Jeyamohan's Blog, page 29
August 29, 2025
விலக்குதலின் விதிகள்
நான் உங்களைத் தொடர்பு கொள்ள வேண்டாம் என நீங்கள் எனக்கு கடிதம் அனுப்பிய பின் ஏறத்தாழ பதினோரு மாதங்கள் கழித்து இந்த கடிதம் எழுதுகிறேன். முதலில் உங்கள் கடிதத்தை பார்த்து சற்று திகைப்படைந்தேன். ஏனெனில், நீங்கள் சாதாரண கேள்விகளுக்கு கூட பொறுமையாக பதில் அனுப்புவீர்கள் என்பதை பார்த்திருக்கிறேன்.
விலக்குதலின் விதிகள்
I watched the video about Friedrich Nietzsche. I was pleased to see a scene in which a father and daughter were discussing a Western philosopher seriously, with the daughter actively answering profound questions.
The root of SupermanAugust 28, 2025
இன்றைய உறவுச்சிக்கல்கள் பற்றி…
இன்று எவரோ என்னிடம் அனேகமாக வாரமொருமுறை தங்களுடைய கடுமையான உறவுச்சிக்கல்களை, குடும்பப்பூசல்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கல். என் சூழலிலேயே மணமுறிவுகள் பல நிகழ்கின்றன. இன்று உறவுகள் ஏன் இத்தனை சிடுக்காக ஆகியுள்ளன? கடந்து போக எதேனும் வழியுள்ளதா என்ன?
நௌருவின் விதி
ஒரு செய்திக்குறிப்பு, சீன் வாங் (Sean Wang) என்னும் செய்தியாளர் எழுதியது. ஒரு செய்தியே ஒரு நாவல் போலத் தோன்றியது. பசிபிக் கடலில் உள்ள நௌரு (Nauru) என்னும் தீவைப்பற்றியது. விக்கிப்பீடியாவிலேயே விரிவான செய்தி இருப்பதை பின்னர் கண்டுகொண்டேன். திகைப்பூட்டும் ஒரு சிறு வரலாறு கொண்டது இந்நாடு (விக்கிப்பீடியா கட்டுரை)
மிகச்சிறிய ஒரு தீவு இது. இப்போது மக்கள்தொகை பன்னிரண்டாயிரம் பேர்தான். இந்தத் தீவு உண்மையில் பசிபிக் கடலின் விரிவில் ஒரு சுண்ணாம்புப் பாறைதான். உண்மையில் ஆஸ்திரேலியாவே ஒரு பெரிய சுண்ணாம்புப் பாறைதான். பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நுண்ணுயிரிகளின் ஓடுகளால் உருவான சுண்ணாம்புப்பாறை. அதன்மேல் பின்னர் மண் உருவாகி, செடிகள் முளைத்து, ஒரு குட்டிக் காடாக ஆகியது. கடைசிப் பனியுகத்தில் கடல் உறைந்தபோது அங்கே பழங்குடிகள் நடந்து சென்று குடியேறினர்.
நௌருவில் பறவைகள் பெரும் எண்ணிக்கையில் இருந்தன. அங்கே வாழ்ந்த பழங்குடிகளின் முதன்மை உணவே பறவைகள்தான். ஒரு காலத்தில் பறவை இறைச்சியையே மைய உணவாகக் கொண்ட, ஆரோக்கியமான வேடர்கள் அங்கே வாழ்ந்தனர். மீன்பிடித்தலும் ஓங்கியிருந்தது. அவர்களுக்கே உரிய மொழியும், பண்பாடும் இருந்தது.
அந்தப்பறவைகள் பல லட்சம் ஆண்டுகளாக அங்கே போட்ட எச்சம் உறைந்து உருவான பாஸ்பேட் படிவங்கள் அந்த மண்ணில் பல அடி உயரத்திற்கு இருந்தன. 1900 வாக்கில் ஐரோப்பியர் அத்தீவைக் கண்டுபிடித்தனர், அங்கிருந்த பாஸ்பேட் மிக அரிய வேதிப்பொருள் என்று கண்டடைந்தனர்.
முதலில் பாஸ்பேட் உரமாகப் பயன்படுத்தப்பட்டது, ஆனால் விரைவிலேயே மிகச்சிறந்த வெடிபொருளை உருவாக்கும் மூலகம் என்று கண்டடையப்பட்டது. முதல் உலகப்போரின் போது பிரிட்டிஷார் அத்தீவை உரிமைகொண்டிருந்தனர். பின்னர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து நாடுகள் அத்தீவை உரிமைகொண்டாடின. அவை இணைந்து பிரிட்டிஷ் பாஸ்பேட் ஆணையத்தை உருவாக்கிக்கொண்டன.. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அப்பகுதி ஆஸ்திரேலிய கட்டுப்பாட்டின் கீழ் சென்றது. 1968 ல் சுதந்திரம் பெற்றது.

