Jeyamohan's Blog, page 32

August 24, 2025

விவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்

 

புதுமைப்பித்தன்

வணக்கம் சார்,

தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது. உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும்.ஒரு எழுத்தாளராக, ஒரு விசில் ப்ளோயராகவும் நீங்கள் அந்த வாமனன் தான்.உங்கள் பண்பு, மன விரிவு முன் இதெல்லாம் சிறிய விஷயங்களாகவே மாறும்.

உங்கள் சக எழுத்தாளர்கள் உங்களிடம் உள்ள இந்த அறம் சார்ந்த கோபத்தைத் தேவையில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள் ஏன் ?

எஸ்.ரா. ஆனந்த விகடன் வாசகர் கேள்வி பதிலில் உங்களைப் பற்றி இதேதான் சொன்னார். நீங்கள் பெரிதாக மதிக்கும் அசோகமித்திரனும் சமீபத்தில் ஆ. வி. பேட்டியில் உங்கள் எழுத்து ஆளுமையை வியந்து கொண்டே… இதே போன்ற கவலையைத்தான் தெரிவித்தார்!

இவர்களுக்கு உங்கள் மீது மிக்க அன்பும், மரியாதையும் இருக்கலாம். ஆனால்,ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள சிறுமைகள் பற்றி நேரடியாகப் பேசுவதில் அப்படி என்னதான் தவறு?அவன் அப்படிப் பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விளைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்?அவன் பேசும் விஷயங்களுடன் கருத்தளவு ஆமோதிக்கும் ஒருவர் அதற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க வேண்டாமா? ஏன் தேவை இல்லாத விஷயங்களாகக் கருதுகிறார்கள்?

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ

எழுத்தில் எது சரி எது தவறு என்பதற்கு இலக்கணங்கள் விதிமுறைகள் ஏதும் இல்லை. விதி என ஒன்று உண்டு என்றால் இதுதான் – ஒருவர் தான் எப்படிப்பட்டவரோ அப்படியே வெளிப்படவேண்டும்.

இலக்கியவாதிகளில் தன் எழுத்துக்குள் மட்டும் நின்றுவிட்ட பெரும்படைப்பாளிகள் உண்டு. எல்லா விஷயத்துக்கும் எதிர்வினையாற்றிய பெரும்படைப்பாளிகள் உண்டு. சமூகப்பணியாற்றியவர்கள் உண்டு ஆற்றாதவர்களும் உண்டு. பிறதுறைகளில் மேதமை வெளிப்பட்டவர்கள் உண்டு, இலக்கியம் மட்டுமேயாக வாழ்ந்தவர்களும் உண்டு. அவற்றை அந்தந்த இலக்கியவாதிகளின் தனி இயல்பு என்றே சொல்லவேண்டும்

மௌனியும் அசோகமித்திரன் எதிர்வினையாற்றாத பெரும்படைப்பாளிகள். புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் எதிர்வினையாற்றிய படைப்பாளிகள்.

எதிர்வினையாற்றுகையில் படைப்பாளி தொடர் விவாதங்களில் சிக்கிக்கொள்கிறான். அவனுடைய நேரமும் கவனமும் படைப்பில் இருந்து சிதறடிக்கப்படுகின்றன

மேலும் கருத்துக்கள் என்றாலே அவை முதன்மையாக எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். மாற்றுத்தரப்புடையவர்கள் கோபம் கொள்வார்கள். மாற்றுக்கருத்தில்லாதவர்கள் கூடப் புதியகருத்து அளிக்கும் சமன்குலைவு காரணமாக ஒவ்வாமை கொள்வார்கள்.

அனைத்துக்கும் மேலாகக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளன் தன் சொந்த ஆளுமையை எழுத்துக்கு வெளியே தனியாக முன்வைக்கிறான். அகங்காரம் அதிகமுள்ள வாசகர்கள் அதனால் சீண்டப்படுகிறார்கள். பொதுவாக முதிர்ச்சியற்ற வாசகர்கள் அல்லது ஆரம்பநிலை வாசகர்கள் அதிக தன்னகங்காரத்துடன் இருப்பார்கள். அவர்களைப்போன்றவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது கசப்பை வளர்த்துக்கொள்வார்கள். ‘நானும் ஒரு ஆள்தான்’ என்ற மனநிலையிலேயே அவன் படைப்புகளை அவர்கள் வாசிப்பார்கள்.

கலை சார்ந்த நுண்ணுணர்வற்றவர்கள் படைப்புகளை வெறும் கருத்துக்களாகவே காண்பார்கள். அவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளனின் கலைப்படைப்புகளை அவனுடைய கருத்துக்களின் நீட்சிகளாக மட்டுமே கண்டு சில்லறைத்தனமான வாசிப்பை முன்வைப்பார்கள்.

இவற்றின் விளைவாகக் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது பொதுவான ஓர் எதிர்மறைத்தன்மை சூழலில் நிலவும். அவனுடைய ஆக்கங்கள் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான, திரிக்கப்பட்ட கருத்துக்கள் உலவிக்கொண்டிருக்கும். இது எங்குமிருப்பதுதான். ஆனால் தமிழில் நல்ல வாசிப்புக்களைவிட இவை பன்மடங்கு அதிகம்

ஆகவே அவனை வாசிக்கவரும் புதியவாசகர்கள் திசைதிருப்பப்படுவார்கள். அவனை வாசிக்க அவர்களுக்கு மிகப்பெரிய தடை இருக்கும். இது அந்த எழுத்தாளனுக்கு மிகப்பெரிய இழப்பே. ஆகவே கருத்துக்கள் தெரிவிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதே எழுத்தாளர்களுக்கு நல்லது என்று தோன்றுகிறது.நான் அதையே பிறருக்குச் சொல்கிறேன்.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. சமூக ,பண்பாட்டு, அரசியல் தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்காமல், விவாதங்களுக்கு வராமல் ஒதுங்கிவிடும் எழுத்தாளன் காலப்போக்கில் தன்னுடைய சுய அனுபவங்கள் சார்ந்த ஓரிரு உணர்ச்சிகளுக்குள் ஒடுங்கிவிடுபவனாக ஆகிவிடுவான். அவனுடைய படைப்புலகம் சிறுத்து சூம்பிப் போய்விடும். ஒரு குறிப்பிட்ட படைப்புகளுக்குப்பின் அவனிடம் வளர்ச்சியே இருக்காது.

