Jeyamohan's Blog, page 34
August 20, 2025
ஈரோட்டின் இசைப்பொழிவு
தமிழ்விக்கி –தூரன் விருது விழா இன்று ஓர் இசைநிகழ்வாகவும் அறியப்படுகிறது. தமிழுக்குரிய இசைக்கருவியான நாதஸ்வரத்தில் பெரியசாமித்தூரனின் கீர்த்தனைகளை வாசிக்க தமிழகத்தின் முதன்மையான இசைக்கலைஞர்கள் அழைக்கப்படுகிறார்கள். இசைக்கலைஞர்களைத் தேர்வுசெய்வதிலும் இசையறிந்தவர்களின் குழு ஒன்று யோகேஸ்வரன் ராமநாதனின் வழிகாட்டுதலில் செயல்படுகிறது.
இந்த ஆண்டு இசைக்கப்பட்ட பாடல்களின் பதிவுகள் இவை. இப்பாடல்களை வாய்ப்பாட்டாகக் கேட்கவிரும்பும் நண்பர்களுக்காக அவையும் அளிக்கப்பட்டுள்ளன. இவை நாதஸ்வர இசையை ரசிப்பதற்கு பொதுவான ரசிகர்களுக்கு உதவலாம். நாதஸ்வரத்தை ரசிக்க நாம் கற்றுக்கொண்டே ஆகவேண்டும். அது இந்திய தத்துவம், இந்திய ஆலயக்கலை ஆகியவற்றைக் கற்றுக்கொள்வதன் ஒரு பகுதியாகச் சொல்லத்தக்கது.
இந்த நீண்ட பதிவில் 16 ஆகஸ்ட் 2025 அன்று நிகழ்ந்த இசைநிகழ்வின் காணொலிப் பதிவு தனித்தனிப் பாடலாகவே உள்ளது. இப்பாடல்களை வேறு கலைஞர்கள் வாய்ப்பாட்டாகப் பாடிய காணொலிகள் உள்ளன. அதன்பின் இறுதி இணைப்பாக சென்ற ஆண்டுகளில் தமிழ்விக்கி- பெரியசாமித் தூரன் விருதுவிழாவில் நிகழ்ந்த இசைநிகழ்வுகளின் காணொலிப் பதிவுகளின் இணைப்புகள் உள்ளன. நண்பர்களுக்கு உதவும் என நினைக்கிறேன்.
ஜெ
———————————————————————————————
2025 ஆண்டு இசை நிகழ்வின் ஸ்ருதி டிவி பதிவுகள்
———————————————————————————————
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
https://www.youtube.com/watch?v=ezvsxvqQLLE
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=5mWZGTt2Zm0
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=lUWlcb73wu8
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
https://www.youtube.com/watch?v=SzJdCm5mjf0
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=Sw60PviuVRY
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
https://www.youtube.com/watch?v=vFLwp8EigQQ
6.a) : பீத்தோவனப்பிரியா
பீத்தோவனின் ”ஃபர் எலிஸ்” பகுதி இசையை கர்நாடக சங்கீத ராக-தாள கட்டமைப்புக்குள் கலப்பிசையாக மாற்றம் செய்து , அந்த ராகத்துக்கு “பீத்தோவனப்பிரியா” என்று பெயர் சூட்டி, ரூபக தாளத்தில் கீர்த்தனையாக வாசித்தல்
https://youtu.be/FrVMEcsBUE0
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
https://www.youtube.com/watch?v=79djCe45iNc
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
https://www.youtube.com/watch?v=1891m0CaxEk
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
https://www.youtube.com/watch?v=_Yz9vqqy0v8
******************************************************************
கீர்த்தனைகள்
பட்டியல்
:
1. கீர்த்தனை: மங்கள விநாயகனே. ராகம் : ராமப்ரியா. தாளம் : மிஸ்ர சாபு
[MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran]
2. கீர்த்தனை: தில்லையில் ஆடும். ராகம் : இந்தோளம். தாளம் : ஆதி
[Periyasamy Thooran Compositions | Natarajar Songs. 17 நிமிடம் 45 வினாடி முதல்…]
3. கீர்த்தனை: ஸாமகான ப்ரியே. ராகம் : ஆனந்தபைரவி. தாளம் : ஆதி
[sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari]
4. கீர்த்தனை: ஆதி சங்கரர் பாதம். ராகம் : பூர்விகல்யாணி. தாளம் : மிஸ்ர சாபு
[TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran – YouTube]
5. கீர்த்தனை: அப்பா உன்னை மறவேனே. ராகம் : பிலஹரி. தாளம் : ஆதி
[Appa Unai Maravene]
6): முதன்மை ராக ஆலாபனை. ராகம் : தோடி.
[தொடர்ந்து ஸ்வர குறைப்பு மற்றும் தனி ஆவர்த்தனம்]
கீர்த்தனை: ஆடும் பெருமானே. தாளம்:ஆதி
(Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran)
7. கிளிக்கண்ணி[காவடிசிந்து]: தெய்வ குழந்தை
[தெய்வ குழந்தை பேரை–பெரியசாமி தூரன் பாடல்– Daiva kuzhandai perai – Shri Periyasami Thooran song]
8. கீர்த்தனை: தொட்டு தொட்டு பேச வறான். ராகம் : பெஹக். தாளம் : ஆதி
[Thottu Thottu – Anubhavam | Bombay S.Jayashri – Carnatic Vocal | Behag – Adi Classical Song]
9. கும்மி பாட்டு: சின்ன குழந்தையை
[Samarpanam Album by Periyasami Thooran.12 நிமிடம் 55 வினாடி முதல்…]







Preview YouTube video காவடிசிந்து : தெய்வ குழந்தை | பெரியசாமி தூரன் பாடல் நாதஸ்வரம் – தவில் இசை |



Preview YouTube video MS Subbulakshmi-Mangala Vinayakane-Ramapriya-misra chapu-Periasamy Thooran

Preview YouTube video sAmagAna priyE – Anandabhairavi – ML Vasanthakumari

Preview YouTube video TV Sankaranarayanan – Adi shankarar pAdam – pUrvikalyANi – periyasAmy tUran

Preview YouTube video Appa Unai Maravene

Preview YouTube video Aadum Perumane || Prema Rangarajan || Periasamy Throoran




————————————————————————————-
2025 – பாடல் பட்டியல் : தமிழுடன் இசை | எழுத்தாளர் ஜெயமோகன்
2024 – பாடல் பட்டியல் : தூரன் விருது- இசை நிகழ்வு
2023 – பாடல் பட்டியல் : தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசை நிகழ்வு
————————————————————————————-
2025 – இசைக் கலைஞர்கள் அறிமுகம் : தமிழுடன் இசை | எழுத்தாளர் ஜெயமோகன்
2024 – இசைக் கலைஞர்கள் அறிமுகம்: தமிழ்விக்கி- தூரன் விழா: தமிழிசைக் கலைஞர்கள்
2023 – இசைக் கலைஞர்கள் அறிமுகம்: தூரன் விருது- இசை நிகழ்வு | எழுத்தாளர் ஜெயமோகன்
————————————————————————————-
2024 – இசை நிகழ்வின் ஒளிப்பதிவு : https://youtu.be/cJf4wCbMr7Y?si=uJoFFoSVM4Q71d_D
2023 – இசை நிகழ்வின் ஒளிப்பதிவு : தமிழ்விக்கி தூரன் விருதுவிழா- இசை
————————————————————————————-
த. நா. சேனாபதி
தமிழ் எழுத்தாளர். மொழிபெயர்ப்பாளர். வங்காள மொழியில் இருந்து தாகூர் உள்ளிட்ட படைப்பாளிகளை மொழியாக்கம் செய்தமைக்காகப் புகழ்பெற்றவர். காந்தியின் நூல்களையும் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நெகிழ்வும் மகிழ்வும்- கடிதங்கள்
மதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம். தங்களது சிறுகதை தொகுப்பில் இருந்த ‘ஆமை‘ என்ற சிறுகதையை படித்தேன். பனை எப்படி ஒரு உயிரை, குடும்பத்து வாழ்வை காத்தது என்பதை அக்கால சமூக, வரலாற்று பின்னணியில் எழுதி இருந்தது வியப்பு.
