சாரு நிவேதிதா's Blog, page 136

November 2, 2022

த அவ்ட்ஸைடர் 18: சொமோஸா ஸ்டேடியத்தில் சொமோஸா சிலையை சொமோஸா திறந்து வைக்கிறார்!!!

உங்களுக்குத் தெரிந்த சர்வாதிகாரிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள்.  வாழும் போது புகழின் உச்சியில் இருப்பார்கள்.  ஆனால் கடைசி காலத்தில் தெருநாய் போல் ஆகி விடுவார்கள்.  சிலர் ஹிட்லரைப் போல் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு.  இல்லாவிட்டால், காக்காய் குருவி போல் சுட்டுக் கொல்லப்படுவார்கள். பினோசெத்தின் வீழ்ச்சி மிகவும் கேவலமாக இருந்தது.  அவர் அரசியல் நிர்ணயச் சட்டத்தில் ஏற்படுத்தியிருந்த மாற்றங்களின் காரணமாக அவருக்குப் பின்னால் வந்த அரசினால் அவரை ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதோடு அவர் ராணுவத்தின் முப்படைத் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 07:19

November 1, 2022

த அவ்ட்ஸைடர்: சில எதிர்வினைகள்

சாரு,  தருமபுரியிலிருந்து ஸ்ரீதர். “இன்னும் சத்தமாகக் குரை” பகுதியைப் படித்தேன். உங்களது ஆதங்கம் நியாயமானது. அதற்கான பதில் – படிக்கிறோம். எப்போதும் படித்துக் கொண்டுதான் இருக்கிறோம். அவுரங்ஸேப்  போல ஒரு செறிவைக் கொண்டது சீலேயின் சரித்திரம். நீங்கள் சொன்னதுபோல் நமக்கான வரலாறு அதிகார மையங்களால் தந்திரமாகக் கட்டமை க்கப்பட்டது. நிதர்சனமான உண்மையான சரித்திரங்கள் சமூகங்களுக்கு என்றுமே காட்டப்படுவதில்லை. பெருந்திரளான மக்கள் கூட்டங்களுக்கு மத்தியில் மிகச் சொற்ப எண்ணிக்கையிலான மனச்சான்றுடைய எழுத்தாளர்கள், கலைஞர்களே அவை குறித்து பதிவாக்குகின்றனர். அவையும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 22:48

த அவ்ட்ஸைடர் – 17 (Más fuerte Perra – இன்னும் சத்தமாகக் குரை பெண்நாயே!)

உடலை ஒடுக்குதல் என்பது சர்வாதிகாரத்தின் பண்புகளில் ஒன்று. அதனால்தான் ஹிட்லர் ஓரினச் சேர்க்கையாளர்கள் அனைவரையும் வதைமுகாமுக்கு அனுப்பினார்.  அதைப் போலவேதான் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்களும் பிஸாகுவாவுக்கு அனுப்பப்பட்டார்கள்.  இது கிட்டத்தட்ட ரஷ்யாவில் தேசத் துரோகக் குற்றம் சாட்டப்பட்டவர்களை சைபீரியாவின் பனிப்பாலைகளுக்கு அனுப்பியதற்கு நிகர்.    லியனார்தோ ஃபெர்னாந்தஸ் என்பவர் சீலேயின் ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி ஆய்வு செய்தவர்.  இபான்யேஸ் தெல் காம்ப்போவின் (Ibáñez del Campo) ஆட்சியில் – அதாவது, 1920களின் இறுதியில் – ஓரினச் சேர்க்கையாளர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 07:33

சாரு நிவேதிதாவின் எழுத்தும் குற்ற உணர்ச்சியும்: அராத்து

சாரு நிவேதிதா எழுத்தின் தனித்தன்மை என்ன என சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன். தமிழில் அநேகமாக குற்றவுணர்ச்சியில் இருந்து விடுவிக்கும் எழுத்து சாரு நிவேதிதாவினுடையது. பெரும்பாலான தமிழ் எழுத்தாளர்களின் எழுத்துக்கள் குற்றவுணர்ச்சி கொள்ள வைக்கும் அல்லது குற்றவுணர்ச்சியை அதிகரிக்க வைக்கும். கழிவிரக்கம் , ஏங்கி ஏங்கி நொந்து போதல் , மருகுதல் , தோல்வியை சிலாகித்தல் , கையாலாகாத்தனத்தை ஹீரோயிஸமாக்குதல் , ஏழ்மையை , ஆண்டாண்டுகாலமாக இருந்து வரும் தாய் , மகள் போன்ற குடும்ப உறவுகளை காவியமாக்குதல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 06:07

