சாரு நிவேதிதா's Blog, page 120

January 19, 2023

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவலுக்கு வந்த முதல் எதிர்மறை விமர்சனம்

நேற்று புத்தக விழாவில் ராம்ஜியும் சீனியும் அன்பு நாவலில் வரும் ஒரு சம்பவம் பற்றி சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.  அப்போது அந்தப் பக்கமாக வந்த டார்ச்சர் கோவிந்தன் அந்த சம்பவத்தைக் கேட்டு, புரியாமல் இது என்ன என்று கேட்டார்.  உடனே சீனி, “இது அன்பு நாவலில் வருகிறது, நீங்கள் இன்னும் படிக்கவில்லையா?” என்று கேட்டார்.  உடனே டார்ச்சர், “படிக்க ஆரம்பிச்சேன்,  கொஞ்சத்திலயே செம கடுப்பாயிடுச்சு,  படிக்கிறதை நிறுத்திட்டேன்” என்றார்.  அப்பாடா, என் ஒரு வாரத்திய சந்தேகத்துக்கு பதில் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2023 22:42

No Time To Fuck: அராத்துவின் நெடுங்கதைக்கு என் சிறிய முன்னுரை

மௌனியின் அழியாச் சுடர்கள் சிறுகதை நாயகியின் வயது பதின்மூன்று.  1930களில் எழுதப்பட்ட சிறுகதை. லொலிதாவின் (நொபக்கோவ்) வயது பதின்மூன்று.  ஜூலியட்டின் வயது பதின்மூன்று.  என்னுடைய உன்னத சங்கீதம் நாயகிக்கும் அதே வயதுதான்.  ஒரு காலத்தில் பதின்மூன்று வயது என்பது பெண்களின் திருமணத்துக்கு மிகவும் காலம் கடந்த வயதாக இருந்தது.  அப்போதெல்லாம் பெண்களுக்கு ஏழு எட்டிலேயே மணம் முடித்து விடுவார்கள்.  இப்போது சர்வ சாதாரணமாக முப்பதைத் தாண்டுகிறது.  பல பெண்கள் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்வதைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இருபத்தோரு ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2023 22:19

அன்பு நாவலை வாங்குவதற்கு…

இன்றும் புத்தக விழாவுக்கு ஐந்து மணிக்கு வந்து ஒன்பது வரை இருப்பேன். நேற்று ஔரங்ஸேப் நாவலை வாங்கி என்னிடம் கையெழுத்து வாங்கியவர்களிடம் கூட அன்பு நாவல் வாங்கவில்லையா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். ஆம், அந்த நாவலை நான் முச்சந்தியில் நின்று விற்க விரும்புகிறேன். காசு பார்ப்பதற்காக அல்ல. எனக்குத் தேவை லட்சங்களில். புத்தகம் எத்தனைதான் விற்றாலும் ராயல்டி ஆயிரங்களில்தான் கிடைக்கும். அன்பு நாவல் லட்சக்கணக்கான பேரிடம் சேர வேண்டும் என்று நான் நினைப்பதன் காரணம், அவர்களின் வாழ்க்கை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2023 16:47

ஒளி முருகவேள்

என் வாழ்வில் ஒரு ஒளியாய்ச் சேர்ந்தவர் ஒளி என்று நாங்கள் செல்லமாக அழைக்கும் ஒளி முருகவேள். அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மற்றும் ஒளிப்பதிவாளர். ஒளி என்பது புனைப்பெயர் அல்ல. அவர் தந்தை பெயர் ஒளி என்று ஆரம்பிக்கும். தந்தை மறைமலை அடிகளின் மாணவர். ஒளியைப் போன்ற சாத்வீக மனிதரை நான் இதுவரை பார்த்ததில்லை. செல்வகுமார், குமரேசன் இருவரும் கூட சாத்வீகம்தான் என்றாலும் ஒளி அவர்களை விட சாத்வீகம். என் திட்டுகளையும் கூட சிரித்துக் கொண்டே கேட்டுக் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 19, 2023 08:23

January 18, 2023

வசிய லேகியம்

வசியமருந்துக்காரனொருவனை யதேச்சையாய்க் கண்டேன் ஒரு பெண்ணை வசியப்படுத்த வேண்டுமென்ற நீண்டநாள் ஆசையைச் சொன்னேன் “கவலை வேண்டாம் விலைதான்  கொஞ்சம் அதிகம்” என்றவனிடம் “உயிரையும் கொடுப்பேன் விலையாக மருந்தைக் கொடு முதலில்” என்றேன். நாற்பது மூலிகைககள் சேர்ந்ததிந்த லேகியம் உன் இஷ்ட ஸ்த்ரீயை முத்தமிடுமுன் உதட்டில் இட்டுக் கொள் ஜென்மத்துக்கும் அடிமையென்றான் முதல் சந்திப்பின் முதலாவது முத்தத்தின் போது மறக்காமல் இட்டுக் கொண்டேன் ஏய் வசியக்காரா ஜென்மத்துக்கும் போதுமிந்த முத்தம் இந்த நினைவிலேயே  ஏழேழுஜென்மம் வாழ்ந்து விடுவேன் சொல்லி ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2023 21:52

