Ashoka Quotes
Ashoka: Portrait of a Philosopher King
by
Patrick Olivelle109 ratings, 3.83 average rating, 27 reviews
Open Preview
Ashoka Quotes
Showing 1-30 of 75
“நமக்குக் கிடைத்திருப்பதன் அடிப்படையில் சொல்வதென்றால், அசோகர் அவருக்காக என்று எந்த நினைவுச்சின்னத்தையும் கட்டியெழுப்பவில்லை.”
― Ashoka: Portrait of a Philosopher King

“பிந்தைய இந்திய அரசர்களின் 'கல்வெட்டியலார்ந்த பழக்கம்' என்று குறிப்பிடுவதோடு ஒப்பிட்டு அசோகக் கல்வெட்டுகள் எவ்வளவு தனித்துவமானவையாகவும் வழக்கத்துக்கு மாறானவையாகவும் இருக்கின்றன என்று ரிச்சர்ட் சாலமன் குறிப்பிடுகிறார். 'வடிவம், உள்ளடக்கம், தொனி, இவற்றில் அசோகக் கல்வெட்டுகளை ஒத்திருக்கக்கூடிய ஒன்றைக்கூட இந்தியக் கல்வெட்டுத் தொகுப்பு உலகில் நம்மால் காண முடியவில்லை.' மேலும், 'நன்மதி கூறும் பண்பைக் கொண்டிருக்கும் அரசுக் கல்வெட்டுகள் மிக அபூர்வமானவையாக இருக்கின்றன' என்றும் 'சொல்லப்போனால், இப்பண்பு அசோகக் கல்வெட்டுகளில் மட்டுமே காணக்கூடிய ஒன்றாக இருக்கிறது' என்றும் சாலமன் சேர்த்துக்கொள்கிறார்.
நான் மேலே சொல்ல முயன்றிருப்பதை சாலமன் கூற்று முன்மொழிவதாக இருக்கிறது. அதே சமயத்தில், அசோகரது தனித்துவத்துக்கான காரணத்தையும் முன்வைக்கிறது. அவரது கல்வெட்டுகள், அரசருடைய பெருமைகள், சாதனைகள் போன்று பொதுவான புகழுரை ஆவணங்களாக இல்லாமல், கல்லில் செதுக்கப்பட்ட கடிதங்களாகவும் நன்மதிகளாவும் இருக்கின்றன. இவை தார்மிக விஷயங்களோடு தொடர்புடைய நிதானமான அறிவுரைகளாக இருக்கின்றன; போர்கள் எவ்வளவு கொடூரமானவை என்று காட்டுவதற்கும், அவரது செயல்களுக்காக மன்னிப்புகோருவதற்கும், அவரது சந்ததியினர் அதிகாரத்தையும் பெருமையையும் நாடுவதற்கு பதிலாக தர்மத்தின் மூலமாக வெற்றிகொள்ள விழைய வேண்டும் என்று சொல்வதற்கும் கலிங்க வெற்றி குறித்த பதிப்பு காணப்படுகிறதே தவிர, அரசனின் வெற்றி அல்லது அதிகாரம் போன்றவை குறித்து எந்தக் குறிப்பும் இல்லை. இந்த எழுத்துக்களின் தனித்துவமான இயல்பு, இவற்றை வெறுமனே அரசாணைகளாகவும் புகழுரைகளாகவும் பார்க்காமல் தனித்த இலக்கிய வகையாகப் பார்க்க முயல்வதை நியாயப்படுத்துகிறது.”

“மொத்த உலகின் நலனுக்காக உழைப்பதைவிட முக்கியமான காரியம் என்று எதுவும் இருக்க முடியாது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“எல்லா ஆண்களும் என்னுடைய குழந்தைகளே. இப்போது, என்னுடைய குழந்தைகளுக்கு நான் என்ன வேண்டுவேனோ, அதாவது இந்த உலகத்திலும் அடுத்ததிலும் அவர்களது நலனுக்கும் நல்வாழ்க்கைக்கும் தேவையானவற்றையெல்லாம் முழுமையாக அமைத்துக்கொடுக்க வேண்டும் என்று எப்படி விரும்புவேனோ அதுபோலவே எல்லா ஆண்களுக்கும் விரும்புகிறேன்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“தர்மம் குறித்த இந்த எழுத்துகள் கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியால் இங்கே பொறிக்கப்பட்டுள்ளன. இவை பெருமளவு அல்லது ஓரளவு சுருக்கப்பட்ட வடிவத்தில் அல்லது மிக விரிவான வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஏனெனில், எல்லா விஷயங்களும் எல்லா இடங்களுக்கும் உகந்தவையாக இருப்பதில்லை. ஏனெனில், என்னுடைய நிலப்பரப்பு மிக விரிந்தது. மேலும், நான் நிறைய எழுதியிருக்கிறேன். எப்போதும் நான் இன்னும் கூடுதலாக நிறைய எழுதியிருக்கிறேன். இவற்றில் பல, அவை கொண்டிருக்கும் வசீகரத்தாலும் மக்கள் அதற்கு ஏற்ப நடக்க வேண்டும் என்பதற்காகவும் திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டிருக்கின்றன. இங்கு, அங்கு என்று ஒருசில விஷயங்கள் முழுமையற்றவையாகவோ அல்லது ஒரு பிரதேசத்துக்கு உகந்தவையாக இல்லாமலோ இருக்கலாம். அல்லது குறிப்பிட்ட காரணத்தைக் கணக்கில் எடுத்துக்கொண்டதாக இருக்கலாம் அல்லது எழுத்தர்களின் பிழைகளாகவும் இருக்கலாம்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி இவ்வாறு பிரகடனப்படுத்துகிறான்:
கடந்த காலங்களில், இப்படியான நடைமுறை இருந்ததில்லை: எந்த நேரத்திலும் கவனம்செலுத்த வேண்டிய விவகாரங்கள் அல்லது தொடர்புடைய விஷயங்களைக் கவனத்துக்குக் கொண்டுவருவது. ஆனால், நான் இவ்வாறு செய்திருக்கிறேன்.
எந்த நேரத்திலும் — நான் சாப்பிட்டுக்கொண்டிருந்தாலும், என்னுடைய இருப்பிடத்தில் இருந்தாலும், என்னுடைய அந்தப்புரத்தில் இருந்தாலும், பண்ணையில் இருந்தாலும், வண்டியில் இருந்தாலும் அல்லது பூங்காவில் இருந்தாலும் — எந்த இடத்தில் இருந்தாலும், மக்கள் விவகாரங்கள் குறித்துத் தகவலாளர் என்னிடம் தெரிவிக்க வேண்டும். எந்த இடத்தில் இருந்தாலும், மக்கள் விவகாரங்களில் நானே நேரடியாக ஈடுபடுவேன்.
மேலும், வாய்மொழியாக நான் என்ன கட்டளையிட்டாலும், அது தானம் கொடுப்பது அல்லது பிரகடனப்படுத்துவது குறித்ததாக இருந்தாலும் அல்லது மஹாமாத்ரர்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் பொறுப்பு தொடர்பான அவசரச் செய்தியாக இருந்தாலும் — இப்படியான விஷயங்கள் குறித்து சபையில் முரண்பாடுகள் அல்லது விவாதங்கள் நடந்தால், அது குறித்து, எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தாலும் என்னிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும்.
