பொதுவாக மனிதர்களோடு சேர முடியவில்லை. சேர்ந்து கூட்டாக வெளியூர் செல்ல முடியவில்லை. அடுத்த மனிதனே பெரும் துன்பமாக இருக்கிறான். ஏன் இப்படி என்று பதினைந்து ஆண்டுகளாக யோசித்துக் கொண்டிருக்கிறேன். பதினைந்து ஆண்டுகள் என்பதற்கு ஒரு கணக்கு உள்ளது. பதினைந்து ஆண்டுகளாகத்தான் சீனியை எனக்குத் தெரியும். சீனி என் வாழ்வில் நுழைந்த பிறகுதான் இந்தப் பிரச்சினை ஸ்தூலமாகத் தெரிய ஆரம்பித்தது. அதாவது, பிரச்சினை சீனியின் மூலமாக அல்ல. சீனியும் நானும் அடுத்த மனிதரை எங்களோடு சேர்த்துக் கொள்ளும்போது பிரச்சினை ...
Read more
Published on November 11, 2022 21:09