சாரு நிவேதிதா's Blog, page 112
March 21, 2023
கோவாவுக்கு சாலைவழிப் பயணம்
வரும் இருபத்தெட்டாம் தேதி இங்கிருந்து ஹைதராபாத் வரை விமானத்தில் சென்று விட்டு, பிறகு இருபத்தொன்பதாம் தேதி ஹைதராபாதிலிருந்து கோவாவுக்கு நண்பர் கணபதியின் காரில் செல்வதாக ஏற்பாடு. வழியில் ஹம்ப்பியில் இரண்டு நாள் தங்கலாமா என்று கேட்டார் சீனி. என் வீட்டில் சீனியோடு நான் பேசுவதற்குத் தடை என்பதால் போன் சாட் மூலம்தான் உரையாடல். ஓ தங்கலாமே, இரண்டு நாட்களுக்கும் ஹம்ப்பியில் வேலை இருக்கிறது என்றேன். மற்றவர்களாக இருந்தால் ஓகே என்று விட்டு விடுவார்கள். சீனி எழுத்தாளராக மாறிய ... Read more
Published on March 21, 2023 09:31
March 19, 2023
அச்சு ஊடகங்களின் காலம்
வணக்கம் சாரு ஐயா, என்னுடைய கேள்விக்கு உங்களுடைய தளத்தில் பதில் கூறியமைக்கு மிக்க நன்றி. உயிர்மை சிற்றிதழ் நான் வாசித்ததில்லை.காலச்சுவடு, நான் கல்லாரியில் இளநிலை படித்த பொழுது தொடர்ச்சியாக வாசித்து வந்தேன். அந்த சமயத்தில் காலச்சுவடு எனக்கு ஒரு அறிவுப்பெட்டகமாகவே விளங்கியது.அவர்கள் வெளியிடும் புத்தகங்கள் சிலவற்றையும் வாசித்திருக்கிறேன். இப்பொழுது தொலைதூர வழியில் முதுநிலை பயில்வதால் தொடர்ச்சியாக அதை வாசிக்க இயலவில்லை. .ஆங்கிலத்தில், நிறைய பொதுவான விஷயங்களைப் பேசும் இணையதளங்கள் உள்ளன. தமிழில் அது போன்றவை குறைவாகவே உள்ளன. ... Read more
Published on March 19, 2023 04:30
March 18, 2023
சிற்றிதழ்கள் குறித்து ஒரு கேள்வி
வணக்கம் சாரு ஐயா,இன்று அருஞ்சொல்லில் வெளியான உங்கள் பேட்டியை வாசித்தேன். பேட்டியில் நீங்கள் குறிப்பிட்ட சிற்றிதழ்களின் பெயர்களை எல்லாம் பள்ளியில் தமிழ் பாடத்தில் படித்ததாக ஞாபகம்.அதுவும் நான் தமிழை மொழிப் பாடமாக எடுத்ததால் அதன் பெயராவது தெரிந்தது. இல்லையெனில் அக்காலத்தில் வெளிவந்த சிற்றிதழ்களின் பெயர்கூடத் தெரிந்திருக்காது.இலக்கிய இதழ்கள் நடத்த எழுத்தாளர்கள் சந்தித்த இன்னல்களையும் அவ்விதழ்கள் அக்கால எழுத்துலகில் ஏற்படுத்திய தாக்கத்தையும் அப்பேட்டியில் விரிவாகக் கூறியிருந்தீர்கள். குறிப்பாக ” இலக்கிய வெளிவட்டம்” என்ற சிற்றிதழ் நடத்திய ஜெனகப்ரியா அவர்களைப் ... Read more
Published on March 18, 2023 23:46
கக்கூஸ் பக்கத்தில் சிறுதெய்வங்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
கக்கூஸ் பக்கத்தில் சிறுதெய்வங்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-interv...