பாஸ்பேட் நௌரு தீவின் ஒவ்வொருவரையும் பெரும் செல்வந்தர்களாக்கியது. பணம் வந்து கொட்டியதும் அவர்கள் அதை அள்ளி வீச ஆரம்பித்தனர். ஆஸ்திரேலியாவிற்குச் சென்று சூதாட்ட விடுதிகளில் பணத்தைச் செலவழித்தனர். நுகர்வுப்பொருட்களை வாங்கிக்குவிப்பதில் ஒருகாலத்தில் அந்தத் தீவினர் முன்னணியில் இருந்தனர்.
நௌரு அரசும் ஊதாரித்தனத்தில் உச்சம் தொட்டது. அந்நாடு மெல்போர்ன் நகரின் மிகப்பெரிய அடுக்ககம் ஒன்றை கட்டியது. நௌரு தீவில் தேவையே இல்லாமல் மிகப்பெரிய விமானநிலையம் கட்டப்பட்டது. செயற்கைக்கோள் புகைப்படத்திலேயே தெரியும் அளவுக்குப் பெரிய விமான ஓடுபாதை. ஆனால் அங்கே பல ஆண்டுகளாக விமானம் எதுவும் செல்வதில்லை. அரசு சார்பில் ஏர் நௌரு என்னும் விமான நிறுவனம் தொடங்கப்பட்டது. அது பெரிய நஷ்டத்தில் முடிந்தது. நௌருவின் அரசு ஆஸ்திரேலிய பங்குச்சந்தைகளில் பணத்தை முதலீடு செய்து 1998ல் நிகழ்ந்த ‘ஆசியக் குமிழியுடைதலில்’ முழுமையாக இழந்தது.
உண்மையில் ஆஸ்திரேலியா நௌருவை கைவிட்டபோதே அங்குள்ள பாஸ்பேட் தீர்ந்துபோக ஆரம்பித்திருந்தது. அதற்கு முன் பிரிட்டனே 70 சதவீதம் பாஸ்பேட்டை எடுத்து இரு உலகப்போர்களில் பயன்படுத்திவிட்டிருந்தது. 2000த்தில் பாஸ்பேட் முழுமையாகவே தீர்ந்துவிட்டது. அதற்கு முன்னரே நௌருவின் அரசு திவாலாகியது. அதன் மக்களும் பெரும்பாலும் திவாலாகிவிட்டிருந்தனர்.
நௌருவின் மக்கள்தொகையில் 71% பேர் ஆடம்பர வாழ்க்கையின் விளைவாக மிகமிக அதிகமான உடல் பருமன் கொண்டவர்களாக ஆகியிருக்கிறார்கள். அதாவது அவர்கள் உடல் உழைப்புக்கு தகுதியவற்றவர்கள். அங்கே 94.5% பேர் அதிக எடை கொண்டவர்கள் என்கிறது கணக்கு. நாட்டின் 80 சதவீத நிலம் கடுமையான கனிம அகழ்வால் தோண்டி வெளியே குவிக்கப்பட்ட பாறைத்தூசால் வாழவோ, பயணம் செய்யவோ தகுதியற்ற தரிசு நிலம். காற்று மாசுபாடு உச்சத்தில் உள்ளது.
முந்நூறாண்டுக்கால மேற்கத்திய தாக்கத்தால் நௌரு மக்களின் மரபான வாழ்க்கைமுறை, குடும்ப அமைப்புகள், சமூக நம்பிக்கைகள் ஆகியவை அழிந்துவிட்டன. அவர்களின் மொழியும் அழிந்துவிட்டது. அவர்கள் சென்ற ஐம்பதாண்டுகளாக வெறும் நுகர்வோர் மட்டும்தான். அவர்களின் கல்வித்தரம் மிகப்பரிதாபகரமானது. அவர்களால் எங்கும் எந்த வேலையையும் செய்யமுடியாது.
நௌருவில் இன்று வேளாண்மை செய்ய முடியாது. சூழியல் அழிவால் சுற்றுலாவும் சாத்தியமில்லை. அகழ்ந்தெடுக்க எந்த கனிமமும் இல்லை. மொத்தத்தில் அங்கே ஒன்றுமே இல்லை. செல்லமாக ‘பசிபிக்கின் குவாண்டனாமோ’ என நௌரு அழைக்கப்படுகிறது.
நௌரு மக்கள் இன்று நியூசிலாந்தும் ஆஸ்திரேலியாவும் அளிக்கும் கருணையுதவியால் வாழ்க்கையை நடத்துகிறார்கள். கடல்மட்ட உயர்வால் அந்நாடு இன்னும் இருபதாண்டுகளில் முழுக்கவே மூழ்கிவிடும். இப்போது அங்கிருந்து இன்னொரு நாட்டுக்குச் செல்ல டிக்கெட் வாங்கும் பணம் வைத்திருப்பவர்களே பத்துசதவீதத்திற்கும் குறைவானவர்கள் என்று கட்டுரையாசிரியர் சொல்கிறார்.
