Jeyamohan's Blog, page 31
August 26, 2025
மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் பயிற்சிமுகாம்

மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.
சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.
சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.
இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவையோகம் பதஞ்சலி மரபு- பயிற்சி
குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.
யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.
இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.
யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.
சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)
நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்உருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சிஅமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
மரபிசைப் பயிற்சிஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் பயிற்சிமுகாம்

மரபின் மைந்தன் முத்தையா நடத்திவரும் மரபிலக்கியம், சைவத்திருமுறைகள் அறிமுக வகுப்புகள் முன்னர் நான்கு முறை நடந்துள்ளன. மீண்டும் நிகழவிருக்கின்றன.
சைவத்தை அறிவதென்பது தமிழை, தமிழ்ப்பண்பாட்டை நுணுகி அறிவதுதான். சைவசித்தாந்தம் சைவத்தின் தத்துவ முகம். சைவத் திருமுறைகள் சைவத்தின் இலக்கிய முகம். சைவத்திருமுறைகளிலுள்ள புகழ்பெற்ற சில பாடல்களையே பரவலாகச் சைவர்கள்கூட அறிந்திருப்பார்கள். கூடுதலாக அறியமுயல்பவர்கள் நூல்களை வாங்குவார்கள், ஆனால் நூல்கள் வழியாக பயிலமுடிவதில்லை.
சைவத்திருமுறைகளைப் பயில ஒரு மரபு உண்டு. இன்றைய சூழலில் நவீன இலக்கியம் மற்றும் நவீன கல்விமுறை அறிமுகம் உடைய ஒருவர் அந்த மரபை இன்றைய சூழலுக்காக மறு ஆக்கம் செய்து கற்பிக்கவேண்டியுள்ளது. மரபின்மைந்தன் முத்தையா அத்தகையவர். நவீன இலக்கியமும் மரபிலக்கியமும் செவ்விலக்கியமும் சைவமும் அறிந்தவர்.
இந்த வகுப்பில் எளிமையான முறையில் தமிழின் மரபிலக்கியத்திற்குள் செல்வது எப்படி என தொடக்கம் அளிக்கப்படும். அதன்பின் சைவத்திருமுறைகளுக்குள் செல்லவும், அவற்றின் கவிச்சுவையையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ளவும் வழிகாட்டப்படும். இந்த வழிகாட்டல் ஒரு தொடக்கம். ஒருவர் அதிலிருந்து முன்சென்று தன் கல்வியைத் தொடரமுடியும்.
நாள் அக்டோபர் 10, 11 மற்றும்12, (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
அறிவிக்கப்பட்ட நிகழ்வுகள்- இடமிருப்பவையோகம் பதஞ்சலி மரபு- பயிற்சி
குரு சௌந்தர் நடத்திவரும் பதஞ்சலி யோகமரபின்படியான யோகப்பயிற்சிகளில் இதுவரை ஐநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இரண்டு முறை இரண்டாம்நிலை வகுப்புகளும் நிகழ்ந்துள்ளன. இந்தியாவிற்கு வெளியிலும் தொடர்ச்சியாக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். தொலைக்காட்சி ஊடகங்களிலும் யோகமுறைகளை விளக்கி வருகிறார்.
யோகம் இன்றைய காலகட்டத்தின் தவிர்க்கமுடியாத ஒரு வாழ்க்கைக்கூறாக உலகமெங்கும் பரவியுள்ளது. இன்று தொடர்ச்சியாக உடலையும் உள்ளத்தையும் மிகையான அழுத்தத்திலேயே வைத்திருக்கிறோம். உள்ளம் மிகையழுத்தம் கொள்கையில் முதுகு, கழுத்து போன்றவற்றில் வலிகள் உருவாகின்றன. உடல் மிகையழுத்தம் கொள்கையில் உள்ளம் சலிப்பு, சோர்வு, துயிலின்மையை அடைகிறது.
இன்னொரு பக்கம் முதிய அகவையில் உடலை எந்தப் பயிற்சியும் இல்லாமல் வைத்திருக்கிறோம். உடலின் எல்லா பகுதிகளுக்கும் சீரான பயிற்சி அளிப்பதில்லை. உடலுக்கான பயிற்சி ஒரே சமயம் உள்ளத்துக்கான பயிற்சியாகவும் அமைவதில்லை. ஆகவே உடல்வலிகளும், உளச்சோர்வும் உருவாகி ஒன்றையொன்று வளர்க்கின்றன.
யோகம் இளையோர், முதியோர் இருவருக்குமான மீளும்வழியாக உலகமெங்கும் ஏற்பு பெற்றுள்ளது. பதஞ்சலி யோகமுறையின் மிகத்தொன்மையான மரபுகளில் ஒன்றாகிய பிகார் சத்யானந்த ஆசிரிய மரபில் முதுநிலை ஆசிரியருக்கான பயிற்சியை எடுத்துக்கொண்டவர் குரு சௌந்தர். அவர் நடத்தும் இந்த யோகப்பயிற்சி அனைவருக்குமானது.
சரியான யோகப்பயிற்சி நேரடியான ஆசிரியரிடமிருந்து தொடங்கப்படவேண்டும். ஒவ்வொருவருக்கும், அவருடைய பிரச்சினைகளை உணர்ந்து ஆசிரியர் யோகப்பயிற்சியை பரிந்துரைக்கவேண்டும், வழிகாட்டவேண்டும், கட்டுப்படுத்தவும் வேண்டும். ஆகவேதான் நேருக்குநேர் ஆசிரியருடன் மூன்றுநாள் இருந்து கற்கும் இந்தப் பயிற்சி முறையை அறிமுகம் செய்திருக்கிறோம்.
(முன்னர் பங்குகொண்டவர்களும் மீண்டும் பயில விரும்பினால் விண்ணப்பிக்கலாம்)
நாள் செப்டெம்பர் 12, 13 மற்றும் 14 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
வரவிருக்கும் நிகழ்வுகள்உருது இலக்கியம், கஸல் அறிமுகம்ஃபயஸ் காதிரி அவர்கள் நடத்தும் உருது இலக்கியம்- கஸல் அறிமுக நிகழ்வு மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெற்ற ஒன்று. மரபான உருது கவிஞர்- பாடகர் குடும்பத்தில் வந்தவர் காதிரி. பாடகரும்கூட.உருது இலக்கியம் என்பது வடக்கே இருப்பது அல்ல. தமிழகத்தின் மிகச்சிறப்பான மரபுகளில் ஒன்று அது. உருது இலக்கியத்தின் ஒட்டுமொத்தச் சித்திரத்தை, குறிப்பாக முகலாயர் காலம் முதல் வரும் கவிமரபை அறிமுகம் செய்யும் காதிரி அதன் மிகச்சிறப்பான வெளிப்பாடான கஸல் இசை மரபையும் அறிமுகம் செய்கிறார்.
நாம் லதா மங்கேஷ்கர், வாணிஜெயராம் முதல் ஹரிஹரன் வரை பலர் பாடிய கஸல் பாடல்களைக் கேட்டிருப்போம். ஆனால் உண்மையில் ரசிக்க அடிப்படைப்பயிற்சி அற்றவர்களாகவும் இருக்கிறோம். அந்த அறிமுகப்பயிற்சி நமக்கு முற்றிலும் புதிய ஓர் உலகைத் திறந்து தருவது. ஒரு பெரிய தொடக்கம்.
(அக்டோபர் 20 அன்று திங்கள்கிழமை தீபாவளி ஆதலால் இந்நிகழ்வு வெள்ளி சனி என இருநாட்கள் மட்டுமே நிகழும். கட்டணமும் அதற்கேற்பவே அமையும்.18 மாலையுடன் நிகழ்வு நிறைவடையும்.)
நாட்கள் அக்டோபர் 17 மற்றும் 18 (வெள்ளி, சனி)விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
விபாஸனா இரண்டாம் நிலை பயிற்சிஅமலன் ஸ்டேன்லி அவர்களின் விபாசனா நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. பலர் முதல் நிலை பயிற்சியில் கலந்துகொண்டுள்ளனர். இரண்டாம் நிலைப் பயிற்சியை நடத்த அமலன் ஸ்டேன்லி எண்ணுகிறார். முதல்நிலைப் பயிற்சியில் கலந்துகொண்டவர்கள் எவரும் இதில் கலந்துகொள்ளலாம்.
விபாசனா பயிற்சி உள்ளத்தை ஒருமையாக்கவும், தேவையற்ற உளச்சுமைகளை உதறிவிட்டு உள அழுத்தமில்லா நிலையை அடையவும், அதன் வழியாகச் செயலில் தீவிரமாக ஈடுபடவும் மிக அவசியமானதாக உலகம் முழுக்க பயிற்றுவிக்கப்படுகிறது. அமலன் ஸ்டேன்லி உலக அளவில் புகழ்பெற்ற பல விபாசனா ஆசிரியர்களிடம் முறையான, நீண்டகாலப் பயிற்சியை பெற்றவர். (பார்க்க வி.அமலன் ஸ்டேன்லி, தமிழ்விக்கி)
பலர் பயிற்சி இல்லாமல் நேரடியாக பத்து நாட்கள், பதினைந்து நாட்கள் விபாசனா பயிற்சிக்குச் சென்று ஓரிரு நாட்கள் தாளமுடியாமல் ஓடிவருவதைக் காண்கிறோம். எங்கள் பயிற்சி என்பது மிகநுணுக்கமாக படிப்படியாக உள்ளத்தை பயிற்றுவிப்பது. இது மரபார்ந்ததும் அறிவியல்பூர்வமானதுமாகும்.
