சாரு நிவேதிதா's Blog, page 132
November 30, 2022
பிணந்தின்னிகள் இயம்பும் நட்சத்திரங்களின் செய்தி: சுனில் கிருஷ்ணன்
என்னுடைய சிறுகதைத் தொகுதி நேநோவை முன்வைத்து நண்பர் சுனில் கிருஷ்ணன் எழுதிய கட்டுரை இன்று ஜெயமோகனின் தளத்தில் வெளிவந்துள்ளது. இன்றைய தினம் எழுத்தாளர்களுக்கு விருது என்பது அதிக அளவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு சம்பவம். நான் அதை விமர்சிக்க மாட்டேன். எல்லோரும் நல்ல எண்ணத்தில் செய்கிறார்கள். ஒரு நல்ல மனிதர் நூறு பேருக்கு விருது வழங்குகிறார் என்று கேள்விப்பட்டேன். அதுவும் நல்ல விஷயம்தான். ஆனால் இந்தக் காரியத்தை இன்னும் எப்படி சிறப்பாகச் செய்யலாம் என்றால், விஷ்ணுபுரம் வாசகர் ... Read more
Published on November 30, 2022 22:47
உலகக் கால்பந்தாட்டப் போட்டி
எக்கச்சக்கமான வேலைகளுக்கு இடையில் உலகக் கால்பந்தாட்டப் போட்டிகளையும் பார்த்து வருகிறேன். எல்லாவற்றையும் பார்ப்பதில்லை. ஒரு நாளில் ஒரு போட்டி. இதில் என்னுடைய மனச்சாய்வு எப்படி இருக்கிறது என்றால், கத்தாருக்கும் எகுவாதோருக்கும் என்றால் என் ஆதரவு எகுவாதோர். காரணம், தென்னமெரிக்கா. இங்கிலாந்துக்கும் ஈரானுக்கும் என்றால், இங்கிலாந்து. செனகல் – நெதர்லாண்ட்ஸ் என்றால் சொல்லவே தேவையில்லை, செனகல். யு.எஸ். – வேல்ஸ் : இரண்டுக்குமே ஆதரவு இல்லை. ஆட்டத்தையே பார்க்கவில்லை. இரண்டு நாடுகளையுமே பிடிக்காது. அர்ஹென்ந்த்தினா – சவூதி அரேபியா ... Read more
Published on November 30, 2022 07:01
கடவுளின் ஜாதகம் (கடவுள் கவிதைகள் 4)
அஞ்சு மாச வயசான கடவுள் ஒரு இசை வெறியர் என்று தெரிந்தது கவனம் பிசகாமல் மணிக்கணக்கில் இசை கேட்கிறார் அதனால் கடவுளை நான் இசைக் கலைஞனாக்குவேன் என்றானொருவன் உறங்கும் நேரம் தவிர மற்ற நேரமெல்லாம் சலிப்பே இல்லாமல் கடவுள்தன் கையையும் காலையும் உதைத்துக் கொண்டேயிருக்கிறார் அதனால் கடவுளை நான் நாட்டியக்காரனாக்குவேன் என்றானொருவன் எந்தக் காரணமும் தேவையில்லாமலேயே கடவுளை நான் அய்ப்பீயெஸாக்குவேன் என்றாளொருத்தி கடவுளை நான் தத்துவவாதியாக்குவேன் என்றானொரு தத்துவவாதி எந்தக் குறுக்கீடும் இல்லாமல் புத்தகங்களையே பார்த்துக் கொண்டிருப்பதால் ... Read more
Published on November 30, 2022 00:13
November 29, 2022
அம்மாள்!
சென்னையின் கலாச்சார அவலங்களில் ஒன்று, ஹிண்டு ஆங்கில நாளிதழ். அதில் உள்ள யாருக்குமே சமகாலத் தமிழ் இலக்கியவாதிகள் யாரையும் தெரியாது. ஒரே விதிவிலக்காக இருந்தவர் அசோகமித்திரன். அவர் காலத்திலும் சரி, அவருக்குப் பிறகும் சரி, ஆங்கில ஹிண்டு ஆட்களுக்குத் தெரிந்த இலக்கியவாதிகள் சுஜாதாவும் பாலகுமாரனும்தான். அதன் காரணமாக அந்தப் பத்திரிகை நடத்தும் இலக்கிய விழாவிலும் வெளிமாநில எழுத்தாளர்களைத்தான் பார்க்கலாமே தவிர தமிழ்நாட்டிலிருந்து ஒருவரும் தென்பட மாட்டார்கள். ஒப்புக்கு ஒன்றிரண்டு பேர் இருப்பார்கள். அவர்களும் நாகர்கோவில் பத்திரிகை கோஷ்டியைச் ... Read more
Published on November 29, 2022 21:40
நல்ல நேரம்
சமீபத்தில் நம்பர் ஒன் பற்றிய சர்ச்சையில் ஒரு பத்திரிகையாளர் என் பெயரைக் குறிப்பிட்டு ’சாரு இப்போது ஆட்டத்திலேயே இல்லை’ என்ற அர்த்தம் தொனிக்கும் விதத்தில் எழுதியிருந்தார். அப்படி நினைக்க அவருக்கு உரிமை உண்டு என்றாலும் வேறொரு காரணத்தினால் அவரை அந்தக் கணமே என் நட்புப் பட்டியலிலிருந்து விலக்கி விட்டேன். காரணம், அவர் என் எழுத்து எதையும் கடந்த பத்து ஆண்டுகளாகப் படிக்கவில்லை என்று தெரிந்தது. அதற்கு முன்னாலும் படித்திருப்பாரா என்ற சந்தேகம் இப்போது வருகிறது. சந்தேகத்துக்குக் காரணம், ... Read more
Published on November 29, 2022 05:20
November 28, 2022
சூப்பர் ஸ்டார்: ஒரு குறியீட்டுக் கதை
கொட்டாங்கச்சி என்ற இளம் இயக்குனரை (வயது இருபத்து நாலு) அழைத்து “கொட்டாங்கெச்சி… உன்க்காக ஒரு படேம் பண்லாம்னு டிசைட் பண்ணிருக்கேன்… ஹா ஹா… படேம் தேர்ட்டி மினிட்ஸ்தான்… ஆனா சும்மா தெறிக்கும்…” என்று சொல்லி விட்டு அவர் ஸ்டைலில் முப்பது டிகிரி உதட்டை மேலேற்றி சிரித்தார் சூப்பர் ஸ்டார். கதையையும் பொறுமையாகச் சொன்னார். அதைக் கேட்டு விட்டு கொட்டாங்கச்சி சொன்னான்: “தலைவரே, என்னதான் முப்பது நிமிஷக் கதை என்றாலும் இதன் தயாரிப்பு செலவு 500 கோடி ஆகும். ... Read more
Published on November 28, 2022 03:52
November 26, 2022
பரிவாரம் (சிறுகதை) : காயத்ரி ஆர்.