நௌரு ஒரு பெரிய குறியீடு போலிருக்கிறது. கனிமவளத்தை நம்பியிருக்கும் எந்த நாடும், இயற்கையை அழித்து கனிமவளத்தை சூறையாடும் எந்தச் சமூகமும், மெல்ல மெல்ல அத்திசை நோக்கியே செல்கிறது என்று தோன்றுகிறது. அல்லது மொத்த பூமியே அத்திசை நோக்கித்தான் செல்கிறதா என்ன?
கே.டி. பால்
கே.டி. பால், இந்திய தேசியக் கிறிஸ்தவம் என்னும் கருதுகோளுக்காக வாதிட்டவர், கிறிஸ்தவ அமைப்புக்குள் இருந்துகொண்டு இந்திய தேசிய விடுதலை இயக்கத்துடன் இணைந்து செயல்பட்டவர் என்னும் வகையில் வரலாற்றில் இடம்பெறுகிறார்.

தூரன் விழா- அந்திமழை கட்டுரை
அந்த நிலையில் எனக்கே ஒரு வெறுப்பு வந்தது. நான் எழுதி கஷ்டப்பட்டுச் சேகரித்த அந்த ஆய்வுக் குறிப்புகள் ஏராளமாகச் சேர்ந்திருந்தது. அடிப்படையான சிலவற்றை மட்டும் வைத்துக் கொண்டு மற்றவை எல்லாவற்றையும் திரட்டி ஒரு குட்டி லாரி நிறைய நிரப்பி அதை நான் பேப்பர் கடைக்கு எடைக்குதான் போட்டேன்.
ஏராளமான தொல்லியல் ஆவணங்களை எடைக்குப் போட்டேன்! ஆய்வாளர் வெ. வேதாசலம் வேதனை ! – தூரன் விழா கட்டுரை- அருட்செல்வன்கோவை சொல்முகம் 69
கோவை சொல்முகம் வாசகர் குழுமம் ஒருங்கிணைக்கும் 69வது இலக்கிய கூடுகை 31 ஆகஸ்ட், ஞாயிறன்று கோவையில் நிகழவுள்ளது. இக்கூடுகை வெண்முரசு கலந்துரையாடலுக்கு 50வது கூடுகையாக அமைந்துள்ளது என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்.
அமர்வு 1:
வெண்முரசு கலந்துரையாடல் – 50
நூல் – மாமலர்
அத்தியாயம் 13 முதல் 28 வரை
அமர்வு 2:
நாவல் – ‘தாண்டவராயன் கதை’
– பா. வெங்கடேசன்
ஆர்வமுள்ள இலக்கிய வாசகர்கள் அனைவரையும் இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.
நாள் : 31-ஆகஸ்ட்-25,
ஞாயிற்றுக்கிழமை.
நேரம் : காலை 10:00
இடம் : விஷ்ணுபுரம் பதிப்பகம், வடவள்ளி, கோவை.
Google map : https://maps.app.goo.gl/rEKLkhumw9r6XPGV9
தொடர்பிற்கு :
பூபதி துரைசாமி – 98652 57233
நரேன் – 73390 55954
ஸ்மார்த்த பிராமணர் பற்றி சில கேள்விகள்
I saw the videos on Western music, and they were fascinating. You are trying to introduce and promote a new genre of sensibility to the Tamil mind. It is a tough job anyway. Most Tamil people lack any formal training in music. Despite having a vast collection of folk music, we no longer practice it.
On the effects of Western musicஇந்த கேள்விகள் ஏன் உங்களுக்கு எழுகின்றன? ஏனென்றால் நீங்கள் உங்களை நீங்கள் பிறந்த சாதியுடன் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அதைப்பற்றி அறிய விரும்புகிறீர்கள். அதைப்பற்றிய குற்றச்சாட்டுகளுக்குப் பதில் சொல்ல விரும்புகிறீர்கள்.
ஸ்மார்த்த பிராமணர் பற்றி சில கேள்விகள்August 27, 2025
விஜய் அரசியல், இளைஞர்களின் அரசியல்.
மதுரையில் விஜய் நடத்திய அரசியல் மாநாடு பல கட்சியினரையும் பதற்றமடையச்செய்திருப்பதை காணமுடிகிறது. மதுரையில் எதற்கும் கூட்டம் வரும் என்பது ஓர் உண்மை, சில மாதங்களுக்கு முன்பு இந்துத்துவ அமைப்புகள் நடத்திய முருகன் மாநாட்டுக்கும் பெருங்கூட்டம் இருந்தது. அது வாக்குகளாக மாறுமா என்பது வேறொரு கேள்வி. வாக்களிக்கையில் மதுரையில் சாதி மட்டுமே கணக்கு. தமிழ்நாடு முழுக்க அப்படித்தான். ஆனாலும் விஜய்க்கு வந்த கூட்டத்தின் வெறியும் எண்ணிக்கையும் மற்றவர்களை மிரளச்செய்பவைதான்.