ஆக, எதைத்தேர்ந்தெடுப்பது? ஆற்றலில் ஒருபகுதி வீணானாலும் பரவாயில்லை என எண்ணுமளவுக்குப் படைப்பூக்கம் கொண்ட படைப்பாளி கருத்துச்சொல்லி விவாதிப்பவனாகவே ஆகவேண்டும் என நான் நினைப்பேன். அக்கருத்துக்களினால் அவன் சமகாலத்தில் ஒருவேளை முழு நிராகரிப்பை அடைந்தாலும் கூட அவனுடைய மிகச்சிறந்த சாத்தியங்களை அவன் வெளிப்படுத்தியிருப்பான். தன் முழு ஆளுமையுடன் மலர்ந்திருபபன்

சமகாலத்தில் நிராகரிக்கப்படுவது எழுத்தாளனுக்கு ஒட்டுமொத்தமாக எந்த இழப்பையும் அளிப்பதில்லை. எழுத்துக்களின் வாழ்நாள் மிக அதிகம். புதுமைப்பித்தன் அவர் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் என்பது இன்று அவரது எழுத்துக்களைத் தீர்மானிக்கிறதா என்ன? எழுத்தாளனின் எழுத்துசார்ந்த வாழ்நாள் அதிகபட்சம் ஐம்பது வருடம். எழுத்துக்கள் ஐம்பதாண்டுக் காலம் கழித்துதான் உண்மையான வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன.

ஜெ

Apr 20, 2013 முதற்பிரசுரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2025 11:35

செய்குத்தம்பி பாவலர்

வள்ளலார் பாடல்கள் பற்றிய அருட்பா மருட்பா விவாதத்தில் பங்குகொண்டவர். சென்னை விக்டோரியா ஹாலில் ஒரே நேரத்தில் நூறு செயல்களைச் செய்து சதாவதானி பட்டம் பெற்றார். சென்னையில் நடந்த அருட்பா – மருட்பா விவாதத்தில் பங்கேற்று வள்ளலாரின் பாடல்கள் அருட்பாக்களே என நிறுவினார்

செய்குத்தம்பி பாவலர் செய்குத்தம்பி பாவலர் செய்குத்தம்பி பாவலர் – தமிழ் விக்கி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2025 11:33

தூரன் விழா- ஈஸ்வரி

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

 

அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,

தமிழ் விக்கி தூரன் விருது விழா நாங்கள் கலந்து கொண்டது இதுவே முதல் முறை. நான், என் கணவர் பொன்ராஜ் மற்றும் என் 13 வயது மகனுடன் (பொன் முகேஷ்) கலந்து கொண்டோம். வெள்ளி காலை சென்னை இல் இருந்து எங்கள் கார் இல் ராஜ் மஹால் மண்டபத்திற்கு மதியம் 3 மணி அளவில் வந்து சேர்ந்தோம். கடந்த வருடம் முதல் தான் தீவிர இலக்கிய வாசிப்பு, அதன் நீட்சியாக முதல் முறையாக நாங்கள் முதலில் விஷ்ணுபுரம் விருது விழா 2024ல் கலந்து கொண்டோம். அன்றே முடிவு செய்து விட்டோம், இனிமேல் முடிந்த வரை அணைத்து விஷ்ணுபுரம் விழாக்களில் பங்கேற்க வேண்டும் என்று. குமரகுருபரன் விருது விழாவிலும் கலந்து கொண்டோம். ஒவ்வொரு விழாவிலும் ஒவ்வொரு புரிதல், கற்றல், அனுபவம்.

வெள்ளி மாலை 4 மணியில் இருந்து அமர்வுகள் ஆரம்பமானது. முதல் அமர்வு நாணயவியல் ஆய்வாளர் ஆறுமுக சீதாராமனுடன். நாணயவியல் ஆய்வு,  வரலாற்றை அறிந்து கொள்வதற்கு எத்துணை முக்கியமான பங்கு அளிக்கிறது என்பதை விவரமாக விவரித்தார். நாம் அமர்ந்து இருக்கும் இந்த இடத்தின் அடியில் இருந்தும் நமக்கு நாணயங்கள் எடுக்க முடியும் என்றும், பெரும்பாலான நாணயங்கள் ஆற்று படுகையில் கிடைப்பதன் காரணத்தையும் தெளிவுற விளக்கினார். 

அடுத்த அமர்வு விழா நாயகனான வேதாச்சலம் அவர்களின் அமர்வு. அமர்வின் முழு நேரமும் இருக்கையில் அமராமல் நின்ற படியே உரை ஆற்றினார்.  அமரும் படி கூறியதற்கு அனைவரின் முகங்களை பார்த்து பேசுவதற்கு இதுவே வசதியாக உள்ளது என்று கூறி நின்றபடியே கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். வரலாற்று ஆய்வாளரின் பார்வையில் தரவுகளின் முக்கியத்துவத்தை விளக்கி வரலாற்றில் எந்த ஒரு காலமும் பொற்காலமும் அல்ல இருண்ட காலமும் அல்ல என்ற வரலாற்று ஆய்வாளரின் தரப்பை முன் வைத்தார்.

சனி கிழமை காலை ஆய்வாளர் வேலுதரன் அவர்களின் நடு கற்கள் குறித்த ஆய்வுகளின் கலந்துரையாடல். ஒவ்வொரு காலத்திலும் நடு கற்களின் அமைப்பு, சதி கற்கள் பற்றிய விளக்கங்களை வழங்கினார். மேலும் ஷிண்டே அவர்களின் ஹரப்பா ஆராய்ச்சி பற்றிய கலந்துரையாடல் மற்றும் மூத்த ஆய்வாளர் சுப்பாராயலு அவர்களின் அமர்வுகள். 