கொரம்பைக்கான நன்றியை அனக்கன் நினைவுகூர்ந்து சொல்வதாக கதை நகர்கிறது.அன்றைய சமூக பிரச்னைகளிலும் பனை பங்காற்றியுள்ளது. அனக்கன், பனையை அழியாமல் காப்பவர்களுக்கு நன்கொடை தருவதை அன்றைக்கான நினைவுகூரல் என கொள்ளலாம். பனை மரத்தோடு பிரித்துப் பார்க்க முடியாத வாழ்வை கொரம்பையில் குடும்பம் உருவாக்கிக் கொள்கிறது. சாதி மேலாதிக்க சூழலில் வறியவர்கள் பலரும் அப்படியான வாழ்வையே வாழ்ந்திருக்கிறார்கள். இதன் காரணமாகவே, அனக்கன் பனையை ஓரிடத்தில் அனைத்தும் கொடுக்கும் அம்மா என்கிறார்.இக்கதை கூறப்படும்போது, நன்கொடை ஆட்களோடு குடும்ப பார்வையாளர்களாக இருவர் இருக்கிறார்கள். ஒருவர் அனக்கனின் மகன், அடுத்து அவரது பேத்தி. அவர்களது முன்னோரின் உயிர், மானம் காத்த பனை பற்றிய கதை இருவரது மனதையும் பாதிக்கிறது. கதை நிறைவடையும்போது பேத்தி கண்ணீரோடு அமர்ந்திருப்பார். அவரளவு இல்லை. ஆனால், உணர்வுரீதியாக மனதில் பாரமான ஒன்றை உணர முடிந்தது.
நன்றி!
அரசு கார்த்திக்
அன்புள்ள ஜெ
ஆனையில்லா தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒருவாரத்தில் தொடர்ச்சியாக வாசித்தேன். அபாரமான வாசிப்பனுபவம். சிரிப்பும் கொண்டாட்டமும் நெகிழ்வுமான கதைகள். நினைவுகளாலான உலகம் என்றும் தோன்றியது. இல்லை இன்றும் வாழும் ஓர் உலகம் என்றும் தோன்றியது. அந்த குரங்குகள், யானைகள், நாய்கள்… மனிதர்களுடன் பிணைந்த உலகம்.
நன்றி
ராஜ் கண்ணன்
கவிதைகள் இதழ், ஆகஸ்ட்.
ஆகஸ்ட் மாத கவிதைகள் இதழ் பதிவேற்றம் கண்டது. இவ்விதழில் சுகுமாரன் 50 விழாவில் கவிஞர் இசை ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம் ‘சுகுமாரனின் பிந்தைய கவிதைகள்’ இடம்பெற்றுள்ளது. கவிஞர் ஆனந்த்குமாரின் சமீபத்திய தொகுப்பான ‘பிளம்கேக்’ பற்றி மதார் எழுதியுள்ளார். சபரிநாதனின் ‘து.ஆ’ தொகுப்பு குறித்து சொர்ணவேல் ஒரு விமர்சனக் கட்டுரை எழுதியுள்ளார். க.நா.சு கட்டுரை தொடரின் பகுதியாக ‘கம்பனின் காவியக் கட்டுக்கோப்பு’ என்ற கட்டுரையும், ச.துரையின் சில சமீபத்திய கவிதைகளும் இடம் பெற்றுள்ளன.
கவிதைகள் இதழ்What makes Vedanta challenging to learn?

What makes Vedanta challenging to learn? It’s not hard to learn, but we think it is because the general discourse is in a language with many Vedantic technical terms.
What makes Vedanta challenging to learn?
இந்திய தத்துவம் பற்றிய அறிமுகம் கொண்ட எவருக்கும் தெரியும் ஒன்று உண்டு, இந்திய தத்துவம் உலகியல் சார்ந்தது அல்ல. அது பிரபஞ்சம் பிரம்மம் பற்றித்தான் அடிப்படையாகப் பேசுகிறது.
இந்திய தத்துவத்தை ஏன் கற்கவேண்டும்?இணையச்சந்திப்பு- ம.நவீன்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். இந்தக் காலாண்டிற்கான க.நா.சு உரையாடல் அரங்கிற்கு, எழுத்தாளர் ம. நவீன் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து உரையாடத் தயாராகியுள்ளோம். மலேசியாவில் வாழும் படைப்பாளியாக மலேசியா நவீன், பேய்ச்சியின் கர்த்தாவாக பேய்ச்சி நவீன், வல்லினம் இதழ் ஆசிரியராக மதிக்கப்படும் இதழியலாளர், குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் ஒரு பள்ளி ஆசிரியர். ஆதலின், வாசகர்கள் ஒருவரை அழைத்துப் பலரிடம் கேட்கவேண்டிய கேள்விகளை கேட்கக்கூடிய வாய்ப்பைத் தவறவிடுவதில்லை என காத்துக்கொண்டிருக்கிறார்கள்.
சனிக்கிழமை, ஆகஸ்ட் 23, 2025, மாலை 7:00 மணி IST / காலை 8:30 மணி CST
யூட்யூப் நேரலை : https://www.youtube.com/@vishnupuramusa
Zoom நிரல் : https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09
(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)
நிகழ்ச்சி நிரல் :
7:00 PM IST / 8:30 AM CST : வாழ்த்துப்பா
7:05 PM IST / 8:35 AM CST :அறிமுகம் / வரவேற்பு – ஜா. ராஜகோபாலன்
7:10 PM IST / 8:40 AM CST :சிகண்டி நாவலை முன்வைத்து சிறப்பு உரை – மலர்விழி மணியம் 7:20 PM IST/ 8:50 AM CST :சிறுகதைகளை முன்வைத்து சிறப்பு உரை – ஜெகதீஸ் குமார்
7:30 PM IST / 9:00 AM CST : கேள்வி பதில் நேரம்
விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)
தொடர்புக்கு vishnupuramusa@gmail.com / contact@vishnupuramusa.org
August 19, 2025
தமிழ்விக்கி தூரன் விழா 2025 (தொடர்ச்சி)
ஆகஸ்ட் 16 காலை ஆறுமணிக்கு எழுந்து நண்பர்களுடன் டீ குடிக்க நடந்து சென்றேன். மண்டபத்திலேயே டீ இருந்தது, ஆனால் டீயை நடந்து சென்று குடித்து பழகிவிட்டிருக்கிறேன். பேசிக்கொண்டே வந்து சிறிது நேரம் விவாதம் நீண்டபோது காலைச்சாப்பாடு வந்துவிட்டது. குளித்துவிட்டு வந்தேன்.
மொத்தம் நான்கு தங்குமிடங்கள். ராஜ்மகால் மண்டபம், இன்னொரு திருமணமண்டபம், இரண்டு ஈரோட்டு தங்கும் விடுதிகள். நான் எப்போதும் ராஜ்மகாலில்தான் தங்குவது வழக்கம். மண்டபத்தில் இருந்து பங்கேற்பாளர்கள் வர ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நண்பர்கள் வந்திறங்கிக் கொண்டே இருக்க சற்றுநேரத்திலேயே மண்டபம் முழக்கமிடத்தொடங்கியது.
ஒன்பதரை மணிக்கு முதல் அமர்வு. மூத்த தொல்லியலாளர் வசந்த் ஷிண்டேகலந்துகொண்ட அரங்கை நீலி இணைய இதழ் ஆசிரியை ரம்யா ஒருங்கிணைத்தார். ஷிண்டேயை தேவதேவன் கௌரவித்தார். ஹிண்டேஇருபது நிமிட உரைக்குப்பின் வாசகர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
ஷிண்டே தன் உரையில் எப்படி இந்தியா முழுக்க தொல்லியல் தடங்கள் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டு விரிந்துள்ளன என விவரித்தார். வரலாற்றில் பொற்காலமோ இருண்டகாலமோ இல்லை என்னும் வெ.வேதாசலத்தின் கூற்றை ஆதரித்து இந்து மறுமலர்ச்சி நிகழ்ந்தமையால் இந்தியாவின் பொற்காலம் என்று சொல்லப்படும் குப்தர்காலகட்டம் எப்படி வேறொரு கோணத்தில் பின்தங்கியதாகவும் இருந்தது என்றார். இலக்கியப்பதிவுகளின்படியே அவ்வாறு ஊகிக்கப்படுகிறது, அவை அரச சபை புலவர்களின் பதிவுகள். மக்களின் வாழ்க்கை, வணிகம் ஆகியவற்றின் கோணத்தில் வேறொரு சித்திரம் வரக்கூடும் என்றார்.