வழக்கத்துக்கு மாறாக இது சார்ந்து எனக்கு பல கடிதங்கள். காரணம் நான் விஜய் நடித்த சர்க்கார் படத்துக்கு எழுதினேன் என்பது. ‘விஜய் சர்க்கார்!’ என்ற கோஷம் அங்கே ஒலித்ததாம். நான் ‘பதில் சொல்ல கடமைப்பட்டவன்’ என்று சிலர் சொன்னார்கள். சிலர் ‘பூதத்தை திறந்துவிட்டதில்’ எனக்குப் பங்குண்டு என்றெல்லாம் கூட எழுதி பயமுறுத்தினார்கள்.
முதல் விஷயம், சர்க்கார் போன்ற படங்களின் எழுத்து என்பது ஒரு கூட்டுச்செயல்பாடு. என் பங்களிப்பும் அதிலுண்டு, அவ்வளவுதான். நான் எழுதிய எந்தப்படத்தையும் என் எழுத்து என நான் சொல்லிக்கொள்ள மாட்டேன்.
மறுபக்கமும் உண்டு. அண்மையில் வெளிவந்த இந்தியன் 2 படத்தில் நான் எழுதிய ஒரு வரிகூட இல்லை. நான் எழுதியது ஒரு படத்துக்காக. அதை இரண்டு படங்களாக ஆக்கியபோது வேறு இரு எழுத்தாளர்கள் உள்ளே கொண்டுவரப்பட்டனர். அவர்கள் உள்ளே வந்ததே படத்தின் முதல் விளம்பரம் வந்தபோதுதான் எனக்குத் தெரியும். அவர்கள் எழுதியதே படத்தில் இருந்தது. எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் முதலில் இருந்தது. ஆனால் அதற்கும் நான் பொறுப்பேற்றே ஆகவேண்டும்.
ஆகவே சர்க்கார் வசனங்களுக்கெல்லாம் நான் ஆசிரியன் என சொல்லமுடியாது. அதே சமயம் அதன் பொறுப்பை மறுக்கவும் முடியாது. சர்க்கார் வசனங்கள் மற்றும் காட்சிகளுக்காக பல மாதகாலம் இணையத்தில் வசைபாடப்பட்டேன். சரிதான் இதுவும் ‘பேக்கேஜ்’ஜில் ஒரு பகுதிதான் என்று எண்ணிக்கொண்டேன். பணம், அதுவும் பெரிய பணம், வாங்கிக்கொண்டிருக்கிறேன். இப்படி அடிவாங்குவதற்கும் சேர்த்துத்தான்.
ஏற்கனவே நான் என் அரசியல் பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன். ஒரு நூல் வெளிவந்துள்ளது. ‘ஜனநாயகச் சோதனைச்சாலையில்‘. அவற்றின் தொடர்ச்சியாகவே இவற்றைச் சொல்கிறேன். (கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் )
இத்தகைய சமகால அரசியல் விஷயங்களை உடனே தொடர்ச்சியான, முடிவில்லாத அரட்டைகளாக ஆக்கிக்கொள்வதே நம் வழக்கம். அதை சமூகவலைத்தளச் சூழல் ஊக்குவிக்கிறது. ஆகவே பல்லாயிரம் கேள்விகள் எழும். எது சொன்னாலும் அதற்கு மறுப்பும் உண்டாகும். எவருக்கும் தெளிவு பற்றிய அக்கறை இல்லை, தேடலும் இல்லை. வெறும்வாய்க்கு அரசியல்.
இரண்டே இரண்டு கேள்விகள் என்னிடம் வந்தவற்றில் நான் பதில் சொல்லத்தக்கவை என்று தோன்றுகிறது. அவற்றை பற்றி மட்டும் சுருக்கமாகச் சில சொல்கிறேன்.
அரசியலின்மை
விஜய் ரசிகர்கள் வெறும் ரசிகர்கள், அரசியலற்றவர்கள். அவர்கள் அரசியலில் ஒரு சக்தியாக ஆவது ஆபத்து. அரசியல்படுத்தப்பட்ட இளைஞர்கள்தான் அரசியலை சரியாக முன்னெடுக்கமுடியும். இந்தவகையான அரசியலின்மையை முன்வைக்கும் என்னைப்போன்றவர்களே இதற்கெல்லாம் பொறுப்பு- இது ஒரு பொதுக் கேள்வி. அல்லது குற்றச்சாட்டு.
என் பதில் இதுதான். விஜய் ரசிகர்கள் பெரும்பாலும் அரசியலற்றவர்கள். ஆனால் ‘அரசியல்படுத்தப்பட்ட’ பிறருடைய தரம் என்ன? திராவிட இயக்கத்தவர், கம்யூனிஸ்டுகள், இந்துத்துவர், தமிழ்த்தேசியர் இதைவிட எந்தவகையில் மேல்? அவர்களுக்கு வெறும் பாவலாவாகச் சில கோஷங்கள் உள்ளன என்பதே வேறுபாடு. அதாவது சமூகநீதி, கார்ப்பரேட் எதிர்ப்பு, மொழிப்பற்று, இந்துப் பாதுகாப்பு என்றெல்லாம் சில வரிகள். அடியிலிருப்பது இந்தியாவில் எங்குமுள்ள வழக்கமான அரசியல்.
