C. Saravanakarthikeyan's Blog, page 7
December 1, 2019
பிராமணர் Vs பறையர்
வரும் 2020 சென்னை புத்தகக் காட்சிக்கு வெளியாகவிருக்கும் பேராசிரியர் டி. தருமராஜ் அவர்களின் 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' நூல் மூன்று பகுதிகளை உள்ளடக்கியது. அதன் மூன்றாம் பகுதியான 'பூர்வ பௌத்தனின் கல்லறை'யை (36 அத்தியாயங்கள் - சுமார் 100 பக்கங்கள்) வாசிக்க அனுப்பியிருந்தார்.

கவனமான வாசிப்பைக் கோரும் கனமான நூல். ஆனால் அவ்வடர்த்தி வாசகனைச் சோர்வுக்கு உள்ளாக்காத வண்ணம் சில சித்து வேலைகளை முயன்றிருக்கிறார். நான் வாசித்த பகுதி "அயோத்திதாசர் ஏன் மறக்கப்பட்டார்?" என்ற கேள்விக்கு ஆழமாக விடை தேட முயல்கிறது. (தொடர்புடைய ஞாபகம் மற்றும் மறதி பற்றிய அடிப்படைப் புரிதலை வாசகனுக்கு ஏற்படுத்த சுமார் 30 பக்கங்கள் பேசுகிறார். அதில் ஒரு வரி: "உங்களின் அதிகப்படியான ஞாபகமே என் மறதி.")
தருமராஜ் தமிழின் முக்கியச் சமகாலச் சிந்தனையாளர்களுள் ஒருவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர். உயர்கல்விப் புலத்தில் இருந்தாலும் சிந்தனை தேயாதவர். சில ஆண்டுகள் முன் கோடையில் குளிரில் அவரது நான்கு நாள் பின்நவீனத்துவப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டிருக்கிறேன். சுவாரஸ்யமும் நிதானமும் தெளிவும் கொண்டவர்.
நூலில் பிரதானமாய் பிராமணர்கள் Vs பறையர்கள் என்ற விரோதத்தைப் பேசுகிறார். இன்னொரு கோணத்தில் பறையர் Vs பௌத்தர் என்ற நட்புமுரணாகவும் இதைப் பார்க்கலாம்.
இந்திர தேச சரித்திரம் பற்றிய பகுதிகளும் (அயோத்திதாசரின் சறுக்கல்களைப் பேசும் கடைசி 5 அத்தியாயங்கள்), ஆங்காங்கே வரும் திண்ணைப் பள்ளிக்கூடம் பற்றிய பகுதிகளும் (காலங்காலமாய்ப் பூர்வபௌத்தத்தைப் பாதுகாத்து வரும் ரகசிய அமைப்பு போல் சொல்கிறார்) சுவாரஸ்யமானவை.
பௌத்தராக மாறுவதை விட (புறச்சடங்குகள்), பௌத்தராக ஆகுவதே (மனமாற்றம்) சரியானது என அயோத்திதாசர் நம்பியிருக்கிறார். பிராமணர்களை இரண்டாகப் பிரிக்கிறார்: யதார்த்த பிராமணர், வேஷ பிராமணர். (இது இன்றைய பிராமணர், பார்ப்பனர் போன்றதல்ல.) அதில் புத்தரும் ஒரு யதார்த்த பிராமணரே. ஆனால் அப்படியானவர்கள் அழிந்து போய், சதித்துடன் தம்மை சமூகத்தில் உயர்வாக ஆக்கிக் கொண்ட வேஷ பிராமணர் மட்டுமே மிஞ்சினர். அவர்களுக்கு எதிரான கலகச் செயல்பாடு தான் பூர்வபௌத்தம். அதைச் செய்தோர் பறையர்.
புத்தகத்தில் அயோத்திதாசர் பார்வையாக தருமராஜ் சொல்லும் இன்னொரு விஷயம் முக்கியமானது. சுருக்கமாகச் சொல்ல முயல்கிறேன். அன்றைய (பிராமணியம் செழிக்க ஆரம்பித்த காலம்) தமிழக மக்களை இப்படித்தான் பிரிக்க முடியும்: வேஷ பிராமணர், பூர்வ பௌத்தர் (பறையர்களில் சிலர்) மற்றும் கல்லா மக்கள் (மற்ற பறையர்கள், பிற தலித் சாதிகள், இன்றைய பிற்படுத்தப்பட்டோர்). பூர்வ பௌத்தத்தைக் கொச்சைப்படுத்த பறையர் என்ற சாதியாக அடையாளப்படுத்தினார்கள் வேஷ பிராமணர்கள். அதைப் பெரும்பான்மை ஏற்றது.
பூர்வபௌத்தத்தை அயோத்திதாசர் கண்டடைந்ததைப் போல் அயோத்திதாசத்தை தருமராஜ் கண்டடைய முயன்றிருக்கிறார். இறுதியில் அது திராவிட இயக்கத்தில் வந்து முடிகிறது. நூலின் மையச்சரடு பற்றிய என் சந்தேகம் ஒன்றிற்கு இவ்வாறு பதில் சொன்னார் தருமராஜ்: "திமுக இல்லையென்றால், பெரியார் இன்னொரு அயோத்திதாசர்; அதே போல, பெரியார் இல்லையென்றால், திமுக இன்னொரு பாஜக."
இப்போது நூலை வாங்கிப் படிக்க வேண்டும் என்ற உந்துதல் கிடைத்திருக்குமே! தமிழகத்தின் தலித், திராவிட மற்றும் வலதுசாரிச் சிந்தனையாளர் (அப்படியொன்று இருக்குமாயின்) என அனைத்துத் தரப்பினரும் வாசிக்கவும் விவாதிக்கவும் வேண்டிய நூல் இது. கிழக்கு பதிப்பக வெளியீடு.
Published on December 01, 2019 20:00
November 14, 2019
Pen to Publish - 2019: சில முக்கியச் செய்திகள்
(1)
சில தொழில்நுட்பக் காரணங்களால் போட்டிக்கு வந்துள்ள படைப்புகளைப் பட்டியலிடும் பக்கம் கடந்த பத்து தினங்களாகச் சரிவரப் புதுப்பிக்கப்படவில்லை என அமேஸான்காரர்கள் சொல்கிறார்கள். விரைவில் சரி செய்யப்படுமென்றும்.
ஆனால் அதனால் எவ்விதத்திலும் படைப்புகளின் வெற்றி வாய்ப்பு பாதிக்கப்படாது. அந்த பக்கத்தின் பயன் மூன்று தாம்: 1) போட்டிக்கு நம் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டதா என எழுத்தாளர் உறுதி செய்து கொள்ள. 2) போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை போட்டியாளர்கள் பார்வையிடலாம்; அதைக் கொண்டு சகப் படைப்புகளை அறிந்து நம் சந்தைப்படுத்தல் அல்லது உள்ளடக்க உபாயங்களைத் தீர்மானிக்கலாம். 3) வாசகர்களுக்கு போட்டிக்கு வந்திருக்கும் படைப்புகளை ஒரே இடத்தில் காணும் வாய்ப்பு. ஆனால் பொதுவாய் இப்படி வந்து பார்த்து, வாங்கும் வாசகர்கள் நானறிந்த வரை மிக மிக மிகக் குறைவு.
உண்மையாகவே போட்டிக்கான எல்லாத் தகுதிகளையும் உங்கள் படைப்பு பூர்த்தி செய்திருந்தால் (குறிப்பிட்ட ஹேஷ்டேக், கிண்டில் செலக்ட், பதிப்புத் தேதி, சொல் எண்ணிக்கை மற்றும் உள்ளடக்கக் கட்டுப்பாடு) அது போட்டியில் தானாகவே இணைந்திருக்கும். (அவற்றை மட்டும் ஒன்றுக்கு இரண்டு முறை சரி பார்த்து விடுங்கள்.) அதனால் பட்டியலில் படைப்பு இன்னும் வராத போட்டியாளர்கள் எவ்வகையிலும் கவலையுற வேண்டியதில்லை. ஆக வேண்டிய காரியங்களைப் பார்க்கலாம்.
(2)
பாலியல்தன்மை அதிகம் கொண்ட படைப்புகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. படைப்பு அப்படியான அளவு பாலியல்தன்மை கொண்டதா இல்லையா என்பதையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள். இதைப் போட்டியின் விதிமுறைகளில் கொட்டை எழுத்துக்களில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கிறார்கள் (https://www.amazon.in/l/15883392031).
"SPONSOR RESERVES THE RIGHT IN ITS SOLE AND UNFETTERED DISCRETION TO DISQUALIFY AT ANY TIME ANY ENTRY CONTAINING OBSCENE, OFFENSIVE, PORNOGRAPHIC OR SEXUALLY EXPLICIT MATERIAL, OR LIBELOUS, DISPARAGING, INFRINGING OR OTHER INAPPROPRIATE CONTENT OR SUBJECT MATTER (AS DETERMINED BY SPONSOR IN ITS SOLE DISCRETION)."
(3)
படைப்புக்கான அமேஸான் பக்கத்தில் கமெண்ட் (Customer Reviews எனப் பாடம்) தமிழில் போட முடியவில்லை என்ற வருத்தம் பல வாசகர்களுக்கு (அதனால் படைப்பாளிகளுக்கும்) இருக்கிறது. அமேஸானில் கமெண்ட்களின் உள்ளடக்கம் தகுதியற்றதாக (உதா: ஆபாசம், தனிபட்ட தாக்குதல், பொய்கள், சட்டத்துக்குப் புறம்பானவை, விளம்பரங்கள், உள்நோக்குடையவை, பொருளுக்கு நெருங்கியவர்கள் அல்லது எதிரிகளின் கமெண்ட் முதலியன) இருக்கலாகாது என உறுதி செய்ய விரும்புகிறார்கள் என்பதால் அவை மென்பொருள் நிரல்கள் மூலம் மட்டுறுத்தப்படுகின்றன. இப்போதைக்கு ஆங்கிலத்தில் மட்டுமே அதைச் செய்கிறார்கள் என்பதால் தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் கமெண்ட் செய்ய அனுமதிப்பதில்லை. இது மின்னூல்களுக்கு மட்டுமானதல்ல; அமேஸானில் எல்லாப் பொருட்களுக்கும் இதே தான் நிலை. எதிர்காலத்தில் இது பிராந்திய மொழிகளுக்கும் விரிவாக்கப்படக்கூடும். அதுவரை வாசகர்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் கமெண்ட் செய்ய முடியும்.
(4)
அமேஸானில் மின்னூல் உள்ளிட்ட எந்தப் பொருளுக்கும் எல்லோரும் கமெண்ட் எழுதி விட முடியாது. அதற்குச் சில கட்டுப்பாடுகள் வைத்திருக்கிறார்கள். உங்கள் அமேஸான் கணக்கில் கடந்த ஓராண்டில் குறைந்தபட்சம் ரூ.1500க்கு பொருட்கள் வாங்கி இருக்க வேண்டும் (கூப்பன், ப்ரோமோ கோட் போன்றவை பயன்படுத்தாமல்). அப்படியான கணக்கிலிருந்து மட்டும் தான் கமெண்ட் இட முடியும். போலவே ஸ்டார் ரேட்டிங் தருவதும் நேரடியாகக் கூட்டி சராசரியைக் காட்டுவதில்லை. அதற்கென மெஷின் லேர்னிங் முறைகளின் படி கணக்கிடப்படும் (சமீபத்திய ரேட்டிங்கிற்குக் கூடுதல் மதிப்பு, நிஜமாகவே அமேஸானில் அப்பொருளை வாங்கியவர் எழுதியிருந்தால் கூடுதல் மதிப்பு, ரேட்டிங்கின் அசல்தன்மையை முன்னிட்டு எனப் பலப்பல உள்ளீடுகளின் அடிப்படையில்).
*

Published on November 14, 2019 04:57
October 28, 2019
சக எழுத்தாளர்களுக்கு ஒரு திறந்த மடல்
தமிழ் எழுத்தாள நண்பர்களுக்கு,
வணக்கம்.
அமேஸான் என்ற பன்னாட்டு நிறுவனம் தமிழில் எழுதுபவர்களுக்கென ஒரு போட்டியை நடத்துகிறது. அதன் மின்னூல் களமான KDP-யில் பதிப்பிப்போருக்கு. பெயர் Pen to Publish - 2019. இது இரண்டாம் ஆண்டு. இதில் கவனிக்க வேண்டியது இப்போட்டியில் இணைக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி தமிழ் தான். இதன் பொருள் இங்கே வாசக எண்ணிக்கை அதிகம் என்பது. அதாவது தமிழ் மொழியில் மின்னூல்களின் விற்பனை ஆங்கிலத்துக்கும், இந்திக்கும் அடுத்தபடி இருக்கிறது என்பதாய்ப் புரிந்து கொள்ளலாம். இன்று தமிழில் எழுதுவோருக்கு கிண்டில் என்பது ஒரு மகத்தான திறப்பு. பதிப்பகம், விநியோகஸ்தர்கள், கடைகள், புத்தகக் காட்சி என எந்த இடைத்தரகும் இன்றி நேரடியாய் வாசகர்களை அடையும் வழி. நேராய் ராயல்டியை வாங்கிச் சட்டைப் பையில் போட்டுக் கொள்ள எளிய மார்க்கம்.
அதன் காரணமாகவே நான் கிண்டிலில் என் நூல்களை வெளியிடுகிறேன். பா.ராகவன், இரா. முருகன் உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களும் வெளியிடுகிறார்கள். விமலாதித்த மாமல்லன் மூத்த / மறைந்த எழுத்தாளர்களை கிண்டிலுக்குக் கொணரும் மரியாதைக்குரிய முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தினம் ஏதேனும் ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் நம்பிக்கையுடன் கிண்டிலில் காலடி எடுத்து வைக்கிறார்.
இக்கடிதத்தை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை Pen to Publish - 2019 என்ற இப்போட்டிக்கு தமிழில் நீள்படைப்புப் பிரிவில் 30 படைப்புகளும், குறும்படைப்புப் பிரிவில் 57 படைப்புகளும் காணக் கிடைக்கின்றன. இதில் எனக்குத் தனிப்பட்ட முறையில் இரண்டு உறுத்தல்கள்: 1) போட்டி தொடங்கி கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் நிறைவடைந்த நிலையில், இன்னும் அதே அளவு கால இடைவெளி தான் போட்டி முடியவும் மிச்சமிருக்கிறது என்ற சூழலில் இந்த எண்ணிக்கை மிகக் குறைவு. 2) தமிழின் புகழ் பெற்ற மற்றும் திறமையான எழுத்தாளர்களின் படைப்புகள் இப்பட்டியலில் இப்போதைக்கு அவ்வளவாய்க் காணக் கிடைக்கவில்லை. போட்டி புதியவர்களுக்கானது மட்டுமல்ல; முன்னோடிகள் உள்ளிட்ட எல்லாத் தரப்பினருக்குமானது எனும் போது இது ஓர் இடைவெளி என்றே படுகிறது.
அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி பற்றி ஜெயமோகன் சுமார் ஒரு மாதம் முன் ஓரிரு கட்டுரைகள் அவரது தளத்தில் எதிர்மறையாய் எழுதியிருந்தார். நான் போட்டியின் நடுவராக மட்டும் இருந்திருந்தால் அது பற்றிய என் கருத்துக்களை முன்வைத்திருக்க முடியும். ஆனால் நான் அமேஸான் நிறுவன ஊழியனாகவும் இருக்கிற சூழலில் அதைத் தவிர்க்க வேண்டியவன் ஆனேன். தவிர, அது அவரது புரிதல், அனுபவம் மற்றும் நிலைப்பாடு. அதைச் சொல்ல அவருக்கு அத்தனை சுதந்திரமும் உண்டு. ஆனால் அதைத் தொந்தரவு செய்யாமல் பொதுவாக அது பற்றிச் சில கருத்துக்களைப் பகிர்வதில் பிழையில்லை என நினைக்கிறேன். ஆக இது அவருக்கான பதில் அல்ல.
1) அமேஸானில் மின்புத்தகம் பதிப்பிப்பது தீட்டு அல்ல. தமிழின் அத்தனை எழுத்தாளர்களும், அதாவது தன் எழுத்து வாசகரிடையே பரவலாக வேண்டும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணும் அத்தனை எழுத்தாளர்களும் கிண்டில் வந்தே ஆக வேண்டும். அது காலத்தின் கட்டாயம். என் கணிப்பு இது: அடுத்த ஐந்தாண்டுகளில் தமிழின் பொருட்படுத்தத்தக்க வாசகர்கள் அனைவரும் கிண்டில் வந்திருப்பார்கள்; அதற்கடுத்த ஐந்தாண்டுகளில் தமிழின் ஒட்டுமொத்த வாசகர்களும் கிண்டில் வந்திருப்பார்கள். அதனால் அத்தனை லேசில் யாரும் கிண்டிலைப் புறந்தள்ளி விட முடியாது. நீங்கள் இன்றே கிண்டில் வருகிறீர்களா, சில ஆண்டுகள் கழித்தா என்பது தான் வித்தியாசம். சீக்கிரம் வருவது நல்லது என்பதை நான் விளக்க வேண்டியதில்லை. (ஜெயமோகனின் பெரும்பாலான நூல்கள் கிண்டிலில் கிடைக்கின்றன என்பதையும் கவனிக்கலாம். பட்டியல் இங்கே.)