வரலாற்றுக்கு முந்தைய நகரநாகரீகம் ஹரப்பாவில் கண்டடையப்பட்டமையால் அது சிந்துவெளி நாகரீகம் என அழைக்கப்பட்டது. இன்று கட்ச் பகுதியிலும், பிகார் வரைக்கும்கூட அந்நாகரீகத்தின் தடங்கள் உள்ளன என்று கண்டறியப்பட்டுள்ளது என்று ஷிண்டே சொன்னார். அவருடைய ஆய்வேடுகளில் இருந்தும்கூட விரிவான வினாக்கள் கேட்கப்பட்டன.
மூத்த ஆய்வாளரான சுப்பராயலு அரங்கை தாமரைக்கண்ணன் (குருகு பண்பாட்டு இணைய இதழ்) ஒருங்கிணைத்தார். சுப்ரபாரதி மணியன் அவரை கௌரவித்தார். சுப்பராயலு முதிய வயதில் அத்தனைதூரம் பயணம் செய்து வந்து அவருக்குக் கீழே பணியாற்றியவரான வேதாசலத்தை கௌரவித்தது நிறைவளிக்கும் செயல்.
தொல்லியலாய்வு நிகழும் விதம் பற்றியும், அதன் நெறிகள் பற்றியும் பேசினார். தொல்லியலாய்வுச் செய்திகள் முழுமையான அறிக்கையாக வந்தபின்னரே மக்களிடம் அளிக்கப்படவேண்டும், அதுவும் முறையான அறிக்கையாக. உடனுக்குடன் செய்திகளை அளிக்கத் தொடங்கினால் ஆய்வே தடம் மாறிவிடக்கூடும் என்றார். தமிழகத் தொல்லியலாய்வு குறித்து விரிவான சித்திரத்தை அளித்தார். சோழர் கால கோட்டம் கூற்றம் முதலியவை கிராமஜனநாயக அமைப்புகள் அல்ல, அவை நிலவுடைமையாளர்களின் கூட்டமைப்புகளே என்றார்.
ஒரு பொது வாசகனுக்கு இந்த தொல்லியலாளர்களின் ஒட்டுமொத்தமான அணுகுமுறை வியப்பும் கொஞ்சம் சோர்வும் ஊட்டுவதாக இருந்திருக்கக்கூடும்.வரலாறு சார்ந்து பொதுவாசகர்கள் கொண்டிருக்கும் எந்த பரபரப்பையும், கிளர்ச்சியையும் அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. எளிய கொள்கைகளை ஒப்புக்கொள்ளவில்லை. பெருமிதங்களை மறுத்தார்கள். தரவுகள், அத்தரவுகளைச் சேகரிக்கும் முறைமை ஆகியவற்றை மட்டுமே வலியுறுத்தினார்கள். நீண்ட ஆய்வின் விளைவாக தாங்கள் வந்தடைந்த முடிவுக்கு மாறாக ஒரு கருத்து சுட்டிக்காட்டப்பட்டால் தங்கள் கருத்தை உணர்ச்சிகரமாகப் பாதுகாக்கவில்லை. அந்த கோணத்திலும் பார்க்கலாம், தரவுகள் தேவை என்றே பதில் சொன்னார்கள்.
மதிய உணவுக்குப்பின் இசை நிகழ்வு. மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நாதஸ்வர இசை. அடையார் ஜி. சிலம்பரசன், கும்முடிப்பூண்டி ஆர்.ஜீவா ஆகியோரின் தவில். அவையில் இருந்த ஓரிருவர் முன்னர் ஒரு நாதஸ்வர இசைநிகழ்வை கேட்டிருக்கக்கூடும். ஏனென்றால் இன்று தமிழகத்தில் சென்னையில் அதிகமானவர்கள் வராத ஒரு நிகழ்வைத் தவிர்த்தால் எங்குமே நாதஸ்வர இசைநிகழ்ச்சி நடைபெறுவதில்லை. கோயில்களில் நடைபெற்று வந்த இசைநிகழ்வுகள் வருகையாளர் இல்லாமல் நின்றுவிட்டன. நாதஸ்வரம் மங்கல இசையாக, ஒரு பின்னணி இசையாக மட்டுமே நிகழ்கிறது. அதை எவரும் அமர்ந்து கேட்பதில்லை.
ஆனால் இரண்டுமணிநேர இசைநிகழ்வில் அனைவரும் அசையாமல் இசையில் லயித்து அமர்ந்திருந்தார்கள். பலருக்கு அது வாழ்க்கை முழுக்க நீடிக்கும் ஓர் இசையனுபவத்தின் தொடக்கம் என தோன்றும். ஏனென்றால் நாதஸ்வரம் வெறும் இசை அல்ல. நம் தெய்வங்களுடன், நம் ஆலயங்களுடன், நம் மலைகளுடன், நம் ஆறுகளுடன் இணைந்தது அது. நம் மலைமுடிகள் ஒலியாகுமென்றால், நம் கோபுரங்கள் இசையாகுமென்றால் அதுதான் நாதஸ்வரம்.
மிகச்சிறந்த லயமும் சுதியுமாக அரங்கை நிறைத்தது நாதஸ்வர இசை. ஒருவகையில் அது காலமே அற்றது என்று தோன்றியது. அங்கே அமர்ந்திருக்கையில் இசை எங்கோ நிகழ்வதுபோலிருக்கவில்லை. இசை நம்மைச்சுற்றி சுழித்து அலைகொள்ள நாம் அதற்குள் இருப்பதாகத் தோன்றியது. நாதஸ்வரத்திற்கு மட்டுமே இந்தியாவில் அந்த அனுபவத்தை உருவாக்கும் ஆற்றல் உண்டு. அண்மையில் வியன்னாவில் ஒரு மாபெரும் தேவாலயத்தில் ஆர்கன் இசை பொங்கி பெருகி என்னை அள்ளிச்செல்வதுபோல உணர்ந்தேன் . அதுபோன்ற அனுபவம் இது.
இரட்டை நாதஸ்வரத்தை விழிமூடி அமர்ந்தே கேட்கவேண்டும். அவையிரண்டும் ஒரே வாத்திய இசையாக இணைந்து கேட்கும். அது அறுபடாத ஒரே நீட்சியாக, ஒரே சுழற்சியாக ஒலித்துக்கொண்டே இருக்கும். ஒரு பாடல் முழுக்க ஒரே மூச்சில், ஒரே ஒலியாக நிகழ்வதாகத் தோன்றும். இரு நாதஸ்வரக் கலைஞர்கள் நடுவே ஒத்திசைவு இருக்கவேண்டும். மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் நடுவே அத்தகைய மிகச்சிறந்த ஒத்திசைவு இருந்தது.
தூரனின் அமரத்துவம் வாய்ந்த வரிகள். ‘தொட்டுத் தொட்டு பேசவரான் கண்ணன்’ என்னும் வரிகளைக் கேட்டுவிட்டு வந்தவர்களுக்கு நாதஸ்வரம் அதன் தேவர்களுக்குரிய குரலில் அச்சொற்களைப் பேசுவதைக் கேட்கும் அனுபவம் அமைந்திருக்கும். அந்தக் கொஞ்சலை கேட்கும் பரவசம் அமைந்திருக்கும். மானுடமொழியிலமைந்த வரிகள், மானுடமல்லாத ஏதோ ஒரு குரலால் அவை பாடப்பட்டன.
பின்னர் பேசிக்கொண்டிருந்தோம். நான் சொன்னேன். மிகச்சிறந்த கற்பனை கொண்ட கலைஞர்கள் மயிலை எம்.கார்த்திகேயன், கோளேரி ஜி. வினோத்குமார் இருவரும். உருவாகி வரும் மேதைகள் என்றே சொல்லலாம்.. நாதஸ்வரம் அவர்கள் கையில் இருப்பது தெரியாமல் இருந்தது. அவர்களும் நாதஸ்வரமும் இரண்டாகவே இல்லை. அவர்களின் அகம்சென்ற இடங்களுக்கு இசை சென்றது. ‘நல்ல கலைஞன், ஆனால் தொழில்நுட்ப ரீதியாக சிறப்பானவர் அல்ல’ என்று ஒரு கூற்றே இல்லை. குளிரும் தீ போல அது இல்லாத ஒரு சாத்தியம்.