இந்திய அரசியல் என்பது மேல்தட்டில் முதலீட்டாளர்கள் மற்றும் பொருளியல் சக்திகளின் போட்டி மற்றும் சமரசத்தின் அரசியல்.இந்தியாவின் செல்வத்தை பங்கிட்டுக்கொள்வதற்கான போட்டி அது. கீழ்நிலையில் சாதிய சக்திகளின் போட்டி மற்றும் சமரச அரசியல். ஓரளவுக்கு தொழிலாளர்கள் போன்ற சில ஒருங்கிணைக்கப்பட்ட சக்திகளும் இந்தப் போட்டியில் உள்ளனர். மேலிருப்பாவர்கள் கீழேயிருப்பவர்களுக்கு அளிப்பவற்றை தங்களுக்குள் பங்கிட்டுக் கொள்வதற்கான போட்டி அது.
இந்தப்போட்டியில் இச்சக்திகள் நடுவே சமரசம் செய்துவைப்பதைத்தான் அரசு செய்கிறது. இந்திய அரசும் சரி, தமிழக அரசும் சரி. அந்த அரசை எந்த கட்சி கைப்பற்றினாலும் அதைத்தான் செய்யப்போகிறது. செய்தாக வேண்டும். அந்த அரசை கைப்பற்றுவதற்கு உரிய ஒரே வழி, கீழிருக்கும் சாதிய சக்திகளை சாதகமாக திரட்டி, அவர்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெறுவதுதான். அதைத்தான் அனைவரும் செய்கிறார்கள்.
திமுக அல்லது கம்யூனிஸ்டுக் கட்சி அல்லது நாம் தமிழர் கட்சி சொல்வதைத்தான் விஜய் சொல்கிறார். ஏனென்றால் அதுதான் இங்குள்ள பெரும்பாலானவர்கள் மேலோட்டமாக ஏற்றுக்கொள்ளும் அரசியல் கோஷம். உள்ளே அவரும் சாதிக்கணக்கீட்டைத்தான் கொண்டிருப்பார். இங்கே இந்துத்துவக் கருத்து முதன்மையாக இருந்தால் அவரும் அதையே பேசியிருப்பார். ஆந்திராவில் அரசியலுக்கு வரும் நடிகர்கள் இந்துத்துவத்தைத்தான் பேசுகிறார்கள்.
ஆகவே இந்த ‘அரசியல்படுத்தப்பட்டவர்கள்’, ‘கொள்கைப்பிடிப்புள்ளவர்கள்’ என்னும் பாவலாக்களுக்கெல்லாம் என் பார்வையில் எந்த மதிப்பும் இல்லை. அண்மையில் ஒரு கேரள மார்க்ஸிய நண்பருடன் விவாதித்துக்கொண்டிருந்தேன். அவர் எழுத்தாளர். இடதுசாரி. இன்று பாரதிய ஜனதாக் கட்சி ஆட்சியில் நிகழும் மைய ஆதிக்கத்தை, ஆணவப்போக்கை கடுமையாகக் கண்டித்தார்.
நான் கேட்டேன், ஐம்பதாண்டுகளில் காங்கிரஸும் அதே மைய ஆதிக்கம், ஆணவப்போக்கைத்தானே கொண்டிருந்தது? வடகிழக்கை அவர்கள் அரைநூற்றாண்டுக்காலம் இருட்டில் வைத்திருந்தனர். கோடிக்கணக்கில் வரி கட்டிவிட்டு வெறும் ரேஷன் அரிசிக்காக கேரளம் காங்கிரஸின் மைய அரசுடன் எத்தனை ஆண்டுக்காலம் போராடியது? ‘அரி சமரம்’ என கேரள வரலாறு அதை பதிவுசெய்கிறது அல்லவா? (‘ஞங்ஙள்கு கிரி வேண்டா அரி மதி’ என்ற பழைய கோஷம் நினைவில் எழுகிறது)
நாளை காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் அந்த டெல்லியின் அதிகார ஆணவ மையம் அப்படியேதான் நீடிக்கும் அல்லவா? இப்போதுகூட காங்கிரசில் இருப்பது அரசகுடி ஆதிக்க மனநிலைதான் இல்லையா? அங்கே ஒரு சிறு வட்டம் மட்டுமே அதிகாரம் கொண்டது, எஞ்சியவர்கள் அத்தனைபேருமே டம்மிகள் தான் அல்லவா? அதே நிலைதான் பாரதிய ஜனதாவிலும் இல்லையா?. இங்கும் ஒரு சிறுவட்டம்தான்.
அவர் ஆம் என்றார். ‘சரி, அப்படியென்றால் இவர்களை தூக்கிவிட்டு அவர்களை கொண்டுவர தொண்டையை உடைத்துக்கொள்வதனால் என்ன பயன்?’ என்று நான் கேட்டேன். அவர் இடதுசாரி கார்ப்பரேட் எதிர்ப்பு கோஷங்களை முழக்க தொடங்கினார்.