நாள் அக்டோபர் 24 ,25 மற்றும் 26 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
மரபிசைப் பயிற்சிஜெயக்குமார் நடத்தும் மரபிசைப் பயிற்சிகள் மீண்டும் நிகழ்கின்றன. இவை கர்நாடக இசை எனப்படும் மரபிசையை கேட்டு ரசிப்பதற்கான பயிற்சிகள். எதுவுமே அறியாத தொடக்கநிலையினருக்கானவை. ராகங்களை அறிமுகம் செய்து, திரைப்பாடல்கள் வழியாக அவற்றை செவிக்குப் பழக்கப்படுத்தி, இசைப்பாடல்களை கேட்கச்செய்து இசைக்குள் இட்டுச்செல்லும் முயற்சி இது. பங்கெடுத்த ஒவ்வொருவருக்கும் புதிய தொடக்கமாக அமைந்தவை.
நாள் அக்டோபர் 31, நவம்பர் 1,2 (வெள்ளி சனி ஞாயிறு)
விண்ணப்பிக்க programsvishnupuram@gmail.com
ஓவியத்தில் விழித்தெழுதல்
இன்று “ஓவியக்கலை என்பது உலகை காண்பதற்கு வழி,” என்ற திரு ஏ. வி . மணிகண்டன் அவர்களின் காணொளியை பார்த்தேன். 2023 இல், வெள்ளிமலையில் அவருடைய முதல் வகுப்பில் கலந்து கொண்டதில் இருந்து, இன்று வரை, வந்த தூரத்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஓவியத்தில் விழித்தெழுதல்
I saw the announcement on your speech that you are going to conduct philosophy classes in the USA and the UK. Can you say the exact days and how to apply for the same?
About the classesஓவியத்தில் விழித்தெழுதல்
இன்று “ஓவியக்கலை என்பது உலகை காண்பதற்கு வழி,” என்ற திரு ஏ. வி . மணிகண்டன் அவர்களின் காணொளியை பார்த்தேன். 2023 இல், வெள்ளிமலையில் அவருடைய முதல் வகுப்பில் கலந்து கொண்டதில் இருந்து, இன்று வரை, வந்த தூரத்தை நினைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை.
ஓவியத்தில் விழித்தெழுதல்
I saw the announcement on your speech that you are going to conduct philosophy classes in the USA and the UK. Can you say the exact days and how to apply for the same?
About the classesAugust 25, 2025
மூத்த படைப்பாளிகளுடன் விவாதிப்பது
இளம் எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகள் குறித்து தான் ஆதர்சமாக கருதும் முன்னோடி எழுத்தாளரின் பார்வை என்ன என்பதை நேரடியாக அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்ளலாமா ? கூடாதா ? இவ்விஷயத்தில் இளம் எழுத்தாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய அலகுகள் என்ன ? இது குறித்த உங்களது பார்வை, தனிப்பட்ட அனுபவங்கள் ஆகியவை சார்ந்து பேச முடியுமா ?
அன்புடன்
சக்திவேல்
அன்புள்ள சக்திவேல்,
மூத்த எழுத்தாளர்களுடனான உரையாடல்கள் வழியாகவே அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் உருவாகி வருவது வழக்கம்– பல நூறாண்டுகளாக அப்படித்தான். நாம் அறியும் புகழ்பெற்ற மேலைநாட்டு எழுத்தாளர்கள் அனைவருக்குமே அப்படிப்பட்ட ஒரு மூத்த எழுத்தாளர் தொடர்பு இருக்கும். மேலைநாட்டில் அதை குரு– சீட உறவு என்று சொல்லிக்கொள்ள மாட்டார்கள். ஆனால் அது உண்மையில் அப்படித்தான். ரஸ்ஸலுக்கும் எலியட்டுக்குமான உறவு குருசீட உறவேதான்.
தமிழ் நவீன இலக்கியத்திலேயேகூட பாரதிக்கு அரவிந்தருடனான உறவு, புதுமைப்பித்தனுக்கு டி.எஸ்.சொக்கலிங்கத்துடனான உறவு என பல உதாரணங்களைச் சொல்ல முடியும். ஒவ்வொரு காலகட்டத்திலும் இளம் படைப்பாளிகள் மூத்த படைப்பாளிகளைச் சந்தித்து உரையாடும் வட்டங்கள் செயல்பட்டுள்ளன. நான் அத்தகைய பல வட்டங்களுடன் தொடர்புடையவன். மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மா, பி.கே.பாலகிருஷ்ணன். தமிழில் சுந்தர ராமசாமி, கோவை ஞானி. அவர்கள் என் படைப்புகளை விமர்சித்திருக்கிறார்கள். செம்மை செய்திருக்கிறார்கள்.அடிப்படையான ஆலோசனைகளையும் சொல்லியிருக்கிறார்கள். கோவை ஞானி கொற்றவை நாவலின் மூன்று முன்வடிவங்களை நிராகரித்திருக்கிறார். வெறும் நிராகரிப்பு அல்ல, அதற்கான காரணங்களை எனக்கு தெளிவுபடுத்தியிருக்கிறார்.
ஆனால் இன்றைய சூழல் வேறு. இன்று எனக்கு இளம்படைப்பாளிகள் தங்கள் கதைகளை அனுப்பி கருத்து கேட்கிறார்கள். சிலர் முன்னுரைகளும் கேட்பதுண்டு. நான் முன்னுரைகள் எழுதுவதில்லை என்பதே அதற்கான பதில். தனிப்பட்ட முறையில் அனுப்பப்படும் கதை, கவிதைகளுக்கு நான் பதில் அளிக்க முடியாது. காரணம், நீண்ட பதில் தேவைப்படும். அந்தப் பதில்மீதான கேள்விகளுக்கு விளக்கமும் அளிக்கவேண்டியிருக்கும். அது மிகப்பெரிய உழைப்பு. தனித்தனியாக அவ்வுழைப்பை நான் செலுத்தமுடியாது.
இக்காரணத்தால்தான் வாசகர்சந்திப்புகளை ஒருங்கிணைத்தோம். 2016 முதல் நடைபெற்ற அந்த புதிய வாசகர் சந்திப்புகளில் கலந்துகொண்டவர்களில் பலர் இன்று தமிழில் நிலைகொண்டுவிட்ட எழுத்தாளர்களாக ஆகியுள்ளனர். அந்த புதியவாசகர் சந்திப்பின்பொருட்டு உருவாக்கப்பட்ட இணையக்குழுமங்கள் பல ஆண்டுகளுக்கு தொடர்ந்து நடைபெற்றன, அவற்றில் அந்த இளைஞர்கள் ஒருவரை ஒருவர் வாசித்து விவாதித்தனர். ஆகவே அது ஒரு நல்ல வழிமுறை என்ற எண்ணம் உருவாகியுள்ளது.
ஆனால், அந்த வாசகர் சந்திப்புகளுக்கு வர பலருக்கு தயக்கம் உள்ளது. பலருக்கு அந்த சந்திப்புகளில் கலந்துகொள்ள உளத்தடை உள்ளது. என்னுடைய ‘வட்டத்தை’ சேர்ந்தவராக முத்திரை வந்துவிடுமா, அதனால் பிறர் ஒதுக்கிவிடுவார்களா என்றெல்லாம் ஐயம் கொள்கிறார்கள். வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் பலர் அவற்றை இப்போது வெளியே சொல்வதில்லை.தன் கதைகளை அனுப்பி கருத்து சொல்லக் கோருபவர் அதை ரகசியமாக வைக்கும்படி கேட்கிறார். இன்னொருவர் அவருடைய கதைகளை அனுப்பியபின் அவற்றைப் பற்றி எழுதுவதாக இருந்தால் நானாகவே அவற்றை படித்ததாக எழுதும்படியும், எனக்கு அவர் அனுப்பியதாகச் சொல்லவேண்டாம் என்றும் கோரிக்கை வைக்கிறார். இத்தகைய உளநிலை கொண்டவர்களிடம் எப்படி வெளிப்படையாக உரையாட முடியும்?
அத்துடன் இன்றைய படைப்பாளிகளில் மிகப்பெரும்பான்மையினர் சமூகவலைத்தளங்களில் செயல்படுகிறார்கள். தனி நண்பர்வட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். ஒரு சிறு விமர்சனத்தைக்கூட உடனே பொதுவெளி விவாதமாக ஆக்குகிறார்கள். அப்படி பொதுவெளியில் விவாதிக்கத்தக்கவை அல்ல கதையின் அழகியல் நுட்பங்கள். எழுதுபவர்கள், நுணுக்கமாக வாசிப்பவர்கள் மட்டுமே அவற்றில் ஈடுபட முடியும். பொதுவெளி விமர்சனம் உருவானால் உடனே அங்கே அழகியலோ இலக்கியமோ தெரியாத அரசியல் சல்லிகள்தான் பாய்ந்து உள்ளே வந்து காழ்ப்புகளைக் கொட்டி விவாதிக்கிறார்கள். அவர்கள் முழுநேரக் காழ்ப்புத் தொழிலாளிகள். ஒருவரின் கதையைப் பற்றி கருத்துச் சொல்லிவிட்டு அதன்பின் நாம் அந்த சல்லிகளுடன் அதை விவாதிக்கவேண்டும் என்றால் அதைப்போல வெட்டிவேலை வேறில்லை.
ஒரு முறை ஒருவர் எனக்கு கதை அனுப்பி கருத்து கேட்டார். நான் மிக மென்மையாக அதன் சில குறைபாடுகளைச் சொன்னேன். அவர் அதை முகநூலில் போட்டு என்னைப்பற்றி சலித்துக்கொண்டார். அதற்குக் கீழே என்னை புளிச்சமாவு சங்கி என்றெல்லாம் நாற்பதுபேர் வசைபாடியிருந்தனர். அதை அவர் அனுமதித்தார். அதற்குப்பின் கருத்துச் சொல்லும் விஷயத்தில் எச்சரிக்கை ஆகிவிட்டேன்.