தொழில்நுட்பத்தின் உச்சத்தில் இருந்தே கலைஞன் தொடங்குகிறான். மயிலை எம்.கார்த்திகேயன் நாதஸ்வரத்தை கையாளும் விதத்தில் இருந்த தேர்ச்சி பெரும்தாகத்துடன் தன் கலைச்சாதனத்தைக் கண்டுகொண்ட கலைஞனுக்குரியது. நாதஸ்வரத்தில் மிக எளிதாக அபஸ்வரத்துளிகள் வரும். மூச்சுக்காக சம்பந்தமே இல்லாத இடத்தில் ஸ்வரம் துண்டுபோடப்படும். அந்த ஒரு குறைகூட இல்லாத முழுமையான ரீங்காரமாக இருந்தது அவர்களின் இசை. மலை ஒன்று வண்டாகி சுழன்றுபறப்பதன் ரீங்காரம் போல.
பீத்தோவனின் சிம்பனி ஒன்றின் தொடக்கத்தை வாசித்தார்கள். அதன்பின் அதை ஒரு கர்நாடக சங்கீத ராகமாக ஆக்கி விரித்து வாசித்துக் காட்டினார்கள். நாதஸ்வரத்தில் மேலையிசையின் நீண்ட நோட்டுகளைக் கேட்பது இனிய அனுபவமாக இருந்தது. சர்ச் ஆர்கனை நினைவூட்டவும் செய்தது. இசைக்கலைஞர்களை மீனாக்ஷி ரவீந்திரன், பத்மாவதி, அருண்மொழி நங்கை ஆகியோர் கௌரவித்தனர்.
மாலை ஆறரை மணிக்கு விருதளிப்பு நிகழ்வு. எங்கள் விழாக்களில் விருது நிகழ்வு இறுதியாக அமைகையில் ஒரு நிறைவான சோர்வு உருவாவதுண்டு. கோவையில் விருதுநிகழ்வுக்காக மட்டும் வரும் புதிய கூட்டம் அந்தச் சோர்வை ஈடுசெய்யும். ஈரோட்டில் அத்தகைய கூட்டம் குறைவு. ஒன்றரைநாட்கள் நீண்ட விவாதங்களின் இறுதியாக மீண்டும் உரைகள்.
அரங்கில் காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்டம் சார்பில் நண்பர் சுரேஷ்குமார் வரைந்த வெ.வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசளிக்கப்பட்டது. வேதாசலத்துக்கான பாராட்டுப் பத்திரத்தை விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் ஈரோடு சார்பில் ஏ.எஸ்.கிருஷ்ணன் வாசித்து அளித்தார். வசந்த் ஷிண்டேயை ரா.செந்தில்குமார் கௌரவித்தார்.வேதாசலத்தை ஜா.ராஜகோபாலன் கௌரவித்தார்.சுப்பராயலுவை தேவதேவன் கௌரவித்தார்.
ஜி.எஸ்.எஸ்.வி. நவின் தொகுத்த வேதாசலத்தைப் பற்றிய வெ.வேதாசலம் மதிப்பீடுகள் வாசிப்புகள் என்னும் நூல் சுப்பராயலுவால் வெளியிடப்பட்டது. சொ. தர்மன் பெற்றுக்கொண்டார். வெ.வேதாசலத்தின் பேட்டி, அவரைப்பற்றிய கட்டுரைகள் அடங்கிய நூல் இது. தமிழ்விக்கியின் பங்களிப்புக்கான விருது அமெரிக்க வாசகரும் நண்பருமான ஜெயஶ்ரீக்கு வழங்கப்பட்டது. அவர் சார்பில் மதுசூதனன் சம்பத் விருதைப் பெற்றுக்கொண்டார். காரைக்குடி மரப்பாச்சி இலக்கியவட்ட நண்பர் பிரகாஷ் வரைந்த வேதாசலத்தின் ஓவியம் அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது.
நான் களைத்திருந்தேன். மேடையேறுவதற்கு சற்றுமுன்புதான் வரலாறுக்கும் இலக்கியத்துக்குமான உறவு, வரலாற்றின் வெவ்வேறு அடுக்குகள் என நண்பர்களுடன் தேநீர்க்கூட விவாதம். அங்கே பெருங்கூட்டம் ஆதலால் கத்தவேண்டியிருந்தது. குரல் தழைய தொடங்குகிறது என்று தெரிந்தாலும் நிறுத்த முடியவில்லை. ஆகவே மேடையில் என் குரல் உடைந்துவிட்டிருந்தது.
விருதுவிழாவுக்குப் பின் ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்லத் தொடங்கினார்கள். இந்நிகழ்வின் இயல்பான இறுதிப்பகுதி. ஒரு சிம்பனியின் முடிவுபோல. களைப்பும் வெறுமையும் நிறைவுமாக இரவுக்குள் சென்றுகொண்டே இருத்தல். நான் தூங்கும்போது இரவு ஒரு மணி கடந்துவிட்டிருந்தது.
மறுநாள் ஈரோட்டிலேயே இருந்தேன். இன்னொரு சிறு நிகழ்வு. கிருஷ்ணன் ஒருங்கிணைக்கும் மாணவர்களுக்கான நிகழ்வில் சான்றிதழ்களை வழங்கினேன். அதன்பின் அவர்களுக்கு தர்க்கபூர்வமாக அறிதல் பற்றி ஒரு வகுப்பை நடத்தினேன்.
ஒவ்வொரு ஆண்டும் நிகழும் ஒரு சடங்கு, பாதி வேடிக்கையாகவும் பாதி உண்மையாகவும். நண்பர் பிரபுதான் இந்த விழாவுக்கான உழைப்பில் பெரும்பகுதியைச் செய்வது வழக்கம். அவருக்கு ஒரு பொன்னாடை போர்த்தி வாழ்த்தினேன். ஈஸ்வர மூர்த்தி பனம்பழம் கொண்டுவந்திருந்தார். அவற்றை சுட்டு நண்பர்களுடன் சாப்பிட்டோம். தென்னைப்பதநீர் ஒரு நண்பர் கொண்டுவந்திருந்தார். அதை குடித்தோம்.
இரவு ஒன்பது மணிக்கு ஈரோட்டில் இருந்து ரயில். சிவசங்கரும் குடும்பமும் அந்த ரயிலில்தான் வந்தனர். யோகேஸ்வரன் வந்து ரயிலேற்றிவிட்டார். நான்குநாட்களின் களைப்பு. படுத்து கண்விழித்தால் நாகர்கோயிலில் ரயில் நின்றுகொண்டிருந்தது. மொத்த ரயிலிலும் என்னைத்தவிர எவருமில்லை.
(நிறைவு)
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்
கா. அப்பாத்துரை
கா.அப்பாத்துரை இதழியலாளர், பொதுஅறிவுச் செய்திகளை எழுதியவர், மொழிபெயர்ப்பாளர். இந்திய மொழியின் இலக்கியங்களை தொடக்ககாலத்திலேயே 0தமிழில் அறிமுகம் செய்தவர். திராவிட இயக்கத்தின் தொடக்க காலகட்டத்தில் அவ்வியக்கக் கருத்துக்களையும் வரலாற்றுப்பார்வையையும் பொது வாசகர்களுக்காக எழுதியவர். தமிழக வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக இதழியல் பாணியில் எழுதிய வரலாற்றெழுத்தாளர். அப்பாத்துரை எழுதிய ‘தென்னாட்டு போர்க்களங்கள்’ என்னும் நூல் வரலாற்றுச் செய்திகளை பொதுவாசகர்களுக்காக தொகுத்து எழுதிய நூல் என்னும் வகையில் குறிப்பிடத்தக்கது.

கட்சியடிமைகள், கடிதம்
அன்புள்ள ஜெ,
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை படித்தேன். வசந்திதேவி பற்றிய அவ்வளவு பெரிய குற்றச்சாட்டை, (மகனிடமே பாலியல் உறவுக்கு முயன்றார் என்றுகூட) அவர் மகனே சொன்னபோது இணையமே வெடிக்கும் என நினைத்தேன். ஒன்றுமே நிகழவில்லை. அப்படியே அமுக்கிவிட்டார்கள். இந்த யோக்கியர்கள் எவரையெல்லாம் எப்படியெல்லாம் வறுத்து எடுத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்பட்டுப் போனேன். உ.ரா.வரதராஜன் அவருடைய மகள் போல ஒரு பெண்ணுக்கு படிப்புக்கு உதவிசெய்ததை கட்சிக்குள் கொச்சையாக்கி, அவரை விசாரணைக்குக் கூப்பிட்டார்கள். அவர் தற்கொலை செய்துகொண்டார். இவர்களுக்கு அறம் என ஒன்றும் இல்லை. வெறும் அடிமைகள். இவர்களின் ஆயுதம் குரூரமான வம்புகள்தான். ஆனால் அந்த வெறியை தலைமை சுட்டிக்காட்டும் எதிரிகள்மேல்தான் ஏவுவார்கள்.
