C. Saravanakarthikeyan's Blog, page 6
June 4, 2020
வர்ச்சுவல் மினி கம்யூன்
கொரோனா, யுத்தம் போன்ற உலகளாவிய அல்லது தேச அளவிலான அவசர நிலைகள் தனி மனித வாழ்க்கையில் ஏற்படுத்தும் வேலையிழப்பு, அதீத மருத்துவச் செலவுகள் உள்ளிட்ட நிலையாமைகளைக் கையாள ஒரு வர்ச்சுவல் மினி கம்யூன் (Virtual Mini Commune) வாழ்க்கை முறை பற்றி கடந்த சில தினங்களாக யோசித்து வருகிறேன். இதை ஒரு நீட்டிக்கப்பட்ட குடும்ப அமைப்பாகப் (extended family setup) பார்க்கலாம்.
அவசர காலங்களில் எல்லாவற்றுக்கும் அரசைச் சார்ந்திருக்க முடியாது. அதுவும் அது ஒரு கையாலாகாத (inefficient) அரசு எனில் சொல்லவே வேண்டியதில்லை. அதனால் அச்சமயங்களில் தனி மனிதர்கள் பொருளாதார ரீதியில் தம்மைத் தற்காத்துக் கொள்ளச் செய்யும் ஓர் ஏற்பாடு தான் இது.
நான்கைந்து நண்பர்களின் குடும்பங்கள் சேர்ந்து இதைச் செய்யலாம். உதாரணமாய்ப் பள்ளி அல்லது கல்லூரி நண்பர்கள் சிறந்த தேர்வு. உடன் பணிபுரிவோர் (colleagues), அருகே வசிப்போர் (neighbors), உறவினர்கள் (kith and kin) பொருத்தமான தேர்வல்ல. இரண்டு காரணங்கள்: 1) ஒரே பின்புலம் மற்றும் பொருளாதார நிலை என்பதால் ஒரே அளவிலான ரிஸ்க் இருக்க வாய்ப்புண்டு. 2) புரிதல் மற்றும் விட்டுக்கொடுத்தல் இம்மாதிரி சுற்றத்தில் குறைவு.
இந்த நான்கைந்து குடும்பங்களும் வெவ்வேறு பணிகளில் இருந்தால் நல்லது. ஏனெனில் கொரோனா உள்ளிட்ட சூழல்களில் ஒரு தொழில் நசியலாம், இன்னொரு தொழில் கொழிக்கலாம், மற்றொன்று அப்படியே நீடிக்கலாம். ஆக, ஒரே தொழில் உள்ளவர்கள் சேர்ந்து இந்தக் கம்யூனை உருவாக்கினால், அவசர காலங்களில் ஒருவேளை அத்தொழில் நசிந்தால் மொத்த அமைப்பும் மூழ்கும். இந்த கம்யூன் அமைப்பை உருவாக்கியதே பயனில்லாமல் போகும்.
இவர்களின் பொருளாதாரச் சூழல் ஓரளவு வெவ்வேறாய் இருக்கலாம். ஆனால் அதிக வித்தியாசம் இருக்கக்கூடாது. காரணம் அதுவும் அவசரக் காலங்களில் குழப்பங்களை, சில சமயம் வெறுப்பைக் கூட ஏற்படுத்தும். உதாரணமாய் மாதம் 10,000 ரூபாய் வருமானம் இருப்பவரும், 1 லட்சம் ரூபாய் வருமானம் இருப்பவரும் ஒரே கம்யூனில் இருந்தால் சரிப்படாது. அது அந்த ரூ. 1 லட்சம் வருமானம் கொண்டவருக்கு எந்தப் பலனையும் தராது. அல்லது ரூ.10,000 வருமானம் கொண்டவர் அதிகம் சுரண்டப்படும் நிலை உண்டாகும். ஆனால் இதன் பொருள் இது ஓர் எலைட் அமைப்பு என்பதல்ல. 10,000 ரூபாயை ஒட்டிய வருமானம் கொண்டவர்கள் தனி கம்யூன் அமைப்பில் இருக்கலாம். அது அவர்களுக்கு நன்கு பயனளிக்கும். போலவே லட்சம் ரூபாய் தனிக் குழு.
ஏன் நான்கைந்து? ஏன் ஏழெட்டுப் பேர் கூடாது? மிதமான எண்ணிக்கை ஒற்றுமையாகச் செயல்பட வைக்கும். எண்ணிக்கை கூடக்கூட குழப்பமும், கருத்து வேற்றுமைகளும் நுழையும். அதனால் நான்கைந்தே சரியான எண்ணிக்கை என்பது என் தனிப்பட்ட நம்பிக்கை. அதனால் இது வெறும் கம்யூன் அல்ல; மினி கம்யூன். அதே சமயம் நான்கிற்குக் கீழே போனாலும் சரிப்படாது. நிலைத்தன்மை (stability) கிடைக்காது - ஒரு மேசை என்றால் கூட குறைந்தது நான்கு கால்கள் வேண்டும் என்ற அடிப்படையில்.
இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு வர வேண்டும். இவர்கள் அருகருகே வசிக்க வேண்டும் என்றில்லை, இன்னும் சொன்னால் ஒரே நகரத்தில் / மாநிலத்தில் / நாட்டில் இருக்க வேண்டும் என்று கூட இல்லை. இவர்கள் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்றில்லை. அடிக்கடி பேசிக் கொள்ள வேண்டும் என்பது கூட அவசியமில்லை. சாதாரணக் காலங்களில் அவர்கள் தமது வழக்கமான வாழ்க்கையில் நகர்ந்து கொண்டே இருக்கலாம். இப்படியொரு கம்யூனில் அங்கம் என்பதைக் கூட நினைவு வைத்திருக்க வேண்டியதில்லை. அதனால் தான் இது வர்ச்சுவல் கம்யூன்.
என்ன மாதிரியான ஒப்பந்தம்? நான் மேலான புரிதலுக்காக இங்கே ஓர் உதாரணத்தை விவரிக்கிறேன். இதை அப்படியே பின்பற்ற வேண்டும் என்றில்லை. அந்தந்த கம்யூன் அமைப்பின் வசதிக்கேற்ப மாற்றிக் கொள்ளலாம். நான் சொல்லும் உதாரணமே கூட காலப்போக்கில் குறைகளை நிவர்த்தி செய்து மாறுதலுற்றுக் கொண்டே (evolve) வேண்டியது தான்.
இந்தக் கம்யூன் தொடங்கப்பட்ட நாள் முதல் அமைப்பின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தம் வருமானத்திலிருந்து மாதா மாதம் 10% கம்யூனுக்கென ஒரு பொது வங்கிக் கணக்கு துவங்கி அதில் சேமிக்க வேண்டும். சுழற்சி அடிப்படையில் ஒவ்வொரு உறுப்பினரும் இந்த நிதி நிர்வாகத்தைக் கவனிக்கலாம். மூன்று மாதத்திற்கொரு முறை (every quarter) எளிமையான ஒரு கணக்கை (like a balance-sheet) மொத்தக் கம்யூனுக்கும் சமர்ப்பிக்கலாம்.
உதாரணமாய் உறுப்பினரின் மாத வருமானம் 20,000 ரூபாய் என்றால் 2,000 ரூபாய் பங்களிக்க வேண்டும். இது சாதாரணக் காலங்களில். கொரோனா அல்லது யுத்தம் மாதிரியான அவசரக் காலங்களில் இத்தொகை 50% ஆக உயர்த்தப்பட வேண்டும். மேற்கண்ட உதாரணத்தில் தன் செலவுகளைச் சுருக்கிக் கொண்டு அவர் 10,000 ரூபாய் கட்டத்தொடங்க வேண்டும்.
இத்தொகையை எப்போதும் தொடக்கூடாது. குறிப்பாக, குழந்தைகளின் கல்வி, திருமணம் உள்ளிட்ட விசேஷங்களுக்கு எல்லாம் பணத்தில் கை வைக்கவே கூடாது. காரணம், இவை யாவும் திட்டமிட்ட செலவு. வீட்டில் இருப்போரின் மருத்துவ அவசரச் செலவுகள் மட்டும் விதிவிலக்கு. அதுவும் அதிகபட்சமாய் அவர் இதுவரை பங்களித்திருக்கும் தொகையை மட்டுமே எடுக்க வேண்டும். பின் அவர் அந்த மினி கம்யூன் அமைப்பிலிருந்து வெளியேறி விடலாம் அல்லது குறிப்பிட்ட கால அவகாசம் வாங்கிக் கொண்டு எடுத்த தொகையை வட்டியுடன் திரும்பக் கட்டி விடும் ஒப்பந்தத்துடன் அமைப்பில் தொடரலாம்.
இனி வரப் போவது தான் முக்கிய விஷயம். அவசரக் காலங்களில் எவருக்காவது சம்பளம் வராமல் போனால் அல்லது வேலை இழந்தால் அந்த மாதங்களில் அவர் தொகையைச் செலுத்தத் தேவையில்லை. மாறாக இதுகாறும் கம்யூன் சேமித்திருந்த தொகையிலிருந்து மாதா மாதம் அந்த வேலையிழந்த நபருக்கு அவரது 50% மாத வருமானம் கிடைக்கத் துவங்கும். அவருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் வரை இது தொடரும். இதற்கு அவர் பங்களித்த தொகையளவு தான் பெற வேண்டும் என்ற கட்டுப்பாடு இல்லை. அவருக்கு அந்த வருமானமற்ற சூழல் இருக்கும் வரை பெறலாம். அதாவது அவர் அந்தக் காலகட்டத்தில் முதலில் தன் முந்தைய சேமிப்பிலும், அது தீர்ந்த பின் கம்யூனின் பொருளாதார ஆதரவிலும் இருப்பதாக அர்த்தம்.
அவருக்கு மீண்டும் வேலை கிடைக்க அல்லது வருமானம் கிடைக்க அவர் மட்டுமின்றி அந்தக் கம்யூனின் உறுப்பினர்கள் முயற்சிக்க வேண்டும். ஏனெனில் இப்போது அவரது குடும்பச் செலவுகளுக்குப் போய்க் கொண்டிருப்பது அவர் பங்களித்த தொகை மட்டுமல்ல. கம்யூனின் காசு. அதனால் அதை எவ்வளவு சீக்கிரம் நிறுத்த முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நிறுத்துவது அந்தக் கம்யூனின் ஆரோக்கியத்திற்கும் ஆயுளுக்கும் நல்லது.
ஒருவேளை அவசரக் காலம் நெடுங்காலம் நீடிக்கிறதெனில் சூழலுக்கேற்ப பணம் செலுத்தல், பணம் கொடுத்தல் இரண்டையும் 50% என்பதற்குப் பதிலாக 45%, 40% என எல்லோரும் ஆலோசித்துக் குறைத்துக் கொண்டே வரலாம். ஆனால் வேலையிலிருப்போர் பணம் செலுத்தும் சதவிகிதமும், வேலையில் இல்லாதோர் பணம் பெறும் விகிதமும் ஒன்றாகவே இருக்க வேண்டும்.
அவசரக் காலம் முடிந்ததும் அவரவர் தம் வழமைக்குத் திரும்பி விடலாம். மீண்டும் 10% பங்களிப்பு. மீண்டும் இன்னோர் அவசரத்துக்குக் காத்திருத்தல்.
இதன் மூலம் வேலையிழப்பு உள்ளிட்ட சமயங்களில் சூழலைத் தனியே எதிர்கொள்ளாமல் ஒரு குழுவாக எதிர்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இந்த முறையில் அவசரக் காலங்களில் நீங்கள் தனி ஆள் அல்ல. நான்கைந்து பேராக உங்கள் பலம் பெருகி விடுகிறது. அது வருமானமாக இருந்தாலும் சரி, வேலை தேடலாக இருந்தாலும் சரி. அது பெரும் தெம்பை அளிக்கும்.
இது எல்லாமே அந்தத் தனி மனிதர்களின் நேர்மை தொடர்புடையது என்பதைக் கவனிக்கலாம். அவர் தன் சம்பளம் என்ன எனச் சொல்வதில் முழு நேர்மையைக் கடைபிடிக்க வேண்டும். வேலை இழந்தால் மீண்டும் வேலையைப் பெறுவதில் முழு உத்வேகத்துடன் செயல்பட வேண்டும் (அது தான் சேமிப்பிலிருந்து வருகிறதே என எண்ணிச் சோம்பியிருத்தல் கூடாது).
இப்படிப் பல விஷயங்கள் இருக்கின்றன. அதனால் தான் இது நன்கு புரிந்து கொண்ட நண்பர்கள் சேர்ந்து செய்யும் விஷயம் என்றேன். அதனால் தான் இதில் ஒரே மாதிரி பொருளாதாரம் கொண்டோர் இருப்பதே நல்லது என்றேன்.
இன்னொரு விஷயம், கம்யூனில் ஒருவருக்கு வருமானம் நிற்கும் போது, மற்றவர்கள் ஏதோ தமது தயவில் தான் அவர் இருப்பதாகப் பேசுதலோ எண்ணத்தை ஏற்படுத்தலோ கூடாது. ஏனெனில் எவருக்கும் அதே நிலை நாளை வரலாம். அதை உணர்ந்து இதைத் தமது கடமையாக, இன்னும் சொல்லப் போனால் உரிமையாகக் கருதியே செய்ய வேண்டும்.
சாதாரணக் காலங்களில் தொடர்பில் இருக்க வேண்டியது கட்டாயமில்லை என்றாலும் அப்போதும் அந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி குடும்பத்தினரும் அவ்வப்போது சந்தித்துக் கொண்டால் அந்த உறவு இறுகும். ஒற்றுமையும் ஆதரவும் புரிதலும் அதிகரிக்கும். அவசரக் காலங்களில் ஒரு குடும்பம் மட்டும் உதவி பெறுகையில் அதை மற்ற உறுப்பினர்களோ, அவர்களின் குடும்பங்களோ தவறாகப் பாராத நிலை உருவாகும். இதைத் தான் நீட்டிக்கப்பட்ட குடும்ப அமைப்பு என்றேன். அதாவது வெறும் புற அடிப்படையில் மட்டுமின்றி மனமொத்தும் இந்த கம்யூன் அமைப்பு அந்த நான்கைந்து குடும்பங்களையும் இணைக்கும். அது நல்லது.
