சாரு நிவேதிதா's Blog, page 118
January 31, 2023
அன்பு: ஒளி முருகவேள்
நாவல் முழுவதும் அன்பினால் ஏற்படும் ரணங்கள் இருந்தாலும், பெருமாளை வலிகள் வாட்டு வாட்டென்று வாட்டினாலும் சாருவின் வசீகர எழுத்து நடையால் பக்கத்துக்கு பக்கம் சிரிப்பை அடக்க முடியவில்லை. சோகத்தைக்கூட கொண்டாட்டமாய் சொல்லும் அவரது மொழி நம்மை கட்டிப்போடுகிறது. அதுவே அவரது வாழ்வின் தத்துவமாகவும் நமக்கு அள்ளி அள்ளி வழங்கப்படுகிறது. நான் ரசித்துப் படித்த ராஸ லீலாவிற்குப் பிறகு சாருவின் ராட்சஸ விஸ்வரூபம் இது. இதை வாசிக்கம்போது சார்லி சாப்ளினின் திரைப்படங்கள் நினைவுக்கு வருகின்றன. சாப்ளினின் நகைச்சுவை கலந்த ... Read more
Published on January 31, 2023 20:28
அன்பு நாவல் குறித்து: வாஸ்தோ
நேற்று வாஸ்தோவிடமிருந்து ஒரு மெஸேஜ். ”அன்பு நாவலை ரொம்பவே நிதானமாக வாசிக்கிறேன் சாரு.” எனக்கு அது கொஞ்சம் ஆச்சரியமாக இருந்தது. எல்லோரும் ஒரே அமர்வில் ரெண்டு அல்லது மூணு மணி நேரத்தில் படித்து முடித்து விடுகிறார்கள். ராஜேஷுக்கு ஜுரம். அதனால் ஓய்வில் இருந்தார். இப்போது படிக்காதீர்கள் என்று அறிவுரை சொன்னேன். ஏனென்றால், எடுத்தால் வைக்க முடியாது என்பதுதான் காரணம். ஆனால் அதைச் சொல்லக் கூடாது என்று தணிக்கை செய்து விட்டேன். ஆனாலும் என் பேச்சைக் கேட்காமல் நாவலை ... Read more
Published on January 31, 2023 20:08
January 28, 2023
நான் ஒரு ஹெடேனிஸ்ட்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
Published on January 28, 2023 22:36
தனிவழிப் பயணி
தனிவழிப் பயணி புத்தகம் வாங்க இந்த இணைப்பைச் சொடுக்கவும். https://www.vishnupurampublications.c...
Published on January 28, 2023 20:31
January 27, 2023
சிறுகதைகள்: சாரு பேருரை
நாளை ஆரோவில்லில் சிறுகதைகள் பற்றி சாரு நிவேதிதா பேருரை ஆற்றுவார். காலை பத்து மணிக்கு சிறுகதைப் பட்டறை. நண்பகல் பன்னிரண்டு மணியளவில் சிறுகதைகள் குறித்த சாருவின் பேருரை. அனுமதி இலவசம். அனைவரும் வருக. நிகழ்வு நடக்கும் இடத்தின் கூகுள் மேப்: https://maps.app.goo.gl/k3hvBhht11rJU...