October 31, 2022

த அவ்ட்ஸைடர் – 15 (பிஸாகுவா)

1925 ஜூன் 25 அன்று லா கொருன்யாவில் நடந்த படுகொலைகளைத் தொடர்ந்து இந்த நூறு ஆண்டுகளில் கார்லோஸ் கார்ரிதோவின் (Carlos Garrido) கதை அங்கே ஒரு புராணக் கதை போல் – நம் ஊர் மதுரை வீரன் கதை போல் ஆகி விட்டது.  ஜூன் 25 படுகொலைகள் கார்லோஸின் வன்முறைப் பேச்சினால் தூண்டப்படவில்லை என்று கருதும் மற்றொரு விவரமும் நமக்குக் கிடைக்கிறது.  தொழிலாளர் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணை தொழிற்சாலை அதிகாரி ஒருவன் அடித்துக் கொன்று ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 31, 2022 08:25

October 30, 2022

குருவைக் கண்டடைதல்

இந்த விஷயத்தைப் பற்றி பலமுறை எழுதியிருக்கிறேன். இன்றைய காலகட்டத்தில் தன் உடல் நலம் குறித்து அக்கறை கொள்வோர் பலரும் காலையில் நடைப் பயிற்சிதான் செய்கிறார்கள்.  அப்படி நடைப் பயிற்சி செய்தாலும் அறுபது வயதில் பைபாஸ் அறுவை சிகிச்சை அல்லது ஸ்டெண்ட் வைத்துக் கொள்வது போன்றவற்றிலிருந்து தப்பிக்க முடிவதில்லை.  நான் உட்பட.  எனக்கு பதினாறு வயதில் காச நோய் வந்தது.  ஒரு நூற்றியிருபது ஸ்ட்ரெப்டொமைசின் ஊசி போட்டார்கள்.  சரியாயிற்று.  அதன் பிறகு ஐம்பத்தைந்து வயது வரை ஜுரம், தலைவலி, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 30, 2022 03:47

October 29, 2022

பிறந்த நாள் வாழ்த்து

ஜிமெயிலில் உனக்கு இடம் தீர்ந்து விட்டது. இனிமேல் தேவையெனில் பணம் கட்டு. இல்லாவிட்டால் உனக்கு இனி மெயில் வராது. நீயும் மெயில் அனுப்ப முடியாது. இப்படி ஜிமெயிலிலிருந்து ஒரு வாரம் முன்பு கடிதம் வந்தது. அதனால் ஐந்த ஆண்டுகளாக வந்த கடிதங்களைப் படித்து பதில் போட்டுக் கொண்டிருந்தேன். அதில் ஒரு கடிதம் இது. படித்ததும் உற்சாகமாக இருந்ததால் உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன். 20 டிசம்பர் 2019 அன்று எழுதப்பட்ட கடிதம். *** சாரு நிவேதிதாவின் எழுத்துகள் அனைத்தையும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2022 22:50

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ்

இன்று ஞாயிறு இரவு எட்டு மணிக்கு நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றி ஆர். அபிலாஷ் உரையாற்றுகிறார். நான் நன்றியுரை செய்கிறேன். இந்தச் சந்திப்பு தகடூர் புத்தகப் பேரவை சார்பாக நடைபெறுகிறது. முடிந்தவர்கள் கலந்து கொள்ளும்படி அழைப்பு விடுக்கிறேன். கீழே லிங்க். https://us02web.zoom.us/j/9805204425
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2022 21:59

on this day…

வர்தா புயல் ஓய்ந்து, வீழ்ந்த மரங்களையும் இலை தழைக் குப்பைகளையும் தமிழகம் முழுவதிலிருந்தும் அழைத்துவரப்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் அப்புறப்படுத்திக் கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மதியம், நானும் சாருவும் மயிலை Padrino-வில் சாப்பிட்டுவிட்டு அப்பு தெருவுக்கு ஆட்டோவில் போய்க்கொண்டிருந்தோம். ஒவ்வொரு சாலையிலும் தெருவிலும் போக்குவரத்து நெரிசல். வெர்னர் ஹெர்ஸாக் விசாரணையைப் பாராட்டி இருக்கிறாரே என சாருவிடம் கேட்டேன். “ஒரு ஐரோப்பியன் இந்தக் குப்பைக் கூளங்களைப் பார்த்து ஆச்சரியப் படலாம். இதல்லவா ஊர் என்று வியக்கலாம். சினிமாவின் auteurs நம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2022 21:53

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.