சாரு நிவேதிதா's Blog, page 116
February 10, 2023
NFT இன்னும் கொஞ்சம்
இரண்டு விஷயங்கள்: என்.எஃப்.டி. மூலம் வாங்கும் நூல் ஒரு டிஜிட்டல் அஸெட் என்பதால் இப்போது பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் நூல் இன்னும் பத்து ஆண்டுகள் கழித்து ஐந்து லட்சம் ரூபாய்க்குக் கூட விற்கலாம். காரணம், இந்தியாவின் முதல் என்.எஃப்.டி. நூல் அராத்துவின் நோ டைம் டு ஃபக். இரண்டாவது, அந்த நெடுங்கதையைப் படித்து விட்டு நான் என்ன சொன்னேன் என்பதை அந்த நெடுங்கதைக்கு ஒரு சிறிய முன்னுரையாக எழுதிக் கொடுத்திருக்கிறேன். அதுவும் அந்த டிஜிட்டல் நூலில் உள்ளது.
Published on February 10, 2023 02:04
NFT – அராத்து – டிஜிடல் புரட்சி
அராத்து எழுதிய நோ டைம் டு ஃபக் என்ற நெடுங்கதை என்.எஃப்.டி. மூலம் முதல் பிரதி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றது. அதுவும் விற்பனைக்கு வந்த ஓரிரு தினங்களில். அடுத்த பிரதிகளின் விலை பத்தாயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது. அதுவும் மிண்ட் பண்ணி இரண்டு தினங்களில் விற்றன. இதுவரை பத்து பிரதிகள். ஆனால் என்.எஃப்.டி.யில் நூல் விற்பனை என்பது நான் நினைத்தது போல் அத்தனை சுலபம் அல்ல போல் தெரிகிறது. நூலை வடிவமைக்க (வடிவமைப்பு மற்றும் இசை) இரண்டு ... Read more
Published on February 10, 2023 01:23
February 9, 2023
சாருவிடம் இருந்து மற்றும் ஓர் அற்புதம்: நரேஷ் கரினினா
“ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” சமகால எழுத்தாளர்கள் தங்கள் கதைகளில் அன்பை பிழிந்து சாறு எடுத்துக்கொடுத்து கொண்டிருக்கும் தருணத்தில் அன்பைமறுசீராய்வுக்கு உட்படுத்திய “ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு” நாவல் தமிழ் எழுத்துலகில் முக்கியத் தடம் என்பேன். இது போன்ற ஒரு படைப்பை இனி யாராலும் தரமுடியாது. சாருவின் பள்ளியிலிருந்து வருபவர்கள் கூட தொடத் தயங்கும் களம். சில எழுத்தாளர்கள் அன்பை உயிர் உள்ள ஜீவன்களில் கொட்டித்தீர்த்து விட்டு இப்பொழுது சடப்பொருட்கள், நகரங்கள் மீதெல்லாம் காட்டத் தொடங்கி விட்டார்கள். ... Read more
Published on February 09, 2023 08:28
பொறாமை – 3
NFT மூலம் புத்தகங்களைத் தயாரிக்க – அதாவது, அராத்து செய்திருக்கும் தரத்தில் – இரண்டு லட்சம் ரூபாய் ஆகும். நான் எழுதியிருந்தபடி ஐம்பதாயிரம் என்பது தப்புக் கணக்கு. வேலை செய்து கொடுப்பவர்களெல்லாம் நெருங்கிய நண்பர்கள் என்பதால் நான்கில் ஒரு மடங்கு பணத்தைப் பெற்றுக் கொள்கிறார்கள். மேலும், இந்த டிஜிட்டல் நூலை இலக்கியம் தெரியாதவர்கள் இந்த அளவுக்குத் தரமாக உருவாக்க இயலாது. உதாரணமாக, இதன் இசையமைப்பாளர் சத்ய நாராயணாவிடம் இதன் இசை பற்றி நான்கு மணி நேரம் உரையாடியிருக்கிறார். ... Read more
Published on February 09, 2023 06:37
ஹைதராபாத் சந்திப்பு
வருகின்ற 17, 18, 19 தேதிகளில் ஹைதராபாதில் (அமீர்பெட்) இருப்பேன். சனிக்கிழமை (18) அன்று மாலையில் என்னை சந்திக்க விரும்பும் நண்பர்களை சந்திக்கலாம். எந்த இடம் என்று நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனக்கு ஒரு இடம் தெரியும். நீங்கள் சொல்லும் இடம் சரியாக வரவில்லை என்றால் நான் நினைத்திருக்கும் இடத்தைச் சொல்கிறேன். charu.nivedita.india@gmail.com
Published on February 09, 2023 06:30
இருநூறில் ஒருவர்…
