தூரன் விழா- கடிதம்

அன்பின் ஜெ,https://m.youtube.com/playlist?list=PLp0BjDE_P97gzJWXaoLfauD0vZqk-Dlto
திருப்பூரில்,அறம் அறக்கட்டளை விழாவில் சுதந்திரம் என்றால் என்ன? என்னும் தலைப்பினால் தாங்கள் ஆற்றிய உரை பத்து ஆண்டுகளுக்கு முன் கேட்டேன். நான் கேட்ட உரைகளில் மகத்தான ஒன்று. தற்போது நீங்கள் ஆற்றும் உரைகள் எல்லாம் உங்கள் தத்துவத்தின் மீது ஆழ்ந்த ஈடுபாடு உள்ளவர்களுக்கும் தங்கள் கனவுகளை தொடர்பவர்களுக்குமானது. இதனை கேட்பவர்கள் ‘ஒன்னுமே புரியல‘ என்பர்கள். இவையெல்லாம் நீணட கனவுகளும் தொடர் வாசிப்பும் உள்ள்வர்களுக்கானது. இன்று விக்கிதூரன் விழாவில் அனைத்து நிகழ்வுகளும் அந்த உரையின் தரிசன தொடர்ச்சியாகவே காணமுடிகிறது. வெற்று பெருமிதத்தின் மேல் நிற்பவர்களுக்கு உண்மையான பெருமிதம் என்ன என்று முகத்தில் அறைந்தாற்ப்போல் முன்வைப்பது. இந்த உரை எளியஆனால் பல திறப்புகளை அளித்த மகத்தான உரை. எளிய புரிதல்களையும், ஆரம்ப கட்ட வாசகனுக்கு நம் வரலாறு, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை அறிய அதன் வாசல்களை திறந்துவிடும் திறவுகோல். தூரன் விருது விழா அமர்வுகள் எல்லாவற்றிற்குமான தொடக்கப்புள்ளி. இந்த உரையில் பேசப்பட்ட பாறை ஓவியங்கள், பெருங்கற்கால நாகரிகம், கரிக்கியூர் ஓவியங்கள், நீலி இன்றைய தூரன் விழாவின் அங்கங்களாகிவிட்டன.
நான் இந்த உரையை வர்தா புயல் காலத்திலும், மழை வெள்ளம் புகுந்த காலத்திலும் அலுவகத்தில் தங்கி வேளை செய்தபோதுபலருக்கு காண்பித்து உரையாடியிருக்கிறேன்(அலுவலக கணிணியில்). கேட்ட அனைவரும் இந்த உரைக்கு எதிராக பேசியதில்லை. தூரன் விழாவில் நிகழும் அனைத்து நிகழ்வுகளும் நமது வரலாற்றை, பண்பாட்டை அறிய உதவுகிறது. இவ்வுரையு ஒவ்வொரு பள்ளியிலும் இவ்வுரையை சுதந்திரதினத்தில் காண்பிக்க வேண்டும். இன்று எம்.கே. சானுவின் அஞ்சலி குறிப்பை வாசித்தேன். உங்கள் உரைகள் ஏன் அவ்வளவு செரிவானதாக இருக்கிறது என்று. ” மொத்த உரையின் மையக்கருத்து பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் படிப்படியாக நிறைவடைந்து ஒன்றையொன்று நிரப்புபவை. நான் சானு மாஸ்டரின் உரையைத்தான் எனக்கான முன்மாதிரியாகக் கொண்டிருக்கிறேன்“. நாங்கள் அனைவரும் நல்லூழ் கொண்டவர்கள் அவர்கள் அனைவரையும் உங்களில் காண்கிறோம்.
இப்போதெல்லாம் எல்லா விழாக்களிலும்கேரளாவின் சண்ட மேளம் ஒலிக்கத் துவங்கியிருக்கிறது. கோவில் திருவிழாக்களிலெல்லாம் சண்ட மேளமும் தவிலும் சேர்ந்தே இசைக்கப்படுவது கடும் ஒவ்வாமையை அளிக்கிறது. நான் அங்கிருந்து ஓடிவிடுவேன். அதனை ராஜ மேளம் என்பார்கள். நீங்கள்தான் எழுத வேண்டும் எது சரியென்று.
எனக்கு எப்போதும் நாதஸ்வர இசை மனது நெருக்கமானது. நான் பிறந்து வளர்ந்தது வால்பாறையில். ஊரில் பொங்கல் திருவிழா நான்கு நாட்கள் நிகழும். மாரியம்மனுக்கு உகந்ததென்று கரகாட்டம் நான்கு நாட்களும் நடக்கும்தவில், நாதஸ்வரம்இசைப்பவர்கள் உடன் இருப்பார்கள். ஆட்டம் நன்றாக இல்லாவிட்டாலும், நாதஸ்வரம் நன்றாக அமைந்தால் இசைக்கச் சொல்லி ரசிப்பார்கள். சுடலை அங்கு பிரதான தெய்வம். சக்தி வரவழைக்க தவில், நாதஸ்வரம் வேண்டும். குறிப்பாக ஒத்தையடி வேண்டும், சாமியே கேட்கும் ‘அடியப்பா‘ என்று. ஒருமுறை வந்த தவில் இசைக்கலைஞருக்கு ஒத்தையடி தெரியவில்லை. எங்களூர்காரர் கணபதி தவிலை வாங்கி அடிக்க ஆரம்பித்தார். இவர்கள் எவருமே முறையாக இசை பயின்றவர் அல்லர்.