மூத்த எழுத்தாளர்கள் இளம்படைப்பாளிகள் பற்றி கருத்துச் சொல்லலாம். ஒரு சிறு வட்டத்திற்குள். அக்கருத்து பொதுவெளி விவாதத்திற்குரியது அல்ல. கலையின் உருவாக்கம் பற்றிய அடிப்படை அறிதல் இல்லாதவர்கள் உள்ளே நுழையவே கூடாது. அதில் ஆசிரியர் கவனிக்கவேண்டியவை
படைப்பின் தொழில்நுட்பம் பற்றி மட்டுமே பேசப்படவேண்டும்திருத்தியமைக்கக் கூடாது. தன் கருத்தைச் சொல்லவேண்டும். அந்த படைப்பாளி அதைப்பற்றி யோசிக்கலாம், அவ்வளவுதான்அது விமர்சனம் அல்ல. கருத்து மட்டுமே என்னும் தெளிவு இருக்கவேண்டும்எழுதும் இளம்படைப்பாளி கவனிக்கவேண்டியவை
அது நேர்மையான நோக்கத்துடன் மட்டுமே சொல்லப்படுகிறது என நம்பவேண்டும். ஓர் ஆசிரியரின் நேர்மை, தகுதி பற்றி ஐயமிருந்தால் கருத்தே கேட்கக்கூடாது.அது நிராகரிப்பு அல்ல. பொருட்படுத்தி வாசிப்பதே ஏற்புதான். அது மேலும் கூர்மையாக ஆக்கப்படுவதற்கான வழிகாட்டல்தான். அந்த புரிதல் இளம்படைப்பாளிக்கு இருக்கவேண்டும்தன் உள்ளத்தில் எந்நிலையிலும் மாறாத மதிப்பு கொண்ட மூத்த படைப்பாளியிடம் மட்டுமே கருத்து கேட்கவேண்டும்.ஒரு வடிவம் சார்ந்த கருத்து என்பது அதை முன்வைப்பவரின் கோணம் சார்ந்தது. அவருடைய காலகட்டம் சார்ந்தது. அது அறுதியானது அல்ல. அது தீர்ப்பு அல்ல. அதை தெரிந்துகொள்வது வடிவப்புரிதலுக்காகவே. வடிவப்புரிதலை அடைந்த பின் மீறிச்செல்லும் உரிமையை எடுத்துக்கொள்ளலாம்.சுந்தர ராமசாமியிடம் கதைவடிவம் பற்றிய நீண்ட விவாதங்களில் ஈடுபட்டிருக்கிறேன். அவருடைய வடிவக்கொள்கைகளை மீறி முன்சென்றேன். ஏனென்றால் என் இயல்புக்கான வடிவை நான் உருவாக்கிக்கொண்டேன். ஆனால் அதை உருவாக்குவதற்கு அவருடனான உரையாடல்களே வழிகாட்டிகள். ஆகவே அவரே என் முதன்மை ஆசிரியர் என கொள்கிறேன்.
ஜெ
புதிய பரிமாணங்களும் பெருவிடுதலையும் – வெண் பெருமுரசு பயணம்: ரம்யா
அன்பு ஜெ,
இன்று (ஜூலை 18, 2025) இரவு வெண்முரசு நாவல் வரிசையை நிறைவு செய்தேன். ஏதாவது விசேஷமான நாளா என்று தேடிப் பார்த்தேன். அப்படி எதுவும் இல்லை. இரவு பதினொரு மணி ஆகியிருந்தது. வானத்தைச் சென்று பார்த்தேன். தென்பக்கம் திருக்குறுங்குடி கால பைரவனின் கண்கள் போல மினுங்கும் இரு அழகான நட்சத்திரங்கள் மட்டும் இருந்தது. வேறு நட்சத்திரங்கள் தெரியாதபடிக்கு வான் மேகங்களால் மூடியிருந்தது. இளம் தூரல் தூரிக்கொண்டிருந்தது. அங்கு அப்படியே அந்தக் கூர்மையான கண்களுக்கு முன் அமர்ந்து வெண்முரசு முதலாவிண்ணின் இறுதி அத்தியாயத்தை வாய்விட்டு வாசித்து முடித்தேன். இரவு எங்கள் கிராமத்தில் ஒலி எதிரொலிப்பு அதிகமாக இருக்கும். வீட்டில் கீழேயிருந்து மாமா வந்து எட்டிப்பார்த்து விட்டு சீக்கிரம் வரும்படி அழைத்துவிட்டுப் போனார்கள்.
சிறிது நேரம் அமைதியாக உட்கார்ந்திருந்து அசைபோட்டிருந்தேன். நான்கரை ஆண்டு காலப் பயணம். விஷ்ணுபுரம் தொடங்கி வெண்முரசு, காவியம் வரை என அதை நீட்டிக் கொள்ளலாம். மனம் முழுவதுமாக மகிழ்வும் நிறைவும். அடுத்தடுத்த நாட்களில் வேறு எந்த வேலையையும் செய்யவில்லை. மனதில் நாவல் வரிசைகளை அசைபோடுவதும் மெல்ல எழுத முற்படுவதும், உணர்வு பொங்கி கண்ணீர் விடுவதும் என இருந்தேன். நீலிக்கான பதிவேற்றும் பணிகள் செய்தேன். அதற்கு பெரிதாக மனதை செலுத்த வேண்டியிருக்காது என்பதால் அதை மட்டும் செய்தேன். அருகிலிருக்கும் தாணிப்பாறைக்கு சிறு பயணம் சென்று வந்தேன். மழை தூரிக்கொண்டே இருந்தது இதமாக இருந்தது. ஏற்கனவே வெண்முரசுக்கென நான் எடுத்த குறிப்புகள், கட்டுரைகளை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
டிவிட்டர் பக்கம்: வெண்முரசு பயணம் (வெண்முரசு குறிப்பெடுக்கும் பக்கமாக ஆரம்பிக்கப்பட்டது. மின்னும் வரிகளின் தொகையாக இப்போது உள்ளது : (https://x.com/rumsramyal?t=wkCdg4SLqWgRpgsKuBY99A&s=08)
ஏப்ரல் 2021-இல் இந்த டிவிட்டர் பக்கம் ஆரம்பித்தேன். முதற்கனல் ஆரம்பித்ததிலிருந்து வெண்முரசுக்கு குறிப்பெடுக்க பல வழிமுறைகளை முயற்சிசெய்து கொண்டிருந்தேன். முதற்கனலுக்கு பிடித்த வரிகளை கையால் எழுத முற்பட்டு முடியாது என்று கண்டு கொண்டேன். வேர்ட் ஃபைலில் குறிப்பெடுக்க ஒரு இடத்தில் உட்காருவது அவசியமாக இருந்தது. எனவே அதைக் கைவிட்டு அனைத்தையும் வாட்ஸாப்பில் சேமித்து வைத்தேன். 2021 எனக்கு பணிக்கான பயிற்சிக்காலம். கொரனா பெருந்தொற்று சற்று தனிய ஆரம்பித்திருந்த காலகட்டமும் கூட. பணிக்கான பயிற்சிக்காக தென்காசி, சென்னை என அலைந்து கொண்டிருந்தேன். பேருந்துகள் பல தாவிகுதித்து ஒவ்வொரு நாளும் பயணம் செய்து கொண்டிருந்தேன். இமைக்கணத்தைத் தவிர பிற வெண்முரசு நாவல்கள் முழுவதையும் இணையத்தில் வாசிக்க வேண்டும் என்றும் டிவிட்டரை குறிப்பெடுக்கும் கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் முடிவு செய்தேன். அது கச்சிதமாக இருந்தது.
விஷ்ணுபுரம் நிறைவு செய்த கையோடு முதற்கனல் வாசிக்க ஆரம்பித்திருந்தேன். குறிப்புகள் எடுப்பது நாவல் வாசிப்பதற்கு துணை புரிந்தாலும் நாவல் வாசித்து முடித்ததும் ஒரு நிறைவின்மையே கை கூடி வந்தது. அதை தொகுத்துக் கொள்ள கட்டுரைகள் எழுதினேன். முதற்கனலுக்கு மட்டும் மூன்று கட்டுரைகள் எழுதினேன். கட்டுரைகள் எழுதுவது சிந்தனையை சீராக தொகுத்துக் கொள்ள உதவியது.
முதற்கனல் என் தத்துவநோக்கில் பெண்களின் நெஞ்சில் மூண்ட கனல் (அகழ்) முதற்கனலின் பிதாமகன் (கனலி)ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் தோறுவாய் ”இச்சை” என்னும் புள்ளியினின்று பிறப்பெடுக்கிறது என்னும் தத்துவம் என்னுள் கேட்டுக் கொண்ட பல கேள்விக்கான விடையாக அமைந்தது என்று கட்டுரையில் எழுதியிருக்கிறேன். பிரபஞ்சத்தின் முதல் அசைவு நா-அகத்தின் அசைவாக சித்தரிக்கப்பட்டு “நான் இருக்கிறேன்”; “இனி” என்று விரிகிறது. ”நான்” என்பதே அகங்காரமாகி அதன் இருப்பை நினைத்து பெருமிதம் கொண்டு பல்லாயிரம் கோடியாக பெருகுகிறது.
முதற்கனலின் நாயகனான பீஷமரையும், நாயகியான அம்பையையும் இந்தத் தருணத்தில் நினைவு கூர்கிறேன். ”சுனந்தையின் காமத்தின் கனல்” என்ற சொல்லை கட்டுரையிலுருந்து மீட்டு நினைவு கொள்கிறேன்.
”குருவம்சத்தின் முடிவு தொடங்கிவிட்டது! தர்மத்தின் மேல் இச்சையின் கொடி ஏறிவிட்டதுஏறிவிட்டது! வெற்று இச்சை வீரியத்தை கோடைக்கால நதிபோல மெலியச்செய்கிறது. பலமிழந்த விதைகளை மண் வதைக்கிறது. இன்று வடதிசையில் எரிவிண்மீன் உதித்திருக்கிறது. அருந்ததிக்கு நிகரான விண்மீன். அது குருகுலத்தை அழிக்கும்” என்ற வரி, வருவதை முன் அறிவிக்கும் நிமித்தச் சொல்லாக முதற்கனலிலேயே இருந்ததை நினைத்துக் கொள்கிறேன். அழிவின் கதை, போரின் கதை என்பதை விடவும் அறத்தின் கதை என்று இப்போது உணர முடிகிறது. எல்லா நேர்வுகளிலும் விசாரிக்கப்பட்டது எது அறம் என்பது தான். “மாலவன் உறையும் பாற்கடல் பெருமுரசென ஓயாது அறைந்து அமுதைத் திரட்டிக் கொண்டிருக்கிறது. சொல்லும், அறமும், மெய்யும் பிறக்கும் இடம் அது” என இறுதி நாவலில் யுதிஷ்டிரர் சொல்கிறார். அறத்தையும், மெய்மையையும் எல்லா நாவல்களிலும் விசாரிக்கிறது இந்த வெண்பெருமுரசு என்றே கொள்ள முடிகிறது.
