Jeyamohan's Blog, page 143

March 24, 2025

மொழிகளை அறிதல் தேவையா- கடிதம்

குறைந்தது பதினெட்டு வருடங்களாக இந்த சிக்கல்களைப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் நான் பார்க்கும்போது இந்திய நாட்டின் கல்விமுறை மீதுதான் கடுங்கோபம் வருகிறது. 

மொழிகளை அறிதல் கடிதம்

[image error]

You are constantly presenting Guru Nitya Chaitanya Yati in your events. Is the purpose of this organisation to present the ideas of Nitya Chaitanya Yati?

Propagating Yati?
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2025 11:30

March 23, 2025

மதமும் தத்துவமும் வேறுவேறு

உலகம் முழுக்க மதமும் தத்துவமும் ஒன்றாகவே இருந்தன. மதம் சாராத தத்துவம் என்பது ஐரோப்பாவில் பதினாறாம் நூற்றாண்டு முதல் மெல்ல மெல்ல உருவாகி வந்த ஒன்று. இந்தியாவில் தத்துவத்தில் பதிமூன்றாம் நூற்றாண்டுக்குப்பின் ஒரு தேக்கநிலையே உருவானது. முன்னோர்சொல் என்ற அளவிலேயே முந்தைய தத்துவ நூல்கள் அணுகப்பட்டன. அவற்றை முன்னெடுத்துச்செல்லும் புதிய தத்துவக்கொள்கைகள் உருவாகவில்லை. ஆகவே இந்திய தத்துவம் இன்று மததத்துவமாகவே கிடைக்கிறது. ஆனால் அது மதத்திற்குள் ஒடுங்குவது அல்ல. இன்று நவீனக்கல்வி கொண்ட ஒருவர் தத்துவத்தை மதத்தில் இருந்து பிரித்து பிரபஞ்சவியலாக அணுகமுடியும், சமகால வாழ்க்கை சார்ந்து விளக்கமுடியும். அவ்வாறு செய்தே ஆகவேண்டியது இன்றைய கட்டாயம்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:36

நாம எவ்ளவோ பரவால்ல!

அண்மையில் நெல்லை அருகே மாணவனை பேருந்தில் ஏறி வெட்டிய நிகழ்வை ஒட்டி ஒரு நண்பர் என்னுடைய ஆலம் நாவலை நினைவுகூர்ந்து பேசிக்கொண்டிருந்தார். பார்வதிபுரம் கருப்பட்டிக் காப்பிகடை என்னும் டீக்கடையில். (பார்வதிபுரத்தில் உட்கார்ந்து டீ குடிக்கும் வசதிகொண்ட ஒரே கடை) பார்வதிபுரத்தில் ஒரு வாசகர் என்னும் பரவசத்தை அடைவதற்குள் அவர் தோவாளையைச் சேர்ந்தவர் என்று சொன்னார். (நெல்லை அருகே மாணவர் மேல் அரிவாள் வெட்டு. செய்தி)

பேசும்போது அவர் சொன்னார். “இதெல்லாம் திருநெவேலியிலே வழக்கமா நடக்கப்பட்டதுதான் சார். அங்கெல்லாம் நம்மூர் மாதிரி இல்லை”

நான் நாகர்கோயில் கொலையை பற்றிச் சொன்னேன். மளிகைக்கடை வைத்திருக்கும் ஒரு சாமானியர் இரவு 11 மணிக்கு கடைமூடிவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் போதைஆசாமிகள் வழிமறித்து அவரிடமிருந்த சிறுதொகையை பிடுங்கிவிட்டு அவரை கல்லால் அடித்து கொன்று பெட்ரோல் விட்டு கொளுத்திவிட்டுச் சென்றுவிட்டனர். ( நாகர்கோயிலில் வியாபாரி எரித்துக்கொலை)

“அப்டியா?” என அவர் வியந்தார். “ஆனா அதெல்லாம் அடிக்கடி நடக்கிறதில்லை…இங்கெல்லாம் அப்டி இல்ல”

“இல்லியே….அதுக்கு முன்னாடி ஒரு லாயரை எரிச்சிருக்காங்களே”  (வழக்கறிஞர் எரித்துக்கொலை)

”அப்டியா?” என்றார்.

“அதுக்கு முன்னாடி இருளப்பபுரத்திலே இதே மாதிரி ஒருத்தரை எரிச்சிட்டாங்க” (இருளப்பபுரத்தில் எரித்துக்கொலை)

“இருக்கலாம், ஆனா திருநெவேலி அளவுக்கு இல்லை”

நான் மேற்கொண்டு பேசவில்லை. அது நடுத்தர வர்க்க மனநிலை. ‘மற்றவர்கள்’ ‘மற்ற இடங்கள்’ மோசமானவை. ‘நாம்’ ‘நமது இடம்’ பரவாயில்லை. அப்படித்தான் வாழமுடியும் இந்த எளிய வாழ்க்கையை.

