சாரு நிவேதிதா's Blog, page 114
March 5, 2023
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
எழுத்தாளர்களைப் பின்பற்றாதீர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
Published on March 05, 2023 01:04
March 4, 2023
கோணங்கியின் அத்துமீறலும் அதிகாரத்தின் கொடுக்குகளும், எழுத்தாளர் என்ற சலுகையும்: அராத்து
”இவனுவங்களையெல்லாம் நடுத்தெருவுல நிய்க்க வச்சு சுடணும் சார்” என்பதிலிருந்து “எழுத்தாளனும் சைக்கிளுக்கு பங்ச்சர் போடுபவனும் ஒன்றுதான்” என்பது வரை எல்லாம் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இன்று அராத்து எழுதியிருப்பதோடு முற்றிலுமாக உடன்படுகிறேன். ஏனென்றால், அராத்து அதிகாரம் பற்றிப் பேசுகிறார். அதிகாரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கட்டியமைத்து, பின்னர், அதைத் துஷ்பிரயோகம் செய்யும் நிலை. அதைப் பற்றித்தான் நான் தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். – சாரு இனி அராத்து: கோணங்கியின் பாலியல் அத்துமீறலைப் பற்றி பல திசைகளில் இருந்தும் குற்றச்சாட்டு வந்ததும் ... Read more
Published on March 04, 2023 20:39
சுயவதை
சற்று நேரத்துக்கு முன் ஒரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். அவர் குடிப்பழக்கம் இல்லாதவர். கோவாவில் இருப்பதாகச் சொன்னார். பக்கத்திலேயே மற்றும் ஒரு நண்பர் ஏதோ உயர் ரக விஸ்கி அருந்திக் கொண்டிருப்பதாக மேலதிகத் தகவலையும் கொடுத்தார். இன்னொரு நண்பருக்கு ஃபோன் பண்ணினேன். ஏற்காட்டில் இருப்பதாகச் சொன்னார். அவரும் தான் அருந்தும் பானம் பற்றிய விவரத்தை நான் கேட்காமலேயே சொன்னார். பின்னர் கோவா போன நண்பர் சற்று விவரமாகப் பேசினார். கடல் அலை அடிக்கும் ஓரத்தில் அறையாம். அங்கே ... Read more
Published on March 04, 2023 05:43
March 3, 2023
எழுத்தாளன், புனிதன், மனிதன் : ஜெயமோகன்
நேற்று (வெள்ளிக்கிழமை) சமஸ் அருஞ்சொல் நேர்காணலுக்கான கேள்விகளை அனுப்பினார். இரண்டு மணி நேரத்தில் 2000 வார்த்தைகளில் பதில்களைத் தட்டச்சு செய்து அனுப்பினேன். இன்று காலையில் ஜெயமோகனின் தளத்தைப் பார்த்தால் நேற்று நான் சமஸுக்கு அனுப்பிய பதில்கள் வேறு வார்த்தைகளில் வந்திருந்தன. ஏற்கனவே நான் பல முறை எழுதியவைதான். அவற்றையெல்லாம் நேற்று அருஞ்சொல்லுக்காகத் தொகுத்து எழுதியிருந்தேன். நேற்று ஜெயமோகனின் தளத்தில் வந்த ”பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்றல்” என்ற கட்டுரைதான் ஜெ. இதுவரை எழுதியவற்றுள் ஆக மோசமான கட்டுரை. அதை நீக்கி ... Read more
Published on March 03, 2023 20:23
March 2, 2023
ஒரு சினிமா காட்சி: அராத்து
ஜட்ஜ் : ரேப் பண்ணியா? கலைஞன் : ஐயா நான் கலைஞன். இருள் ஒளிப்பாதையில் பயணிக்கும்போது கிடைக்கும் நுட்பமான அனுபவங்களை அதன் இருண்மைத் தன்மையோடு …. ஜட்ஜ் : யோவ் இன்ஸ்பெக்டர் …ஒனக்கு இதே வேலையாப்போச்சி. இவரு மெண்டல் போலருக்கு …மொதல்ல மெண்டல் ஹாஸ்பிடலுக்கு அனுப்பணும்… இன்ஸ் : இல்லீங்க ஐயா …மெண்டல் மாதிரி நடிக்கிறாரு. பத்துப்பதினஞ்சி பேர இதே மாதிரி பண்ணிருக்காரு. ஜட்ஜ் : மெண்டல் மாதிரி நடிக்கிறியா? கலைஞன் : ஒரு தடவை என்கூட ... Read more
Published on March 02, 2023 23:14
இலங்கைப் பயணம்