இப்படியாக, நான் கட்டளையிடுகிறேன்.
தீவிரமாக முயல்வதிலும் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டு வருவதிலும் நான் எப்போதும் மனநிறைவடைவதில்லை. ஏனெனில், மக்கள் எல்லோருடைய நலன்களையும் என்னுடைய பொறுப்பாகப் பார்க்கிறேன். இதற்கான வேர், மீண்டும், தீவிரமாக முயல்வதிலும் விவகாரங்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும்தான் உள்ளது. மொத்த உலகின் நலனுக்காக உழைப்பதைவிட முக்கியமான காரியம் என்று எதுவும் இருக்க முடியாது.
நான் என்ன அரும்பாடுபட்டாலும், அதெல்லாம் இதற்காகத்தான்: ஜீவராசிகளுக்கு நான் பட்டிருக்கும் கடனிலிருந்து என்னை விடுவித்துக்கொள்வது; அவற்றின் நலன்களுக்காக இந்த உலகத்தில் என்னால் முடிந்ததைச் செய்ய வேண்டும்; இப்படியாக அடுத்ததில் அவர்கள் சொர்க்கத்தை அடைவார்கள்.
இப்போது, இந்த நோக்கத்துக்காக தர்மம் குறித்த இந்த எழுத்து இங்கே பொறிக்கப்படுகிறது: இது காலங்காலமாக நிலைத்திருக்க வேண்டும். இப்படியாக, என்னுடைய மகன்களும் பேரன்களும் மொத்த உலகின் நன்மைக்காக முயற்சியெடுப்பார்கள். ஆனால், அரும்பாடுபடாமல் இதைச் சாதிப்பது உண்மையிலேயே கடினமான காரியம்தான்.”

“தர்மம் குறித்துப் பொறிக்கப்பட வேண்டும் என்பதற்காகக் கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியால் இது எழுதப்படுகிறது.
இங்கு, எந்த உயிரினங்களையும் கொல்லக் கூடாது; சடங்குகளில் பலிகொடுக்கக் கூடாது. திருவிழாக்கள் நடத்தப்படக் கூடாது. ஏனெனில், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களின்போது நிறைய பாவங்கள் செய்யப்படுவதாகப் பார்க்கிறான். இருந்தாலும், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, சில திருவிழாக்களை நல்லவையாகவும் கருதுகிறான்.
முன்னர், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் சமையலறையில் தினமும் குழம்புவைக்க லட்சக்கணக்கில் உயிரினங்கள் பலிகொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படும் இந்தச் சமயத்தில், குழம்புவைக்க மூன்று பிராணிகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன: மயில்கள் இரண்டு, வேட்டையாடப்படும் விலங்கு ஒன்று. வேட்டையாடப்படும் விலங்கும் எல்லா சமயங்களிலும் கிடையாது. வருங்காலங்களில் இந்த மூன்று பிராணிகளும்கூட பலிகொடுக்கப்பட மாட்டாது.”

“மிகச் சரியாக அசோகர் வென்றெடுத்த அதே கலிங்கப் பகுதியில் இருக்கும் கரவேலாவின் ஹதிகும்பா குகைக் கல்வெட்டுகள், அசோகரது ஐக்கியவாதம் முற்றிலுமாக அழிந்துவிடவில்லை என்பதற்கான சிறு நம்பிக்கையைக் கொடுக்கின்றன. மிக மோசமாகப் பராமரிக்கப்பட்டிருக்கும் இந்தக் கல்வெட்டின் காலம் குறித்தும் அர்த்தம் குறித்தும் அவ்வளவு உறுதியாக எதுவும் சொல்ல முடியவில்லை. இது பொ.ஆ. முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கணக்கிடப்படுகிறது. முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கல்வெட்டின் இறுதியில் அரசன் 'சவபாஸம்தபூஜகோ', அதாவது 'எல்லாப் பாஸந்தாக்களையும் மதிப்பவன்' என்பதாக விவரிக்கப்படுகிறான். இதில், 'எல்லாப் பாஸந்தாக்களையும்' மதிப்பதாகத் தொடர்ந்து முன்வைத்துவந்த அசோகரது கூற்றின் எதிரொலியை நம்மால் உணர முடிகிறது.
இந்தியாவில் இப்படியான ஐக்கியவாதத்துக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டு 1800 வருடங்களுக்குப் பிறகு வெளிப்படுகிறது. முகலாயப் பேரரசரான அக்பர், 'இஸ்லாம், இந்து, கிறிஸ்தவம், பௌத்தம் போன்ற மதங்களுக்கு இடையேயான பிளவுகளையெல்லாம் கடந்து, 'தின்-இ-இலாஹி', அதாவது 'கடவுளின் மதம்` என்ற ஐக்கியவாத அடிப்படையிலான மதத்தை முன்னெடுக்கிறார். அறிவொளிமிக்க அரசியலுக்காக அவரே இந்தப் புதிய மதத்துக்கு மாறுகிறார். ஆனால், அசோகர் விஷயத்தில் நடந்ததுபோலவே, அக்பர் மேற்கொண்ட பரிசோதனையும் அவரது மறைவுக்குப் பின் நீண்ட காலம் நிலைத்திருக்கவில்லை.”