அன்பு நாவல் பற்றிய ஒரு நேர்காணல்

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு நாவல் பற்றிய சிறிய அறிமுகத்தை கேள்வி பதில் மூலமாக நானும் அராத்துவும் நேற்று புத்தக விழாவில் ஸீரோ டிகிரி அரங்கில் நிகழ்த்தினோம். அரங்கு எண் எஃப் 19. பல நண்பர்கள் புத்தகம் தபாலில் கிடைக்குமா, ஆன்லைனில் ஆர்டர் செய்ய முடியுமா என்று கேட்டு எழுதியிருக்கிறார்கள். இன்னும் இரண்டொரு நாளில் ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்ய முடியும். புத்தக விலை 340 ரூ. மற்ற விவரங்களை நீங்கள் ஸீரோ டிகிரி பதிப்பகத்துக்கே ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 18, 2023 15:59

January 17, 2023

அன்பு: ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு குறித்து ஒரு வார்த்தை

அன்பு நாவல் வெளிவந்து விட்டது.  கையெழுத்திட்டுக் கொடுப்பதற்காக நாளை நான்கு மணிக்கே ஸீரோ டிகிரி அரங்கிற்கு வந்து விடுவேன். அரங்கம் எண் எஃப் 19.   இது குறித்து ஒரு விண்ணப்பம் தெரிவிக்க வேண்டும்.  அச்சகத்திடம் ராம்ஜி 200 பிரதிகள் சொல்லியிருந்ததாகத் தெரிந்து நான் அச்சகத்திடம் 300 பிரதி என்று சொல்லி விட்டேன்.  ராம்ஜி அப்போது சர்வதேசப் புத்தகச் சந்தையில் இருந்ததால் அவரிடம் தெரிவிக்க முடியவில்லை.  அவரிடம் மாலையில்தான் தெரிவித்தேன்.  நட்பு கருதி நான் எடுத்துக் கொண்ட உரிமை ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 17, 2023 09:36

January 16, 2023

ஒளித்தீற்றல்: ஸ்ரீ

அதிகாலையிலொரு சொப்பனம்கண்காட்சி போன்றவொரு இடத்தில்நீயும் நானும் பேசியபடிஉலாவிக் கொண்டிருக்கிறோம்மறுநாள் நீ வரவில்லை என்கிறார்கள்எங்கு தேடியும் கிடைக்கவில்லைஎன் தொலைபேசி அழைப்பையும் எடுக்கவில்லைதிரும்பி வர இயலாதபடி மறைந்து விட்டாய்அடக்க இயலாமல் தேம்பித் தேம்பி அழுகிறேன்உணர்வு நிலைகொள்ளவில்லை***உனக்கான ஒரு கூட்டம்நானும் இருக்கிறேன்உன் நண்பனொருவன் என்னை அணுகிஉன்னை எனக்குப் பிடித்திருக்கிறதுகலவி கொள்ளலாமா என்கிறான்***ஒரு தனியறையில் அவனும் நானும்மூர்க்கமாக முயங்கிக் கிடக்கிறோம்இருவரும் சரியும் நிலையில்கைபேசி ஒலிக்கமிஸ் யூ குட்டி, எங்கே இருக்கிறாய்என்கிறான் கணவன்நித்திரையிலிருந்து கண்கள் திறக்ககனவென நம்ப நொடி சில ஆயிற்று***நான் இல்லை என்றால் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2023 19:51

புத்தக விழா

ஒவ்வொரு ஆண்டும் புத்தக விழாவுக்குச் செல்லும் போது மகிழ்ச்சியும் உற்சாகமும் கொண்டாட்ட மனநிலையும் அதிகரிக்கிறது.  மதுரையிலிருந்தும் இன்னும் பல வெளியூர்களிலிருந்தும் என்னுடைய ஒரு கையெழுத்துக்காக இந்தப் புத்தக விழாவுக்காக வருகிறார்கள்.  இருபது ஆண்டுகளுக்கு முன்பு என் புத்தகங்களை ஒளித்து ஒளித்துப் படித்த சமூகம் இப்போது என் எழுத்தை மிகுந்த மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ள ஆரம்பித்து விட்டது. என் நூல்களை வாங்க  இப்போது யாரும் தனியாக வருவதில்லை.  குடும்பத்தோடு வந்து ஸீரோ டிகிரி நாவலை வாங்கிச் செல்கிறார்கள்.  காலம் ... Read more
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 16, 2023 08:30

சாரு நிவேதிதா's Blog

சாரு நிவேதிதா
சாரு நிவேதிதா isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow சாரு நிவேதிதா's blog with rss.