இது ஒரு மாதிரி இன்ஷ்யூரன்ஸ் மாடல் தான். இதில் நிறையத் தர்க்கக் கேள்விகள் தோன்றலாம். இது ஒரு தொடக்கச் சிந்தனை மட்டுமே. தாராளமாய் அவரவர் விருப்பத்திற்கேற்ப இதைச் செழுமைப்படுத்தலாம்.

Published on June 04, 2020 08:48
May 9, 2020
கன்னித்தீவு - விமர்சனப் போட்டி முடிவுகள்
கன்னித்தீவு விமர்சனக் கட்டுரைப் போட்டி மார்ச் தொடக்கம் முதல் ஏப்ரல் இறுதி வரை நடந்தது. போட்டிக்கு மொத்தம் 35 கட்டுரைகள் வந்தன (முழுப்பட்டியலை இங்கே காணலாம்). அதிலிரண்டு விதிமுறைகள் காரணமாகத் தகுதியிழந்ததால் 33 மட்டும் போட்டியில் இருந்தன. அவற்றிலிருந்து நானும் நண்பரும் 20 கட்டுரைகளை மட்டும் நடுவர் குழுவுக்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினோம்.
கன்னித்தீவு நாவலை வாசித்து நல்லபிப்பிராயம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் பா. ராகவனும், நவீனாவும் நடுவர்களாக இருக்கச் சம்மதித்தனர். அவர்கள் இருவரும் ஒவ்வொரு கட்டுரைக்கும் அளித்த மதிப்பெண்களின் கூட்டுத் தொகை அடிப்படையில் இறுதி வெற்றியாளர்கள் பட்டியல் இது.
முதல் பரிசு (ரூ. 5,000) - சம்பத் குமார் கணேஷ் இரண்டாம் பரிசு ரூ. 3,000) - ரஞ்சனி பாசு மூன்றாம் பரிசு (ரூ. 2,000) - பிரியதர்ஷிணி கோபால் சிறப்புப் பரிசு (ரூ. 1,000) - N.R. பிரபாகரன்போட்டி அறிவிப்பில் மூன்று பரிசுகள் மட்டும் சொல்லியிருந்தேன். இப்போது கூடுதலாய் ஒரு சிறப்புப் பரிசும் வழங்கப்படுகிறது - கூட்டு மதிப்பெண்ணில் நான்காவதாய் வந்த கட்டுரைக்கு. அது மூன்றாவதிலிருந்து ஒரே மதிப்பெண் தான் குறைவாய் இருந்தது என்பதாலும், தனிப்பட்டு எனக்கு மிகப் பிடித்த விமர்சனமாய் இருந்தது என்பதாலும். வெற்றியாளர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
உயிர்மை சுஜாதா விருதுகள், அமேஸான் கிண்டில் Pen to Publish உள்ளிட்ட போட்டிகளில் நடுவராய்ச் செயல்பட்டிருப்பவன் என்ற முறையில் சொல்கிறேன்: ஒரு போட்டியின் தரம் என்பது நடுவர்களின் அர்ப்பணிப்பு மற்றும் நேர்மை பொறுத்தே அமைகிறது. இந்தப் போட்டியின் முடிவுகளைப் பார்க்கும் போது இப்போட்டியில் கலந்து கொண்டவர்கள் மெய்வருத்தக் கூலி பெற்றதாகவே நம்புகிறேன். தமிழ்ச் சூழலில் இது அரிதான ஒன்று தான். அந்த அடிப்படையில் நடுவர்களுக்கு என் பிரியங்கள்.
போட்டியில் கலந்து கொண்ட மற்ற 31 வாசக நண்பர்களுக்கும் என் அன்பும் மரியாதையும். குறைந்தபட்சம் 25 கட்டுரைகள் வந்தால் தான் போட்டி நடக்குமென்று அறிவித்திருந்ததால் ஒரு கட்டத்தில் போட்டி நடக்குமா என்ற நிலை கூட இருந்தது. ஆக, போட்டியில் கலந்து கொண்ட ஒவ்வொருவருமே இந்தப் போட்டி ரத்தாகாமல் வெற்றிகரமாக நடக்கக் காரணமானவர்கள். வெற்றிப் படைப்புகள் தாண்டி என் மனதுக்குப் பிடித்தமான விமர்சனங்கள் இவற்றில் சிலவுண்டு. உதாரணமாக பூங்கொடி பாலமுருகன் எழுதிய விமர்சனத்தில் சீதை லட்சுமண ரேகையைத் தாண்டியதால் தான் ராமாயணம் பிறந்தது என்பது போல் பார்வதியும் ரிஸ்க் எடுத்ததால் கன்னித்தீவு பிறந்தது என்று சொல்லியிருந்தது brilliant அவதானிப்பு. இது போல் இன்னும் பல ஆச்சரியங்கள் அவற்றில் இருந்தன.
போட்டிக்கு நிறைய விமர்சனங்கள் வரத் தூண்டுகோலாய் இருந்த 'வாசிப்பை நேசிப்போம்' குழு நண்பர் கதிரவன் ரத்தினவேலின் முயற்சிகளுக்கான என் நன்றியை மீண்டுமொரு முறை இங்கே பதிகிறேன்.
வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுத் தொகை வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். வெற்றி பெற்றோர் மின்னஞ்சலிலோ, மெசஞ்சரிலோ எனக்கு விவரங்களைப் பகிரவும் (A/C No., Name, Bank, Branch, IFSC).
முக்கியமாய் ஒரு கடைசிச் செய்தி: போட்டியில் முதல் பரிசு பெற்றிருக்கும் சம்பத் போட்டியில் பங்கெடுக்க விருப்பமில்லை, இருந்தாலும் எண்ணிக்கைக்காகக் கலந்து கொள்வதாகத் தனிச் செய்தியில் சொல்லியிருந்தார். ஏனென வினவியதற்கு சில ஜாம்பவான்கள் போட்டியில் இருப்பதாகவும், பலரும் நாவலில் உள்ளே புகுந்து விளையாடி இருப்பதாகவும் தன் தயக்கத்தைச் சொன்னார். நான் "Winners never quit" என்று சொல்லி அதை நிராகரித்தேன். இன்று அவர் நிஜ வின்னர்!
*
போட்டி அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156931432512108
போட்டி நீட்டிப்பு அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157072931292108
அடுத்த கட்டம் பற்றிய அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157141521967108
இறுதிச்சுற்று பற்றிய அறிவிப்பு: https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10157148739987108
*
Published on May 09, 2020 23:35
April 12, 2020
கன்னித்தீவு: விமர்சனங்கள்
போட்டிக்கு வந்தவை
:
சௌம்யா ரெட் - https://sowmyathiyagarajan.blogspot.com/2020/04/blog-post.htmlகதிரவன் இரத்தினவேல் - https://www.facebook.com/kathir.rath/posts/10218613736628783 Madhavan PL - https://www.facebook.com/permalink.php?story_fbid=2533465193558689&id=100006856995788Mari Vijay - https://www.facebook.com/marivijay.1298/posts/2835722403183293 Santhosh Kolanji - https://www.facebook.com/santhosh1795/posts/2768318529903444யுவராஜ் மாரிமுத்து - https://tamizhnathi.blogspot.com/2020/03/blog-post.html மற்ற விமர்சனங்கள்:
பா. ராகவன் - https://www.facebook.com/raghavan.pa/posts/2419721075022160நவீனா - https://www.youtube.com/watch?v=xKXboAwHWjoகோகுல் ப்ரசாத் - https://www.facebook.com/gokul.prasad.7370/posts/2647057748745438சௌம்யா - https://www.arattaigirl.com/2019/09/blog-post.htmlரஞ்சனி பாசு - https://www.youtube.com/watch?v=Qv_U7uPUl4wடாக்டர் ராதா / சில்வியா ப்ளாத் - https://www.youtube.com/watch?v=y-6ADGEPsvw Manoharan Thangavel - https://www.facebook.com/mano.haran.737/posts/2760474157336412Subhashini - https://www.facebook.com/smileygirl.shiny/posts/2642487872675457 நடராஜன் கல்யாணசுந்தரம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156893988312108தமிழ் TON - https://tamil.trendingonlinenow.in/kannitheevu-book-review/Hemalatha G. - https://akash-ram.blogspot.com/2020/04/hemalatha-g.html Kamaraj M Radhakrishnan - https://www.facebook.com/kamaraj.m.radhakrishnan/posts/10220378586722176GoodReads - https://www.goodreads.com/book/show/52074884

Published on April 12, 2020 09:36
March 21, 2020
சைக்கோ: பேரன்பெனும் பாசாங்கு
“We all go a little mad sometimes.”
- Psycho (1960) படத்தில் வரும் வசனம்
சைக்கோ (Psycho) என்பது சைக்கோபாத் (Psychopath) என்ற சொல்லின் பேச்சு வழக்கு. கேம்ப்ரிட்ஜ் அகராதி அச்சொல்லுக்கு இப்படி விளக்கம் அளிக்கிறது: “a person who has no feeling for other people, does not think about the future, and does not feel bad about anything they have done in the past”. அதாவது எதிர்காலத்தைப் பற்றிய கவலையோ இறந்த காலம் பற்றிய குற்றவுணர்வோ அற்ற ஆள். பொதுவாக சைக்கோ பாத்திரத்தை மையமிட்டு புனையப்படும் எழுத்துக்களோ, திரைப்படங்களோ இந்த அர்த்தப்படுத்தலை அசைத்துப் பார்க்க முனைவன. அதாவது அவை சைக்கோக்கள் ஏன் சைக்கோக்கள் ஆனார்கள் என அடிக்கோடிட முனைகின்றன. மிஷ்கினின் சைக்கோ அம்முனைப்பின் உச்சம்.

தமிழ் சினிமாவுக்கு சைக்கோபாத் படங்கள் புதியவை அல்ல. பன்னெடுங்காலமாக எடுக்கிறோம். பாரதிராஜாவின் சிகப்பு ரோஜாக்கள் (1978) படத்தை இதன் தொடக்கம் எனலாம். பிறகு பாலு மகேந்திராவின் மூடுபனி (1980) ஆல்ஃப்ரெட் ஹிட்ச்காக்கின் Psycho பாதிப்பில் எடுக்கப்பட்டது. அருமையான இவ்விரு படங்களின் துவக்கத்துக்குப் பிறகு 1986ல் திரைப்படக்கல்லூரி மாணவரான ஆர். அரவிந்த்ராஜ் இயக்கிய ஊமை விழிகள். பிறகு 2001ல் சுரேஷ் கிருஷ்ணாவின் ஆளவந்தான். கமல் ஹாசன் எழுதிய தாயம் என்ற தொடர்கதையை அடிப்படையாய் வைத்து அவரே எழுதிய திரைக்கதை. பிறகு சிலம்பரசன் திரைக்கதை எழுதி, ஏஜே முருகன் என்பவர் இயக்கிய மன்மதன் (2004), கௌதம் மேனன் இயக்கிய வேட்டையாடு விளையாடு (2006) மற்றும் நடுநிசி நாய்கள் (2011), ராம் குமாரின் ராட்சசன் (2018), ஸ்ரீசெந்தில் இயக்கிய காளிதாஸ் (2019) என நிறையத் திரைப்படங்கள் உண்டு. மிஷ்கினின் சைக்கோ அதன் சமீபக் கண்ணி.
இவற்றில் மிகச் சில தவிர்த்து எல்லாவற்றிலுமே சில பொது அம்சங்கள் உண்டு. Random-ஆகப் பெண்களைக் கடத்திக் கொலை செய்யும் ஒரு சைக்கோ. அவனுக்குப் பின்னிருக்கும் பாலியல் தொடர்புடைய ஏதோ ஒரு சிறுவயதுச் சம்பவம். சிறார் குற்றவாளியாகச் சிறை சென்று வந்திருப்பான். (சுஜாதா கூட அப்ஸரா என்றொரு நாவல் எழுதி இருக்கிறார். ஒரு கம்ப்யூட்டர் ஆசாமி சிறு வயது உளச்சிக்ககால் தெரியாத பெண்களைக் கணிணி நிரல் மூலம் தேர்ந்தெடுத்துக் கொலை செய்வான்.)
சைக்கோவிலும் பிசகாமல் இது தான் இருக்கிறது. ஆனால் உடன் இரு பிரச்சனைகள். முதல் விஷயம் அவ்விஷயத்தின் தெளிவின்மை. அடுத்த விஷயம் அதன் பாசாங்கு.
தெளிவின்மையை மிஷ்கின் திட்டமிட்டே வைத்திருக்கிறார் என எண்ணுகிறேன். ஆனால் பிரச்சனை அவருக்குத் தெரிந்தே அது படத்தின் அங்கமாக இருக்கிறதா இல்லையா என்பதல்ல; பார்வையாளனுக்கு அந்தத் தெளிவின்மையானது பூடகமான ஒரு வசீகரத்தை அளிக்கிறதா அல்லது வெறும் குழப்பத்தை, நிறைவின்மையை மட்டுமே அளிக்கிறதா என்பதே. சைக்கோ படத்தில் இரண்டாவது தான் நிகழ்கிறது.
