சாரு நிவேதிதா's Blog, page 119

January 23, 2023

January 22, 2023

ஆரோவில் சிறுகதைப் பட்டறை

வரும் 28ஆம் தேதி பாண்டிச்சேரி அருகில் உள்ள ஆரோவில் வன இல்லத்தின் வனப் பகுதியில் ஒரு சிறுகதைப் பட்டறை நடக்க இருக்கிறது. ஏற்கனவே செய்தி தெரிவித்திருக்கிறேன். மூன்று சிறுகதைகள் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும். கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வினித்தைத் தொடர்பு கொள்ளவும். விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் சிறுகதைகள்: ஆண்டன் செகாவின் வான்கா. இது தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. எங்கே என்று எனக்கு எழுதிக் கேட்காதீர்கள். தேடினால் பத்து நொடியில் கிடைக்கும். இரண்டாவது கதை மௌனியின் அழியாச் சுடர். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2023 22:59

January 21, 2023

நீதி போதனையும் இலக்கியமும்

நீதி சொன்னால் அது இலக்கியத்தில் மட்டம் என்று எல்லோருக்கும் ஒரு கருத்து உண்டு.  எனக்கும்தான்.  இலக்கியம் ஒன்றும் நீதி போதனை அல்ல.  திருடன் மணியன் பிள்ளை என்ற சுயசரிதத்தைப் படித்தால் யாருக்கும் திருடவே தோன்றாது.  சார்வாகனின் முடிவற்ற பாதையைப் படித்தால் யாருக்கும் அடுத்தவர் பணத்தின் மீது ஆசை வராது.  அறம் படித்தால் யார் வயிற்றிலும் அடிக்கத் தோன்றாது.  ஆனால் காமரூப கதைகள், ராஸ லீலா, ஸீரோ டிகிரி, ஓப்பன் பண்ணா எல்லாம் படித்தால் அதிலிருந்து நாம் எடுத்துக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 22:00

புத்தக விழா ஊறுகாய்க் கடையில் இன்று மூன்றரை மணி…

இன்று மாலை மூன்றரை மணிக்கு புத்தக விழாவின் வெளியே ஞானாம்பிகா உணவகத்துக்கு எதிரே உள்ள ஊறுகாய்க் கடைக்கு வருவேன்.  நான் ஒரு ஊறுகாய் அடிக்ட்.  இதை வைத்துக் கொண்டு எல்லோரும் ஊறுகாய் சாப்பிட ஆரம்பித்தீர்கள் என்றால் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் பெருகி விடும்.  என் வாழ்க்கை முறை எதுவும் மற்றவர்கள் பின்பற்றுவதற்கானதல்ல.  நான் ஒன்றரை மணி நேரம் யோகாவும் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சியும் செய்கிறேன்.  அம்மாதிரி ஆள் ஊறுகாய் சாப்பிடலாம்.  இதுவரை வாழ்நாளில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 21:40

அன்பு : ஒரு கொண்டாட்டம்

அன்பு நாவலை வாசகர்கள் கொண்டாடுவதைப் பார்த்து விட்டு அடிக்கடி இப்படி சிறிய நாவல்களை எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. வாசகர்களின் கொண்டாட்டம் ஏன் என்று புரிகிறது. ஒவ்வொரு சம்பவத்தோடும் ஒவ்வொரு ஆளோடும் வாசகர் அல்லது வாசகி தன்னைப் பொருத்திப் பார்க்கிறார். அவருக்கு அப்படி எப்போதோ நடந்திருக்கிறது. அல்லது, அவரே அப்படி ஏதாவது செய்திருக்கிறார். என் நண்பர் ஒருவர் நாவலைப் பாதி படித்துக் கொண்டிருக்கும்போதே எனக்கு “ஓங்கி அடிச்சா ஒன்றரை டன்” மொமெண்ட் என்று எழுதியிருந்தார். இதுவரை நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 01:30

நிறமேறும் வண்ணங்கள் – அராத்து – சிறுகதை தொகுப்பு இலக்கிலாக்கதைகள்

வெறும் ஓர் அதிர்ச்சி விளைவுக்காக அல்லது மரபுகாப்பதற்காக இழவுகூட்டும் இற்றைத் தமிழ் எழுத்தாளர்களைக் கிண்டலடிக்குமொரு நகை-இயல்பின் எழுத்துக்கலை வாரணர் அராத்து. எனது இந்தத் தமிழ்நடை உங்களை எரிச்சலுறுத்தகூடும். என்ன செய்ய, சின்ன வயதிலேயே இப்படிக் கார்வைபட்டுப்போன என் தனித்தமிழ் மூளை, மாற்றி யோசிக்கவும் மக்கர் பண்ணுகிறது! மாறாக, //தெருவில் தூறல் விடவில்லை. ஆனாலும் தூறலை யாரும் மதிக்கவில்லை. தெருவில் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணின் டி ஷர்ட்டை கீழே இறக்கி, போதையேறிய யாரோ ஒருவன் அவளின் முலையை முத்தமிட்டான். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 00:47

