இரண்டு மூன்று தினங்களுக்கு முன் புத்தகத் திருவிழாவில் புல்புல் இஸபெல்லாவைப் பார்த்தேன். ஃபோட்டோ எடுத்துக் கொண்டோம். ரொம்பவும் வருத்தப்பட்டேன். அவரைப் பார்த்த அன்றுதான் நான் ரொம்பத் த்ராபையான ஆடையில் சென்றிருந்தேன். மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் எழுதியிருந்தேன். நான் பெண்ணாகப் பிறந்திருந்தால் புல்புல் மாதிரிதான் இருந்திருப்பேன், எழுதியிருப்பேன் என்று. அதைப் படித்தபோது புல்புல் பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். அடிப்பாவி. அதற்குப் பிறகு ஒருநாள் நீலம் அரங்கில் சந்தித்தேன். அன்றும் படு த்ராபையான ட்ரெஸ்ஸில் இருந்தேன். ...
Read more
Published on January 14, 2023 09:00