மதிய  உணவு இடைவேளைக்கு பிறகு நாதஸ்வர இசை நிகழ்ச்சி. தூரன் விருது அறிவிக்க பட்ட உடனே தினமும் தளத்தில் இசை கலைஞர்களின் பதிவுகள் வந்த வண்ணமே இருந்தன. அதன் மூலம் ஏற்கனவே அவர்களின் இசை காணொளிகளை பார்த்து வந்ததால் அதிக எதிர்பார்ப்புடன் அமர்ந்திருந்தேன். இது வரை நாதஸ்வர நிகழ்ச்சிகள் எதற்கும் சென்ற முன் அனுபவம் கிடையாது. எஸ். ராமகிருஷ்ணன் அவர்களின் சஞ்சராம் நாவல் வாசித்ததில் இருந்து நாதஸ்வர நிகழ்ச்சியை நேரில் அமர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆவல் இருந்து வந்தது. தூரன் விழாவிற்கு ஒரு வாரம் முன்னதாகவே வாசிக்க இருக்கும் அனைத்து பாடல்களின் இணைப்பும் தளத்தில் பகிரப்பட்டது. அனைத்தையும் முன்னரே கேட்டு வந்ததால் இன்னும் ஆர்வம் அதிகமானது.

மங்கள விநாயகனில் ஆரம்பித்த உடனே மெய் சிலிர்த்து விட்டது. இரண்டு மணி நேரம் முழுவதும் இசையில் அரங்கமே லயித்து தான் விட்டது. சின்ன குழந்தை கீர்த்தனையை நாதஸ்வர இசையில் கேட்பதற்கு அவ்வளவு அருமையாக இருந்தது. எனக்கு வார்த்தையினால் அதை விளக்க தெரியவில்லை. அதை அரங்கில் இருந்து அனுபவித்தவர்களுக்கு மட்டும் தான் உணர்ந்து கொள்ள முடியும். அரங்கில் இருந்த அனைவரின் கண்களிலும் ஒரு துளியேனும் கண்ணீர் வராமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.

விருது வழங்கும் நிகழ்வே கடைசி நிகழ்வு. வரலாற்று ஆய்வுகளும் அதன் தொகுப்பும் ஒரு எழுத்தாளனுக்கு எவ்வளவு முக்கியம், இலக்கிய வாசகர்களுக்கு வரலாற்று ஆய்வுகள் எவ்வளவு முக்கியம், என்ற தங்களின் சிறப்புரை ஒரு பெரிய திறப்பாக அமைந்தது எனக்கு.  வேதாச்சலம் அவர்களின் ஏற்புரை, ஒரு ஆய்வாளனின் இடையறாத உழைப்பையும் அதற்கு கிடைக்கவேண்டிய தக்க அடையாளத்தையும் அனவைருக்கும் விளக்கியது. அனைத்துக்கும் மேலாக அரங்கில் அமர்ந்தவர்களின் ஆர்வம் பற்றிய அவரின் வியப்பு சந்தோஷமாகவே இருந்தது. வரலாற்று ஆய்வுக்கு ஒரு இலக்கிய வட்டம் கொடுக்கும் முக்கியத்துவத்தை பார்த்து சற்றே அதிர்ந்து தான் விட்டார் வேதாச்சலம் அவர்கள்.

அனைத்து நிகழ்வுக்கு பின் ஞாயிறு அன்று அறக்கல்வி மாணவர்களுடன் நடந்த வகுப்பில் கலந்து கொண்டது ஒரு அறிய வாய்ப்பு என்று தான் சொல்லவேண்டும். விஷ்ணுபுரம் நிகழ்வில் கலந்து கொள்வது என்பது ஒரு குடும்ப நிகழ்வில் கலந்து கொள்வதை விட சிறப்பான ஓன்று. எங்கும், எப்போதும், அனைவரிடமும் இலக்கிய கலந்துரையாடல் தான். ஒவ்வொரு நிகழ்வுகளிலும், ஒவ்வொரு வகுப்புகளிலும் ஒவ்வொரு புதிய நண்பர்கள் கிடைக்காமல் செல்ல வாய்ப்பில்லை. தங்கை என்றும் அக்கா என்றும் தோழி என்றும் கிடைக்கும் நண்பர்கள் வட்டம் பெருகிய வண்ணமே உள்ளது. அனைத்திற்கும் மேலாக இந்த இலக்கிய நிகழ்ச்சிகளுக்கு பின் கிடைக்கும் ஒரு வித செயல் ஊக்கம். இவை அனைத்திற்கும் காரணமாக அமைந்த விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் தங்களுக்கும் மனம் கனிந்த நன்றிகள்.

அன்புடன் ஈஸ்வரி

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2025 11:31

The workshop on novel writing

I heard about the workshop you are organizing on novel writing in Chennai. I want to know what kind of training you are giving in that class. I have dreams to write and am always reluctant to start because I don’t know whether I have that ability to complete a work.

The workshop

 

மேலைநாடுகளில் வாழ்பவர்களுக்கு மேலையிசையில் ஓர் அறிமுகம் என்பது மிகப்பெரிய அடிப்படைத் தகுதி. அது அவர்களுக்கு எத்தனையோ வாசல்களைத் திறக்கும். பல நண்பர்களை உருவாக்கும். ஆனால் நம்மவர்கள் அமெரிக்கா வந்தாலும் இங்கே அமர்ந்து 90களின் இளையராஜா பாட்டைக்கேட்டு உருகிக்கொண்டிருப்பார்கள்

இசை வகுப்புகள், கடிதம்

 

 

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 24, 2025 11:30

August 23, 2025

நம் குழந்தைகளுக்கான கதைகளின் தரம்

அன்புள்ள ஜெ,

இந்த ஆண்டு குழந்தை எழுத்தாளருக்கான பாலபுரஸ்கார் விருது பெற்ற விஷ்ணுபுரம் சரவணனின் ஒற்றைச்சிறகு ஓவியா என்ற நூலைப் பற்றி  பிரபாகரன் சண்முகநாதன் எழுதிய பதிவு இது.

மொழியில் கனவு காண்பது: பிரபாகரன் சண்முகநாதன்

சாகித்ய அக்காதமியின் விருது விஷ்ணுபுரம் சரவணனுக்கு கிடைத்தபோது நீங்கள் பாராட்டு தெரிவித்திருந்தீர்கள். இந்நூலை நான் வாசித்தேன். என் மகனுக்கு வாங்கிக்கொடுத்தேன். ஐந்து பக்கம் வாசித்துவிட்டு அவன் ‘போர்’ என்று பதில் சொன்னான். நான் வாசித்துவிட்டு இந்தக் காலக் குழந்தைகளுக்கு இப்படி ஒரு அசட்டு நாவலை எப்படி கொடுக்க முடியும் என்று திகைத்துப் போனேன். அதன் சகிக்கமுடியாத அட்டைப்படத்தைப் பார்த்ததுமே நான் யோசித்திருக்க வேண்டும்.

