S. Ramakrishnan's Blog, page 67
March 10, 2023
கையறு
மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கோ. புண்ணியவான் முக்கியமான எழுத்தாளர். நல்ல சிறுகதையாசிரியர். இவர் எழுதிய கையறு நாவலைப் படித்தேன்.

சயாம் மரண ரயில் பாதை பணிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்ட தமிழர்களின் வாழ்வினை விவரிக்கும் இந்த நாவல் மிகவும் உணர்ச்சிப்பூர்வமாக எழுதப்பட்டிருக்கிறது. தண்டவாளம் அமைக்கும் வேலைக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவதற்கு முந்தைய தோட்டத்து வாழ்க்கை. ஜப்பானியர்கள் செய்த அடக்குமுறைகள். ரயில் தண்டவாளம் அமைக்கும் பணியில் தமிழர்கள் சந்தித்த அவலங்களைச் சிறப்பாக எழுதியுள்ளார்.

காலத்தின் திரைக்குள் மறைந்து போன உண்மைகளை நாவலின் வழியே அறியும் போது நமக்குள் வேதனை எழுகிறது.
புனைவின் வழியே அந்தக் கால கட்டத்தை உணர்வுப்பூர்வமாக மறு உருவாக்கம் செய்வதில் புண்ணியவான் வெற்றி பெற்றிருக்கிறார். மலேசியத் தமிழ் இலக்கியத்தின் புதுவரவாக இந்த நாவலைச் சொல்வேன்.
புண்ணியவானுக்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்.
March 9, 2023
புத்தக உலகம்
புத்தக வாசிப்பு பற்றிய சிறந்த டாகுமெண்டரி
Books in the Big City
March 6, 2023
கோசலை
தமிழ்ப் பிரபாவின் கோசலை படித்தேன்.
சமீபத்தில் படித்த மிகச்சிறந்த நாவல் இதுவென்பேன்.

தமிழ்ப்பிரபாவின் பேட்டை நாவலின் வெளியீட்டுவிழாவில் நான் கலந்து கொண்டு பாராட்டி பேசினேன். அப்போதே அவரது எழுத்து திறமையும் தனித்துவமும் முக்கியமானது என்று குறிப்பிட்டேன். இந்த நாவல் அவரது அடுத்தக் கட்ட நகர்வை அடையாளம் காட்டுகிறது. தமிழ் இலக்கியப்பரப்பில் மறக்க முடியாத பெண் கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் கோசலை இடம் பெறுகிறாள். உறவுகளால் கைவிடப்படும் அவள் தனக்கான வாழ்க்கையைத் தானே உருவாக்கிக் கொள்கிறாள். சமூகப் போராளியாகிறாள். அவளது வாழ்க்கை நம் முன்னே திரைப்படம் போல விரிகிறது. நாவலின் வழியே சிந்தாதிரி பேட்டையின் வாழ்க்கை சித்திரம் அபூர்வமாக வெளிப்படுகிறது.
தமிழ்ப் பிரபாவிற்கு எனது மனம் நிறைந்த பாராட்டுகள்
March 5, 2023
பசுமை விருதுகள் 2023
ஈரோட்டை சார்ந்த மருத்துவர் ஜீவா அற்புதமான மனிதர். சிறந்த காந்தியவாதி. சுற்றுசூழல் குறித்துத் தீவிரமான களப்பணிகளை முன்னெடுத்தவர். தேர்ந்த வாசகர். மொழிபெயர்ப்பாளர்.
காந்தி குறித்த எனது சிறுகதைகள் வெளியான தருணங்களில் அவற்றைப் பாராட்டிப் பேசி ஊக்கப்படுத்தியவர். என் மீது மிகுந்த நேசம் கொண்டவர். ஈரோடு செல்லும் போது தவறாமல் அவரைச் சந்திப்பது வழக்கம்.
2021ல் ஜீவா மறைந்தார். அது தனிப்பட்ட முறையில் எனக்குப் பெரிய இழப்பாகும்.
மறைந்த மருத்துவர் வெ. ஜீவானந்தம் விட்டுச் சென்ற கனவுத்திட்டங்களை நிறைவேற்ற அவரது பெயரில் அறக்கட்டளை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள்.
அந்த அறக்கட்டளையின் 2023ம் ஆண்டிற்கான பசுமை விருதுகள் அறிவிக்கபட்டிருக்கின்றன