2) அடுத்து இந்தப் போட்டி. இதில் வெற்றி பெறும் படைப்புகள் தரமற்றவையாக இருக்கும் என்ற பிம்பமே தவறானது என நினைக்கிறேன். சென்ற ஆண்டு தமிழில் வெற்றி பெற்ற படைப்புகள் இரண்டையுமே நான் வாசிக்கவில்லை. அதனால் அவற்றைப் பற்றி நான் கருத்துக் கூற முடியாது. ஆனால் சென்ற ஆண்டு நடுவராய் இருந்த இரா.முருகன் முதல்தர எழுத்தாளர் மற்றும் ஆழமான வாசகர். அவர் நல்ல படைப்பு ஒன்றையே தேர்ந்தெடுத்திருப்பார் என நம்புகிறேன். தவிர, ஒரே ஆண்டு தான் தமிழில் இந்தப் போட்டி நடந்திருக்கிறது. அதை வைத்தே இப்போட்டியின் தரம் பற்றி முத்திரை குத்துவது நியாயமே இல்லாத செயல். இந்த ஆண்டு பா. ராகவனும் நானும் இப்போட்டிக்கு நடுவர்கள். எந்தச் சமரசமும் இன்றி தரமான படைப்பைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் எனப் பேசியிருக்கிறோம். ஆனால் அதில் எங்களுக்கு ஓர் எல்லை இருக்கிறது. முதல் சுற்றில் விற்பனை மற்றும் வாசக மதிப்பீட்டின் அடிப்படையில் வடிகட்டப்படும் முதல் ஐந்து படைப்புகள் மட்டுமே (ஒவ்வொரு பிரிவிலும்) நடுவர்களாகிய எங்களுக்கு அனுப்பப்படும். ஆக, அந்த வட்டத்துள் நின்று தான் எங்கள் தேர்ந்தெடுப்பு நிகழ முடியும். ஆக, நல்ல படைப்பு எழுதுவதுடன் அதை முறையாகச் சந்தைப்படுத்தவும் வேண்டும். இப்போதைக்கு இணைய திராவிட எழுத்தாளர்கள் குழாம் இதைச் சிறப்பாகச் செய்கிறார்கள். மற்றவர்களும் இதைச் செய்ய வேண்டும். அப்போது தான் எல்லாத் தரப்பிலிருந்தும் நூல்களை இறுதிப் போட்டிக்கு வர வைக்க முடியும். நல்ல வாசகர்களும் போட்டிக்கு வரும் தரமான படைப்புகளை வாங்கியும், வாசித்து மதிப்பீடு செய்தும் அவை இறுதிச் சுற்றில் நுழைவதற்கான வாய்ப்பை அதிகரிக்க வேண்டும். இது ஒரு பெரும் கூட்டுச் செயல்பாடு தான்.
3) பிரபல எழுத்தாளர்களுக்கு இப்போட்டியில் கலந்து கொள்ள மனத்தடை இருக்கலாம். அவர்களுக்குச் சில விஷயங்கள் சொல்ல விரும்புகிறேன். ஏழெட்டு ஆண்டுகள் முன் அசோக மித்திரன் அமரர் கல்கி நினைவு சிறுகதைப் போட்டியில் கலந்து கொண்டு முதல் பரிசு வாங்கினார். கல்கியில் வெளியிடப்படுவது எல்லாம் தூய இலக்கியப் படைப்புகளா என்ன? அதன் நிறுவனரான கல்கியே இலக்கியவாதி என நவீன எழுத்தாளர்களால் ஒப்புக் கொள்ளப்படவில்லை. ஆனாலும் அசோகமித்திரனுக்கு அந்த இதழ் நடத்தும் போட்டியில் கலந்து கொள்ள எந்த மனத்தடையும் இல்லை. இது நடந்த சமயத்தில் தமிழின் மிக மூத்த எழுத்தாளர் அவர்; நொபேல் பரிசு வாங்கத் தகுதி வாய்ந்த தமிழ் எழுத்தாளர் எனப் பேசப் பட்டுக் கொண்டிருந்தவர். ஆனால் எந்தத் தயக்கமோ கூச்சமோ இன்றி பொதுவாய் இளையோருக்கானதாய்க் கருதப்பட்ட போட்டியில் கலந்து கொண்டார். அது நல்ல விஷயம். ஜெயமோகனின் முதல் நாவலான ரப்பர் அகிலன் நினைவுப் போட்டியில் பரிசு பெற்றது. அகிலனை ஒரு நல்ல எழுத்தாளராக எப்போதுமே ஜெயமோகன் ஒப்புக் கொண்டவரில்லை. ஆனால் அவர் பெயரிலான ஒரு போட்டியில் கலந்து கொள்ள அவருக்கு எந்த மனத்தடையும் இருக்கவில்லை. போலவே ஈராண்டு முன் நடந்த தினமணி சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் அழகியசிங்கர் கலந்து கொண்டு ஆறுதல் பரிசு பெற்றார். இப்படியான முன்னோடிகளிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டாமா? ஆக, உங்கள் பிரபல்யம் அல்லது இலக்கிய ஸ்தானம் ஒரு பொருட்டே இல்லை. நீங்கள் போட்டியில் கலந்து கொள்ள விரும்பினால் கலந்து கொள்வதே நல்லது. ரூபாய் ஐந்து லகரம் என்பது சிறிய தொகை அல்ல. தமிழின் வேறெந்தப் போட்டியின் பரிசுத் தொகையும் இதன் பக்கத்தில் கூட வர முடியாது. அதை வெல்ல உங்களுக்குத் தகுதி இருப்பதாக உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் களத்தில் இறங்கி மோதிப் பார்ப்பதே அழகு. Winners never quit and quitters never win என்பதை மறக்க வேண்டாம்.
4) ஆக, இந்தப் போட்டியில் கலந்து கொண்டால் நம் பற்றிய பிம்பம் கெட்டுப் போகும் என நினைத்து அஞ்ச வேண்டியதில்லை. நான் அமேஸான் நிறுவன ஊழியனாய் இல்லாமல் இருந்திருந்தால் கடந்த ஆண்டு நிச்சயம் கலந்து கொண்டிருப்பேன், இந்த ஆண்டு கன்னித் தீவு நாவலைக் கூட அனுப்பி வைத்திருப்பேன். இப்போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்ற ரகசிய இச்சையுடன் இருக்கும் சிலபல எழுத்தாளர்கள் பெயர்களைக் காற்றுவாக்கில் கேள்விப்படுகிறேன். தயங்காமல் கலந்து கொள்ளுங்கள் என்பதே என் வேண்டுகோள். அவ்வளவு கௌரவம் பார்த்தால் புனைப்பெயரில் கூட எழுதுங்கள். (ஆனால் வங்கிக் கணக்கு, PAN போனற விவரங்கள் உண்மையாய் இருக்க வேண்டும்.)
5) கிண்டில் போட்டி பற்றி தமிழ்ச் சூழலில் திணிக்கப்பட்டிருக்கும் அந்த எதிர்மறைப் பிம்பத்தை உடைக்கவே நான் விரும்புகிறேன். அதற்கு ஊர் கூடித் தேர் இழுத்தால் தான் ஆயிற்று. அதன் முதல் படியாக புதிய எழுத்தாளர்கள் மட்டுமின்றி தமிழ் எழுத்துலக ஜாம்பவான்களும் இதில் கலந்து கொள்ள வேண்டும். ஓராண்டில் உருவாக்கப்பட்ட பிம்பத்தை அடுத்த ஆண்டு உடைக்க முடியாதா என்ன! ஆண்டுதோறும் தமிழின் சிறந்த நாவல் அல்லது சிறுகதைத் தொகுதி அல்லது கவிதைத் தொகுதி இப்போட்டியில் கலந்து கொண்டு வென்று கொண்டிருந்தால் எப்படி இருக்கும் எனக் கற்பனை செய்து பாருங்கள். தக்கது வெல்லவில்லை என்று புகார் சொல்லிக் கொண்டிருப்பதை விட தக்கது ஜெயிக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்பது தானே முறை! முந்தைய தலைமுறை போல் இல்லை இத்தலைமுறை வாசகர்கள். அப்போது வெகுஜன எழுத்து, சீரிய(ஸ்) இலக்கியம் எனத் திட்டமான பிரிவினை இருந்தது. கடந்த பத்தாண்டுகளில் அது மெல்ல மெல்ல அழிந்து விட்டது. இப்போது வெகுஜன இதழான ஆனந்த விகடன் இலக்கியவாதிகளின் சிறுகதைகளைத்தான் வெளியிடுகிறது. இன்று பெரும் வாசகர்களைக் கொண்டவர்களான ஜெயமோகனும், எஸ்.ராமகிருஷ்ணனும், சாரு நிவேதிதாவும், மனுஷ்ய புத்திரனும், பெருமாள்முருகனும், பா.ராகவனும் சீரியஸ் எழுத்தாளர்கள் தாம். அப்படி இருக்கும் போது ஏன் அமேஸான் போட்டி வெகுஜன படைப்புகள் மட்டுமின்றி நல்ல இலக்கியங்களையும் அடையாளங்காட்டும் களமாக முடியாது? மேடை கோணல் எனச் சொல்லும் முன் ஆடிப் பார்க்கலாம் தானே! அதில் உண்மையிலேயே இழப்பதற்கு உங்களுக்கு ஒன்றும் இல்லை.
எனக்கு இணையம் தெரியாது, கிண்டில் தெரியாது, எல்லாம் தாண்டி சந்தைப்படுத்துதல் பற்றிச் சுத்தமாய்த் தெரியாது என்றெல்லாம் சொல்பவர்களுக்கு: இது பற்றி நானும் பா. ராகவனும் தொடர்ந்து எழுதி வருகிறோம். விமலாதித்த மாமல்லன் கிண்டிலில் மின்னூல் பதிப்பிப்பது பற்றி தனி கிண்டில் நூலே எழுதி வெளியிட்டிருக்கிறார். இவை போக, எழுத்தாளர்களுக்கு ஒரு சிறுபயிற்சி வகுப்பு போல் நடத்தலாமா என யோசித்துக் கொண்டிருக்கிறோம். அது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
ஆக, பிரபல எழுத்தாளர்களே, நீங்களும் இப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள். எப்படி ஒரு புதிய எழுத்தாளருக்கு இது ஒரு திருப்புமுனையாய் இருக்குமோ அதே போல் உங்களுக்கும் இருக்கலாம். ஆம், எழுதி லகரத்தில் சம்பாதிப்பது என்பது நிஜமாகவே திருப்புமுனை இல்லையா, நண்பர்களே?
வாருங்கள். எழுதுங்கள். வெல்லுங்கள்.
- CSK
*
தொடர்புடைய பதிவுகள்:
http://www.writercsk.com/2019/09/pen-to-publish-2019.html
http://www.writercsk.com/2019/09/blog-post.html
http://www.writercsk.com/2019/09/blog-post_15.html
http://www.writercsk.com/2019/09/pen-to-publish.html

Published on October 28, 2019 12:09
October 12, 2019
புத்தம் புதுமைப் பெண்
சுதந்திரமென்பது
புணர்தலல்ல;
புணர மறுத்தல்.
‘பரத்தை கூற்று’ என்ற என் முதல் கவிதைத் தொகுப்பின் முதல் கவிதை இது. ஒரு பாலியல் தொழிலாளியின் கூறுமொழி இது. எழுதிப் பதினைந்தாண்டுகள் இருக்கும். இன்றும் இக்கருத்தைச் சொல்வதற்கான தேவை அப்போதை விடவும் வலுவாகவே இருக்கிறது என்பதைத் தான் ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் உணர்த்துகிறது.

‘நேர்கொண்ட பார்வை’ என்பது பாரதியின் புதுமைப்பெண் கவிதையில் வரும் சொற்றொடர். இது இப்படத்துக்கு மிகப் பொருத்தமான தலைப்பு. யார் இதைத் தேர்ந்தெடுத்திருந்தாலும் அவர் நம் வணக்கத்துக்குரியவர். “நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும் / நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்” என்று புதுமைப்பெண்ணை அடையாளம் சொல்கிறான் பாரதி. அதற்கு முன்பாக வரும் வரிகள் தாம் அக்கவிதையை இப்படத்துடன் நெருக்கமாக்குகின்றன: “குலத்து மாதர்க்குக் கற்புஇயல்பாகுமாம் / கொடுமை செய்தும் அறிவை அழித்தும்அந் / நலத்தைக் காக்க விரும்புதல் தீமையாம்”. அதாவது பெண்ணுக்குக் கற்பென்பது இயல்பான குணம். அவளுக்குக் கொடுமை செய்தும், கல்வியைத் தடுத்தும் கற்பை நிலைநாட்டுவது தவறு என்கிறார். பெண்களை கோணலான பார்வையில் அல்லாமல் நேர்கொண்ட பார்வையில் பார்க்க வேண்டும் என்றும் சொல்வதாகக் கொள்ளலாம்.
‘சதுரங்க வேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்கிற இரண்டு அருமையான சொந்தப் கதைகளுக்குப் பிறகு ஹெச். வினோத் இயக்கி இருக்கும் ஒரு மறுஆக்கப்படம் இது.
Courtroom Drama எனப்படும் நீதிமன்ற உணர்ச்சிகரம் தமிழ் சினிமாவுக்குப் புதிதல்ல. கலைஞரின் எழுத்திலான ‘பராசக்தி’யில் தொடங்குகிறது அது. அதன் நாயகன் சிவாஜி அதன் பிறகு அப்படியான நிறைய படங்களில் நடித்திருக்கிறார். எஸ்ஏ சந்திரசேகரும் இத்திசையிலான பல படங்களை இயக்கி இருக்கிறார். 1980களில் கலைஞர் மீண்டும் ‘பாசப் பறவைகள்’ எழுதினார். சமீபத்தில் வந்த ‘மனிதன்’ வரை பல உதாரணங்கள் சொல்லலாம். ‘நேர்கொண்ட பார்வை’யும் நெடிய பட்டியலில் தன்னை இணைத்துக் கொள்கிறது. இதன் இரண்டாம் பகுதி முழுக்கவே நீதிமன்றக் காட்சிகள் தாம்.
கலவியில் பெண்ணின் சம்மதம் (Consent) என்பது பற்றிய சிந்தனை நம் கலாசாரச் சூழலில் மிகக் குறைவு, அதுவும் தமிழ் சினிமாவில் இல்லவே இல்லை எனலாம். இங்கே பெண்ணைப் பின்தொடர்ந்து தன்னைக் காதலிக்கச் சொல்லி வற்புறுத்தித் தொந்தரவு செய்வது தான் நாயகத்தனம் (Heroism). அதாவது பெண்ணுக்கு எப்போதும் மனதின் உள்ளே அடியாழத்தில் காதல் இருக்கும், தயக்கமின்றி அதைத் தோண்டி வெளியே எடுக்க நாயகன் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்பதே இங்கே திரைப்படங்கள் இளைஞர்களுக்கு காலாகாலமாய் ஆழ்மனதில் போதிக்கும் நீதி.
ஒரு பெண் கலவி வேண்டாம் என்று சொன்னால் மீறி அவளைத் தொடக்கூடாது என்பது தான் படம் சொல்லும் ஒற்றை வரி (‘No’ means No). அது சினேகிதி, காதலி, மனைவி, பாலியல் தொழிலாளி என யாராக இருந்தாலும் சரி. அதே போல், ஒரு பெண்ணின் பூர்வீகம், ஆடை, ஒப்பனை, வேலைக்குப் போவது, வேலையின் இயல்பு, தனியே அறையெடுத்துத் தங்கியிருப்பது, பணத்தேவை இருப்பது, குடிப்பது, இரவில் ஊர் சுற்றுவது, பொதுவிடங்களில் நடனமாடுவது, ஆண் நண்பர்களுடன் பழகுவது, அவர்களுடன் சிரித்தும் தொட்டும் பேசுவது, பாலியல் நகைச்சுவைகள் பகிர்வது, ஒருவருடன் (அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டோருடன்) உடலுறவில் இருப்பது என எந்த விஷயமும் அந்தப் பெண்ணைப் பாலியல்ரீதியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்று ஆண்களும், அப்பெண் பாலியல் ஒழுக்கமற்றவள் என சமூகமும் நினைத்துக் கொள்ளப் போதுமான சான்றுகள் அல்ல என்று சொல்கிறது. அந்தப் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் தொந்தரவுகளை “அப்படியான பெண்களுக்கு இப்படித்தான் நடக்கும்” என்று கடக்கக்கூடாது, அவர்களும் இங்கே பாதுகாப்புடன் வாழச் செய்வதே ஒரு முன்னேறிய, நாகரிக சமூகத்துக்கு அடையாளம் என்பதையும் வலியுறுத்துகிறது.