“அசோகரைப் பின்பற்றியே இந்திய மற்றும் சீன அரசர்கள் தங்களை வடிவமைத்துக்கொண்டார்கள் என்றும், அசோகர் ‘பெயர் ஏதுமில்லாத ஒரு முன்மாதிரி ஆட்சியாள'ராகக் குறிக்கப்படுகிறார் என்றும் மாக்ஸ் டீக் குறிப்பிடுகிறார். இந்தியாவில், குஷான அரசரான கனிஷ்கர், 'புராணத்தன்மையிலான அசோகரது வாழ்க்கை வரலாற்றை முன்மாதிரியாகக் கொண்டு, ஆட்சிபுரிந்த லட்சிய பௌத்த அரசனாகக் கதையாடல்ரீதியாக முன்வைக்கப்படுகிறார்.' ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த சீனப் பேரரசர் வூ, 'தன்னை மற்றொரு அசோக ராக வடிவமைத்துக்கொண்டு பௌத்த லட்சியத்தின் அடிப்படையில் ஆட்சிபுரிய விரும்பினார்... புத்தரது எச்சங்களைக் கொண்டிருக்கும் பல ஸ்தூபிகளைப் பேரரசர் வூ எழுப்பினர், அசோரது ஸ்தூபிகளைத் தேடும் பொருட்டு, தொல்வடிவ-தொல்லியலார்ந்த (proto-archaeological) தேடல்களையும் மேற்கொண்டார்'. வரலாற்றியலாளர் சாங்ஃபெங் லீ குறிப்பிடுவதுபோல், அசோகரோடு தொடர்புடைய இரண்டு விதமான சிற்பங்கள் சீனா முழுவதும் விரவிக்கிடக்கின்றன:
"முதல் வகையான சிற்பம், அரசர் அசோகரால் அல்லது அவரது மகளால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தரது படிமத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வகை பௌத்தப் பிக்குகளாலும் சாதாரண பௌத்தர்களாலும், பௌத்தத்துக்கு அசோகர் செய்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அரசர் அசோகரது உருவத்தைக் கொண்டிருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
"முதல் வகையான சிற்பம், அரசர் அசோகரால் அல்லது அவரது மகளால் செய்யப்பட்டதாகச் சொல்லப்படும் புத்தரது படிமத்தைக் கொண்டிருக்கிறது. இரண்டாவது வகை பௌத்தப் பிக்குகளாலும் சாதாரண பௌத்தர்களாலும், பௌத்தத்துக்கு அசோகர் செய்த பங்களிப்பைப் போற்றும் விதமாக அரசர் அசோகரது உருவத்தைக் கொண்டிருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகரது ஐக்கியவாதம் காணாமல்போனதை, பார்ப்பனிய மற்றும் பௌத்த மரபுகள் ஒரு 'லட்சிய' அரசனைச் சித்தரிக்கும் முயற்சிகளில் காண முடிகிறது — ஒன்று, இவை வெளிப்படையாக அசோகருக்கு மாற்றானதை முன்வைத்தன அல்லது அவரைப் போலவே வடிவமைத்தன. இரண்டு, பார்ப்பனிய சம்ஸ்கிருதக் காவியங்களான மகாபாரதமும் ராமாயணமும் யுதிஷ்டிரன், ராமன் ஆகிய இரண்டு லட்சிய அரசர்களை முன்வைக்கின்றன. இருவருமே தர்மத்துக்கு உட்பட்டு ஆட்சிபுரிகிறார்கள்; இருவருமே பார்ப்பனர்களுக்கும் தீவிர விசுவாசிகளாக இருக்கிறார்கள். இவர்கள் தத்தம் ராஜ்ஜியங்களில் தலைமை பீடத்தில் பார்ப்பனர்களை வைத்து, அவர்களுடைய அறிவுரைகளுக்கு ஏற்ப ஆட்சிபுரிந்தார்கள். இவ்விரண்டு நீண்ட காவியங்களும் அசோகரது பெயரை ஒருபோதும் முன்மொழியவில்லை. ஒருசில புராணங்களில் அரசர்களின் பெயர்களைப் பட்டியலிடும்போது குறிப்பிடுவதைத் தவிர, பார்ப்பனிய மரபு ஏறக்குறைய வரலாற்றுரீதியான நினைவுகளிலிருந்து அசோகரை அப்புறப்படுத்திவிட்டது என்றே சொல்லலாம். இருப்பினும், சமீபத்திய ஆய்வாளர்கள் பலரும் சுட்டிக்காட்டுவதுபோல், அசோகருக்கு ஒரு மாற்றாகவே யுதிஷ்டிரர் நிற்கிறார் — மௌனமான, ஆனால் சொல்திறன்மிக்க மாற்றாக. மகாபாரத அறிஞரான மாடெலின் பியர்தியூ மகாபாரதப் படைப்பானது அசோகரோடு நெருங்கிய தொடர்புகொண்டது என்று பலமாக வாதிடுகிறார்: 'அசோகர் மதம் மாறியதற்கும் மகாபாரதம் இயற்றப்பட்டதற்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருக்க வேண்டும் என்பதைத் தொடக்கத்திலிருந்தே எங்களுடைய அடிப்படை முற்கோளாகக் கொண்டிருந்தோம்.' இந்தியக் காவியங்கள் குறித்த அறிஞரான ஜேம்ஸ் ஃபிட்ஸ்ஜெரால்ட், வரலாற்றுரீதியான அசோகருக்கும், 'பிரம்மன்யாவாக', அதாவது பார்ப்பனர்களுக்கு விசுவாசமாக இருக்கும் ஒரு லட்சிய அரசனை நோக்கமாகக் கொண்டு பார்ப்பனர்களால் படைக்கப்பட்ட இலக்கியப் பாத்திரமான யுதிஷ்டிரருக்கும் இடையேயான ஒப்புமையை மிக வலிமையாக முன்வைக்கிறார்:
'நீண்ட காலமாக யுதிஷ்டிரன்... புதிய சாத்தியப்பாடுகளைக் கொண்டிருக்கும் உலகம் குறித்துப் புதிய தரிசனத்தை மற்றவர்களுக்கு அளிக்கும் நோக்கத்தின் அடிப்படையில் இறையியல்-தத்துவார்த்த இலக்கிய ஆளுமையால் வடிவமைக்கப்பட்ட இலக்கியப் படைப்பு என்பதே என்னுடைய நீண்ட காலப் பார்வையாக இருந்துவருகிறது. பேரரசர் அசோகரை மறுதலிப்பதற்கு அல்லது குறைந்தபட்சம் மாற்றுப் பார்வையை முன்வைப்பதற்காகத்தான் யுதிஷ்டிரன் என்ற பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தை நான் பல வருடங்களாகக் கொண்டிருக்கிறேன்.'
பார்ப்பனர்களைப் பொறுத்தமட்டில், லட்சிய அரசன் என்பவன் — அசோகர்போல் அல்லாமல் யுதிஷ்டிரன்போல் பார்ப்பனர்களின் நலன்களுக்கும் அவர்களது மேலாண்மைக்கும் எப்போதும் விசுவாசமாக இருப்பவனாக இருக்கிறான் என்றால், பௌத்தர்களைப் பொறுத்தமட்டில், அப்படியான அரசன் பௌத்தத்துக்கும் சங்கத்துக்கும் முற்றிலும் விசுவாசமாக இருக்கும் அசோகரைப் போன்றவனாக இருக்கிறான்.”

“வருங்காலத்தினருக்கு விட்டுச்சென்றிருக்கும் அவரது கடைசி எழுத்தில், அதாவது பாறை அரசாணை VII-இல், அவர் தொடங்கிவைத்த தர்மா திட்டம் 'அவரது மகன்களும் பேரன்களும் இருக்கும் வரையில், சூரியனும் சந்திரனும் இருக்கும் வரையில் நிலைத்திருக்கும்' என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். பாறை அரசாணை VII-இல் வருங்காலத்துக்கு அவர் விட்டுச்சென்றிருக்கும் கடைசி வார்த்தை 'சிலத்திக ஸியா’, அதாவது 'காலகாலத்துக்கும் நிலைத்திருக்கும்' என்றிருக்கிறது. இப்படியான மரபையே அவர் வேண்டினார்; இப்படியான புகழையே அவர் வேண்டினார். ஆனால், இந்த மரபு அவருக்கு மறுக்கப்பட்டது.