விருது பெற்றுள்ள பேராசிரியர் அ.கா.பெருமாள் மற்றும் திருநங்கைகளுக்கான செயற்பாட்டாளர் சுதா இருவருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துகள்.
வசந்தகாலத்திலே
Springtime in Saken என்ற ரஷ்ய நாவலை தி.க.சி மொழியாக்கம் செய்திருக்கிறார். ஜார்ஜி குலியா எழுதிய இந்த நாவல் சுவாரஸ்யமானது. 1951ல் இதனை மொழியாக்கம் செய்திருக்கிறார். தமிழ் புத்தகாலயம் வெளியிட்டிருக்கிறது.



அப்காஸீயாவின் வடகிழக்கு மூலையிலுள்ள ஸாகேன் என்ற பகுதியைப் பற்றிய நாவலிது. ஸாகேனின் இயற்கை அழகினை ஒவியன் பார்வையில் விவரிக்கும் இந்த நாவல் அந்த மக்களின் நினைவுகளையும் வரலாற்றையும் மிக அழகாக விவரிக்கிறது.
குறிப்பாக இதிலுள்ள வியப்பூட்டும் கதாபாத்திரங்களும் அவர்களின் நினைவுகளும் மறக்கமுடியாதவை.




பால்யத்தின் இனிய நினைவுகள்
வெங்கட்ராமன் கணேசன் தனது வலைப்பதிவில் பதின் நாவலுக்கு எழுதியுள்ள விமர்சனம்.
••

Pathin – S. Ramakrishnan
Venkataraman Ganesan
A where-The Wimpy Kid-meets-Adrian Mole, with an embellished profundity, S.Ramakrishnan’s Pathin both mesmerizes and provokes. The reader is given a sneak peek into the secret diaries assiduously maintained by Nanda Gopal (“Nandu”).Spanning a decade, the diaries reveal kaleidoscopic escapades of Nandu, ranging from the absorbing to the asinine. The narrative commences when Nandu turns five, before concluding in a hauntingly poignant fashion when the diarist turns fifteen. However, the chapters neither subscribe to the rules of chronology, nor are bound by the rigours of sequencing. Random events occurring in mysterious ways and at unpredictable stages in Nandu’s fledgling life, shock and awe the reader privy to the clandestine musings.
All Nandu’s exploits and enterprises are initiated and implemented by Shankar, an absolute raconteur, dare-devil, eternal optimist, compulsive liar, jack of all trades, and an absolutely trustworthy friend. Older than Nandu by two years, Shankar anoints himself the preceptor of Nandu and initiates him into the rituals of petty thefts and chicanery. A favourite ‘heist’ of Shankar is to frequent random eateries, stuff himself to the brim and when given the bill, to direct the waiter towards his ‘father’. The father happens to be a random gentleman seated at a strategic distance from where Shankar himself is perched. By the time waiter realizes the deception, Shankar is nowhere to be found! As may be surmised, Shankar’s visit to every restaurant is constrained to a solitary trip.
Nandu is as unhappy at home as he is euphoric when in the company of Shankar. Subject to frequents beatings from his father, he is also required to run to the nearest petty shop every night to buy a cigarette for his father. Once when he inadvertently drops the cigarette into a pool of water, his father besides himself with rage, crushes the damp cigarette into a glass of water and threatens to make Nandu gulp it down. A terrified Nandu is saved by his mother, who in the processof prising away her son is forced to tolerate blows that rain down upon her back.
Shankar’s unpredictability is second to none. He chalks up routines at the snap of a finger. Each routine is as bewildering as they can be. From unblinkingly staring at a wall for an interminably long period of time, to noting down the number of people wearing spectacles (bifurcated by gender) that have passed by the duo, Shankar’s antiques are singularly unique! Shankar is also a resolute rock against which Nanducan lean on in times of both grief and joy. When Nandu’s ailing younger brother dies an untimely death, Shankar comforts Nandu by exclaiming that his brother would be born as a butterfly.
Seized by a sudden urge to learn the piano, an excited Nandu makes a journey toMadurai where his uncle, a practitioner of alternative medicine enrolls Nandu with a patient of his who also happens to be a piano teacher. The patient however designates his daughter as the chargé d’affaires. However instead of educating Nandu into the mysteries of playing the piano, the girl berates the instrument and exhorts him to learn the guitar instead. A month and much berating’s later, Nandu is sent back to his parents.
The USP of the book lies in its simplicity. In simplicity lies hidden pearls of ingenuity.Trivial pleasures that fill the heart of a five-year-old with joy cease to be of any meaning to the same individual at the dawn of adolescence. Innocence blooms like an enthusiastic flower only to inevitable lose its quotient. But both trivialities and naivete lend themselves to wit and frolic as nothing else do. Egged on by Shankar, Nandu agrees to double up as a car washer to get access to a bungalow that apparently has multiple rabbits roaming inside, one of which is blood red in colour. Announcing themselves at the gate, they are disappointed to find the entrance to the house irritatingly guarded by a geriatric. Realising their futile ambitions, theduo wait for the elderly man to experience a temporary lapse in concentration, before hurling their rags down and fleeing from the vicinity.
Ramakrishnan succeeds beyond measure in evoking a plethora of reminiscences inthe reader’s mind. Reading about Nandu slowly results in transforming into Nandu. Every one of us have been a Nandu during the formative periods of our lives andmost of us would have also had a Shankar to lead us down many a rabbit hole. Hell! Many of us might have been intolerable versions of Shankar! Headaches for parentswhose only remedy lay in edicts of non-association. Heartaches for the perpetrators and their partners in crime alike!
Pathin – a time to remember, reflect and regale, but without even a sliver of regret!
March 4, 2023
அயோத்தி
சிறந்த இயக்குநரும் நடிகருமான சசிகுமார் இன்று சாலிகிராமத்திலுள்ள எனது அலுவலகம் வந்திருந்தார். நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.


