Jeyamohan's Blog, page 142
March 25, 2025
பொழிவு, கடிதம்
அன்பின் ஜெ அவர்களுக்கு,
நேற்று மாலை எங்களூரின் சுற்றுவட்டாரத்தில் நல்ல மழை பெய்தது. கடந்த சில நாட்களாக வெப்பம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த மழை சற்று இதமாக இருந்தது. பெரும்பாலும் கார்த்திகை பட்டத்தில் விதைத்த பயிர்கள் அறுவடையாகிவிட்டன அதனால் எந்தப் பரபரப்புமில்லை.
கடந்த ஆண்டு இதே மார்ச் மாதத்தில் தான் மழைப்பாடல் வாசித்திருந்தேன்,
கூர்ஜரத்திலிருந்து பீஷ்மர் ஒரு இலையுதிர் காலத்தில் அஸ்தினாபுரம் நோக்கி வருவார் அப்பொழுது ஒரு இடத்தில்
“அனைத்து மரங்களும் இலையுதிர்த்திருக்க, புங்கம் மட்டும் தளிர்த்து இலையொளிர நின்றது. மாதவிப்பந்தல்களில் வெண்ணிற விண்மீன்கள் என மலர்கள் சொறிந்திருந்தன” என்று வரும்,
சரியாக அதை வாசிக்கும்போது எல்லா மரங்களும் தளிர் விட தொடங்கியிருந்தபோது புங்கமரம் தளிர்த்து பூவிட தொடங்கியிருந்தது.
பின்னர் சத்யவதியின் யோசனயின்படி காந்தார இளவரசியை திருதிராஷ்டிரனுக்கு மணமுடிக்கும் நிகழ்வுகள் முடிந்தது
காந்தாரி நகர்நோக்கி வருகையில் பெய்யும் முதல்மழை, பாலை நிலத்தின் மகள் முதல்முறை நகர் நுழையும்போது நல்ல நிமித்தமாக பெய்யும் மழை,
அந்த மழை முதல் துளிகள் மண்ணில் விழும்போது ” முதுசூதர் சிறு அம்பு ஒன்று மண்ணில் தைத்த ஒலியை கேட்டார். இன்னொரு அம்பு என அருகே விழுந்தது நீர் துளிகள், நீரில் விழும் மீன்கொத்திகள் என அவை மண்ணை அறைந்து நிறைந்தன.”
என்ற வரிகளில் மழைத்துளிகளை வானிலிருந்து கொட்டும் அம்புகளுக்கு நிகராக உருவகித்திருந்தது எனக்கு பிடித்திருந்தது.
அதே சமயத்தில் அஸ்தினாபுரியில்
அரண்மனை மாடத்திலிருந்து சத்தியவதி மழைக்கு முன்பான வெப்பத்தால் சோர்ந்திருப்பார் மேலும் விதுரனிடம் பேசும்பொழுது நூற்றாண்டு காலத்தில் மழை தாமதிக்கும் வருடம் அதுவென அறிந்தபோது பெரும் சப்தத்துடன் மழை பொழியும் அப்போது மழை பற்றிய விவரணைகள் சிறப்பானது
“மழையோ ஒற்றைப்பெரும்பொழிவென திகழ்ந்தது. மழையோசை ஒன்றையே சொல்லும் முதல்மந்திரம். ஆயிரம் இலைநாவுகள் சுழித்தெழும் நாதம். பல்லாயிரம் நீர்த்தந்திகள் அதிர்ந்தெழும் நாதம். நிலமுரசின் விம்மல். நதியாழின் மீட்டல். மேகச்சல்லரியின் குமுறல். மழைத்தலின் பேரிசை.”
போன்ற வரிகளை படிக்கும்போது மழை பார்க்கவேண்டும் என்று ஆர்வம் மேலிட்டது, ஆனால் கடந்த ஆண்டு எந்தக் கோடைமழையும் பெய்யவில்லை, பருவமழை கூட சற்று பிந்தியே பெய்தது.
மழைக்காலத்தில் மழை பார்ப்பதைவிட கோடையில் மழை பார்ப்பது அழகானது. முதல் மழைக்கு முன்பு வரும் ஈரமண் வாசனையும், மழைக்கு பின் காய்ந்த நிலத்திலிருந்து வரும் வாசமும் ஒரு அலாதியான உணர்வை கொடுக்கும்.