நாலைந்து நாட்கள் தாண்டவில்லை. அதானியுடன் பிணராய் விஜயன் மேடையில் அமர்ந்து கேரளத்தின் தனியார்மயப் பெருந்திட்டங்களை அறிவிக்கும் செய்தி வந்தது. நானே அவரைக் கூப்பிட்டேன். அவர் தயாராக இருந்தார். அதானியை நியாயப்படுத்தி பேசலானார்.கேரளம் மைய அரசால் புறக்கணிக்கப்படுகிறது. பெருந்திட்டங்கள் இல்லாமல் கேரளம் அழியும்.ஆகவே குறைந்த தீமை என்று அதானியை ஏற்றே ஆகவேண்டும். கொள்கையளவில் அதானிக்கு எதிரானவர்கள்தான். ஆனால் நடைமுறையில் ஒரு சமரசம் செய்தே ஆகவேண்டும்….
இந்த வகையான பொய்யான அரசியல்மயமாதலால் என்ன லாபம்? வெவ்வேறு கட்சிகள் தங்களுக்கு அணிசேர்க்கும் பொருட்டு உருவாக்கிக்கொண்டுள்ள வெற்றுக் கோஷங்களை நம்புவதற்கும் சினிமாநடிகரை நம்பி சட்டைகிழிய கூச்சலிடுவதற்கும் என்ன வேறுபாடு? இரண்டுமே அரசியல் அறியாமைதான்.
நான் சொல்லும் அரசியலின்மை என்பது ‘அரசியல் அறியாமை’யை அல்ல. உண்மையான அரசியலை அறிந்திருத்தலை. உண்மையில் அரசியலில் எதையேனும் செய்வதுதான் நான் சொல்லும் அரசியல் சார்பு. உண்மையான அரசியல் என்பது அடித்தளத்தில் மக்களின் கருத்தை மெல்லமெல்ல மாற்றும் செயல்பாடு மட்டுமே. மற்றவை எல்லாம் எவரையேனும் அதிகாரத்தில் ஏற்றுவதற்கும், முடிந்தால் அதில் சில பருக்கைகளை தாங்களும் கொத்திக்கொள்வதற்கும் செய்யப்படும் முயற்சிகள் மட்டுமே.
என் அரசியல்
என் அரசியல் என்ன? என் தரப்பு என்ன? இதை கேட்டுக்கொண்டே இருந்தார்கள். நான் பலமுறை திரும்பத் திரும்பச் சொல்லிவிட்டேன். ஆனால் முந்தைய பதில்களை படிக்கவே மாட்டார்கள். அத்துடன் தாங்கள் ஒரு கட்சியில் இருப்பதனால் அனைவரும் ஏதேனும் ஒரு கட்சியில்தான் இருப்பார்கள் என்று நம்புகிறார்கள். தங்களுடன் இல்லை என்றால் எதிரியுடன் இருப்பதாக உருவகிக்கிறார்கள். எல்லா பேச்சுகளும் ஏதோ ஒரு அரசியல் சதியின் ஒரு பகுதியாக சொல்லப்படும் சூழ்ச்சிப்பேச்சுக்களே என நம்புகிறார்கள். அவர்களிடம் பேசமுடியாது. ஆனால் மெய்யாக அறிய ஆர்வமுள்ளவர்கள் நான் என் அரசியல் என எதைச் சொல்கிறேன் என்று நான் பேசிய, எழுதியவற்றிலிருந்து அறியலாம்.
நேற்று அதிமுக இருந்தது, இன்று திமுக உள்ளது, நாளை தவேக வருமென்றாலும் எந்த அடிப்படை மாற்றமும் நிகழப்போவதில்லை. சில மேலோட்டமாக மாற்றங்கள் தவிர. நேற்றைய காங்கிரஸின் அதே ஆட்சிதான் இன்றும் நிகழ்கிறது. நாளை காங்கிரஸ் வந்தாலும் இதே அதானி- அம்பானி அரசுதான் இருக்கும். கோஷங்களில் சிறு மாறுதல்கள் இருக்கும். சில செயல்பாடுகளில் மேலோட்டமான மாற்றம் இருக்கும். சில முகங்கள் மாறும். பலமுகங்கள் அப்படியே நீடிக்கும். மதவாத அரசியலைக்கூட காங்கிரஸ் கையாளாது என்பதற்கு எந்தச் சான்றுமில்லை. காங்கிரஸ் அதை முன்னர் பஞ்சாபிலும் கஷ்மீரிலுமெல்லாம் கையாண்டுள்ளது.
ஆகவே மெய்யான மாறுதலை அதிகாரமாற்றம் வழியாக கொண்டுவர முடியாது. ஏற்கனவே இருக்கும் அதிகாரச் சக்திகளை சமரசம் செய்து பயன்படுத்திக் கொண்டுதான் எந்தக் கட்சியானானாலும் ஆட்சியை நோக்கிச் செல்லமுடியும், ஆட்சி செய்யவும் முடியும். இது அப்பட்டமான உண்மை. சமூகத்தின் மனநிலையில், சிந்தனையில் உருவாகும் மாற்றமே உண்மையான மாற்றம். அப்படி கீழிருந்து மாற்றம் உருவாக முடியும் என பல செயல்பாடுகள் நிரூபித்தும் காட்டியுள்ளன. அந்த மாற்றத்துக்காக செயல்படுவதே உண்மையான அரசியல். அதையே நான் நுண்ணலகு அரசியல் என்கிறேன். அது அதிகார அரசியல் அல்ல. எனக்கு அதிகார அரசியலில் நம்பிக்கை இல்லை. நம்பிக்கை இருப்பவர்கள் செயல்படலாம், அதிலும் எதிர்ப்பில்லை.