‘நேர்கொண்ட பார்வை’ பேசும் விஷயம் முக்கியமானதும், அவசியமானதும் என்பதில் மாற்றுக் கருத்தே இல்லை. ஆனால் அதைத் தெளிவாகச் சொல்லவில்லை என்றே கருதுகிறேன். Subtle-ஆகச் சொல்கிறேன் பேர்வழி என்று குழப்பி வைத்திருப்பது ஒரு பக்கம். இன்னொரு புறம் திரைக்கதையின் தேவையற்ற சிடுக்குகள் வழியாகப் பல பக்கவிளைவுக் கருத்துக்களையும் திணித்து விடுகிறது. அதனால் தான் வலியுறுத்த வந்த கருத்துக்கு நியாயம் செய்யவியலாமல் தடுமாறுகிறது. அந்தப் போதாமைகள் இப்படத்தை ஓர் ஆரம்ப முயற்சி என்ற அளவில் மட்டும் வரவேற்க வைக்கின்றன.
கதை என்பதை விட தொடர்நிகழ்வுகளின் தொகுப்பு என்று தான் இப்படத்தைக் காண முடிகிறது. ஒன்றாக அறையெடுத்துத் தங்கியிருக்கும் மூன்று பெண்கள் ஓர் இரவில் புதிதாய் அறிமுகமான ஆண்களுடன் ஒரு ரெஸார்ட்டில் உணவு கொள்ளவும், மது அருந்தவும் என நட்புப் பாராட்டும் சூழலில், திடீரென எதிர்பாராத விதமாக அந்த ஆண்களால் பாலியல் உறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும் போது அவர்களைத் தாக்கி விட்டு அந்த மூன்று பெண்களும் தப்பித்து வருவதிலிருந்து படம் தொடங்குகிறது.
நேர்கொண்ட பார்வையில் சில நெருடல்கள் இருக்கின்றன. கருப்பு வெள்ளையாகக் கதாபாத்திரங்களை வடிவமைத்திருக்கிறார்கள். உதாரணமாக இதில் வரும் ஆண்கள் அரசியல் செல்வாக்கு கொண்ட, பணக்கார இளைஞர்கள். செய்த தவறை மறைக்க சம்மந்தப்பட்ட பெண்ணைக் காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் (Molestation) செய்யும் வில்லன்கள் இவர்கள். அவர்களின் வழக்குரைஞர் அப்பெண்களை நீதிமன்றத்திலேயே ஆபாசமாக இழித்தப் பேசுபவர். போலீஸ்காரர்களோ (அதுவும் பெண் காவலர்கள்) கண்மூடித்தனமாய் அவர்களுக்கு ஆதரவாய் நடக்கிறார்கள். ரெஸார்ட்காரர்களுக்கும் வேறு வழியில்லை. இவையெல்லாம் மசாலா சினிமாத்தனமாக இருக்கிறது. அந்தப் பெண்களின் மீது நம் இரக்கத்தைச் சுரண்ட இச்சூழல்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த மாதிரி மிகை நாடகத்தனங்கள் இல்லாமலே பார்வையாளன் அப்பெண்கள் மீது ஆதரவு கொள்ளும்படி படத்தை எடுப்பதே சரியானது, தெளிவானது. தற்போதைய வடிவில் பார்வையாளர்கள் பெண்களுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுப்பது பாலியல் மறுப்பு என்ற விஷயத்துக்காகவா அல்லது மேற்சொன்ன வில்லத்தனங்களுக்காகவா எனக் குழப்பம் வருகிறது. அந்தக் குற்றம் இழைத்த பையன்கள் பின்புலங்களற்று இருந்தாலும், அதன் பிற்பாடு பழிவாங்கல் / மிரட்டல் என வேறெந்தக் குற்றத்தில் ஈடுபடாமல் இருந்தாலும் கூட பெண்களை உறவுக்குக் கட்டாயப்படுத்தியது என்ற குற்றத்திற்காகவே தண்டிக்கப்பட வேண்டியவர்கள என்று வைத்திருந்தால் புரிதல் தெள்ளியதாய் இருந்திருக்கும். மாறாகப் படம் பல விஷயங்களைக் கோர்த்துக் கொள்கிறது. குற்றத்தை அதிகப்படுத்தினால் மட்டுமே அதைக் குற்றமென நம்ப வைக்க முடியும் என்கிற அமெச்சூர் எத்தனம். அது படத்தின் குரலைப் பலவீனப் படுத்துகிறது. அது போக, கலவையான புரிதல்களையே மக்களிடம் ஏற்படுத்துகிறது.
அடுத்தது அவ்வப்போது பெண்களுக்கான விதிகள் என்ற பெயரில் அவர்களுக்கான கட்டுப்பாடுகள் மற்றும் பாலியல் சுதந்திரம் / குற்றங்கள் என்பன பற்றிய இன்றைய இந்திய வெகுமக்கள் மனநிலை / பொதுப்புத்தி பற்றி அஜீத் பகடியாகச் சொல்லும் போது அது பார்வையாளர்களால் நகைச்சுவையாகவே உள்வாங்கப்படுகிறதா அல்லது உண்மை என்றே கொள்ளப்படுகிறதா எனப் புரியவில்லை. எனக்கே ஆங்காங்கே குழப்பம் வந்தது என்பதே நிஜம். வசனங்களின் குறைபாடு என்பது தாண்டி அஜீத்தின் உடற்மொழி அல்லது வசன உச்சரிப்புப் போதாமை என்றும் இதைப் பார்க்கலாம்.
ஆண்களுக்கு ஆதரவான அரசுத் தரப்பு வக்கீலின் (வில்லன்) பிழை வாதங்களுக்கும் திரையங்கில் கைத்தட்டு விழுகின்றன எனும் போது இந்தக் குழப்பம் அதிகரிக்கிறது.
என் வரையில் முதல் முறை நிகழும் குற்றத்தை விட இரண்டாம் முறை காரில் மீரா கிருஷ்ணனை (ஷ்ரத்தா) கடத்திச் செய்வதே வன்முறை மற்றும் பாதிப்பின் அடிப்படையில் பெருங்குற்றம். ஆனால் படம் அதைப் பொருட்படுத்துவதே இல்லை. நீதிமன்ற விவாதத்தில் ஒற்றை வசனத்தில் கடக்கிறது. முந்தைய குற்றத்தைத் தான் பிரதானப்படுத்திப் பேசுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணும் அதையே தான் பேசுகிறார். பார்வையாளனுக்கு அது ஒரு மாதிரி துருத்திக் கொண்டு விடுபடலாக எஞ்சுகிறது.
இதில் கோடி காட்டப்பட்டிருக்கும் இன்னொரு விஷயம் - ஆண்கள் தம் வீட்டுப் பெண்கள் அவர்கள் ஒழுக்கமின்மை எனக் கருதும் எதையும் (உதா: குடி) செய்ய மாட்டார்கள் என்று அப்பாவித்தனமாக நம்புவதும், அப்படி இல்லை எனத் தெரிய வரும் போது அதை வெளியே வரவிடாமல் தடுக்க முனைவதும். தமது வீட்டுப் பெண்களுக்கும், மற்ற பெண்களுக்கும் வெவ்வேறு அளவுகோல் வைத்திருக்கிறார்கள். தாம் மற்ற பெண்களுக்கு நிகழ்த்தும் ஒரு குற்றம் அதே சூழலில் வாழும் தம் வீட்டுப் பெண்களுக்கு வர அதிகம் நேரமாகாது என்ற அடிப்படை தர்க்கம் கூட அவர்களுக்கு உறைப்பதில்லை. அல்லது வராது என முரட்டுத்தனமாய் நம்பி வாழ்கிறார்கள்.
எனக்குப் படத்தில் பிடித்த ஒரு விஷயம், பாதிக்கப்பட்ட மீரா கிருஷ்ணன் வர்ஜினா என்றும் எப்போது தன் கன்னித்தன்மையை இழந்தாள் என்றும், எத்தனை பேருடன் அவருக்கு உறவு இருந்தது என்றும் வக்கீலான அஜீத் கோர்ட்டில் கேட்குமிடம் தான். அதில் அவர் தெளிவாக ஒன்றை உணர்த்தி விடுகிறார்: ஒரு பெண் அதற்கு முன் பலருடன் உறவு கொண்டிருந்தாலும் அதையே காரணம் காட்டி ஓர் ஆண் அவளை உறவுக்கு அழைக்கவியலாது. அவ்வளவு ஏன், அதே ஆணே முன்பு அவளுடன் உறவு கொண்டிருந்தாலும் இப்போது அவள் முடியாது என்று சொன்னால் முடியாது தான். பழையதைச் சுட்டிக் காட்டி ‘வா’ என அதட்ட முடியாது. திருமண உறவில் கணவன் மனைவிக்குள் கூட இதையே பொருத்துகிறது படம். இன்று ஒரு சராசரி இந்திய மனைவிக்கு அந்தச் சுதந்திரம் இருக்கிறதா என்ன? புணர விரும்பும் கணவனைத் தடுத்தாட்கொள்ளும் உரிமை அவளுக்கு இருக்கிறதா? என் வரையில் நேர்கொண்ட பார்வை பார்வையாளருக்குத் தரும் முக்கியச் செய்தியும் சிந்தனையும் இது தான்.
படம் பார்த்த சிலர் (அதில் பெண்களும் அடக்கம்) அதிக அறிமுகமற்ற ஆண்களுடன் இரவில் வெளியே செல்வதும், சேர்ந்து குடிப்பதும், அப்போது அரைகுறை ஆடைகள் அணிந்திருப்பதும், ஆபாச நகைச்சுவைகள் கதைத்துச் சிரிப்பதும் நடந்த பிறகு ஆண் கையைப் பிடித்துத் தான் இழுப்பான் என்பது கூடத் தெரியாத அளவு குழந்தைகளா? எனக் கேட்கிறார்கள். அப்படி மட்டையடியாய்ச் சொல்லி விட முடியாது. இதில் சில நுட்பமான விஷயங்கள் இருக்கின்றன. 1) மேற்சொன்ன நான்குமே நட்பின்பாற்பட்ட, நம்பிக்கையின்பாற்பட்ட விஷயங்களாக இருக்க வாய்ப்புண்டு. அதனாலேயே அந்தப் பெண்கள் கலவிக்கு அழைத்தால் இசைந்து விடுவார்கள் எனறு ஒருவர் தீர்மானிக்க முடியாது, கூடாது. 2) ஆனால் அதே சமயம் கலவியில் ஆர்வங்கொண்ட பெண்களும், பணத்திற்காகப் பழகும் பெண்களும் இதே முறைகளில் தான் தம் விருப்பத்தைத் தெரிவிப்பார்கள். அவர்களை ஓர் ஆண் அணுகுவதில் எந்தத் தவறும் இல்லை. முதல் வகைக்கும், இரண்டாம் வகைக்கும் வித்தியாசம் தெரியாது தான் என்றாலும் தன் விருப்பத்தை ஆண் வெளிப்படுத்துவதே குற்றம் என்றாகி விடாது. (சமீப ஆண்டுகளில் இப்படியான சில விருப்ப வெளிப்பாடுகளை மீடூ குற்றங்களாகச் சித்தரித்தார்கள்.) 3) ஆனால் அப்படி அணுகும் போது பெண் மறுத்தால் விட்டு விட வேண்டும். அவளுக்கு அதைத் தன்னுடன் கொள்வதில் விருப்பமில்லை என்று புரிந்து கொண்டு ஒதுங்கிக் கொள்ள வேண்டும். அவனிடம் போனாயே, இரவில் அரைகுறையாய் அலைகிறாயே, நான் வாங்கிக் கொடுத்ததைக் குடித்தாயே, இளித்திளித்துப் பேசினாயே என்றெல்லாம் கேட்டு வற்புறுத்தக் கூடாது. அது ஆபாசம். வல்லுறவின் முதற்படி. கட்டிப்பிடித்தால், கண்ட இடத்தைப் பிசைந்தால், உதட்டில் முத்தமிட்டால் எப்பேற்ப்பட்ட பெண்ணும் ஒப்புக்கொள்வாள் என்பதெல்லாம் ஆதிகால மூட நம்பிக்கை. 4) ஆனால் இந்தியாவில் பெரும்பான்மை ஆண்களுக்கு இது புரியாத அளவில்தான் மனப்பான்மை இருக்கிறது. அதனால் அப்புதல் பரவலாய் இந்தியச் சமூகத்துக்கும், இந்திய ஆண்களுக்கும் வரும் வரையிலும் பொதுவாகப் பெண்கள் ஜாக்கிரதையாக இருப்பதில் தவறில்லை என்பதே என் தனிப்பட்ட கருத்து. நான் வீட்டைத் திறந்து போட்டுப் போனாலும் எவனும் திருடக்கூடாது என்று சொல்வது நியாயமே என்றாலும் நடைமுறையில் திருடர்கள் நிறைந்த ஊரில் வீட்டைப் பூட்டிச் செல்வதே தர்க்கப்படி அறிவார்ந்த செயல்.
இன்னொரு விஷயம் நம் சூழலில் நிலவும் மௌனம் சம்மதம் என்ற கருத்தாக்கம். வேண்டாம் என்பதன் பொருள் வேண்டாம் தான் என்பதைச் சொல்லி விட்டது. ஆனால் பெண்ணின் மௌனத்திற்குப் பொருள் என்ன? அதையும் ஆண் தனக்கு வசதியாக சம்மதம் என்று எடுத்துக் கொள்வதா? இல்லை, அப்படிச் செய்வதும் அயோக்கியத்தனம் தான். சில சமயம் பெண் சூழல் காரணமாக மௌனமாக இருக்க வேண்டி இருக்கும். ஆனாலும் தன் சம்மதமின்மையை தன் உடல்மொழியிலும் முகக்குறிகளிலும் வெளிப்படுத்தத் தான் செய்வாள். ஆண் அதை மறுப்பு / எதிர்ப்பு எனப் புரிந்து கொண்டு தொந்தரவு செய்யாமல் விடுவதே ஒழுக்கம். உதாரணமாய் நகரப் பேருந்தில் இடிபடும் பெண்களில் எத்தனை பேர் குரலுயர்த்தி எதிர்க்கின்றனர்? அதனாலேயே அவர்கள் அதை விரும்பி ஏற்கின்றனர் என்று பொருளாகி விடுமா?
அஜீத் தேவையான அளவு நடித்திருக்கிறார். ஷ்ரத்தாவும், அபிராமியும் சிறப்பு. இதில் நீதிபதியாக நடித்தவர் நடிப்பும் முக்கியமானது (டி.ராமச்சந்திரன் என்றறிகிறேன்). ஜெயப்ரகாஷ் வழமை போல். ரங்கராஜ் பாண்டே தடுமாற்றமாகத் தான் தெரிகிறார்.
இந்திப் பதிப்பான ‘Pink’ பார்த்தவர்கள் எல்லோரும் இப்படத்தை ஒருபடி குறைத்தே பேசுகிறார்கள். இப்படத்தில் அஜீத் மனநல பிரச்சனைக்குச் சிகிச்சை எடுப்பவராகக் காட்டப்படுவதும், பூங்கா சண்டைக் காட்சியும், முன்கதையாகக் காட்டப்படும் வித்யா பாலனும் அவசியமே இல்லை. கதையை அது எந்த வகையிலும் ஓர் அங்குலம் கூட நகர்த்துவதில்லை. ஆனாலும் ரசிகர்களின் நாயக வழிபாட்டுக்குத் தீனி போடும் வகையில் அவற்றைச் சேர்த்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
சமகாலப் பெண்களின் பிரச்சனையைப் பேசி இருக்கும், தனக்கு வாய்ப்பு குறைவான ஒரு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதற்கு நிச்சயம் அஜீத் நம் மரியாதைக்குரியவர்.
கலை மற்றும் தர்க்க இடைவெளிகள் தாண்டி தன் பேசுபொருளுக்காக, அதைக் கோடிக்கணக்கான இளைஞர்களால் பின்பற்றப்படும் முன்னணி நடிகர் ஒருவரை வைத்துச் சொல்லி இருப்பதற்காக முக்கியமான படைப்பாகிறது. வாழ்த்துக்கள்!
