சாரு நிவேதிதா's Blog, page 113
March 13, 2023
அராத்துவின் புதிய சிறுகதை
அவர் எழுதுவது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை; பாரம்பரியமான எழுத்தாளர்கள் யாவரும் அராத்துவை ஒரு எழுத்தாளராகவே ஒத்துக்கொள்வதில்லை. அப்புறம்தானே நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற பேச்சு. ஆனால் நான் உலக இலக்கியத்தை நன்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பு பற்றி நான் பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம். எனக்கு ஒரு புத்தகத்தை அவசரமாகப் படிக்க வேண்டும். ஆனால் அதன் விலை எக்கச்சக்கம். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு மூன்று பேரில் ஸ்ரீராமும் ஒருவர். அவரிடம் சொன்னேன். ... Read more
Published on March 13, 2023 22:49
நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு கேட்டேன். பார்த்தேன். குடிகாரன் எடுத்த வாந்தி போல் இருந்தது. இதற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் வைரமுத்துவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கலாம். ஆனால் பெருமாள் முருகன் ஏமாற்றமடைவார். சமீபத்தில் நிறைய போலிகளைப் பார்த்து படித்து மன உளைச்சலில் இருக்கிறேன். ஊரே கொண்டாடிய ஒரு சிறுகதை. போலி எழுத்தின் உச்சகட்டம். ஊரே கொண்டாடிய ஒரு சினிமா. மதிய நேரத்து மயக்கம். போலி சினிமாவின் எடுத்துக்காட்டு. இதற்கிடையில் இளையராஜாவின் பாட்டு வேறு. அதை போலி என்று சொல்லக் ... Read more
Published on March 13, 2023 02:42
March 11, 2023
வழிந்தால் வழிவேன்
கடந்த புத்தக விழாவின் போது ஒரு பிரபலமான பெண்மணி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு தன் தோழியிடம் எனக்கும் கேட்கிறாற்போலவே “பார், சாருவின் கன்னம் எப்படி மின்னுகிறதென்று?” என்றார். மற்றவர்களாக இருந்தால் ஹி ஹி என்று வழிவார்கள். நான் வேறு மாதிரி வழிந்தேன். “எனக்காவது கன்னம் மட்டும்தான் மின்னுகிறது. உங்களுக்கோ முழு தேகமே மின்னுகிறதே?” என்றேன். அப்போது அவர் பார்த்த ஒரு பார்வைக்கு இந்த உலகத்தையே தூக்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அவருடைய தொலைபேசி ... Read more
Published on March 11, 2023 20:36
இளையராஜா – றியாஸ் குரானா
நேற்று இளையராஜாவின் காட்டு மல்லி என்ற பாடலைக் கேட்டு மனம் மிக நொந்தேன். ராஜாவின் பாடல்களிலேயே ஆக மட்டமான பாடல். அப்படிக் கூட சொல்ல முடியாது. அந்தப் பாடலை ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அத்தனை மட்டமான பாடல். இதை ஃபேஸ்புக்கில் எழுதியதும் எல்லோரும் என் மீது வாந்தி எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். ஒரே வசை. தன் அசிங்கம் அவ்வளவையும் என் மீது கொட்டினார்கள். எனக்கு ஒன்றும் பாதிப்பு இல்லை. எல்லோரும் எத்தனை அசிங்கத்தோடு திரிகிறார்கள் ... Read more
Published on March 11, 2023 20:27
ஒரு fetish கதை…
ஆட்டைப் புணர்ந்தது போல் இருந்தது அந்தக் கதை. ஆட்டைப் புணர்வது வக்கிரத்தில் வரும். ஆனால் அதையே ஒருத்தன் ஆட்டின் ஆசன வாய்க்கு ஒரு வர்ணனை, அதன் மடிக்கு ஒரு வர்ணனை, அதன் மூஞ்சிக்கு ஒரு வர்ணனை என்று வர்ணித்து வர்ணித்து எழுதினான் என்றால் அதை fetishஇன் உச்சக்கட்டம் என்றுதானே சொல்வீர்கள்? சில வெளிநாடுகளில் கக்கூஸ் மாதிரி ரெஸ்டாரண்ட் கட்டி அங்கே சாப்பிடுகிறார்கள். ஒரு இணைய வேசி தன் அபானவாயுவைப் பிடித்து என்.எஃப்.டி.யில் விற்று கோடிக்கணக்கில் சம்பாதித்து இருக்கிறாள். ... Read more
Published on March 11, 2023 03:40