மழைப்பாடலில் குந்தியை அறிமுகம் செய்யும்போது மழைக்காட்டில் அடர்ந்து வளர்ந்திருந்த புற்கள்,மரங்கள் மழையில் நனையும் பொழுதில் குந்தியின் அத்தியாயங்கள் நிகழும், குந்தி கர்ணனை கருவில் சுமக்கும் பொழுது அவள் அடையும் அந்த மன ஓட்டங்களை படிக்கும்பொழுது அத்தனை உணர்வுப் பூர்வமாக இருந்தது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் எதிர்பார்த்த மழை இந்த மார்ச்சில் நேற்று பெய்தது, காலையில் நன்றாக வெயிலடிக்க பிற்பகலில் வானம் கருமை கொண்டு தூரலுடன் ஆரம்பித்து ஒரு மிதமான மழை பெய்தது.
இரவு முழுக்க சிறு சிறு தூரளுடன் வானம் சிங்கிக் கொண்டிருந்தது.
மழைக்குப் அடுத்தநாள் காலை ரம்மியமானது, கோடையில் தளிர்க்கும் மரங்களின் வாசமும், பூக்களின் வாசமும், பறவைகளின் ஒலியும் இயல்பான நாட்களை விட சிறப்பாக இருக்கும்.
போகன் சங்கரின் கவிதையொன்று,
மழை எல்லாவற்றையும்
மென்மையாக்கியிருந்தது.
நிலம் குழைந்து
காலடிகளை
ஓவியங்கள் போல
தன்னுள் பதித்துக்கொண்டது.
கூடலின் நிலம்
தன்னியல்பு மறந்து
நீர் போல ஓட முயன்றது.
கூடலின் பின்
நாணம் இல்லைதானே?
வானம் நிலத்துடன் கூடும் நிகழ்வே மழை என்று தோன்றியது.
இதை உங்களுக்கு எழுதும்பொழுதுகூட மேகங்கள் கருமை கொண்டு, தூரத்தில் பூத்திருக்கும் வாகை மலரின் நறுமணத்தை நிறைத்த காற்றை வீசிகொண்டிருக்கிறது.
மழை எங்களின் மனதை நிறைக்கும் மங்கள நிகழ்வு.
மழை பற்றிய உங்களின் நினைவுகளுக்கு நன்றி.
தமிழ்குமரன் துரை,
பெங்களூர்.

மேலைத்தத்துவ அனுபவம்- ரம்யா
”மேலைதத்துவம் என்பது தர்க்கம் மூலம் விடைகாணமுடியும் என்ற நம்பிக்கையை சாரமாகக் கொண்டது.” என்று ஒரு கட்டுரையில் குறிப்பிட்டுருப்பீர்கள். அஜிதனின் மேலைதத்துவ வகுப்பு அந்த தர்க்கத்தை கட்டமைப்பதற்கான அடிப்படைச் சிந்தனைகளை, சிந்தனையாளர்களை பெரும் வரலாற்றுப் பரப்பில் வைத்துப் பார்ப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்தித் தந்தது.
The talk about finding one’s own idealism and private mission is very inspiring. Typically, these speeches target individuals with materialistic aspirations who lack the necessary motivation to attain them.

புதுவை வெண்முரசு கூடுகை-80
அன்புள்ள நண்பர்களே!
வணக்கம்.
மகாபாரதத்தை நவீன இலக்கியமாக மறு ஆக்கம் செய்த எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசு பெருநாவல்நிரையின் மீதான கலந்துரையாடல் 2017ம் ஆண்டு முதல் புதுவையில் மாதாந்திர கூடுகையாக நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 2025ம் ஆண்டு முழுவதும் வெண்முரசின் ஒன்பதாவது நூலான “வெய்யோன்” குறித்து நிகழவிருக்கிறது.
புதுவை வெண்முரசுக் கூடுகையின் 80 வது அமர்வு 28.03.2025 வெள்ளிக்கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் நண்பர் முத்துக்குமரன் உரையாற்றுவார்.
நிகழ்விடம் :
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ ஶ்ரீநாராயணபரம் ” முதல் மாடி ,
# 27, வெள்ளாழர் வீதி , புதுவை -605 001.
தொடர்பிற்கு :- 9943951908 ; 9843010306
பேசு பகுதி :
வெண்முரசு நூல் – 9.
“ வெய்யோன் ”
பகுதி 4 கூற்றெனும் கேள்
( அத்தியாயம் 24 – 35).
நிகழ்ச்சியில் பங்குகொள்ள வெண்முரசு வாசகர்களையும்ஆர்வமுள்ளவர்களையும் அன்புடன் அழைக்கின்றோம்.

