அதோடு விடவில்லை ஜூலியா. நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரமோனிடம் சொன்னால் உங்கள் இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் என்றும் சொன்னாள். சூஸானா தன் ’புதிய கணவன்’ ஆர்மாந்தோவுடன் பராகுவாய் திரும்புகிறாள். மூன்று வாரங்களுக்கு முன்புதான் கணவன் ஃப்ரான்சிஸ்கோவுடன் அசுன்ஸியோனில் சுற்றித் திரிந்தாள். வழக்கம்போல் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை. சாதாரணமாகவே அசுன்ஸியோன் விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; தேன் நிலவுத் தம்பதிகளை யார் தொந்தரவு செய்யப் போகிறார்கள்? ஆர்மாந்தோ ஒரு ...
Read more
Published on November 10, 2022 01:59