***
(செப்டெம்பர் 2019 உயிர்மை இதழில் வெளியானது)
Published on October 12, 2019 00:28
September 28, 2019
Pen to Publish போட்டி: மேலும் சில கேள்விகள்
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி குறித்து சமீப தினங்களில் எனக்கு வந்த மேலும் சில கேள்விகளை இங்கே தொகுத்திருக்கிறேன்:
1) ஒருவர் எத்தனை படைப்புகள் அனுப்பலாம்?
எத்தனை வேண்டுமானாலும்.
2) சென்ற முறை போட்டியில் வென்றோர் இம்முறை கலந்து கொள்ளலாமா?
தாரளமாய்க் கலந்து கொள்ளலாம்.
3) இரண்டு பேர் சேர்ந்து ஒரு நாவலை எழுதினால் அது ஏற்கப்படுமா?
இல்லை. போட்டிக்கான படைப்பை ஒருவர் மட்டுமே எழுதியிருக்க வேண்டும்.
4) நான் இந்தியாவில் வசிக்கவில்லை. போட்டியில் கலந்து கொள்ளலாமா?
சில விதிவிலக்குகள் தவிர, இப்போட்டியில் பங்கு கொள்ள தேசம் ஒரு தடையில்லை. க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர வேறு எந்த நாட்டுக் குடிமகனும், எந்த நாட்டில் வசிப்பவரும் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
5) போட்டிக்கு இது வரை வந்திருக்கும் படைப்புகளைப் பார்ப்பது எப்படி?
தமிழில் நீள்வடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043016031
தமிழில் குறுவடிவுப் பிரிவுக்கு வந்திருக்கும் படைப்புகள்: https://www.amazon.in/b?node=16043019031
மும்மொழிகளிலும் இரு பிரிவுகளிலும் வந்திருப்பவை: https://www.amazon.in/b?node=16030135031
6) போட்டிக்கு வரும் ஒரு படைப்பை அமேஸான் ப்ரைமில் வெப்சீரிஸாக எடுப்பதாகப் போட்டிருக்கிறது. அதைப் பற்றி மேலும் விளக்கம் தர முடியுமா?
இந்தியாவில் மொத்தம் மூன்று மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, தமிழ்) போட்டி நடக்கிறது. இதில் நீள்வடிவில் எழுதப்படும் படைப்புகளில் அதிகபட்சம் ஐந்து இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெறும் (நூல் விற்பனை மற்றும் வாசகர் மதிப்பீட்டின் அடிப்படையில்). ஆக மொத்தம் அதிகபட்சம் 15 படைப்புகள் இந்தியாவிலிருந்து இறுதிச் சுற்றில் இருக்கும். இதே போல் வேறு நாடுகளிலும் நடத்தப்படும் KDP போட்டிகளில் இறுதிச் சுற்றுக்குப் பல படைப்புகள் தேர்வாகும். இவை அனைத்தும் இந்த ப்ரைம் வீடியோ வெப்சீரிஸ் தேர்வுப் போட்டியில் இருக்கும். அமேஸான் ப்ரைமின் உலகளாவிய ஆடியோவிஷுவல் தேர்வுக்குழு இதிலிருந்து ஒரு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும். ஆக, கவனித்துப் பார்த்தால் தமிழில் நீள்வடிவில் இறுதிச் சுற்று வரை வந்த ஒரு படைப்பு ரூ.5 லட்சம் பரிசுத் தொகைக்குத் தேர்வாகாமல் போனாலும் ப்ரைம் வீடியோ போட்டியில் வெல்ல வாய்ப்புண்டு.
7) ஆங்காங்கே 20 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை என்கிறீர்களே, எது என்ன?
தமிழில் மட்டும் இரு வடிவுகள்; ஒவ்வொன்றிலும் மூன்று பரிசுகள். கணக்கிட்டால் மொத்தம் ரூ.7.35 லட்சம் வருகிறது. மும்மொழிகளையும் சேர்த்தால் பதினெட்டு பரிசுகள் வரும். ரூ.22.05 லட்சம். ஒட்டுமொத்தமான இந்தியாவுக்கான அந்தப் பரிசுத் தொகையைத் தான் அமேஸான் விளம்பரங்களில் '20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான பரிசுகள்' என்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
8) ஒருவரின் படைப்புகள் ஒன்றுக்கும் மேற்பட்ட பிரிவில் / மொழியில் பரிசு வெல்ல வாய்ப்புண்டா?
இல்லை. பொதுவாய் ஒருவர் இரண்டு மொழி அல்லது மூன்று மொழியில் நூல்கள் வெளியிட்டு, அவற்றைச் சந்தைப்படுத்தி, விற்க வைத்து, வாசகரிடையே நல்லபிப்பிராயம் ஏற்படுத்தி, இறுதிச் சுற்றுக்குத் தேர்வாகி, கடைசியில் நடுவர்களும் அவற்றையே வெற்றி பெற்ற நூலாகத் தேர்ந்தெடுப்பது என்பது என்வரையில் மிக மிக மிக அரிதான நிகழ்வு. ஆனால் அப்படி ஒருவேளை நிகழ்ந்தால் கூட அவற்றில் ஒரே ஒரு மொழியில் மட்டும் தான் அவருக்குப் பரிசு வழங்கப்படும். ஆக, ஒருவர் ஒரு போட்டியில் தான் பரிசு வெல்ல முடியும். ஆனால் அதே சமயம், ஒருவர் இரு வடிவுகளிலும், மும்மொழிகளிலும் படைப்புகளைப் போட்டிக்கு அனுப்ப எந்தத் தடையும் இல்லை.
9) எனக்கு கிண்டிலில் எப்படிப் பதிப்பிப்பது என்பதில் குழப்பங்கள் இருக்கின்றன. உதவ முடியுமா?
இணையம் பழகி இருந்தால் இது சுலபம் தான். இணையத்திற்கே நீங்கள் புதிது என்றால் இணையப் பரிச்சயம் கொண்ட யாரையாவது உடன் வைத்துக் கொள்ளலாம். கீழ்கண்ட பக்கங்களில் கிண்டில் மின்னூல் செய்வது பற்றி படங்களுடன் கூடிய விரிவான விளக்கங்கள் காணக் கிடைக்கின்றன.
https://kdp.amazon.com/en_US/help/topic/G200635650
https://mfishbein.com/how-to-self-publish-a-book-on-amazon/
10) வங்கிக் கணக்கு மற்றும் PAN கார்ட் முதலிய தகவல்கள் கேட்கிறார்களே, அது கட்டாயமா?
ஆம். புத்தகம் விற்றால் மாதந்தோறும் உங்களுக்குப் பணம் வர வேண்டுமே!

Published on September 28, 2019 08:09
September 21, 2019
ஜன கண மன இந்தியா?
தமிழகப் பால்வளத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.டி. ராஜேந்திர பாலாஜி சொன்னதாக ஒரு வாக்கியம் கடந்த இரு தினங்களாக சமூக ஊடகங்களில் சுற்றலில் இருக்கிறது. "என்னதான் இந்திக்கு எதிர்ப்பு தெரிவித்தாலும் எல்லோரும் தேசிய கீதம் பாடித்தான் ஆகனும்" என்று அவர் விளம்பியதாகச் செய்தி. அவர் அப்படிச் சொன்னது நிஜமா பொய்யா என இதை எழுதிக் கொண்டிருக்கும் இக்கணம் வரை என்னால் உறுதி செய்ய இயலவில்லை என்றாலும் அவர் இத்தகு விஷயத்தைச் சொல்லும் திராணி பெற்றவர் என்பதை முன்னிட்டு அதைப் பற்றிக் கொஞ்சம் பேசலாம் என நினைக்கிறேன்.

தோழர் ஷாலின் மரிய லாரன்ஸ் இந்திய அரசின் அதிகாரப்பூர்வத் தளத்தில் தேசிய கீதம் இந்தியே எனக் குறிப்பிடப்பட்டிருப்பதைச் சுட்டிக் காட்டி இருந்தார்: "The National Anthem of India Jana-gana-mana, composed originally in Bengali by Rabindranath Tagore, was adopted in its Hindi version by the Constituent Assembly as the National Anthem of India on 24 January 1950." (https://www.india.gov.in/india-glance/national-symbols) அதாவது சாசனச் சட்டத்தை உருவாக்க அமைக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை 1950ல் ஜன கண மன பாடலின் இந்தி வடிவத்தைத் தேசிய கீதமாக்கத் தீர்மானித்தது என்கிறது.

தேடிப் பார்த்ததில் குறிப்பிட்ட இந்த வரி இந்திய அரசின் தளத்தில் 2015 வாக்கில் மோடி அரசால் தான் சேர்க்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. அப்போதே அதை எதிர்க்கும் நோக்கில் விளக்கம் கேட்டு இரு வங்காளிகள் ஆர்டிஐ தாக்கல் செய்திருக்கிறார்கள். இந்தி மொழிபெயர்ப்பைச் செய்தது யார்? அதற்கான ஆவணங்கள் எங்கே? மொழிபெயர்ப்பு வடிவம் எங்கே? என்பவை ஆதாரக் கேள்விகள். இது தொடர்பான தகவல்கள் ஏதும் தம்மிடம் இல்லை என மத்திய உள்துறை அமைச்சகம் கை விரித்திருக்கிறது (https://www.anirbansaha.com/wp-content/uploads/2016/05/RTI-Response.pdf). அதே உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் தேசிய கீதம் பாடுவது தொடர்புடைய அதிகாரப்பூர்வ உத்தரவிலும் அது இந்திப் பாடல் எனக் குறிப்பில்லை (https://mha.gov.in/sites/default/files/NationalAnthem%28E%29_2.pdf).
இது பற்றிய என் பொதுவான புரிதல் இப்படி இருக்கிறது: தாகூர் ஒரு பாடல் எழுதுகிறார். 1911ல். மொத்தம் ஐந்து பத்திகள். எழுதியது வங்காளத்தில். சமஸ்கிருதம் கலந்த வங்காளம். இப்படிக் கடன் பெறப்பட்ட சொற்கள் 'தத்சமா' எனப்படும். வங்காளிகளின் பேச்சு மொழியிலிருந்து விலகி நிற்கும் இதை 'சாது பாஷா' என்கிறார்கள். 'ப்ராணநாதா' என்றெல்லாம் வரும் நம் மணிப்பிரவாள நடை போல. அந்தப் பாடலின் முதல் பத்தி மட்டும் "அப்படியே" நம் தேசிய கீதமாக எடுத்துக் கொள்ளப்பட்டது. அதை இந்திக்கு யாரும் மொழிபெயர்க்கவில்லை. அதன் சமஸ்கிருதக் கலப்பால் அது இந்தி போன்ற தோற்றத்தை அளிக்கிறது. (அல்லது பாடலை இந்தியில் ஒலிபெயர்த்து - கவனிக்க: மொழிபெயர்த்து அல்ல; ஒலிபெயர்த்து - நேவநகரி எழுத்துருவில் எழுதியதாலும் குழப்பம் வந்திருக்கலாம்.) மற்றபடி, வரிகள் பெங்காலி தான். சுருங்கச் சொன்னால் தாகூரின் வரிகள் அப்படியே தான் தேசிய கீதமாக இருக்கிறது. இந்தியில் மொழிபெயர்க்கப்பட்டு இல்லை. (இடையில் நேதாஜி முயற்சியில் கேப்டன் அபித் அலி என்பாரைக் கொண்டு உருது கலந்த இந்தியில் ஜன கண மன மொழிபெயர்க்கப்பட்டது. ஆனால் அதற்கும் தற்போதைய தேசிய கீதத்துக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.)
ஒருவேளை இது திட்டமிட்ட சதி இல்லை எனில் இந்தக் குழப்பம் எங்கிருந்து வந்தது? என்சைக்ளோபீடியா ப்ரிட்டானிக்கா ஆஃப் இந்தியாவில் இடம் பெற்றுள்ள தவறான தகவலால் வந்திருக்கலாம். ஐந்து பாகம் கொண்ட இந்தத் தொகுப்பில் இப்படி ஒரு வரி இடம் பெற்றிருக்கிறது: "Adopted by the Constituent Assembly as the national anthem of India on January 24, 1950, the song Jana-gana-mana, in its Hindi version of the first stanza, was originally composed in Bengali by poet Rabindranath Tagore". இது 2008ல் வெளியாகி இருக்கும் நூல். ஒருவேளை இதையே "சிகப்பா இருக்கறவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற அடிப்படையில் சம்மந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் முழுக்க ஆராயாமல் அரசின் தளத்துக்கு எடுத்தாண்டிருக்கலாம். இது நம் சூழலில் ஆச்சரியமோ அதிர்ச்சியோ அற்ற வழமை தான்.
எப்படியாகினும் இதை இப்போதைக்கு இந்தித் திணிப்பின் ஒரு பகுதியாகவே, வரலாற்றைத் திரிக்கும் முயற்சியாகவே பார்க்க வேண்டி இருக்கிறது. அதனால் மறுக்கவும் எதிர்க்கவும் வேண்டியுள்ளது.
***
Published on September 21, 2019 11:22
September 15, 2019
உங்களில் யார் அடுத்த சுஜாதா?
வெகுஜன எழுத்து என்பது ஒரு மொழியின் செழுமைக்கும், அதன் மக்களின் மகிழ்ச்சிக்கும் மிக அத்தியாவசியமானது என்பது என் வலுவான நம்பிக்கை. அதனால் ஒருபோதும் அதை நான் கீழ்மையாக எண்ணியதோ கேலி செய்ததோ இல்லை. (என் எழுத்தே இப்போதைக்கு ஒரு மாதிரி வெகுஜன எழுத்துக்கும் தீவிர இலக்கியத்துக்கும் இடைப்பட்டது தான்.)
ஆனால் அதே சமயம் வெகுஜன எழுத்து என்பது ஏனோதானோ என்றில்லாமல் தரமாக வர வேண்டும், அதில் புதுமைகள் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறேன். மேற்கே அப்படித்தான். ஆக, வெகுஜனப் படைப்பொன்றை எழுதுவது பாவமோ கேவலமோ அல்ல. அதற்கும் நல்ல உழைப்பும், எழுத்து நுட்பமும் தேவை. எல்லோருக்கும் அது சுலபமாய் வாய்த்து விடாது.
அப்படிப் பார்க்கையில் சுஜாதா வெகுஜன எழுத்துக்கு ஒரு மிகச் சிறந்த உதாரணம்.
பதின்மத்திலிருந்து விலகும் ஒரு தமிழ் இளைஞனுக்கு வாசிப்பில் சுஜாதா ஒரு மிகச்சிறந்த ஆரம்பப்புள்ளி. சுலபமான அதே சமயம் கவர்ச்சிகரமான துவக்கம். ஆரம்பத்தில் வாசிப்பதற்கான ஒருவித ஊக்கத்தினை / போதையினை சுஜாதாவின் எழுத்துக்களிலிருக்கும் வாசிப்பின்பம் அளிக்கிறது. அது அலுக்கும் போது நிஜமான தேடலை உடையவன் அங்கிருந்து நிச்சயம் அடுத்த கட்டத்துக்கு நகர்வான். இத்தகைய எளிமையான துவக்கத்தைத் தரக்கூடிய எழுத்து என்றால் தமிழில் பிரதானமாய் சுஜாதாவையே குறிப்பிட வேண்டியிருக்கிறது. ஒருவர் ஆழமான எழுத்துக்களை வந்தடைய சுஜாதா ஒரு மறைமுக மார்க்கம். வாசிப்பின்பத்தை விட வாசிப்பாழம் முக்கியம் என்ற புரிதல் வருவதற்கு ஒருவன் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். அந்த சுண்டியிழுக்கும் துவக்கத்தை குறைந்தபட்சம் அடுத்து வரும் ஐம்பதாண்டுகளில் எந்தவொரு சராசரித் தமிழ் இளைஞனுக்கும் சிறப்பான முறையில் அளிக்க வல்லவை சுஜாதாவின் எழுத்துக்கள் என்பதாகவே எண்ணுகிறேன்.
மாறாக, விபத்தாய் ஆரம்பத்திலேயே சிக்கலான எழுத்தை தன் வாசிப்பாய்த் துவக்கும் ஒரு பக்குவமுறா வாசகன் அதன் வீச்சின் கடுமையில் ஊக்கமிழந்து தன் வாசிப்பை நிறுத்திவிடக்கூடும். (இன்று வணிக இதழ்கள் கூட வெகுஜன எழுத்தைக் கைவிட்டு ஒரு மாதிரி நடுவாந்திர எழுத்தையே முன்வைக்கின்றன.) பதிலாய் அவன் சுஜாதாவில் தொடங்கி மெல்ல ஆழங்களுக்கு வரலாம். அதுவே இயல்பான படிநிலை வளர்ச்சி.