உலகளாவிய தார்மிகத் தத்துவத்திலும் மத ஐக்கியவாதத்திலும் நங்கூரமிட்டு, அசோகர் மேற்கொண்ட ஆட்சிமையிலான பரிசோதனை மிகவும் தனித்துவமானது, உலக வரலாற்றில் இதற்கு முன்மாதிரி என்று ஏதும் கிடையாது. ஒரு லட்சியவாதிக்கான மனதைக் கொண்டிருந்த அவர், அவரது லட்சியத்தை முன்னெடுத்துச்செல்லும் ஒற்றைக் குறிக்கோளுடன் கால் நூற்றாண்டுக்கும் மேல் உழைத்திருக்கிறார். காரணங்கள் பலவாக இருக்கலாம் என்றாலும், அரசியல்ரீதியாகவும் தத்துவார்த்தரீதியாகவும் மதரீதியாகவும் அவர் மேற்கொண்ட தனித்துவமான பரிசோதனைகள், அவரது மறைவுக்குப் பின் — சந்திரனும் சூரியனும் இருக்கும் வரையில் எல்லாம் வேண்டாம் — நீண்ட காலம் நிலைத்துநிற்கவில்லை.
எந்த வருடத்தில் அசோகர் இறந்தார் என்பது விவாதத்துக்குரிய விஷயமாக இருக்கிறது. ஆனாலும், அவர் பொ.ஆ.மு. 233 அல்லது 232- இல் இறந்திருக்க வேண்டும் என்று ரொமிலா தாப்பர் முன்வைப்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இதை ஏற்றுக்கொள்வோம் என்றால், அவரது ஆட்சிக்காலம் முப்பத்தாறு ஆண்டுகள் கொண்டதாகிறது. அசோகரின் மறைவுக்குப் பிந்தைய வருடங்களில், பத்தாண்டுகளில் என்ன நடந்தது என்பது குறித்துப் பெரிய தெளிவு எதுவுமில்லை. இக்காலம் குறித்த பெரும்பாலான வரலாற்றுரீதியான எழுத்துகள் ஊகங்களாக இருப்பதோடு, அசோசருக்குப் பிறகு பல நூற்றாண்டுகள் கழித்துப் படைக்கப்பட்ட பனுவல்களின் அடிப்படையில் எழுதப்பட்டவையாகவும் இருக்கின்றன. பௌத்தம், பார்ப்பனியம் ஆகிய இரண்டு மூலங்களுமே, அசோகரது வாரிசுகள் குறித்தும், அவர்களது ஆட்சிக் காலங்கள் குறித்தும் ஒன்றோடொன்று முரண்படும் தகவல்களையே கொடுக்கின்றன. அவருக்குப் பின்னர் வந்த வாரிசுகள் குறித்தும் அவர்கள் ஆட்சிபுரிந்த காலத்தையும் ரொமிலா தாப்பர் இப்படித் தொகுத்துக்கொடுக்கிறார்:
தசரதா - 8 வருடங்கள்
சம்ப்ரதி - 9 வருடங்கள்
ஷாலிஸுல்கா - 13 வருடங்கள்
தேவவர்மன் - 7 வருடங்கள்
ஷத்தாதன்வன் - 8 வருடங்கள்
பிரிஹத்ரதா - 7 வருடங்கள்
மௌரிய வம்சத்தின் கடைசி ஆட்சியாளர் பிரிஹத்ரதா. இவரது படைத் தளபதியான புஷ்யமித்திரனால் பொ.ஆ.மு. 181-180-இல் இவர் கொல்லப்பட்டார். இந்தப் புஷ்யமித்திரனே சுங்கப் பேரரசைத் தொடங்கிவைக்கிறான். இப்படியாக, 137 ஆண்டுகள் இந்தியாவை ஆண்ட மௌரியர்களின் ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது. அதோடு சேர்ந்து, தர்மத்தைக் கொண்டு உலகை ஆட்சிபுரிய முடியும் என்ற அசோகரது கனவும் முடிவுக்கு வந்தது. ரொமிலா தாப்பர் சொல்வதுபோல்:
"பிற தொடக்க காலப் பேரரசுகளோடு ஒப்பிடுவோம் என்றால், அதாவது ஆகமெனீத், ஹான், ரோமானியம் போன்று சில பேரரசுகளோடு ஒப்பிடுவோம் என்றால், மௌரியப் பேரரசு அற்ப ஆயுளைக் கொண்டதாக இருக்கிறது. சந்திரகுப்தரின் வெற்றியிலிருந்து தொடங்கி, அவரது பேரனான அசோகரது காலத்தில் அதன் உச்சத்தைத் தொட்டு, அதற்குப் பிறகு மிக வேகமாகச் சரிவைக் கண்டதுபோல் தெரிகிறது. ஒரு பேரரசு கட்டமைப்பாக அதிகபட்சம் ஒரு நூற்றாண்டுக்கு மட்டுமே தாக்குபிடித்திருக்கிறது.”

“இந்தியாவிலும் உலகெங்கிலும் சைவ உணவு மையநீரோட்டமாக மாறுவதற்கு வெகுமுன்னரே அசோகர் 'சைவ உணவாள அரசர்' என்றழைக்கப்பட்டார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“எல்லாப் பாஸந்தாக்களையும் சமமாக அணுகுவது, ஐக்கியவாதத்தை ஊக்குவிப்பது என்ற கொள்கைகள் கொண்டு, 'பார்ப்பனியத் தனித்துவவாதம்' என்றழைக்கக்கூடிய ஒன்றை அப்புறப்படுத்தியதுதான் அசோகரது குடிமை மதம் ஏற்படுத்திய முக்கிய விளைவாகிறது. சமூக, அரசியல் படிநிலையில் மேலாக இருந்த பார்ப்பனர்கள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டதே அசோகர் மேற்கொண்ட சீர்திருத்தங்களின் முக்கிய விளைவு.
அசோகரது சிந்தனைகளை அரசியல் தத்துவமாக விசாரணைசெய்த ராஜீவ் பார்கவா, அசோகர் 'இந்தியாவில் தொல்வடிவ - மதச்சார்பற்ற அரசு (proto-secular state) என்ற கருத்தாக்கத்தை வடிவமைத்த'தாகக் கோருகிறார். மேலும், 'எல்லா மதங்களையும் அசோகர் சகிப்புத்தன்மையோடு அணுகியதன் மூலம், மதரீதியாக நடுநிலையோடு தொடர்புகொண்டிருக்கும் மதச்சார்பின்மைக்கான முன்னோடியாக இருப்ப'தாகவும் கோருகிறார்.”

