உத்தேசமாக 1975ஆக இருக்கலாம். கொஞ்சம் முன்னே பின்னே பார்த்துக் கொள்ளுங்கள். அப்போது எங்களுக்கெல்லாம் ஆதவன் ஒரு பெரிய நாயகன். தில்லியில் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலையில் இருந்தார். அவ்வப்போது அவர் கதைகள் விகடனில் வரும். நான் ஆதவன் வெறியன். ஒருநாள் விகடனில் ஆதவன் ஒரு பிக்பாக்கெட் என்பது மாதிரி கட்டம் கட்டிய ஒரு பெட்டிச் செய்தி வந்தது. அவர் தீபத்தில் எழுதிய கதையை விகடனுக்கும் கொடுத்து பணம் வாங்கி விட்டாராம். அதிலும் விகடன் அலுவலகத்துக்கு நேரிலேயே வந்து ...
Read more
Published on December 28, 2022 21:45