புத்தக விழாவின் போது வரம் என்ற தலைப்பில் சத்தமில்லாமல் என் கட்டுரைத் தொகுப்பு ஒன்று வெளிவந்தது. அன்புவின் சத்தத்தில் வரம் கட்டுரைத் தொகுப்பு பற்றி அதிகம் தெரியவில்லை. என் கட்டுரைகளெல்லாம் உண்மையில் புனைவுக்கும் அ-புனைவுக்கும் நடுவாந்திரமாக இருப்பவை என்று உங்களுக்குத் தெரியும். வாங்கிப் பயன் பெறுங்கள். ஒருத்தர் அங்கே என்.எஃப்.டி.யில் பத்தாயிரம் ரூபாய்க்கு விற்கும் புத்தகத்தை க்யூவில் நின்று வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். இங்கே 200 ரூபாய் புத்தகத்துக்கு tiny url போட்டு எழுதிக் கொண்டிருக்கிறேன். எப்படியும் வரம் ... Read more
Published on February 09, 2023 03:06
பொறாமை – 2
கமிஷன் சம்பந்தமான பேச்சு வார்த்தையின்போதுதான் தெரிந்தது, என்.எஃப்.டி. மூலம் புத்தகம் விற்பது ஒன்றும் அவ்வளவு சாதாரணமான விஷயம் அல்ல என்று. ஒவ்வொரு பக்கத்தையும் வடிவமைத்து முடிக்க இரண்டு மாதம், ஒவ்வொரு பக்கத்திலும் இசையமைக்க ஒரு மாதம் – இப்படி புத்தகம் தயாராக மூன்று மாதம் ஆகுமாம். அதிலும் ஒரு பக்கத்தைப் படிக்க நாற்பது ஐம்பது நொடிகள் என்றால், நாற்பது ஐம்பது நொடிகளுக்கு இசையமைப்பது பெரிய சவால் என்கிறார் இசையமைப்பாளர் சத்யா. எல்லாம் சேர்த்து புத்தகத் தயாரிப்புக்கே ஐம்பது ... Read more
Published on February 09, 2023 02:23
பொறாமை
வாழ்வில் இதுவரை நான் அனுபவிக்காத ஒரு உணர்வு பொறாமை. ஆனால் என்னைப் பார்த்து பொறாமை கொண்டவர்களைப் பார்த்திருக்கிறேன். போயும் போயும் நம்மைப் பார்த்துப் பொறாமை கொள்கிறார்களே என்று ஆச்சரியமும் அடைந்திருக்கிறேன். சமீபத்தில் கூட புத்தக விழாவில் ஒரு சக எழுத்தாளர் என்னைப் பார்த்து பொறாமையில் வெந்து மாய்ந்ததை இரக்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான்தான் வித்தியாசமான ஆள் இல்லையா? என்னை ஜெயிலில் தூக்கிப் போட்டால் கூட ஒரு அற்புதமான நாவலோடு வருகிறவன். அதனால் இந்தப் பொறாமை கூட ... Read more
Published on February 09, 2023 00:14
February 7, 2023
பெயர்
நேர்ப்பழக்கத்தில் நான் மிக இனிமையாகப் பழகக் கூடிய ஆள். ஆனால் எழுத்தின் மூலம் எனக்குக் கிடைத்திருக்கும் பிம்பம் நான் மிகவும் எதிர்மறையான ஆள் என்பது. Negative vibesஐப் பரவ விடுபவன். இன்றைக்கு சாரு யாரைத் திட்டி எழுதியிருப்பார் என்று தெரிந்து கொள்வதற்காகவே என் இணைய தளத்தைப் படிப்பவர்கள் உண்டு. இப்போதெல்லாம் நான் எதிர்மறை விமர்சனங்களைக் குறைத்து விட்டேன். முக்கியமாக, சினிமா விமர்சனம் எழுதுவதில்லை. அதுவே பெரும்பாலான எதிர்மறை விமர்சனத்தைக் குறைத்து விட்டது. படித்தே ஆக வேண்டிய புத்தகம் ... Read more
Published on February 07, 2023 04:31
February 6, 2023
அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு: மனுஷ்ய புத்திரன்
சாருவின் ‘அன்பு: ஒரு பின் நவீனத்துவவாதியின் மறு சீராய்வு மனு ‘ நாவலை இரு தினங்களுக்கு முன் படித்து முடித்தேன். அதுகுறித்து எழுதவேண்டும் என்ற எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. கடும் வேலை நெருக்கடி. சாருவின் மின்சார நடை நாவலை இடையறாது படிக்க வைத்தது. அவரது மொழி ஒரு சாகசம். சாருவின் எல்லா எழுத்துகளிலும் ஒரு சமூக சகவாழ்வில் மனிதர்களிடையே நிலவும் ஒவ்வாமைகளையும் கலாச்சார வேற்றுமைகளையும் தொடர்ந்து விவாதிப்பதைக் காணலாம். ஒட்டு மொத்த தமிழ் வாழ்க்கையே இந்த ஒவ்வாமைகளுக்கு ... Read more
Published on February 06, 2023 08:09
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