March 24, 2025
மகிழ்வரசியின் காலடியில்
முழுமையறிவு (unified wisdom) என்ற பெயரில் நடத்திவரும் இந்திய தத்துவ இயல் வகுப்புகள் 2022ல் தொடங்கின. ஒன்றன்பின் ஒன்றாகத் தொடங்கப்பட்ட ஆறு தனித்தனி அணிகளாக நிகழ்ந்து வரும் இவ்வகுப்புகளில் முதல் அணி ஆறாவது நிலையை அடைந்துள்ளது. பல்வேறு நிலைகளில் இவ்வகுப்புகள் தொடர்ச்சியாக அனேகமாக எல்லா மாதங்களிலும் நிகழ்கின்றன. சில மாதங்களில் இரண்டு வகுப்புகள் வரை நிகழ்கின்றன.
ஆறாவது வகுப்பு வேதாந்தம் அல்லது உத்தர மீமாம்ஸம். அதன் மூலநூலான பிரம்மசூத்திரம். பிரம்மசூத்திரம் பற்றிய முனி நாராயணப் பிரசாத் அவர்களின் குறிப்புகளை வாசித்துக்கொண்டிருந்தபோது இவ்வகுப்புகளை பனிமலைகள் தெரியும் ஓர் இடத்தில் அமர்ந்து நடத்தினாலென்ன என்னும் எண்ணம் வந்தது. உடனே அகத்தே பனிமலைகளைக் கண்முன் பார்த்தும் விட்டேன்.
இமையமலைகள் தெரியும் ஓர் இடத்துக்கான தேடல் தொடங்கியது. டார்ஜிலிங்கில் இடம் பார்த்தோம். சரியாக அமையவில்லை. தொடர்ச்சியாக பல இடங்கள் பல நண்பர்கள் வழியாகப் பரிசீலிக்கப்பட்டன. எல்லாமே சுற்றுலா மையங்கள். ஆகவே பரபரப்பானவை, கட்டணமும் மிகுதி. (அண்மையில் Work from Himalayas என்றபேரில் சி.இ.ஓக்கள் இமையமலை ஓய்விடங்களில் நிரந்தரமாக தங்க ஆரம்பித்துள்ளனர்)
ஒரு கட்டத்தில் இமையமலை எண்ணத்தைக் கைவிட்டு உள்ளூரிலேயே வகுப்புகளை நடத்தலாமென முடிவுசெய்தேன். அந்த முடிவை எடுத்த அன்று மீண்டும் முனி நாராயணப் பிரசாத்தின் நூலை வாசித்துக்கொண்டிருந்தேன். அப்போது ஓர் அழைப்பு. பெங்களூர் இலக்கியவிழாவில் அறிமுகமான திரிபர்ணா என்னும் வாசகி அழைத்திருந்தார். அவர் உத்தரகண்ட்டில் அல்மோராவைச் சேர்ந்தவர், அங்கே அவருடைய தாய்மாமனான வினாயக் பந்த் என் வாசகர் என்றார். வினாயக் வந்த் இலக்கியவிழாக்களையும் ஒருங்கிணைப்பவர். சட்டென்று அவரிடமே உதவிகோரத் தோன்றியது.
திரிபர்ணா வழியாக வினாயக் பந்தை தொடர்பு கொண்டேன். அவர் உதவ முன்வந்தார். ஒரே வாரத்தில் கஸார்தேவி என்னுமிடத்தில் இருந்த மோக்ஷா என்னும் தங்குமிடம் முடிவுசெய்யப்பட்டது. இமையமலையில் ஒரு ஓய்விடத்திற்கு வழக்கமாக ஆகும் செலவில் கால்வாசித்தான் கட்டணம். ஆறாவது நிலை மாணவர்கள் மொத்தம் ஐம்பதுபேர், முப்பதுபேருக்கே இடம். விமான முன்பதிவு ஜனவரியிலேயே செய்யப்பட்டது.
நான், அருண்மொழி, சைதன்யா ஆகியோர் 20 மார்ச் 2025 அன்று விடியற்காலை இரண்டு மணிக்கு கிளம்பி திருவனந்தபுரம் சென்று விமானம் ஏறி டெல்லி சென்றோம். டெல்லியில் இருந்து பதினெட்டுபேர் ஒரு வேனில் நேராக அல்மோரா வழியாக கஸார்தேவி செல்வதாக ஏற்பாடு. ஒரு குழு ரயிலில் வந்தது. இன்னொரு குழு இன்னொரு காரில் வந்தது. மதியம் 12 மணிக்கு ஒன்றுகூடினோம். 1 மணிக்கு கிளம்பிபனோம்.
பயணநேரம் 9 மணி என கூகிள் காட்டியது. ஆனால் சென்று சேர 12 மணி நேரம் ஆகியது. வழி நெடுக ஊர்தி நெரிசல். சாலையும் கொஞ்சம் பழுதடைந்திருந்தது. ஆனால் பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நடுநடுவே தூங்கிக்கொண்டும் சென்றதனால் அலுப்பு தெரியவில்லை. இரவு ஒரு மணிக்குத்தான் மோக்ஷாவை அடைந்தோம்.