“அவரது காலத்தில் இருந்த ஒழுங்கமைக்கப்பட்ட மதங்களின் வட்டத்துக்குள் இருப்பதற்குப் பதிலாக அசோகர் அவற்றைக் கடந்துசென்றார். அவரது முன்னோர்கள் எவருமே செய்திராத ஒன்றை — சொல்லப்போனால், இந்தியாவில் அல்லது ஒருவேளை உலகத்திலேயே அவருக்கு முன்போ பிறகோ எந்த அரசரும் செய்திராத ஒன்றை, அவர் செய்கிறார். தர்மம் என்ற மையமான கருத்தாக்கத்தைக் குறிப்பிட்ட முறையில் புரிந்துகொண்டு புதிய உலகளாவிய மதத்தை அசோகர் தோற்றுவிக்கிறார். அது மதத்துக்கான குணாம்சங்களையெல்லாம் கொண்டிருந்தது — தார்மிகத் தத்துவத்தின் மீதான கவனம், இறப்புக்குப் பின்னர் ஊழலோடு தொடர்புடைய கொள்கை, அவ்வளவு ஏன் ஆண்டுதோறும் வழிபாட்டுக் காலங்களில் குறிப்பிட்ட புனித நாள்களில் அசோகரது எழுத்துகளைச் சடங்குரீதியாக வாசிப்பது போன்றெல்லாம் கொண்டிருந்தது. இது ஓர் அரசியல் இயக்கத்துக்கான, தத்துவார்த்த இயக்கத்துக்கான குணாம்சத்தையும் கொண்டிருந்தது — இதற்குச் சேவைசெய்யும் விதத்தில் பெருமளவில் அரசு நிர்வாகம் முழுவதும் ஒன்றுதிரட்டப்பட்டது; தர்ம-திட்டத்துக்காக மட்டும் சேவை செய்யும் விதமாகப் புதிதாக தர்ம-மஹாமாத்ரர் என்ற அரசாங்கத் துறையும் உருவாக்கப்பட்டது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“வெகுஜன மதப் பழக்கங்களில் ஊடறுப்பதற்கு அசோகர் பயன்படுத்தும் இரண்டாவது கருத்தாக்கம் மங்களம். இந்திய மதரீதியான சொல்லாடல்களில் இச்சொல் அதிகம் பயன்படுத்தப்படும் ஒன்றாக இருந்துவருகிறது. இது, சாதகமான விளைவுகளைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் சடங்கை அல்லது விழாவைக் குறிக்கிறது. திருமணம், குழந்தைப் பிறப்பு, பயணம் மேற்கொள்வது போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது, பொதுவாக 'மங்களச் சடங்குகள்' என்று சொல்லப்படுவது நடத்தப்படுகிறது. திருவிழாக்கள் போன்று ரத்தம், பாலியல் உறவு அல்லது மது போன்று எதுவும் இதில் கிடையாது. மங்களச் சடங்குகள் ஒரு குடும்பத்துக்குள் நடத்தப்படும் சாதாரண நிகழ்வுகளாக இருந்தன. இருந்தும், அசோகர் இவற்றை சாதகமாகப் பார்க்க மறுக்கிறார். இவற்றை அவர் முற்றிலும் நிராகரிக்கவில்லை என்றாலும், இவற்றை அற்பமானதாக, முட்டாள்தனமானதாக, சொல்லப்போனால் பெண்கள் மட்டுமே செய்யக்கூடிய காரியங்களாக — எப்படியிருந்தாலும் தான் ஒரு ஆண் என்பதை இங்கு வெளிப்படுத்துகிறார்! —அசோகர் பார்க்கிறார். பாறை அரசாணை IX-இல் அசோகர் தனது தர்மத்தை இது போன்ற மங்களச் சடங்குகளோடு ஒப்பிடுகிறார்:
'மக்கள் பலதரப்பட்ட மங்களச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள் நோய்வாய்ப்பட்டிருக்கும்போது, மகன் அல்லது மகளின் திருமணத்தின்போது, குழந்தை பிறக்கும்போது, பயணங்கள் மேற்கொள்ளும்போது. இது போன்று மற்றும் இதற்கு நிகரான சமயங்களில் மக்கள் பலதரப்பட்ட மங்களச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள். இருந்தாலும், இப்படியான சமயங்களில், பெண்கள் எண்ணற்ற, பலவிதமான, அற்பமான, பயனற்ற மங்களச் சடங்குகளில் ஈடுபடுகிறார்கள்.
இப்போதும், நிச்சயமாக, மங்களச் சடங்குகள் செய்யப்படத்தான் போகின்றன. ஆனால், அதே அளவுக்கு, தெளிவாக, இப்படியான மங்களச் சடங்குகள் எந்தப் பலன்களையும் கொடுக்கப்போவதில்லை.”

“அசோகர் குறிப்பிடுகிறார்: 'கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களின்போது நிறைய பாவங்கள் செய்யப்படுவதாகப் பார்க்கிறான்.' இது போன்ற தருணங்களில் விலங்குகள் சடங்குரீதியாகப் பலிகொடுக்கப்பட்டதுதான் இதற்கான முக்கியக் காரணமாகிறது. சடங்குரீதியாக விலங்குகள் பலிகொடுக்கப்படுவதைக் குறிக்க அசோகர் பயன்படுத்தும் சொல் மிக முக்கியமாகிறது. இவை நேரடியாக அல்லது மறைமுகமாக வேதப் பார்ப்பனியச் சொல்லாடல்களிலிருந்து பெறப்பட்டவையாக இருக்கின்றன. விலங்குகள் பலிகொடுக்கப்படுவதை அல்லது சடங்குகளோடு தொடர்புடைய நிகழ்வுகளை அசோகர் பார்ப்பனர்களோடு எங்கும் தொடர்புபடுத்தவில்லை என்றாலும்கூட, இவ்வாறான தடையாணை பார்ப்பனர்களின் சடங்குச் செயல்பாடுகளில் மையமாக இருந்ததன் மீது பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் என்பது மட்டும் நிச்சயம்.
வேதச் சடங்குகள் விலங்குகள் பலிகொடுப்பதையும் அவற்றைப் படையலிடுவதையும் கொண்டிருந்தன.”
― Ashoka: Portrait of a Philosopher King
வேதச் சடங்குகள் விலங்குகள் பலிகொடுப்பதையும் அவற்றைப் படையலிடுவதையும் கொண்டிருந்தன.”
― Ashoka: Portrait of a Philosopher King
“மேலும், வெகுஜனம் என்பது அசோகரது மனதில் மிருக பலி கொடுக்கும் பழக்கத்தோடு தொடர்புடையதாகவும் இருக்கிறது. இது, அசோக தர்மத்தின் மையமான கோட்பாட்டுக்கு எதிரானதாகவும் இருக்கிறது: கொல்லாமை, அகிம்சை.
வெகுஜன மத வெளிப்பாடுகளை அசோகர் திருவிழாக்களோடும் மங்களச் சடங்குகளோடும் இணைத்துப் பார்க்கிறார் என்று முன்னரே பார்த்தோம். அவரது முதல் பிரதானக் கல்வெட்டான பாறை அரசாணை I-இலேயே திருவிழாக்கள் குறித்த கருத்தை அவர் பதிவுசெய்கிறார்.
'இங்கு, எந்த உயிரினங்களையும் கொல்லக் கூடாது; சடங்குகளில் பலிகொடுக்கக் கூடாது. திருவிழாக்கள் எதுவும் நடத்தப்படக் கூடாது. ஏனெனில், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, திருவிழாக்களை அவ்வளவு பாவமாகக் கருதுகிறான். இருந்தாலும், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸி, சில திருவிழாக்களை நல்லவையாகவும் கருதுகிறான்.”

