சாரு நிவேதிதா's Blog, page 141
October 6, 2022
நோபல்
அன்பின் சாரு! இந்த ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு Annie Ernauxவுக்கு என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரெஞ்சு இலக்கியம், வாழ்க்கை குறித்து அதிகம் பேசிய தாங்கள் இதைக் குறித்து ஏதும் சொல்லுங்களேன்… நன்றி கொள்ளு நதீம் ஆம்பூர். அன்பு நதீம், எட்டு ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் ரவிக்குமாரிடமிருந்து (விடுதலைச் சிறுத்தை) ஒரு தொலைபேசி அழைப்பு. ”ஒரு ஃப்ரெஞ்ச் எழுத்தாளருக்கு நோபல் அறிவித்திருக்கிறார்கள். அவர் எப்படி?” என்று கேட்டார். அப்போது நான் பாத்ரிக் மோதியானோ பற்றிக் கேள்விப்பட்டதில்லை. ஃப்ராங்கஃபோன் ... Read more
Published on October 06, 2022 20:41
நான்தான் ஔரங்ஸேப்: புரவி இலக்கிய கூடுகை
வரும் பதினாறாம் தேதி ஓசூரில் நான்தான் ஔரங்ஸேப் நாவல் பற்றிய மதிப்புரை சந்திப்பு நிகழ உள்ளது. அந்தத் தேதியில் நான் தாய்லாந்தில் இருப்பேன். அதனால் கலந்து கொள்ள இயலாது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளுங்கள். விலாசம் அழைப்பிதழில் உள்ளது.
Published on October 06, 2022 19:49
October 4, 2022
உற்பத்தியும் சிருஷ்டியும்…
நேற்று (3.10.2022) அபிலாஷ் சந்திரன் எழுதிய ”ஒரு தலையுடன் வாழ்தல்” என்ற கட்டுரையைப் படித்து விட்டு இந்தக் கட்டுரையைப் படியுங்கள். அபிலாஷின் கட்டுரைக்கான என் எதிர்வினைதான் இது. சொல்லப் போனால் அபிலாஷ் எழுதியிருப்பதும் இப்போது நான் எழுதுவதும் ஒன்றேதான். அவர் தன் கட்டுரையை மனம் நொந்த நிலையில் எழுதியிருக்கிறார். புத்திசாலி வாசகர்கள் அதைப் புரிந்து கொண்டிருப்பார்கள். ஆரண்ய காண்டத்தில் வரும் காளையன் சொல்வார் அல்லவா, ”நமக்கு எங்கேடா நல்லது நடக்கப் போகுது?” என்று, அந்த மனநிலையில் எழுதப்பட்டதுதான் ... Read more
Published on October 04, 2022 03:27
October 3, 2022
ஒரு தலையுடன் வாழ்வது: அபிலாஷ் சந்திரன்
(என் நண்பர் அபிலாஷ் ஃபேஸ்புக்கில் எழுதியதை அவரிடம் அனுமதி கேட்காமல் இங்கே பிரசுரம் செய்கிறேன். ஆட்சேபிக்க மாட்டார் என நம்புகிறேன். மிக முக்கியமான கட்டுரை. இது பற்றிய என் கருத்தை கொஞ்ச நேரத்தில் தனியாக எழுதுகிறேன். இப்போது பென் ஹர் பார்த்துக் கொண்டிருக்கிறேன். பொன்னியின் செல்வனால் ஏற்பட்ட மன உளைச்சலைத் தவிர்ப்பதற்கு பென் ஹர் தான் உதவுகிறது. என்னைப் போல் பொன்னியின் செல்வனால் மன உளைச்சல் அடைந்த சிறுபான்மையினருக்கும் பென் ஹரையே சிபாரிசு செய்கிறேன்…) சாரு, ஏன் ... Read more
Published on October 03, 2022 06:18
தமிழ்ப்பிரபாவுக்கு ஒரு பதில்
”இது போன்ற ஓரிரு குறைகள் இருந்தாலும் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனாலும் அது பற்றி நான் அப்போது எழுதாததற்குக் காரணம், எழுத்தாளர்களெல்லாம் சினிமா இயக்குனர்களின் ஊழியர்களா என்ன என்ற கோபம்தான். நட்புக்காக எழுதலாம். தவறே இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட போது என் நட்பு வட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரபாவோ, பா. ரஞ்சித்தோ எனக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை. பெஸ்ட் ... Read more
Published on October 03, 2022 03:20
October 2, 2022
பொன்னியின் செல்வன் : மதிப்புரைக்கு ஒரு எதிர்வினை