உங்கள் கருத்து என்ன?

ராஜேந்திரன் பெரியசாமி

அன்புள்ள ராஜேந்திரன்,

நான் தமிழில் குழந்தைகளுக்கான நூலை எழுதத் தொடங்கியதே நான் தொடர்ச்சியாகச் சந்திக்கும் குழந்தைகளின் உளநிலைகளுக்கும் அறிவுநிலைகளுக்கும் உகந்தவையாகத் தமிழிலுள்ள குழந்தை இலக்கியங்கள் இல்லை என்பதனால்தான். நம் குழந்தைகளின் அறிவியல் அறிவு, பொது அறிவு மிகுதி. ஆனால் மொழியறிவு மிகக்குறைவு. ஆகவே உயர்ந்த அறிவியல்- தத்துவ- வரலாற்றுச் செய்திகளுடன் சிறுவர்களுக்கான மொழியில் அந்நூல்களை எழுதினேன்.

பனிமனிதன் 1999ல் தினமணி சிறுவர் மணியில் வெளிவந்தது. இருபத்தாறு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அது மறுபதிப்பு கண்டு வாசிக்கப்படுகிறது. இரண்டு தலைமுறை வாசகர்களைக் கண்டுவிட்டது. இன்று என்னுடைய தீவிர வாசகர்களில் கணிசமானவர்கள் சிறுவர்களாக பனிமனிதனை வாசித்தவர்கள். அதன்பின் வெள்ளிநிலம் நாவலும், அண்மையில் உடையாள் நாவலும் வெளிவந்துள்ளன. இந்நாவல்கள் இப்போது ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. அமெரிக்காவிலும் வெளியாகவுள்ளன.

நான் உத்தேசிக்கும் வாசகர்கள் என்னுடைய தீவிரமான படைப்புகளின் வாசகர்களின் இளம்வயதினரைத்தான். என் சிறார் இலக்கிய நூல்களை வாசிக்கும் பெரியவர்கள் பலர் பனிமனிதனில் உள்ள பரிணாமவியல் பற்றிய செய்திகளையோ, அல்லது வெள்ளிநிலம் நாவலில் உள்ள மதங்கள் உருவான வரலாற்றையோ, அல்லது உடையாளில் உள்ள தத்துவத்தையோ புரிந்துகொள்ளமுடியவில்லை என்று சொல்வதுண்டு. ஆனால் குழந்தைகள் மிக எளிதாக அவற்றை உள்வாங்குவதையும் காண்கிறேன்.

(பாக்டீரியாக்களின் படலத்தை கண்ணால் பார்க்கமுடியாது, ஏனென்றால் ஏழாம் கிளாஸ் பாடநூலில் பாக்டீரியா கண்ணால்பார்க்கமுடியாதது என்று இருக்கிறது என்றெல்லாம் எழுதிய சீனியர் அறிஞர்கள் இங்கே உண்டு. இன்றைய குழந்தை உடனே கூகிள் ஏ.ஐயிடம் அதை தேடிவிடும். பாக்டீரியா படலங்களை பலநூறு இடங்களில் பல வடிவங்களில் பார்க்கமுடியும் என்றும், கண்ணால் பார்க்கமுடியுமளவு பெரிய பாக்டீரியா உண்டு என்றும் உடனே தெரிந்துகொள்ளும்)

நம் குழந்தைகளுக்கு அறிவியல்புனைவுகள் எளிதில் புரிகின்றன. ஏனென்றால் அச்சிறாருக்கு இதே தரத்திலான ஆங்கில நூல்கள் ஏராளமாக வாசிக்கக் கிடைக்கின்றன. திரைப்படங்களும்கூட பல உள்ளன. ஏன் இவற்றை தமிழில் எழுதவேண்டியுள்ளது என்றால் அந்த ஆங்கில நூல்களில் இல்லாத தமிழ்நாடு சார்ந்த, இந்தியா சார்ந்த ஓர் உலகை அவர்களுக்காக நாம் உருவாக்கவேண்டியுள்ளது என்பதனால்தான்.

ஆனால் தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்கள் என் நூல்களை புத்தகவடிவில் படிப்பதை நான் கண்டதில்லை. உண்மையில் அப்படி ஒரு எதிர்வினைகூட இத்தனை ஆண்டுகளில் வந்ததில்லை. பள்ளிகளில் இந்நூல்களை எவரும் வாங்குவதில்லை. பெற்றோர் வாங்கி அளிப்பதுமில்லை. எதிர்வினை இல்லை என்பதனால் அவர்களின் அறிவுநிலை என்ன, அவர்களுக்கான நூல் என்ன என்று எனக்குப் புரியவுமில்லை.  நான் கிராமப்புறப் பள்ளிகளுக்குச் செல்கிறேன், அவை மிகப்பின்தங்கிய பள்ளிகள். அங்கே குழந்தைகளுக்கு எந்த மொழியும் சரளமாக வாசிக்கத் தெரியவில்லை என்பதையே கண்டிருக்கிறேன்.

அத்துடன் என்னால் மிகத்தொடக்கநிலையிலுள்ள மாணவர்களுக்கான ‘குழந்தை இலக்கியத்தை’ எழுத முடியாது. என் உளநிலை, இப்போது, அதற்குரியது அல்ல. என் எல்லா நூல்களிலும் நான் எழுதுவது என் சொந்தத் தேடலையும், சொந்த கண்டடைதலையும்தான். பனிமனிதனும் விஷ்ணுபுரமும் எனக்கு நடை, கதையமைப்பு, கட்டமைப்பு என்ற அளவில் மட்டுமே வேறுபட்டவை. அடிப்படையான தேடல் ஒன்றே.

இன்று குழந்தையிலக்கியம், சிறார் இலக்கியம் ஆகியவற்றுக்கான சந்தை இரண்டு வகை. ஒன்று ஆங்கிலச் சிறார் இலக்கிய நூல்களுக்கான சந்தை. ஆனால் தமிழகத்தில் ஆங்கில நூல்களை வாங்கும் பெற்றோர், வாசிக்கும் சிறுவர்கள் இந்திய அளவிலேயே மிகக்குறைவு. முதல் இருபது நகரங்களில்கூட தமிழகத்தில் சென்னை உட்பட எந்நகரும் இல்லை. இங்கே ஆங்கில நூல்களுக்கான கடையே இல்லை.