‘இவனை, இந்த ஷ்யாமை, எப்படி உனக்குத் தெரியும்? உன் ஃப்ரெண்ட் லிஸ்ட்ல இருக்கானே பொறுக்கி’ என்று குமுதா சொன்னபோது பக்கத்தில் நான் இருந்தேன். ரம்யா திடுக்கிட்டது தெரிந்தது. கண்ணால் ஏதோ குமுதாவுக்குச் சொல்ல முற்பட்டாள் ரம்யா. குமுதா புரியாமல் புருவத்தை சுருக்கிக்கொண்டு தாடையை முன் நீட்டி ‘ஹ(ன்)’ என்றாள். தலையிலடித்துக்கொள்ள முடியாதபடி எதுவும் பேச இயலாதபடி ‘ஹி ஹி…சரி, சரி, அப்புறம்…’ என்று சங்கடத்துடன் பேச்சை ரம்யா மாற்றத் தொடங்கியபோது நான் இடைமறித்தேன். ‘யார்?’ என்று குமுதாவைக் ... Read more
Published on November 26, 2022 06:00
November 22, 2022
பௌன்ஸர்கள் தேவை
வாசகர் வட்ட சந்திப்பு இனிதே முடிந்தது. ஏற்காட்டில் கடும் குளிர். முன்னேற்பாட்டுடன் சென்றிருந்ததால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் ஞாயிறு மதிய உணவு முடிந்ததுமே எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்கு ஓடி விட்டார்கள். இப்போதெல்லாம் பெண்கள் கணவனை எங்கேயும் தனியாக விடுவதே இல்லை என்று தெரிகிறது. திங்கள் கிழமை என்னும் பூதமெல்லாம் அடுத்த பட்சம்தான். மனைவி பூதம்தான் ஆட்களை அடித்து வீழ்த்துவதாகப் பல கணவர்கள் சொல்கிறார்கள். ஒரு இளம் நண்பர் சொன்னார். ஒரு நான்கு நாட்கள் ... Read more
Published on November 22, 2022 22:51
November 17, 2022
எனக்கு நோபல் கிடைக்காததன் காரணம் என்ன?
நான் என்ன மாதிரியான சூழ்நிலையில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதை ஆயிரம் கட்டுரைகளில், பல கதைகளில் எழுதி எழுதி எழுதி விளக்கி விட்டேன். ஒரு ஐந்து நிமிடம் முன்னாடி ஒரு நண்பர் செல்வாவின் நம்பர் என்ன என்று கேட்டு எனக்கு மெஸேஜ் பண்ணியிருக்கிறார். நம்பர் கேட்ட நண்பரை நம்பித்தான் நான் வெளியூரே போகிறேன். நம்பர் கேட்ட நண்பரால்தான் எனக்குப் பல காரியங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நம்பர் கேட்ட நண்பருக்கு நான் மிகவும் கடன்பட்டிருக்கிறேன். அதற்காக என்னை இப்படி மன ... Read more
Published on November 17, 2022 07:00
நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்…
என்னைச் சந்திக்கும் நண்பர்கள் என்னோடு உடன்படாத விஷயங்களை அப்படியே விட்டு விடுங்கள். ஜெயமோகனின் வாசகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் பொள்ளாச்சியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் வைத்து என்னிடம் அப்துல் கலாம் எவ்வளவு சிறந்த சிந்தனையாளர் என்று வாதிட்டு எனக்குக் கடுமையான நெஞ்சுவலியை உண்டாக்கி விட்டார். இரண்டு மணி நேரம் வலியால் துடித்தேன். அந்த வலியில் நான் இறந்தும் போக வாய்ப்பு இருக்கிறது. தர்மு சிவராமு மாதிரி வெளியே போடா நாயே என்று சொல்லியிருக்க வேண்டும். ... Read more
Published on November 17, 2022 06:33
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