“மதம்' என்ற வகைமையைப் பயன்படுத்தும்போது, மானுடர்களால் படைக்கப்பட்ட வகைமையைத்தான் நாம் கையாள்கிறோமே தவிர, வெளியே சுதந்திரமாக இருக்கும் மெய்மையான ஒன்றையல்ல என்பதை நாம் நினைவில்கொள்வது மிகவும் முக்கியம்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“தர்மத்தைத் தானமாகக் கொடுப்பதைவிட மேலான தானம் எதுவும் இருக்கமுடியாது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“தாய், தந்தைக்குக் கீழ்ப்படிந்து நடப்பது — அருமை! நண்பர்களுக்கு, சகாக்களுக்கு, உறவினர்களுக்கு, பார்ப்பனர்களுக்கு, சிரமணர்களுக்கு தானங்கள் கொடுப்பது — அருமை! உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பது — அருமை! குறைவாகச் செலவழித்துக் குறைவாகச் சேமித்துவைப்பது — அருமை!”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகர் விட்டுச்சென்றிருக்கும் பெருமளவிலான எழுத்துகளிலிருந்து சொல்வதென்றால், அவரது சொந்தப் பேரரசுக்குள்ளும் அதற்கு வெளியிலும் தர்மத்தைப் பரவலாக்குவதற்கான முறைகளில் அவர் பல பரிசோதனைகளை மேற்கொண்டார் என்பது தெளிவாகிறது. இந்தப் பரிசோதனைகளை நாம் மூன்று வகையாகப் பிரிக்க முடியும். 1) எழுத்துகள்: அசோகர் தன்னுடைய கருத்துகளை எழுத்துகள் ஊடாக மிகத் திறமையாகப் பகிர்ந்துகொள்கிறார். பாறைகளில் பொறிக்கப்படுவதன் ஊடான அவற்றை நிலையான பதிப்பாக்குகிறார். தர்மத்தைக் கற்பிக்க அவரது அதிகாரிகள் அவரது எழுத்துகளைப் பொதுவில் வாசித்து அதற்கான உரையைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்கிறார். 2) அரசதிகாரிகள்: மக்களிடையே தர்மத்தைப் புகுத்த, அவர்களுக்குப் பொறுப்பானவர்களாக இருக்கும் பல்வேறு அரசதிகாரிகளை இந்தத் திட்டத்தில் இணைத்துக்கொள்கிறார். 3) எடுத்துக்காட்டு: தன்னை எடுத்துக்காட்டாகக் கொண்டு மக்கள் தன்னைப் பின்பற்றுவார்கள் என்று அசோகர் நம்பினார். மற்றவர்கள் பின்பற்ற வேண்டிய ஒரு மாதிரியாகவும், தர்மத்துக்கு ஒப்புக்கொடுப்பதற்கு முன்மாதிரியாகவும் அசோகர் தன்னை முன்வைத்துக்கொள்ள விரும்பினார்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அரியணை ஏறி பன்னிரண்டு ஆண்டுகள் கடந்ததைப் பொ.ஆ.மு. 256-இன் வசந்த காலத்தில் அசோகர் கொண்டாடுகிறார். இதற்கு அடுத்த வருடம், அதாவது அவர் அரியணை ஏறிய பதிமூன்றாவது வருடம், அவரது வாழ்க்கையிலும் அவரது பேரரசிலும், ஏன் இந்திய வரலாற்றிலும் பெரும் மாற்றத்தை உருவாக்கிய ஆண்டாகிறது. இந்த வருடத்தில்தான், வெளிப்படையாக பெளத்த போதனைகளைச் சுழலச்சாகக் கொண்டிருந்த அசோகர், அதிலிருந்து நகர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட சமயங்களைப் — இவற்றை அவர் பாஸந்தா என்றழைத்தார் — பொறுத்தமட்டில் சமயரீதியான அடையாளத்துக்கும் அவற்றுக்கு இடையேயான மோதல்களுக்கும் அப்பால் நடுநிலையாக இருப்பது என்ற நிலைப்பாட்டை நோக்கி நகர்கிறார். இதுவே தர்மத்தின் தார்மிகத் தத்துவமாகிறது. மிக முக்கியமான பதிமூன்றாம் ஆண்டில், அவரது வழக்கமான உற்சாகத்தோடும் பற்றார்வத்தோடும் அவரது பரந்த நிலப்பரப்புக்குள்ளும் அதற்கு அப்பாலும் தர்மத்தைப் போதிப்பது என்பதற்குள் நுழைகிறார். பாறை அரசாணை IV-இல், ஓர் அரசனுடைய கடமைகள் குறித்துச் சொல்லும்போது இவ்வாறு முன்வைக்கிறார்: 'இதுவே மிக முக்கியக் காரியமாகிறது — தர்மம் குறித்து அறிவுரை வழங்குவது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகர் என்ன நினைத்திருக்கலாம் என்பதற்குப் பாறை அரசாணை IV-இல் உள்ள கூற்று நமக்குத் துப்பு கொடுக்கிறது. இந்த அரசாணையின் முடிவில் தன்னுடைய மகன்கள், பேரன்கள் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்: 'தர்மத்துக்கும் நன்னடத்தைக்கும் (ஸீல) கட்டுப்பட்டு அவர்கள் தர்மம் குறித்து அறிவுறுத்துவார்கள். ஏனெனில், இதுவே தலையாய காரியமாகிறது — தர்மம் குறித்து அறிவுரை வழங்குவது. எப்படியிருந்தாலும், நன்னடத்தை இல்லாத (அஸீல) ஒருவனால் தர்மத்தை நடைமுறைப்படுத்த முடியாது'. இந்த இடத்தில் மட்டும்தான், பௌத்தக் கதையாடல்களில் பிரதானமாக இடம்பெறும் 'ஸீல' (நன்னடத்தை அல்லது தார்மிக நெறிகள்) என்ற பொதுச் சொல்லை அசோகர் பயன்படுத்துகிறார். இதை ஏற்றுக்கொண்டாலும், தர்மத்திலிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறார். நன்னடத்தையில்லாத ஒருவனால் தர்மத்தைப் பயில முடியாது. இந்த முடிவு, 'நன்னடத்தை' அல்லது ‘ஸீல’ தர்மத்துக்கு உட்பட்ட வாழ்க்கையை மேற்கொள்வதற்கான முன்தேவையாக இருப்பதை முன்வைப்பதாகிறது. நாம் பார்த்ததுபோல், ஐந்து பௌத்தக் கட்டளைகள் 'ஸீல' என்றழைக்கப்பட்டன. இந்தக் கட்டளைகள், தவறான நடத்தைகளில் ஈடுபடுவதைத் தடைசெய்வதால், இவற்றையெல்லாம் தன்னுடைய தர்மத்தின் பகுதியாகப் பார்க்காமல், தர்மத்தின் பாதையைப் பின்பற்றுவதற்கான தார்மிக முன்தேவையாக அசோகர் பார்த்திருக்கலாம்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“அசோகர் பௌத்தத்திலிருந்தும் பௌத்தத் துறவிகளோடு அவர் ஊடாடியதிலிருந்தும் உந்துதல் பெற்றிருந்ததால், தர்மம் குறித்த அவரது சொந்த வரையறையில் பௌத்தக் கருத்தாக்கங்களின் ஒருசில கூறுகளையாவது உள்ளடக்கியிருப்பார் என்றே நாம் எதிர்பார்ப்போம். அசோகர் ஏன் ஐந்து பௌத்தக் கட்டளைகளை தர்மம் குறித்த அவரது வரையறையின் பகுதியாக்கவில்லை என்ற கேள்வியை இயல் 7-இல் நான் எழுப்பியிருந்தேன். பஞ்சசீலா என்றழைக்கப்படும் இந்த ஐந்து கட்டளைகள் ஐந்து தடைகளை முன்வைக்கின்றன: (1) உயிரினங்களைக் கொல்லாமை, (2) கொடுக்கப்படாததை எடுத்துக்கொள்ளாமை, (3) பாலியல்ரீதியில் முறைதவறாமை, (4) பொய் சொல்லாமை அல்லது தவறாகப் பேசாமை, (5) போதைப்பொருட்கள் உட்கொள்ளாமை. முதலாவதாக இருப்பது மட்டுமே, அதாவது உயிரினங்களைக் கொல்லாமல் இருப்பது மட்டுமே தர்மம் குறித்த அசோகரது முன்வைப்புகளில் தொடர்ந்து வெளிப்படுகிறது என்றால், நான்காவது அதாவது உண்மையாக இருத்தல் என்பது போகிறபோக்கில் மூன்று முறை மட்டுமே வெளிப்படுகிறது.