தன் குழந்தைகளுக்காக ஆங்கிலநூல் வாங்கும் சிறிய வட்டம்தான் பனிமனிதனைப் போன்ற நூல்களையும் வாங்குபவர்கள். அவர்கள் வாங்குவதே குறைவு, தமிழில் வாங்குவது மிகக்குறைவு என்பதனால் நிறைய நூல்களுக்கு வாய்ப்பில்லை. தரமான குழந்தையிலக்கியத்துக்கான பல முயற்சிகள் நடைபெற்றுள்ளன. ஆதரவில்லாமல் அவை தோல்வியடைந்தன. சந்தையை உருவாக்கவே முடியவில்லை.

இன்னொரு களம் என்பது பள்ளிகள் வாங்கும் நூல்கள். கரும்பலகைத் திட்டம் , ராஜாராம் மோகன் ராய் நிதி போன்ற வெவ்வேறு அரசுத்திட்டங்களின் நிதியுதவியால் பள்ளிகள்தோறும் நூல்கள் வாங்கப்படுகின்றன. அது சில கோடி ரூபாய் பெறுமானமுள்ள சந்தை.

தமிழில் குழந்தையிலக்கியக் களத்தில் இன்று தீவிரமாக இருப்பவர்கள் இடதுசாரி அமைப்புகள். இருபதாண்டுகளுக்கு முன்பு இந்தியாவெங்கும் உருவான வயதுவந்தோர்க் கல்வி இயக்கத்தில் இடதுசாரிகள் ஈடுபட்டு பணியாற்றினர். அதன் விளைவாக அவர்கள் கல்வித்துறையில் தொடர்புகளை உருவாக்கிக் கொண்டனர். அத்துடன் ஆசிரியர்களின் தொழிற்சங்கங்களும் அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆகவே இடதுசாரி அமைப்புகளின் பதிப்பகங்களே இன்று சிறார் இலக்கியங்களையும் குழந்தை இலக்கியங்களையும் அதிகமாக வெளியிடுகின்றன. அந்த இரண்டாம்நிலைச் சந்தை முழுமையாகவே அவர்களின் கையில் உள்ளது. பனிமனிதன் எல்லாம் அங்கே செல்லவே முடியாது.

ஆகவே இன்று வெளிவந்துகொண்டிருக்கும் சிறார் இலக்கியம், குழந்தை இலக்கியம் பெரும்பாலும் இடதுசாரி எழுத்தாளர்களில் ஒரு சாராரால் எழுதப்படுகிறது. ஒரு கூட்டுச்செயல்பாடு போல.கேரளத்திலும் அப்படியே. யூமா வாசுகி போன்றோரால் அங்கிருந்து மொழியாக்கம் செய்யப்படும் நூல்களும் அதே உலகைச் சார்ந்தவையே. அந்த எழுத்தாளர்கள் எவரும் கதைகளை எழுதுவதற்கான பயிற்சி உடையவர்கள் அல்ல. கதை என்னும் அமைப்பே அவர்களுக்குக் கைவரவில்லை, கற்பனை கொஞ்சமும் இல்லை என்பதே என் எண்ணம். பொதுவான கருத்துக்களை மட்டுமே அவர்களால் சொல்லமுடியும். ஆகவே அக்குழந்தைக் கதைகள் மிக எளிமையான கருத்துப்பிரச்சாரங்கள் மட்டுமே.

ஆனால் அப்படியாவது நூல்கள் வெளிவரட்டுமே என்பதே என் எண்ணம். இன்று இடதுசாரிகள் அன்றி எவரும் குழந்தைகளுக்கான நூல்களை வெளியிட்டு விற்றுவிட முடியாது என்பதே நடைமுறை. கிராமப்புறக் குழந்தைகளுக்கு நூல்கள் என ஏதேனும் கிடைக்கின்றன என்றால் இவைதான். குறைந்தபட்சம் இவற்றில் இன்று பரவலாக ஏற்கப்பட்டுள்ள சமூகவியல் செய்திகளாவது உள்ளன. ஆகவே இவை பரவலாகட்டும். ஆனால் இந்நூல்களைக்கூட பள்ளிகளில் ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுப்பதில்லை, பிள்ளைகளால் வாசிக்கவும் முடியவில்லை என்பது இன்னொரு துயரம்.

நீங்கள் கொடுத்த சுட்டியை வாசித்தேன். இந்த நூல்கள் சற்றும் கற்பனைவளம் அற்றவை என எனக்குத் தெரியும். ஏனென்றால் இன்றைய சராசரிக் குழந்தை இருக்கும் அறிவுத்தரத்துடன் ஒப்பிட்டால் மிகப்பின்தங்கிய அறிவுத்தரம் கொண்டவர்கள் இந்த குழந்தை எழுத்தாளர்கள். ஆனால் கிராமப்புற குழந்தைகளுக்கு பிடித்திருக்கலாம் என நினைத்தேன். கதைச்சுவாரசியம் இல்லையேல் அவர்களும் வாசிக்கமாட்டார்கள் என்பது ஒரு முக்கியமான கோணம்தான்.

நீங்கள் அளித்த சுட்டியில் அக்கதையின் சுருக்கத்தை வாசித்தேன். 50 ஆண்டுகளுக்கு முன்பு கல்வி கோபாலகிருஷ்ணன், வாண்டுமாமா எழுதிய கதைகள்கூட இதைவிட மேலான கதையம்சம், கற்பனை கொண்டிருந்தன. இன்று நவீன வரைகலைக் கதைகளை, கணிப்பொறி விளையாட்டுக்களை பார்த்து வளரும் குழந்தைகளுக்கு இந்தக்கதைகள் மிகப்பெரிய சலிப்பையே அளிக்கும்.

இந்தவகைக் கதைகள் விருது பெறும்போது இவற்றை புகழ்ந்து, இவற்றையே ஒருவகைச் சாதனைகளாகக் காட்டி, ஒரு முன்னுதாரணமாக நிறுவிவிடுவார்கள் நம்மவர்கள். அது அவர்களின் வணிகத்துக்காக. ஆகவே இக்கதைகளின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டுவது நல்லதுதான்.

