சாரு நிவேதிதா's Blog, page 110

April 18, 2023

றியாஸ் குரானா: இலங்கையிலிருந்து ஒரு மாற்றுக் குரல்

நான் எந்த ஒரு எழுத்தாளரையும் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய பெரும்பாலானவற்றைப் படித்து விட்டுச் செல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போது இலங்கையில் வசிக்கும் நண்பர் றியாஸ் குரானாவை சந்திக்கப் போகிறேன். அதனால் அவர் எழுதிய அனைத்தையும் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவருடைய ஒரு நேர்காணல் இது: ”தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 18, 2023 00:10

April 17, 2023

a sad state of affairs…: Ramjee Narasiman

Dear Friends, Please take some time to go through the Twitter link in the comments . In a nutshell. A newly constituted international translation award announces to the translator in writing that her shortlisted work unanimously has been declared as the winner by the entire appointed Jury. This award in its website promises to be ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2023 08:56

April 16, 2023

நிலவு தேயாத தேசம் குறித்து…

வணக்கம் சாரு ஐயா, நிலவு தேயாத தேசம் வாசித்து முடித்து விட்டேன்.  இந்த நூலை வாசித்ததன் மூலம் எனக்கு ஏற்பட்ட புரிதல்களில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். நான் வாசித்த நூல்களிலே மதிப்புரை இல்லாத நூல் இதுவே. மதிப்புரைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்காது.  புத்தகத்தை வாசிக்கும் முன்னரே மதிப்புரையை வாசித்தால் அதை எழுதியவரின் பார்வை ஆழ்மனதில் பதிந்து விடும் என்று வாசிக்க மாட்டேன். இந்த நூலில் மதிப்புரை இல்லாதது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2023 02:38

சில குறிப்புகள்

நான் சில காலமாக அமைதியாக இருப்பதன் காரணம், மிக முக்கியமான காரியம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதுதான். இடையில் ஒருநாள் ராம்ஜி மற்றும் காயத்ரியுடன் நிர்வாணா என்ற உணவகத்துக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தேன். இருவரையும் சந்தித்து, இருவரோடும் உணவு உண்டு ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் செல்லலாம் என்ற முடிவில் இருந்தோம். அப்படியானால் இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம் என்று நினைத்தேன். இரண்டு கிளாஸ் அருந்தினால் வீட்டில் தெரியாது. அதற்கு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2023 00:19

April 15, 2023

துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

துணைவேந்தர்கள் ஜெயமோகன், எஸ்ரா: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2023 18:21

April 14, 2023

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

இந்தப் பரிசு விஷயத்தில் இரண்டு பேருமே கீழ்மையில் கிடந்து புரண்டிருக்கிறார்கள். ஒன்று, பரிசு கொடுக்கும் நிறுவனம். நடுவர்களின் தலைவர் நந்தினிக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் அனைவரும் ஏகமனதாக உங்கள் மொழிபெயர்ப்பை (சாரு நிவேதிதாவின் நாவலை) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எழுதுகிறார். பிறகு நான்கு நாள்களில் “சட்டச் சிக்கல் வரும் என்று எங்கள் சட்டப் பிரிவு கருதுவதால் முதல் பரிசு உங்களுக்கு இல்லை” என்று கடிதம். என்ன சட்டச் சிக்கல் என்ற விவரம் இல்லை. ஒன்று, ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 14, 2023 00:38

April 13, 2023

இனவாதம்

*** என் நாவல் ஒன்று சமீபத்தில் ஒரு அமெரிக்கப் பதிப்பக நிறுவனத்தினால் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர்கள் வெளியிட்ட குறும்பட்டியலில் என் நாவலும் இருந்தது. விஷயம் வெளிவந்து பத்து நாள் இருக்கும். அதை நான் எந்த அளவுக்கு மதிக்கவில்லை என்றால், இங்கே என் தளத்தில் அந்தச் செய்தியையே நான் வெளியிடவில்லை. இதிலிருந்தே நான் அந்தச் செய்தியை மதிக்கவில்லை என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏன் மதிக்கவில்லை என்றால், இதேபோல் பல முறை என் நாவல்கள் குறும்பட்டியல்களில் இடம் பெற்று கடைசிப் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 13, 2023 22:04

April 10, 2023

Suck my tongue…

தலாய்லாமாவின் ஒரு சிறுவனுக்கு வாயில் முத்தம் கொடுத்து, கூடவே தன் நாக்கையும் நீட்டி, suck my tongue என்று சொல்லும் காணொலியை இதற்குள் நீங்களும் பார்த்திருப்பீர்கள்.  இந்தச் சம்பவம் முழுமையும் ஒரு பொதுவெளியில் நடந்திருக்கிறது.  பலரும் இதை ஆர்வத்துடன் தங்கள் கைபேசியால் விடியோ எடுக்கிறார்கள்.  யாருக்கும் இந்தச் சம்பவத்தின் விளைவுகள் பற்றித் தெரிந்திருக்கவில்லை.  நூறு ஆண்டுகளுக்கு முன்னே திபெத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால் அது வேறு விஷயம்.  ஆனால் இன்று தலாய்லாமா உலகப் பிரசித்தி பெற்றவர்.  ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 10, 2023 02:30

April 9, 2023

விடுதலை : ஒரு பிளாஸ்டிக் அனுபவம்

வெற்றிமாறனின் படங்கள் எனக்குப் பிடிக்கும்.  அவை பக்கா கமர்ஷியல் சினிமாதான் என்றாலும், அவற்றில் அவ்வப்போது தென்படும் கலை நுணுக்கங்கள் ரசிக்கக் கூடியவையாக இருக்கும்.  பொதுவாக தமிழில் பொழுதுபோக்குப் படங்கள் என்பவை அருவருப்பாகவும் ஆபாசமாகவுமே இருக்கின்றன.  விஜய், அஜித், ரஜினி ஆகியவர்களின் படங்களை உதாரணம் சொல்லலாம்.  ஆனால் வெற்றிமாறன், மணி ரத்னம், மிஷ்கின், கமல்ஹாசன் போன்றவர்களின் படங்கள் பொழுதுபோக்கு சினிமாவே என்றாலும் தரமானவை என்பதில் சந்தேகம் இல்லை.  ஆனால் தமிழில் இவர்களின் படங்களை பொழுதுபோக்கு சினிமாவாகப் பார்க்காமல் கலையாகக் ... Read more
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 09, 2023 00:39

April 8, 2023

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி

கமல் செய்தால் கிசுகிசு, நான் செய்தால் பொறாமை: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 08, 2023 20:01

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.