ஒழுக்கக் கட்டுப்பாடுகள் நிறைந்த கிறிஸ்துவப் பள்ளி விடுதியில் சுயஇன்பம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு பதின்மனான வில்லனுக்கு ஆசிரியையால் தினம் அறுபது பிரம்படிகள் வழங்கப்படுகிறது. (அவன் தன் சுண்டு விரலை இழந்ததற்குக் காரணம் இதுவாக இருக்கலாம்.) ஆனால் அவனோ தன் குறி கால் சராயின் ஜிப்பில் மாட்டிக் கொண்டதாலேயே அதை விடுவிக்க கால்களுக்கிடையே தன் கையை வைத்திருந்ததாக ஆசிரியையிடம் மன்றாடுகிறான். அவன் சொற்கள் செவி மடுக்கப்படுவதில்லை. இரவெல்லாம் கண்காணிக்கப்பட்டிருக்கிறான். நிம்மதியும் உறக்கமும் இழக்கிறான். பள்ளியில் எல்லோருக்கும் தெரிந்து அவமதிக்கப்படுகிறான். அதனால் கடும் குற்றவுணர்வுக்கும் மனவுளைச்சலுக்கும் ஆளாகி இருக்கிறான். இதில் இரண்டு சாத்தியங்கள் இருக்கின்றன. ஒன்று அவன் ஜிப் மாட்டியது நிஜமே, அவன் சுயஇன்பம் செய்யவில்லை, ஜிப் மாட்டிய சம்பவத்தில் தான் ஆண்மை இழந்து அவன் கடத்தும் பெண்களைத் தொடுவதில்லை. அல்லது அவன் சுய இன்பம் செய்தது நிஜமே, ஆனால் அது அவ்வயதின் இயல்பு, ஆனால் வறட்டு விக்டோரிய ஒழுக்கவாதத்தால் அதை ஒரு பெரிய விஷயமாக்கி அந்த ஆசிரியை அவனுக்கு உளச்சிக்கல் ஏற்படுத்தி அதன் நீட்சியாக அவன் தனது ஆண்மையை இழக்கிறான் அல்லது கலவி என்ற விஷயத்தை வெறுப்புக்கும் பயத்துக்கும் உரியதாக மனதில் வரித்துக் கொள்கிறான். இதில் எது நிஜமாக நடந்தது என்பது தெளிவில்லை. ஆனால் அது பரவாயில்லை.
அடுத்து அவன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்படுகிறான். அவனை அங்கே அழைத்துச் செல்லும் வழியில் போலீஸ்காரர் அவனை பாலியல் வல்லுறவு செய்கிறார். முதலில் அவனை ஏன் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்புகிறார்கள் என்பது தெளிவில்லை. சுயஇன்பத்தை எல்லாம் காரணம் காட்டி அனுப்ப முடியுமா என்ன! அடுத்து இந்த போலீஸ்காரர் விஷயம். இப்போது வில்லன் சைக்கோவாகக் காரணம் பிரம்படியா போலீஸ்காரரா எனக் குழப்பம் வருகிறது. போலீஸ்காரர் தான் காரணம் என்றால் ஏன் பெண்களை வரிசையாகக் கொலை செய்ய வேண்டும்? ஆக, போலீஸ்காரர் என்பது சுயஇன்ப விவகாரத்தைப் பலவீனமாகப் பார்வையாளன் உணரக்கூடும் என்பதால் இயக்குநர் கூடுதலாக ஒரு காரணத்தை வைத்து விடுவோம் என்று சேர்த்திருப்பதாகவே எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. இது அடுத்த குழப்பம்.
அடுத்து அவன் ஏன் ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பெண்ணைக் கடத்த வேண்டும்? மேலே சொன்ன இரண்டில் எது அவனது சைக்கோத்தனத்துக்குக் காரணமென்றாலும் இது பொருத்தமற்றதாகத் தெரிகிறது. இன்னொன்று அப்படிக் கடத்தப்படும் பெண்ணை ஏதேனும் காரணத்தால் அவனால் கொல்ல முடியவில்லை என்றால் அணுக எளிதான பாலியல் தொழிலாளி ஒருத்தியைக்கடத்திக் கொல்கிறான் என்கிறார்கள். அப்படிப் பிழைக்கும் ஒருத்தி தான் அதிதி ராவ். எனில் அப்படிப் பிழைத்த மற்ற பெண்கள் என்ன ஆனார்கள்? என்ற கேள்விக்குப் பதில் இல்லை.
தன்னை வன்புணர்ந்த போலீஸ்காரர் உட்பட எல்லோரையும் கடத்திக் கொல்லும் சைக்கோ தன் நிலைக்கு மூலக்காரணமான ஆசிரியையை மட்டும் ஏன் கொல்லாமல் எட்டாண்டுகளாக சிறை வைத்திருக்கிறான் என்பதற்கும் சரியான விளக்கம் இல்லை.
அடுத்து அங்குலிமாலா என்ற உருவகம். வில்லனுக்கு அந்தப் பெயரையே சூட்டி இருக்கிறார் இயக்குநர். தன் நேர்காணல் ஒன்றிலும் இது புத்தர் கதையில் வரும் அங்குலிமாலாவின் கதையை ஒட்டியது என்றார் மிஷ்கின். அங்குலிமாலா என்ற கொடூரன் தானிருந்த வனத்தில் வருவோரைக் கொன்று அவர்களின் சுண்டுவிரலை எடுத்து மாலையாகப் போட்டுக் கொள்வபவன். ஒருநாள், அவன் இருக்கும் காட்டுப் பகுதியிலே செல்ல புத்தர் முயன்ற போது விஷயத்தைச் சொல்லி மக்கள் அவரைத் தடுத்தனர். புத்தர் மீறி வனத்துள் சென்று திரும்பி வருகையில் அவனை அழைத்து வந்தார். அப்போதிருந்து அவன் சாதுவாகி, இறுதி வரை அவரது சீடர்களுள் ஒருவராக இருந்து மறைந்தான். புத்தர் என்ன சொல்லி அவன் மனதை மாற்றமடைய வைத்தார் என்பது குறித்து பல்வேறு ஊகங்கள் கதைகளாக நிலவுகின்றன. தான் அதற்கு ஒரு பதிலை இப்படத்தின் மூலம் சொல்ல முயன்றிருப்பதாக மிஷ்கின் குறிப்பிட்டார்.
அதுவுமே குழப்பமாக மிஞ்சுகிறது. படத்தில் நாயகன் பெயர் கௌதம். ஆக, அவன் தான் அந்த புத்தன் என்று கொள்ள வேண்டியிருக்கிறது. ஆனால் உண்மையில் படத்தில் வில்லனை மீட்பது அதிதி ராவின் அன்பு தான். இதில் அதிதி ராவின் பெயர் தாகினி. புத்த மரபில் வரும் ஒரு தேவதை. ஆன்மீக குரு போன்றவள். தியானம் மற்றும் போதனைகளைப் பாதுகாப்பவள். அங்குலிமாலாவைக் காப்பது புத்தரா தாகினியா? அல்லது உயிரைப் பணயம் வைத்து அதிதியை மீட்குமளவு போகும் கௌதமின் காதல் தான் அவனை ஒரு தோல்வியுற்றவனாக உணரச் செய்து அங்குலிமாலா திருந்தக் காரணம் என்கிறாரா? ஆனால் அதிதி இறுதியில் அவனது கால் விலங்கின் சாவியை அளிப்பதும் தொலைக்காட்சியில் தரும் பேட்டியைக் காண்பதுமே வில்லன் திருந்தக் காரணமாக அமைவதாகவே எடுக்க வேண்டியுள்ளது.
எல்லாவற்றுக்கும் மேல் படத்தில் பேசப்படும் அன்பு அபத்தமாகவும் ஆபத்தாகவும் தோன்றுகிறது. அதிதி ராவ் சொல்கிறார், கடத்தப்பட்டு வைத்திருந்த நாட்களில் தான் வில்லனிடம் குரூரத்தைப் பார்க்கவில்லை ஒரு குழந்தையைத் தான் பார்த்தேன் என. அதிதி ராவே சைக்கோவோ என எண்ண வைக்கும் வசனம் அது. அதிதி ராவை அறையில் வைத்துக் கொண்டே மூன்று பேரின் தலையை வாங்குகிறான் வில்லன். அதில் தெரிவது என்ன குழந்தைத்தனமா? உளச்சிக்கலால் பாதிப்புற்றவன், அவனது சைக்கோக் கொலைகளுக்குப் பின் இருக்கும் மனநிலை பாதிப்பைக் கணக்கில் கொள்ள வேண்டும் என்று சொல்வது வேறு விஷயம். போகிற போக்கில் அவன் குழந்தை, அவனுக்கு அன்பை வாரி வழங்க வேண்டும் என்று சொல்வது தர்க்கமே இல்லாதது. இதை நீட்டித்து ஒரு சிறுமியை வல்லுறவு செய்தவனுக்கும் சொல்ல முடியும். அதை நம்மில் யாரும் செய்வோமா? எவ்வளவு ஆபத்தான சிந்தனை!
மிஷ்கினின் பிரச்சனை என்னெனில் அவர் பிசாசு படத்தில் செய்ததையே இதிலும் செய்ய முயன்றிருக்கிறார். பிசாசு என்பது கெட்டது, வன்முறையானது என்று மட்டுமே இருந்த சித்திரத்தை உடைத்து, அன்பும், காதலும் கொண்ட ஒரு பேயைக் காட்டினார். அதையே சைக்கோவுக்கு நீட்டிக்கப் பார்த்தது தான் சிக்கல். ஒரு சைக்கோவுக்குப் பின்னிருக்கும் ரகசியங்களை உளப்பகுப்பாய்வு செய்வது வேறு, அவன் குழந்தை, அவனை ஒரு தாயைப் போல் அணுக வேண்டும் என்று அவனது குற்றங்களை எல்லாம் ஒன்றுமில்லாமல் கழுவி விட்டு ரத்து செய்வது வேறு. சைக்கோ படம் இரண்டாவதைத் தான் தன் முதிர்ச்சியின்மையால் செய்கிறது.
இவை யாவும் சேர்ந்து தான் பார்வையாளனை படத்துடன் முழுமையாக ஒன்ற விடாமல் தடுத்து விடுகிறது. அதானாலேயே சுமார் என அடையாளம் பெறுகிறது.
படத்தில் தொழில்நுட்பரீதியாக ஏராள நல்ல விஷயங்கள் இருக்கின்றன. இசையும், ஒளிப்பதிவும், ஆக்கமும் உரிய உச்ச சாத்தியத்தை இப்படத்தில் எய்தி இருக்கின்றன. ஆனால் படம் என்பது அதன் உடல் மட்டுமல்ல, அதன் ஆன்மாவும் சேர்த்துத் தான்.
பலரும் படத்தில் விரவிக் கிடக்கும் தர்க்கப் பிழைகளைச் சுட்டுகிறார்கள். பார்வை அற்றவன் காரோட்டுவது, அவனைத் தனியே விடுத்து கனடாவிலுள்ள பெற்றோர், சிசிடிவி கேமெராக்களற்ற நகரம், தொடர்கொலைகள் தொடர்பாய் உருப்படியாய் ஒன்றுமே செய்யாத போலீஸ் எனப் பல விஷயங்கள் இருக்கின்றன. அது அவரது வழமை தான். என்ன இம்முறை எண்ணிக்கை கொஞ்சம் ஜாஸ்தியாகி விட்டது!
மிஷ்கின் படங்களில் வரும் நகரத்தில் பாத்திரங்கள் தவிர யாரும் இருப்பதில்லை. இதெல்லாம் யதார்த்தமா? ஏன் அவர் பாத்திரங்கள் தரையைப் பார்த்துக் கொண்டே சற்று நேரம் நிற்கிறார்கள்? இதெல்லாம் பத்தாண்டுகளாய் மிஷ்கின் படம் வரும் போதெல்லாம் எழும் பிரபலக் கேள்விகள். தான் யதார்த்தப் படம் எடுப்பதாய் மிஷ்கின் எப்போதும் சொல்லிக் கொண்டதில்லை. அவருடைய சினிமா உலகம் யார்த்த சினிமாவுக்கும் ஃபேண்டஸி சினிமாவுக்கும் இடையில் ஒரு புள்ளியில் நிற்கிறது. அவரது தனித்துவம் அது தான். அது நிஜ உலகம் அல்ல; மிஷ்கினின் உலகம். எப்படி பண்டோரா என்பது ஜேம்ஸ் கேமரூனின் உலகமோ அப்படி. அதற்கு மிஷ்கின் தான் கடவுள். அதில் அவர் இஷ்டப்படி தான் மனிதர்களும், மிருகங்களும், பொருட்களும் நடமாடுவார்கள். உங்களுக்குப் பழகிய பழைய உலகை அவர் மீது திணிக்காதீர். அவருலக நியமங்களின்படி அவர்கள் யதார்த்தமாகவே இருக்கிறார்கள்.
எனக்குப் படத்தில் பிடித்த காட்சி. “தனிமையிலே இனிமை காண முடியுமா…” என்று ஏஎம் ராஜா பாடலைப் பாடிக் கொண்டிருக்கும் போதே போலீஸ்காரரான ராம் தலை வெட்டப்பட்டு இறப்பது. அப்பாடலுக்கும் வில்லனின் மனநிலைக்கும் நெருங்கிய தொடர்புண்டு என்பது தான் விஷயம். அதிதி கால் விலங்கின் சாவியை வில்லனுக்கு விட்டுப் போவதும், அதை ஆசிரியை பறித்து விழுங்குவதும், வில்லன் அவள் குரல் வளையைக் கடித்து சாவியை மீட்பதும் அபாரமான காட்சி. உண்மையில் அவனது மீட்புக்கான கணம் அதுவே எனத் தோன்றுகிறது. அந்தக் கொலையோடு அவன் தன் மன விகாரங்களை முடித்துக் கொள்கிறான். ரத்தம் தோய்ந்த அந்தச் சாவி தான் அவனுக்கு விடுதலை அளிக்கிறது. (அதன் பிறகு தொலைக்காட்சியில் அதிதியின் உணர்ச்சி ததும்பும் மிகைப் பேட்டியைப் பார்ப்பது எல்லாம் அவசியமற்ற செருகல்.)