இடதுசாரி எழுத்தாளர்கள்தான் குழந்தை எழுத்தாளர்களாக ஆகமுடியும் என்பதே சூழல். இந்நிலையில் அவர்கள் இன்னும் கொஞ்சம் கவனமாக இருக்கலாம். குழந்தைகளுக்காக எழுதும்போது ஒன்று உண்மையான வரலாற்றுநாயகர்களின் கதைகளை எழுதலாம். அல்லது வேறு நல்ல கதைகளை தழுவியாவது எழுதலாம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:35

சி.எம்.ஆகூர்

சி.எம்.ஆகூர் எழுதிய ‘திருவிதாங்கூர் கிறிஸ்தவ திருச்சபை வரலாறு’ (Church History Of Travancore) 1183 பக்கங்கள் கொண்ட நூல். 1903-ல் இந்நூல் வெளியாகியது. திருவிதாங்கூரில் கிறிஸ்தவம் உருவாகி வலுப்பெற்ற வரலாற்றை விவரிக்கும் முதன்மையான நூல் இது. நான்கு பகுதிகள் கொண்ட இப்பெரிய நூல் தென்தமிழகத்தின் வரலாற்றைச் சொல்லும் முதன்மையான ஆதாரநூலாகவும் கருதப்படுகிறது.

சி.எம்.ஆகூர் சி.எம்.ஆகூர் சி.எம்.ஆகூர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:32

தூரன் விழா- கடிதம்

தமிழ் விக்கி- தூரன் விழா உரைகள் தமிழ்விக்கி-தூரன் விருது விழா -2025 தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி) ஈரோட்டின் இசைப்பொழிவு

 

அன்பின் ஜெ,https://m.youtube.com/playlist?list=PLp0BjDE_P97gzJWXaoLfauD0vZqk-Dlto

திருப்பூரில்,அறம் அறக்கட்டளை விழாவில் சுதந்திரம் என்றால் என்ன? என்னும் தலைப்பினால் தாங்கள் ஆற்றிய உரை பத்து ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். நான் கேட்ட உரைகளில் மகத்தான ஒன்று. தற்போது நீங்கள் ஆற்றும் உரைகள் எல்லாம் உங்கள் தத்துவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்களுக்கும் தங்கள் கனவுகளை தொடர்பவர்களுக்குமானது. இதனை கேட்பவர்கள் ‘ஒன்னுமே புரியல‘ என்பர்கள். இவையெல்லாம் நீணட கனவுகளும் தொடர் வாசிப்பும் உள்ள்வர்களுக்கானது. இன்று விக்கிதூரன் விழாவில் அனைத்து நிகழ்வுகளும் அந்த உரையின் தரிசன தொடர்ச்சியாகவே காணமுடிகிறது. வெற்று பெருமிதத்தின் மேல் நிற்பவர்களுக்கு உண்மையான பெருமிதம் என்ன என்று முகத்தில் அறைந்தாற்ப்போல் முன்வைப்பது. இந்த உரை எளியஆனால் பல திறப்புகளை அளித்த மகத்தான உரை. எளிய புரிதல்களையும், ஆரம்ப கட்ட வாசகனுக்கு நம் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிய அதன் வாசல்களை திறந்துவிடும் திறவுகோல். தூரன் விருது விழா அமர்வுகள் எல்லாவற்றிற்குமான தொடக்கப்புள்ளி. இந்த உரையில் பேசப்பட்ட பாறை ஓவியங்கள், பெருங்கற்கால நாகரிகம், கரிக்கியூர் ஓவியங்கள், நீலி இன்றைய தூரன் விழாவின் அங்கங்களாகிவிட்டன. 

நான் இந்த உரையை வர்தா புயல் காலத்திலும், மழை வெள்ளம் புகுந்த காலத்திலும் அலுவகத்தில் தங்கி வேளை செய்தபோதுபலருக்கு காண்பித்து உரையாடியிருக்கிறேன்(அலுவலக கணிணியில்). கேட்ட அனைவரும் இந்த உரைக்கு எதிராக பேசியதில்லை. தூரன் விழாவில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் நமது வரலாற்றை, பண்பாட்டை அறிய உதவுகிறது. இவ்வுரையு ஒவ்வொரு பள்ளியிலும் இவ்வுரையை சுதந்திரதினத்தில் காண்பிக்க வேண்டும். இன்று எம்.கே. சானுவின் அஞ்சலி குறிப்பை வாசித்தேன். உங்கள் உரைகள் ஏன் அவ்வளவு செரிவானதாக இருக்கிறது என்று. ” மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன்“. நாங்கள் அனைவரும் நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள் அனைவரையும் உங்களில் காண்கிறோம்.

இப்போதெல்லாம் எல்லா விழாக்களிலும்கேரளாவின் சண்ட மேளம் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. கோவில் திருவிழாக்களிலெல்லாம் சண்ட மேளமும் தவிலும் சேர்ந்தே இசைக்கப்படுவது கடும் ஒவ்வாமையை அளிக்கிறது. நான் அங்கிருந்து ஓடிவிடுவேன். அதனை ராஜ மேளம் என்பார்கள்.  நீங்கள்தான் எழுத வேண்டும் எது சரியென்று. 

எனக்கு எப்போதும் நாதஸ்வர இசை மனது நெருக்கமானது. நான் பிறந்து வளர்ந்தது வால்பாறையில்.  ஊரில் பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் நிகழும். மாரியம்மனுக்கு உகந்ததென்று கரகாட்டம் நான்கு நாட்களும் நடக்கும்தவில், நாதஸ்வரம்இசைப்பவர்கள் உடன் இருப்பார்கள். ஆட்டம் நன்றாக இல்லாவிட்டாலும், நாதஸ்வரம் நன்றாக அமைந்தால் இசைக்கச் சொல்லி ரசிப்பார்கள். சுடலை அங்கு பிரதான தெய்வம். சக்தி வரவழைக்க தவில், நாதஸ்வரம் வேண்டும்.  குறிப்பாக ஒத்தையடி வேண்டும், சாமியே கேட்கும் ‘அடியப்பா‘ என்று. ஒருமுறை வந்த தவில் இசைக்கலைஞருக்கு ஒத்தையடி தெரியவில்லை. எங்களூர்காரர் கணபதி தவிலை வாங்கி அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் எவருமே முறையாக இசை பயின்றவர் அல்லர். 

