மிக அலுப்புடன்தான் இதை எழுத ஆரம்பிக்கிறேன். இரண்டு புதிய புத்தகங்கள் வெளி வந்துள்ளன. பூச்சி -1, பூச்சி-2. இரண்டுமே முழுமையான புனைவுக்கும் முழுமையான அ-புனைவுக்கும் இடையிலான புதிய வகை ஆக்கங்களைக் கொண்டவை. இரண்டையும் செப்பனிடுவதற்குப் பல நாட்களை, பல மணி நேரத்தை செலவு செய்திருக்கிறேன். ஆனாலும் நூறு பிரதிகள் விற்றால் பெரிது. இதற்கு முன் வரம் என்ற நூல் வந்தது. எத்தனை பிரதிகள் விற்றது என்று கூட நான் பதிப்பாளரிடம் கேட்கவில்லை. ஐம்பது என்று பதில் வரும். ...
Read more
Published on February 21, 2023 03:51