இரவுணவுக்குச் சொல்லியிருந்தோம். நான் சாப்பிடாமல் அப்படியே கட்டிலில் விழுந்துவிட்டேன். நல்ல குளிர்.ஏழு டிகிரி. மெத்தைப்போர்வையை போர்த்திக்கொண்டு அதை உடலால் சூடுபடுத்தி கதககதப்பாக்கிக்கொண்டு மெல்ல துயிலில் ஆழ்ந்தேன். குளிர்ப்பகுதிகளில் போர்வை ஒரு கருப்பையாகிறது. அங்கே வருவதுபோன்ற ஆழ்ந்த தூக்கம் எங்கும் அமைவதில்லை.
வெளிவகுப்புமறுநாள் எட்டு மணிக்கு எழுந்து வெளிவந்தேன். நல்ல குளிர் இருந்தாலும் பளிச்சிடும் வெயிலும் இருந்தது. எதிரே பச்சை அலையாக மலையடுக்கு. ஆனால் பனிமலைகள் இல்லை. வானம் வெண்ணிற ஒளிர்முகிலால் நிறைந்து கண்கூசச்செய்தது. உணவறைக்குச் சென்று காபி குடித்தேன். அங்கே நண்பர்கள் கூடியிருந்தார்கள்.
மோக்ஷா ஒரு நடுத்தர நிலை தங்குமிடம். வசதியான அறைகள். வெந்நீர் வசதி, நல்ல போர்வை உண்டு. உணவும் சிறப்பாக இருந்தது. குறிப்பாக எங்கள் நோக்கத்தை அறிந்து முழுமையாக ஒத்துழைத்தனர். அவர்களின் நோக்கில் இந்நிகழ்வு அவர்களுக்கு மிகுந்த கௌரவம் அளிக்கும் ஒன்று. அவர்களின் முகநூல்பக்கத்திலும் எழுதியிருந்தார்கள்.
உள்ளறை வகுப்புநந்ததேவி மலையடுக்குகள் தெரியும் என்றார்களே, எங்கே என்று கேட்கலாம் என எண்ணினேன். அதற்குள் நிறுவன நிர்வாகியான துருவ் “நந்ததேவி தெரியும், ஆனால் இன்று முகில் மூடியிருக்கிறது…முகில் விலகினால் தெரியும்” என்றார். கண்களில் நீர்வழிய பார்த்துக்கொண்டிருந்தேன். முகில் கொஞ்சம் விலகியபோது பனிமுடிகளின் மங்கலான வெண்வடிவம் துலங்கி வந்தது. அதைப் பார்த்ததுமே அவ்விடம் மனதுக்கு உகந்தந்தாக ஆகியது.
கஸார்தேவி என்பது அருகே உள்ள ஒரு பழமையான ஆலயம். உண்மையில் ஒரு சிறு மலைக்குகை அது. அங்கே இப்போது ஒரு கான்கிரீட் ஆலயத்தை கட்டியிருக்கிறார்கள். நாங்கள் செல்வதற்கு முன்னரே வந்த நண்பர்கள் அங்கு சென்று வணங்கி வந்திருந்தார்கள்.
காலை ஒன்பது மணி முதல் ஒரு மணிவரை பிரம்மசூத்திர வகுப்பு. முப்பதுபேர் அமர்வதற்கு நாற்காலிகள் போடப்பட்ட ஒரு சிறு கொட்டகை. மாணவர்களின் நேர் முன்னால் நந்ததேவியின் மலையடுக்குகளும் அவற்றின்மேல் கவிந்த நீலவானமும், அடியில் வளைந்தெழுந்து வந்த பசுமையான காடும். மெல்லிய குளிர்காற்று வந்து அலைதழுவிச் சென்றுகொண்டிருந்தது. பறவைகளின் ஓசைகள் சூழ்ந்திருந்தன. வகுப்புநடத்தும்போது அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அத்தகைய ஓர் இடத்தில்தான் பிரம்மசூத்திரம் கற்பிக்கப்படவேண்டும் என்று தோன்றியது. பாதராயணர் வாழ்ந்தது இந்த தவநிலம். (இமையமலையில் பதரிநாத் என்னுமிடத்தில் என தொன்மம். ஆதிசங்கரர் அவருடைய மடத்தை அங்கே நிறுவியது அதனால்தான்)
பிரம்மசூத்திரம் ஒரு தொன்மையான தத்துவநூல். ஒற்றைவரிச் சூத்திரங்களால் ஆனது. முதல்மூவர் (சங்கரர், ராமானுஜர், மத்வர்) அதற்கு எழுதிய உரைகளினூடாகவே இங்கே அந்நூல் வாசிக்கப்படுகிறது. அவை பிரம்மசூத்திரத்தில் இருந்து தொடங்கி அவரவர் தத்துவகொள்கைகளுக்கு அளிக்கப்பட்ட விளக்கங்களே ஒழிய பிரம்மசூத்திரம் உரைகள் அல்ல. அந்தந்த மத – தத்துவ மரபினர் அவற்றுக்குரிய உரைகளினூடாக அதை அணுகலாம்.