இப்போதுதூரன் விழாவில் இசை பயின்ற கலைஞர்கள் வாசிக்கும் இசை நிகழ்வு அலாதியானது. முன்பே வாசிக்கப்படும் பாடல்களை பகிர்ந்து அவற்றை கேட்டுவிட்டு வரச்செய்து இசைப்பதென்பது இந்த நிகழ்வை முழுமையாக்குகிறது. கடந்த ஆண்டு அந்த சிறுவன் நாதஸ்வரத்தை வாசிக்கையில் அரங்கமே ஒருவித உணர்ச்சி நிலைக்கு சென்றது. குறிப்பாக எழுத்தாளர் சுசித்ரா இருக்கையிலிருந்து எழுந்து மேடைக்கே சென்றுவிடுபவர் போல அமரவே இல்லை ‘இசை கற்றவர்‘. .நீங்களும் சரண்யாவும் பின்னால் அமர்ந்து ஒவ்வொரு பாடலையும் விளக்கி ரசித்துக்கொண்டிருந்தீர்கள். நான் நமக்கு ஒன்னும் தெரியாது என நண்பரிடம் நொந்து கொண்டேன். நீங்கள் அருண்மொழி அக்காவிடம் இருந்து இசை ரசனையை கற்றுக்கொண்டீர்கள் என்று தளத்தில் வாசித்தது நினைவு(?). அதற்கான பயிற்சியையும் முழுமையறிவு (மரபிசைப் பயிற்சி) அளிக்கத் தொடங்கி இருப்பது என்போன்ற அரைகுறைகளுக்கு ஒரு நல்லவாய்ப்பு.
உங்கள் தளத்தில் நாதஸ்வரம், தவில் குறித்த கட்டுரைகளை வாசிக்கும்போது எழுத்தாளர் நாஞ்சில் நாடன் வீட்டு திருமணவிழாவில் நீங்கள் தவில் இசை குறித்து எழுதியிருந்தீர்கள்,அதற்கு எதிர்வினையாக திரு.கோலப்பன் அவர்கள் சொல்வனத்தில்எழுதியிருந்ததை வாசித்தேன் அபாரபான கட்டுரை. அதன் இறுதியில் ‘ கடந்த காலத்தை நிகழ்காலத்துக்குள் அடக்கும் வித்தைத் தெரிந்தவர்களை தேடுகிறேன். தெரிந்தால் சொல்லுங்கள் என்று எழுதியிருந்தார். அத்தகைய இசையை தூரன் விழாவில் கேட்க முடியும்
கடந்த ஆண்டு தூரன் விழா உரையில் இந்த விழாவிற்கு புதிய ஏழுத்தாளர்கள் பலர் வந்திருக்க வேண்டுமென்று குறிப்பிட்டீர்கள். இங்கே பெற்றுக்கொள்வதற்கு பெரிய மனத்தடை அவர்களுக்கு உள்ளது. மகத்தான கனவுகளை முன் வைத்து அவற்றில் வெற்றியும் காணும் இந்த அமைப்பின் செயல்பாடுகள் இவர்களுக்கு பிரம்மிப்பை உண்டாக்குகிறது. அதன் பொருட்டே இதனை தவிர்க்கிறார்கள். பிரம்மாண்டங்களைக் காணும்போதெல்லாம் அவை இடிந்துவிழவேண்டும் என்று மனிதன் நினைக்கிறான் என்று தஷ்தாயெவெஷ்கி எழுதினார். கடந்த ஆண்டு விழா முடிந்தவுடன் கடிதம் எழுத நினைத்தேன், அப்போதே முடிவு செய்தேன், அடுத்த அறிவிப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று. இந்த ஆண்டு மேலும் அதிகமான நண்பர்கள் வரவேண்டும். இந்த விழா சிறக்க வேண்டும்.
நான் ஒவ்வொரு விழாவிலும்(விஷ்ணுபுரம் கோவை, தூரன் ஈரோடு) உங்கள் கைகளை மட்டுமே கவனித்துக்கொண்டிருப்பேன். சச்சினை விடவும் அதிகம் கடிக்கப்பட்ட நகங்களை கொண்ட(இந்த குறிப்பிற்காக மன்னிக்கவும்). அவை கெத்தேல் சாகிப்பின் கரடிக்கரங்கள் என பேருரு கொள்ளும். விருது வழங்கும்போது உங்கள் மெலிந்த கரங்களை தட்டிக்கொண்டு பெருமிதமாக நிற்பதை கண்டு கண்கள் கலங்க பார்த்திருக்கிறேன். நேற்று உளக்குவிப்பு தியான முகாம் சென்று திரும்பியிருக்கிறேன். பயணம் முழுவதும் நீங்கள் அளிப்பவை பற்றியே பேச்சு. இறுதியாக அந்தியூர் மணியிடம் கைகுலுக்கிவிட்டு, ஒரு பத்து நாள் தானே ஈரோட்டில் சந்திப்போம் என கூறி விடை பெற்றேன் கண்டிப்பாக என்றார்..
நன்றி
ராஜன்
திருப்பூர்
படங்கள் மோகன் தனிஷ்க்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 835 followers
