சாரு நிவேதிதா's Blog, page 146
September 14, 2022
நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு
நான்தான் ஔரங்ஸேப்… சிறப்புப் பதிப்பு வந்து சேர்ந்து விட்டது. கையெழுத்திட்டு பதிப்பகத்திடம் கொடுத்து அவர்கள் அதை குரியர் செய்ய வேண்டும். உங்கள் கைகளுக்குக் கிடைக்க இரண்டொரு தினங்கள் எடுக்கும். இதுவரை எனக்கு முகவரி தராத நண்பர்கள் உடனடியாக முகவரியை அனுப்பித் தாருங்கள். charu.nivedita.india@gmail.com
Published on September 14, 2022 02:58
பாண்டிச்சேரி சந்திப்பு தொடர்பாக…
சந்திப்புக்கு வருபவர்கள் புகை பிடிக்கலாம். அது ஒரு திறந்த வெளி என்பதால் புகைக்குத் தடையில்லை. ஆனால் குடித்த சிகரெட் துண்டுகளை கண்ட இடத்தில் போடக் கூடாது. மேலும், பல புகைஞர்கள் செடி வைக்கப்பட்ட தொட்டிகளில் நசுக்கிப் போடுகிறார்கள். இதுவரை நான் வந்த எல்லா சமயங்களிலும் செடித் தொட்டிகளில் சிகரெட் துண்டுகளைப் பார்த்து அதையெல்லாம் எடுத்து எடுத்து குப்பையில் போடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். உங்களையெல்லாம் யார் வளர்த்தது? அவர்களைத்தான் சந்தித்துப் பேச விரும்புகிறேன். இனிமேல் அப்படிச் செய்யாதீர்கள். செடிக்கு ... Read more
Published on September 14, 2022 02:33
ஏன் எப்போதும் அழுமூஞ்சியாக இருக்கிறீர்கள்?
எனக்கு விஷ்ணுபுரம் விருது கிடைத்தது தொடர்பாக ஜெயமோகனின் வலைத்தளத்தில் தினமும் அவரது வாசகர்கள் எழுதும் கடிதங்கள் பிரசுரமாகின்றன. என் வாசகர்கள் பலரிடமும் அவற்றைப் படிக்கிறீர்களா என்று கேட்டேன். ஒருத்தர் கூட படிப்பதாகத் தெரியவில்லை. அது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இதுவரை சாருவைப் படிக்காதவர்கள், இப்போது புதிதாகப் படிக்கத் தொடங்கியிருப்பவர்கள், இதுவரை என் மீது வெறுப்பாக இருந்தவர்கள் என்று பல சாரார் என்னைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்வதில் கூட நீங்கள் ஆர்வம் காட்டாமல் இருப்பதுதான் ... Read more
Published on September 14, 2022 00:47
September 12, 2022
நான்தான் ஔரங்ஸேப்…
முன்பதிவு செய்த “நான்தான் ஔரங்ஸேப்…”புத்தகம் கிடைக்கப்பெற்றது. வீட்டில் புத்தகத்தை பிரித்துப் பார்த்துவிட்டு எழுத்தாளரின் கையெழுத்துடன் வந்திருப்பதைக் கண்டு… அதிகப்பணம் செலுத்தி வாங்கிவிட்டு நான் அதை அவர்களிடம் மறைப்பதாக சந்தேகத்துடன் கேட்டார்கள். எனக்கே கையெழுத்து சமாச்சாரம் இப்போதுதான் தெரியும் என்று அவர்களுக்கு தெளிவுபடுத்தினேன். அடுத்ததாக….நேரடியாக எனது பெயர் குறிப்பிட்டு இருப்பதைப் பார்த்து நீங்கள் எனக்கு மிக நெருக்கமான நண்பரா என்று கேட்டார்கள். “என்னது எனது பெயரை குறிப்பிட்டிருக்கிறாரா….” அதைப் பார்த்ததும் என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை, செம ... Read more
Published on September 12, 2022 00:14
September 11, 2022
பாண்டிச்சேரி சந்திப்புக்கு வரலாமா?