பொதுவாக அதை அணுக விரும்பும் தத்துவ மாணவர்கள் அந்நூலை வெறுமே உபநிடத தத்துவ விவாதப் பின்னணியில் புரிந்துகொள்ளவேண்டும். பிற்கால தத்துவ ஆசான்களின் விளக்கவுரைகளை அதன்பின் அறிவதே தெளிவை அளிக்கும். இந்த வகுப்பு அத்தகையது. இவ்வகுப்புக்கு முனி நாராயணப் பிரசாத்தின் விளக்கங்களும், ஐரோப்பியரின் சூத்திரப்பொருட்கோளுமே கருத்தில்கொள்ளப்பட்டன.
மதிய உணவுக்குப் பின் ஓய்வு. நள்ளிரவின் குளிர் போல நடுமதியம். அது போர்வைக்குள் ஒடுங்கிக்கொண்டு தூங்குவதற்கு தூக்கத்துக்கு மிக உகந்தது. மாலை நான்கு முதல் ஐந்து வரை ஒரு வகுப்பு. அதன்பின் ஒரு நீண்ட மாலைநடை.
அருகே இருந்த தேநீரகத்தில் மெத்தமைமேல் தலையணைகளில் சாய்ந்து அமர்ந்துகொண்டு தேநீர் அருந்துவது ஓர் இமையமலை அனுபவத்தை அளித்தது. திரும்பி வந்து ஏழு மணிமுதல் ஒன்பது மணிவரை மீண்டும் ஒரு வகுப்பு. இம்முறை உள்ளறையில் வகுப்பு. வெளியே நல்ல குளிர் தொடங்கிவிட்டிருந்தது. ஒன்பதுக்குப் பின் இரவுணவு. பத்துமணிக்கு படுக்கை.
மூன்றுநாட்களில் அங்கேயே ஒரு நாளொழுங்கு உருவாகிவிட்டிருந்தது. இரண்டாம் நாள் காலையில் எழுந்தால் நந்ததேவி துல்லியமாகத் தெளிந்து வானில் நின்றது. மலைகளுக்குமேல் அந்தரத்தில் ஒரு வெள்ளிக்கோபுரநிரை போல. பறந்துசெல்லும் பளிங்குத்தேர்களின் படை போல. மலையலையின் வெண்நுரைபோல. அன்று வகுப்பு அப்பனிமலைகளைப் பார்த்தபடி. அவ்வப்போது அந்தப் பனிமலைகளைப் பற்றிய குறிப்பும் வகுப்பில் எழுந்துகொண்டே இருந்தது.
21 மார்ச் 2015 முதல் 23 மார்ச் 2025 வரை மூன்றுநாட்களில் பிரம்மசூத்திரத்தின் பாதிப்பங்கை பயின்றோம். எஞ்சிய பங்குக்கு வழக்கமான இடத்தில் அடுத்த வகுப்பு நிகழும்.
நான், அருண்மொழி, சைதன்யா, சுசித்ரா ஆகியோர் 24 விடியற்காலை 3 மணிக்கு எழுந்து குளித்து நான்குமணிக்கு டாக்ஸியில் டெல்லிக்குக் கிளம்பினோம். பலர் பல குழுக்களாக திரும்ப திட்டமிட்டிருந்தனர். சிலர் உத்தரகாசி, ருத்ரபிரயாக் என. சிலர் ஆக்ரா, மதுரா என. நாங்கள் திருவனந்தபுரம் வழியாக நாகர்கோயிலுக்கு.
முழு விவாதத்திலும் நந்ததேவியின் மாபெரும் அருகமைவை உணரமுடிந்தது. நந்ததேவி. மகிழ்வின் அரசி. தேவி என இப்பகுதியில் ஆண்களுக்கும் பெயர் உண்டு. ஆனால் இச்சிகரத்தை நான் பெண் என்றே உருவகித்துக்கொண்டேன். ரஜதகிரீடதாரிணி. தேவதாத்மா.
