சாரு நிவேதிதா's Blog, page 123

January 10, 2023

மூன்று அறிவிப்புகள்

இன்று மட்டும் புத்தக விழாவுக்கு வர மாட்டேன். நாளையிலிருந்து மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன். எஃப் 19. இன்று வராததற்குக் காரணம், அருஞ்சொல். அருஞ்சொல்லுக்கான அடுத்த கேள்விகளுக்கு பதில் எழுத வேண்டும். அருஞ்சொல் நேர்காணலை இதுவரை என் எழுத்தைப் படிக்காதவர்கள் பலரும் படிக்கிறார்கள் என்று தெரிகிறது. அருஞ்சொல்லின் வீச்சு பற்றி ஆச்சரியமடைந்தேன். இதுவரை கேட்கப்படாத கேள்விகள். இதுவரை சொல்லாத பதில்கள். (ஒரே ஒரு விதிவிலக்கு: இக்கேள்விகளில் பல த அவ்ட்ஸைடர் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2023 16:36

புத்தக விழா

இன்றிலிருந்து தினமும் மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் (எஃப் 19) இருப்பேன். சனி, ஞாயிறு, மற்றும் விடுமுறை தினங்களில் நான்கு மணியிலிருந்து எட்டரை வரை இருப்பேன். நண்பர்கள் சந்திக்கலாம். ஒரு சின்ன வேண்டுகோள். நான் உங்கள் நூல்களில் கையெழுத்துப் போடும் போது நீங்கள் குனிந்து நிற்க வேண்டாம். அது ஏதோ மாதிரி என்னைத் தொந்தரவு செய்கிறது. பக்கத்து நாற்காலிகளில் அமருங்கள். அல்லது, நிமிர்ந்தே நில்லுங்கள். நான் கையெழுத்துப் போடுவதை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2023 01:14

January 9, 2023

நண்பர்கள் கவனத்துக்கு…

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு நாவலை முடித்து விட்டேன். இனிமேல் அதில் செய்வதற்கு எதுவும் இல்லை. 35000 வார்த்தைகள். 350 பக்கங்கள் இருக்கலாம். எனக்கு அந்தக் கணக்கு தெரியாது. பணம் அனுப்பியவர்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியை அனுப்பவும். உடன் பிடிஎஃப் அனுப்பி வைக்கிறேன். மேலும், பிடிஎஃப் பிரதி தேவைப்படுபவர்கள் பணம் அனுப்பவும். விவரம் நேற்றைய பதிவில் உள்ளது.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2023 22:26

வாழ்க்கையில் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு

ஆம், அன்பு குறித்து ஒரு புகார் மனு நாவலை எழுதத் துணிந்ததுதான் என் வாழ்வில் நான் எடுத்த மிகத் துணிச்சலான முடிவு. இது வெளிவந்தால் என் உற்றம் சுற்றம் நட்பு என்று பலரும் என்னை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து போகலாம். நான் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். நான் பிரேதங்களின் மீது நடந்து எழுதுகிறேன் என்று. என் வாழ்வை எரித்துக் கொண்டு எழுதுகிறேன். என்ன ஆனாலும் சரி என்று துணிந்து எழுதியிருக்கிறேன். இதை எழுதியே ஆக வேண்டும். உலகளந்தான் என்ற ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2023 01:13

January 8, 2023

கொல்லிமலைச் சித்தரும் என் புதிய நாவலும்

இந்தத் தலைப்பு சற்று ’லோடட்’ ஆக இருக்கிறது என்று நண்பர் சொன்னார். என் தலைப்புகள் எல்லாமே சட்டென்று மனதில் போய் ஒட்டிக் கொள்பவை. ஸீரோ டிகிரி. காமரூப கதைகள். ராஸ லீலா. இப்படி. ஆனால் மேலே உள்ள தலைப்பை நானே அடிக்கடி மறந்து விடுகிறேன். ஆனால் கிரிக்கெட்டை முன்வைத்து புத்திஜீவிகளுக்கு ஒரு முட்டாள் சொன்ன கதை என்றும், கர்னாடக முரசும் நவீன தமிழ் இலக்கியத்தின் மீதான ஓர் அமைப்பியல் ஆய்வும் என்றும் தலைப்பு வைத்திருக்கிறேனே? மட்டுமல்லாமல் எனக்குப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2023 21:22

புத்தக விழா – இன்று

இன்று 9.1.2023 மாலை ஐந்து மணியிலிருந்து எட்டரை வரை புத்தக விழாவில் F. 19 ஸீரோ டிகிரி அரங்கில் இருப்பேன்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2023 17:00

கலையும் மீறலும்: அண்ணா நூலக உரையாடல்

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சரியாக பத்து மணிக்கு கலையும் மீறலும் என்ற தலைப்பில் என்னுடைய பேச்சும் அதைத் தொடர்ந்த உரையாடலும் நடந்தது. நெல்ஸன் சேவியர் ஒருங்கிணைத்தார். லக்ஷ்மி சரவணகுமார் அறிமுக உரை ஆற்றினார். நான் ஒரு இருபது பேர் இருப்பார்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் ஒரு ஐநூறு பேர் இருந்திருப்பார்கள். ஐம்பது நூறு பேர் வேறு நின்று கொண்டிருந்தார்கள். இதற்காக நான் தமிழ்நாடு அரசையும், அண்ணா நூலகத்தின் அதிகாரிகள் அனைவரையும், இதில் சம்பந்தப்பட்ட எல்லோரையும் பாராட்டுகிறேன். குறிப்பாக ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2023 07:53

January 7, 2023

அருஞ்சொல் நேர்காணல் – 3

மூன்றாவது வாரமாக அருஞ்சொல் இதழில் என் பேட்டி வருகிறது. இதைப் படிக்காதவர்கள் என் நட்புப் பட்டியலில் இருந்து விலகலாம். இதுவரை இது போன்ற ஒரு நேர்காணல் வந்ததில்லை. சர்தாஜிக்களின் கைகளில் இரண்டு கோப்பைகள்: சாரு பேட்டி | அருஞ்சொல் (arunchol.com)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 23:09

புத்தக விழா பதிவுகள் – 1

நேற்று புத்தக விழாவுக்குச் சென்றிருந்தேன்.  டார்ச்சர் கோவிந்தனைப் பார்க்காத விழா.  சலிப்பாக இருந்த்து.  ஆம், நான் ஒரு மஸாக்கிஸ்ட் என்று நேற்று தெரிந்து கொண்டேன்.  டார்ச்சர் இல்லாத்தால் சலிப்பு.  இனிமேல் நாளையிலிருந்து வர வேண்டாம் என்று நினைத்தபடியே எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் மூன்று அழகிகள்.  வயது இருபது இருக்கும்.  உங்களின் தீவிர வாசகிகள் சாரு என்று அறிமுகம்.  தீவிரம் கவர்ந்ததை விட சாரு கவர்ந்தது.  பேசிக் கொண்டிருந்து விட்டுக் கிளம்பி விட்டார்கள்.  உடனே ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2023 22:52

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.