முதற்கனலில் ஆழமாக நிற்கும் சொல் ”ஆடிப்பிம்பம்” என்பது. ”அது நீயே. மகனே நானே நீ”, “தத்வமசி” என சிகண்டிக்கு அக்னிவேசரால் மொழியப்படும் வரியையும் நினைத்துக் கொள்கிறேன். முதற்கனலுக்குப் பின் ஓரிரு மாதங்கள் தொகுத்துக் கொள்வதில் தான் அதிகம் கவனம் செலுத்தினேன். எந்தத் தொடக்கமும் சரியாக அமைந்தால் தான் முடிவு சரியாக இருக்கும் என்பது நான் எல்லா செயலிலும் கடைபிடிப்பது. அதன் பின்னர் அதுவே தனக்கான பாதையை எடுத்துக் கொள்ளும்.
இரண்டாவது நாவலான “மழைப்பாடல்” ஆரம்பிக்கையில் பாதை இலகுவாக இருந்தது. முதற்கனல் அஸ்தினாபுரியைப் பற்றிய பெருஞ் சித்திரத்தைக் கொடுத்தது என்றால், மழைப்பாடல் காந்தார அரசையும், யாதவ அரசையும் பற்றிய சித்திரத்தை அளித்தது. ஹஸ்தியின் குலம் சொல்லப்பட்டுக் கொண்டே இருந்ததால் அதை எளிதாக மனதில் பதிக்க முடிந்தது. ஆனால் காந்தார அரசு, யாதவ அரசு சார்ந்த பெயர்களையும், குலத்தின் வரிசையையும் நினைவில் வைத்துக் கொள்வது சிரமமாக இருந்ததை நினைவு கூர்கிறேன். அதனை தொகுத்துக் கொள்ளும் பொருட்டு சில முயற்சிகள் எடுத்தேன். நாவலில் சொல்லப்பட்ட காந்தார அரசு, யாதவ அரசு பற்றிய சித்திரத்தை மனதில் பதிக்க வரைபடம் ஒன்றை தயாரித்தேன்.
மேலும் சில படங்கள் வரைந்ததாக நினைவு. ஆனால் இப்போது எதுவும் அவசியமில்லை என்று தோன்றுகிறது. இவையாவும் சட்டகங்கள் தான். ஒட்டுமொத்தமாக மகாபாரதக் கதை மாந்தர்களும், கதையுமே வெண்முரசில் சட்டகம் மட்டும் தான். அதை மறுஆக்கம் செய்து ஊற்றும் ஆன்மா தான் முக்கியமானது என்று ஒரு தருணத்தில் கண்டுகொண்ட பின் மெல்ல இந்த முயற்சிகள் இல்லாமல் ஆனது. பெயர்கள் மறந்துவிடும் பதற்றம் மெல்ல இல்லாமல் ஆனது.
மழைப்பாடல் பதினேழு பகுதிகளைக் கொண்ட பெரிய நாவல். பீஷ்மர், பாண்டு, விதுரரைப் பற்றி விரிவாகவும், கெளரவ நூற்றுவர்கள், பாண்டவர்களின் அறிமுகமும் கொண்டது. நாயக பிம்பமாக ஆண்கள் இருந்தாலும், அவர்கள் எடுக்கும் ஒவ்வொரு முடிவின் விழைவும் தோன்றிய இடம் பெண்களாக இருப்பதாக அமைத்திருந்தது. அப்படி இந்த நாவலில் எழுந்து வரும் முக்கியமான பெண்களாக சத்தியவதியும், அம்பிகையும், பிருதையும் அமைகிறார்கள். நாவலை பகுதிகள் வாரியாகவும், கதைமாந்தர்களைக் கோர்த்தும் தொகுத்து எழுதி வைத்துக் கொண்டேன்.
மழையும் நிலமும்மழையின் வேதம், வேழாம்பல் ஆகிய சொற்கள் இந்த நாவலை நினைவு கூர்கையில் வருபவை. இதற்குப் பின் எப்போது தவளைச் சத்தம் கேட்டாலும் அதை ரசிக்க ஆரம்பித்திருந்தேன். அந்த ஒலியை மாண்டூக்ய உபநிஷதம் என்றும் மழைக்கான தவம் என்றும் அதற்குப் பின்னான நாட்களில் பார்க்க ஆரம்பித்தேன்.
கிருதம், திரேதம், துவாபரம், கலி என யுகங்களின் வரிசையைப் பட்டியலிட்டு அதைப் பற்றிச் சொல்லி ஆரம்பிக்கும் மழைப்பாடல் துவாபார யுகத்தின் அழிவைப் பற்றி நிமித்திகம் கூறி முடிக்கிறது. ”அந்தப்பேரழிவை உரியமுறையில் பயனுறுவழியில் முடித்துவைக்க யுகங்களை தாயக்கட்டைகளாக்கி விளையாடும் விண்ணகமுதல்வனின் மானுடவடிவமும் மண்நிகழும். எங்கே என்று சொல்லமுடியாது. யாரென அறிவதும் முடியாததே. ஆனால் அவன் வருவான். யுகங்கள் தோறும் அவன் நிகழ்வான்” என்பதன் மூலம் கண்ணனின் வரவை அறிவித்து முடிந்தது சிலிர்ப்பைத் தந்தது.
மூன்றாவது நாவல் வண்ணக்கடல். அந்த நாவலின் நாயகனென எழுந்து வருபவன் கர்ணன். “விண்ணவர் அறிக! மூதாதையர் அறிக! இந்தக் கணம் முதல் நீ என் நண்பன். என் உடைமைகளும் உயிரும் மானமும் உனக்கும் உரியவை! என் வாழ்க்கையில் எந்தத் தருணத்திலும் உனக்கில்லாத வெற்றியும் செல்வமும் புகழும் எனக்கில்லை“ என துரியோதனன் கர்ணனை அரசனாக்கும் அந்த அத்தியாத்தை இரவில் வாசித்து முடித்து அழுது கொண்டிருந்த தருணத்தை நினைவு கூர்கிறேன். எளிய உணர்வுகள் என இன்று மேல் நோக்கியிருந்து ஒரு பார்வையை அடைந்தாலும் அந்தத் தருணத்தில், காலத்தில், இடத்தில் கட்டுப்பட்டு மானுடர் அடித்துச் செல்லப்படும் விசையை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.
வண்ணக்கடலின் அருமுத்து கர்ணன்இந்த நாவலில் அறியாத ஒரு கை காய்களை நகர்த்துகிறது என்ற சிந்தனையையும் அடைந்தேன். கர்ணன், துரியோதன், பீமன் என ஒவ்வொருவருக்கும் பின்னால் இருக்கும் நாகத்தை இறுதியில் உணரமுடிந்தது. இச்சையென்னும் தந்திரத்தால் ஆடும் நாகங்களின் ஆட்டம் ஒருக்கப்பட்டிருப்பதையும், அந்த ஆடலில் நன்மை தீமை என்ன? என்பதை வகுத்து ஒரு தரப்பைச் சொல்ல வருபவனை அது நினைவுபடுத்தியது.
இயல்பாக நீலத்தில் அவன் வருகையை அத்தனை தெய்வீகத்தோடும், பிரேமையோடும் வாசித்தேன். எல்லா அத்தியாயங்களையும் எங்கள் வீட்டு மொட்டை மாடியில் வைத்து வாய் விட்டு வாசித்த நினைவு. சில அத்தியாயங்களை ஆண்டாள் கோவிலின் நந்தவனத்தில் வைத்து வாசித்தேன். இனிமையான நினைவுகள். நீலத்திற்கு என்னால் கடிதம் எழுத முடியவில்லை. அத்தனை மதுரமும் பித்தும் நிறைந்திருந்தது. அதை எழுதும் அளவுக்கான அழகான மொழி என்னிடம் இருக்கவில்லை. ஓரிரு மாதங்கள் கழித்தே பிரயாகை வாசித்தேன்.
பிரயாகை என்றவுடன் நினைவுக்கு வருவது துருவன் தான். பிரயாகை வாசிப்பின் போது ஒவ்வொரு நாளும் அதிகாலை எழுந்து துருவனை பார்த்துக் கொண்டிருந்தேன். உளமார வணங்கினேன். துருவனைக் காணும்ப்பொதெல்லாம் நினைவிற்கு வரும் வரி இது:
”அன்றுவரை அந்தந்தக் கணத்துக்காகவே மானுடம் சிந்தித்தது. அந்நாளுக்குப்பின் எதிர்காலத்துக்காகச் சிந்தித்தது. கோடிச்சிதல்கள் சேர்ந்து கட்டும் புற்று போல ஞானம் துளித்துளியாகக் குவிந்து வளர்ந்தது. பேருருவென எழுந்து பிரம்மத்தை நோக்கி கைநீட்டியது.”