அவரது நடிப்பில் இயக்குநர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் நேற்று வெளியாகியுள்ள அயோத்தி திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

இப்படத்தின் கதை என்னுடையது. திரைப்படத்திற்காகவே இதனை எழுதினேன்.
படம் மிகுந்த உணர்ச்சிப் பூர்வமான வரவேற்பை பெற்றுள்ளது. திரையரங்கினை விட்டு வெளியே வரும் பலரும் கண்ணீர் மல்கப் பாராட்டுகிறார்கள். ஊடகங்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. திரையுலகினை சேர்ந்த பலரும் எனக்குத் தொலைபேசியில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது.


அயோத்தி திரைப்படத்தின் வெற்றிக்கு சசிகுமார் காட்டிய தீவிர அக்கறையும் ஈடுபாடுமே முக்கியக் காரணம். கதையை மட்டுமே முதன்மைப்படுத்தித் தனது கதாபாத்திரத்தைச் சரியாக உள்வாங்கி அவர் திறம்பட நடித்துள்ளார். அவரது ComeBack film என மக்கள் கொண்டாடுகிறார்கள்.
இயக்குநர் மந்திரமூர்த்தி உணர்வுப் பூர்வமாகப் படத்தை உருவாக்கியது பாராட்டுக்குரியது. தேர்ந்த நடிகர்கள். சிறந்த இசை, கச்சிதமான படத்தொகுப்பு எனப் படம் நன்றாக உருவாக்கப்பட்டுள்ளது. நல்லதொரு படத்தை உருவாக்கிய தயாரிப்பாளர் டிரைடன்ட் ரவீந்திரனை மனம் நிறைந்து பாராட்டுகிறேன்.