தத்துவம், கலப்பற்ற தூய தத்துவம், உலகியல்வினாக்களுக்கெல்லாம் அப்பாலுள்ள அடிப்படை வினாக்கள் பற்றிய தத்துவம், கூரிய வாள்முனை பிற கூரிய வாள்முனைகளைச் சந்திப்பதுபோன்ற தர்க்கம் அளிக்கும் உள எழுச்சி என்பது மகத்தான கலையனுபவத்திற்கும் கவிதையனுபவத்திற்கும் நிகரான ஒன்று. அதை அகாலவெளியில் என ஒளிர்ந்து வானில் நின்றிருந்த இமையப்பனியடுக்குகளைப் பார்த்தபடி உசாவுவது என்பது ஒரு தவம். தவம் என்பது இனிமையிலிருந்து இனிமை நோக்கிச் செல்லக்கூடும் என்று உணர்ந்த நாட்கள்.
முழுமையறிவு காணொளிகள்சொ.சொ.மீ. சுந்தரம்
கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர். ஆன்மிகம், இலக்கியம் சார்ந்து பல நூல்களை எழுதினார். இலக்கிய நூல்களுக்கு உரை எழுதிப் பதிப்பித்தார். பேராசிரியராகப் பணியாற்றினார். திருவாவடுதுறை ஆதீனத்தால் ‘தமிழாகமச் சிந்தனைச் செல்வர்’ என்ற பட்டமளித்துச் சிறப்பிக்கப்பட்டார்.
சொ.சொ.மீ. சுந்தரம் – தமிழ் விக்கி
குமரிக்கல் பயணம்- நடராஜன்
தத்துவ வகுப்பில், நீங்கள் குமரிக்கல் பாளையத்தில் உள்ள நெடுகல்லைப்பற்றி கூறியபோதே அடுத்த முறை வகுப்பிற்கு வரும்போது அதை பார்க்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது. தத்துவ வகுப்பு மூன்றாம் நிலைக்கு வியாழக்கிழமை காலையிலேயே ஈரோடு வந்து சேர்ந்தேன். அங்கிருந்து குமரிக்கல் பாலயத்திற்கு நேரடி பஸ் இல்லாததால் முதலில் பெருந்துறை வந்து, விசாரித்தபோது குமரிக்கல் பாளையம் பற்றி எவருக்கும் தெரியவில்லை. பிறகு கோபி செல்லும் பேருந்தில் ஏறி சீனாபுரத்தில் இறங்கி ஒரு பெரியவரிடம் விசாரித்தபோது, அங்கு எதற்காக செல்லவேண்டும் என கேட்டார். நெடுகல்லை பார்க்க என சொன்னபோது, ஒரு கல்லைப் பார்க்க பாண்டிச்சேரியில் இருந்து வருகிறீர்களா? என சிரித்துக்கொண்டே கேட்டார். பிறகு அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்துக்கொண்டு கூகுள் மேப் உதவியுடன் குமரிக்கல் பாளையம் சென்றேன். ஆனால் அங்கே நெடுகள் தென்படவில்லை. ஆள் நடமாட்டம் ஏதும் இல்லை. ரோட்டில் ஆட்டோவை காத்திருக்க சொல்லிவிட்டு நான் அந்த வறண்ட நிலத்தின் ஒற்றையடிப்பாதையில் நடந்து சென்று நெடுகள் தெரிகிறதா எனப்பார்த்தேன், ஏமாற்றமே மிஞ்சியது.
சரி ஊருக்குள் சென்று விசாரிக்கலாம் என திரும்பி வந்தபோது ஒருவர் இருசக்கர வாகனத்தில் வந்தார். அவரிடம் விசாரித்தபோது, அவர் முக மலர்ச்சியுடன் நான் கூட்டிச்செல்கிறேன் என பைக்கில் ஏற சொன்னார். எப்படி இந்த இடம் தெரியும்? என கேட்டார். எழுத்தாளர் ஜெயமோகன் கூறினார் என நான் சொன்னபோது, அவர் இந்த இடத்தைப் பற்றி இணையதளத்தில் எழுதி இருக்கிறார், தெரியும் என அவர் கூறினார். அவருடைய பெயர் மோகன்ராஜ் எனவும், அங்கே 765 கிலோவாட் உயர்மின் கோபுரம் அமைக்க அரசுகள் தீவிரமாக முப்படுவதாவாகவும், அது வரும் பட்சத்தில் இந்த நெடுகல்லை எடுக்க வேண்டிவரும் என்றும் கூறினார்.