அதிதி ராவ் ஒரு காட்சியில் ஆசிரியைக்கு சிகரெட் கொடுப்பார். சிகரெட் பிடிப்பது எவ்வகை ஒழுக்கக்குறைவும் இல்லை என்றிருக்கும் ஆசிரியை தான் சுயஇன்பத்தைப் பெரும்பாவமாகக் கருதுகிறார். கிறிஸ்துவ ஒழுக்கவியலின் ஹிப்போக்ரைஸியின் மீதான விமர்சனம்தான் அது. ஒரு காலத்தில் சுயஇன்பம் தவறானது, பாவம், குற்றம் என்ற கருத்து பரவலாக இருந்தது. அதைப் பற்றிப் பேசவே தயங்கினார்கள். அது பற்றிய மூட நம்பிக்கைகள் பரவிக் கிடந்தன (ஒரு சொட்டு விந்து = 60 சொட்டு ரத்தம், உறுப்பு சிறுக்கும், ஆண்மை போகும் etc). சுஜாதாவே ஏன்? எதற்கு? எப்படி? தொடரில் சுயஇன்பம் பற்றிய கேள்விக்கு “இனியும் தயங்காமல் உடைத்துப் பேசி விடலாம் என்றிருக்கிறேன்” எனப் பீடிகை போட வேண்டி இருந்தது (அது 80களின் இறுதி). ஏழெட்டு ஆண்டுகள் முன் நான் குங்குமம் இதழில் ‘ச்சீய் பக்கங்கள்’ தொடர் எழுதுகையில் சுயஇன்பம் அத்தியாயத்திற்கு அனுமதி கிட்டவில்லை. கடந்த இருபது ஆண்டுகளில் பல பத்திரிக்கை, தொலைக்காட்சிகளின் பாலியல் மருத்துவர் கேள்வி - பதில்களிலும், திரைப்பட வசனங்களிலும் காட்சிகளிலும் சுயஇன்பம் வந்து விட்டது. இன்று சேலம் சிவராஜ் சித்த வைத்தியர் பரம்பரை தவிர யாரும் சுய இன்பத்தைப் பற்றி எதிர்மறையாகப் பேசுவதில்லை. அதனால் சைக்கோ படம் அதைப் பற்றிப் பேசும் போது நமக்கு எந்த ஒரு அதிர்ச்சியும் இருப்பதில்லை. (பேரன்பு படத்தில் பதின்மப் பெண்ணோருத்தி சுயஇன்பம் செய்வதையே சொல்லி விட்டார்களே!)
மிஷ்கினின் ஆகப் பெரிய மேதமை சைக்கோ படத்தில் தாகினி பாத்திரத்துக்கு அதிதி ராவைத் தேர்ந்தது. கொலைகாரன் பலிபீடத்தில் அதிதியை மல்லாக்கக் கிடத்திய பின் அவரது பரிசுத்த முகத்துக்குக் க்ளோஸப் வைக்கும் போது நமக்குத் தோன்றுகிறது –
இத்தனை அழகான கழுத்தைப் பார்த்தால் யாருக்கும் வெட்டத் தான் தோன்றும்.
***
(உயிர்மை - ஃபிப்ரவரி 2020 இதழில் வெளியானது)
Published on March 21, 2020 20:12
March 14, 2020
ஷ்ருதிக்கு என்ன ஆச்சு?
கபிலன் மற்றும் ஷ்ருதி டிவி குழுவினர் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கியத்துக்குச் செய்து வருவது ஒரு சுத்தமான சேவை. சேவை என்றால் பெரும்பாலும் எந்த எதிர்பார்ப்புமற்ற வேலை. தற்போது அவர்கள் சிரம தசையில் இருப்பதாக அறிகிறேன். அவர்களின் யூட்யூப் சேனலிலிருந்து போதுமான வருமானம் வருவதில்லை என்பதே காரணம். அதை எதிர்கொள்ளும் முகமாக துறைசார் வல்லுநர்களின் ஆலோசனைப்படி இலக்கியத்துக்கென தனி யூட்யூப் சேனல் துவங்கி இருக்கிறார்கள். Shruti.TV Literature என்ற பெயரில். பழைய பாடங்களிலிருந்து வாசகர்களுக்கு அவர் வைத்திருக்கும் கோரிக்கைகள் இரண்டே இரண்டு தாம்: 1) வீடியோக்களை முழுக்கப் பாருங்கள். 2) டவுன்லோட் செய்யாமல் நேரடியாகப் பாருங்கள். செய்ய முடிந்த எளிமையான உதவிகள்!
சேனலை subscribe செய்ய: https://www.youtube.com/channel/UCW1Eo2DbGgHjc0zk9wCi2Bw?sub_confirmation=1
இந்த முயற்சி அவருக்கு மீட்சியைத் தரட்டும். வாழ்த்துக்கள்.
*
இது குறித்து மேலும் சில விஷயங்கள்.
கபிலன் பொதுவாக இலக்கிய நிகழ்ச்சிகளுக்குத் தானாய் காசு கேட்பதில்லை. சில சமயம் சம்மந்தப்பட்டவர்கள் பணம் தர முன் வந்தாலும் மறுத்து விடுகிறார் என்பதையும் அறிவேன். (நானே நேரடியாக அதை எதிர்கொண்டிருக்கிறேன்.) மற்றபடி, அவர் முதன்மையாய் நம்பியிருப்பது வீடியோக்கள் இடையே விளம்பரங்கள் காட்டப்படுவதன் மூலமாக யூட்யூப் அளிக்கும் வருமானத்தை மட்டுமே. அது யூட்யூப் சேனலின் சப்ஸ்ப்க்ரைபர்களின் எண்ணிக்கை, வீடியோக்களைப் பார்ப்போரின் எண்ணிக்கை, ஒவ்வொரு வீடியோவும் பார்க்கப்படும் நேரம், இடையே சொருகப்படும் விளம்பரங்கள் பார்க்கப்படும் நேரம் என எல்லாவற்றையும் பொறுத்தே அமையும். என் புரிதலில் அது மிகவும் மறைமுகமான வருமானம். ஓர் எண்டர்டெய்ன்மெண்ட் சேனலுக்கு இது சரிப்படும். ஆனால் பிரதானமாய் இலக்கியம் மாதிரி அடர்த்தியான விஷயத்தை நம்பி இயங்கும் சேனலுக்கு ஒத்து வராது, அதுவும் குறிப்பாய்த் தமிழ்ச் சூழலில். இங்கே இலக்கியம் வாசிப்பவர்களே மொத்தம் பத்தாயிரம் பேர் தான். அதிலும் ஆயிரம் மனச்சாய்வுகள், முன்தீர்மானங்கள், அலட்சியங்கள், அக்கப்போர்கள்.
அதனால் என் தனிப்பட்ட சிபாரிசு கபிலன் இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு ஒரு குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயித்து இலக்கிய நிகழ்ச்சி நடத்துவோரிடம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது தான்.
இன்று உலகில் எதுவும் இலவசமில்லை. எல்லாவற்றுக்குமே மறைமுகமாகக் காசு கொடுத்துக் கொண்டு தான் இருக்கிறோம். நாம் தருவோம் அல்லது நம் பொருட்டு இன்னொருவர். ஜிமெயில் கூட பொதுமக்களுக்குத் தான் இலவசம்; கார்ப்பரேட் பயன்பாட்டுக்குக் கட்டணம். ஆனால் கார்ப்பரேட்களிடம் தைரியமாய்ப் பணம் கேட்க பொதுமக்களிடம் அதைப் பரவலாக்கிப் பழக்கப்படுத்தியதே காரணம். ஓலா, ஊபர் எல்லாம் ஆரம்பத்தில் மிக மிகக் குறைவான கட்டணத்தில் வாடகைக் கார் ஓட்டியதும் இதே உத்தியில் தான். சில ஆண்டுகளில் மக்களை அந்தச் சொகுசுக்குப் பழக்கப்படுத்தி விடுவது. பிறகு கட்டணம் உயர்த்தினாலும் அதில் கணிசமானோர் அதைக் கைவிட முடியாமல் கூடுதல் காசு கொடுத்து தொடர்ந்து பயன்படுத்துவார்கள். (சில ஆண்டுகள் முன் என் அலுவகலத்தில் ஒரு பெண் ஒருமுறை ஓலா / ஊபர் வேலை நிறுத்தத்தின் போது அதைக் காரணம் காட்டி விடுப்பு எடுத்த போது உண்மையாகவே அதிர்ந்து போனேன். அந்த அளவு அதைச் சார்ந்து இயங்குமளவு மக்களைப் பழக்கப்படுத்தி விடுகிறார்கள். சந்தைப்படுத்தல் உத்தி!)
ஷ்ருதி டிவியும் இந்த முதல் ஐந்தாண்டுகளில் நவீனத் தமிழ் இலக்கியத்தில் அப்படிப் பழக்கப்படுத்தி விட்டார் என்றே சொல்வேன். இப்போது எந்த விழா என்றாலும் வாசகர்கள் ஷ்ருதி டிவியில் வரும் என்ற எண்ணம் இயல்பாகவே வந்து விட்டது. சொல்லப் போனால் சமீப ஆண்டுகளில் நட்சத்திர எழுத்தாளர்களின் இலக்கியக் கூட்டங்களில் கூட்டம் குறையவே ஷ்ருதி டிவி தான் காரணம் என்பேன். எதற்கு வாகன நெரிசலில், அலைந்து திரிந்து போக வேண்டும், மெல்ல நமக்கு வசதியான ஒரு நேரத்தில் யூட்யூபில் பார்த்துக் கொள்ளலாம் என வாசகர்கள் நினைக்கத் தொடங்கி விட்டார்கள். இது இயல்பான பரிணாம வளர்ச்சி தான். அதனால் இலவச சேவை எல்லாம் போதும்.
இந்த நிலையில் அவர் இலக்கிய நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் தொகை வசூலிக்கலாம் என்றே சொல்வேன். அது அவர் உரிமை. நிதிச் சிக்கலில் விழுந்த பின் அதைக் கையாள்வதற்குப் பதிலாக முன்கூட்டியே அதை எதிர்கொள்ளலாம். எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், இலக்கிய அமைப்புகள் எனச் சம்மந்தப்பட்டோரிடம் வேலைக்கேற்பவும், அவர்களின் சக்திக்கேற்பவும் வசூலிக்கலாம்.
கடைசியாக ஒரு முக்கியமான விஷயம். இதுவரை அவர் செய்த சேவைக்கு ஈடாக தாமாக முன் வந்து அவர் வேலையைப் பயன்படுத்திக் கொண்ட எழுத்தாளர்கள், பதிப்பகங்கள், இலக்கிய அமைப்புகள் நிதி வழங்க வேண்டும். எனக்கு இன்று நிகழ்ச்சிக்கு வீடியோ எடுக்க சந்தை விலை என்னவெனத் தெரியாது. பத்தாண்டுகள் முன் எனது 'பரத்தை கூற்று' புத்தக வெளியீட்டு நிகழ்வு (சுமார் 3 மணி நேரம்) நடந்த போது அதற்கு ரு.2,000 வீடியோ எடுக்கக் கொடுத்த நினைவு. இன்று அதே போன்ற ஒரு நிகழ்வுக்கு எப்படியும் 5,000 ரூபாயாவது கொடுக்க வேண்டி இருக்கும். இதையெல்லாம் கணக்கில் கொண்டு ஒரு தொகையை ஷ்ருதி டிவியால் பயனடைந்த இலக்கிய நண்பர்கள் எல்லோரும் தம் மனசாட்சிப்படியும், தம் பொருளாதாரச் சாத்தியப்படியும் வழங்க வேண்டும் எனக் கோருகிறேன்.
வாசகர்களும் ஷ்ருதி டிவியால் அடைந்தது நிறைய என்றே சொல்வேன். அதனால் அவர்களும் அமேஸான் ப்ரைம், ஃநெட்ஃப்ளிக்ஸுக்குத் தருவது போல் ஒரு தொகையை அளிக்கலாம். இதுவும் அதே போன்ற தரமான விஷயங்களைத் தருகிறது தானே! அல்லது விக்கிபீடியா பயனர்கள் அதற்கு நிதியளிப்பது போல் நினைத்துச் செய்யலாம். ஏனெனில் இதிலும் ஏராளம் அறிதல், புரிதல் உண்டு.
கவனித்தால் இது எதுவுமே அவருக்கு நாம் செய்யும் உதவி அல்ல; தானம் அல்ல; இது தாமதமான சம்பளம்; வட்டியற்ற கடனடைத்தல். நண்பர்கள் முன்வந்து அவரைக் கம்பீரப்படுத்துக!
(இதை நேரடியாக அவரிடமே நான் சொல்லியிருக்க முடியும். ஆனால் பொதுவில் பதிவாக எழுதக் காரணம் கடைசியாக வைத்திருக்கும் கோரிக்கை தான். அவரிடம் சொன்னால் செய்ய மாட்டார்.)
Published on March 14, 2020 09:31
February 14, 2020
அனு சித்தாரம்
மலையாளப் பெண்கள் மீது எப்போதும் எனக்கு தனித்த பிரேமையும் மயக்கமும் உண்டு. இதைப் பற்றி சில ஆண்டுகள் முன் விரிவாய்ப் பதிவு செய்திருக்கிறேன்: http://www.writercsk.com/2017/12/blog-post.html
'யட்சி' என்ற சிறுகதையில் ஜெயமோகன் இப்படி எழுதி இருப்பார்: "எத்தனை அழகான பெண்ணாக இருந்தாலும் வாழ்வின் ஒரு பருவத்தில் மட்டும்தான் அழகாக இருக்கமுடியும். அப்பருவத்தில் கூட சில தருணங்களில்தான் அவள் அழகு முழுமையாக வெளிப்படும். அத்தருணத்தில் கூட சில கோணங்களில் சில அசைவுகளில்தான் அவள் அழகின் உச்சம் நிகழ்கிறது. ஒவ்வொரு அழகிக்கும் அவள் ஒரு உச்சமுனையைத் தொடும் ஒரு கணம் வாழ்வில் உண்டு. ஒரே ஒரு கணம். அவ்வளவுதான். அந்தக்கணங்களையே நீட்டிக் காலமாக்கினால் அதில் வாழ்பவள் யட்சி." இந்த அளவுகோலின்படி பார்த்தால் மலையாளத் திரைப்பட நடிகை அனு சித்தாரா ஓர் யட்சி; ஒரே யட்சி. அதிரூபசுந்தரி, பெரும்பேரழகி என்பதெல்லாம் தாண்டி இன்றைய தேதியில் இந்த நீலப்பந்தில் வாழும் பெண்டிருள் மிக அழகு யாரெனக் கேட்டால் இந்த வயநாட்டுக்காரியையே கைகாட்ட முடிகிறது.