துருவனுக்கு இதைவிடவும் பொருளளிக்க முடியுமா அல்லது மானுடம் பிரம்மத்தை நோக்கி கை நீட்டிய அத்தருணத்தை நிலைபெயராமையை நோக்கி சித்திக்க ஆரம்பித்த புள்ளியோடு முடிச்சிட்டதை நினைத்து சிலிர்த்துக் கொண்டதை நினைத்துக் கொள்கிறேன். துருவனை கண்ணனுடனும் இந்த நாவலில் எழுந்து நிற்கும் இன்னொரு படிமம்மான கங்கை அன்னையை திரெளபதியுடன் ஒப்பிட்டுக் கொண்டேன். பிரயாகை உணர்வுத்தருணங்களால் நிரம்பியதாக நினைத்தேன். எப்போதும் நினைவில் கொள்ள வேண்டியவை அவை மட்டுமே என்று நினைத்து அதைப் பற்றி தொகுத்து வைத்துக் கொண்டேன். இளைய யாதவரின் ”அந்தப் புன்னகையை” தரிசித்த இடமாக பிரயாகை நினைவிலுள்ளது.
பிரயாகையின் துருவன் பிரயாகையின் உணர்வுத் தருணங்கள் அந்தப் புன்னகைபெரும்பாலும் நாவல் முடிந்ததும் டிவிட்டரில் குறிப்பெடுத்தவற்றை வேர்ட் ஃபைலில் மாற்றி மீள வாசித்து அதில் தொகுத்துக் கொள்ள வேண்டியவை இருந்தால் மட்டும் கட்டுரை எழுதினேன். கதைமாந்தர்கள் பற்றிய குறிப்பெடுத்தல் முற்றிலும் இல்லாமல் ஆனது பிரயாகையில் தான். அதன்பின் நாவல் வரிசைகளில் அடித்துச் செல்லப்பட்டேன் எனலாம்.
அகத்தில் நிகழ்ந்து கொண்டிருந்ததையொட்டி புறத்திலும் மாற்றங்கள் எனக்கு நிகழ்ந்து கொண்டிருந்ததை இன்று உணர்கிறேன். ஒரு கட்டத்திற்குமேல் வாழ்வு வெண்முரசுடன் இணைந்துவிட்டிருந்தது. சில நாட்களில் மனதில் எழும் கேள்விகளுக்கு அங்கு விடை இருந்தது. வெண்முரசில் கதைமாந்தர்களுக்கு நிகழும் உளச்சிக்கலும் கேள்விகளும் என் வாழ்க்கையில் எழும்படிக்கு வாழ்வின் நிகழ்வுகள் அமைந்து வந்தது. சில கதைமாந்தர்களுடன் அணுக்கமாகியும் முரண்கொண்டும் அவர்கள் கேள்விகள் வழியாக அவர்கள் அடையும் பதில்களுடன் ஊடியும் முயங்கியுமென சென்று கொண்டிருந்தேன். இதுவே நான் என் வாழ்வில் முக்கியமான உடைவுத் தருணத்தில் இருந்த காலகட்டமும் கூட. ஆனால் அக்காலகட்டத்தில் தீவிரமாக செயல்கள் செய்து கொண்டிருந்தேன். தமிழ்விக்கி, நீலி என ஒருபுறமும், புனைவெழுத்து இன்னொரு புறமும் என புதிய பயணத்தை இக்காலகட்டத்தில் தான் துவங்கியிருந்தேன். மண்டை முற்றிலும் கேள்விகளால் நிறைந்திருந்தது. தூங்கும் நேரம் குறைவாக இருந்தது. காரணமேயில்லாமல் அழுகை வரும். சிறிய விஷயங்களுக்காக மகிழ்வதும், கண்ணீர் உகுப்பதும் நிகழும். ஒரு சமயம் மனிதர்களை மன்னித்துவிட்டதாக நினைத்து பேரன்னை போல என்னையே உணர்வேன். மறுமுறை ஏன் மன்னிக்க வேண்டும். மனிதர்கள் காலத்துக்கு கட்டுப்பட்டவர்கள் நான் மனிதராகவே இருந்து கொள்கிறேன் என பெருங்கோபமும் ஆத்திரமும் எழும். சில நாட்கள் சம்மந்தமே இல்லாமல் அத்தனை மதுரம் நிறைந்திருக்கும். இனித்து இனித்து சாகும் நிலை என வெண்முரசில் வரும் வரியை நினைத்துக் கொள்கிறேன். தாங்கவே இயலாத உணர்வுப் பெருக்கான நாட்களை நாவல் வரிசை அளித்துச் சென்றது.
எல்லா கேள்விகளையும் பகுக்கும்படியாக சொல்வளர்காடு அத்தியாயம் அமைந்தது. அதை குறிப்பெடுக்கும் எண்ணம் வந்தது. ஆனால் குறிப்பெடுக்கெடுத் தேவையே இல்லாத அளவுக்கு மொத்த புத்தகத்தின் ஒவ்வொரு வரியும் முக்கியமானதாக இருந்தது. உங்களுக்கு எழுதக்கூடிய அளவு நீங்கள் தொலைவில் இல்லாததுபோல உணர்ந்தேன். உங்கள் அருகில் இருந்தேன். நானே கார்கேயியாகவும் மைத்ரேயியாகவும் நாவலுக்குள் இருந்தேன். சொல்வளார்காடு வாசித்தபோது கனவுகளில் நான் காடுகளுக்குள் அமர்ந்து பாடம் கேட்பது போன்ற சித்திரம் வந்து கொண்டே இருந்தது. அப்போது நீங்கள் தத்துவ வகுப்பை ஆரம்பித்திருந்தீர்கள். மூன்றாவது வகுப்பு என்பதாக நினைவு. ஆலமரத்திற்குக் கீழ் அமர்ந்து அந்தி சாயும் நேரத்தில் நீங்கள் எங்களுக்கு வகுப்பெடுத்துக் கொண்டிருந்த தருணத்தில் அது ஏற்கனவே நடந்ததாகத் தோன்றி சிலிர்த்துக் கொண்டேன். அந்தத் தருணத்தை ஒருவர் புகைப்படம் எடுத்திருந்ததை அறிந்தபோது வரமாகவே கருதினேன். வெள்ளிமலையில் வகுப்புகள் என் புறத்தில் நிகழ்ந்த இன்னொரு நேர்மறையான அம்சம். ஒவ்வொரு முறை வரும்போது அந்த மலைகளை நோக்கி நின்றிருக்கும் பெரிய கல்லில் நின்று என்னையே பார்த்துக் கொள்வதுண்டு. எத்தனை எடையுடன் மனம் இருந்த நாட்களை கடந்து வந்திருக்கிறேன் என்பதை அது மெல்ல இலகுவாகுகையில் நினைத்து அந்த மலைகளுக்கு நன்றி சொல்லிக் கொள்வதுண்டு.
கிராதம் அனைத்து இருளின் உச்சம். அந்த நாவல் முடியும் வரை புறமாக இருளை அள்ளி என்னைச் சுற்றி நிறைத்துக் கொண்டேன். அலைக்கழிதலின் உச்சத்திலிருந்த நாட்கள் என கிராதம் நாவலின் நாட்களைச் சொல்வேன். அந்த நாட்களில் சோழபுரம் கோவிலுக்கு அவ்வபோது சென்று காலபைரவரை தரிசித்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். “நான் என எழுந்து காலத்தின் முன் நிற்பது மட்டுமே என் கனவு. நான் இருந்த இடம் விதைபுதைந்த மண். கீறி எழுந்து வானோக்கவேண்டும். அதற்காகவே கிளம்பினேன்.” என்று பிச்சாண்டவர் முன் சொன்ன வைசம்பாயனரை நினைத்துக் கொள்கிறேன். அர்ஜுன்னனின் திசைப்பயணமும், அலைக்கழிதலும், வெற்றியும், பணிதலும் என கிராதம் செயற்களத்திற்கான அத்தனை உந்து சக்தியையும அளித்தது.
கிராதத்தைக் கடந்து நான் வந்து நின்றது மாமலரின் முன். கல்யாணசெளந்திகம் என்ற மலரின் வாசனையை நினைவு கூர்கிறேன்.
பெருங்காதலின்பயணம்உங்கள் படைப்புகளை என் வசதிக்காக மூன்றாக பகுத்துக் கொள்கிறேன். முதலாவதாக உங்கள் சொந்த தத்துவச்சிக்கல், வாழ்க்கை நோக்கு, கேள்விகள் சார்ந்தவை. அதன் வழியாக நீங்கள் அடைவதை முழுமையாக உங்களுடன் இணைப்பயணமாக தொடர்ந்து வரும் வாசகர்கள் அடைகிறார்கள். உங்களுக்கு இணையாகவே அலைக்கழிதலும், பித்தும் அடைந்து அது தரும் அனுபவத்தால் என்றைக்கும் அப்பாதையை விட்டு அகலாதவர்கள். இரண்டாவதாக என்றுமுள அறம் சார்ந்தது, மானுட மெய்மையை சார்ந்தது. இது நீங்கள் முற்றிலும் எந்தக் கேள்வியும் இல்லாமல் நம்பும் விஷயங்கள். அந்த ஸ்திரத்தன்மையின் பொருட்டும், அது நின்றிருக்கும் உயரத்தைப் பொறுத்தும் ஏற்பு, மறுப்பு என்ற நிலையைத்தவிர இன்னொன்றுக்கு இடமில்லை. அத்தகைய வாசகர்களைக் கொண்ட படைப்புகள் அவை. மூன்றாவதாக மெல்லுணர்வுகள், காதல் சார்ந்தவை. தற்கணங்கள் சார்ந்தவை. எளியவை என்று மயக்குபவை. முதல் இரண்டின் வழியாக முதலில் அணுக்கமானாலும் என் அடியாழத்தில் மூன்றாவது வகை சார்ந்த எழுத்துக்களே உங்களில் அதிகம் அணுக்கமானது. அது மலர்த்துளி, மதுரம், பெருங்கை, இச்சாமதி, தீற்றல், மாமலர், கல்யாண செளந்திகம், சியமந்தகம் என பெரும் படிமமாக எழுந்து நிற்பவை. பேராளுமைகள் பெரும்பயணம் செய்தவர்களுக்கு இணையாக அதனால் தான் வெண்முரசில் மாத்ரியையும், காளிந்தியையும், மாலினியையும், சுபகையையும் நினைவு கூற முடிகிறது.