இன்று அந்த மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளச் சசிகுமார் வந்திருந்தார். அவருடன் இணைந்து இன்னொரு திரைப்படம் எழுதுகிறேன். புதிய படத்திற்கான கதை குறித்துப் பேசினோம்.
இது தவிர இந்த ஆண்டில் மூன்று புதிய திரைப்படங்களுக்கு எழுதுகிறேன்.

இயக்குநர் வசந்தபாலன் எனது கதையைப் படமாக்குகிறார்.

இயக்குநர் சீனுராமசாமி எனது கதை ஒன்றைப் படமாக்குகிறார்
புதிய இயக்குநர் பிரசாந்த் எனது கதையைப் படமாக்குகிறார். பிரசாந்த் விளம்பரப்படங்களில் பணியாற்றியவர்.
புதிய வெப்சீரியஸ் மற்றும் ஓடிடிக்கான திரைப்படப் பணிகள் சில பேச்சு வார்த்தையில் உள்ளன.
March 2, 2023
கோணங்கி : பாலியல் குற்றச்சாட்டுகள்
இணையத்தில் வெளியாகியுள்ள கோணங்கி மீதான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

கோணங்கியால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளானவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். நான் அவர்கள் பக்கம் நிற்கிறேன்.
கோணங்கி மற்றும் மணல்மகுடி நாடகக்குழுவை நடத்தும் முருகபூபதிக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்.
மருத்துவ சிகிச்சை
எனது இடுப்பு எலும்பில் ஒரு நரம்பு அழுத்தம் ஏற்பட்டு கடுமையான வலி உருவானது.‘
கடந்த ஒரு மாதகாலமாக அதற்குச் சிகிச்சை எடுத்து வருகிறேன். ஆகவே இலக்கிய நிகழ்ச்சிகள், புத்தகத் திருவிழா எதிலும் கலந்து கொள்ள முடியவில்லை.
இன்னும் சில வாரங்கள் சிகிச்சை தொடர வேண்டும் என்று மருத்துவர் சொன்னதால் எங்கும் செல்ல முடியாத சூழ்நிலை.
வீட்டில் இருந்தபடியே பிசியோதெரபி எடுத்துக் கொள்கிறேன். நல்ல மருத்துவர்களின் துணையால் இப்போது நலம் பெற்றுவருகிறேன்.
February 27, 2023
அறியப்படாத கார்க்கி
டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி, ஆன்டன் செகாவ் போல மாக்சிம் கார்க்கியின் வாழ்க்கை வரலாறு இன்றுவரை விரிவாக எழுதப்படவில்லை. ரஷ்ய மொழியில் வெளியாகியுள்ள அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமானது. ஸ்டாலின் அரசோடு அவருக்கு ஏற்பட்ட மோதல்கள், நெருக்கடிகள் பற்றி அதில் எதுவுமில்லை. Henri Troyat எழுதிய Gorky: A Biography கூட முழுமையானதில்லை.

MAXIM GORKY : A POLITICAL BIOGRAPHY என்ற T. YEDLAN புத்தகத்தில் அவரது வாழ்க்கையின் கடைசிப்பகுதி விவரிக்கப்படுகிறது. தனது பால்ய வயது துவங்கி இளைஞனான வரையான அனுபவங்களை மாக்சிம் கார்க்கியே தனிப் புத்தகங்களாக எழுதியிருக்கிறார். அது திரைப்படமாகவும் வெளியாகியுள்ளது. ஆனால் லெனினோடு அவருக்கு இருந்த நட்பு. அவர்களுக்கு இடையில் எழுதப்பட்ட கடிதங்கள். நீண்டகால நண்பரான ரோமன் ரோலண்ட் உடனான நெருக்கம், இத்தாலியில் உருவான காதல், எச்.ஜி.வெல்ஸ் உடனான நட்பு பற்றி விரிவாக எழுதப்படவில்லை.
ரோமன் ரோலண்ட் கார்க்கியின் அழைப்பின் பேரில் ஒருமுறை ரஷ்யாவிற்குச் சென்று தங்கிவந்திருக்கிறார். கார்க்கி மறைவிற்கு அவர் எழுதிய அஞ்சலிக்குறிப்பு முக்கியமானது
1906 முதல் 1913 வரை, கார்க்கி தெற்கு இத்தாலியில் உள்ள கேப்ரி தீவில் வாழ்ந்து வந்தார். ரஷ்யாவில் அதிகரித்து வரும் அடக்குமுறையிலிருந்து தப்பிக்கவே அவர் இத்தாலியில் வாழ்ந்து வந்தார்.