பௌத்தர்கள், பார்ப்பனர்கள் இருசாராருமே மது அருந்துவதைத் தீவிரமாக எதிர்த்தார்கள். அக்காலகட்டத்தில் மதரீதியான அறத்தில் மது அருந்தாமை பிரதானக் கூறாக இருந்தது. பார்ப்பனியச் சட்ட விதிகள் போன்ற சில பனுவல்களில், மது அருந்துவதற்கு எதிராகக் குற்றவியல் தடைகளும் காணப்படுகின்றன. இதற்கு எதிர்முனையில், கௌடில்யரின் அர்த்தசாஸ்திரம், மது அருந்துவதை அரசியல்ரீதியாக, நிர்வாகரீதியாக அணுகுவதை வெளிப்படுத்துகிறது. இதில், மது பொதுவாகக் கிடைக்கக்கூடிய ஒன்றாகவும் பரவலாகப் பயன்படுத்தப்பட்ட ஒன்றாகவும் இருந்ததைக் காண முடிகிறது. மேலும், அது பெருமளவு அரசுக் கட்டுப்பாட்டில் இருந்தது. எது நல்ல வருமானத்தைக் கொடுக்கும் என்று எப்போதும் அரசர்கள் அறிந்திருந்தார்கள். சில நவீன அரசுகள்போலவே, தனியார் மது தயாரிப்பதை, விநியோகிப்பதை, விற்பதை ஒருசில திருவிழா நாள்கள் தவிர பிற நாள்களில் தடைசெய்தார்கள். திருவிழாக்களிலும் பொருட்காட்சிகளிலும் மது தடையற்றுக் கிடைத்தது. நாம் முன்னர் பார்த்தது போன்று திருவிழாக்களை ஏற்றுக்கொள்ள அசோகர் மறுக்கிறார். இருந்தும், மது அருந்தாமையை அசோகர் ஏன் அவரது தர்மத்தின் பகுதியாக முன்வைக்கவில்லை?
முறையற்ற பாலியல் நடத்தைகள் விஷயத்திலும் இதே கேள்வியைக் கேட்க முடியும். சில அறரீதியான முறைமைகளில் மது அருந்துவதைவிடப் முறையற்ற பாலியல் நடத்தைகள் இன்னும் தீவிரமான குற்றமாகப் பார்க்கப்பட்டன. பாலியல் வன்முறை, கன்னிகழித்தல், முறையற்ற உறவுகளெல்லாம் இதன் கூறுகளாவதோடு, அவற்றுக்கான குற்றவியல் தண்டனைகளையும் கொண்டிருந்தன. பௌத்தத்துக்குள்ளும் பிற துறவற மதங்களுக்குள்ளும் துறவற வாழக்கையின் பிரதானக் கூறாக பிரம்மச்சரியம் இருந்தது. முறையான பாலியல் நடத்தையானது தார்மிகப் படிநிலையில் மேலான இடத்தைக் கொண்டிருந்தது. ஆக, முறையற்ற பாலியல் நடத்தைகளை அசோகர் ஏன் அவரது தர்மத்தின் பகுதியாக முன்வைக்கவில்லை?
இந்தக் கேள்விகளுக்கும் இவற்றுக்கு நிகரானவற்றுக்கும் அசோகரது எழுத்துகளில் தெளிவான விடை எதுவும் இல்லை. அவர் இந்தப் பிரச்சினைகளை எளிதில் கடந்துபோகிறார். ஒன்று, இவை குறித்து அவர் சிந்திக்கவில்லை என்று சொல்லலாம் அல்லது இவை குறித்து மௌனமாக இருக்க முடிவெடுத்திருக்கிறார் என்று சொல்லலாம். ஆனால், ஏன்? அவரது எழுத்துகளின் தொகுப்பிலிருந்து விடைகளாக நாம் சில ஊகங்களைச் - ஓரளவு சாத்தியப்பாடு கொண்டவற்றைச் - சேகரிக்க மட்டுமே முடியும். முதலாவதாக, சிறு பாறை அரசாணை I-இல் பௌத்தத்தை முன்னிலைப்படுத்துவது என்ற அவரது தொடக்க கால உந்துதலைக் கடந்து, மேலும் பொதுவான, உள்ளிணைத்துக்கொள்ளும் தர்மத்துக்கான புதிய கருத்தாக்கத்தை நோக்கி நகர்ந்த பின், வெகுஜன மனதில் பௌத்தத்தோடு சுலபமாகவும் நெருக்கமாகவும் அடையாளப்படுத்திக்கொள்ளக்கூடிய எது ஒன்றிலிருந்தும் - பௌத்தப் பஞ்சசீலக் கொள்கைகள்போல்- விலகியிருக்க அவர் விரும்பியிருக்கலாம். நம்மால் இதை நிச்சயமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. குற்றவியல் சட்டங்களைச் சேர்ப்பதற்கான அவரது தயக்கத்தையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது: தர்மம் என்பது மிகக் குறைந்தபட்சக் குறை எண்ணாக இருப்பதற்கான, வெறுமனே குற்றங்கள் எதிலும் ஈடுபடாத குடிநபர்த்தன்மையை உருவாக்குவதற்கான ஒன்றானது மட்டுமல்ல. அசோகரைப் பொறுத்தமட்டில் தர்மம் இதையெல்லாம் உள்ளடக்கியிருக்கிறது. ஆனாலும், இதையெல்லாம்விட மேலானதாகவும் இருக்கிறது.”

