அகரமுதல்வன்'s Blog, page 10

July 29, 2024

jadeepa.com

குட்டி யானையின் பெருநெருப்பு

எழுத்தாளர் ஜா. தீபாவின் இணையத்தளம் புதுப்பொலிவுடன் சீரமைக்கப்பட்டுள்ளது. அவருடைய சில சிறுகதைகள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எழுத்தை தீவிரமாகவும், இலக்கியத்தை ஒரு உன்னதமான செயலாகவும் கருதுகிற இளம் படைப்பாளிகளில் ஜா. தீபாவும் ஒருவர்.

The post jadeepa.com first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 29, 2024 10:39

July 28, 2024

போதமும் காணாத போதம் – கோவை அறிமுக விழா உரைகள்

கோயம்புத்தூர் புத்தக திருவிழாவில் நடந்த போதமும் காணாத போதம் – துங்கதை நூல் அறிமுக விழாவில் நிகழ்த்தப்பட்ட உரைகள்.

 

 

 

The post போதமும் காணாத போதம் – கோவை அறிமுக விழா உரைகள் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 28, 2024 08:55

July 27, 2024

வேம்படியான் – ம. நவீன்

நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தார் பிளாக்காயன். நல்ல நெட்டை. “வட்டிக்காரன் அனுப்பிச்சானா?” எனக் கேட்டுவிட்டு ஒன்றும் சொல்லாமல் உள்ளே சென்று ஒரு பிரம்பு நாற்காலியில் சாய்ந்து அமர்ந்து கொண்டார். அந்தப் பிரம்பு நாற்காலியே சாய்ந்து படுப்பதற்கு வாகாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வாசலில் பாதியை மறைத்துக் கொண்டு நின்ற சிறுவனைக் கடந்து உள்ளே சென்றபோது ஆசுவாசமாக உணர்ந்தேன். தம்பியின் கைகள் வியர்த்திருந்தன. குளிர்ந்த தரையில் அவரருகில் அமர்ந்து கொண்டோம். அந்தச் சிறுவன் அவரது மகனாக இருக்க வேண்டும். பிளாக்காயனின் காலடியில் சென்று அமர்ந்து கொண்டான். பிளாக்காயன் அவனைப் பொருட்படுத்தாதவர் போல எரிச்சலாக முகத்தை வைத்திருந்தார். நாங்கள் வந்தது அவருக்குப் பிடிக்கவில்லை என்பது போன்ற பார்வை.

வேம்படியான்

The post வேம்படியான் – ம. நவீன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2024 11:20

July 26, 2024

சங்கத் தமிழில் கடவுளர் – மு. சண்முகம் பிள்ளை

முருகன் அவதார சரிதத்தில் இந்திரன் தொடர்பும் உள்ளது. இறைவன் உமாதேவியாரோடு கூடியின்புற்றதினால் தோன்றிய கருவை, இந்திரன் வேண்டுகோளுக்கு இணங்க இறைவன் சிதைத்துவிடுகிறான். பின், அக்கருவை எழுமுனிவரும் பெற்று அக்கினியில் அவியோடு சொரிகின்றனர். அம் முனிபத்தினியருள் அருந்ததி ஒழிந்த ஏனைக் கார்த்திகை மாதர் அறுவரும் அங்கியில் பெய்ததனை அருந்திக் கருக்கொண்டு, சரவணப் பொய்கையில் தாமரைப் பூவிலே முருகனைக் கருவுயிர்த்தனர். முருகன் பிறந்த அன்றே இந்திரன் இகல் மிகுதியால் தன் வச்சிராயுதத்தினாலே எறிய; அக்குழந்தை ஆறு வேறு உருவாகிப் பின் ஓர் உருவாய் ஆறுமுகத்தோடு அமைகிறது. குழவிப்பருவத்தில் படைக்கலம் இன்றியே செய்த போருக்கு இந்திரன் தோற்றுவிடுகிறான். பேராற்றல் படைத்த இவனே தனது சேனைக்குத் தலைவனாதற்குரியன் என இந்திரன் கருதுகிறான்.

https://www.kurugu.in/2024/06/gods-in...