விஷ்ணுபுரமும் இமைக்கணமும் என் வாழ்வில் மிக முக்கியமான பொக்கிஷங்கள் என நினைப்பதுண்டு. அதைவிட ஒரு படி மேலாக மாமலரை என்னால் வைக்கமுடியும் என்று இன்று தைரியமாக சொல்லிவிட முடிகிறது. “வீடுபேறென்று யோகியர் அடைந்ததும் மெய்மையென்று ஞானியர் அறிந்ததும் உண்மை என்று நூலோர் சொல்வதும் உனக்கு ஒருபோதும் கைப்படப்போவதில்லை. உன்னிடம் இந்த மாமலர் மட்டும் எப்போதும் இருந்துகொண்டிருக்கும். நறுமணமும் கெடுமணமும் கொண்டிருக்கும். அனலென எரியும், நிலவெனக் குளிரும்.” என்று சொன்னால் மிகுந்த பலத்துடன் தலையாட்டி அதை வாங்கி வைத்துக் கொள்வேன்.
இவற்றையெல்லாம் கடந்து குருதிச்சாரல் வந்து சேரும்போது மீண்டும் பதற்றம் வந்து சேர்ந்தது. உங்களுக்கு கடிதம் எழுதிவிட்டு மறுநாள் “இமைக்கணம்” ஆரம்பித்தேன்.
இமைக்கணத்தின் ஒவ்வொரு வரியும் எனக்கு முக்கியமானது. மேன்மையான அனைத்திலும் உறைபவனை தரிசித்த நிறைவு. இரக்கமற்ற அவனின் விளையாட்டை மேலிருந்து பார்க்கும் பார்வை கிடைத்தது. எத்தனை உருவகங்கள், ஐயங்கள், குறியீடுகள்! ஒவ்வொருவருக்குமான கேள்விகளும் பதில்களும் எந்தவித மறுபேச்சுக்கும் இடமின்றி அளிக்கப்பட்டு, அந்த யுகத்துக்கான செயலை நோக்கி அவர்களை முடுக்கி விட்டது. ஊழ் பற்றிய பெரும் திறப்பு, அறிவு இதன் வழியாக கிடைத்தது. இந்தக்கணத்தில் என்னிடம் இருப்பவற்றில் எது விலைமதிக்கமுடியாதது என்று கேட்டால் தயக்கமே இல்லாமல் நான் விஷ்ணுபுரம், இமைக்கணம் என்று சொல்வேன். ”காவியம்” நாவல் கையில் கிடைக்கும்போது அதையும் சேர்த்துக் கொள்வேன்.
இமைக்கணத்திற்குப்பின் ஒரு மாதம் எதையும் வாசிக்கவில்லை. அதன் பின் போர். எளிய போர் அல்ல. பாரதத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படும் மிகப்பெரும்போர். இன்றளவும் கூத்தாகவும், நாடகமாகவும் நடிக்கப்படும் போர். சடங்காக கிராமங்களின் மூலை முடுக்குகளில் கூட அறிய முடிவது. திரெளபதியும், கர்ணனும், இளைய யாதவரையும் அறியாத மக்கள் இந்தியாவில் இல்லை எனுமளவும் படிமமாக, தொன்மமாக, சொலவடையாக மாறி அன்றாடத்தில் கலந்துவிட்டவர்கள். ஒவ்வொருவரும் இறக்கும் தருவாய் மனதை கனமாக்கிக் கொண்டே வந்தது. மெல்ல ஒவ்வொன்றாக இழந்து ஒரு விடுபடுதல் நிகழ்ந்து கொண்டே வந்தது.
கல்பொருசிறுநுரை நாவல் வரும் போது மீண்டும் சோர்வின் உச்சத்தை அடைந்தேன். அந்த சொல்லைப் போல எழுப்பட்ட அனைத்தும் பாழ் என்றாகி உடைந்து நொறுங்கி சிதறிக் கிடப்பதைப் பார்ப்பதைப் போன்ற வெறுமை. அவ்வளவுதானா எல்லாம்? என்ற உணர்வு நிலை. ஆனாலும் எந்த ஒன்றோ இது அல்ல என்று என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தது. நத்தை போல மெல்ல மெல்ல ஊர்ந்தபடி தான் வாசித்துக் கொண்டிருந்தேன். அப்போது தான் காவியம் நாவலை நீங்கள் எழுத ஆரம்பித்தீர்கள். ஒருவேளை காவியம் வாசித்திருக்காவிட்டால் இப்போது அடைந்திருக்கும் இந்தப் பார்வையை அடைந்திருப்பது சாத்தியமில்லை. கதைமாந்தர்களுக்கும் மேலாக கிருஷ்ண த்வைபாயன வியாசரும், உக்ரசிரவஸும், எண்ணிலடங்கா சூதர்களும் என்னுள் எழுந்து நின்றிருக்கின்றனர் இப்போது.
”காவியம்” நாவல் வெண்முரசின் இறுதியில் எஞ்சுவது என்ன என்று காட்டுவது. வெண்முரசையே மொத்தமாக சட்டகமிட்டு அதற்குமேலான ஒன்றைக் காண்பிப்பதாக இருந்தது. அனைத்து காவிய ஆசிரியர்களையும் வரிசையில் நிறுத்தி அவர்களை முன் வைப்பது. என்றுள கதைசொல்லல் எனும் கலையை முன் நிறுத்துவது. காவியம் நாவல் முடித்த கையோடு வெண்முரசின் கல்பொருசிறுநுரையையும் முதலாவிண்ணையும் வாசித்து முடித்தேன். முதலாவிண்ணில் உக்கிரசிரவஸை வியாசர் “இவன் தான்” என்று சொல்லும் தருணம் மேலும் சிலிர்ப்பானது காவிய நாவலால் தான். ஓர் நாயகனின் வரவை உணர்ந்தேன். காவியம் நாவல் வெண்முரசை மொத்தமாக சுருட்டி வியாசரின் காலடியில் சமர்ப்பிப்பது. அதற்கு இணையாக பிற காவிய ஆசிரியர்களை நிற்க வைப்பது. யாவற்றிற்கும் மேலாக கதை சொல்லிகளை வைப்பது. அதற்கும் மேலாக கதையை, இன்னும் ஒரு படி மேலாக மானுடரால் விளங்கிக் கொள்ளவியலாத உணர்வை, அறிவை வைப்பது என்று புரிந்து கொண்டதால் அந்த உணர்வெழுச்சியை அடைந்தேன்.
கணிகரையும் மிகவும் விரும்பும்படி செய்து விட்டுத்தான் நாவலை முடித்திருக்கிறீர்கள். மீள வெண்முரசை மீட்டுப்பார்த்தால் என் மனதிற்கு அணுக்கமானவர்கள் என்று ஒரு பட்டியலைப் போட முடியும். நான் என்று உணர்ந்த தருணங்களை, மனிதர்களை, உணர்வுகளைச் சொல்ல முடியும். ஆனால் இவரை வெறுத்தேன் என்றோ, இவர் கெட்டவர் என்றோ ஒருவரையும் என்னால் சொல்ல இயலவில்லை. அப்படி ஒருவர் கூட இல்லை.

வெண்முரசு நாவல் வரிசை த்வாபார யுகம் முடிந்து கலியுகம் ஆரம்பிப்பதோடு முடிகிறது. வேதமுடிவை நோக்கி அனைத்தையும் செலுத்துவது. வேதமுடிவு என்பது எத்தகைய எதிர்காலம் கொண்டிருக்கும் என்பதை இன்று இந்த காலத்திலிருந்து தெளிவாக காண முடிகிறது. இதன்வழியாக கலியுகத்தின் முடிவையும் காண இயல்வதற்கான கற்பனையையும் அளித்திருக்கிறீர்கள். அனைத்து பழைய மதிப்பீடுகளின், சிந்தனையின் வீழ்ச்சியை கண்ணுற்றேன் எனலாம். ஆனால் இதை பழைய மதிப்பீடு என்று சொல்லிவிட இயலவில்லை. ஒரு காலகட்டத்திற்கான சிந்தனை என்பேன். ஒவ்வொரு சிந்தனையையும் ஏற்கவும் மறுக்கவும் வைக்க முடியும் ஓர் பார்வையையும் அளிக்கிறது. ஒரு யுகம் பிறந்து நிகழ்ந்து முடியும் இந்த பெருங்காலமும், இடமும் வழிநடத்தப்படுவது அக்காலகட்டத்தை தொகுக்கும் ஒற்றைச் சிந்தனையால் என்று தோன்றுகிறது. ஒரு பெரிய காலகட்டத்தை மீட்டுறுவாக்க, மறு உருவாக்க, கற்பனையில் நிகழ்த்திப் பார்க்கத் தேவையானது அக்காலகட்டத்தையே வழி நடத்தும் ஒரு சொல் தான். அச்சொல்லே அதன் விழைவு. அவ்விழைவே யாவற்றின் தோற்றமும். உங்கள் முன் அருவாக வந்தமர்ந்த அந்த ஒற்றைச் சொல்லை இந்த நேரத்தில் மானசீகமாக வணங்குகிறேன்.
த்வாபாரயுகமும், அஸ்தினாபுரி பேரரசும், அதன் கொடி வழிகளும், குடியும், கதை மாந்தர்களும் யாவும் ஒரு நிமித்தமே. ஒரு எலும்புக்கூட்டைப் போல வெண்முரசுக்கான கட்டமைப்பை வழங்குவன. ஆனால் இது முதன்மையாக மானுடர்களின் கதை. எக்காலமும் வந்து சேரக்கூடிய மானுடர்களின் கதை. யாவராலும் தொடர்பு படுத்தக் கூடியது. எத்தனை வகையான மனித உறவுகள். எத்தனை நிகழ்த்தகவுகளில் இங்கு மனித உறவுகள் நிகழ்கின்றன. அனைத்தையும் வாழ்ந்து பார்த்துவிட முயன்று பார்க்கும் ஒரு முயற்சி. நான் வாசிப்பின் வழியாக அதை நிகழ்த்திப் பார்த்தேன்.
