01
எங்கும் ஒளியே உலவும்
ஒரு நாளில்
மின்மினிகள்
அழகானவை அல்ல.
02
ஆமாம் நண்ப!
உன்னையொரு வழியில்
நிழலைப் போல
சந்தித்த கணத்தில்
ஒளி கிளைத்த வாழ்வு
எனது.
03
இரவு
ஈரம் படர்ந்த கூந்தலிருந்து
சொட்டும் துளியென
எங்கே வீழ்கிறது
இவ்வளவு சத்தமற்று.
The post மின்மினி first appeared on அகரமுதல்வன்.
Published on July 24, 2024 11:06