ஆ. முருகேசன்
அன்புள்ள ஜெமோ
கட்சியரசியலும் ஜனநாயக அரசியலும் கட்டுரை வாசித்தேன். திமுக ஜெயித்த சென்ற தேர்தலின்போது தமிழ் எழுத்தாளர்கள் பலர் திமுகக்காரர்களை விட திமுகவாகச் செயல்பட்டார்கள். அவர்களில் பலருக்கு திமுக சில சில்லறைகளை வீசியது. கனவு இல்லம் போன்று சில ஏக்கங்கள் எல்லாருக்கும் இருந்தன. ஆகவே ஒரே ஜால்ரா சத்தம். அண்மையிலே கார்ல் மார்க்ஸ் கணபதி என்ற திமுக ஆதரவாளர் ஸ்டாலினை கொஞ்சம் விமர்சனம் செய்துவிட்டார். இணைய உபி ராணுவம் கிளம்பி அவரை அவதூறால் குளிப்பாட்டிவிட்டார்கள். நீங்கள் அடைந்த வசைகளெல்லாம் அதற்கு முன் ஒன்றுமே இல்லை. அதை உங்கள் நண்பர் இளங்கோவன் முத்தையாவும் (இவரும் திமுகதான) புலம்பி எழுதியிருந்தார். ஏற்கனவே உங்கள் நண்பர் சரவணக் கார்த்திகேயனும் திமுகவை ஆதரித்து அதன் பின் வசை வாங்கினார். கட்சி ஆதரவு என்பது கட்சி அடிமையாக மட்டும்தான் இருக்கமுடியும். அதை இன்றைக்காவது சிலர் உணர்ந்தால் சரி.
ஜெ.ஆர்.
குருதிகோரல்- கலைச்செல்வி
அரசக்குல அன்னையர்கள் பதறுகின்றனர். போர் மூளுமெனில், அது நிலத்துக்கான போர் என்பதால் அதன் முதற்குறியும் பலியும் இளவரசர்களாகதானிருக்க முடியும் என்ற அச்சம் அவர்களை கவ்வியிருந்தது. யுதிஷ்டிரனின் மனைவியும் சிபி நாட்டு இளவரசியுமான தேவிகை நடக்கவிருக்கும் போரில் தன் மகன் களம் படுவான் என்ற நிமித்திகரின் சொல் கேட்டுப் பதறி அவன் நலம் வேண்டி குருஷேத்ரத்தின் வடமேற்கு எல்லையில் அமைந்திருந்த புண்டரீகச் சுனையில் நீராட வருவதில் தொடங்குகிறது நாவல்.
பெண்களின் உலகை அதிகமும் பேசும் நாவல் இது. பொதுவாக ஆண்களின் உலகம் பெண்கள் அறிய முடியாதது. பெண்களின் உலகம் ஆண்கள் அறிய விழையாதது. குடிகளாக பெண்கள் இருப்பதை விட அரசக்குல பெண்களாக இருப்பது சிரமம்தான். நல்வாய்ப்பாக அவர்களின் ஆணவமும் மேட்டிமையும் சாதாரண பெண்களிடமிருந்து அவர்களை பிரித்து விடுவதால் குடிப்பெண்களின் இயல்பான, அதிகம் பாசாங்குகளற்ற வாழ்வை அரசியர்களால் அணுகி அறிய முடிவதில்லை. அவர்கள் மகளென ஒற்றை வாரிசாகப் பிறந்தாலும் குழந்தையிலிருந்து குமரியென்றாகும் தருணத்தில் மனைவியென பலரில் ஒருவராக மறுநாடு புகுந்து எப்போதோ கிடைக்கும் கணவனின் அன்புக்காக காத்திருக்க வேண்டும். அதிலும் அவர்களை பூச்சிகளைக் கவ்வும் பல்லிகளைப் போல கவர்ந்துக் கொண்டு போகவும் அரசர்களுக்கு அதிகாரமுண்டு. அதற்கு அரசர்களின் வயதோ இளவரசியரின் விருப்பமோ பொருட்டே அல்ல. அரசியென ஆன பின்னர் அவர்களின் அரிதாரங்களில் புன்னகையும் சேர்ந்துக் கொண்டுவிடும். அதிகாரம், அது தொலைந்து விட கூடாத அச்சம், அதனை நிகழ்த்தித் தரும் சூழ்ச்சி, அது கிளர்த்தும் வஞ்சம் என எதிர்உணர்வுகளுடன் வாழ வேண்டியிருக்கும். அரண்மனையின் முறைமைக்குள் அடங்கவியலாது தவித்து திகைத்து சொல்லிழந்து பின்னர் பிறர் செய்வதை போன்று செய்வதற்கு பழகி, வெற்றுச் சடங்குகள், பொருளற்ற சொற்கள்., மீள மீள நிகழும் நீண்ட பகல்கள், களைந்து களைத்து உறங்கிப் போகும் குறுகிய இரவுகள் என்று அவர்களின் வாழ்வு சாணவண்டு நகர்த்திச் செல்லும் சாண உருண்டையென நகர்ந்து முடிந்து விடும். அவர்களை சிறுதாளம் கூட தப்பி விட கூடாத இசைக்கருவி, சிறு சுருதி கூட மாறி விட கூடாத பாடல் எனலாம். கருத்திருந்தும் நாவிழந்து, மொழியறிந்தும் சொற்களற்று, சிந்தனையிருந்தும் செயலற்று தேவயானி, திரௌபதி போன்று எங்கோ முளைக்கும் சில விதிவிலக்குகள் தவிர்த்து அழுத்தம் நிறைந்த வாழ்வில் குரல் என்ற ஒன்றேயிருக்காத உயிர்ப்பதுமைகள் அவர்கள். ஆனால் நிகழவிருப்பதோ அசாதாரணமான அசம்பாவிதம். அது கொண்டு வரவிருக்கும் சாவு, தாங்கள் கொடுக்க வேண்டிய காவு என்னவென்பதை அவர்கள் அறிந்திருந்தனர். மங்களத்தை இழப்பதை விட உதிரத்தை இழப்பதே அதிக தவிப்பு அவர்களுக்கு.
குருஷேத்திரம் என்ற தொன்மையான போர்க்களத்தின் வர்ணனையே பயமுறுத்துகிறது. முட்புதர்கள், செம்மண்புற்றுகள், மரப்பட்டைகளில் பரவியேறிய செம்புற்றுப்பரப்பு, என்றோ இறந்த வீரர்களின் எலும்புகள், மண்டையோடுகள் என ஈரத்தின், இதயத்தின், ஆக்கத்தின், அறத்தின் வாசனையற்ற குண்டும் குழியுமான வெயிலாலான அந்த சிவந்த பூமி தன் நிலமெங்கும் முளைத்தெழுந்த கைகளோடு பலிக் கோரிக் காத்திருக்க, அதன் கோரிக்கையை நிறைவேற்ற ஆண்கள் தங்களால் இயன்றதை முயன்றுக் கொண்டிருந்தனர்.
திருதராஷ்டிடிரர் உணர்ச்சிகளாலும் பெருங்கருணையாலும் ஆளபட்டவர் மட்டுமன்று, சூட்சமக்கணக்குகளும் சூழ்ச்சியும் நிரம்பியரும் கூட. நிலம் மொத்தமும் தன் மகன் வசமிருப்பது அவருக்கு ஏற்புடையதே. அவர் மக்கள் நலம் நாடும் பேரரசரன்று. தம் மக்களுடன் நேருக்குநேர் போரிடுவதோ அவர்களை கொல்லுவதோ கூடாதென்று தன் மகனறியாது சஞ்சயன் மூலம் பாண்டவர்களுக்கு துாது அனுப்பி தன் வாரிசுகளை பாதுகாத்துக் கொள்ள விழையும் இயல்பான தகப்பன். வேள்விப்பழிக்கு தேர்வான அந்தண இளைஞன் உளம் விழைந்தாலும் உதடுகளால் மறுப்பேதும் சொல்ல முடியாததை போன்று பாண்டவர்களால் பெரியதந்தையின் வேண்டுகோளை மறுக்க முடியாது. அப்பேரரசரின் விழைவும் அதுவே.