இந்த நான்கரை ஆண்டுகளில் 26 நாவல்கள், 1932அத்தியாயங்கள், 22,400 பக்கங்கள் வாசித்திருக்கிறேன். அளவு எனக்கு எப்போதும் பொருட்டல்ல. ஆனால் ஆழமே பொருட்டு. 26 நாவல்களும் அமைந்திருந்த ஆழங்களை சற்று நினைத்துப் பார்க்கிறேன். ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசைக்கு என்னைப் பிடித்து இழுத்துச் சென்றது. கற்பனையால் எத்தனை இடங்களை கட்டி எழுப்பியிருக்கிறேன். எத்தனை கதை மாந்தர்களை என் எண்ணங்களால் தீட்டியிருக்கிறேன். அவர்களின் உணர்வுகளால் அலைக்கழிக்கப்பட்டிருக்கிறேன். அவர்களாக சில சமயம் வாழ்ந்திருக்கிறேன். யாவற்றையும் விட நான் வியந்தது இதிலிருக்கும் அறிவின் ஆழத்தைப் பொருத்து தான்.
தமிழ் இலக்கியத்தில் வெண்முரசு மிக முக்கியமான திருப்பு முனை. பெருங்களஞ்சியம் எனலாம். ஏற்கனவே நம்மிடமிருந்த தத்துவ சிந்தனையின் ஒட்டுமொத்த தொகை. மனித உறவுகள், அது சார்ந்த சார்ந்த சிக்கல்கள், உணர்வுகள் சார்ந்து நம்மிடம் இருந்த உச்சபட்ச நிகழ்த்தகவு சாத்தியங்கள் சார்ந்த தொகை. ஒட்டுமொத்தமாக நம் வரலாற்றை, சிந்தனையை நீங்கள் எழுதிய காலகட்டத்தில் நின்று திரும்பிப் பார்த்து தொகுக்கப்பட்ட தொகைக்களஞ்சியம்.
மொழி, மொழி நடை சார்ந்து நவீனத்தமிழ் மொழியின் உச்ச பட்ச சாத்தியமான மொழிவெளிப்பாடு. புதிய செவ்வியல் இயக்கம் ஒன்றின் தொடக்க காலத்தை தமிழ் மொழியில் பறைசாற்றுவதான கூறு கொண்டது. இதை நான் ஒரு முனைப்பாட்டுடன் சொல்லவில்லை. சுண்டக் காய்ச்சிய பாலில் கட்டியான ஏடு உருவாவது போல வெண்முரசு தமிழ் இலக்கியத்தில் வந்தமைந்துள்ளது. பின்நவீனத்துவத்துக்குப் பின்னான காலகட்டத்தில் உதித்த பல்வேறு கிளைகளில் ஒற்றை தங்க இழையாக வெண்முரசு இந்த புதுச்செவ்வியல் போக்கை ஆரம்பித்து வைத்துள்ளது. அதற்கு முன்பே விஷ்ணுபுரம், கொற்றவை என அதன் சுவடுகள் இருந்தாலும் இது அதன் மணிமகுடம் என்று சொல்லலாம். தமிழ் வாசகர் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் இனி வாசித்திருக்க வேண்டிய நூலாக அவர்கள் முன் நின்றுகொண்டிருக்கப்போகும் மகத்தான கதைக் களஞ்சியமாக என்றும் நிற்கும். வெண்முரசுக்குப் பின் எழுத்தாளராக விரும்பும் ஒவ்வொருவரும் இதை வாசித்து முடிக்காமல் இதற்கு இணையாக இனியொரு செவ்வியல் படைப்பை படைக்க இயலாது என்றும் சொல்லலாம். ஆனால் வேறு புதுவகை எழுத்துக்கள் உருவாகலாம். எளியவையாக இருக்கலாம். ஆனால் அனைத்துக்குமான ஒரு ஒப்பீட்டுப்புள்ளியாக வெண்முரசு அமையும். பாறை அடுக்குகளுக்கு தாய்ப்பாறை நின்றிருப்பது போல வெண்முரசு நின்றிருக்கும். பிற மொழிகளில் இது நவீன இலக்கிய ஆரம்ப காலகட்டத்திலேயே தொகுக்கப்பட்டிருப்பது அவர்களுக்கு பலமாக இருப்பதைப் பார்க்க முடிகிறது. தமிழில் இப்போது நிகழ்ந்திருப்பது நமக்கான ஒரு புதுப்பாதையைக் காண்பிப்பதாக உள்ளது.

பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சுப்ரமண்யம் எனத் தொடரும் இச்சரடில் உங்களை கோர்க்க முடியாத படிக்கு, வியாசர், உக்கிரசிரவஸ், குணாட்யர், ஜைமினி, வைசம்பாயனர் என நீளும் காவிய ஆசிரியர் மரபில் வைக்கப்பட வேண்டியவராக இந்த நாவல் வரிசையின் வழியாக மொழி கடந்து சென்று வைத்துக் கொண்டுவிட்டிருக்கிறீர்கள். இவற்றையெல்லாம் சரியாக சொல்வதற்கு என்னை தகுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என இந்த வார்த்தைகளை எழுதும்போது மனதார விரும்புகிறேன்.
இத்தனைக்குப் பின்னும் அறிந்தவற்றிலிருந்து அறியாததற்கு செல்லும் ஞானத்தின் போதமே மேலும் இயக்குகிறது.
ஓர் பெரிய நாவலின் வாசிப்பிற்குப் பின் நிகழ்வது என்ன? என்று யோசித்துப் பார்க்கிறேன். என்னில் ஒரு பகுதி அடியோடு மாறிவிட்டது என்று சொல்லலாகுமா? கட்டோடு இவற்றையெல்லாம் கடந்து விட்டேன் என்று பட்டியலிட முடியுமா? நான் உத்தமமான இடத்தை அடைந்து விட்டேன் என்று சொல்லிவிட இயலுமா? எதுவுமே இல்லை. அப்படி எதுவும் இங்கு கட்டோடு மாறவில்லை என்பதை உணர்கிறேன். என்னால் எதையுமே மாற்ற முடியாது என்பதை அறிகிறேன். முன்பு அதை அறிவீனமாக நினைத்திருக்கிறேன். ஆனால் அதுவல்ல இது. பெரும் விடுதலை. எதையுமே மாற்ற இயலாது என்று அறியவருவது உச்ச சாத்தியமான விடுதலையை அளித்து வாழ்வு சார்ந்து நம்முன் விரிக்கப்பட்ட அனைத்தையும் தயக்கமே இல்லாமல் செய்ய வைக்கிறது. உண்மையில் ஊழை நன்கு அறிவது செயலின் உச்சத்தை கை கொள்வதற்கான வழியே. ”நான் முழுமையாக அனைத்தையும் உணர்கிறேன், வாழ்கிறேன்” என்று இன்று சொல்ல முடியும்.
ஒரு பெருநாவல் அளிப்பது வாழ்க்கையைப் பார்க்கும் ஒரு பார்வைக்கோணத்தை என்று சொல்லலாம். உங்களின் ஒவ்வொரு நாவல் வழியாகவும் நான் அடைந்தது ஒவ்வொரு பார்வைக்கோணத்தையே. ஒரு நிகழ்வு, மனிதர், செயல் ஏன் காலத்தைப் பொறுத்து இடத்தைப் பொறுத்து வலியை அளிக்கிறது என்று யோசித்தால் அது அளிக்கும் ஒரே ஒரு பார்வைக்கோணத்தால் என்று சொல்ல முடியும். கதைகள் வழியாக பல்வேறு பார்வைக்கோணங்கள் இணைந்து வலியும், துக்கமும், மகிழ்வும், யாவும் வேறொரு பரிமாணத்தை அடைகிறது. ரூபமாக பரிமாணங்க
தூரன் விழா, கருத்துப்பதிவு
ஜெ
வாழ்த்துக்கள்! இத்துடன் அச்சுருக்க உரையை தங்கள் பார்வைக்கு அனுப்பி வைத்துள்ளேன்.
பெரியசாமி தூரன் தமிழ்.wiki விழா 2025
தொகுப்புரை என் புரிதலின் சுருக்கம்:
பேராசிரியர் வசந்த் ஷிண்டே அவர்களின் உரையில் இந்தியா முழுவதுமே இப்பொழுதும் அப்பொழுதும் எப்பொழுதும் பல மொழிகளும் பல பண்பாடுகளும் கூடி ஒன்றாக தொல் வரலாற்றுக் காலத்திலிருந்து இக் காலம் வரை வாழ்வு முறை ஒரே மாதிரியாகத்தான் இருந்து வந்துள்ளதாக வரலாற்று மற்றும் அகழ்வாய்வுகளின் தரவுகள் படி அறியப்படுகிறது என்றார்.
ஹரப்பா நாகரிகம் அழிவுறும் நிலையில் கி.மு.900 ஆண்டு வாக்கில் பரந்து விரிந்த நிலங்களான ஹரியானா முதல் ராஜஸ்தான் குஜராத் உள்ளிட்ட மகாராஷ்டிரம் வரை அதேபோன்ற நாகரிக வளர்ச்சி இருந்து வந்துள்ளது என்றார்.
அதுபோன்று வரலாற்றில் பொற்காலமோ இருண்ட காலமுமோ இல்லை என்பதை , குப்தர் காலத்து ஆய்வுகளை மேற்கோள்காட்டி குறிப்பிட்டார். இலக்கியவாதிகளை
ஊக்கி வைத்து அரசர்கள் ஏற்றி உயர்த்தி எழுத வைத்திருப்பார்கள் எனவும் கள ஆய்வில் தரவுகள் அதற்கு ஒப்பாக இல்லை எனவும் குறிப்பிட்டார்.
டாக்டர் வெ வேதாசலம் அவர்களின் கள ஆய்வு முடிவுகளும் எழுத்தும் உரைகளும் மேற்சொன்ன கருத்துக்களை தமிழகம் இந்தியா மட்டுமல்லாமல் தெற்காசிய நிலப்பரப்பிலும் அறியப்படுவதாக கூறினார்.