இப்போதுதூரன் விழாவில் இசை பயின்ற கலைஞர்கள் வாசிக்கும் இசை நிகழ்வு அலாதியானது. முன்பே வாசிக்கப்படும் பாடல்களை பகிர்ந்து அவற்றை கேட்டுவிட்டு வரச்செய்து இசைப்பதென்பது இந்த நிகழ்வை முழுமையாக்குகிறது. கடந்த ஆண்டு அந்த சிறுவன் நாதஸ்வரத்தை வாசிக்கையில் அரங்கமே ஒருவித உணர்ச்சி நிலைக்கு சென்றது. குறிப்பாக எழுத்தாளர் சுசித்ரா இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்கே சென்றுவிடுபவர் போல அமரவே இல்லை ‘இசை கற்றவர்‘. .நீங்களும் சரண்யாவும் பின்னால் அமர்ந்து ஒவ்வொரு பாடலையும் விளக்கி ரசித்துக்கொண்டிருந்தீர்கள். நான் நமக்கு ஒன்னும் தெரியாது என நண்பரிடம் நொந்து கொண்டேன். நீங்கள் அருண்மொழி அக்காவிடம் இருந்து இசை ரசனையை கற்றுக்கொண்டீர்கள் என்று தளத்தில் வாசித்தது நினைவு(?). அதற்கான பயிற்சியையும் முழுமையறிவு (மரபிசைப் பயிற்சி) அளிக்கத் தொடங்கி இருப்பது என்போன்ற அரைகுறைகளுக்கு ஒரு நல்லவாய்ப்பு.  

உங்கள் தளத்தில் நாதஸ்வரம், தவில் குறித்த கட்டுரைகளை வாசிக்கும்போது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வீட்டு திருமணவிழாவில் நீங்கள் தவில் இசை குறித்து எழுதியிருந்தீர்கள்,அதற்கு எதிர்வினையாக திரு.கோலப்பன் அவர்கள் சொல்வனத்தில்எழுதியிருந்ததை வாசித்தேன் அபாரபான கட்டுரை. அதன் இறுதியில் ‘ கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் அடக்கும் வித்தைத் தெரிந்தவர்களை தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள் என்று எழுதியிருந்தார். அத்தகைய இசையை தூரன் விழாவில் கேட்க முடியும்

கடந்த ஆண்டு தூரன் விழா உரையில் இந்த விழாவிற்கு புதிய ஏழுத்தாளர்கள் பலர் வந்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள். இங்கே பெற்றுக்கொள்வதற்கு பெரிய மனத்தடை அவர்களுக்கு உள்ளது. மகத்தான கனவுகளை முன் வைத்து அவற்றில் வெற்றியும் காணும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இவர்களுக்கு பிரம்மிப்பை உண்டாக்குகிறது. அதன் பொருட்டே இதனை தவிர்க்கிறார்கள். பிரம்மாண்டங்களைக் காணும்போதெல்லாம் அவை இடிந்துவிழவேண்டும் என்று மனிதன் நினைக்கிறான் என்று தஷ்தாயெவெஷ்கி எழுதினார்.  கடந்த ஆண்டு விழா முடிந்தவுடன் கடிதம் எழுத நினைத்தேன், அப்போதே முடிவு செய்தேன், அடுத்த அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று. இந்த ஆண்டு மேலும் அதிகமான நண்பர்கள் வரவேண்டும். இந்த விழா சிறக்க வேண்டும். 

நான் ஒவ்வொரு விழாவிலும்(விஷ்ணுபுரம் கோவை, தூரன் ஈரோடு)  உங்கள் கைகளை மட்டுமே கவனித்துக்கொண்டிருப்பேன். சச்சினை விடவும் அதிகம் கடிக்கப்பட்ட நகங்களை கொண்ட(இந்த குறிப்பிற்காக மன்னிக்கவும்). அவை கெத்தேல் சாகிப்பின் கரடிக்கரங்கள் என பேருரு கொள்ளும். விருது வழங்கும்போது உங்கள் மெலிந்த கரங்களை தட்டிக்கொண்டு பெருமிதமாக நிற்பதை கண்டு கண்கள் கலங்க பார்த்திருக்கிறேன். நேற்று உளக்குவிப்பு தியான முகாம் சென்று திரும்பியிருக்கிறேன். பயணம் முழுவதும் நீங்கள் அளிப்பவை பற்றியே பேச்சு. இறுதியாக அந்தியூர் மணியிடம் கைகுலுக்கிவிட்டு, ஒரு பத்து நாள் தானே ஈரோட்டில் சந்திப்போம் என கூறி விடை பெற்றேன் கண்டிப்பாக என்றார்..

நன்றி

ராஜன்

திருப்பூர்

படங்கள் மோகன் தனிஷ்க்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:31

கம்பராமாயண இசை நிகழ்வு, பதிவு

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரால் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள பிரிஸ்கோ நகரில் கம்பராமாயண இசைக்கச்சேரி ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை மாலை சிறப்பாக நடந்தது. கம்பராமாயணம் என்றாலே சிறப்புதான் அதிலும் தேர்ந்தெடுக்கப்பட்ட மிகச்சிறந்த 12 பாடல்கள் இந்த கச்சேரியில் பாடப்பட்டது.

நிகழ்ச்சியின் தொடக்கத்திலேயே பழனி ஜோதி அவர்கள் தமிழ் மரபின் உண்மையான பெருமிதங்கள் எவை என எடுத்துக் கூறினார். மலையின் சிகரம் போல் நம் பண்பாட்டின் உச்சமாக கம்பராமாயணம் எப்படி வெளிப்படுகிறது என்பதை மிகத் தெளிவாக எடுத்துக்கூறி ரசிகர்களைக் கச்சேரியின் மனநிலைக்குள் கொண்டு வந்தார்.

“உலகம் யாவையும் தாம் உளவாக்கலும்” என்ற கடவுள் வாழ்த்துப் பாடலோடு கச்சேரி துவங்கியது.

“வன்மையில்லை ஒர் வறுமை இன்மையால்” பாடலின் நடுவில் ஒர் இடத்தில் இசையை நிறுத்தி ப்ரியா கிருஷ் குரலை மட்டுமே கொண்டு அனைவரையும் இன்மைக்கு அருகில் கொண்டு சென்று மெய்மறக்க வைத்தார். “தோள் கண்டார் தோளே கண்டார்” பாடலில் ப்ரியா கிருஷ் அரங்கத்தைத் தன்வசப்படுத்தினார். அனைவருமே மிதிலை சென்று ராமனின் எழிலை ரசித்தோம். மொத்த அரங்கமுமே இந்த பாடலுக்குச் சரணடைந்தது.