புண்டரீக அன்னையிடம் முறையிட்டதோடன்றி தேவகி பூரிசிரவஸ் மூலம் பானுமதிக்கும் அசலைக்கும் அங்கரின் அரசி விருஷாலிக்கும் போர் வேண்டா துாது அனுப்புகிறாள். அதோடு உபப்பிலாவ்யத்தில் தங்கியிருக்கும் திரௌபதியிடம் வருகிறாள். தன்னிடம் காரசாரமான விவாதித்த தேவகியின் வாதத்திலிருக்கும் உண்மையும் அன்னைமையும் திரௌபதியின் தாய்மை என்ற மெல்லுணர்வை வெளிக்கொணர, அதனை எடுத்துரைக்க வேண்டி தேவகியோடு அஸ்தினபுரிக்குச் செல்ல திட்டமிடுகிறாள். இளமைகாலம் வேகத்தை முன் வைக்கும். முதுமை விவேகத்தை முன்னிருத்தும். அரசியானவள், அரசியென்றே வளர்க்கப்பட்டவள், அதிகாரத்தை பிடுங்கி அவமானப்படுத்தப்பட்டு நாட்டை விட்டே துரத்தப்பட்டவள் என்ற நிலையிலும் எந்த முறைமையும் இன்றி அஸ்தினபுரி செல்லுமளவுக்கு இப்போது அவளிடம் விவேகமிருந்தது. ஆனால் யுதிஷ்டிரரோ இளைய யாதவரின் வருகையை காரணம் காட்டி மனைவியின் பயணத்தை ஒத்திப் போடுகிறார்.
சகுனியுமே எண்ணமற்றவராக மாறியிருந்தார். அவரின் வஞ்சமுமே நீர்மையிழந்திருந்தது. போரின் விளைவுகளை அறிய முடிந்த அவர் போர் நிகழ்வதற்குள் மைந்தர் அனைவருக்கும் மணம் செய்வித்து விட வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதன் உட்பொருளை பெண்கள் அறியாதவர்கள் அல்ல. பானுமதியை விட துச்சாதனனின் மனைவி அசலை வேகமானவள். தேவகியின் துாது அவர்களிருவரையும் சென்றடைய அதனை ஏந்திக் கொண்டு மருமகள்களான அத்தமக்கையர் பேரரசி காந்தாரியிடம் செல்கின்றனர். காந்தாரிக்கு கற்சிலையாகி விட்ட கணவன் மீதும் அறமற்ற மகன் மீதும் நம்பிக்கை இல்லை. அவள் பீஷ்மரிடம் செல்கிறாள். பீஷ்மர் இருசாரராலும் எவ்வகையிலும் பொருட்படுத்தப்படாத ஒரு முதியவன் மட்டுமே நான் என கைவிரித்து விட காந்தாரியை போல அசலை அவரை விட்டு விடுவதாக இல்லை. உள்ளத்தின் கேள்வியை எதிர்க் கொள்வதை விட அதிலிருந்து ஒழிந்து செல்வதே கடந்துச் செல்வது என்ற வழிமுறையை கைக்கொண்டு விட்ட அவர் இப்போதும் உண்மையிலிருந்து ஒழிந்து செல்லும் பொருட்டே இத்தருணத்தில் எடுக்க வேண்டிய முடிவை தவிர்ப்பதாக அவரை கூறு போடுகிறாள் அசலை. அம்பைக்குப் பிறகு அவரை நேர்குறுக்காக வகுப்பவள் அவளே. அவரோ வழக்கம்போல தந்தைக்கும் சகுனிக்கும் தான் அளித்தச் சொல்லை முன்வைத்து துரியோதனனின் அரியணை அமர்வை நியாயப்படுத்தி விட்டு எந்நிலையிலும் அஸ்தினபுரியின் முடிக்குக் காவலாக படைக்கலமேந்துவேன் என்ற தனது ஒருதலைப்பட்ட நியாயத்தை முன் வைத்து விட்டு சென்று விடுகிறார். பெண்களின் துாதுக்குழு துரோணர், கிருபரிடம் செல்ல, அவர்கள் தாம் போரில் பங்கெடுக்கவில்லையெனில், இறப்பதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்கின்றனர்.
பீஷ்மரின் முடிவு தங்களுக்கு சாதகமாக இருக்க வேண்டுமென்ற அசலையின் பரிதவிப்பு அது அங்ஙனம் இருக்கப் போவதில்லை என்ற உணர்ந்த பிறகு ஏற்கனவே அறிந்து விட்ட ஒன்றை வெறும் சொற்களெழுப்பும் ஒலிகளாக கேட்டுக் கொள்கின்றன. அரசியரில் பானுமதி, அசலை, தாரை, துச்சளை பலந்தரை, கரேணுமதி, பிந்துமதி, விஜயை, தேவிகை, சுபத்தரை, விருஷாலி, சுப்ரியை, தாரை போன்ற பல பெண்களின் ஆளுமை வெளிப்படுகிறது. கலிங்க இளவரசிகளில் சுதர்சனை தவிர்த்து சேதி நாட்டுக்கு வாழ்க்கைப்பட்டு போன சுனந்தை, சுனிதை போல கர்ணனின் மனைவி சுப்ரியையும் தன் கருப்பை ஷத்திரிய இரத்தத்தை சுமக்கவியலாது போனதை எண்ணி கணவரை வெறுப்பவள். தேவிகை, விஜயை போர் மூளாதிருக்க எண்ணுகின்றனர். பிந்துமதிக்கும் கரேணுமதிக்கும் அந்த எண்ணமில்லை. பலந்தரை விதிவசத்தால் பீமனிடம் அகப்பட்டு கொண்டவள். அவளுக்கும் பீமனுக்குமான ஆழ்மனப்பிடிப்பை இளையயாதவர் வெளிக்கொண்டு வருகிறார். பாரதவர்ஷத்திலேயே அதிக தீயூழ் நிறைந்தவள் காந்தாரியாகதான் இருக்க முடியும் இவற்றோடு கணவரான திருதரை அணுகுவதற்கு பிரகதியை சிபாரிசு கோரும் அவலம் வேறு.
துரியோதனனுக்கு அப்பெருநிலத்தை தானே ஆள வேண்டும் என்ற எண்ணம் உறுதிப்பட்டதன் பின்னணியில் பல காரணங்கள் இருக்கலாம். அதிலொன்று குந்தி. தன் மைந்தர்களுக்கு நிலவிழைவை உண்டாக்குவதால் ஏற்பட்ட கசப்பு என்பதை விட கர்ணன் அவன் தோழன் என்பதே அவள் மீதான வஞ்சத்தின் பெருங்காரணமாக இருக்க முடியும். கர்ணன் யாரென அறிவான் அவன். அதனாலேயே குந்தியை வெறுப்பவன். ஷத்திரிய பேரவையில் குந்தியை அவமானப்படுத்துகிறான். கணவர் அறியாமல் விரும்பியவருடன் சென்று கருத்தரித்த மைந்தர்களே பாண்டவர்கள் என்கிறான். அவ்வண்ணம் இல்லையெனில் அவைக்கு வந்து தன் கற்புக்கு அவள் சான்றுரைக்கட்டும். மைந்தர்களை அளித்தவர்களின் பெயர்களை கூறட்டும் என்கிறான். ஆனால் வேள்விக் காவலனான தனதருகே வேள்வித் துணைவனாக கர்ணன் அமர முடியாமல் அவமானத்தோடு வெளியேறும்போது அவன் அமைதிக் காத்தது ஏனோ? இறுதியில் அவ்விடம் ஜெயத்ரதனுக்கு கிடைக்கிறது.