அப்படியானவருடன் தினமொரு இனிப்புத் தின்பண்டத்தை ஒப்பீடு செய்து அக்டோபர் 2019 தொடங்கி ஜனவரி 2020 வரை சரியாக 100 நாட்கள் ஃபேஸ்புக்கில் வெளியிட்டேன். பிள்ளை விளையாட்டாய்த் தொடங்கிய தொடர் அதன் உச்சத்தில் இருந்த சமயத்தில், அலுப்பைத் தொடாத ஒரு நிறைபுள்ளியில் நிறுத்திக் கொண்டேன். அழகை ஆராதிக்க கௌரவம் பார்த்தல் பாசாங்கு. இது ஓர் எதிர்பார்ப்பற்ற உபாசனை தான். ஆதிசங்கரர் செளந்தர்ய லஹரியில் பராசக்தியை ஆராதித்தது மாதிரி.
#AnuSitharaSweetSeries என்ற ஹேஷ்டேகில் வெளியான இத்தொடர் எனக்கு நல்கிய அனுபவம் அலாதியானது; அரிதானது. அதற்குப் பின்னுள்ள உளவியல் சுவாரஸ்யமானது. சிலருக்கு இனிப்புப் பண்டம் பிடித்தது, சிலருக்கு உடையலங்காரம், இன்னும் சிலருக்கு அனு சித்தாராவின் மீயழகு. மேலும் சிலருக்கு ஒப்பீட்டின் ரசனையும், தொடரும் அர்ப்பணிப்பும் பிடித்தது. அரிதாய்ச் சிலர் சகிக்கவில்லை என்று சொல்லி நிறுத்தக் கோரினார்கள். சிலர் உற்சாகமாய் தாமும் களமிறங்கி ஸ்வீட் சீரிஸ் முயன்றார்கள். சிலர் பொதுவெளி பிம்பத்தின் பொருட்டு ரகசியமாய் ரசித்தார்கள். பிற்பாடு வடிவேலு ஸ்வீட் சீரிஸ் ஒன்று கண்ணில் பட்டது. ஃபேஸ்புக்காரன் எனக்கு ஸ்வீட் ஸ்டால்களைச் சிபாரிசு செய்தான்; யார் அனு சித்தாரா படம் போட்டாலும் என் பெயரை ஆட்டோடேக் செய்தான்.
"ஒரு கலைஞன், ஓர் எழுத்தாளன் இப்படி ஒரு நடிகையை ஆராதித்துக் கொண்டிருக்கலாமா? உருப்படியாய் வேறு வேலை இல்லையா? அபச்சாரம், தவறான முன்னுதாரணம்." என்றனர் சில அக்கறையான அன்பர்கள். எம் எஃப் ஹுசைனையும், குஷ்வந்த் சிங்கையும் நினைத்துக் கொண்டேன்.
மிக ரசித்த எதிர்வினை மீனம்மாவுடையது: https://www.facebook.com/meenammakayal/posts/373569116859134
சிலர் அனு சித்தாராவுக்குப் போடுவது போல் அந்த நடிகைக்குப் போடு, இந்த மாடலுக்கும் போடு எனக் கேட்டார்கள். இன்னும் சில தோழிகள் தங்களுக்கே இத்தகு சீரிஸ் போட்டால் தான் என்னவாம் என ஆதங்கம் கொண்டார்கள். அப்போது அவற்றுக்கு பதிலளிக்கும் முகமாக இப்படிச் சொல்லியிருந்தேன்: "ஒவ்வொரு தெய்வத்துக்கும் ஒவ்வொரு விஷயம் உகந்தது. அதைக் கொண்டு தான் அர்ச்சிக்க வேண்டும். அதை மாற்றக்கூடாது. உதாரணமாய் சிவனுக்கு வில்வ இலை, காளிக்கு செவ்வரளி, பிள்ளையாருக்கு அருகம்புல். அதை மாற்றி சிவனுக்கு அருகம்புல் கொண்டு பூஜிக்கக்கூடாது, பிள்ளையாருக்கு செவ்வரளி மாலை சாற்றக்கூடாது. அப்படித்தான் அனு சித்தாராவுக்கென ஸ்வீட் சீரிஸ் அமைந்து விட்டது. அதை இன்னொருவருக்கு நீட்டிக்கக்கூடாது. செய்தால் அது ஆகம விதிகளை மீறியதாகி விடும். வரலாறு நம்மை மன்னிக்காது. ஆனாலும் பொன் வைக்கும் இடத்தில் பூ வைப்பது போல், ஒரு காரம் சீரிஸோ, சூப் சீரிஸோ அவரவர் வசதிக்கேற்பச் செய்யலாம். "
ஸ்வீட் சீரிஸில் படம் போட முயற்சிப்போருக்கு சில விதிமுறைகளைச் பின்பற்றச் சொல்லியிருந்தேன்: "1) இரண்டு படங்களுமே HD படங்களாக இருக்க வேண்டும் - குறைந்தது 1000 x 1000 ரெசலூஷனில். 2) இரண்டு படங்களிலுமே வாட்டர்மார்க் இல்லாமல் இருக்க வேண்டும் - ஓரமாய் லோகோ அல்லது புகைப்படக்காரர் பெயர் இருக்கலாம், தவறில்லை. 3) அனு சித்தாராவின் படம் எப்படியும் அழகாய்த் தான் இருக்கும், அதில் ஏதும் மெனக்கெடல் அவசியமிராது. ஆனால் உணவுப் பண்டத்தின் படம் பார்த்தவுடனே ருசிக்கத் தூண்டுவதாய் இருக்க வேண்டும். 4) ஆபாச ஒப்புமைகள் கூடவே கூடாது. மாமாங்கம் போன்ற ஒரு பெரிய நடிகரின் பட இசை வெளியீட்டு நிகழ்வுக்கே சாதாரணமாய் சுடிதார் அணிந்து பக்கத்து வீட்டுப் பெண்ணைப் போல் எளிமையாய் வந்தவர் அனு - இம்மாதிரி நிகழ்வுகள் புது திரை வாய்ப்புக்கள் பெற நடிகைகள் பயன்படுத்திக் கொள்பவை என்பதை நினைவில் கொள்ளவும். 5) வெறும் ஆடையின் நிற ஒற்றுமை தாண்டி இரண்டும் ஒன்று என்று ஆழ்மனதில் திருப்தியெழ வேண்டும். சதா தியானிப்பதன் மூலமும் தொடர்பயிற்சியின் வழியாகவும் தான் அது சாத்தியப்படும். தமிழ்ச் சூழலில் இது ஒரு முன்னோடியான open source முயற்சி. ஊர் கூடித் தேரிழுப்போம். தேரை இழுத்துத் தெருவில் விடாமல் முயற்சிப்போம். All the very best."
இவ்விதிமுறைகளை மிகப் பெரும்பாலும் நானும் ஒழுக்கமாய்க் கடைபிடித்தேன். (இதில் ஆபாசப் பார்வை பற்றிய ஒரு நிரூபணம்: 46ம் நாளின் சோன் பப்டி படத்தில் கண்ணாடி பிம்பத்தை நண்பர்கள் சொல்லும் வரை நான் கவனிக்கவில்லை என்பது என்னை ஓர் அசல் உபாசகனாக்குகிறது.) மெட்டுக்குப் பாட்டா அல்லது பாட்டுக்கு மெட்டா என இசையமைப்பாளரைக் கேட்பது போல் அனு சித்தாராவின் படத்துக்கு ஈடான தின்பண்டத்தின் படத்தைத் தேடிப் போடுகிறேனா அல்லது பண்டத்துக்கு இணையான அனுவின் படமா என ஆர்வலர்கள் வினவினார்கள். இரண்டும் தான். அது அந்தந்த நாளின் அனுக்ரஹம்! (இது தொடர்பான ஷ்ருதி டிவி குறும்பேட்டி ஒன்றுமுண்டு.)
அனு சித்தாரா ஸ்வீட் சீரிஸ் எப்போது முடியும் என அச்சத்துடன் - இரு அர்த்தத்திலும் வினவிய சில நண்பர்களிடம் வேறு யாராவது அனு சித்தாராவை விட அழகாய்த் தென்பட்டால் இத்தொடரை நிறுத்திக் கொள்ளத் திட்டம் எனச் சொல்லி வைத்திருந்தேன். நல்லவேளை, அதை நிஜமாய்க் கடைபிடித்திருந்தால் இப்போது வரையிலும் தொடரை நிறுத்தியிருக்க முடியாது!
நிச்சயம் இத்தொடரின் நோக்கம் அனு சித்தாரா என்ற நடிகையை தனிப்பட்டு நான் நெருங்குவதல்ல. உண்மையில் அவருக்கு இச்செய்தி போயிருந்தால் அத்தினத்துடன் தொடரை அப்படியே நிறுத்துவதாக இருந்தேன். சரி, அப்படியெனில் இதன் மையநோக்கு தான் என்ன? உண்மையில் இது ஓர் ஆட்டம். அவ்வளவு தான். இதன் சவால் சுவாரஸ்யமாக இருந்தது. தன்முனைப்பைச் சீண்டுகிற உற்சாகத்தைத் தாங்கியிருந்தது. மற்றபடி, இதற்கு நான் உத்தேசிக்காத சில பலன்கள் இருக்கலாம் தான். இனி புதிதாய் உருவாக்கப்பட இருக்கும் ஓர் இனிப்புப் பண்டத்துக்கு அனு சித்தாரா என்று பெயர் வைக்கலாம். அல்லது யாராவது ஒருவர் அனு சித்தாரா தீமில் ஒரு பிரம்மாண்ட இனிப்பகம் தொடங்கலாம் (குறைந்தபட்சம் தன் வழக்கமான இனிப்புக் கடைக்கு அனு சித்தாராவின் பெயரை வைக்கலாம்). பார்ப்போம், எதிர்காலம் என்ன ஆச்சரியத்தைஒளித்து வைத்திருக்கிறதென!
இத்தொகுப்பைப் புத்தகமாக வெளியிடச் சொல்லி கேலியாகவும், நிஜமாகவும் நிறையப் பேர் சொன்னார்கள். அச்சுப் புத்தகமாக வந்தால் அழகாகத்தான் இருக்கும். வழவழ, பளபள தாளில் தரமாய் ஒரு காஃபிடேபிள் புத்தகம் போல். ஆனால் நம்மிடம் அதற்கான சந்தையில்லை என நம்புகிறேன். (எனக்கும் அது குறித்த, என் எழுத்தாள பிம்பம் சார்ந்த தனிப்பட்ட தயக்கங்கள் இருக்கின்றன.) மின்னூல் செய்யலாம். கிண்டிலில் வைத்தால் இலவசமாகத் தர முடியாது. இதை விற்றுச் சம்பாதிக்க விருப்பமில்லை. அதனால் எதிர்காலத்தில் சமயம் கிடைக்கையில் இலவச பிடிஎஃப் வெளியிடுவேன்.
அதுவரை இந்த சீரிஸின் நேரடி ஃபேஸ்புக் லிங்க்களை இந்நன்னாளிலே இங்கே தொகுத்தளிக்கிறேன்:
அட பிரதமன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156548487747108 செர்ரி பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156550734692108 குலாப் ஜாமூன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156553785317108 மினி ஜிலேபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156556128557108 மோத்தி லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156558132077108 ஸ்வீட் பீடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156562931037108 ரோஸ் மில்க் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156565325592108 ஜிகர்தண்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156567962002108 பட்டர்ஸ்காட்ச் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156570452667108 திருநெல்வேலி அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156573283532108 பிஸ்தா பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156575147367108 தேன் மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156577691307108 குழிப் பணியாரம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156580426847108 ஸ்ட்ராபெர்ரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156582892122108 ஜவ்வு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156585334297108 தீபாவளி பட்சணம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156588416642108 காஜு கத்லி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156591582962108 தர்பூசணி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156593325317108 சம் சம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156595746357108 ஜவ்வரிசிப் பாயாசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156598308747108 சர்க்கரைப் பொங்கல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156602286277108 தேங்காய் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156603850227108 எள்ளுருண்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156607553992108 ப்ளூபெரி ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156610258032108 மின்ட் லைம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156612025412108 பால் கொழுக்கட்டை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156615164567108 ஆக்ரா பேதா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156618957107108 ரெட் வெல்வ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621072952108 ரசகுல்லா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156621995977108 குபானி கா மீத்தா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156624833317108 கராச்சி பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156627783602108 அசோகா அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156630432417108 மட்டர் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156633179907108 பாதுஷா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156635735752108 பூதரேகுலு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156638395837108 பக்லவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156641110092108 திராமிசு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156643968192108 பாவ்லோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156646823662108 பால்கோவா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156650476797108 அதிரசம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156652186997108 சாக்லேட் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156654695457108 ஆரஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156658462922108 மேக்ரான் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156661035187108 சக்க வரட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156662836912108 நெய்யப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156665376322108 சோன் பப்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156668944512108 மூங் தால் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156670697182108 பஞ்சாமிர்தம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156673294512108 தேங்காய் லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156675750267108 காலா ஜாமுன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156678449867108 டோனட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156681099427108 அச்சப்பம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156683789397108 கேரமல் கஸ்டர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156686288612108 மில்க் பேடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156689117217108 ப்ளூ ரேஸ்ப்பெரி லாலிபாப் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156692007082108 ஃபில்டர் காஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156695328612108 கோதுமை லட்டு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156697870057108 பருப்பு போளி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156700500477108 பாதாம் பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156703574562108 ஆப்பிள் பை - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156706121887108 டபுள் கா மீட்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156708914327108 பாம்பே ஹல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156712276862108 ரசமலாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156713871182108 கடலை மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156717693122108 க்ரே ஸ்டஃப் மூஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156719210752108 கேரட் அல்வா -https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156722809987108 தம்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156724543322108 பீட்ரூட் அல்வா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156727825577108 பஞ்சு மிட்டாய் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156729723572108 ஓரியோ பிஸ்கெட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156732306642108 தேங்காய் பன் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156736232052108 லிட்டில் ஹார்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156737801587108 மேங்கோ பர்ஃபி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156740492837108 காஜா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156743389422108 ப்ளம் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156746987327108 ப்ளூ வெல்வெட் கப்கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156748946212108 ப்ளூ மொஹீட்டோ - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156751811262108 க்ரீன் டீ ஐஸ்க்ரீம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156754292072108 லைம் ஜெலடின் சாலட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156756829762108 ராயல் ஃபலூடா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156759737102108 சீஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156762703747108 ப்ளாக் ஃபாரஸ்ட் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156765726572108 ஐஸ் கோலா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156768951222108 சோர் ப்ளூ ஸ்டார்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156772636142108 ஜெல்லி கேண்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156774259602108 பிங்க் வெல்வெட் ரோல் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156778164012108 பனானா கேரமல் டெஸர்ட் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156779448397108 ரவா கேசரி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156782068522108 ரம்புட்டான் பழம் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156784291882108 யக்சிக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156786892432108 ரெட் & ப்ளாக் ஜெல்லி பெர்ரீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156790099742108 ஐஸ் & ஃபயர் குக்கீஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156791973897108 ஃபட்ஜ் ப்ரௌனி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156794744627108 ஷாகி துக்டா - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156797827057108 செம்பருத்தி டீ குச்சி ஐஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156801222097108 கரும்பு - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156803757637108 ஹம்பக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156805442892108 ரேஸ்ப்பெரி மூஸ் கேக் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156808935832108 ஸ்பைருலினா ஸ்மூத்தி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156810751292108 லிக்கரிஸ் ட்விஸ்ட்ஸ் - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813357637108 வெல்லக் கட்டி - https://www.facebook.com/saravanakarthikeyanc/posts/10156813384922108
*
Published on February 14, 2020 06:14
January 9, 2020
கன்னித்தீவு - முன்னுரை
மீகாமன் குறிப்பு
“For the nation to live, the tribe must die.”