“எண்ண அரு நலத்தினாள் இணையள் நின்று வழி” என்ற இந்த பாடலில் இத்தனை அழகு உள்ளதா என்று கேட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் அத்தனை அழகையும் ப்ரியா கிருஷும் குழுவும் வெளிப்படுத்தினார்கள்.

கம்பன் உவமைகளை மழையெனப் பொழிந்த “கடலோ மழையோ முழு நீலக் கல்லோ” என்ற பாடலில் மிருதங்கமும் கஞ்சிராவும் இணைந்து இசை மழையாகவே பொழிந்தார்கள். மொத்த அரங்கையுமே தாளம் போட வைத்தார்கள்.

“குழைக்கின்ற கவரி இன்றி கொற்றவன்வெண் குடையும் இன்றி” என்ற இந்தப் பாடலில் காப்பியத் தலைவனான இராமனுக்குமே விதியிலிருந்து விலக்கு அளிக்கப்படவில்லை என்பதையும், கோசலையின் உணர்வுகளையும் மிக அருமையாக பழனி ஜோதி எடுத்துக் கூறினார்.

“வெடிக்கின்றன, திசையாவையும்“

“கடல் வற்றி, மலை உக்கன“

“புரிந்து ஓடின, பொரிந்து ஓடின“

“நீர் ஒத்தன, நெருப்பு ஒத்தன“

என்ற நான்கு பாடல்களின் மூலம் போர்க்களத்தை கண்முன்னே நிறுத்தி விட்டார்கள் நம் இசைக் குழுவினர். அரங்கத்தின் வெப்பநிலையே சற்று உயரம் அளவிற்கு இசையை அமைத்திருந்தார்கள்.

“போர் மகளை, கலைமகளை, புகழ்மகளை” என்ற இந்த பாடலின் இசையும், குரலும் மரணத்தைப் பற்றிய உணர்வுகளை விவரிக்கும் விதத்தில் இருந்தது. இராவணன் இறந்த காட்சியை நேரில் பார்த்தது போன்ற அனுபவத்தை தந்தது. அதன் வெளிப்பாடாக அரங்கத்திலிருந்த பாதிக்கும் மேற்பட்ட ரசிகர்களின் விழிகளிலிருந்தும் கண்ணீர் வழிந்தது.

“இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்“

என்ற அழகான பாடலுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது. கம்பனின் அற்புதமான பாடல் வரிகளாலும், ராலே ராஜனின் மிகச்சிறந்த இசையாலும், ப்ரியா கிருஷின் இனிமையான குரலாலும் கம்பராமாயண காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்றார்கள். உமா மகேஷின் வயலின் நெஞ்சமெல்லாம் நிறைந்தது. சாய் சங்கர் கணேஷின் பியானோ வாசிப்போ உன்னதம். ராஜு பாலனின் மிருதங்கம் அற்புதம். ஸ்கந்த நாராயணனின் கஞ்சிரா சிறப்பு சேர்த்தது. பழனி ஜோதியின் மிக அருமையான விளக்கத்தால் என்னைப் போல் கர்நாடக இசைக்கு புதியவர்களாலும் ஆழமாக ரசிக்க முடிந்ததோடு தொடர்ந்து கச்சேரியோடு பயணிக்க முடிந்தது. கம்பனின் பாடலில் உள்ள கம்பீரத்தை ராலே ராஜன் தன் இசையால் வெளிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கம்பனின் வரிகளில் இருந்த மகிழ்ச்சி, சிறப்பு, இழப்பு, துக்கம், அழகியல், மேன்மை ஆகியவற்றை அதன் அர்த்தங்களோடு ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தார்.

உணர்வுபூர்வமான இசையால் பாடலின் வழியாக ரசிகர்களின் உணர்வுகளை இந்த இசைக்கச்சேரி தொட்டது. கால இடைவெளி கடந்து கம்பனின் காவியத்திற்குள் நம்மை அழைத்துச் சென்ற அனுபவம் சுகமானது. குழந்தைகளாலும் முழு நேரமும் இசையை ரசிக்க முடிந்தது. கம்பனின் காவியத்தை அடுத்த தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் அமைப்பினரின் இந்த மிகச் சிறப்பான நிகழ்வு எல்லைகளை தாண்டி தொடர்ந்து பயணிக்கட்டும்..

நன்றி!

ராதா பாலாஜி

டாலஸ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:31

சங்கரரும் சம்பவரும்

20 வருடங்களுக்கு முன்பு சிக்கிம் மடாலத்தில்  பத்ம சம்பவரின் சித்திரத்தை பார்த்ததுமே, காலில் விழத் தோன்றியது.  அவரின்  மதமோ சாதனைகளோ அறிவுரைகளை ஒன்றுமே தெரியாது.

சங்கரரும் சம்பவரும்

 

I was listening to your small speech on the importance of learning sculpture and literature at Bhakti Marga. I too had that doubt for a long time, whether learning makes us intellectual and thus diminishes our bhakti.

Bhakti and learning
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 23, 2025 11:30

August 22, 2025

நூலகம்- அறிவும் அதிகாரமும்

இந்தியர்களாகிய நமக்கு நம்மிடம் மிகப்பெரிய அறிவுச்சேகரிப்பு இருக்கிறது என்றும், வேறெங்கும் இதெல்லாம் இல்லை என்றும் ஒரு மிதப்பு உண்டு. நம்முடைய பெருமிதம் பெரும்பாலும் பொய்யாக உருவாக்கப்பட்டது. தேசிய இயக்கத்தின்போது நமக்கிருந்த தாழ்வுணர்ச்சியை போக்க கொஞ்சம் பெருக்கிச் சொன்னார்கள். அதை இன்றும் நம்பினால் நாம் அறிவிலிகளாக ஆவோம். உலகின் மிகப்பெரிய, மிகப்பழைய நூலகங்களில் ஒன்றின் முன் நிற்கையில் அந்த பணிவும், மானுடன் என்ற வகையில் பெருமிதமும் உருவாகியது.

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 22, 2025 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.