மூத்த ஆய்வாளரும் கல்வெட்டு இயலாளருமான முனைவர் திரு சுப்புராயலு அவர்களின் உரையில் எவ்வாறு திரு வெ வேதாசலமுடன் இணைந்து செயல்பட்டபோது,பாண்டி நாடு முழுவதும் உள்ள முக்கியமான வரலாற்று முக்கியமான ஊர்களை சென்று களப்பணியில் ஆய்வறிந்ததையும் அதன் பயனாக அவர் படைத்த பாண்டிய நாட்டு “நாடுகளும் ஊர்களும் “என்ற புத்தகத்தினையும் அதில் அவர் கம்ப்யூட்டர் உதவியால் அருமையாக வரைந்து படைத்த நிலப்படத்தையும் குறிப்பிட்டார்.
திரு வெ வேதாசலம் தொல்லியல் வரலாறு கல்வெட்டியல் ஆகியவற்றில் தான் மட்டுமல்லாமல் தன் குடும்ப உறுப்பினர்கள் மனைவி மகள் மகன் என்ற அனைவரையும் ஊக்கப்படுத்தி ஈடுபட வைத்தார் என்றார். அவர் தன் மகளுடன் சேர்ந்து “ஜேஷ்ட்டா “தேவிப் பற்றிய முக்கிய ஆய்வு நூலை வெளியிட்டுள்ளார் என்றார்.
மேலும், தொல் அகழாய்வு எவ்வாறு அங்குலம் அங்குலமாக நிதானமாக மெல்லமாக நடக்க வேண்டியதன் அவசியத்தையும் , அதன் ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டதையும் அதன்மேல் கொண்ட கருத்துகளையும் முடிவுகளையும் மிகவும் அதே நிதானத்துடன் வெளியிட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார்.
டாக்டர் வெ வேதாசலம் அவர்கள் தனது விருது ஏற்புரையில் முதலாக , எவ்வாறு தன்னை இவ்விருதுக்கு தேர்ந்தெடுத்தது முதல், உலகம் முழுவதும் தன் முகத்தையும் ஆக்கங்களையும் வெளிக்கொணர்ந்தது என்பதை நகைச்சுவையுடன்னும் நன்றியுடன்னும் குறிப்பிட்டார். மேலும் இந்த காலத்தில் தான் தன்னுடைய புத்தகங்கள் இதுவரை இல்லாத அளவுக்கு நிறைய விற்று தீர்ந்தன என்பதை மகிழ்வுடன் தெரிவித்தார்.
இவ் விருதினை அளித்த , தன்னிச்சையாகக் கூடித் தானே அமைந்து எழுந்த குழமமான விஷ்ணுபுரம் வட்டத்தின் வாசகர்களையும் செயல் வீரர்களையும் , அவர்களது சித்திரம் போல் அரங்கில் அமர்ந்து அமைந்து ஆற்றும் அறிவார்ந்த வாசக ஈடுபாட்டினையும் வியந்து, இந்த விருத பெறுநரைப் பற்றி அலசி ஆராய்ந்து அளித்தமைக்கும் நன்றி பாராட்டினார்.
தன் குடும்ப உறுப்பினர்கள் இடையறாது அளித்த ஆதரவுக்கும், மனைவியின் தொடர் அனுசரணைக்கும் நன்றி தெரிவித்தது மட்டுமின்றி அவர்கள் இல்லையேல் தன்னுடைய படைப்பு ஆக்கங்கள் இவ்வளவு தூரம் வந்திருக்காது என்றார்.
இளமையில் தன் நவீன இலக்கிய ஈடுபாடுகளிலிருந்து அரசு தொல்லியல் கல்வெட்டு இயல் பணியில் சேர்ந்தவுடன் விலக நேர்ந்ததையும் , துறை சார்ந்த படிப்பில் நாட்டம் மேற்கொண்டதாகவும் , மற்றும் ராணுவத் தனமாக வேலையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும் கூறினார்.
பணியில் இருந்த காலங்களில் அவமானங்கள் பலப்பல சந்தித்ததையும் , அபூர்வமாக துறை நிர்வாகத்திடம் இருந்து தன் திறமைகளுக்கான அங்கீகாரம் கிடைத்ததையும் கூறினார்.
அரசுப் பணியில் இருந்ததால் புத்தகங்களை வெளியிட முடியவில்லை என்றும் பணி மூப்பிற்குப் பிறகு சரமாரியாக தொகுத்து வைத்திருந்த அனைத்து புத்தகங்களையும் தன்னுடைய பணி மூப்பில் கிடைத்த பணத்திலிருந்து தானே வெளியிட்டதாகவும் கூறினார். இதே சமயத்தில் இலங்கையில் ஆண்டுதோறும் ஒன்பது ஆண்டுகளுக்கு மாணவர்களுக்கும் தொல்லியல் வரலாறு கல்வெட்டு இயல் சம்பந்தமாக பாடங்களை எடுத்ததாகவும் , அதேபோன்று இன்று வரை சமூக பங்களிப்பாக கிராமங்கள் தோறும் சென்று அந்தந்த ஊரின் வரலாற்றினை மக்களிடையே கள ஆய்வாக நடத்தி அவர்களை வைத்தே அதை எழுதியும் படித்தும் பதிவும் செய்தார் என்றார்.
தனது சமூக கடமையாக தான் நமது வழித் தோன்றல்களுக்கு ஒரு இளம் ஆசிரியராக வரலாறு மற்றும் பண்பாட்டுச் செய்திகளைக் கொண்டு சேர்க்கும் முகமாகத் தன் செயல்பாடுகள் இருந்தது இருக்கிறது இருக்கும் என்றார்.
எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தன் உரையில் ஈரோட்டைச் சேர்ந்த திரு பெரியசாமி தூரனின் தமிழுக்கு அளித்த பங்களிப்பையும் அவர் தொண்டின் பெருமையையும் அவர் நினைவாக ஆண்டுதொறும் வழங்குப்படும் தமிழ்.wiki பரிசு பற்றியும் இவ்வாண்டு 2025 பரிசு பெறும் தொல்லியல் வரலாறு கல்வெட்டு இயல் சார்ந்த திரு. வெ வேதாசலம் எவ்வாறு முக்கியத்துவம் பெற்றுள்ளார் என்பதை கூறினார்.
மேலும் அவர் கூறுகையில்,
வரலாறு முக்கியம். அதைவிட வரலாறுகள் மிக மிக முக்ககியம் என்றார்.
இவ் வரலாற்று ஆய்வு ஆசிரியர்களின் கொடை தான்
இலக்கிய வாசகர்களின் எழுத்தாளர்களின் கனவுகளை பெருக்குவதும் , பரந்த விரிந்த நவீன நாவல்களாக பெருக்கெடுக்க வைப்பதும் ஆகும்.
இந்தப் பார்வை கொண்டுதான் இத் தமிழ்.wiki பெரியசாமி தூரன் 2025 ஆண்டுக்கான பரிசை தமிழுக்கும் தமிழ் பண்பாட்டுக்கும் அளப்பரிய தொண்டு ஆற்றி வரும்
தமிழக கல்வெட்டு வரலாற்று ஆய்வு ஆசிரியரான திரு. வெ . வேதாசலத்திற்கு சமர்ப்பித்து ஏற்று சிறப்பித்து அருளுமாறு வேண்டப்பட்டது என்றார்.
இக் கனவுகள் மெய்ப்பட எங்கள் ஊர் ஏரியை தமிழ்ச்சமண காலதத்திற்கு முன்பிருந்தே காத்து வரும் ஏழு அன்னையர்களும் , மலைநாட்டில் மலைமுகட்டில் என் இடர் கலையத் தரிசனம் அளித்த மூத்த தேவியும் தமிழ் பண்பாட்டினை முன்னெடுக்கும் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும்
அருள் புரிய வேண்டுகிறேன் என்றார்.
முத்துகிருஷ்ணன் வே
சென்னை.
தியானமுகாம் – கண்டடைதல், நலமடைதல்
For the past 30 years I have been telling my students about the importance of learning Western philosophy as a way of thought—not as a series of ideas expressed by various personalities as prescribed by the university curriculum.
Western philosophy and educationஇந்த வகுப்பில், திரு.தில்லை செந்தில் பிரபு அவர்கள், தனது சாந்தமான, கணீர் குரலுடன், எங்களுக்கு நாள் முழுக்க உத்தரவுகளை கொடுத்து, த்யானம், பிராணயாமா கற்றுக் கொடுத்து, ஒவ்வொருவரும் சரியாக செய்கிறார்களா என்று சரி பார்த்துக் கொண்டே இருந்தார்.
August 24, 2025
வடகிழக்கும் இனவாதங்களும்
வடகிழக்கு மாநிலங்களிலுள்ள இனவாதம், கலவரச்சூழல் பற்றி நமக்கு பெரிதாக ஏதும் தெரியாது. அங்கே உள்ள பழங்குடி அமைப்புகள் இந்திய ராணுவத்தை எதிர்த்தால், இந்திய ராணுவம் அவர்களுக்குமேல் நடவடிக்கை எடுத்தால் அவர்களை ‘சுதந்திரப்போராளிகள்’ என்றும் ‘முற்போக்கு விடுதலைச் சக்திகள்’ என்றும் இங்குள்ள சில குழுக்கள் நமக்குச் சொல்கின்றன. ஆனால் அவர்களின் முதன்மை வன்முறை தங்களுக்குள்ளேயேதான். ஏன் அந்த வன்முறை? அதன் பண்பாட்டுவேர்கள் என்ன? ஏன் அவற்றை அறிந்துகொள்ளவேண்டும்? ஏனென்றால் எங்கும் எப்போதும் இனவாதம் பற்றி எரியலாம். நாம் நம்மைப்பற்றி அறியத்தான் வடகிழக்கை அறியவேண்டியிருக்கிறது
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