வணக்கம் சாரு, மிக மிகத் தாமதமான வாழ்த்துக்களுக்கு மன்னிக்கவும், ஒரு வரி வாழ்த்துச் செய்திக்கு பதில் இந்த விருது குறித்த என் பார்வையை உங்களுக்குத் தெரியபடுத்த வேண்டும் என ஆசைப்படுகிறேன். ஆனால் நான் எதையும் எழுதும் நிலையில் இல்லை, இப்பொழுது நிலைமை கொஞ்சம் சீராகி கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் இந்த விருது உங்களுக்கு கொடுப்பதன் மூலம், விஷ்ணுபுரம் விருதுக்குப் பெருமை சேர்கிறது என்ற அளவிலே என் புரிதல் இருந்தது, ஆனால் அது மட்டுமே முழுமை இல்லை என்பதை இப்போது உணர்கிறேன். ... Read more
Published on September 11, 2022 21:17
நூலகங்கள், மாணவர்கள்…
பிரியத்திற்குரிய சாரு நிவேதிதா அவர்களுக்கு, நான் முத்து விஜயன். பொறியியல் இறுதியாண்டு படித்து கொண்டு இருக்கிறேன். அதாவது முடித்து விட்டேன் (இப்பொழுது தான்) இரண்டு அரியர் விழுந்து விட்டது. இப்போது உங்கள் வலைத்தளத்தில் “மாணவர்களுக்கு…” என்றொரு பதிவைப் படித்தேன். நான் தான் ஔரங்ஸேப் நாவல் படிக்க விரும்பும் மாணவர்கள் எனக்கு எழுதுங்கள், குறைந்த விலைகக்காவது நண்பர்கள் மூலம் ஏற்பாடு செய்கிறேன் என எழுதி இருந்தீர்கள். படித்ததும் வியப்பாக இருந்தது. நாமும் இவருக்கு எழுதலாமா என கொஞ்சம் அல்பமாக ... Read more
Published on September 11, 2022 16:57
நான்
நான் நின்ற நிலையிலும் ஓடிக் கொண்டிருக்கும் புரவி தூளியில் இருக்கும் போதும் விரைந்து கொண்டிருக்கும் அம்பு பறக்காமலிருக்கும்போதும் பறந்து கொண்டிருக்கும் பறவை பெய்யாமல் இருக்கும்போதும் பெய்து கொண்டிருக்கும் மழை தணிந்து கிடக்கும் போதும் எரிந்து கொண்டிருக்கும் தழல் பேசிக் கொண்டிருக்கும்போதும் உள்ளுறைந்து கிடக்கும் மௌனம் அமைதியாய் சென்று கொண்டிருந்தாலும் ஆனையை விழுங்கும் சுழல் எழுதாமல் இருக்கும்போதும் எழுதிக் கொண்டிருக்கும் கவி
Published on September 11, 2022 09:29
மாணவர்களுக்கு…
கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்கு ஒரு மாணவரிடமிருந்து ஒரு வாட்ஸப் செய்தி வந்தது. கையெழுத்திட்ட நான்தான் ஔரங்ஸேப் கிடைத்தது என்ற சந்தோஷ செய்தியைப் பகிர்ந்து கொண்டார். வீட்டில்தான் கொஞ்சம் திட்டு விழுந்தது, ஆயிரம் ரூபாய் கொடுத்து புத்தகம் வாங்கியதற்காக என்று எழுதியிருந்தார். அவர் சேமித்து வைத்திருந்த அறுநூறு ரூபாயுடன் பெற்றோரிடமிருந்து வாங்கிய நானூறையும் சேர்த்து முன்பதிவுத் திட்டத்தில் புத்தகத்தை வாங்கினாராம். நீங்கள் ஜீபேயில் இருக்கிறீர்களா, ஐநூறு ரூபாய் அனுப்பி விடுகிறேன், அதை உங்கள் பெற்றோரிடம் கொடுத்து விடுங்கள் ... Read more
Published on September 11, 2022 08:52
வாழ்வின் முதல் வேண்டுதல்
அன்புள்ள சாரு, நான் கடவுள் நம்பிக்கை கொண்டவள். ஆனால் இதுவரை கடவுளிடம் ஏதும் கேட்டதில்லை. வேண்டிக் கொண்டது இல்லை. அதிகமாகக் கோவிலுக்கும் செல்வதில்லை. ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்தில் உள்ள பகவதி அம்மன் கோவிலுக்கு மட்டும் செல்வதுண்டு. அது எங்கள் குலதெய்வம் என்பதால் போய்த்தான் ஆக வேண்டும். ஆனால் எனக்கு சில ஆன்மீக அனுபவங்கள் கிடைத்ததுண்டு. அதை நான் யாரிடமும் சொல்வதில்லை. சொன்னால் பைத்தியக்காரி பட்டமும் கேலியும் கிண்டலும்தான் கிடைக்கும். ஆனால் சில மாதங்களுக்கு முன் பகவதி அம்மனிடம் ... Read more
Published on September 11, 2022 02:10
September 9, 2022
பாண்டிச்சேரி சந்திப்பு: அராத்து
சாரு நிவேதிதா புதிய இளம் வாசகர்களை சந்திக்க விரும்புகிறார். இளம் என்றால் “மனதில் இளம் “. பல புதிய வாசக நண்பர்களுக்குத் தயக்கமாக இருக்கும் . பல சீனியர் ஆசாமிகள் இருப்பார்கள், சாரு வேறு கோபக்காரர் என்ற பிம்பம். அதனால் இந்த முறை மூத்த முதிய வாசகர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். நானும் வினீத்தும் கலந்துகொண்டாலும் , ஆர்கனைஸ் செய்யும் வேலைகளில் மட்டுமே ஈடுபடுவோம். முற்றிலும் புதிய வாசகர்கள் மட்டும் சாருவுடன் கலந்துரையாடலாம். சாரு நிவேதிதாவின் புத்தகங்களைப் ... Read more
Published on September 09, 2022 22:29
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