- Samora Machel (First President of Mozambique)
நாவல் எழுதுவது சமகால நவீனத் தமிழிலக்கியச் சூழலில் ஒரு மோஸ்தர். கவிஞர், சிறுகதை எழுத்தாளர் என்றாலும் கூட நாவல் எழுதி அவரது இலக்கிய அந்தஸ்தை நிரூபிக்க வேண்டும் என்று எழுதப்படாத, ஏற்கப்பட்ட விதி இருப்பதாய்த் தெரிகிறது.
அதுவும் சென்னைப் புத்தகக்காட்சிக்கு புதிய நாவல் கொணர்வது தவிர்க்கவியலாத சடங்காகி விட்டது. “இம்முறை நாவல் ஏதும் எழுதவில்லை” என்று தயக்கமாய்ச் சொன்னால் “உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று முகத்தைச் சோகமாக வைத்துக் கொண்டு துக்கம் விசாரிக்கிறார்கள். தன் மொத்த ஆயுளிலும் இரண்டே நாவல்கள் எழுதிய ப.சிங்காரத்தையும், ஆதவனையும், மூன்றே நாவல்கள் படைத்துள்ள சுந்தர ராமசாமியையும், கி.ராஜநாராயணனையும் அப்போதெல்லாம் எண்ணிக் கொள்வேன்.
எனக்கு மோஸ்தரில் நம்பிக்கை இல்லை; அதனால் ஆர்வமும் இல்லை. ஆனால் கடந்த ஈராண்டுக்கு மேலாக நாவல் மனநிலை என்னைப் பீடித்திருக்கிறது. அதாவது சிறுகதைக்குரிய கருக்களாக அல்லாமல் பெருங்கதைகளே மனதில் மேலெழும்பி வருகின்றன. அது இன்னும் கொஞ்சம் காலம் தொடரும் என்றும் தோன்றுகிறது.
அதன் பக்கவிளைவுகளில் ஒன்று தான் அந்தமான் பழங்குடிகள் பற்றிய இந்நாவல்.
‘ஜெய் பீம்’ தான் என் இரண்டாவது நாவலாய் இருந்திருக்க வேண்டியது. தொடங்கிச் சில அத்தியாயங்கள் முடித்திருந்தேன். அதன் களம் பிரம்மாண்டமானது, கொஞ்சம் சிக்கலானது, தேடலையும் உழைப்பையும் கோருவது, பொறுப்புணர்வை எதிர்பார்ப்பது. இக்காரணங்களை முன்னிட்டு அதை ஒத்திப் போட்டு, இடைக்கால முயற்சியாய்க் ‘கன்னித்தீவு’ நாவலை எழுதத் தொடங்கினேன். ஆனால் கடந்த ஆறு மாதங்களின் ஓட்டத்தில் முன்னதிற்கு இணையான விஸ்தீரணத்தைப் பெற்று நிற்கிறது இந்நாவல்.
ஆம், இதன் நீளமும், ஆழமும் நான் உத்தேசிக்காதது. இதன் பேசுபொருள் கொண்டு இப்போது நோக்குங்கால் நாவல் தனக்குத் தக்கதை உறிஞ்சிக் கொண்டது புரிகிறது.
இத்தனைக்கும் பத்தே நாட்களில் நிகழும் சம்பவங்களின் தொகுதி தான் இந்நாவல்.
இந்த நாவலைத் தொடங்குவதற்கான உடனடி உந்துதலைத் தந்தது கடந்த நவம்பர் 2018ல் ஜான் ஆலன் சௌ என்ற 27 வயது அமெரிக்க இளைஞர் அந்தமானின் வடக்கு சென்டினல் தீவில் கிறிஸ்துவ மதத்தைப் பரப்புவதற்காகச் சட்டத்துக்குப் புறம்பாய் நுழைந்த போது அத்தீவில் வசிக்கும் கற்காலப் பழங்குடிகளான சென்டினலியர்களால் கொல்லப்பட்டு அவரது உடலைக் கூட மீட்க முடியாமல் போன சம்பவம் தான் என்றாலும் நாவலின் மைய நரம்பின் மீது அதற்கு ஓராண்டுக்கு முன்பே எனக்கு ஆர்வம் வந்து விட்டது. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதிக் கொண்டிருந்த சமயம் நியூயார்க் டைம்ஸ் இதழில் இந்திய மானுடவியலாளரான த்ரிலோக்நாத் பண்டிட்டின் நேர்காணலை வாசித்தேன் (A Season of Regret for an Aging Tribal Expert in India - Ellen Barry).
அதில் ஜரவா பழங்குடி இனப் பெண்ணொருத்தியைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “I have seen a Jarawa girl. I can never forget her face, though it was many years back. She sat in the boat watching us as if she was Queen Victoria, with such dignity and such poise. You see, then I realized one doesn’t need clothes and ornaments and crown to make you dignified. What comes spontaneously, your inner self, you can project your personality that way.” ‘கன்னித்தீவு’ நாவலின் முக்கியப் பாத்திரமான மரியாவுக்கான பாத்திர வார்ப்பு அங்கிருந்து தொடங்குகிறது.
நாவலின் கதை இன்றிலிருந்து பதினைந்து ஆண்டுகள் முன் நடைபெறுகிறது. அப்படி காலத்தால் சற்று முந்தையது என்பதால் இதை வரலாற்று நாவல் என்று சிலர் வகை பிரிக்கும் அபாயம் உண்டு. என் வரையில் ‘கன்னித்தீவு’ ஒரு மானுடவியல் நாவல். அவ்வகையில் பார்த்தால் தமிழின் முதல் Anthropological Fiction-ஆக இது இருக்கலாம்.
கற்காலப் பழங்குடிகளைத் தொந்தரவு செய்யாமல் விடுவது என்பதற்கும், அவர்கள் நம் குற்றவியல் சட்டத்துக்குள் வருவார்களா என்பதற்கும் இடையே முரண்பாடின்றி ஒற்றைத் திசையிலான பதிலைத் தேடுவதே அவர்களை அணுகுவதற்கான சரியான அறம் என்பது என் நம்பிக்கையும் நிலைப்பாடும். ‘கன்னித்தீவு’ நாவலில் அதைத் தான் பிரச்சாரச் சப்தமின்றி subtle-ஆகப் பேச முயன்றிருக்கிறேன். காஷ்மீர் தொடர்பான சில சட்ட மாற்றங்கள் நிகழும் அரசியல் சூழல் என்பதையும் ஒட்டி இதை வாசிக்கலாம்.
சுதந்திர இந்தியா என்பது எல்லா இந்தியக் குடிகளுக்குமான சுதந்திர தேசமா என்ற வினா தொக்கி நிற்கிறது. மக்களாட்சியில் இது மதிப்பு வாய்ந்த கேள்வி ஆகிறது.
*
சென்ற ஆண்டு விஷ்ணுபுரம் விருது விழாவில் விருந்தினராகப் பங்கு கொண்டபோது என் அமர்வில் ஒரு கேள்விக்கு “என் எழுத்துக்கள் எல்லாமே ப்ரக்ஞைப்பூர்வமாக எழுதியவை தாம், தானாக நிகழ்ந்தது என்று ஒன்றுமில்லை” எனப் பதிலளித்தேன். அப்போது ஜெயமோகன், “தானாய் எழுதுதல் நிகழும், பல நல்ல எழுத்துக்கள் அப்படி நிகழ்ந்தவை தாம்” என்ற பொருளில் பேசினார். அப்போது அதில் ஏற்பில்லை. இந்த நாவலில் அப்படியான சில பகுதிகள் உண்டு. அவை நான் திட்டமிட்டதல்ல; கதைப் போக்கில் பாத்திரங்களே தம்மை எழுதிக் கொண்டன எனச் சொல்வேன். அப்படியான அனுபவம் இதுவே எனக்கு முதல் முறை. அப்படியோர் இடத்தை முதலில் உணர்ந்த போது அதைக் குறிப்பிட்டு ஜெயமோகனுக்கு உற்சாகமாக மின்னஞ்சல் செய்தேன்.
பெரும்பாலும் நான் என் வாழ்விலிருந்து எழுதுபவன் இல்லை. மற்றவர் வாழ்வை அவர்கள் பார்வையிலிருந்து எழுத முயல்பவன். அதையே இலக்கியச் சவால் எனக் கருதுகிறவன். அதனால் தான் பன்னிரண்டு ஆண்டு ஐடி அனுபவத்துக்குப் பின்னும் இன்னும் அந்தப் பின்புலத்தில் ஒரு புனைவைக் கூட முயன்றதில்லை. ஆனாலும் அதை எல்லாம் மீறி அநிச்சையாய் ஆங்காங்கே கதாபாத்திரங்களில் நான் வந்து தொலைக்கிறேன், மிஷ்கின் படத்தில் எல்லோருமே மிஷ்கின் தான் என்பது போல. இந்நாவலிலும் ஆங்காங்கே அப்படித் தென்படும் என்னைக் கண்டு திடுக்கிட்டேன்.
தகவல் சேகரிப்பு மற்றும் வாசிப்பை ஒதுக்கிப் பார்த்தால் ‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை இரண்டரை மாதங்களில் எழுதி முடித்தேன் என நினைவு. இதற்கு முழுதாய் ஆறு மாதங்கள் பிடித்திருக்கிறது. இரண்டுக்குமான வித்தியாசத்தை யோசித்தால் குறுகிய காலத்தில் எழுதப்படும் நாவல்களில் ஓர் ஒற்றைத்தன்மை வந்து விடுகிறது எனத் தோன்றுகிறது. அது சிறுகதைக்கே பொருத்தமானது. அவசியமானதும் கூட. மாறாக, ஒரு நாவலுக்கு பன்முகத்தன்மை தேவை. (‘ஆப்பிளுக்கு முன்’ நாவலை ஒரு நீண்ட சிறுகதை என ஒரு விமர்சகர் சொன்னது இவ்விடத்தில் நினைவுக்கு வருகிறது.) ஆக, நாவல் எழுதுவது என்பதே ஊறப்போடுவது தான் என்பதை இம்முறை உணர்கிறேன்!
‘கன்னித்தீவு’ என்ற சொற்றொடர் தமிழ்ச் சூழலில் மிகப் பிரபலமானது. அப்படியான பிரபலத் தலைப்புகளை நூல்களுக்கு வைப்பதில், அவற்றின் தேய்வழக்குத்தன்மை காரணமாக எனக்கு உவப்பில்லை எனினும் இந்நாவலுக்கு அதை விட நெருக்கமான தலைப்பு கிடையாதெனப் பூரணமாகத் தோன்றியதால் தயக்கம் விட்டுத் தேர்ந்தேன்.
எனக்குத் தெரிந்து ‘கன்னித்தீவு’ என்ற சொல் முதலில் அறிமுகமானது எம்ஜிஆர் இயக்கி, நடித்த ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் (1958) தான். பிறகு தினத் தந்தி நாளேட்டில் 1960லிருந்து மிகப் பிரபலமான ‘கன்னித்தீவு’ சித்திரக்கதை வெளியாகத் தொடங்கியது. அதன் தனித்துவம் சுமார் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு இன்றும் அக்கதை தொடர்ந்து வெளியாவது தான். (இதை எழுதிக் கொண்டிருக்கும் நாளில் வெளியான தினத் தந்தியில் 21,045வது பகுதி வெளியாகி இருக்கிறது.) பிறகு, 1965ல் பிஆர் பந்துலு இயக்கத்தில் எம்ஜிஆர் நடித்த ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படத்தில் மீண்டும் கன்னித்தீவு இடம் பெற்றது. பின்னர் 1981ல் ஜெய்சங்கர் நடிப்பில் டி. ஆர். ராமண்ணா இயக்கி ‘கன்னித்தீவு’ என்ற பெயரிலேயே ஒரு படம் வெளியானது. 2011ல் மிஷ்கின் இயக்கிய ‘யுத்தம் செய்’ படத்தில் கபிலன் எழுதிய ‘கன்னித்தீவு பொண்ணா…’ என்ற பாடல் இடம் பெற்றது. இப்போது வரலட்சுமி சரத்குமார் மற்றும் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ‘கன்னித்தீவு’ என்ற படம் எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
சினிமாவாக, பாடலாக, புதினமாக ‘கன்னித்தீவு’ தொடர்ந்து தமிழ் மனதில் இருந்து கொண்டே தான் இருக்கும். ‘கன்னித்தீவு’ என்பதன் இயல்பே அது தான் அல்லவா!
*
கடந்த ஃபிப்ரவரி இறுதியில் ஐந்து நபர்களிடம் என் முன்னிருக்கும் இரண்டு நாவல் கருக்களைச் சொல்லி, எதை உடனே எழுதலாம் என அபிப்பிராயம் கேட்டேன். என் மனைவி, நண்பன் இரா. ராஜராஜன், சினேகிதி சௌம்யா, எழுத்தாளர் பா. ராகவன் மற்றும் எழுத்தாளர் ரமேஷ் வைத்யா. ஐவரில் பா. ராகவன் மட்டுமே ‘கன்னித்தீவு’ நாவலை விட ‘ஜெய் பீம்’ எழுதுவதைச் சிபாரிசு செய்தார். ஆனால் கடைசியில் அவருக்குத்தான் இந்நாவலைச் சமர்ப்பணம் செய்திருக்கிறேன் என்பது நகைமுரண்.