ஆரம்பத்திலேயே முதிர்ந்த நோக்குடன் வாசிப்பைத் தொடங்கும் இளைஞர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் ஒப்பீட்டளவில் அவர்கள் எண்ணிக்கையில் மிகக்குறைந்தவர்கள். அதே போல் சுஜாதாவில் தொடங்கி சுஜாதாவிலேயே முடிந்து விடுபவர்களும் இருக்கிறார்கள். இந்த இரு சாராரையும் தவிர்த்து, இன்னும் தொடக்கம் கிடைக்காத, கிடைத்தால் நல்ல வாசிப்பை நோக்கி நகரக்கூடிய வாசகர்கள் கணிசமானோர் இருக்கிறார்கள். இங்கு தான் சுஜாதாவின் தேவை இருக்கிறது.
இன்று சுஜாதா இல்லை. ஒரு வெற்றிடம் இருக்கிறது. (அவ்வப்போது 'அடுத்த சுஜாதா' என்று யாராவது யாரையாவது பாராட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்றாலும் ஷான் எழுதிய வெட்டாட்டம் தான் எனக்கு சமீபத்தில் நினைவுக்கு வரும் நல்ல வெகுஜன எழுத்தாக இருக்கிறது.) தொடர்ந்து சுஜாதா போல், டான் பிரவுன் போல் தரமான வெகுஜனப் படைப்புக்களை உருவாக்கும் எழுத்தாளர்கள் தேவை. அதற்குத் தான் அமேஸான் Pen to Publish போன்ற போட்டிகள் அவசியம் எனக் கருதுகிறேன். உரிய திறமையும் ஆர்வமும் உள்ளோர் பங்கேற்று அந்த அற்புதத்தை நிகழ்த்திக் காட்ட வேண்டும்.
"உங்களில் யார் அடுத்த சுஜாதா?" என்பது தான் இன்று தமிழகத்தின் அரை மில்லியன் ரூபாய் கேள்வி!

Published on September 15, 2019 06:03
அமேஸான் போட்டி: அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி தொடர்பாய் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் சில:
1) நான் முன்பு வலைப்பூவில் எழுதிய சில பதிவுகளை ரத்து செய்து விட்டு கிண்டிலில் வெளியிட்டால் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படுமா?
2) முன்பு என் நாவலின் சில அத்தியாயங்கள் ஓர் அச்சிதழில் சில அத்தியாயங்கள் வெளியாகின. பின் சில காரணங்களால் நின்றது. அதை முடித்து மின்னூலாக்கி போட்டிக்கு அனுப்பலாமா?
3) எனது ஃபேஸ்புக் பதிவுகளைச் சேர்த்துப் புத்தகமாக்கினால் ஏற்றுக்கொள்ளப்படுமா?
மூன்றுக்கும் பதில் "கூடாது" என்பதே.
போட்டிக்கு அனுப்படும் படைப்பின் எந்தவொரு பகுதியும் அச்சு, மின் என எந்த வடிவிலும் ஏற்கனவே வெளியாகி இருக்கக் கூடாது. அப்படியானவை நிராகரிப்புக்கு உள்ளாகும். இன்றைய தேதியின் தேடல் தொழில்நுட்பத்தில் அதைக் கண்டறிவது சிரமமல்ல. அதனால் பரிசுத்தமான புத்தம் புதிய படைப்புகளை மட்டுமே போட்டிக்கு அனுப்புவீர்.
*
அமேஸான் Pen to Publish 2019 போட்டி பற்றி வரும் இன்னொரு பரவலான கேள்வி: "நான் எழுதி அதை மின்னூலாய்ப் பதிப்பித்து விடுவேன். ஆனால் அது பரவலாக வாசிக்கப்படவும், மதிப்பிடப்படவும் வேண்டும் என்பது போட்டி விதி. அதை எப்படிச் செய்வது?" (தரமாய் எழுதுபவர்கள் கூட கிண்டிலில் சறுக்குமிடம் இதுவே என்பது என் அபிப்பிராயம்.)
மார்க்கெட்டிங் செய்ய வேண்டும் என்பது தான் சுருக்கமான பதில். ரொம்ப தூரம் அலையாமல் உங்கள் சமூக வலைதளச் செல்வாக்கை எப்படி இதற்குப் பயன்படுத்திக் கொள்வது என பாரா ஓர் அற்புதமான பதிவை எழுதி இருக்கிறார்: https://www.facebook.com/raghavan.pa/posts/2425271901133744
போட்டித் தேதிகளை நினைவிற்கொள்வது எளிது. போட்டி ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; பேரறிஞர் தினத்திலிருந்து மின்னூல்களைப் பதிப்பிக்கத் துவங்கலாம்.
*
அமேஸான் Pen to Publish போட்டி பற்றிய இன்னொரு முக்கிய விளக்கம்:
ஏற்கனவே அச்சிதழிலோ, மின்னிதழிலோ, வலைப்பூவிலோ, ஃபேஸ்புக்கிலோ வெளியான படைப்புகளைப் போட்டிக்கு அனுப்பலாமா எனக் கேட்கிறார்கள். கூடாது என்று சொல்லி இருந்தேன். போட்டிக்கு அனுப்பப்படும் மின்னூலின் மொத்தமும் எங்கும் வெளியாகாததாக, பொத்தி வைத்ததாக இருக்க வேண்டும் என்பதை அழுத்தி இருந்தேன்.
ஆனால் இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு விஷயம் இது போட்டிக்கான கட்டுப்பாடு மட்டுமே. போட்டியில் பங்கு பெறாமல் குறிப்பிட்ட போட்டித் தேதிகளோ, வேறெப்போதுமோ அந்த ஏற்கனவே வெளியான படைப்புகளைக் கிண்டிலில் நூலாக வெளியிட எந்தத் தடையும் இல்லை.
*
அமேஸான் Pen to Publish - 2019 போட்டி - மேலும் சில கேள்விகள்.
1) வேறு மொழிகளில் (உதா: ஆங்கிலம்) ஏற்கனவே பிரசுரமானவற்றை (அச்சு, மின் ஏதேனும்) தமிழில் மொழிபெயர்த்துப் போட்டிக்கு அனுப்பலாமா?
கூடாது. படைப்பு அல்லது அதன் பகுதி எந்த மொழியிலும் வெளியாகி இருக்கக்கூடாது.
2) பொதுவெளியில் ஆற்றிய ஓர் உரையை நூலாக்கிப் போட்டிக்கு அனுப்பலாமா?
அனுப்பலாம். வரையறை எழுத்து வடிவுக்கு மட்டும் தான்.
3) நாடகங்களைப் போட்டிக்கு அனுப்பலாமா?
அனுப்பலாம். எந்த வகைப் படைப்பும் ஏற்கப்படும்.
4) குறுவடிவில் ஒரு சிறுகதை இருக்க வேண்டும்; நீள்வடிவில் பல சிறுகதைகள் இருக்க வேண்டும். சரியா?
அப்படியெல்லாம் எந்த வரையறையும் கிடையாது. இதில் சொல்லப்பட்டதற்கு நேர்மாறாக குறுவடிவ நூல் பல சிறுகதைகள் சேர்ந்ததாக இருக்கலாம்; நீள்வடிவ நூல் ஒரே நீண்ட சிறுகதையாக இருக்கலாம். சொற்களின் எண்ணிக்கை மட்டுமே கணக்கு. மற்றக் கட்டுப்பாடுகள் இல்லை.
5) போட்டிக்கு அனுப்பப்படுவது இறுதியில் ப்ரைம் வீடியோவாக எடுக்கத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டுமா?
இல்லை. எழுத்தாளரின் சம்மதத்துக்குப் பின்பே ஒப்பந்தம் எழுதுவார்கள். அப்போது மறுக்கலாம்.
*
அமேஸான் Pen to Publish - 2019 போட்டிக்கு அனுப்பப்பட்ட மின்னூல்களை அச்சு நூலாக ஆக்குவது தொடர்பாகப் பல கேள்விகளை எதிர்கொள்கிறேன். அதற்கு ஒரே பதிலாகச் சொல்லி விடுவது எல்லாவற்றையும் தெளிவாக்கும்.
போட்டிக்கு அனுப்பிய மின்னூலை குறிப்பிட்ட காலம் வரை நீங்கள் அச்சு நூலாகப் பதிப்பிக்கக்கூடாது. வரும் ஜனவரியில் இறுதிச்சுற்றுப் பட்டியல் அறிவிக்கப்படும். அதில் உங்கள் நூல் இல்லையெனில் அப்போது முதல் எப்போது வேண்டுமானாலும் அதை அச்சு நூலாக நீங்கள் விரும்பும் பதிப்பகத்தில் பதிப்பிக்கலாம். இறுதிச் சுற்றுக்குத் தேர்வானோர் மட்டும் மீண்டும் காத்திருக்க வேண்டும். ஃபிப்ரவரியில் வெற்றியாளர் அறிவிக்கப்பட்ட பின் அவர்களும் இதையே செய்யலாம். (ஒருவேளை வெற்றியாளர் ப்ரைம் வீடியோவாக ஆக்க பிற்பாடு தேர்ந்தெடுக்கப்பட்டால் அவரும் சம்மதித்தால் அதற்கான ஒப்பந்தம் தனி.)
அதனால் இப்போது கிண்டிலில் போட்டு போட்டியில் கலந்து கொண்டு விட்டு வரும் ஜனவரி சென்னை புத்தகக் காட்சிக்கு அச்சு நூலாகக் கொண்டு வரலாம் எனத் திட்டமிட வேண்டாம். அப்படி அச்சு நூலாக வந்த பின் அது போட்டியிலிருந்து தகுதி இழக்கும்.
போட்டியில் பங்குபெறாத கிண்டில் நூல்களை அச்சு நூலாக்க எப்போதும் எந்தத் தடையும் இல்லை.
*
நினைவூட்டல்.
அமேஸான் கிண்டில் Pen to Publish - 2019க்கு இன்று முதல் படைப்புகளை அனுப்பத் தொடங்கலாம். சரியாய் 90 நாட்கள் அவகாசம் இருக்கிறது. இந்த இடைவெளியில் ஒரு நாவலைக் கூட புதிதாய்த் தொடங்கி எழுதி முடிக்க முடியும் என்பதே என் அனுபவம். எழுத்தாளர்கள், எழுதுவர்கள், எழுதும் இச்சை கொண்டோர், முன்னொரு காலத்தில் எழுதியோர் என அனைவரும் இப்போட்டியைச் சாக்கிட்டுத் தம் மனதிலிருக்கும் ஒரு படைப்பை எழுதி முடிக்கலாம். 'நேரமே இல்லங்க' எனச் சுயசமாதானம் செய்து கொள்வோருக்கான ஒரு நல்லுந்துதல் இது.
இதில் தகுதியான ஒரு படைப்பு ரூ. 12 லட்சம் (மற்றும் கூடுதல் தொகை) பரிசு கூட வெல்லும் வாய்ப்பிருக்கிறது என்பதை நினைவூட்டுகிறேன். அவ்வகையில் நடுவர் போட்டியாளர்களைக் கண்டு பொறாமையுறும் போட்டி உலகிலேயே இது ஒன்றாகத் தான் இருக்கும் என நினைக்கிறேன்.
எல்லோரையும் பங்கேற்க அழைக்கிறேன்.
***
Published on September 15, 2019 05:59
September 5, 2019
அமேஸான் கிண்டில் Pen to Publish போட்டி - 2019
அமேஸான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்கள் (E-books) வாசிக்க உதவும் கருவி (Device). கருவி வாங்கத் தோதுப்படவில்லை எனில் கிண்டிலின் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஃபோன் செயலிகளிலும் (apps), வலைதளத்திலும் (website) கூட கிண்டில் மின்னூல்களை வாசிக்கலாம். இது வாசக தரப்பு. அந்தப் புறம் எழுத்தாளர்கள் சுயமாய்த் தங்கள் படைப்புகளை மின்னூல்களாக வெளியிடவும் கிண்டில் உதவுகிறது. அதன் பெயர் KDP. கிண்டில் டைரக்ட் பப்ளிஷிங்!
வாசகர்களுக்கு கிண்டிலால் ஏராளச் சகாயங்கள் உண்டு. பணத்தைச் சேமிக்கிறது; குறைந்த இடத்தை அடைக்கிறது. எடுத்துச் செல்வது எளிது; என்ன வாசிக்க வேண்டும் என்பதை முன்பே தீர்மானிக்க வேண்டியதில்லை என்பதால் பயணத்திற்குத் தோது. பெரும் எண்ணிக்கையில் புத்தகங்கள் கிடைக்கின்றன, அதோடு அவற்றைக் கடன் பெறவும் முடியும். கருவியின் தோற்றம் கவர்ச்சிகரமானது என்பதால் அது உங்கள் பற்றிய ஒரு அந்தஸ்தான எண்ணத்தை ஏற்படுத்தும். இறுதியாக, அது ஓர் அறிவுஜீவி பிம்பத்தை உங்களுக்கு அளித்து கூட்டத்திலிருந்து தனித்துக் காட்டும்.
பல வாசகர்கள், கிண்டில் மின்னூல்களை வாசிக்க சில ஆயிரம் செலவிட்டு கிண்டில் ஈரீடர் கருவியை வாங்குவது தான் ஒரே வழி என நினைக்கிறார்கள். அது உண்மையல்ல. கிண்டில் செயலியை உங்கள் ஆன்ட்ராய்ட் மொபைல், டேப்லட், டேப்லட், ஐஃபோன், ஐபேட், மேக் மற்றும் விண்டோஸ் கணினிகளில் இலவசமாகத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளலாம். அல்லது ப்ரவுஸரில் கிண்டில் க்ளவுட் ரீடர் வலைதளத்துக்குச் சென்றும் வாசிக்கலாம். இதன் பிறகு உங்கள் கருவியும் ஒரு கிண்டில் ஈரீடரைப் போலவே செயல்படத் தொடங்கும். மிக எளிது! (ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் - உதா: கண் கூசாது, கவனம் சிதறாது, நீடித்த பேட்டரி, நீர் நுழையாது, உடலுக்கு சொகுசு, பக்கம் திருப்ப பட்டன்கள்.)
எழுத்தாளர்கள் பக்கம் வருவோம். அவர்களுக்கும் கிண்டிலானது நவீனத்தின் திறப்பு. பைசா செலவில்லாமல், அமேஸான் வலைதளத்தில் ஒரு கணக்குத் துவங்கி, சிறிதோ பெரிதோ புத்தகத்தின் சீராக டைப் செய்யப்பட்ட வேர்ட் டாகுமெண்ட் இருந்தால் போதும் KDP-யில் மின்னூலைப் பதிப்பித்து விடலாம். விலையை எழுத்தாளரே நிர்ணயிக்கலாம். சில மணி நேரங்களில் இந்தியா, அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஃப்ரான்ஸ் என உலகம் முழுவதுமுள்ள 13 அமேஸான் தளங்களில் உடனடியாய் விற்பனைக்கு வந்து விடும். அவ்வளவு தான் விஷயம். இனி வாசகர்கள் வாங்கலாம்.
மாதாமாதம் எழுத்தாளரின் வங்கிக் கணக்குக்கு ராயல்டி தொகை வந்து சேர்ந்து விடும் (அதிகபட்சமாய் நூலின் விலையில் 70% வரை கிட்டும்). புத்தகம் விற்பதற்கு மட்டுமல்ல; வாசிக்கப்படுவதற்கும் ராயல்டி உண்டு! கிண்டில் மின்னூல்கள் கள்ளப்பிரதி செய்யப்படுவதற்கான சாத்தியங்களும் குறைவு. அவ்வப்போது நூல்களைச் சலுகை விலையிலும் விற்பார்கள். எழுத்தாளர்களே சில தினங்களுக்கு இலவசமாக நூலை வழங்கும் வசதியும் உண்டு. Kindle Unlimited-ல் வாசகர்கள் கடன் பெற்றுப் படிக்கும் வாய்ப்பையும் வழங்கலாம். எழுத்தாளர்களுக்கான சொர்க்கவாசல் தான் கிண்டில்!
நான் KDP-ஐ விரும்புவதன் காரணம் அது லட்சக்கணக்கான வாசகர்களைச் சென்றடைய எளிமையான, துரிதமான, வெளிப்படையான, முதலீடற்ற, கள்ளப்பிரதிகள் சாத்தியமில்லாத ஒரே மார்க்கமாக இன்று இருக்கிறது. அது எழுத்தாளர்களை நம்பிக்கையாகவும், சுயாதீனமாகவும் உணரச் செய்கிறது.