March 10, 2023
புதிய வாசக தளம்
என்னுடைய அருஞ்சொல் நேர்காணல்களைத் தொடர்ந்து வாசித்து வருகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதில் நான் சொல்லியிருக்கும் பல விஷயங்கள் என்னை இதுகாறும் தொடர்ந்து வரும் வாசகர்களுக்குப் பரிச்சயமாகி இருக்கலாம். ஆனால் இப்போது அருஞ்சொல்லில் அது எல்லாவற்றையும் தொகுத்துத் தருகிறேன். மேலும், அருஞ்சொல் வாசகர்களுக்கு அது எல்லாமே புதியவை. அருஞ்சொல் மூலம் நான் பல ஆயிரம் புதிய வாசகர்களைச் சென்றடைந்திருக்கிறேன் என்பதும் தெரிய வருகிறது. உதாரணம் இந்தக் கடிதம். உங்கள் பெயரே எனக்கு இரண்டு தினங்களாகத்தான் தெரியும் என்று ஆரம்பிக்கிறது ... Read more
Published on March 10, 2023 23:21
எழுத்தாளராவது எப்படி? – சிறுகதை
எனக்கு ஜெயமோகன் மீது ஒரே ஒரு விஷயத்தில்தான் பொறாமை. அவருடைய வாசகர்கள். கோவையில் ஒவ்வொரு வருடமும் பிரம்மாண்டமான முறையில் ஒரு விழாவை நடத்திக் காண்பிக்கிறார்கள். அது தவிர மாதாமாதம் ஒவ்வொரு ஊரிலும் வெண்முரசு கூட்டம். அமெரிக்காவிலோ கேட்கவே வேண்டாம். இங்கே இருந்தபடியே அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கூடிய அளவுக்கு அவரது அமெரிக்க வாசகர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். விஷ்ணுபுரம் வட்டத்தில் உள்ள ஒரு பத்து முக்கியஸ்தர்களுக்கு ஒரு கொக்கரக்கோ சமம்தான் என்றாலும் ... Read more
Published on March 10, 2023 21:39
March 9, 2023
அருணாசலத்துக்கு வாழ்த்து
அருணாசலம் பற்றி எழுதியிருக்கிறேன். அவரைப் போன்ற ஒரு அபூர்வமான மனிதரை நான் கண்டதில்லை. அவர் கோபப்பட்டு நானோ நண்பர்களோ பார்த்ததில்லை. அதிர்ந்து கூடப் பேச மாட்டார். புகைப்பழக்கம் கிடையாது. மதுவைத் தொட்டதே இல்லை. எந்தப் பெண்ணையும் ஏறிட்டும் பார்க்க மாட்டார். எல்லாவற்றையும் விடக் கொடுமை என்னவென்றால், தூய சைவம். மதுரையில் எப்படி இப்படி ஒரு அதிசயம் நிகழ முடியும் என்றே எனக்குப் புரியவில்லை. தஞ்சாவூர் என்றால் கூடப் புரிந்து கொள்ள முடியும். மதுரையிலா? ஆனால் நேரில் பார்ப்பதற்கு ... Read more
Published on March 09, 2023 22:23
பாமரர் உலகம்
இங்கே தமிழ்நாட்டில் படிக்காதவர் பாமரர் அல்ல; அவருக்காவது கொஞ்சூண்டு காமன்சென்ஸ் உள்ளது. இங்கே பாமரர் என்ற பிரிவுக்குள் வருபவர்கள் பெரும்பாலும் புத்திஜீவிகளும் பேராசிரியர்களும் சில பத்திரிகையாளர்களுமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு பாமரர் என் பெயரைக் குறிப்பிட்டு தமிழ் இந்து தினசரியில் அவதூறாக எழுதியிருந்தார். அதேபோல் ஒரு பேராசிரியரும் அடிமட்டித்தனமாக எழுதியிருந்தார். இருவருக்கும் பதில் கூறுவது என் வேலையல்ல, நான் இரண்டு நாவல்களை இப்போது ஒரே நேரத்தில் எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த மூடர்களுக்கு பதில் சொல்ல நேரமும் இல்லை. ... Read more
Published on March 09, 2023 21:18
மொழிபெயர்ப்பு அவலம்
தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களை நான் படிப்பதே இல்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தால் இலக்கியமும் தெரியவில்லை, இலக்கியத் தமிழும் தெரியவில்லை. அதனால் அந்தப் பக்கமே நான் செல்வதில்லை. நேற்று அராத்து எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளை மேற்கோள் கொடுத்திருந்தார். அந்த நாவல் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்துள்ளது. அந்த நாவல் ... Read more
Published on March 09, 2023 21:07
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