பா.ராகவன் என் அதிர்ஷ்டம். தமிழ் இலக்கியச் சூழலில் நான் கண்ட பெரும்பான்மை நட்புக்கள் பதில் மொய் தான். நான் கொஞ்சம் introvert என்பதாலும் வசிப்பது அயல் மாநிலம் என்பதாலும் படைப்புகளுக்கான பரஸ்பரக் கருத்து பகிர்வு என்பது தாண்டி தமிழ் எழுத்தாளர்களுடன் நெருங்கிய நட்பேதும் ஏற்படவில்லை. பாரா விதிவிலக்கு.
ஒரு தசாப்தமாக அவரைத் தெரியும். கிழக்கு பதிப்பகம் சார்பில் அவர் நடத்திய அபுனைவு நூல்கள் எழுதுவதற்கான பயிற்சிப் பட்டறையில் பங்கேற்றிருக்கிறேன்.
பாரா என் முதல்ச் சிறுகதையை வெளியிட்டவர். என் முதல் கவிதைத் தொடரை வெளியிட்டவர். அவரது ஃபேஸ்புக் பதிவுகள் தொகுதியான ‘14ம் லூயியின் பாத்ரூம் சாஹித்யங்கள்’ மின்னூலுக்கு நான் முன்னுரை எழுதியது அவரளித்த கௌரவம்.
நானே அதீத தன்னம்பிக்கைக்காரன். ஆனால் என் மீது என்னை விடவும் அதிகம் நம்பிக்கை கொண்டவர் பாரா என்று சொல்லத் தோன்றுகிறது. ‘ஆப்பிளுக்கு முன்’ நாவல் எழுதுகையிலும் சரி, ‘கன்னித்தீவு’ எழுதுகையிலும் சரி, இடையில் சுணக்கம் கண்டு சோர்வுற்ற போது விடாமல் என்னை உந்தி எழுத வைத்தவர் பாரா தான். அவர் மட்டும் இல்லை எனில் இந்நாவல் இவ்வேளையில் வெளியாகியிருக்காது.
சந்தோஷ் நாராயணன் இந்நாவலுக்கு மிகப் பொருத்தமானதும், மிக அழகானதுமான ஓர் அட்டைப் படத்தை வடிவமைத்துக் கொடுத்துள்ளார். சொல்லப் போனால் அது உள்ளடக்கத்திற்கு விடுக்கப்பட்டுள்ள சவால் என்பேன். அவருக்கு என் பிரியங்கள்.
எழுத உற்ற சூழலை உண்டாக்கிக் கொடுத்த என் குடும்பத்துக்கும், நாவலின் பிழை திருத்தம் பார்க்க உதவிய சௌம்யாவுக்கும், மிகக் குறுகிய காலத்தில் நாவலைச் சிறப்பாக அச்சிட்டு வெளியிடும் செல்வி உள்ளிட்ட உயிர்மை குழுவினருக்கும், எப்போதும் எனக்கு உறுதுணையாக இருக்கும் மனுஷ்ய புத்திரனுக்கும் நன்றிகள்.
‘கன்னித்தீவு’ நாவலின் நாயகி நிறைந்த கர்ப்ப ஸ்த்ரீ. இதை எழுதிக் கொண்டிருந்த நாட்களில் நிஜ வாழ்விலும், பொதுவெளியிலும் நிறைய கர்ப்பவதிகளைப் பார்க்க நேர்ந்தது எதேச்சையானதா எனத் தெரியவில்லை. மனைவியின் பால்ய தோழி இந்து அரவிந்த், அடுக்ககத்தில் சௌம்யா ஷரண், சௌம்யா ஷெட்டி, அலுவலகத்தில் நான்சி ரூசியா, ரச்சிதா ராணி, ஃபேஸ்புக்கில் மஞ்சரி நாராயணன், ஷாலின் மரிய லாரன்ஸ், சினிமாவில் ஏமி ஜாக்சன் எனப் பலர். பிரபஞ்சமே கர்ப்பிணிகளால் ஆனது போன்ற ஒரு பிரமையை அது அளித்தது. அவர்கள் அனைவருக்கும் என் வணக்கம்.
*
நாவல் இறுதி வடிவை மீள்வாசிக்கையில் அவையடக்கத்தை உதாசீனம் செய்த ஒரு மெல்லிய பெருமிதப் புன்னகையை மறுக்க முடியவில்லை. மெய்வருத்தக்கூலி கிட்டி விட்டது. மற்றவற்றைத் தமிழ் வாசகப் பரப்பு பார்த்துக் கொள்ளும் என நம்புகிறேன்.
ஒரு வாழ்விலிருந்து வெளியேறியது போல் இருக்கிறது இந்நாவலைத் தீர்க்கையில். ஏதும் எழுதாமல் ஒரு சிற்றோய்வைத் திட்டமிடுமளவு அழுத்தத்தைத் தந்திருக்கிறது. நெடுந்தூரப் பயணமொன்றில் மைல்கல் தாண்டுகையில் சற்று இளைப்பாறுவதுபோல்.
பெங்களூரு மஹாநகரம்
இந்திய சுதந்திர தினம், 2019

Published on January 09, 2020 16:32
December 29, 2019
இரு பாடல்கள்
2014 ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் புதியவரும் இளைஞருமான பிஎஸ் அர்ஜுன் இயக்க முயன்றிருந்த படத்திற்கு இரண்டு பாடல்கள் எழுதிக் கொடுத்தேன்.
(1)
(Situation: தம் 6 வயது மகள் குறித்து தந்தையும் தாயும் பாடும் ஜனனத்தையும் மரணத்தையும் முன்வைத்த பாடல். 90களில் நடக்கும் கதை.)
பல்லவி:
(அப்பா)
பன்னிரு பாட்டியல்* சொல்லும் இவள் பேதை
என்னிரு கண்கள் சொல்லும் இவள் தேவதை
தேநீர் கோப்பையின் இறுதித்துளி இனிப்பாய்
ஒரு புன்னகையில் சிறுசுவர்க்கம் பரிசளிப்பாள்.
(அம்மா)
வெண்துகில்* பொம்மைகள் இவளைக் கொஞ்சும்
விண்மிதக்கும் பறவைகள் இவளைக் கெஞ்சும்
முகில்கள் உடைந்து மழையாய் முகிழ்த்தலாய்
முலைகள் இன்னும் சுரந்திடும் இவளுக்காய்.
அனுபல்லவி:
(இருவரும்)
ஜனனத்தின் ஸ்பரிசத்தை ஆன்மாவில் தூவி
மரணத்தின் வாசனையை துரத்துவாள் தூர
இவள் குழந்தை இவள் எஜமானி இவள் குரு
இவள் அன்னை இவள் தெய்வம் இவள் ஊழ்.
சரணம் 1:
(அம்மா)
அதிகாலைத் துயிலெழுந்து குறும்புகள் செய்கிறாள்
சேவலையும் சூரியனையும் குழப்பத்தில் மீட்டுகிறாள்
பல் துலக்க, குளிப்பாட்ட தந்தையைத் தேடுகிறாள்
சொல்லூட்டி சோறூட்ட அம்மையிடம் ஓடுகிறாள்.
(அப்பா)
இடக்கான கேள்விகளில் ஆசிரியை மிரள்கிறாள்
துடுக்கான பதில்களை விரல்நுனியில் ஆள்கிறாள்
வகுப்பறையும் மைதானமும் இவளுக்கு வேறில்லை
உகுத்திடும் கண்ணீரில் கரையாதவர் எவருமில்லை.
அனுபல்லவி (repeat)
சரணம் 2:
(அம்மா)
அம்புலி மாமாவும்* கதை சொல்ல அப்பாவும்
தலைகோதி மடிமீது தூங்க வைக்க அம்மாவும்
உறக்கத்தில் சிரிக்கிறாள், அதை விடவா அழகு
ஸ்வப்னத்தில் விளையாடும் ஆனைக்குட்டி அப்பு!*
(அப்பா)
ஒரு கரண்டி கவிதையும் ஒரு சிட்டிகை இசையும்
சில துண்டுகள் ப்ரியமும் தேவைப்கேற்ப கடவுளும்
இவளைச் செய்யும் ஸ்வர்ணஜால* சமையல் குறிப்பு
சமையல் கலைஞன் நான்; செய்யும் பாத்திரம் நீ!
அனுபல்லவி (repeat)
பன்னிரு பாட்டியல் என்பது சிற்றிலக்கியங்கள் குறித்த ஓர் இலக்கண நூல் தொகுதி. இந்த நூலின்படி 6 வயதான பெண் குழந்தை பேதை.80களில் டெட்டிபேர் போன்ற வெண்பஞ்சு பொம்மைகள் சாதாரண குடும்பங்களில் பரவவில்லை என்பதால் வெண்துகில் என மாற்றி இருக்கிறேன்.அம்புலி மாமா என்பது குழந்தைகளுக்கான பிரபல கதைப் புத்தக மாத இதழ். 70களிலும் 80களிலும் 90களிலும் தமிழ்நாட்டில் பிரபலம்.Appu Aur Pappu என்பது 1985ல் தூர்தர்ஷனில் ஒளிபரப்பான குழந்தைகளுக்கான பிரபல தொலைக்காட்சி தொடர்ஸ்வர்ணஜாலம் என்பது இரும்பிலிருந்து தங்கம் செய்ய பண்டைய தமிழ் சித்தர் எழுதி வைத்த ரகசியக் குறிப்புகள்
(2)
(Situation: நண்பர்கள் ஓர் இயற்கைச் சூழலில் பாடி ஆடும் பாடல். அபி சாம் செரியன் என்ற புதிய இசையமைப்பாளர் போட்ட மெட்டுக்கு எழுதியது.)
0:33 - 0:40
மழையும் பனியும் மிகை
மலையில் விரியும் கடை
மனதைத் திருடும் விலை
அட, போடா!
0:41 - 0:48
அச்சம் சோம்பல் பிழை
லட்சம் கனவுகள் துணை
லட்சியம் தொடும் கலை
அட, போடா!
0:49 - 0:57
படியாய் ஏறும் அடிகள்
சுகமாய் மாறும் வலிகள்
வருவோம் புதிய அலையாய்
ஓஹோ!
0:58 - 1:01
வெறியுடன் வெற்றி சேர்ந்திடாதா!
வாழ்வை வசந்தமாய் மாற்றிடாதா!
1:45 - 2:00
தேடல்கள் வெல்லும் வேளை
தேசங்கள் சொல்லும் நாளை
தடைகளை உடைத்து விரைவோம்
இன்னொரு ஜென்மம் காண்போம்
2:01 - 2:09
அறிவை விடவும் திறமை விடவும்
எதுவும் பெரியதில்லை
என்னைப் போலே உன்னைப் போலே
எவனும் எங்குமில்லை
2:42 - 2:57
தூங்கிப் போகும் முன்னே
தூரங்கள் போவோம் இன்றே
வியர்வை ஊற்றி உழைப்போம்
விதிகளை மாற்றி அமைப்போம்
2:58 - 3:05
அன்பும் ஆசையும் ஊறும் தருணம்
ஆடல் பாடல் தானோ
இரவும் பகலும் இணையும் காலம்
குடியும் கூத்தும் தானோ
3:07 - 3:14
மழையும் பனியும் மிகை
மலையில் விரியும் கடை
மனதைத் திருடும் விலை
அட, போடா!
3:15 - 3:22
அச்சம் சோம்பல் பிழை
லட்சம் கனவுகள் துணை
லட்சியம் தொடும் கலை
அட, போடா!
3:23 - 3:31
படியாய் ஏறும் அடிகள்
சுகமாய் மாறும் வலிகள்
வருவோம் புதிய அலையாய்
ஓஹோ!
3:32 - 3:35

Published on December 29, 2019 10:32
December 28, 2019
எழுத்தாளக் குற்றவாளிகள்
இது ஆண்டிறுதி. புத்தகக்காட்சி சீசன். ஏராளமான புத்தக அறிவிப்புகளைப் பார்க்க முடியும். எழுத்தாளர்களுக்கென ஏதேனும் கொண்டாட்ட காலம் இருக்குமானால் அது இது தான். சமூக வலைதளங்கள் கிளை பரப்பி விரிந்த கடந்த பத்தாண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு விதமான குற்றச்சாட்டுகள் அல்லது கேலிகளைத் தவறாமல் காண முடியும்:
1) எல்லோரும் எழுத்தாளர்கள் ஆகி விட்டார்கள் (கவுண்டமணியின் தொழிலதிபர் காமெடியைச் சேர்த்துக் கொண்டு). இம்முறை என்னைத் தவிர எல்லோரும் புத்தகம் கொண்டு வருகிறார்கள் போலிருக்கிறது. வாசகர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகி விட்டார்கள், யார் தான் வாசிப்பார்கள்?
2) ஒருவரே ஒரு சமயத்தில் ஏன் இத்தனை புத்தகங்கள் கொண்டு வருகிறார்? ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் ஏதும் சாமி குத்தம் ஆகி விடுமா?
என் புரிதலில் இவ்விரண்டிற்கும் அறிவீனமோ அல்லது பொறாமையோ தான் மூலக்காரணம் எனப்படுகிறது. மற்றபடி, இலக்கியம் அல்லது எழுத்தாளன் மீதான அக்கறை என்பதெல்லாம் பூச்சு. அதை எந்த முறையும் ரசிக்க முடிந்ததில்லை. அதனால் இவை இரண்டுக்கும் என் தரப்பைச் சொல்கிறேன்.
