களுக்கு கொடுப்பதன் மூலம், விஷ்ணுபுரம் விருதுக்குப் பெருமை சேர்கிறது என்ற அளவிலே என் புரிதல் இருந்தது, ஆனால் அது மட்டுமே முழுமை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2022 21:17

நூலகங்கள், மாணவர்கள்…

பிரியத்திற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் முத்து விஜயன்.  பொறியியல் இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறேன். அதாவது முடித்து விட்டேன் (இப்பொழுது தான்) இரண்டு அரியர் விழுந்து விட்டது. இப்போது உங்கள் வலைத்தளத்தில் “மாணவர்களுக்கு…” என்றொரு பதிவைப் படித்தேன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் படிக்க விரும்பும் மாணவர்கள் எனக்கு எழுதுங்கள், குறைந்த விலைகக்காவது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன் என எழுதி இருந்தீர்கள். படித்ததும் வியப்பாக இருந்தது. நாமும் இவருக்கு எழுதலாமா என கொஞ்சம் அல்பமாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 11, 2022 16:57

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.