இன்று உலகம், குறிப்பாய் தமிழ் வாசகத் திரள், மின்னணு யுகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் அச்சு நூல்களை விட மின்னூல்களை அதிகம் விரும்புகிறார்கள். இதனால் KDP எனக்குத் தரும் ராயல்டி என் அச்சு நூல்களில் வருவதை விட அதிகமாக இருக்கிறது. தவிர, அச்சு நூல்களை வெவ்வேறு நாடுகளுக்கு அனுப்ப, அதற்கு ஆகும் கூடுதல் செலவு தடையாக இருக்கிறது. ஆனால் KDP வழி ஒரு தமிழ் எழுத்தாளன், எந்தக் கூடுதல் வேலை அல்லது செலவும் இன்றி உலகின் எந்தப் பகுதியில் இருக்கும் ஒரு சீரிய தமிழ் வாசகனையும் சென்றடைய முடியும்.

கிண்டிலில் எழுதுபவர்களை ஊக்குவிக்க அமேஸான் இந்தியாவில் 'Pen to Publish' என்ற போட்டியை 2017 முதல் நடத்துகிறது. சென்ற ஆண்டிலிருந்து தமிழ் மொழியும் இப்போட்டியில் சேர்க்கப்பட்டது. மும்மொழிகள் - ஆங்கிலம், இந்தி மற்றும் தமிழ். ஒவ்வொன்றுக்கும் தனித்தனியான பரிசுகள்; தனித்தனியான தேர்வுக் குழு. வட இந்தியாவில் மக்கள் பரவலாய்ப் பேசும் இந்தியும், அகில இந்திய இணைப்பு மொழியான ஆங்கிலமும் தவிர்த்து தமிழ் ஒன்று தான் இப்போட்டியில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரே பிராந்திய மொழி (மேற்சொன்ன மும்மொழிகள் தவிர, மலையாளம், மராத்தி, குஜராத்தி மொழிகளிலும் கிண்டில் மின்னூல்கள் உண்டு). கிண்டில் மின்னூல்கள் தமிழில் அதிகம் எழுதப்படுவதற்கும், வாசிக்கப்படுவதற்கும் இது எளிய, நேரடி ஆதாரம். இந்த அறிகுறி தாண்டி தமிழ் வாசகனாகவும், தமிழ் எழுத்தாளனாகவும் அதை நான் நேரடியாகவே உணர்கிறேன்.
போன முறை 'Pen to Publish' போட்டியில் தமிழுக்கு நடுவராக எழுத்தாளர் இரா.முருகன் இருந்தார். சென் பாலன் எழுதிய பரங்கிமலை இரயில் நிலையம் என்ற நாவலும் விக்னேஷ் சி செல்வவராஜ் எழுதிய குத்தாட்டம் போடச்செய்யும் 'இசை' என்ற நீள்கட்டுரையும் பரிசு வென்றன.
இன்று இவ்வாண்டுக்கான 'Pen to Publish' போட்டி அறிவிப்பு வெளியாகி உள்ளது. போன முறையை விட கூடுதல் பிரம்மாண்டமாய், கூடுதல் வசீகரங்களுடன், அதனாலேயே கூடுதல் சவாலுடன்.
மும்மொழிகளில் தமிழ் பற்றி மட்டும் பார்ப்போம். எது வேண்டுமானாலும் எழுதலாம். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை, அபுனைவு என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். போட்டியில் மொத்தம் இரண்டு வகைமைகள்: நீள்வடிவு (Long Form) மற்றும் குறுவடிவு (Short Form). 2,000 முதல் 10,000 சொற்களுக்குள் அமைந்த படைப்புகள் எல்லாம் குறுவடிவில் வரும். 10,000க்கும் மேற்பட்ட வார்த்தைகள் கொண்ட படைப்புகள் அனைத்தும் நீள்வடிவில் அடங்கும்.
பரிசுத் தொகை:
நீள்வடிவு: முதல் பரிசு - ரூ. 5 லட்சம் | இரண்டாம் பரிசு ரூ. - 1 லட்சம் | மூன்றாம் பரிசு - ரூ. 50,000
குறுவடிவு: முதல் பரிசு - ரூ. 50,000 | இரண்டாம் பரிசு - ரூ. 25,000 | மூன்றாம் பரிசு - ரூ. 10,000
நீள்வடிவில் முதல் பரிசின் தொகையைக் கவனியுங்கள். ஐந்து லட்சம் ரூபாய். சாஹித்ய அகாதமி விருது வாங்கினால் கூட ரூ.1 லட்சம் தான் பரிசு. சிறந்த திரைப்படத்துக்கான தேசிய விருது வாங்கினால் கூட ரூ. 2.5 லட்சம் தான் தொகை. ஒற்றைப் படைப்புக்கு இந்தியாவில் வழங்கப்படும் பரிசுகளில் வேறெதுவும் இத்தனை அதிகப் பரிசுத் தொகை இல்லை. ஆக, க்ளீஷேவாக இருந்தாலும் இதைச் சொல்லித் தான் ஆக வேண்டியுள்ளது - இது ஒரு பொன்னான வாய்ப்பு!
மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள். இன்னும் பரிசுகள் முடியவில்லை. நீள்வடிவில் இறுதிப் போட்டிக்குத் தமிழில் தேர்வாகும் படைப்புகள் உலகம் முழுவதுமுள்ள 'Pen to Publish' போட்டியில் தேர்வாகும் படைப்புகளுடன் மோதும். (இந்தியாவில் மும்மொழிகளில் போட்டி நடப்பது போல் பிற நாடுகளிலும் பல மொழிகளில் போட்டி நடக்கும்.) அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு படைப்பு அமேஸான் ப்ரைம் ஸ்டூசியோஸால் வெப் சீரீஸாகவோ திரைப்படமாகவோ எடுக்கப்படும். அந்தத் திரைக்கதைக்கான உரிமத்தொகைக்கான முன்பணமாக அந்த எழுத்தாளருக்கு ரூ. 7 லட்சம் வழங்கப்படும். (படமாக்க 36 மாத ஒப்பந்தம் எழுதப்பட்டு பிறகு உரிய தொகை வழங்கப்படும்.)
வெற்றி பெற்றோர் போட்டி நடுவர்களிடம் எழுத்து நுட்பங்களைப் பற்றி அறிந்து கொள்ளும் வாய்ப்பையும் வழங்குகிறார்கள். அது போக, ஜெயித்தவர்களின் மின்னூல் விற்பனை விஷயத்தில் சில சலுகைகளும் உண்டு. இப்படி 'Pen to Publish' போட்டியின் பரிசுகள் பல திசையில் விரிகின்றன.
வெற்றிப் படைப்புகள் இரண்டு சுற்றுகளில் தேர்ந்தெடுக்கப்படும்: 1) விற்பனை மற்றும் வாசகர் மதிப்பீடு பொறுத்து ஒவ்வொரு வடிவிலும் தலா ஐந்து நூல்கள் இறுதிச்சுற்றுக்குத் தேர்தெடுக்கப்படும். 2) இறுதிச் சுற்றில் அப்படைப்புகளை வாசித்து நடுவர்கள் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பர்.
ஆக, 'Pen to Publish' போட்டியில் தரமான படைப்பை எழுதுவது மட்டுமின்றி, அது வாசகரிடையே போய்ச் சேர்வதும் அவசியம். அதாவது, சந்தைப்படுத்தலிலும் எழுத்தாளர் கவனம் செலுத்த வேண்டும். அது எழுத்தாளன் வேலையா எனக் கேட்டால், இந்தப் போட்டியைப் பொருத்தவரை ஆம். புத்தகத்தை விற்க வைக்க வைக்க வேண்டும். அதற்கான ஊக்குவிப்பு இது எனக் கொள்ளலாம்.
போட்டியில் கலந்து கொள்வது எப்படி?
1) 15 செப்டெம்பர் 2019 முதல் 14 டிசம்பர் 2019க்குள் KDP-யில் நூலைப் பதிப்பிக்க வேண்டும்.
2) பதிப்பிக்கையில் நூலுக்கான Key Words-ல் pentopublish2019 என்பதைச் சேர்க்க வேண்டும்.
3) நூலுக்கு KDP Select ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும் (இது புத்தகத்தைக் கடன் வழங்க).
சில விதிமுறைகள்:
1) எழுத்தாளர் 18 வயதுக்கு மேற்பட்டவராய் இருக்க வேண்டும்.
2) படைப்பு இது வரை அச்சிலோ, மின்வடிவிலோ எங்கும் வெளியாகி இருக்கக்கூடாது.
3) எழுத்தாளருக்குப் படைப்பின் மீது முழு உரிமை இருக்க வேண்டும்.
4) ஒருவர் எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் போட்டிக்கு அனுப்பலாம்.
5) போன முறை போட்டியில் வென்றவர்களும் பங்கு கொள்ளலாம்.
6) க்யூபா, ஈரான், வட கொரியா, சூடான், தெற்கு சூடான், சிரியா, க்ரிமியா தவிர எந்நாட்டவரும் பங்குகொள்ளலாம்.
எழுத்தாளர்கள் நூலைப் பதிப்பித்த நான்கு வேலை தினங்களுக்குப் பின் அமேஸான் தளத்தின் 'Pen to Publish' போட்டிப் பக்கத்தில் 'View Entries' என்ற சுட்டிக்குப் போய் போட்டிக்கு அவர்களின் படைப்பு எடுத்துக் கொள்ளப்பட்டதை அறிந்து கொள்ளலாம். இறுதிச்சுற்றுக்குத் தேர்வானோர் பட்டியல் 25 ஜனவரி 2020 அன்று வெளியிடப்படும். வெற்றியாளர்கள் 20 ஃபிப்ரவரி 2020 அன்று அறிவிக்கப்படுவர்.
இப்போட்டியின் மூலம் தமிழ்ச் சூழலில் இரண்டு விஷயங்கள் நடக்கும் என எதிர்பார்க்கிறேன்: 1) சுஜாதாவுக்குப் பின் தமிழ் வெகுஜன எழுத்தில் ஒரு வெற்றிடம் உருவாகி இருக்கிறது. இந்தப் போட்டி அதை நிரப்ப உதவும். 2) எழுத்தாளராகும் ஆற்றல் கொண்ட, சமூக வலைதளங்களில் இயங்கி வருபவர்கள் தங்கள் முதல் நூலை இப்போட்டியின் வழி வெளியிடுவார்கள்.
போட்டித் தேதிகளை நினைவிற்கொள்வது எளிது. போட்டி ஆசிரியர் தினத்தன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது; பேரறிஞர் தினத்திலிருந்து மின்னூல்களைப் பதிப்பிக்கத் துவங்கலாம்.
இனி யோசிக்க ஏதுமில்லை. "Everyone has a story" என்பது திருமதி சவி ஷர்மா வாக்கு. "எழுத்தாளனுக்கும் மற்றவர்களுக்குமான வித்தியாசம் எழுதுவது தான்" என்பது சிஎஸ்கே வாக்கு. கொஞ்சம் முயன்றால் யாரும் அதை எழுதி விடலாம். அர்ப்பணிப்பு மட்டுமே தேவை. ஆக, மேற்சொன்ன ரொக்கப் பரிசுகளைப் பார்த்து, "ஐயோ, சொக்கா சொக்கா! அத்தனையும் எனக்கா!" என்ற குரல் எழுதுபவர்கள் / எழுத எத்தனிப்பவர்கள் மனதில் ஒலிக்க வேண்டும். ஆனால் மண்டபத்தில் யாரிடமாவது எழுதி வாங்காமல், சொந்தப் படைப்புக்களைப் போட்டிக்கு அனுப்ப வாழ்த்துக்கள்.
பின்குறிப்பு: இம்முறை தமிழுக்கான நடுவர் குழுவில் அடியேனும் உண்டு. இன்னொருவர் பாரா!
***
சில சுட்டிகள்:
2019 போட்டிப் பக்கம்: https://www.amazon.in/pen-to-publish-contest/b?node=13819037031போட்டி பற்றிய கேள்விகள்: https://www.amazon.in/b?node=15883391031KDP மின்னூல் பதிப்பிக்க: http://kdp.amazon.com/சென்ற ஆண்டு வென்றவை: https://www.amazon.in/s?node=14333006031விரிவான சட்டதிட்டங்கள்: https://www.amazon.in/b?node=15883392031
Published on September 05, 2019 09:36
July 21, 2019
ஒரு புளித்த மாவின் கதை
சமூக வலைதளங்களில் ஜூன் 15 அன்று இப்படித் தான் ப்ரேக்கிங் ந்யூஸ் வந்தபடி இருந்தன. அதையொட்டி ஜெயமோகன் மீதான வசைகளும் பெருகியபடி இருந்தன.
அதிகாலை 6: “ஜெயமோகன் மாவைக் கடையில் திருப்பிக் கொடுத்தார்.”
காலை 9: “ஜெயமோகன் மாவைக் கடையில் வீசி எறிந்தார்.”
முற்பகல் 11: “ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் மீது விட்டெறிந்தார்.”
நண்பகல் 12: “ஜெயமோகன் மாவைக் கடைக்காரப் பெண்ணின் முகத்தில் எறிந்தார்.”
பிற்பகல் 2: “ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே நையப் புடைத்தார்.”
மாலை 4: “ஜெயமோகன் கடைக்காரப் பெண்ணை மாவாலேயே அடித்துக் கொன்றார்.”
இரவு 7: “ஜெயமோகன் மாவாலேயே நாகர்கோயிலை எரித்தார்.”
அதாவது புளித்த மாவை கடையில் திருப்பிக் கொடுத்தது என்ற செயல் ஒருவரைத் திட்டப் போதுமானதாக இல்லை என்றதும் குற்றத்தைப்பெரிதாக்கத் தம் கற்பனையில் உதித்ததை எல்லாம் போட்டு செய்தியைத் திரித்துக் கொண்டிருந்தனர். ஜெயமோகன் மீது சமூக வலைதளவாசிகள் இத்தனை பிரியங்கொண்டிருப்பது பேரதிர்ச்சி தான்!
ஜெயமோகன் இது பற்றி எழுதியது இது: “அருகில் உள்ள வசந்தம் கடையில் இரு பாக்கெட் தோசை மாவு வாங்கினேன். இரண்டு நாள் பழைய புளித்த மாவை கொடுத்து விட்டார்கள். கடையில் இருந்தவர் உரிமையாளரின் மனைவி. பாக்கெட்டை திரும்பி எடுக்க மறுத்து என்னை வசைபாட ஆரம்பித்தார் நான் கோபமாக மாவு பாக்கெட்டுகளை நீயே வைத்துக்கொள் என வீசிவிட்டு திரும்பினேன்.” பாதிக்கப்பட்ட ஒருவராக கோபத்தின் கையறுநிலையில் மாவைக் கடையில் வீசி வந்திருக்கிறார்.
ஜெயமோகன் பிற்பாடு இப்படியும் சொல்கிறார்: “நான் நடுவே புகுந்து மாவு பற்றிக் கூறினேன். அது கூட தெரிந்தவர் என்பதனால் “ஏன் இதையெல்லாம் பார்க்க மாட்டீர்களா?” என்ற அர்த்ததில்தான்.” அதாவது தான் சாத்வீகமாகவே அணுகியதாக.
இதில் உண்மையில் என்ன தான் நடந்தது என்பது எனக்குத் தெரியாது. வசை பாடிய எவருக்கும் கூடத்தெரியாது. ஆனாலும் ஜெயமோகன் மீதான கருத்து வேறுபாட்டினை வன்மமாக மாற்றிக்கொண்டு செய்திகளை உருவாக்குகிறார்கள். நான் ஜெயமோகனை நம்புகிறேன். இதில் என் நிலைப்பாடு இரண்டு அடிப்படைகளின் மீது கட்டப்பட்டது.
ஒன்று சில கருதுகோள்கள்: 1) ஜெயமோகன் மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ்ச் சூழலில் தீவிர இலக்கியவாதியாய்ச் செயல்பட்டு வந்தாலும் ஒருபோதும் வன்முறையில் ஈடுபட்டதாய் விவரம் இல்லை. குடியையும் இலக்கியத்தையும் குழப்பிக் கொண்டு அதைக் கலகச் செயல் எனச் சொல்லிக் கொண்டவர் இல்லை. 2) ஜெயமோகன் பார்வதிபுரத்தில் ஒரு வஸ்தாது எல்லாம் கிடையாது. ஆள் பலமோ, இன்ன பிற செல்வாக்கோ அற்றவர். அப்படியானவர் அங்கே பல காலமாய் மளிகைக் கடை நடத்திக் கொண்டிருக்கும் ஒரு வியாபாரி மீது - எவ்வளவு கோபம் என்றாலும் - உடல்ரீதியான தாக்குதலில் ஈடுபட வாய்ப்பு குறைவு. 3) அரசியல், சமூகம் போன்ற விஷயங்களில் உடனடியாக எதிர்வினையாற்றப் பதற்றம் காட்டாத ஜெயமோகன் இதில் பொய்கள் சொல்லி ஆகப் போவது என்ன? நீண்ட கால அடிப்படையில் ஒரு சில்லறைச்சம்பவத்தில் தன் ஆளுமை குறித்த பிம்பம் சிதைவுறுவதை விரும்புவாரா?
