வாசகர் வட்ட சந்திப்பு இனிதே முடிந்தது. ஏற்காட்டில் கடும் குளிர். முன்னேற்பாட்டுடன் சென்றிருந்ததால் பிரச்சினை ஒன்றும் இல்லை. ஆனால் ஞாயிறு மதிய உணவு முடிந்ததுமே எல்லோரும் அடித்துப் பிடித்துக் கொண்டு ஊருக்கு ஓடி விட்டார்கள். இப்போதெல்லாம் பெண்கள் கணவனை எங்கேயும் தனியாக விடுவதே இல்லை என்று தெரிகிறது. திங்கள் கிழமை என்னும் பூதமெல்லாம் அடுத்த பட்சம்தான். மனைவி பூதம்தான் ஆட்களை அடித்து வீழ்த்துவதாகப் பல கணவர்கள் சொல்கிறார்கள். ஒரு இளம் நண்பர் சொன்னார். ஒரு நான்கு நாட்கள் ...
Read more
Published on November 22, 2022 22:51