Published on January 27, 2023 06:04
January 25, 2023
அன்பு நாவல் ஒரு நண்பரின் வாழ்க்கையில்…
அன்பு நாவலில் மூன்று நண்பர்கள் காரில் ஒரு நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருப்பார்கள். சேலம் பக்கத்தில் ஒரு அசைவ மெஸ் வரும். அங்கே சாப்பிட வேண்டாம் என்பார் ஒரு நண்பர். மற்ற இருவரும் அங்கே சாப்பிட விரும்பியும் ஏதோ ஒரு பவனில் சைவ உணவு உண்பார்கள். மூவரில் பெருமாள் ஒருத்தன். அவனுக்கு எப்போதெல்லாம் பவனில் சைவம் சாப்பிட்டாலும் வயிற்று வலி வந்து விடும். தவறினதே இல்லை. அன்றைய தினமும் வந்தது. அன்பு நாவல் எழுதியதற்கு அந்த வலியே ஆரம்பப் ... Read more
Published on January 25, 2023 05:53
January 24, 2023
கற்றுக் கொண்டது…
அன்புள்ள சாரு நிவேதிதா அவர்களுக்கு, வைதேகி, கொக்கரக்கோ, உலகளந்தான், பச்சைக்கண், தண்ணீர், அரக்கோணம், பூனை, ஆடு, அமைப்பு முக்கியமாக “போடீ சு**” இவை அனைத்தும் நான் படித்து முடித்த பன்னிரண்டு மணி நேரத்தில் மண்டைக்குள் ஓடிக் கொண்டிருக்கும் வார்த்தைகள். வைதேகி – அன்பின் நேர்மறையும் எதிர்மறையும். கொக்கரக்கோ – இவ்வளவு தானே, இதுக்கேன்டா இவ்வளவு பொங்குறீங்க? அன்போ அறிவோ சரியா வேலை செஞ்சாதான்டா முழுமையாகும். உணர்ச்சியால் பொங்கி ஏன்டா மத்தவன் வாழ்க்கைய நாசமாக்குறீங்க என்கிற ‘Rationality’ன் முகம். ... Read more
Published on January 24, 2023 23:47
காதை அறுத்துக் கொடுத்த வான்கோவும் அடியேனும்…
இப்போது நான் இங்கே எழுதப் போவதை அன்பு நாவலைப் படித்த யாரேனும்தான் எழுதியிருக்க வேண்டும். யாரும் எழுதவில்லை. அதனால் நான் எழுதத் துணிந்தேன். மேலும், எது எழுதினாலும் அதை எழுதிய பிறகு அந்த சிருஷ்டி – அந்தப் பிரதி – எழுதிய நபருக்கு அந்நியமாகத்தானே போகிறது? அந்த வகையிலும் இப்போது நான் எழுதுவதை எடுத்துக் கொள்ளலாம். வான்கோ தன் காதலிக்காகத் தன்னுடைய ஒரு காதை அறுத்துக் கொடுத்தான் என்ற செய்தியைக் கேள்விப்படாதவர் இருக்க முடியாது. அந்தச் சம்பவம் ... Read more
Published on January 24, 2023 15:32
பிரார்த்தனை குறித்த கேள்வியும் பதிலும்: சக்திவேல்
அன்புள்ள சாரு உங்களுடைய புதிய நூலாக அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு வந்துள்ளதாக அறிந்தேன். புத்தக விழாவில் நீங்கள் சுருதி டிவிக்கு கொடுத்த சிறு பேட்டி ஒன்றையும் கண்டேன். அன்பு என்ற பேரில் ஒருவனை சமூகம் எப்படியெல்லாம் வன்முறைக்கு உட்படுத்துகிறது என்பதை எழுதியிருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் இன்னும் நாவலை வாசிக்கவில்லை. இனிமேல்தான் வாங்க வேண்டும். என்னிடம் கடைசியாக வாசிக்காது வைத்திருந்த உங்களுடைய இரு நாவல்களான தேகம், எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் ஆகிய நாவல்களை சென்ற வாரத்தில் ... Read more
Published on January 24, 2023 05:53
January 23, 2023
மாதம் ஒரு நூல்…
அநேகமாக உலக அளவில் தேடினாலும் இந்த அளவுக்குத் தரமாகவும் அதிகமாகவும் எழுதுவதற்கு வேறு எங்கும் எழுத்தாளர்கள் கிடைக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே பத்து நூல்கள்தான் எழுதி முடிக்கிறார்கள். இங்கே லோக்கலாக அருந்ததி ராய் ஒரு உதாரணம். ஒரே ஒரு நாவலை வைத்துக் கொண்டே மூன்று பத்தாண்டுகளை ஓட்டி விட்டு இப்போது இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார். மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் பூச்சி என்ற தலைப்பில் ஒரு தொடரை தினந்தோறும் எழுதியது உங்களுக்கு ... Read more
Published on January 23, 2023 22:38
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

