சாரு நிவேதிதா's Blog, page 109

April 20, 2023

எந்த விருதும் கிடைக்காததன் காரணம் இதுதான்!

ஏதாவது நல்லது நடக்க இருந்தால் கடைசி நிமிடத்தில் அது தட்டிப் போய் விடுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு Jan Michalski விருதுக்கு ஸீரோ டிகிரி பரிந்துரைக்கப்பட்டது.  குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல் விருது பெறவில்லை.  விருது பெற்ற நாவல் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.  அந்தப் பட்டியலில் ஸீரோ டிகிரிதான் வலுவானது என்றும் அதற்குத்தான் விருது கிடைக்கும் என்றும் எஸ்.ரா. எனக்கு ஃபோன் செய்து சொன்னார்.  ஆனால் கிடைக்கவில்லை.  இப்படியே ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டு போகிறது.  இப்போது ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 23:55

the most funniest and craziest thing of all the seven worlds…

ஆர்மரி ஸ்கொயரில் என் ராஸ லீலாவைத் திட்டி ஒரு முழத்துக்கு எழுதியிருக்கிறார்கள் இல்லையா, இந்த ஆர்மரி ஸ்கொயர்காரர்கள் தேர்ந்தெடுக்கும் நூலை ஓப்பன் லெட்டெர் புக்ஸ் என்ற பதிப்பகத்தில்தான் வெளியிடப் போகிறார்கள். இந்த ஓப்பன் லெட்டர் புக்ஸின் தலைவர் பெயர் Chad W. Post. இவர்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு ரோச்சஸ்டர் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரி நாவலை பாடமாகச் சேர்த்தவர். ஸீரோ டிகிரியில் எவ்வளவு செக்ஸ் இருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். இதே Chad W Post ஸீரோ ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 06:11

ஆதரவுக் குரல்: றியாஸ் குரானா

காலையில் அபிலாஷ் சந்திரனின் காணொலி பார்த்தேன். எனக்கு ஆதரவாக எப்போதும் பேசக் கூடிய ஒருவர் அபிலாஷ். நண்பர் என்பதால் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. ஒத்த கருத்து என்பதால்தான் நட்பே கை கூடுகிறது. இப்போது றியாஸ் குரானா. நான் இலங்கை செல்வதால் றியாஸ் குரானாவைப் பாராட்டி எழுதுகிறேன் என்ற பிராது கிளம்பும். நான் அரசியல்வாதி அல்ல. நான் றியாஸைச் சந்திக்கிறேன் என்ற காரணத்தினால்தான் அவரை அவசரமாகப் படித்தேன். பார்த்தால் இவரை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்க வேண்டும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 05:25

இலங்கைப் பயணம் – 1

ஏப்ரல் 26 இலங்கை வருகிறேன். இப்போதுதான் சென்னையிலிருந்து கொழும்பு ஒன்றரை மணி நேரப் பயணம் என்பது மனதில் பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து பத்து நிமிடத்தில் கூட இலங்கை மண்ணைத் தொட்டு விடலாமாக இருக்கும். என்ன செய்வது, அத்தனை மோசமாக இலங்கையும் இந்தியாவும் நட்புறவு பாராட்டியிருக்கிறார்கள். ஏப்ரல் 26, 27, 28 மூன்று தினங்களும் கொழும்பு. எங்கே தங்குவேன் என்ற விவரம் சீனிக்குத்தான் தெரியும். அதன் பிறகு வவுனியா. மே 18 வரை இலங்கையில்தான் இருக்கிறேன். கொழும்புவில் ஒடியல் கூழ் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 04:46