குந்தியின் மீதான துரியனின் குற்றச்சாட்டைக் கேட்டு விதுரர் மயங்கி விழுகிறார். இளையயாதவர் கண்கலங்குகிறார். பீஷ்மரோ ஆசிரியர்களோ வாய் திறக்கவில்லை. யாரை குறைக்கூறுவது? சத்யவதியின் மீது காமம் கொண்ட சாந்தனுவையா? அதன்பொருட்டு பிரம்மசர்யம் மேற்கொண்டு வாரிசுகளற்று போன நிலையில் தன் இளவலுக்காக காசியின் இளவரசிகளை முறைமை தவறி கவர்ந்து வந்த பீஷ்மரையா? வாரிசுக்காக அப்பெண்களை பயன்படுத்திக் கொண்ட சத்யவதியையா? சொந்த நாடான காசியிலும் காதல் கொண்ட சால்வனிடமும் அதை தொடர்ந்து மலர காத்திருந்த தன்வாழ்வை சிறுமொட்டென பறித்தெறிந்து விட்டு போன பீஷ்மரிடம் தன் மனம் சென்றிருப்பதை அறிந்து திகைத்து, பின், தன் சுயம் கொண்ட உயர்வனைத்தையும் தொலைந்து பணிந்து இரந்து நின்ற அம்பையை புறக்கணித்த பீஷ்மரையா? எல்லாமுமே என்றாலும் பீஷ்மர் பேச வேண்டிய நேரத்தில் அமைதி காப்பதும் செய்ய வேண்டியவற்றை செய்யாது வாளாவிருப்பதும் வேண்டத்தகாததை நிறைவேற்றிக் காட்டுவதுமென பெருங்குற்றங்களை இழைத்துக் கொண்டேயிருக்கிறார். அவர்தான் அம்பையின் சாபம் அஸ்தினபுரியில் நிழலென படர்வதற்கு பொறுப்பு. பானுமதி கூட அம்பையை போல காசிநாட்டு இளவரசிதான். பாஞ்சாலிக்கு துகில் அளித்த பானுமதியின் மனம் இப்போது கணவன் வசம் சென்றிருந்தது. ஒருவேளை அது அவளுள் அம்பை செய்திருக்கும் மாயமா?
தேவகிக்கும் பால்ஹீகனுக்கும் நடக்கும் சந்திப்பு கதையை அங்கேயே விட்டு விட்டு அவர்களை தொடர வேண்டுமென எண்ண வைக்கிறது. மனஅணுக்கம் கொண்ட பழையவர்களின் புதிய சந்திப்பு. கலிங்கம், வங்கம், பௌண்டரம், கூர்ஜரம், மாளவம், அவந்தி, காமரூபம், அயோத்தி, கோசலம், விதர்ப்பம் போன்ற நாடுகளுக்கு மன்னர்பொருட்டு துாது சென்று அவர்களை கௌரவர் தரப்புக்கு கொண்டு வந்த வீரன் பூரிசிரவஸ். அவளோ யுதிஷ்டிரனின் மனைவி யௌதேயனின் தாய். அவையெல்லாம் பின் நகர்ந்து விடுகிறது. இப்போது அவள் தன் தோற்றம், வார்த்தைகள் என ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்தும் பெண். அவன் அவளை விரும்பும் ஆண். அனைத்தும் நீதான் என உளம் அணுக்கம் கொண்டு நெருங்கி விடும் தருணம் அது. உரிமை எடுத்துக் கொள்ளும். ஒருமையில் பேசத் தோன்றும். பேசும்போதே தெரியாமல் பட்டது போல காமமற்று அங்கத்தை எங்காவது தொட்டு விடத் துடிக்கும். வார்த்தை விடுக்கும் மொழியின் தாளக்கட்டுக்குள் சுதி சேராமல் கண்களின் மொழி படபடத்துத் தவிக்கும். அதை மறைக்க உதடு வார்த்தைகளுக்கு அதிகம் சப்தம் சேர்க்கும். வார்த்தைகள் அர்த்தமற்று விழும். ஒருவரையொருவர் சுமந்து கனத்த இதயத்தோடும் உடல் முழுக்க கண்களோடும் பிரிந்து நகர்கையில் கால்கள் தளர, கண்கள் இருள, எப்போது சந்திப்போம்…? என்ற மனதின் கேள்வியை கவனம்.. கவனம் என்று எங்கோ பின்னால் கிடந்த அறிவு ஓடி வந்து கைத்தலம் பற்றி பகர, இனி எப்போதும் வேண்டாம் என்று பதறி நகர்வர். அதெல்லாமே நிகழ்கிறது இருவருக்குள்ளும். இன்னொரு சுவாரஸ்யமான இணை கர்ணனின் துணைவி சுப்ரியையும் துச்சளையின் கணவன் ஜெயத்ரதனும். அடுத்து துச்சளை, பூரிசிரவஸ். பானுமதி கூட கூட தான் ஒளித்து பாதுகாக்கும் மயிற்பீலியை எடுத்துப் பார்த்துக் கொள்கிறாள்.
பாண்டவர்களுக்கு தனியொரு நாடோ மக்களோ படைகளோ இல்லை. பெண் எடுத்த வீட்டின் வழியே வந்து சேர்ந்த நிலத்தில் அரசரென வீற்றிருக்க வேண்டிய காலியான வாசனைத் திரவிய குப்பி. காலம் நீர்க்க வைத்த வஞ்சக்கணக்குகளை திரட்டி எடுக்க வேண்டிய கட்டாயம் வேறு. கௌரவர்களோ புகழின் உச்சியில் இருந்தனர். சத்யவதியின் ஆட்சி காலத்தில் பலவீனமான வாரிசுகளுடன் நுண்வடிவில் யயாதியையும் ஹஸ்தியையும் குருவையும் வைத்துக் கொண்டு முதிய இளைஞனான பீஷ்மனுடன் தள்ளாடிக் கொண்டிருந்த அஸ்தினபுரியில் இப்போதோ நினைவுக் கொள்ளவியலாத அளவுக்கு வாரிசுகள். எங்கெங்கெங்கிலோ இருந்து மணம் செய்வித்து அழைத்து வரப்பட்ட பெண்கள். அஸ்தினபுரி என்பது பெயர் மட்டுமல்ல. பெருமையும் கூட. முன்னோர்களின் வீரம் செறிந்த அதன் பழமையும் அதன் நீட்சியாக அமர்ந்திருக்கும் பீஷ்மர், துரோணர், கிருபர், விதுரர் என்று பெருமக்களின் கூட்டமும். ஷத்திர குல பாரம்பரியமும் அதன் பொருட்டு அவ்வணியில் திரண்டு நிற்கும் ஷத்திரிய நாடுகளும் பின்னும் கர்ணன் என்னும் பலமும் துரியோதனன் துச்சாதனன் என்னும் அதிகாரத்துடன் கூடிய துடிப்பும் நிமிர்வும் திமிறி நிற்க அதற்கு நிகரென வைக்க குந்தியின் வெஞ்சினம் தவிர பாண்டவர்களுக்கு வேறேதுமில்லை. ஆனால் இளையயாதவர் என்ற பொருளை தராசிலிடும்போது அதற்கு நிகர் வைக்கவியலாது போய்விடும்.
குந்தியும் கணிகரும் உயிர்ப்புடன் இருந்தனர். கணிகர் உசுப்பி விட்ட குன்று பெருமலையென கலிதேவனின் கருணையுடன் இப்போது நிமிர்ந்து நிற்கிறது. குந்தியும் மைந்தர்களை உசுப்புகிறாள். ஒருவேளை போர் நின்று விடுமா? பயம் சூழ்கிறது அவளுள். மைந்தர்கள் நெஞ்சம் இளகி விடுவரோ? எது அவளை இயக்குகிறது? அவளேதும் முடி சூடி ஆள போவதில்லை. அதிகபட்சம் போனால் ராஜமாதா. அதுவொன்றும் அவள் அடையாத இடமல்ல. அவள் தன்னிலை இழந்து மகன்களிடம் அவர்கள் பாண்டுவின் குருதியினர் அல்ல என்ற தன் ரகசியங்களையெல்லாம் கவிழ்த்துக் கொட்டுகிறாள். விராடர் மகற்கொடையாக கொடுத்த கையளவு மண்ணில் அரியணை அமைத்து பொய்முடியும் வெறுங்கோலும் கொண்டு அமர்ந்திருக்கும் ஒவ்வொரு தருணமும் பாண்டுவின் முகத்தில் காறி உமிழ்கிறாய் என்ற அவளின் வார்த்தை தெறிப்பும் ஆழம் தொடும் வீச்சும் அதிகம். தன்னுள்ளிருக்கும் தவிப்பென்பது பாண்டுவின் இயலாமை எழுப்பிய வஞ்சினமே. அது ஒருபோதும் சொல்லென திரளாது உளபரிமாற்றத்தின் வழி உணர்ந்த கணவனின் கனவு. அது சிதைந்து விடாதிருக்க எத்தனை சிதைவுகளையும் உண்டாக்கலாம். அவர் கொடிவழிகள் பாரதவர்ஷத்தை ஆள வேண்டும். பாண்டு என்ற பெயர் புவியில் நிலைத்திருக்க வேண்டும். இதுவே தான் செய்துக் கொண்டிருக்கும் தவம் என்கிறாள். இது தவமா? தந்திரமா? அல்லது அனைத்துமே பாசாங்கா? யாராறிவார் யாருள்ளத்தை?