(பார்க்க, காணொளி)
அரசியல் விவாதங்களின் எல்லை காந்தி அரசியல்படுத்திய மக்கள் எங்கே? ஊடகங்கள், அரசியல், விவாதங்கள் இன்றைய அரசியல் கட்சியடிமைகள்பி.ஶ்ரீ.ஆச்சார்யா
பி.ஶ்ரீ.ஆச்சார்யா எழுதிய சித்திரராமாயணம் என்னும் தொடர் ஆனந்த விகடனில் வெளிவந்தபோது தமிழகம் முழுக்க வாசகர்கள் பேரார்வத்துடன் அதை வாசித்தனர். கல்கியின் நாவல்கள் அளவுக்கே அந்தத் தொடர் புகழ்பெற்றிருந்தது. மரபிலக்கிய அறிஞரான பி.ஶ்ரீ. நெல்லை நேசன் என்ற பெயரில் பாரதி தேசியக்கவிஞரே ஒழிய மகாகவி அல்ல என்று குறிப்பிட்டு எழுதிய கட்டுரை பல ஆண்டுகள் நீடித்த பாரதி மகாகவியா என்னும் விவாதத்தை உருவாக்கியது.

அமெரிக்காவில் கம்பன், கடிதம்
நலமே விழைகிறேன்.
கடந்த ஆகஸ்ட் 16 இல் கம்பரின் சில பாடல்களை சரியான பொருள் & கவிதை நய விளக்கத்துடன் கர்நாடக இசைவடிவில் வழங்கும் “கடலோ மழையோ” நிகழ்வு டாலஸ் நகரில் மிகச் சிறப்பாக நடந்தது.
இம்முறை எனக்கு இரட்டை மகிழ்ச்சி – நிகழ்வின் திட்டமிடல், செயல்படுத்துதல் என செயலூக்கமான ஒரு மாதம் மற்றும் வெற்றிகரமாக நடந்த நிகழ்வு ஒன்று. மற்றது , ரசிகனாக அடைந்த பெருநிறைவு.
நிகழ்வை தொகுத்து வழங்க முடியுமா எனக் கேட்ட போது வெகு எளிதாக ஒத்துக்கொண்டு, ஒத்திகையில் கூட இயல்பாக பேசிய நண்பர் அன்னபூர்ணா நிகழ்வன்று கையில் குறிப்பை வைத்துக்கொண்டு பதட்டமாக படித்துக்கொண்டிருந்தது பள்ளி கால தேர்வு நாட்களை நினைவுபடுத்தியது. ஆனால், மேடையில் எந்த ஒரு பதட்டமுமின்றி முழு அரங்கையும் இயல்பாக நிகழ்வுக்குள் கொண்டுவந்தார்.
அடுத்த தலைமுறை குழந்தைகளை இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்க முடிவெடுத்ததன்படி எங்கள் வாசிப்பு குழும நண்பர்களின் குழந்தைகள் நிலா கிரி, மீனாக்ஷி மூர்த்தி ஆகியோர் கலைஞர்களை மேடைக்கு அழைப்பதிலும் காயத்ரி பாலாஜி வரவேற்புரையும் சிறப்பாக செய்தனர். நண்பர் ‘குறள்‘ செந்திலின் மகன் சித்தார்த் வருபவர்களை டிக்கெட் பரிசோதித்து உள்ளே அனுப்பும் பணியை வெகு சிரத்தையாக செய்தான் – பாடகி ப்ரியாவையே டிக்கெட் கேட்டு நிறுத்திவிட்டான் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
இசைக் கச்சேரியாக மட்டுமில்லாமல் காப்பியம் என்றால் என்ன, அதன் இயல்புகள், அதை ரசிப்பதன் தேவைகள், அதன் மூலம் நாம் அடைவது என்ன, கம்பர் – அவர் கவி மேதைமை, ரசனையில் இசையின் இடம் என ஒரு அறிமுக குறிப்புடன் நிகழ்வை பழனி ஜோதி தொடங்கி வைத்தார்.
இறை துதி, அயோத்தியின் பெருமை, ராமனின் வடிவழகு, ராமர் சீதை சந்திப்பு, சீதையின் காதல் ஏக்கம், அவர்களின் வனம் புகுதல், ராம ராவண போர் என்ற உச்சங்களின் அபாரமான கவிதைகளை ரசிக்கும்படியான இசை வடிவமாக மாற்றியிருந்தார் ராஜன்.