இமயாவின் கவிதை பற்றி…

இமயாவுக்கு ஒரு கடிதம் என்ற பதிவில் இமயாவின் கவிதை காணவில்லை என்பதைக் கூட ஸ்ரீராம்தான் சொல்ல வேண்டியிருக்கிறது. அதுவும் மருத்துவமனையில் பணியில் இருக்கும் ஒருவர். மற்ற யாருமே சுட்டிக் காட்டாதது வருத்தத்தை அளிக்கிறது. இமயாவின் கவிதை கீழே: இந்தக் கவிதையைப் படித்ததும் இதில் தெரியும் உணர்வு அலைகள் என்னை சில்வியா ப்ளாத்தின் ஞாபகத்துக்கு இட்டுச் சென்றது. ஒரு பதின்மூன்று வயதுச் சிறுமிக்கு எப்படி சில்வியா ப்ளாத்தின் angst வர முடியும் என்று யோசித்தேன். கவிதையை என் சிநேகிதிக்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2023 00:25

January 20, 2023

அன்பு: மூன்றே நாளில் 500 பிரதிகள்

கிட்டத்தட்ட கமலின் விக்ரம் மாதிரி வெற்றி அடைந்திருக்கிறது அன்பு நாவல். மூன்று நாளில் 500 பிரதிகள் விற்று விட்டன. அது உண்மையில் 510 ஆகத்தான் இருந்திருக்க வேண்டும். சுமார் அரை மணி நேரம் நேற்று அன்பு பிரதிகள் கைவசம் இல்லாமல் போனது. அப்போதே ஒரு பத்து பேர் வந்து கேட்டு விட்டுப் போனார்கள். என் எழுத்து வாழ்வில் இந்த அளவுக்கு வேறு எந்த நூலும் விற்றதில்லை. அனைவருக்கும் நன்றி. இன்றும் நாளையும் புத்தக விழா கடைசி. மாலை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2023 21:41

இலக்கியம் என்ன செய்யும்?

பொதுவாக என்னுடைய விடுமுறை நாட்கள் புத்தகங்களுடன்தான் செலவாகும். இது விரும்பி எடுத்த விடுப்பு அல்ல. கட்டாய விடுப்பு. விடுப்பில் இவ்விரண்டையும் வாசித்து முடித்துவிட்டேன். பொதுவாக சாருவின் எழுத்து ஒவ்வொருவரையும் ஒருமாதிரி influence செய்யும். அது அவரவரின் அன்றைய வரையிலான தனிப்பட்ட குணங்கள் பழக்கவழக்கங்கள் சார்ந்ததாக இருக்கும். சில மாதங்களுக்கு முன்பு மனதளவில் மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டிருந்தேன். லௌகீக வாழ்வின் மிக மோசமான தோல்வியில் சுருண்டிருத்தேன். அதிலிருந்து நான் மீள எனக்காக ஏதேதோ செய்துவந்த என் அம்மா ஒரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2023 20:00

இமயா என்ற சிறுமிக்கு ஒரு கடிதம்…

டியர் இமயா நீ எழுதியிருந்த ஒரு கவிதையை நேற்று எதேச்சையாகப் பார்த்தேன். அதில் இருந்த உணர்வு அலைகளில் நானும் ஆழ்ந்தேன். தமிழ்நாட்டில் வளரும் ஒரு பதின்மூன்று வயதுக் குழந்தைக்கு இப்படி ஒரு கவிதை எழுத வாய்ப்பது வரம் என்றே கருதுகிறேன். நான் என்னுடைய பதின்பருவத்தில் ஆங்கிலம் கற்றுக் கொண்டு படிக்க ஆரம்பித்த போது முதலில் படித்தது ரெய்னர் மரியா ரில்கே என்ற ஆஸ்த்ரியக் கவியைத்தான். இப்போதும் அவரைப் படிக்கிறேன். அவருடைய கவிதைகள் சிலவற்றை உனக்கு வாசிக்கத் தருகிறேன். ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 20, 2023 19:38

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.