சினிமா விமர்சனங்களிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று முடிவு எடுத்து ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. விமர்சனம் எழுதினால் அதன் விளைவாக சினிமா உலக நண்பர்களின் நட்பை இழக்கிறேன் என்பது உண்மைதான் என்றாலும் நான் சினிமா விமர்சனங்கள் எழுதாமல் இருப்பதற்கு அது காரணம் அல்ல. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். சினிமா மனிதர்கள்தான் இங்கே கடவுள்கள். ரஜினி ஒரு கடவுள், கமல் கடவுள், அஜித் கடவுள், விஜய் கடவுள், சூர்யா கடவுள், தனுஷ் கடவுள், இளையராஜா கடவுள்களின் கடவுள். இதுதான் ... Read more
Published on October 02, 2022 22:59
சினிமாவும் சுவாரசியமும்
ஜனரஞ்சகக் கதைகளோ அல்லது ஜனரஞ்சக சினிமாவோ எப்படித் தொடங்க வேண்டும் என்பதற்குக் கதையிலிருந்தும் சினிமாவிலிருந்தும் ஒவ்வொரு உதாரணம் தருகிறேன். தருண் தேஜ்பாலின் முகமூடிகளின் பள்ளத்தாக்கு நாவலில் வரும் கதைசொல்லி, ”இன்று இரவுக்குள் என்னைக் கொன்று விடுவார்கள், அதற்குள் நான் என்னுடைய நெடிய கதையை உங்களுக்குச் சொல்லியாக வேண்டும்” என்று ஆரம்பிக்கிறான். எடுத்த எடுப்பிலேயே நம்மைத் தொற்றிக் கொள்கிறது சுவாரசியம். கதைகளில் கூட இந்த அம்சம் இல்லாமல் இருக்கலாம். ஆனால் சினிமாவிலோ நாடகத்திலோ இது இருந்தே ஆக வேண்டும். ... Read more
Published on October 02, 2022 07:58
October 1, 2022
ஒரு வாக்குவாதம், ஒரு வேண்டுகோள்…
டார்ச்சர் கோவிந்தனிடம் நேற்று நான் பொன்னியின் செல்வன் படம் பார்த்ததை மறைத்து விட வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஏனென்றால், நேற்று காலையே அவர் படத்தைப் பற்றி ஏகமாய்ப் புகழ்ந்திருந்தார். ஆனால் சினிமா தெரிந்த மற்ற சில நண்பர்கள் ரொம்பவும் எதிர்மறையாகச் சொல்லியிருந்தார்கள். என்னைப் பொருத்தவரை நீங்கள் என்னதான் சொன்னாலும் அது எதுவுமே என்னை பாதிக்காது. எனக்கும் படத்துக்குமான உறவு ஒன்றுதான் நிற்கும். கமல்ஹாசனின் விக்ரம் படத்தையே நான் ஆஹா ஊஹூ என்று பாராட்டவில்லையா? பொழுதுபோக்குப் படம் ... Read more
Published on October 01, 2022 21:17
பொன்னியின் செல்வன் : மதிப்புரை
சில மாதங்களுக்கு முன்பு தமிழில் ஒரு வெப்சீரீஸ் பிரபலமாகப் பேசப்பட்டது. நான் தமிழ் வெப்சீரீஸே பார்ப்பதில்லை. தமிழ் வெப்சீரீஸ் இன்னும் மழலைப் பருவத்தில் இருக்கிறது என்பது என் அனுமானம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட வெப்சீரீஸைப் பார்க்கச் சொல்லி என் நண்பர்கள் பலர் எனக்குப் பரிந்துரை செய்தார்கள். என்னால் அதன் ஒரு எபிசோடைக் கூடப் பார்க்க முடியவில்லை. அப்படி ஒரு குப்பை. ஆனால் என்னால் அது பற்றி ஒரு வார்த்தை எழுத முடியவில்லை. என் நெருங்கிய நண்பர்தான் அதற்குத் ... Read more
Published on October 01, 2022 11:17
பொன்னியின் செல்வன் டிக்கட் (ஒரு குறுங்கதை)
காலையில் எங்கள் குடியிருப்பு மேனேஜர் தன் குடும்பத்துக்காக நான்கு பொன்னியின் செல்வன் டிக்கட் ஏற்பாடு செய்து தர முடியுமா என்று என் பத்தினியிடம் கேட்டிருக்கிறார். மேனேஜரால்தான் என் அன்றாட வாழ்க்கை பளுவில் தொண்ணூறு சதவிகிதம் குறைகிறது. நானாவிதமான கடைகளுக்குச் செல்வதிலிருந்து மின்வாரியம், ரேஷன் கடை என்று எல்லா அலைச்சல்களையும் செய்வது அவர்தான். பத்தினியும் தன் செல்வாக்கைக் காண்பிப்பதற்காகவோ அல்லது வேறு நல்ல எண்ணத்திலோ நான் சாருவிடம் சொல்லி வாங்கித் தருகிறேன் என்று மேனேஜரிடம் வாக்குக் கொடுத்து விட்டாள். ... Read more
Published on October 01, 2022 02:49
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