அதை எதிர்த்து 600 நாட்களுக்கு மேலாக நடக்கும் போராட்டம் பற்றியும், அதில் பங்கெடுக்கவே அங்கே செல்வதாகவும் கூறினார். நெடுகல் இருக்கும் இடம் வந்ததும் என்னை பார்த்து விட்டு வாருங்கள், போராட்டம் நடக்கும் இடத்திற்கு அழைத்துச்செல்கிறேன் என கூறினார்.
அந்த நெடுகல்லை நிமிர்ந்து பார்த்த சில வினாடிகள் எனக்கு ஏற்பட்ட பரவசத்திற்கும் நெகிழ்ச்சிக்கும் அளவேயில்லை. காரணம், நீங்கள் இவ்விடத்தைப்பற்றி வகுப்பில் கூறிய தகவல்களால் எனக்குள் வந்த சேர்ந்த முன்னறிவா? இல்லை இத்தனை ஆயிரம் ஆண்டுகள் அறுபடாமல் கடத்தப்பட்டு வந்த வரலாற்றுணர்வுத் தொடர்ச்சியா? எனப் பிரித்தறிய இயலவில்லை. அந்த கொளுத்தும் வெயிலில் அந்த நெடுகல்லை பார்க்கும்போது பூமி மேகத்தைப்பார்த்து ஒழுங்காக மழையாக பெய்ககிறாயா? இல்லை, உன்னை இந்தக்கல்லால் குத்திக்கிழிக்கட்டுமா? என மிரட்டுவது போலவே இருந்தது.
பிறகு போராட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று, அங்கிருந்த பானை ஓடுகளையும் இரும்புக் கற்களையும் காண்பித்து அந்த புராதன நெடுகல்லிற்கு 3 கிலோமீட்டர் சுற்றளவில் இவை நிறைய கிடப்பதாகவும் மத்திய மாநில அரசுகள் அங்கே அகர்வராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதின் அவசியத்தையும் எடுத்துக்கூறினார்.
ஆட்டோ வரும்போதே 30 நிமிடத்திற்கு மேல் காத்திருக்க முடியாது என கூறியது நினைவில் வர, அவசரமாக அங்கிருந்து கிளம்ப எத்தனித்தேன். அங்கிருந்த சதிஷ் என்பவர் மோகன்ராஜிடம் நீங்கள் சென்று ஆட்டோவை வேறு இடத்திற்கு வரச்சொல்லுங்கள் என கூறிவிட்டு என்னை அவருடைய பைக்கில் அழைத்துச்சென்று வாழைத்தோட்டத்தில் இருந்த இரண்டு சிலைகளையும் (புலிக்குத்திக்கற்கள்) மற்றும் புதுபிக்கப்பட்டிருந்த ஒரு பழைய பத்ரகாளியம்மன் கோவிலையும் காண்பித்தார்.
அங்கே வந்து சேர்ந்திருந்த ஆட்டோவில் நான் ஏற முற்பட்டபோது, ஆட்டோவை பத்திவிட்டு(அனுப்பிவிட்டு) வாங்க, ஜெயமோகன் “குமரிக்கல்லும் நீலிமலையும்” கட்டுரையில் குறிப்பிட்டிருந்த நீலிமலையை காண்பிக்கிறேன் என அவராகவே கூறினார். பிறகு நீலிமலைக்கு சென்று பார்த்தோம். வருடாவருடம் ஊர்மக்கள், அங்கே தை இரண்டாம் நாள் சாப்பாடு எடுத்து வந்து சாப்பிட்டுவிட்டு செல்வார்கள் எனவும் அந்த திருவிழாவிற்கு “பூப்பறிக்கிற நோம்பி” எனவும் கூறினார்.
பிறகு அங்கிருந்து அருகில் இருந்த விஜயமங்களம் சமனக்கோவிலுக்கு சென்றோம். அங்கே நான், கடந்த தத்துவ வகுப்பில் சந்தித்த பெண் ஒருவர் குறிப்புகள் எடுத்துக்கொண்டிருந்தார். அவர் ஆலயக்கலை இரண்டாம் வகுப்பில் கலந்து கொன்டவர் என்றும் தமிழ் விக்கியில் பதிவிடுவதற்காக அந்த கோவிலைப்பற்றி ஆராச்சி செய்வதாகவும் கூறினார். அவர் அந்த கோவிலைப்பற்றிய சுருக்கமான வரலாற்றையும் அங்கே இருந்த சிலைகள் பற்றியும் கூறியது ஏற்படுத்திய ஆச்சர்யத்தைக் காட்டிலும் அவருடைய ஆர்வமும் அந்த தகவல்களுக்கான மெனக்கிடலும் ஆச்சர்யம் அளித்தன. விரைவில் அந்த கோவில் பற்றிய நல்ல கட்டுரையை தமிழ்விக்கியில் எதிர்பார்க்கலாம் என நினைக்கிறேன்.