“அசோகரது தர்மம் குறித்து ஜான் ஸ்ட்ராங் பயனுள்ள வகையில் தொகுத்துக்கொடுக்கிறார்: 'அசோகருக்கு தர்மம் என்பது வினையாற்றும் சமூக அக்கறையாகவும், மத சகிப்புத்தன்மையாகவும், சூழலியல் பிரக்ஞையாகவும், பொதுவான அறக் கொள்கைகளைக் கடைப்பிடிப்பதாகவும், போர்களைத் துறப்பதாகவும் இருக்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.' ஆக, அசோகருக்கு தர்மம் என்பது சுயத்தை மேம்படுத்திக்கொள்வது, சமூகரீதியாகத் தீவிரமாகச் செயல்படுவது ஆகிய இரண்டுமாக இருக்கிறது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“போர் என்று மட்டுமல்லாமல், ஒரு நாட்டை ஆட்சிபுரிவதே கொலைகளையும், சட்டப்படி கொடுக்கப்படும் கடுங்காவல் தண்டனைகள் ஏற்படுத்தும் வலிகளையும் — அக்காலத்தில் கைகால்களை வெட்டுவதும் தண்டனையின் பகுதியாகக் — கொண்டிருக்கிறது. அகிம்சை மீதான அவரது ஆழமான ஈடுபாட்டையும் மீறி, அசோகர் கடுங்காவல் அல்லது மரணதண்டனைகளை எப்போதும் தடைசெய்யவில்லை. பண்டைய காலங்களில், வெறுமனே தலையை வெட்டுவது கருணையாகப் பார்க்கப்பட்டது; இது, 'சுத்தமாகக் கொல்வது' என்றழைக்கப்பட்டது, கழுவேற்றுதல் போன்றவற்றை உள்ளடக்கிய வேறுபல வடிவங்களில் துன்புறுத்துவது 'வண்ணமயமாகக் கொல்வது' என்றழைக்கப்பட்டது. தூண் அரசாணை IV-இல், அவரது வட்டார அதிகாரிகளுக்குக் கொடுக்கும் வழிமுறைகளில், மரணதண்டனையின் கொடூரத்தை ஓரளவுக்குக் குறைக்க அசோகர் முயல்வதை நம்மால் பார்க்க முடிகிறது. குடும்பத்தார்கள் வந்து பார்ப்பதை அனுமதிப்பதோடு மட்டுமல்லாமல், இறந்த பின் சந்தோஷத்தை அடைய வேண்டும் என்பதற்காக, சடங்குகள் மேற்கொள்ளவும் செய்த குற்றத்துக்காக வருந்தவும் அனுமதிக்கிறார்.
'ஆனாலும், என்னுடைய நடைமுறைகள் நீண்டிருக்கின்றன: சிறையில் அடைக்கப்பட்டவர்களுக்கும், தண்டனை வழங்கப்பட்டவர்களுக்கும், மரணதண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கும் மூன்று நாள்களுக்கு இந்தத் தண்டனையை நிறுத்திவைக்கும் உரிமை கொடுக்கப்படுகிறது. இவர்களுடைய உறவினர்கள், இவர்களுடைய வாழ்க்கைக்கு எது பாதுகாப்பு கொடுக்கும் என்பது குறித்து இவர்களைச் சிந்திக்கவைப்பார்கள். இவர்களுடைய வாழ்க்கை மரணத்தில் முடியப்போவது குறித்து இவர்கள் சிந்திக்க வேண்டியிருப்பதால், இந்த உலகத்துக்கு அப்பாலானதை அடைவதற்கு இவர்கள் தானங்கள் கொடுப்பார்கள் அல்லது உண்ணாவிரதம் இருப்பார்கள்.”

“இந்த நோக்கத்துக்காகத்தான், அதாவது என் மகன்களும் பேரன்களும் புதிய நாடுகளை வெற்றிகொள்வதை மதிப்புமிக்கதாக நினைக்கக் கூடாது என்பதற்காக, அவர்கள் அன்பாக நடந்துகொள்வதில் மகிழ்ச்சியடைய வேண்டும் என்பதற்காக, அவர்களுடைய சொந்த நிலப்பரப்பில் தண்டனைகளைக் கருணையோடு கொடுக்க வேண்டும் என்பதற்காக, தர்மத்தின் ஊடாக அடையும் வெற்றியையே உண்மையான வெற்றியாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காக —இப்படியான வெற்றியே இந்த உலகிலும் அடுத்ததிலும் பெறக்கூடிய வெற்றியாக இருக்க முடியும் என்பதற்காக, தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படுகின்றன. எல்லா மகிழ்ச்சிகளும் தர்மத்தின் ஊடான மகிழ்ச்சிகளாக இருக்கட்டும் — இந்த உலகிலும் அடுத்ததிலும் இதுவே மகிழ்ச்சியாக இருக்க முடியும்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“கலிங்கத்தை வென்றெடுத்த பின் கடவுள்களின் அன்புக் குரியவனின் வருத்தம் இதுதான். வென்றெடுக்கப்படாத நிலத்தை வென்றெடுப்பது என்பது கொல்வதை, மரணத்தை, நாடுகடத்துவதையெல்லாம் வேண்டுகிறது. இவையெல்லாம் கடவுள்களின் அன்புக்குரியவனைக் கடுமையாக வாட்டி வதைக்கின்றன, வேதனைக்கு உள்ளாக்குகின்றன... ஆகவேதான், கலிங்கர்களில் கொல்லப்பட்டவர்கள், இறந்துபோனவர்கள் அல்லது நாடுகடத்தப்பட்டவர்கள்போல் எண்ணிக்கையில் நூறில் ஒரு பங்கு, ஆயிரத்தில் ஒரு பங்கு இன்று நடக்கும் என்றால், அது கடவுள்களின் அன்புக்குரியவனால் பெரும் துயரமாகவே எடுத்துக்கொள்ளப்படும்.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“முன்னர், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் சமையலறையில் தினமும் குழம்புவைக்க லட்சக் கணக்கில் உயிரினங்கள் பலிகொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படும் இந்தச் சமயத்தில், குழம்புவைக்க மூன்று பிராணிகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன: மயில்கள் இரண்டு, வேட்டையாடப்படும் விலங்கு ஒன்று. வேட்டையாடப்படும் விலங்கும் எல்லா சமயங்களிலும் கிடையாது. வருங்காலங்களில் இந்த மூன்று பிராணிகளும்கூட பலிகொடுக்கப்பட மாட்டாது.”
― Ashoka: Portrait of a Philosopher King
― Ashoka: Portrait of a Philosopher King
“முன்னர், கடவுள்களின் அன்புக்குரியவன், அரசன் பியதஸியின் சமையலறையில் தினமும் குழம்புவைக்க லட்சக் கணக்கில் உயிரினங்கள் பலிகொடுக்கப்பட்டு வந்தன. ஆனால், தர்மம் குறித்த இவ்வெழுத்துகள் இங்கே பொறிக்கப்படும் இந்தச் சமயத்தில், குழம்புவைக்க மூன்று பிராணிகள் மட்டுமே பலிகொடுக்கப்படுகின்றன: மயில்கள் இரண்டு, வேட்டையாடப்படும் விலங்கு ஒன்று. வேட்டையாடப்படும். விலங்கும் எல்லா சமயங்களிலும் கிடையாது. வருங்காலங்களில் இந்த மூன்று பிராணிகளும்கூட பலிகொடுக்கப்பட மாட்டாது.”