சாரு நிவேதிதா's Blog, page 115
February 26, 2023
கோவா சந்திப்பு
மார்ச் 23ஆம் தேதியிலிருந்து 27 காலை வரை (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) கோவாவில் இருப்பேன். அராத்துவும் இருப்பார். எங்காவது கடல் ஓர கிராமத்தில் தங்கலாம் என்று யோசிக்கிறேன். ஹைதராபாத் சந்திப்பு பற்றி எழுத ஏராளமான விஷயங்கள் உள்ளன. நேரம் இல்லை. பல வேலைகளை ஒன்றாகப் போட்டு செய்து கொண்டிருக்கிறேன். ஹைதாராபாதில் நிகழ்ந்த சந்தோஷங்களில் சில: நண்பர் பிரபு ராமை பதின்மூன்று ஆண்டுகள் கழித்து சந்தித்தது. புதிய நண்பர்களான கணபதியையும், இன்பராஜையும் சந்தித்தது. கோவாவில் என்னைச் சந்திக்க ... Read more
Published on February 26, 2023 05:17
நண்பகல் நேரத்து மயக்கம்
என் நெருங்கிய நண்பர்கள் பலர் சிபாரிசு செய்ததாலும் அங்கமாலி டயரீஸ் படத்தின் இயக்குனர் என்பதாலும் நண்பகல் நேரத்து மயக்கம் படம் பார்த்தேன். குப்பை என்ற வார்த்தையைத் தவிர வேறு எந்த வார்த்தையாலும் வர்ணிக்க முடியவில்லை. இந்தப் படத்தைப் பாராட்டுபவர்களுக்கு fake சினிமாதான் பிடிக்கிறது என்ற முடிவுக்கு வர வேண்டியிருக்கிறது. இந்தப் படத்தை இயக்கியவர் மீது எனக்கு வருத்தமே இல்லை. இதைப் பார்த்துப் பாராட்டுபவர்களைப் பார்த்தால்தான் பரிதாபமாக இருக்கிறது. அவர்கள் விஜய் ரசிகர்களை விட கீழான சினிமா ரசனையில் ... Read more
Published on February 26, 2023 04:26
February 25, 2023
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
தமிழ் லும்பனிஸத்தின் பிதாமகன் ரஜினி: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
Published on February 25, 2023 19:46
February 21, 2023
பூச்சி 1 & 2: இரண்டு புதிய புத்தகங்கள்
மிக அலுப்புடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். இரண்டு புதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பூச்சி -1, பூச்சி-2. இரண்டுமே முழுமையான புனைவுக்கும் முழுமையான அ-புனைவுக்கும் இடையிலான புதிய வகை ஆக்கங்களைக் கொண்டவை. இரண்டையும் செப்பனிடுவதற்குப் பல நாட்களை, பல மணி நேரத்தை செலவு செய்திருக்கிறேன். ஆனாலும் நூறு பிரதிகள் விற்றால் பெரிது. இதற்கு முன் வரம் என்ற நூல் வந்தது. எத்தனை பிரதிகள் விற்றது என்று கூட நான் பதிப்பாளரிடம் கேட்கவில்லை. ஐம்பது என்று பதில் வரும். ... Read more
Published on February 21, 2023 03:51
February 20, 2023
வரங்களால் நிறைந்தவன்
ஹைதராபாதிலிருந்து திரும்பவும் கூடு அடைந்து விட்டேன். திரும்பவும் சாப்பாட்டுப் பிரச்சினை தொடங்கி விட்டது. வீடு இப்போது கூட்டுக் குடும்பமாகி இருக்கிறது. எட்டு மாசப் பொடிப்பயல் வேதா, என் மகன் கார்த்திக், மருமகள் அனு, அவந்திகா, செவிலி நிர்மலா. கார்த்திக்கும் அனுவும் எங்கள் குடியிருப்பின் நேர் மேலே உள்ள அபார்ட்மெண்ட்டில் வசிக்கிறார்கள். பொடியன் எங்களுடன் இருப்பதால் நிர்மலாவும் எங்களுடனேதான். இது தவிர மேல் வீட்டை சுத்தம் செய்ய ஒரு பணிப்பெண். எங்கள் வீட்டை சுத்தம் செய்யவும் பாத்திரம் தேய்க்கவும் ... Read more
Published on February 20, 2023 22:02
February 19, 2023
எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
எழுத்து என்ற செயல்பாடே போராட்டம்தான்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
Published on February 19, 2023 01:46
February 15, 2023
ஒரு நாள்
காலை நான்கு மணிக்கு எழுந்து கொள்வேன். படுக்கையில் அமர்ந்தபடியே சில மந்திரங்களைக் கேட்பேன். பிறகு சில நிமிடங்கள் ப்ரம்மரி பிராணாயாமம் செய்து விட்டு வந்து பல் துலக்கி விட்டு கையோடு ஒரு கஷாயம் குடிப்பேன். சர்க்கரை, கொழுப்பு போன்ற பிரச்சினைகள் அணுகாமல் இருப்பதற்கான கஷாயம். உடனடியாக பூனைகளுக்கு உணவு கலந்து கொடுப்பேன். அடுத்து, பூனைகளின் மல ஜலம் சுத்தம் செய்வேன். அதற்கு ஒரு பதினைந்து நிமிடம் ஆகும். நாலரை ஆகி இருக்கும். பிறகு சௌந்தர் கற்பித்த யோகா ... Read more
Published on February 15, 2023 21:36
February 12, 2023
February 11, 2023
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி
தமிழ் எழுத்தாளர்கள் பூமர்கள்: அருஞ்சொல் பேட்டியின் தொடர்ச்சி https://www.arunchol.com/charu-nivedh...
Published on February 11, 2023 23:50
ஹைதராபாத் சந்திப்பு
இந்த வாரம் வியாழக்கிழமை இரவிலிருந்து ஞாயிறு இரவு வரை (16இலிருந்து 19 வரை) ஹைதராபாதில் இருப்பேன், நண்பர்கள் யாரேனும் சந்திக்க விருப்பம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் முகவரி கொடுத்திருந்தேன். (charu.nivedita.india@gmail.com) ஒரு நண்பர் ஃபேஸ்புக் காமெண்ட்டில் விருப்பம் தெரிவித்திருந்தார். மின்னஞ்சல் அனுப்பியிருந்தால் சிலாக்கியமாக இருந்திருக்கும். நான் ஃபேஸ்புக் காமெண்ட்ஸ் எல்லாம் பார்ப்பதில்லை. எதேச்சையாகப் பார்த்தேன். இன்னொரு நண்பர் இன்பராஜ் மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அவர் இதற்கு முன் ஏதேனும் கடிதம் எழுதியிருக்கிறாரா என்று தேடினேன். ஃபெப்ருவரி ... Read more
Published on February 11, 2023 02:05
சாரு நிவேதிதா's Blog
- சாரு நிவேதிதா's profile
- 40 followers
சாரு நிவேதிதா isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.