ஏப்ரல் 22ஆம் தேதி இலங்கை செல்கிறேன். இதுதான் என்னுடைய முதல் இலங்கைப் பயணம். 24 அன்று மட்டக்களப்புவில் நடக்க இருக்கும் புத்தகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காகச் செல்கிறேன். ஒரு வாரம் நடக்கும் புத்தக விழாவில் தினமும் கலந்து கொள்வேன். அதற்குப் பிறகு இரண்டு வாரம் இலங்கையைச் சுற்றிப் பார்க்க நினைக்கிறேன். எங்கே போகலாம், எங்கே தங்கலாம் என்று எந்த யோசனையும் இல்லை. இந்த மாதக் கடைசியில் கோவா செல்லும்போது அந்தத் திட்டத்தைப் போடலாம் என்று உத்தேசித்திருக்கிறேன். புத்தக ... Read more
Published on March 02, 2023 02:55
March 1, 2023
அன்பு – ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு – ஓர் அனுபவப் பகிர்வு – புவனேஸ்வரி
Charu, first I want to tell you how thankful and priviledged I feel, to recieve the அன்பு novel as my B’day Gift from you. It is one of the most blessed days of my life. Second, I want to sincerely apologise for such a delayed reply after reading the novel. நானூறு பக்க நாவல் எழுதின உங்க ... Read more
Published on March 01, 2023 20:53
கோவாவுக்கு சாலைவழிப் பயணம்
மார்ச் கடைசி வாரம் கோவாவில் சந்திக்கலாம் என்று எழுதியிருந்தேன். நண்பர் கணபதியைத் தவிர வேறு யாரும் ஆர்வம் காட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு அராத்து, அடியேன், கணபதி ஆகிய மூவர்தான். இதற்கிடையே கணபதி சொன்ன ஒரு திட்டம் சுவாரசியமாக இருந்தது. ஏற்கனவே நான், அராத்து, கணபதி, செல்வா நால்வரும் மேற்கு வங்கம் வரை ஒரு சாலைப் பயணம் செல்லலாம் என்ற திட்டத்தில் இருக்கிறோம். அதற்கு முன்னோடிக் குறும்பயணமாக இது இருக்கலாம் என்றார் கணபதி. அதாவது, ஹைதராபாத் வரை விமானத்தில் ... Read more
Published on March 01, 2023 03:41
சூம்பி இலக்கியம்: அராத்து
ஆண் பெண் பாலுறவு எவ்வளவு இயல்பானதோ அவ்வளவு இயல்பானதுதான் ஆண் ஆண் மற்றும் பெண் பெண் பாலுறவும் என்று நினைப்பவன் நான். அதனால்தான் என் வலது காதில் வளையம் அணிந்திருக்கிறேன். ஆண் ஆண், பெண் பெண் உறவில் எந்தப் பிறழ்வும் இல்லை என்று நம்புகிறேன். அதனால்தான் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பே நான் bisexual என்று அறிவித்தேன். மேலும், ஒரு ஆண் அல்லது பெண் தன் ஆயுள் முழுவதும் இன்னும் ஒரே ஒரு பெண்ணுடனோ அல்லது ஆணுடனோதான் பாலுறவு ... Read more
Published on March 01, 2023 01:03
February 26, 2023
நண்பகல் நேரத்து மயக்கம் ஏன் ஒரு போலியான படம்?
நண்பகல் நேரத்து மயக்கம் படத்தை இப்படித் தட்டையாக, தடாலடியாகப் போட்டுத் தாக்குவது சரியல்ல என்று ஒரு நண்பர் சொன்னார். இதுவே ஒரு ஐரோப்பியப் படம் என்றால் பாராட்டியிருப்பீர்கள் அல்லவா என்றும் கேட்டார். அப்படிப்பட்ட அந்நிய மோகம் கொண்டவன் அல்ல நான். இலக்கியத்தில்தான் அந்நிய மோகம் தலைவிரித்து ஆடுகிறது. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கியையும் முராகாமியையும் இங்கே கொண்டாடுகிறார்கள். ஆனால் அவர்களை விடப் பன்மடங்கு நன்றாக எழுதும் தமிழ் எழுத்தாளனின் பெயர் சொல்லத் தயங்குகிறார்கள். ட்யூரின் ஹார்ஸின் பெயரைக் குறிப்பிட்டதற்கான காரணத்தைச் ... Read more
Published on February 26, 2023 21:55
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