இரண்டாவது அவர் மீதான என் தனிப்பட்ட நம்பிக்கை. நம் வீட்டிலுள்ள ஒருவர் மீது குற்றச்சாட்டு எழுகிறது, சம்பவத்துக்கு இரு வேறு வர்ணிப்புகள் வருகிறது, ஆனால் இரண்டுக்கும் சரியான ஆதாரம் இல்லை எனும் போது நம் வீட்டு ஆள் சொல்வதை நம்புவதே பழக்கம். அப்படி ஜெயமோகன் சொல்வதை நம்புகிறேன். அதுவே இயல்பு.
இது நடுநிலை தவறுவதல்ல. தெரியாத விஷயத்தில் அப்படித்தான் துவங்க முடியும். அப்புறம் உண்மை வெளிவருகையில் நேர்மையாகப் பிழையை ஒப்புக் கொள்ளலாம்.
(எழுத்தாளன் குற்றச்செயலில் ஈடுபட மாட்டான் என்ற வாதத்தை நான் எடுக்க மாட்டேன். ஏனெனில் எழுத்தாளன் எந்நேரமும் எழுத்தாளனாகவே சிந்திப்பதில்லை. தவிர, மனித மனதின் சிடுக்குகள் அத்தனை நேரடியானதும், எளிமையானதுமில்லை. அதனால் அப்படி எல்லாம் தட்டையான சூத்திரங்களை, சமன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள முடியாது. சொல்லப் போனால் ஓர் எழுத்தாளனுக்கு இருக்கும் சமூகக் கோபங்கள் மற்றும் அங்கீகார விரக்திகள் காரணமாய் குற்றச்செயலில் ஈடுபட சாதாரணர்களை விட அவனுக்கே அதிக முகாந்திரம் இருக்கிறது. ஒரு மாதம் முன் நடந்த ஃபிரான்சிஸ் கிருபா விவகாரத்திலும் என் கருத்து இதுவாகவே இருந்தது.)
அடுத்து ஜெயமோகன் தாக்கப்பட்ட விவகாரம். ஜெயமோகன் இப்படிச் சொல்கிறார்: “அருகே அவள் கணவன் நின்றிருந்தான். உரிமையாளன். பெரியகுடிகாரன். ஏற்கனவே குடித்து தகராறு செய்தபடி நின்றிருக்கிறான். நான் கவனிக்கவில்லை. என்னை தாக்க ஆரம்பித்தான். தாடையில் அடித்தான். கீழே விழுந்தபோது உதைத்தான். என் கண்ணாடி உடைந்தது. பலமுறை தாக்கி கெட்டவார்த்தை சொன்னான். பிடித்து அகற்றினர். அவனுடைய கடை வேலையாட்கள் அவர்கள். வீடு வந்தேன். அதற்குள் வீட்டுக்கு வந்து என் மனைவியையும் மகளையும் வசைபாடினான். வீட்டுக்குள் நுழைய முயன்றான்.” நிச்சயம் மோசமான தாக்குதல். இதையும் நம்புகிறேன்.
இந்தத் தாக்குதலைச் சமூக வலைதளத்தில் பலரும் கொண்டாடிக் கொண்டிருந்தனர். அந்த மாதிரி மனப்பிறழ்வு சமூக வலைதளங்களில் இயல்பு என்பதால் அதை நாம் பெரிதாய்ப் பொருட்படுத்த வேண்டியதில்லை. என் அதிர்ச்சி எல்லாம் அத்தாக்குதல்!
எழுத்து மற்றும் எழுத்தாளன் மீதான சமூகத்தின், அரசாங்கங்களின் அலட்சியத்தால், அறியாமையால் நாம் அடைந்திருக்கும் கேடுகெட்ட நிலை இது. ஜெயமோகன் என்ற சமகாலத் தமிழின் மகத்தான எழுத்தாளனை அடையாளம் தெரியாதவர்கள் தாம் நம் தேசத்தின் குடிமக்கள். இதுதான் இன்றைய இந்தியாவின், தமிழகத்தின் அவல நிலை.
எழுத்தாளனுக்கு இங்கே மரியாதை கிடையாது என்பது அவன் எழுத்துக்குக் காசு வருவதில்லை, அங்கீகாரம் தருவதில்லை என்பதை எல்லாம் தாண்டி இம்மாதிரி அசட்டு அக்கிரமங்களின் போது தான் மிக வலுவாய் முகத்திலறைகிறது. லியோ டால்ஸ்டாயோ மாக்ஸிம் கார்க்கியோ ருஷ்யாவில் தாக்கப்பட்டிருந்தால் என்ன ஆகியிருக்கும் என யோசித்துப் பாருங்கள். நாடு கடத்தப்படுவது கூட எழுத்துக்கான மறைமுக மரியாதை தான். ஆனால் இம்மாதிரி ரவுடித்தனமெல்லாம் வெட்கக்கேடு.
ஒரு சாதாரணன் தாக்கப்பட்டாலும் குற்றம் தான். அதற்கும் தண்டனை தர வேண்டும். ஆனால் ஓர் எழுத்தாளன் சமூகத்தில் மரியாதையாய் நடத்தப்பட வேண்டும் என நம்புகிறேன். ஆம், சாதாரணனை விடக் கூடுதல் மரியாதையுடன். மரியாதை எனில் ஒன்றும் காலில் விழச் சொல்லவில்லை. எழுத்தாளனை அடையாளம் காண்பது முதல் மரியாதை. பின் அதற்கேற்ப நடத்துவதையே இங்கு மரியாதை என்கிறேன்.
உதாரணமாய் சச்சின் டெண்டுல்கர் அந்த இடத்தில் இருந்திருந்தால் கடைக்காரர் எவ்வளவு குடிபோதையில் இருந்திருந்தாலும் அப்படி நடந்து கொண்டிருப்பாரா? அப்படியே நடந்திருந்தாலும் சுற்றி இருந்தவர்கள் தான் சும்மா விட்டிருப்பார்களா? சச்சின் தன் விளையாட்டுத் துறையில் சாதித்ததற்கு எவ்வகையிலும் குறைவில்லை ஜெயமோகன் அதைவிட உயர்ந்த இலக்கியத்தில் நிகழ்த்தியிருக்கும் சாதனைகள். ஆனால் மரியாதை? சச்சினுக்குக் கிடைப்பதில் நூற்றில் ஒரு பங்கு கூட இல்லை.
ஜெயமோகன் இடத்தில் அப்பகுதியின் விஏஓ இருந்திருந்தால் கூட இந்தச்சம்பவத்தை அரங்கேற்ற மாவுக்கடை ஆசாமிக்குத் துணிச்சல் வந்திருக்காது என்பது எவ்வளவு குரூரமானதுமானது! அந்த மரியாதையை எழுத்தாளனுக்கு மறுப்பது பெரும்குற்றம்.
அதை விடக் கொடுமை வாசிப்பவர்களே ஒரு சதவிகிதத்துக்கும் குறைவு, அப்புறம் எப்படி எழுத்தாளனைத் தெரியும் என்று நியாயப்படுத்துவது. அது ஜெயமோகனின் பிரச்சனையா? எல்லாக் குற்றத்துக்கும் தான் தர்க்கம் இருக்கும், அதற்காக சரி என்றாகி விடுமா? காம விழைவால் தானே கற்பழிப்பு நடந்தது என குற்றவாளிக்குப் பரிந்து பேச முடியுமா? ஏன் நடந்தது என்பது வேறு, அது நியாயமா என்பது வேறு!
எறும்பை நசுக்குவதும் யானையைச் சுடுவதும் ஒன்றென எண்ணும் அறிவுஜீவிகள் சிலர் பாரிசாலன் தாக்கப்பட்டதையும், ஜெயமோகன் தாக்கப்பட்டதையும் ஒப்பிட்டுச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். Size does matter. உதாரணமாய் ஒரு சாதாரணனின் கொலை வழக்கும், ராஜீவ் கொலை வழக்கும் ஒன்றா? உயிர் எல்லோருக்கும் ஒன்று எனினும் அதன் மதிப்பு வெவ்வேறு. ஒரு தேசத்தின் பிரதமருக்கு இணையாக ஒரு மொழியின் முதன்மை எழுத்தாளன் மதிக்கப்பட வேண்டும் என்றே நம்புகிறேன்.
அடுத்த வாதம் இதில் ஜெயமோகன் எழுத்தாளன் என்பதைக் கொண்டு வரக்கூடாது என்பது. இது ஒரு வியாபரிக்கும் நுகர்வோனுக்கும் நிகழ்ந்த சண்டை மட்டுமே எனக் குறுக்க முயலும் செயல். பிரதமர் ஒரு மளிகைக் கடையில் மாவு வாங்குகிறார். வீட்டுக்கு வந்து மாவு கெட்டுப் போயிருப்பதை அறிந்து திரும்பக் கடைக்குப் போய்க் காசைத் திரும்பிக் கேட்கிறார். கடைக்கார ரவுடி பிரதமரை அடையாளம் தெரியாமல் (அல்லது தெரிந்தும்) குமட்டில் குத்தி அனுப்புகிறான். தொடர்ந்து பிரதமர் வீட்டுக்கும் வந்து “நாடு நாடா சுத்தறவன் தானே நீ” என சவுண்ட் விட்டு மிரட்டிப் போகிறான். இப்போது நம் இணைய அறிவுஜீவி நீதிமான்கள் என்ன சொல்வார்கள்? “இது ஒரு மாவுப் பிரச்சனை. அரசுப் பொறுப்பு இதில் வராது. இது ஒரு கன்ஸ்யூமருக்கும் கடைக்காரருக்குமான அக்கப்போர் மட்டுமே. அதை மட்டுமே பேச வேண்டும். பாதிக்கப்பட்டவர் பிரதமர் என்பதை இதில் கொண்டு வரக்கூடாது.” என்றா? கேட்போர் ஆசன வாயில் சிரிக்க மாட்டார்களா? இதை எல்லாம் வாதமென எப்படித் தூக்கிக் கொண்டு வருகிறார்கள்? வன்மம் எவ்வளவு தூரம் ஒருவரை கோமாளியாக்குகிறது!
அடுத்த மொண்ணை வாதம் மாவு புளித்ததைத் திருப்பிக் கொடுத்தது போல் நாவல் நன்றாக இல்லை என்றால் திருப்பிக் கொடுக்க முடியுமா? என்பது. மாவு புளித்தது என்பது ஓர் அறிவியல் உண்மை. நாவல் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்பது ஆளுக்கு ஆள் மாறுபடும். இங்கே ராஜேஷ் குமாருக்கும் வாசகர்கள் உண்டு, சுந்தர ராமசாமிக்கும் வாசகர்கள் உண்டு. தவிர, மாவு புளித்திருந்தால் சட்டப்படி அது குறைபட்ட பொருள், அதற்குத் தண்டனை உண்டு. அதை எதிர்த்து நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்காடக்கூடச் செய்யலாம். நாவலுக்கு அப்படியான கோடுகள் ஏதும் கிடையாது. இந்த எளிய உண்மைகள் கூடப் புரியாமல் இந்த அசட்டுக் கேள்வியைக் கேட்டு விட்டு ஜெயமோகனை மடக்கிப் பழி தீர்த்து விட்டதாக நினைத்து முகத்தில் பெருமிதத்தை ஒட்டிக் கொண்டு குறுக்கும் மறுக்கும் நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒரு வியாபாரி தான் விற்கும் பொருளின் தரத்துக்குப் பொறுப்பு. அது சரியான கெடுத் தேதிக்குள் உள்ளதா, நன்றாக இருக்கிறதா என உறுதி செய்ய வேண்டியது அவர் கடமை. ஒருவேளை தவறாக / அரைகுறைத் தரத்தில் ஏதும் விற்கப்பட்டு விட்டால் அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு காசைத் தர வேண்டியதும் அவர் வேலை தான். அவர் பொருள் தயாரிப்பாளரிடம் இதற்கான நஷ்டத்தைப் பேசிப் பெற்றுக் கொள்ள வேண்டுமே ஒழிய, விவரமறியாமல் தன்னிடம் வந்து பொருள் வாங்கிய அப்பாவி நுகர்வோனைப் பாதிப்புக்குள்ளாக்கக் கூடாது. அதை மறுப்பது - அபராதம் மாதிரி சிறிதோ, சிறை போல் பெரிதோ - தண்டனைக்குரிய குற்றம் தான். ஆக, அங்கே ஜெயமோகன் என்றில்லை, யார் இருந்திருந்தாலும் புளித்த மாவுப் பாக்கெட்டைப் பெற்றுக் கொண்டு பணத்தைத் திருப்பியிருக்க வேண்டும். அதைச் செய்ய மறுப்பதே சட்டமும் தெரியாத, அறமும் தெரியாத, வியாபார நுணுக்கமும் தெரியாத தடித்தனம் தான். இதில் அடிதடி வேறு. அக்கடையை அணுகவே இனிப் பலரும் தயங்குவார்கள்!
இன்னொரு கோணமும் உண்டு. மாவு புளித்ததை கடைக்காரர் எடுத்துக் கொண்டு தான் ஆக வேண்டும், ஆனால் புத்தகம் நன்றாக இல்லை எனில் கடைக்காரரிடம் கேட்க முடியாது. இப்படி எழுத்தாளர் கடைக்காரர்களுக்கு எத்தனை அணுக்கமானவர்!
அடுத்த குற்றச்சாட்டு அடி பெரிதில்லை என்றாலும் வழக்கை வலுவாக்கும் பொருட்டு அரசு மருத்துவமனையில் போய் உட்கார்ந்து கொண்டார் ஜெயமோகன் என்பது. இது முதலில் எழுத்தாளர் பாரதி மணி அவர்கள் தொலைபேசியில் ஜெயமோகனை / அவர் நண்பர்களை நலம் விசாரித்து விட்டு மேலோட்டப் புரிதலில் போட்ட ட்வீட்டிலிருந்து தொடங்கியது. பிறகு செல்வேந்திரன் விளக்கம் அளித்ததும் அவரே அதை நீக்கி விட்டார். ஆனால் அந்த ட்வீட்டின் ஸ்க்ரீன்ஷாட் சமூகவலைதளமெங்கும் சுற்றிக் கொண்டிருந்தது. யாரோ ஒரு மருத்துவர் இன்னும் ஒரு படி மேலே போய் இதனால் எளியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய ஒரு படுக்கை பறிக்கப்பட்டு விட்டது என்று ஜெயமோகனை பூர்ஷ்வாவாக்கி திடீர் சமூக அக்கறையாளர் அவதாரமெடுத்திருந்தார்.
இந்தக் குற்றச்சாடை வைப்பவர்கள் இரண்டு விஷயங்களை நுட்பமாக ஒன்றாக்கி விடுகிறார்கள். ஒன்று ஜெயமோகனுக்கு சம்பவத்தில் அவ்வளவாய் அடிபடவில்லை என்பது. மற்றது அவர் சம்பவத்தைப் பெரிதாக்கி பொய்க்கேஸ் போடுகிறார் என்பது. இவ்விஷயத்திலும் ஜெயமோகன் அறம் பிறழ்ந்திருக்க மாட்டார் என்றே நம்புகிறேன்.
தன் காயங்கள் குறித்தும், மருத்துவமனையிலிருந்து திரும்பியது குறித்தும் அவர் எழுதியிருப்பது: “தாடையிலும் தோள்பட்டையிலும் வலியும் ரத்தகீறல்களும் உள்ளன. கீழே விழுந்தமையால் உடல் வலியும். ஆனால் ஆஸ்பத்திரி வார்டில் இருந்த பிற நோயாளிகளின் துன்பங்கள் அழுகைகள் நடுவே தூங்க முடியவில்லை. ஆகவே வந்து விட்டேன். தனியார் மருத்துவமனையில் மருத்துவம் செய்ய வேண்டியிருக்கலாம்.”
காவல் துறையில் புகாரளித்தது ஏன் என்பதையும் ஜெயமோகன் சொல்லியிருக்கிறார்: “புகார் செய்யவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் இது என்நிலம், இந்த மக்கள் இப்படிஇருப்பதை நான் நன்கறிவேன். அதன்பின் அவன் வீட்டுக்கு வந்து மனைவியையும் மகளையும் வசைபாடி தாக்கமுற்பட்டமையால்தான் இரண்டு மணி நேரம் கடந்து காவலரிடம் செல்லவேண்டியிருந்தது. அதன்பின்னர் காவலர்கள் கைது செய்து ரிமாண்ட் செய்திருக்கிறார்கள்.” இதில் எதையுமே பொய் என குடிகார மாவுக் கடைத் தரப்பு மறுத்ததாகத் தெரியவில்லை. ஆனால் ஜெயமோகன் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஓர் எளிய சிறுவியாபாரியைப் பழி வாங்குகிறார் என ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஜெயமோகன் மீதான பொறாமையும், வயிற்றெரிச்சலும் எப்படி ஒருவர் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது என்பதைக்காண ஆச்சரியமாய் இருக்கிறது.