Published on March 18, 2023 19:11
March 15, 2023
இளையராஜா
வணக்கம் சாரு ஐயா, இளையராஜா குறித்தான உங்கள் விமர்சனங்களைப் பல பதிவுகளில் கண்டேன் .மேலும் நீங்கள் பகிர்ந்திருந்த றியாஸ் குரானா(நன்றி:றியாஸ் குரானாவை உங்கள் மூலமாகத்தான் தெரியவரும்) அவர்களின் பதிவையும் கண்டேன். ஆரம்பத்தில் இளையராஜா மீதான உங்கள் விமர்சனங்கள் குறித்து, எனக்கு இவர் யாரையுமே விட்டு வைக்க மாட்டாரா? அனைவருமே விமர்சனம் செய்வாரா? இளையராஜாவின் இசைக்கு என்ன குறை ?என்று தான் தோன்றியது.இசை பற்றிய ஞானம் எல்லாம் எனக்கு கிடையாது.நான் இளையராஜாவின் தீவிரமான ரசிகை. ஆனால் எனக்கு இப்பொழுதுதான் ... Read more
Published on March 15, 2023 03:56
பிரார்த்தனை
குஷ்வந்த் சிங் நூறு ஆண்டுகள் வாழ்ந்தார். நூறு வயது வரை ஆரோக்கியமாக இருந்தார். நூறு வயது வரை தினமும் விஸ்கி அருந்தினார். அளவாக. உறக்கத்திலேயே இறந்தார். இறக்கும் அன்றைய இரவு கூட இரண்டு பெக் விஸ்கி அருந்தினார். இதெல்லாம் கூட முக்கியம் இல்லை. இறக்கும் வரை அவர் தன்னுடைய நகைச்சுவை உணர்வை இழக்கவில்லை. சிருஷ்டிகரத்தன்மையை இழக்கவில்லை. நுண்ணுணர்வை இழக்கவில்லை. அவர் ஒரு பரம்பரைப் பணக்காரர். இந்தக் கடைசித் தகவலை ஏன் சொல்கிறேன் என்றால், பணக்காரர்களுக்கு சிறுவயதிலிருந்தே கிடைக்கும் ... Read more
Published on March 15, 2023 00:14
March 14, 2023
எலி : சிறுகதை : அராத்து
எலி ஆடைகளின்றித் திரிந்துகொண்டிருந்த காலம். பெயர் வைக்கும் வழக்கமும் இல்லை. ஏதோ ஒரு பறவை கிளைக்குக் கிளைத் தாவுவதைத் பார்த்தபடி, செங்குத்தாக நிற்கும் விரைப்பான பாம்பு ஒன்று லேசாக குனிந்து நிமிர்ந்து செல்வது போல சென்றுகொண்டிருந்தாள். வாயில் ரத்தம் ஒழுக இறைச்சியைத் தின்றுகொண்டே வந்த ஒருவன் எதிர்ப்பட்டதும் நின்று நிதானித்து இளமரம் காற்றில்லாத போது நிற்பது போல நின்றாள். அவன் கொஞ்சமாக இறைச்சியைக் கொடுத்தான் . இவள் வாங்கவில்லை. இன்னும் சற்று அருகே வந்தவன் அவளுடைய முலைக்காம்புகளை ... Read more
Published on March 14, 2023 00:08
March 13, 2023
அராத்துவின் புதிய சிறுகதை
அவர் எழுதுவது நன்றாக இருக்கிறதா, இல்லையா என்ற பேச்சுக்கே இடமில்லை; பாரம்பரியமான எழுத்தாளர்கள் யாவரும் அராத்துவை ஒரு எழுத்தாளராகவே ஒத்துக்கொள்வதில்லை. அப்புறம்தானே நன்றாக இருக்கிறதா இல்லையா என்ற பேச்சு. ஆனால் நான் உலக இலக்கியத்தை நன்கு வாசித்திருக்கிறேன். என் வாசிப்பு பற்றி நான் பெருமையாகவே சொல்லிக் கொள்ளலாம். எனக்கு ஒரு புத்தகத்தை அவசரமாகப் படிக்க வேண்டும். ஆனால் அதன் விலை எக்கச்சக்கம். எனக்குப் புத்தகம் வாங்கிக் கொடுக்கும் இரண்டு மூன்று பேரில் ஸ்ரீராமும் ஒருவர். அவரிடம் சொன்னேன். ... Read more
Published on March 13, 2023 22:49
நாட்டு நாட்டு
நாட்டு நாட்டு கேட்டேன். பார்த்தேன். குடிகாரன் எடுத்த வாந்தி போல் இருந்தது. இதற்கு ஆஸ்கர் கொடுத்திருக்கிறார்கள். அப்படியென்றால் வைரமுத்துவும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வாங்கலாம். ஆனால் பெருமாள் முருகன் ஏமாற்றமடைவார். சமீபத்தில் நிறைய போலிகளைப் பார்த்து படித்து மன உளைச்சலில் இருக்கிறேன். ஊரே கொண்டாடிய ஒரு சிறுகதை. போலி எழுத்தின் உச்சகட்டம். ஊரே கொண்டாடிய ஒரு சினிமா. மதிய நேரத்து மயக்கம். போலி சினிமாவின் எடுத்துக்காட்டு. இதற்கிடையில் இளையராஜாவின் பாட்டு வேறு. அதை போலி என்று சொல்லக் ... Read more
Published on March 13, 2023 02:42
March 11, 2023
வழிந்தால் வழிவேன்
கடந்த புத்தக விழாவின் போது ஒரு பிரபலமான பெண்மணி என்னையே சற்று நேரம் உற்றுப் பார்த்து விட்டு தன் தோழியிடம் எனக்கும் கேட்கிறாற்போலவே “பார், சாருவின் கன்னம் எப்படி மின்னுகிறதென்று?” என்றார். மற்றவர்களாக இருந்தால் ஹி ஹி என்று வழிவார்கள். நான் வேறு மாதிரி வழிந்தேன். “எனக்காவது கன்னம் மட்டும்தான் மின்னுகிறது. உங்களுக்கோ முழு தேகமே மின்னுகிறதே?” என்றேன். அப்போது அவர் பார்த்த ஒரு பார்வைக்கு இந்த உலகத்தையே தூக்கிக் கொடுத்து விடலாம். ஆனால் அவருடைய தொலைபேசி ... Read more
Published on March 11, 2023 20:36
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