இந்த நாட்களில் அவரது இலக்கியப் பார்வை மாறியதோடு சர்வதேச அளவில் பல்வேறு எழுத்தாளர்களுடன் நெருக்கமாக நட்பைக் கொண்டிருந்தார். அவர் மீண்டும் ரஷ்ய திரும்பும்படியாக ஸ்டாலின் அரசு அழைப்பு விடுக்கப்பட்ட போதும் கூடத் தயக்கத்துடன் தாயகம் திரும்பினார். அதன்பிறகு அவர் நாட்டை விட்டு வெளியேற முடியாதபடியான சூழல் உருவானது. அவரது வெளிநாட்டு விசா ரத்து செய்யப்பட்டது. தங்கக் கூண்டில் அடைக்கப்பட்ட கிளியைப் போலவே அவர் நடத்தப்பட்டார்
1906 ஆம் ஆண்டில், மார்க் ட்வைன் மற்றும் பிற எழுத்தாளர்களின் அழைப்பின் பேரில் மாக்சிம் கார்க்கி மேற்கொண்ட அமெரிக்கப் பயணத்தில் அவர் அலைக்கழிக்கப்பட்டார். அமெரிக்கப் பத்திரிக்கைகள் அவரை மிக மோசமாக விமர்சித்து எழுதின.
கார்க்கியின் விருப்பத்திற்கு மாறாக அவரது பெயர்கள் ஸ்டாலின் அரசால் நாடக அரங்குகளுக்கு வைக்கப்பட்டன. அவரது பிறந்தநாளைத் தேசமே கொண்டியது. அது ஒரு நாடகம் எனக் கார்க்கிக்குப் புரிந்திருந்தது. உலகின் மிகச்சிறந்த புத்தகங்களை ரஷ்ய மொழியில் கொண்டுவர வேண்டும் என்று கார்க்கி விரும்பினார். இதற்கான திட்டம் உருவானது. ஆயிரம் புத்தகங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதே அவரது கனவு. ஆனால் நூறு புத்தகங்கள் மட்டுமே அவரது வாழ்நாளில் வெளியாகின.
கார்க்கியின் மகன் இறந்து போனது கூட மர்மமானதாகவே கருதப்படுகிறது. இந்த மரணம் கார்க்கியின் மனநிலையைப் பாதித்தது. உடல் அளவிலும் அவர் மிகவும் தளர்ந்து போனார். அவரது இறுதி நாட்களில் நடந்த நிகழ்வுகளும் அதன் பின்னுள்ள காரணங்களும் அதிர்ச்சிகரமானவை.
The Life of Klim Samgin என்ற அவரது இறுதி நாவல் மிக முக்கியமானது. நான்கு தொகுதிகள் கொண்டது.கிளிம்மின் நாற்பது வருட கால வாழ்வை விவரிக்கும் இந்த பெரு நாவலின் இரண்டு பாகங்கள் வெளிவந்த போது நோபல் பரிசிற்கு கார்க்கி பரிந்துரைக்கபட்டார்.
ரஷ்ய எழுத்தாளர்களிலே கார்க்கியைப் போல வாழ்நாள் முழுவதும் பயணம் செய்தவர் எவருமில்லை. தனது சமகால எழுத்தாளர்களுடன் நட்பு பாராட்டியவரும் எவருமில்லை. காரணமின்றிக் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்ட எழுத்தாளர்கள் பலரை அவர் காப்பாற்றியிருக்கிறார். கடைசி நாட்களில் அவரே வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டிருந்தார் என்பது கசப்பான உண்மை.
••
S. Ramakrishnan's Blog
- S. Ramakrishnan's profile
- 657 followers