அடுத்த கோணம் மாவுக்கடைக்காரர் திமுகவைச் சேர்ந்தவர் என்பதை முன்வைத்து திராவிட இயக்கத்தைக் கேலி செய்யும் கூலிப்படையுடையது. இது விகடன் செய்திக் குறிப்பின் ஒரு பகுதி: “செல்வம் தி.மு.க-வின் 17-வது வட்ட பிரதிநிதியாக உள்ளார். செல்வத்துக்கு ஆதரவாக நாகர்கோவில் நகர தி.மு.க செயலாளர் மகேஷ் நேசமணி நகர் காவல் நிலையத்துக்குச் சென்றுள்ளார். பின்னர் எழுத்தாளர் ஜெயமோகனிடம் சென்று பேசியுள்ளார். “இவருக்காக நீங்கள் பேச வரலாமா” என ஜெயமோகன் கூறியதைத் தொடர்ந்து மகேஷ் அங்கிருந்து சென்றுவிட்டார். இதுகுறித்து தி.மு.க நகரச் செயலாளர் மகேஷிடம் கேட்டோம், “செல்வம் தி.மு.க.காரர்தான். ஆனால், தாக்கப்பட்டது எழுத்தாளர் ஜெயமோகன் என்பது தெரியாமல் அங்கு சென்றுவிட்டேன். ஜெயமோகன் எனத் தெரிய வந்ததும் உடடியாக நான் அங்கிருந்து திரும்பி வந்துவிட்டேன்” என்றார்.” இதனடிப்படையில் இவ்விஷயத்தை ஆராயலாம்.
தன் கட்சி உறுப்பினருக்குப் பாதிப்பு, அதுவும் சிறைபட்டிருக்கிறார் என்று தெரிந்தால் எவரும் அதிலிருந்து மீட்க முனைவதே இயல்பு. சொல்லப்போனால் கட்சிகள் இந்தியாவில் இயங்குவதே இந்த அடிப்படையில் தான். சிலர் மிக இயல்பாக திமுகவிலிருந்து அதிமுகவுக்கோ அல்லது எதிர்த்திசையிலோ மாறிக் கொள்வது இதனால் தான். குற்றப் பின்னணி உள்ளோருக்குக் கட்சிப் பின்புலம் எப்போதும் பக்கபலம். ஏதும் சட்டப் பிரச்சனை என்றால் கட்சி உதவிக்கு வரும். எந்தக் கட்சி, என்ன கொள்கை என்பதெல்லாம் இவர்களுக்கு முக்கியமே இல்லை. ஏதேனும் ஒரு கட்சியில் இருந்து கொண்டே இருப்பார்கள். கட்சிகளுக்கும் சில சமயம் இவர்களின் பணமோ, பலமோ தேவை என்பதால் சகித்துக் கொண்டிருப்பார்கள். இது வழமையான நடைமுறை தான். அப்படியான ஒருவர் தான் மாவுக்கடைக்காரர் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வித்தியாசம் இந்த விவகாரத்தில் திமுக செயலாளர் நடந்து கொண்ட விதம். பாதிக்கப்பட்டவர் மரியாதைக்குரிய எழுத்தாளர் எனும் போது உரிய மரியாதை தந்து எதிர்வினையாற்றிய வகையில் திமுக ஒரே குட்டையில் ஊறிய மட்டையல்ல என்பதைக் காட்டியிருக்கிறார். (அங்கே ஜெயமோகன் என்ற எழுத்தாளர் இல்லாமல் வேறு சாதாரணர் இருந்தால் என்ன நடந்திருக்கும் என்பது தனியாய் விவாதிக்கப்பட வேண்டிய வேறு தலைப்பு. இதற்குத் தொடர்புடையதல்ல.)
ஜெயமோகனும் இவ்விஷயத்தை ஒப்புக் கொள்கிறார். இதில் திமுகவின் தலையீடு பற்றிய அவரது வாக்குமூலம்: “திமுகவின் வழக்கறிஞர் மகேஷ் காவல்நிலையம் வந்து அவன் இருந்த நிலையை பார்த்ததுமே என்னிடம் மன்னிப்பு கோரி விட்டு சென்றுவிட்டார். திமுக மிகமிக பண்பட்ட ரீதியில்தான் நடந்துகொண்டிருக்கிறது. அடிப்படையில் திமுக ஒர் அறிவுத்தளம் கொண்ட கட்சி என்ற எண்ணமே எப்போதும் என்னிடம் இருக்கிறது. நான் மு.கருணாநிதி அவர்கள் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்த காலகட்டத்திலும் கூட அவர் மேல் தனிப்பட்ட முறையில் நம்பிக்கை கொண்டிருந்தேன். என் பாதுகாப்பு பற்றி ஐயம் கொண்டதே இல்லை. இன்றும் திமுக மேல் எனக்கு அந்நம்பிக்கை உண்டு.” மிகப் பெரும்பாலும் இதுவே திமுகவின் முகம்.
இப்படியானவர்களுக்கு கட்சியின் கொள்கையும், எக்கட்சி என்பதும் முக்கியமில்லை என்பதன் நீட்சி அவர்களின் செய்கையை கட்சி அடையாளத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்பதே. அதனாலேயே மாவுக்கடைக்காரரின் செய்கைக்கு திமுக சாயம் பூச வேண்டியதில்லை. இதை மிகக் கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். மதவெறிச் செயல்களை நேரடியாக பாஜக போன்ற கட்சிகளுடன் தொடர்புபடுத்திப் பேசும் அதே வேளையில் இதையும் சொல்கிறேன். இதில் எவ்வித தர்க்கக்குழப்பம் ஏதுமில்லை.
இந்துத்துவக் கட்சிகள் விஷயத்தில் அப்படிப் பேசக்காரணம் அவர்களின் கொள்கையே அம்மாதிரி வன்முறைகளை ஆதரிக்கிறது. அத்வானி, மோடி, ஆதித்யநாத் தொடங்கி ப்ரக்யா வரை உரைகளிலும் உரையாடல்களிலும் மதவெறியை ஊட்டியிருக்கிறார்கள். அதனால் அப்படியான செயல்களை அவர்கள் கட்சியின் கடைநிலைத் தொண்டர் செய்கையில் அதை அக்கட்சியின் அடையாளத்தோடே இணைத்துப்பார்க்க வேண்டும்.
பாஜக அல்லது பிற இந்துத்துவர்கள் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் போதும் இந்த கட்சிசார் பொதுமைப்படுத்தல் பரவலாக நிகழக் காரணமும் இதுவே. மத நூல்கள் அடிப்படையில் பெண்கள் மற்றும் காமம் சார்ந்த பல்வேறு பிற்போக்குத்தனமான கருத்துக்களைக் கொள்கை அளவிலேயே அவர்கள் கொண்டிருப்பதே அதன் காரணம்.
மாறாய் திமுக பிரியாணிக் கடையில் பிரச்சனை செய் என்றோ, ப்யூட்டி பார்லரில் பெண்ணைத் தாக்கு என்றோ, மாவுக்கடையில் எழுத்தாளனை அடி என்றோ சொல்ல வில்லை. அதற்கும் அக்கட்சியின் கொள்கைக்கும் எத்தொடர்பும் இல்லை. அதனால் அவற்றைத் கட்சி தொடர்பற்ற தனிமனித விஷயங்களாகவே பார்க்க வேண்டியுள்ளது. (ஆனால் கட்சித் தலைமை வருத்தம் தெரிவிப்பதோடல்லாமல், விளக்கம் மட்டும் சொல்லிக் கொண்டிராமல் இத்தகு ஆசாமிகளை லாப நஷ்டக் கணக்கு பாராமல் நிரந்தரமாகக் கட்சியை விட்டு நீக்குவதே இம்மாதிரி பிரச்சனையை இன்றைய சமூக வலைதள உலகில் கையாள வழி. இல்லையென்றால் கட்சியின் பிம்பம் சிதையும்.)
ஆக, இப்பிரச்சனையில் ஜெயமோகனை நுகர்வோனாக மட்டுமின்றி எழுத்தாளன் என்ற அடையாளத்தோடு பார்க்க வேண்டும் என்று சொல்லும் அதே வேளையில், மாவுக்கடைக்காரரை திமுககாரராக அல்லாமல் வியாபாரியாகவும், குடிபோதையில் குற்றம் இழைப்பவராகவுமே பார்க்க வேண்டுமென ஆய்ந்து தெளிந்தே சொல்கிறேன்.
இதில் மறைமுகமாய் அதிகார வட்டத் தொடர்பு கொண்ட ஒருவன் X சாமானியன் என்ற கோணமும் வந்து விடுகிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஜெயமோகன் ஓர் எழுத்தாளராக இல்லையென்றால் இவ்வளவு தூரம் தீவிரமாய் மாவுக்கடைக்காரர் மீது நடவடிக்கை பாய்ந்திருக்குமா என்பதையும் யோசிக்க வேண்டியுள்ளது. அதுவும் அவர் ஒரு பலமான கட்சியைச் சார்ந்தவர் என்பதை வைத்துப் பார்க்கும் போது. ஆக, எழுத்தாளன் என்றாலும் அதிகாரம் கொண்ட எழுத்தாளனாக இருந்தால் தான் மதிப்பு.
இதில் அவமானம் காரணமாக மாவுக்கடைத் தரப்பு இத்தோடு விஷயத்தை முடித்துக் கொள்ளாமல் "பெண்ணை அடித்து விட்டார்" என்ற பொய்க்குற்றச்சாட்டுடன் அரசியல் மற்றும் வியாபாரிகள் சங்கத் தொடர்புகளைப் பயன்படுத்தி ஜெயமோகனைக் கைது செய்யக் கோரி நாகர்கோயிலில் இன்னும் சுவரொட்டி அடித்துக் கொண்டிருக்கிறது.
விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் இதில் ஜெயமோகனுக்கு ஆதரவாய் இறங்கி சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விரைந்து செயல்படக் கோரியது நல்ல விஷயமே.
இறுதியாக ஜெயமோகன் மீது நம் சமூக வலைதளச் சமூகம் ஏன் இத்தனை வன்மம் காட்டுகிறது என்பதையும் சேர்த்துப் புரிந்து கொள்ள விழைகிறேன். தமிழ் வெகுஜன வெளியில் அவ்வளவாய் அறியப்படாத ஃப்ரான்சிஸ் கிருபா சென்ற மாதம் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போது சமூக வலைதளச் சமூகம் அளித்த பேராதரவை இத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். அதிலும் உண்மை என்ன என்பது எவருக்கும் அப்போது தெரியாது. இத்தனைக்கும் அது இதை விட பன்மடங்கு தீவிரமான குற்றச்சாட்டு. ஆனாலும் தயங்காமல் ஆதரவளித்தார்கள். அவர் ஒரு படைப்பாளி என்பதனாலேயே. ஆனால் சமகாலத் தமிழ்ப் படைப்பிலக்கியத்தின் பிரதான முகமாகவும், சினிமாப் பங்களிப்புகளின் வழி வெகுமக்களிடையே புகழையும் பெற்றிருக்கும் ஜெயமோகன் அதற்கு நேர்மாறாக ஒரு சில்லறைப் பிரச்சனையில் கடுமையாக வசைபாடப்படுகிறார். அதற்கு அவரது சில கருத்துக்கள் / எழுத்துக்களே காரணம் என எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயமோகன் பண மதிப்பிழப்புசார் இறப்புக்களைப் பற்றி மேம்போக்கான கருத்துச் சொன்னது, ஒரு வயதான வங்கி ஊழியையின் வீடியோ பகிர்ந்து கோபப்பட்டிருந்தது, இந்து / இந்துத்துவச் சார்பு கொண்டவர் போல் தோன்றச் செய்யும் அவரது எழுத்துக்கள், பெரியாரிய / திராவிட இயக்கங்கள் மீதான அலட்சியப் பார்வை, பெண்ணெழுத்துக்கள் மீதான கடுமையான விமர்சனப் பார்வை எனப் பல காரணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறது. இவற்றில் ஏதோ ஒரு வகையில் காயப்பட்ட ஒவ்வொருவரும் இந்நிகழ்வை சாக்கிட்டுத் தம் கோபத்தை இறக்கி வைத்தார்கள். புளித்த மாவு விவகாரமே ஜெயமோகனுக்குப் பதில் எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நடந்திருந்தால் சமூக வலைதளவாசிகள் எஸ்ராவின் பக்கம் தான் ஆதரவாகப் பேசியிருப்பார்கள். நம் சூழலில் எதிர்வினை இப்படித் தான் எனும் போது தன் நிலைப்பாடுகளின் விளைவுகள் ஜெயமோகனுக்கும் புரிந்தே இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் இதில் அவர் புதிதாய் அதிர்ச்சி கொள்ள ஏதுமில்லை.
சுருக்கமாக என் தரப்பு: 1) ஜெயமோகன் புளித்த மாவைத் திருப்பி வாங்க மறுத்த கடைக்காரப் பெண்மணியிடம் கோபத்தில் மாவுப் பொட்டலத்தை வீசியிருக்கிறார். அது அவருக்கு காயமேற்படுத்தும் நோக்கில் இல்லை. காயமேற்படுத்தவும் இல்லை. (ஒருவேளை அப்படி ஏதும் ஆகியிருந்தால் அது ஒரு விபத்து.) 2) ஜெயமோகன் அப்பெண்ணின் கணவரால் கடை வாசலில் தாக்கப்பட்டிருக்கிறார். பின் ஜெயமோகன் வீட்டுக்கும் வந்து அவரது மனைவி, மகளை வசைபாடி இருக்கிறார். வீட்டுக்குள் நுழையவும் முற்பட்டிருக்கிறார். 3) வீட்டுக்கு வந்து ரவுடித்தனம் செய்ததாலேயே ஜெயமோகன் காவல் துறையில் புகார் அளித்துள்ளார். மாவுக்கடைக்காரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். 4) ஜெயமோகன் தனது உடற்காயங்களுக்கான நியாயமான சிகிச்சைக்காகவே அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். (வழக்கை வலுவாக்க அல்ல.) 5) மாவுக்கடைக்காரர் திமுக என்பதால் அவருக்கு ஆதரவாகப் பேச வந்த நகரச் செயலாளர் சம்மந்தப்பட்டது ஓர் எழுத்தாளர் என்றதும் விலகிக் கொண்டிருக்கிறார். இது கலைஞர்கள் மீதான திமுகவின் மரியாதை காரணமாக. 6) குடிபோதையின் காரணமாகவே குற்றம் நடந்தது என ஜெயமோகனும் சொல்கிறார். கடைக்காரரும் ஒப்புக் கொள்கிறார். 7) ஜெயமோகன் ஒரு சிறுவீழ்ச்சியைச் சந்திக்க எத்தனை பேர் மனதில் வன்மத்துடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை இது வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. (எனக்கும் ஜெயமோகனுடன் சில விஷயங்களில் கடும் முரண்பாடுகள் உண்டு தான். ஆனால அவர் துன்பப்பட வேண்டும் என ஒருபோதும் எண்ணியவனில்லை. கருத்து வேறுபாட்டை தனிப்பட்ட வன்மாக வரித்துக் கொள்வது சாதாரணமாகி விட்டது சமூக ஊடகங்களில். நம் இயல்பான நோய்க்கூறு மனநிலை. புளித்த மாவெனத் தலைப்பில் சொல்லியிருப்பது இந்த மனநலக்குறைவைத் தான்!) 8) இவை எல்லாவற்றையும் விட முகத்திலறைவது இங்கே நிலவும் எழுத்தாளனுக்கான அடையாளமின்மை தான். அதை தனிப்பட்டு என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
வாசகனாகக் கோபப்படும் அதே சமயம் இச்சமூகத்தில் ஒருவனாக, இதற்கு நானும் பொறுப்பு என்ற அளவில் ஆசானிடம் மன்னிப்புக் கோரவும் கடமைப்பட்டிருக்கிறேன்.
ஜெயமோகன் இச்சம்பவத்தின் மன, உடற்காயங்களிலிருந்து விரைந்து மீளட்டும். நம் தமிழ்ச் சமூகம் எழுத்தை, எழுத்தாளனை உரிய முறையில் கொண்டாடக் கற்கட்டும்.
***
(ஜூலை 2019 உயிர்மை இதழில் வெளியானது)
Published on July 21, 2019 06:51
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.