அங்கத்தை கர்ணனின் மைந்தன் விருஷசேனன் ஆள அங்கரின் உடலை மதுவும் உள்ளத்தை அஸ்தினபுரி அவையில் பாஞ்சாலியை சிறுமை செய்த வார்த்தைகளும் ஆண்டுக் கொண்டிருந்தன. அதன் பொருட்டு தன்னை மதுவில் எரித்தழிந்துக் கொண்டிருந்த கர்ணனை இளைய கௌரவர்களான சுஜாதன், விகர்ணன் அவன் மனைவி தாரை, குண்டாசி ஆகியோர் அஸ்தினபுரி அழைத்து வருகின்றனர்.
போரை விரும்புவோருக்கும் விரும்பாதோருக்கு அவரவருக்கான நியாயம் இருந்தாலும் எல்லாவற்றையும் மீறி போருக்கான தேவையும் இருந்தது. இளையயாதவர் தனது அரசுரிமையை மகன் மீது இறக்கி வைத்து விட்டு தானே துாதுவனாக சாத்யகியுடன் அஸ்தினபுரி கிளம்புகிறார். திருதராஷ்டிரர் சஞ்சயன் மூலம் உபப்பிலாவ்யத்திற்கு அனுப்பிய துாதை பற்றி கூறி விட்டு தன் முதற்செய்தியை எடுத்து வைக்கிறார். அவரின் இந்த முதற்செய்தி அறவுணர்வும் மென்னியல்பும் உணர்வு வயப்படுபவர்களுக்கும் போதுமானதொன்று. ஆனால் துரியோதனன் கல்லென அமர்ந்திருக்க விகர்ணன் குரலெழுப்ப, திருதர் உணர்வுகளில் பொங்கி வழிய இளையயாதவர் எங்கோ எதுவோ எவருக்கோ எதிலோ என்னவோ நடப்பதுபோல மோனத்தில் ஆழ்ந்து விட, கணிகர் இருக்கும்போது கவலையெதற்கு? கூடி வரும் கருமேகங்களை காற்று கலைப்பதுபோல எங்காவது கருணைமழை பொழிந்து விடுமோ என்று வஞ்சக்காற்றை வீசிக் கொண்டே இருப்பவர் அவர். ஒரு துறும்பை கூட பாண்டவர்களுக்கு விட்டு தர முடியாது என்கிறான் துரியோதனன்.
துரியோதரர்கள் போரை நோக்கி நெடுந்தொலைவு சென்று விட்டிருந்தனர். அதுதானே இளையயாதவர் விழைவதும். துச்சளை கலிதேவனுக்கு தன்னை ஒப்புக் கொடுக்கவிருக்கும் தமையனுக்கு அறுதியும் இறுதியுமான அறம் போதிக்கிறாள். ஆனால் துரியோதனன் கைகளில் எதுவுமில்லை. அவன் எடுப்பார் கைப்பிள்ளை. எதுவாகிலும் அதை மிச்சமின்றி செய்ய வேண்டும். அதுவே நிறைவு, அது அழிவென்றாலும். அதையே தேர்கிறான். அது மீள வழியில்லாத பாதை. இறப்பு. மிரள வைக்கிறது கலி பூசை. அவன் எதை தேர்ந்தெடுக்க வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்திருந்தான். இனி காலம் அவனை சுமந்துக் கொள்ளும்.
இளைய யாதவர் துள்ளல், துடிப்புகளற்ற அமானுடம் கொள்ளாத மானுடனாக இந்நாவலில் வருகிறார். பாரதவர்ஷத்தின் ஷத்ரியப்பேரவை கூடுகிறது. இப்போது அவர் ஐந்து கிராமங்களாவது கொடுக்க வேண்டும் என்ற துாதை அள்ளிக் கொண்டு வருகிறார் பாண்டுவின் மக்களிடமிருந்து. அது கூட அவர் எடுத்த முடிவே. குழம்பிக் கிடந்தார் தருமர். பீமருக்கு தோள்கள் பரபரத்தன. ஆயினும் அவர் இரண்டாமானவரே. தோள் அளிக்கலாம், ஆனால் முடிவுகளை அவர் எடுக்க முடியாது. மற்றவர்கள் எதிலுமே இல்லாதிருந்தனர், திரௌபதியைப் போல, அங்கரைப் போல. ஒருவாறு ஷத்திரியக்கூட்டு தகைந்து வரும் நிலையில் இளையயாதவர் அந்தணர்களை நோக்கி அன்று வேதமந்திரமுரைத்து தொடங்கிய அவையில் பனிரெண்டாண்டுகள் கானுறைவும் ஓராண்டு விழி மறைவும் இயற்றி மீண்டு வந்தால் விட்டுச் சென்றவை அவ்வண்ணமே திருப்பி அளிக்கப்படும் என்று கூறப்பட்டது இப்போது மீறப்படுகிறது எனில், வேதச்சொல் முறிக்கப்பட்டு விட்டதாக தானே அர்த்தமாகிறது என்று அவையை குழப்பமாக்க, துரியோதனன் குந்தியை அவைக்கிழுத்து பாண்டவர்களை குடியிலிகளாக்கி, ஆகவே தன்னால் வேதச்சொல் காக்கப்பட்டதென்றே கொள்க என்றுரைக்க, யாதவர் இறைஞ்சி நிற்க, துரியோதனன் மறுத்து விடுகிறான். போர் நடக்க வேண்டும். நடந்தேயாக வேண்டும். கை மீறி செல்லும்போது ஆட்டத்தை கலைத்து விட்டு புதிதாக தொடங்க வேண்டும்.
அஸ்தினபுரி போர் அறிவிப்பு செய்து விட்ட நிலையில் அங்கு நடந்த புருஷமேதயாகத்தில் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் என்ற முறையில் இளையயாதவர் கலந்துக் கொள்கிறார். ஞானசபை விவாதங்கள் நடக்கின்றன. சபையில் கர்ணன் வழமைபோல சிறுமைப்படுத்தப்படுகிறான். மீண்டும் இறைஞ்சுகிறார் யாதவர். ஞான விவாதத்தில் நான் சொன்ன சொற்களுக்கான பரிசிலாக பாண்டவர்களுக்கு ஐந்து இல்லங்களையாவது கொடு என்கிறார். இரந்து நின்ற கரங்களில் வெறுமை வந்து விழுகிறது. அஸ்தினபுரியின் எளியகுடிகளாக கூட ஏற்க முடியாது என்கிறான் துரியோதனன்.
தன் மைந்தரையோ பேரனையோ போர்களத்தில் எதிர்கொள்வதோ கொல்வதோ செய்யலாகாது என்று பாண்டுவின் மக்களுக்கு தான் இட்டிருந்த ஆணையை திருதர் விலக்கிக் கொள்கிறார். அது இளையயாதவர் வழியாக சொல்லி அனுப்பப்படுகிறது. போரில் நேர் நிற்றலுக்கான தடைகள் இப்போது விலகி விட்டன. இனி சகோதரர்கள் களம் காண வேண்டியது மட்டுமே மீதம். வஞ்சனை மேகங்கள் குருஷேத்திரத்தில் கவிய, கொட்டவிருக்கும் குருதி மழைக்கான முன்னறிவிப்பாக குருதிச்சாரல் வீச தொடங்குகிறது. இயற்கையை, நிலப்பரப்பை, அந்நாளைய வரலாற்றை, புவியியலை, தத்துவத்தை, சமூக அமைப்பை, பண்பாட்டுத் தளத்தை அறியாமல் இதிகாசத்தை எழுத முடியாது. அவ்வகையிலேயே இந்நாவலும் தகைந்து வருகிறது.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 834 followers