(1)
ஆம், இன்றைய யுகத்தில் அச்சுப் புத்தகம் போடுவது அவ்வளவு சிரமமான காரியம் அல்ல. ஏகப்பட்ட பதிப்பகங்கள் வந்து விட்டன. பல பிரபல எழுத்தாளர்கள் சொந்தமாய்ப் பதிப்பகம் வைத்துக் கொள்ளும் இடத்துக்கு வந்து விட்டார்கள். புதியவர்கள் சுயபிரசுரம் செய்வதும் நடக்கிறது. ஆனால் அது ஒரு கவலைக்குரிய விஷயமல்ல. எல்லோரும் புத்தகம் போடுவதால் இலக்கியத்தின் கற்பே போய் விட்டது போல் பினாத்தத் தேவையில்லை என்பதே என் தாழ்மையான அபிப்பிராயம்.
ஒன்று அப்படி கொண்டு வரப்படும் நூல்களில் நல்லதும் வல்லதுமே நிற்கும். அப்புறம் ஒரு புத்தகம் அல்லது சில புத்தகம் போடுவதாலேயே ஒருவர் எழுத்தாளர் என்று நிலை பெற்று விட முடியாது. எழுத்தாளர் என்று ஒருவர் தன்னைத் தானே உணர வேண்டும். அதையே தன் பிரதான அடையாளமாய் எண்ண வேண்டும். அப்போது தான் தொடர்ந்து எழுத்தாளராய் இயங்கும் உந்துதல் கிடைக்கும். தற்காலிகச் சுணக்கங்கள் இருக்கலாம், ஆனால் வேலை நெருக்கடி, குடும்ப அழுத்தங்கள் என்றெல்லாம் சொல்லி ஓர் அசல் எழுத்தாளன் எழுதுவதை நிறுத்த மாட்டான்.
வாய்ப்பிருக்கிறதே எனப் புத்தகம் போட்டவர்கள் தான் ஓரிரு நூல்களில் அப்படிக் களைத்து, அலுத்து நின்று விடுவார்கள். எழுத்தாளனுக்கு எழுத்து ஒரு போதும் அலுக்காது. உதாரணமாய் என் முதல் நூல் 2009ல் வெளியானது. அன்று என்னோடு குறைந்தது 50 பேர் புதிதாய் புத்தகம் போட்டு எழுத்துலகினுள் வந்திருப்பார்கள். அவர்களில் எத்தனை பேர் இன்றும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? எத்தனை பேர் புத்தகம் கொண்டு வருகிறார்கள்? அதிகம் போனால் நான்கைந்து பேர் இருக்கலாம். அவர்கள் மட்டுமே அதில் எழுத்தாளர்கள். மற்றவர்கள் பிரசுரமாதல் எனும் ஒரு புதிய கிளுகிளுப்பின்பால் ஈர்க்கப்பட்டு புத்தகம் போட்டவர்கள். கொஞ்ச காலத்தில் அது தீர்ந்தவுடன் தம் வழமையான தினசரிகளுக்குத் திரும்பி விடுவார்கள்.
அது இயல்பு தான். அப்படிப் புத்தகம் போடுவது தவறெனச் சொல்வது என் நோக்கமல்ல. இன்னும் சொன்னால் அதுவும் வரவேற்க்கத்தக்கதே. அதில் நல்ல நூல்களும் இருக்கலாம். பல துறைசார் நூல்கள் அப்படி எழுதப் பெற்றவை தாம். அதனால் அப்படி எல்லோரும் புத்தகம் வெளியிடுவது பற்றி ஒரு வாசகன் கவலை கொள்ள ஏதுமில்லை.
எப்போதும் தமிழ் மொழியில் பொருட்படுத்துவது மாதிரி எழுத சுமார் 50 பேர் இருப்பார்கள். பத்தாண்டுகள் முன்பும் அதே தான். இன்றும் அதே தான். பத்தாண்டுகள் கழித்தும் அதே தான். இன்று புதிதாய் 100 பேர் புத்தகம் கொண்டு வருகிறார்கள் என்பதால் அடுத்த பத்தாண்டுகளில் அந்த எண்ணிக்கை 500 ஆகி விடாது. மெல்லிய உயர்வு வேண்டுமானால் நடக்கலாம்.
(2)
ஒருவர் சராசரியாய் தன் 25-30 வயதில் தன் முதல் நூலைப் பதிப்பிக்கக்கூடும். எழுதுபவர்களின் சராசரி ஆயுள் 65 என்று வைத்துக் கொண்டாலும் ஒருவருக்கு அதிகபட்சம் 30 ஆண்டுகள் தான் எழுதக் கிடைக்கும். (இந்தக் கணக்கே மிகையாகத்தான் சொல்கிறேன். உண்மையில் நம் சூழலில் இப்படி 30 ஆண்டுகள் எழுதக் கிடைப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!) இதில் எழுத்தையே தன் அடையாளமாக வாழ்வாக எண்ணும் ஒருவன் ஆண்டுக்கு ஒரு புத்தகம் மட்டும் கொண்டு வந்தால் போதும் என எண்ணிக் கொண்டிருக்க முடியாது. மொத்தமாக 30 நூல்கள் கொண்டு வந்தால் போதும் என ஒருவர் நினைக்க முடியுமா? ஒரு நல்ல எழுத்தாளனுக்கு எழுத அவ்வளவு தான் இருக்குமா?
திரும்பத் திரும்ப ப. சிங்காரத்துக்குப் போய் நிற்கக்கூடாது. அவரெல்லாம் விதிவிலக்கு. ஜெயகாந்தன் எண்ணி எண்ணியா எழுதினார். அசோகமித்திரனும் நிறைய எழுதி இருக்கிறார். குறைவாக எழுத வேண்டும் என எண்ணிய சுந்தர ராமசாமி கூட சிறுகதை, கவிதை, நாவல், கட்டுரை, உரை, பத்தி, நேர்காணல், மொழிபெயர்ப்பு என 30 புத்தகங்களாவது எழுதியிருப்பார். ஜெயமோகன் ஏற்கனவே லட்சம் பக்கங்கள் எழுதி விட்டார். ஒருவர் காலத்திற்கும் நிற்பது போல் ஒரு செவ்விலக்கியத்தை எழுதி விட்டால் கூட அதோடு அவர் நின்று விட வேண்டும் எனச் சொல்ல நாம் யார்?
இந்தப் புத்தகக் காட்சிக்கு வருவதையும் கணக்கிட்டால் இதுவரை 22 புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். இது கடந்த பத்தாண்டுகளில் செய்தது. அடுத்ததாய் குறைந்தது பத்துப் புத்தகங்கள் எழுதுமளவு திட்டங்கள் இப்போதே என் மனதில் இருக்கின்றன. அவற்றை எல்லாம் செய்து முடிக்கும் போது மேலும் இருபது புத்தகங்களுக்கான புதிய திட்டங்கள் மனதில் தயாராய் இருக்கும். அதனால் குறைவாய் தான் எழுதுவேன், வருடம் ஒரு புத்தகம் தான் வெளியிடுவேன், அரைக்கால் புத்தகம் தான் வெளியிடுவேன் என ஓர் எழுத்தாளன் முரண்டு பிடித்துக் கொண்டிருக்க முடியாது.
சாத்தியமான போது எழுதிப் பிரசுரித்து விட வேண்டும். ஒரு கட்டத்துக்கு மேல் எழுத முடியாமல் போகலாம். அல்லது குறைவாய் எழுதும் சூழ்நிலை ஏற்படலாம். ஆரோக்கியம், அரசியல், பொருளாதாரம், பதிப்புலகம் உள்ளிட்ட பல புறக் காரணிகள் இதைத் தீர்மானிக்கும். இவை எதுவும் எழுத்தாளன் கையில் இல்லை. அதனால் எதையும் எதிர்காலத்தை நம்பி ஒத்திப் போட முடியாது. எழுதுகிற சூழல் இருக்கும் போது அதைப் பயன்படுத்திக் கொள்வதே அறிவார்ந்த செயலாக இருக்க முடியும்.
இதில் ஒரே சமயத்தில் வரும் ஏழெட்டு நூல்களில் ஏதேனும் (அல்லது அனைத்துமே) தரமில்லை என்றால் அதைக் காலம் கழித்து விட்டு முன்னேறும். அது ஆண்டுக்கு ஒரு நூல் எழுதினாலும் நடக்கும். அதனால் எழுத்தாளனை எழுத விடுங்கள். அவன் ஆண்டுக்கு ஒரு பக்கம் எழுதினாலும் சரி, பத்துப் புத்தகம் எழுதினாலும் சரி. நன்றாக இருப்பதைக் கொண்டாடுங்கள்; மற்றவற்றை நிராகரியுங்கள். அவன் நிறைய எழுதுவதாலேயே எல்லாவற்றையும் பாராட்டுங்கள் எனச் சொல்வதாய் அர்த்தமில்லை. அதே சமயம் நிறைய எழுதுவதாலேயே அவை தரம் குறைந்ததாய்த்தான் இருக்க வேண்டும் என்ற முன்முடிவும் சரியானதல்ல.
எழுத்தை ரேஷனில் தரச் சொல்லாதீர்கள். நதியின் ஊற்றை அளவு சொல்லி அடைக்க முடியுமா? அள்ளிக் குடிப்பது அவரவர் சாமர்த்தியம். நீர் கரித்தால் துப்புவதும் பருகுபவன் உரிமை.

Published on December 28, 2019 21:13
December 25, 2019
சூரிய கிரஹணம் - FAQs
1) சூரிய கிரஹணம் என்றால் என்ன?
பூமி நிலா சூரியன் மூன்றும் நேர்க்கோட்டில் வரும் போது சூரியனை நிலா மறைத்து விடுகிறது. அதனால் சூரியனைப் பார்த்துக் கொண்டிருக்கும் பூமியின் பக்கம் இருள் சூழ்கிறது. இது தான் சூரிய கிரஹணம்.
2) சூரிய கிரஹணத்தின் போது என்ன செய்யக்கூடாது?
சூரியனைப் பார்க்கக் கூடாது. கறுப்புக் கண்ணாடி அணிந்து கூடப் பார்க்கக்கூடாது; கேமெரா, ஸ்மார்ட்ஃபோன், பைனாகுலர், டெலஸ்கோப் வழியும் பார்க்கக்கக்கூடாது; நிலைக்கண்ணாடியின் பிரதிபலிப்பையும் பார்க்கக்கூடாது.
3) ஏன் அப்படி?
சூரியனின் கதிர்கள் கண்களில் விழுந்தால் ரெட்டினா (விழித்திரை) பாதிக்கப்படும். தற்காலிக அல்லது நிரந்தரப் பார்வையிழப்பு ஏற்படலாம்.
4) இக்கதிர்கள் கிரஹணத்தின் போது மட்டும் தான் வருகின்றனவா?
இல்லை. ஒவ்வொரு கணமும் சூரியனின் ஃபோட்டோஸ்பியரிலிருந்து (ஒளி மண்டலம்) இக்கதிர்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. நம் மீது விழுந்து கொண்டு தான் இருக்கின்றன.
5) பிறகேன் கிரஹணத்தின் போது மட்டும் கண்ணுக்குப் பிரச்சனை?
சாதாரண வேளைகளில் நம் கண்களால் சூரியனை நேரடியாய்ப் பார்க்க முடியாது. அதீத வெளிச்சம். அதனால் நம் ப்யூபில் (பாப்பா) சுருங்கி கண்களை மூடச் செய்து விடும். அதனால் அக்கதிர்கள் கண்களுக்குள் பாய்ந்து ரெட்டினாவைத் தொட வாய்ப்பில்லை. ஆனால் கிரஹணத்தின் போது அதீத வெளிச்சம் இல்லை. அதனால் சூரியனை எளிதில் நேராய்ப் பார்க்கலாம். அதனால் அக்கதிர்கள் நிலவுக்குப் பின்னிருந்து கசிந்து நம் கண்ணுக்குள் புக வாய்ப்பதிகம்.
6) இது மாதிரி கண் பாதிப்பு நிஜத்தில் நடந்திருக்கிறதா?
ஆம். சாதாரண நேரத்தில் கூட போதை மருந்தின் ஆதிக்கத்தில் நேரடியாய்ச் சூரியனைப் பார்த்தவர்களுக்கு நடந்திருக்கிறது. கிரஹணத்தின் போது மனிதர்களுக்கும் நாய் முதலிய விலங்குகளுக்கும் நடந்திருக்கிறது. ஐஸக் நியூட்டன் நிலைக்கண்ணாடியில் சூரிய கிரஹணத்தைப் பார்க்க முயன்று சில தினங்களுக்குப் பார்வையிழப்பு ஏற்பட்டதாய்ச் சொல்வார்கள்.
7) சூரிய கிரஹணத்தின் போது வெளியே போகலாமா?சாப்பிடலாமா?
நடை, உணவு, கழிவு, கலவி என எல்லாம் செய்யலாம். எந்தத் தடையும் இல்லை. ஏனெனில் கிரஹணத்தின் போது தனிப்பட்டு எந்தக் கதிரும் வெளிவருவதில்லை. அது எப்போதும் நம் உடலின் மீது படும் அதே கதிர்கள் தாம். ஒருவேளை கிரஹணத்தின் போது கூடாதெனில் மற்ற வேளைகளிலும் கூடாது தான். கண்களில் அக்கதிர்கள் நுழையும் வாய்ப்பு கிரஹணத்தின் போது அதிகரிப்பது மட்டுமே வித்தியாசம். அதில் மட்டுமே பாதுகாப்பு பேண வேண்டும்.
8) சூரிய கிரஹணத்தை எப்படிப் பார்ப்பது?
எக்லிப்ஸ் க்ளாசஸ், பின்ஹோல் கேமெரா, வெண்துணிப் பிரதிபலிப்பு என வழிகள் இருந்தாலும் பாதுகாப்பான வழி உங்கள் நகரின் கோளரங்கத்திற்குச் சென்று வரிசையில் நின்று பார்ப்பது.
9) இப்போது தான் வெறும் கண்ணால் பார்த்தேன், ஒன்றும் ஆகவில்லையே?
ரெட்டினாவில் உணர்நரம்புகள் இல்லை. அதனால் சூரியக் கதிர்கள் ஊடுருவி அது பாதிப்புறும் போது வலி முதலான அறிகுறிகள் இராது. 12 மணி நேரங்களுக்குப் பின் பார்வை மங்க ஆரம்பிக்கும்.
*
Published on December 25, 2019 19:52
C. Saravanakarthikeyan's Blog
- C. Saravanakarthikeyan's profile
- 9 followers
C. Saravanakarthikeyan isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.