மிருதங்க கலைஞர் ராஜு பாலன், கஞ்சிரா கலைஞர் நண்பர் ஸ்கந்தா, வயலின் இசைஞர் உமா மகேஷ் ஆகியோரின் வாசிப்பு பலரும் மகிழ்ந்து தன்னிச்சையாக கரவொலி எழுப்புமாறு இருந்தது. கர்நாடக கச்சேரியில் பியானோவா என்ற ஆச்சரியத்தை தனியே உறுத்தாத தன் வாசிப்பால் சாய் சங்கர் கணேஷும், கார்ட்ஸ் (chords) க்கான காரணத்தை ராஜனும் தெளிவாக்கினார்கள் .
ப்ரியாவின் குரல் பல சாயல்களில் பாடலின் உணர்வுக்கேற்றவாறு மாறி மாறி ஒலித்தது. கேட்பவரையும் அதே உணர்வுக்கு ஆளாக்கும் வல்லமை கொண்ட சில குரல்களில் அவருடையதும் ஒன்று. விஸ்தாரணமான “தோள் கண்டார் ” பாடலின் முடிவில் அதிர்ந்த அரங்கம் “போர்மகளை கலைமகளை” இல் கலங்கிப்போனது.
நிகழ்வின் உச்சமாக நான் எண்ணுவது – “போர்மகளை கலைமகளை“. அதுவரை ராமனை குறித்த பாடல்களே இருந்தது. போர் குறித்த சற்று உற்சாகமான தொனியில் அமைந்த பாடல் பார்வையாளர்களின் மனநிலையை ராமனின் வெற்றியை அது தரும் மகிழ்வை நோக்கி செலுத்திய வேளையில் ஒலித்த அப்பாடல் ராவணனைப் பற்றியது. அவன் ஆற்றல்களை கூறி ஒற்றையொரு தவறால் வீழ்ந்ததை எண்ணி வருந்தும் அவன் தம்பியுடைய கூற்று. அதுவரை ராமனிடம் இருந்த அரங்கம் முழுதும் ராவணனுக்காக பெரிய துக்கத்தில் அமைதியாகிப் போனது. கம்பன் எனும் கவிச்சக்கரவர்த்தியை, அவர் கலையை , அதன் அலகிலா விளையாட்டை பல நூற்றாண்டுகள் கழிந்து உலகின் மறுமூலையில் இருக்கும் எல்லோரும் உணர்ந்து கொண்ட தருணமது.
பாடல்களையும் அதற்கேற்ற ஓவியங்களையும் சேர்த்தளித்தவர் நண்பர் கிருஷ்ணகுமார். திரையில் ஒளிர்ந்த அவ்வோவியங்கள் பலரையும் நிகழ்வில் ஒன்றச்செய்தது.
கவிதைகளை அதன் பொருள் மற்றும் கவி நயத்தையும் விளக்கி பின் இசைக்குள் அழைத்துச் செல்லும் பணியை வெகு சிறப்பாக செய்தார் பழனி ஜோதி. ஒவ்வொரு கவிதையைக் குறித்த அவரின் பார்வையும் அதை அவர் விளக்கிய விதமும் எல்லோரையும் மிகவும் ஈர்த்தது, சிறு குழந்தைகள் உட்பட. என் மகளிடம் அவள் எண்ணத்தைக் கேட்டபோது “கவிதைகள் மிகவும் பிடித்தது – அதை விளக்கியவர் மிக அழகாக அதை செய்தார் ” என்றே கூறினாள். இசை நுழையாத இரும்புச் செவிகள் கொண்ட ஒரு நண்பரிடம் தயங்கி கேட்டபோது அவரும் இதையே சொன்னார். ஆம், பழனி இந்நிகழ்வை ஒரு ஓபரா போல உணர்ச்சி ததும்பும் ஒரு நாடகமாக ஆக்கினார்.
வெவ்வேறு ஊர்களில் வசிக்கும் கலைஞர்களை ஒருங்கிணைத்து தன் இசையை அவர்களிடம் கடத்தி அவர்கள் மூலம் எங்களை வசியப்படுத்திய ராஜன் வணக்கத்திற்குரியவர்.
இந்த பேரனுபவத்தை அனைவரும் அனுபவிக்க வேண்டுமென்று தயக்கமில்லாமல் பரிந்துரைக்கிறேன். நண்பர்கள் ஆஸ்டின் சௌந்தர் அவர்களை vishnupuramusa@gmail.com இல் தொடர்பு கொள்ளலாம்.
ஓவியம், இசை, கவிதை மற்றும் தமிழ் என தளும்பிய கொண்டாட்ட மனநிலையை இரவுணவுடன் சேர்த்து நீட்டிக்கொண்டு பிரிய மனமில்லாமல் பிரிந்து வந்தோம்.
அற்புதமான கலைஞர்களின் நட்பு, செயலூக்கம் மிகுந்த நண்பர்களின் சுற்றம், உயர் கலைகளை உணர்ந்து கொள்ளும் பேறு என எங்களை வழிநடத்தும் உங்களுக்கு நன்றி.
என்றென்றும் அன்புடன்,
மூர்த்தி
டாலஸ்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