நிரந்தர அந்நியன்

சமீபத்தில் நான் எழுதிய தீண்டாமை என்ற கட்டுரை பற்றி அபிலாஷ் சந்திரன் பேசியிருக்கிறார். பேச்சில் இருபது நிமிடம் இமையம் பற்றியது. மூத்த எழுத்தாளர்கள் ஏன் இளைய எழுத்தாளர்களை அங்கீகரிப்பதில்லை என்பது பற்றியது. இது எனக்கும் பொருந்தும். எனக்குமே இளைய எழுத்தாளர்கள் பலரைப் பிடிக்கவில்லை. சிலரைப் பிடிக்கிறது. பாலசுப்ரமணியம் பொன்ராஜ், பெருந்தேவி, அராத்து போன்றவர்களே அந்த சிலர். இமையத்தின் எழுத்து எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கவில்லை. பெருமாள் முருகனும் அப்படியே. இந்த இருவரையும் விட ஜூனியர் விகடனில் எழுதும் நிருபர்கள் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2023 02:37

April 19, 2023

நீதிபோதனையும் இலக்கியமும்: அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனைகள்

என் மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியிருக்கிறது. முழுக்க முழுக்க மிரட்டல்தான். அவர்கள் சொல்படி கேட்காவிட்டால் உங்களை நியூயார்க் கோர்ட்டுக்கு இழுப்போம் என்று மிரட்டல். இது அவருக்கும் அமெரிக்க நிறுவனத்துக்குமான பிரச்சினை மட்டும் அல்ல. ஏனென்றால், அந்த வக்கீல் நோட்டீஸில் என் ராஸ லீலாவைப் போட்டு கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் வக்கீல். எனக்கே அந்த நோட்டீஸைப் படித்தால் உலகின் மிக ஆபாசமான, மோசமான நாவல் ராஸ லீலாதான் என்று தோன்றுகிறது. ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 23:32

கொக்கரக்கோ எழுத்தாளனான கதை (தொடர்ச்சி)

இலங்கை செல்வதற்கு எனக்கு ஒரு ட்ராலி பேக் வேண்டும். சேம்ஸனைட் பதினைந்தாயிரம் ரூபாய். எதற்கு அத்தனை செலவு, ஐந்தாயிரத்திலேயே வாங்கி விடலாம் என்றான் கொக்கரக்கோ. சரி. ஒத்துக் கொண்டாயிற்று. முன்பு போல் இருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். இப்போது ஆவணப்படத்தில் இருபத்தைந்து லட்சம் செலவாகி விட்டதால் கொஞ்சம் கஞ்ஜூஸாகி விட்டேன். தி. நகரில் ரோஷன் பேக் மால் வந்து விடுங்கள் என்றான் கொக்கரக்கோ. சரி. அப்படியே நாம் கொஞ்சம் பியர் சாப்பிடலாமே என்றேன். இல்லை சாரு, நான் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2023 08:20

April 18, 2023

சாருவின் முன்ணுணர்வு: அ. ராமசாமி

சாரு நிவேதாவின் முன்னுணர்வு ஆச்சரியம் ஊட்டக்கூடியதாக இருக்கிறது. ஏப்ரல் 5 ஆம் தேதி கனடாவிலிருந்து எழுதும் தமிழ் எழுத்தாளரான அ.முத்துலிங்கம் தனது முகநூல் பக்கத்தில் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து செயல்படும் அர்மோரி ஸ்கொயர் விருதுக்குழுவின் அறிவிப்பொன்றின் இணைப்பைத் தந்திருந்தார்.  அதில் தென்னாசிய மொழிகளிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட நூல்களுக்கான விருது அறிவிப்பின் குறும்பட்டியல் இருந்தது. அப்பட்டியல் இடம்பெற்றுள்ள 7 நூல்களில் அவரது நூலோடு சாருவின் நூலும் இடம் பெற்றிருந்தது.  அப்பதிவை வாசித்தவுடன் சாருவின் வலைப்பக்கம் சென்று பார்த்தேன். அப்படியொன்றைப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 04:05

தீண்டாமை

தீண்டாமை பற்றி யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட தலித் மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கரைத்து விட்ட கொடுஞ்செய்தியையும் அறிந்தோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கொடுமை தீண்டாமை. அந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வருவதற்கு சமூகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தீண்டாமை என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. உலகின் பல்வேறு சமூகங்களில் தீண்டாமை இருந்திருக்கிறது. முக்கியமாக, ஆஃப்ரிக்காவிலும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 02:50

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.