பசிக்கிறது சாப்பிடலாம் என்றேன். ஒரு நல்ல ஹோட்டல் இருக்கிறது என அழைத்துச்சென்றார். நான் மட்டுமே சாப்பிட்டேன், சதிஷ் சாப்பிடவில்லை. பிறகு என்னை குன்னத்தூரில் பஸ் ஏற்றிவிட்டு , இவ்வளவு தூரம் அவர் செய்த உதவிக்கு நன்றியை மட்டுமே பதிலாக பெற்றுக்கொண்டு விடைபெற்றார்.
அந்தியூரில் இருந்து வெள்ளிமலைக்கு செல்லும் கடைசி பேருந்தை பிடிக்கவேண்டும் என்ற அவசர கதியில் அனைத்து இடங்களையும் பார்த்தேன் என்றாலும் “just tick in the box” என்கிற அளவில் இல்லாமல் ஒரு செவ்வியல் நாவலை முதல் முறை படித்தது போன்ற உணர்வை அளித்தது இந்தப்பயணம். அதற்குக்காரணம், பார்த்த இடங்களும், அந்த நிலப்பரப்பும் மட்டுமல்ல, சந்தித்த மனிதர்களின் எதிர்பார்ப்பு இல்லாத அன்பும்தான். நமக்குத் தோன்றும் நியாயமான ஆசையை, இந்தப் பிரபஞ்சம் எப்போதும் நிறைவேற்றிக்கொடுக்கும் எனும், என்னுடைய நம்பிக்கை மேலும் வலுப்பெற்றது.
என்றென்றும் அன்புடன்,
நடராஜன் பா
அஜிதன், கடிதங்கள்
அன்புள்ள ஜெ
அஜிதனின் இரண்டுபாக பேட்டியும், முழுமையறிவு பக்கத்தின் உரையாடலும் பார்த்தேன். அவற்றில் பேசப்பட்டுள்ள பல விஷயங்கள் தொடர்ச்சியாகச் சிந்திப்பதற்குரியவை. இயல்பான உரையாடலில், அழுத்தாமல் அவற்றைச் சொல்லிச்செல்கிறார் என்பதனால் சாதாரணமான பேச்சாகவும் தெரிகிறது. ஆனால் தொடர்ச்சியாக நினைவில் அவை வளர்கின்றன.
இரண்டாம் பகுதியில் அஜிதன் வாக்னரை முன்வைத்துச் சொல்லும் விஷயங்கள் இன்றைய வாசகன் வெண்முரசை வாசிப்பதற்கும் மதிப்பிடுவதற்கும் மிக அவசியமான தத்துவ அடிப்படையை அளிப்பவை. அஜிதன் அவற்றை விரிவாகவே எழுதலாம். இங்கே நான் பார்த்தவரை நல்ல வாசகர்கள் என்று தோன்றுபவர்கள்கூட யதார்த்தவாத எழுத்துக்களையும், நவீனகால எழுத்துக்களையும் மதிப்பிடுவதற்கு பயன்படுத்தும் அதே பார்வையில் வெண்முரசை வாசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதன் சப்ளைம்களை எல்லாம் மிகை என்று பேசி எழுதுபவர்களை காணமுடிகிறது. அதிலுள்ள ஃபேண்டஸி அம்சங்களை எல்லாம் தகவல்களாக எடுப்பவர்களும் உண்டு. ஒரு நல்ல விமர்சனப்பார்வை என்பது படைப்பை புரிந்துகொள்வதற்கான ஒரு நல்ல அடிப்படையை அமைக்கவேண்டும். அஜிதனின் பார்வை மிக உதவியானதாக இருந்தது.
ரா. சிவக்குமார்
அன்புள்ள ஜெ
அஜிதனின் பேட்டி சிறப்பாக இருந்தது. அதில் குறிப்பிடப்படும் பல ிஷயங்களைப் பற்றி யோசித்துக்கொண்டே இருந்தேன். போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் வரிகள்கூட முக்கியமானவையாக இருந்தன. ’கவிதை என்றால் என்ன என்று வரையறை செய்வது கவிதைக்கும், தத்துவம் என்றால் என்ன என்று வரையறை செய்வது தத்துவத்துக்கும் எல்லா காலத்திலும் முக்கியமான பேசுபொருளாக இருந்துள்ளது’ என்பது போன்ற வரிகள் உரையாடல் முழுக்க நிறைந்துள்ளன. நல்ல பேட்டி.
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers