சாரு நிவேதிதா's Blog, page 135

November 7, 2022

த அவ்ட்ஸைடர் (20)

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நான் எப்படி இருந்தேனோ அம்மாதிரியான உணர்ச்சிக் குவியலில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன்.  எந்த அளவுக்கு என்றால், இந்தக் கணம் வரை எலான் மஸ்க் யார் என்றோ அவர் பெயர் ஏன் இப்படி அடிபடுகிறது என்றோ தெரியவில்லை.  முந்தாநாள் வரை எலான் மஸ்க் ஒரு வாசனைத் திரவியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன்.  பிறகுதான் அது ஒரு மனிதர் என்று தெரிந்தது.  அவர் ஒரு வலதுசாரி என்றும் ஒரு புதுவகை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2022 07:41

November 6, 2022

போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றி…

Charu , I read போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றிய ஒரு கதை (அல்லது) சாசனம் : ஒரு நெடுங்கதை I absolutely don’t have words to express what my mind and heart feel. one side, as usual I am mesmerized by the writing and various aspects of it. The humor, satire, plight, struggle, information in that entire story that ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 23:47

த அவ்ட்ஸைடர் (19)

சென்ற அத்தியாயத்தில் To Bury Our Fathers என்ற நாவலை எழுதியவர் எர்னஸ்தோ கார்டினால் என்று எழுதி விட்டேன்.  அந்த விவரம் தவறு.  இந்தப் பிழையை சுட்டிக் காட்டிய அப்துல் ரஹ்மானுக்கு நன்றி.  To Bury Our Fathers நாவலை எழுதியவர் செர்ஹியோ ராமிரெஸ் (Sergio Ramirez).  இந்த்த் தவறிலிருந்தே எனக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் உள்ள சம்பந்த்த்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும்.  செர்ஹியோ ராமிரஸ் நிகாராகுவாவின் ஸாந்தினிஸ்த்தாக்களைச் சேர்ந்தவர்.  எழுத்தாளர்.  அவர் நிகாராகுவாவில் நடந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 18:34

November 5, 2022

ஜென்ரல் நாலட்ஜ்

சில ஆண்டுகளாக எலான் மஸ்க் என்ற பெயர் காதில் விழுந்து கொண்டே இருந்தது. நான் எப்போதும் வாசனைத் திரவியங்களின் ரசிகன் என்பது உலகறிந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது எலான் மஸ்கை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தேன். நேற்றுதான் சீனியின் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த போது (தூக்கம்) எலான் மஸ்க் என்பது ஒரு ஆளின் பெயர் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனாலும் எந்தத் துறை என்று தெரியவில்லை. கூகிளைப் பார்த்து ஜென்ரல் நாலட்ஜை இம்ப்ரூவ் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 20:53

தூக்கம்

தூக்கம் பற்றி ஜெமோ மற்றும் சாரு எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். தூக்கத்தில் கூட இரண்டு ஆளுமைகளும் எதிரெதிர் துருவங்களில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள் தூக்கம் என்பது புணர்ச்சியைப்போல பர்ஸனலான ஒன்று. இன்னும் கேட்டால் புணர்ச்சியை விட ரொம்ப பர்ஸனலானது. புணர்ச்சிக்கு இன்னொருவர் தேவையல்லவா ? நான் இப்படித்தான் மேட்டர் செய்வேன் , அதனால் எல்லோரும் இப்படி மேட்டர் செய்வதுதான் சிறந்தது என்று எப்படி கூற முடியாதோ , அதே போல இப்படி தூங்குவதுதான் சிறந்தது என்று கூற முடியாது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 04:22

November 4, 2022

இரண்டு கடிதங்களும் ஒரு பதிலும்

சாரு எழுதிய இரண்டு ஆட்டோ ஃபிக்‌ஷன் கதைகளை படித்தேன். தமிழில் அட்டோ ஃபிக்‌ஷன் சாருவுக்கு முன்பு யாரும் எழுதியதில்லை; சாருவுக்குப் பிறகும் யாரும் எழுதப் போவதில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் இந்தக் கதைகளுக்கு அருகில் கூட வர முடியாது எனச் சொல்லலாம். ஏன் சாருவுக்குப் பிறகு அட்டோ ஃபிக்‌ஷன் சாத்தியமில்லை? ஒட்டு மொத்த சமூகமும் வெகுஜனக் கலாச்சாரத்துக்குள் இருக்கிறது. இதில் வாழ்வில் நடக்கும் அபத்தங்களை அல்லது அங்கதங்களை அல்லது நேர்மறையான செயல்களை நெருங்கிப் பார்த்து திளைத்தல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2022 23:37

கலாச்சார அவலம்

ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி போன்ற மொழிகளின் இலக்கியத்தோடு ஒப்பிட்டால் தமிழ்தான் உச்சபட்ச நிலையில் இருக்கிறது.  இதை சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்.  (இந்தப் பட்டியலில் நான் ஆங்கிலத்தைச் சேர்க்கவில்லை.  அந்த மொழியில் இன்று சீரிய இலக்கியம் படைக்கப்படுவதில்லை.)  தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சர்வதேசத் தரத்தில் இருந்தும் அதை வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்ல தமிழில் ஒரு ஆள் இல்லை.  பிராமணர்கள் இலக்கியத்தைத் துறந்து விட்டார்கள்.  அவர்கள் துறந்தது இலக்கியத்தை மட்டும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2022 23:01

நம்முடைய ஆன்மீக சக்தியைப் பிறர் உறிஞ்சி எடுப்பதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய உபாயம் (ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை)

டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா.  பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது.  நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும்.  பதினெட்டு?  அது அடியேனின் பிறந்த நாள்.  ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது.  இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.    விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2022 08:55

கனவு, வைன், யோகா கதையில் விடுபட்டது

கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன்.  எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன.  ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது.  அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும்.  நீங்களே கவனித்துப் பார்க்கலாம்.  ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.  அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள்.  பெண்கள் மட்டும்தான் கடல் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2022 00:29

November 3, 2022

கனவு, வைன், யோகா…

(ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதை.  ஆட்டோஃபிக்‌ஷன் கதை என்றாலும் சில சம்பவங்கள் முழுக் கற்பனை.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல!)  இன்று சௌந்தர் ஃபோன் செய்து “யோகா பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா?  செய்கிறீர்களா?” என்று விசாரித்தார்.  அதற்கான பதிலைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன். கொக்கரக்கோ தன்னுடைய ஒரு பிரச்சினையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறான்.  இல்லை, அது அவனுக்குப் பிரச்சினை இல்லை.  அதை நான்தான் பிரச்சினையாக நினைக்கிறேன். அவன் உறங்கச் செல்வது அதிகாலை நான்கு மணிக்கு.  எழுந்து கொள்வது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 03, 2022 07:19

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.