The post சங்கத் தமிழில் கடவுளர் – மு. சண்முகம் பிள்ளை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 26, 2024 10:33

July 25, 2024

ஒரு சாகசக்காரனின் கதை

கா.பாவின் கதை நாயகர்கள் சமூகத்தின் ஒற்றைப் பிரதிநிதிகளாக குற்றத்தின் நிழலிலும் குற்ற உணர்விலும் சஞ்சரிக்கிறார்கள். அந்தச் செந்நிழல் படிந்த பாதைதான் கா.பாவின் எல்லா கதைகளினதும் மையச் சரடாக நீண்டுகிடக்கிறது.

https://www.theivigan.co/post/10015

The post ஒரு சாகசக்காரனின் கதை first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 25, 2024 10:05

July 24, 2024

மின்மினி

01

எங்கும் ஒளியே உலவும்

ஒரு நாளில்

மின்மினிகள்

அழகானவை அல்ல.

02

ஆமாம் நண்ப!

உன்னையொரு வழியில்

நிழலைப் போல

சந்தித்த கணத்தில்

ஒளி கிளைத்த வாழ்வு

எனது.

03

இரவு

ஈரம் படர்ந்த கூந்தலிருந்து

சொட்டும் துளியென

எங்கே வீழ்கிறது

இவ்வளவு சத்தமற்று.

The post மின்மினி first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2024 11:06

July 23, 2024

பாகன்

01

வனமிழந்த யானையை

தன் வழித்தடத்திற்கு பழக்குகிறான்

பாகன்

பிளிறும் ஓசையில் தீனம் பெருகி

நிலத்தை அதிர்விக்கிறது.

அங்குசம்

ஒரு யாழ் நரம்பை போல

பாகனின் கையில் துடிக்கிறது.

02

நீரே பாகன்!

என் வனத்திலும் நீரே வழியுமாவீர்.

03

என் செல்ல சிணுங்கலே

நீயொரு மாமத யானை

நீ முறித்துப் போடும் கானகத்தின்

பரப்பில்

என்னை நான் பதியமிட்டு

வளர்ப்பேன்.

 

The post பாகன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 23, 2024 11:00

July 22, 2024

நூல் அறிமுக விழா – கோயம்புத்தூர்

போதமும் காணாத போதம் – துங்கதை நூலிற்கான அறிமுகவிழா கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவில் நடைபெறவுள்ளது. பெருமதிப்பிற்குரிய சான்றோர் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் தலைமை தாங்குகிறார். எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான நரேன், எழுத்தாளர் பாலாஜி பிருத்விராஜ், நண்பரும் பதிப்பாளருமான நா. செந்தில்குமார் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர். இலக்கிய வாசகரும் சகோதரியுமான காயத்ரி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்.

வாய்ப்புள்ளோர் வருக!

The post நூல் அறிமுக விழா – கோயம்புத்தூர் first appeared on அகரமுதல்வன்.

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2024 10:15

July 21, 2024

நாயனம் – ஆ. மாதவன்

எல்லோர் முகத்திலும் ,சலிப்பும், விசாரமும், பொறுமை இழந்த வெறுப்பும் நிறைந்திருக்கின்ற்ன. தலை நரைத்த முக்கியஸ்தர்களுக்கு யாரை, என்ன பேசி, நிலைமையை ஒக்கிட்டு வைப்பது என்று தெரியவில்லை. எல்லாரும், இருட்டாக நிறைந்து கிடக்கும் வயலின் வரப்புப் பாதையையே பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். மழை சட்டென்று ஓய்கிறது. இரைச்சல் அடங்குகிறது. கூரையிலிருந்து தண்ணீர் சொட்டுகிறது. முற்றத்தில் தண்ணீர் தேங்கி வழிந்து போகிறது.

>நாயனம் – ஆ மாதவன்

The post நாயனம் – ஆ. மாதவன் first appeared on அகரமுதல்வன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 21, 2024 11:17

அகரமுதல்வன்'s Blog

அகரமுதல்வன்
அகரமுதல்வன் isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow அகரமுதல்வன்'s blog with rss.