ஆலம் வெளிவந்தபோது வண்ணதாசன் எழுதியதை எவரோ எனக்கு காட்டினர். நான் எழுதிய அந்த திருநெல்வேலியை அவர் அறிந்ததில்லை, நான் வேறொரு திருநெல்வேலியை எழுதுகிறேன், அது எங்கிருக்கிறது என்று தெரியவில்லை- என்று எழுதியிருந்தார். நான் சொன்னேன். அது உண்மை, அவருக்கு உண்மையிலேயே தெரிந்திருக்காது. அவர் வாழும் உலகம், அவர் வாழும் காலம் முற்றிலும் வேறொன்று.

படுகளம் வெளிவந்தபோது நெல்லையின் வட்டித்தொழில் பற்றி அப்படி ஒரு சித்திரத்தை ‘கேள்விப்பட்டதே இல்லை’ என்று சிலர் எழுதியிருந்தனர். அதாவது எந்த உண்மையும் அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்ததாக இருந்தால்தான் அது உண்மை. இது ஒரு நடுத்தரவர்க்க நம்பிக்கை. அதை நம்மால் கலைக்கவே முடியாது.

அதே நெல்லையில்தான் ஆண்டுகளுக்கு முன் கந்துவட்டி கொடுமை தாளமுடியாமல் குழந்தைகளையும் எரித்து தானும் எரிந்து ஒரு குடும்பம் பலியாகியது. மாவட்ட ஆட்சியர் மேலேயே குற்றம்சாட்டப்பட்டது, அவருடைய கண்முன் எரிந்தது. குற்றவாளிகளை பலமுறை அவர்கள் எழுத்துமூலமாக அடையாளம் காட்டியிருந்தனர். தற்கொலைக்குறிப்பிலும் சொன்னார்கள். என்ன நடந்தது? யாருக்காவது ஞாபகம் இருக்கிறதா?  (நெல்லையில் கந்துவட்டி தற்கொலை)

அதே நிகழ்வு மீண்டும் தொடர்வதாக ஊடகங்கள் சொல்கின்றன. (ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலை முயற்சி) ஆனால் நமக்கு அது கண்ணிலேயே படாது. ஏனென்றால் நமக்கு ஆர்வமில்லை. நம் சிறு உலகில் அவற்றுக்கு இடமே இல்லை.

இப்போது நெல்லையில் நில அபகரிப்புக்காக கொலை. (நெல்லையில் காவல் அதிகாரி கொலை). அவர் அந்த நில அபகரிப்பு பற்றி முதலமைச்சர் வரை மனு கொடுத்திருக்கிறார். காவல்துறை தன் புகார்களை விசாரிக்காமலேயே மூடுவதாகவும், தனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்படுவதாகவும், அதற்குக்   காவல்துறையே உடந்தை என்றும் காணொளி வெளியிட்டிருக்கிறார்.

ஆனாலும் கொலை. அதிலும் நல்ல விடிந்த காலையில் நடுச்சாலையில் வைத்து கூலிப்படையினர் கொன்றிருக்கிறார்கள். வழக்கபோல சிலர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர். போலீஸார் புலன்விசாரணை செய்கின்றனர். முதல்தகவல் அறிக்கை, குற்றப்பத்திரிகை, ஜாமீன், விசாரணை பல ஆண்டுகள் நீள அடுத்தடுத்த கொலைகள். இந்தச் சித்திரம்தான் இப்படியே ஆலம், படுகளம் நாவல்களில் உள்ளது. ஆனால் நம்மவருக்கு அது தெரியாது, கேள்விப்பட்டதே இல்லை!

பிகாரில் ஒரு பாலம் கட்டியதுமே இடிந்தது. ‘அய்யய்யே பிகாரைப் பார்த்தீங்களா? பீடா வாயனுங்க’ என தமிழகத்தில் கெக்கலிப்பு. தமிழகத்தில் திருவண்ணாமலை அருகே கட்டிய பாலம் ஒரே மாதத்தில் இடிந்தது. இங்கே எவருக்குமே அது செய்தியாக கண்ணுக்குப் படவில்லை. (பதினாறு கோடியில் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது). ஆளும்கட்சியினரும், ஆளும்கட்சியின் அடிவருடும் எழுத்தாளர்களும் பாலம் இடிந்ததை நியாயப்படுத்திக்கூட எழுதினார்கள்.

நமக்கு எல்லாமே அரசியல்தான். நம்கட்சி ஆட்சியில் இருக்கும்போது எல்லாமே சரி, இல்லை என்றால் எல்லாமே தப்பு. நம்முடைய ஊர் நல்லது, பிற ஊர்கள் தப்பு. இதை நான் கேரளத்திலும் பார்க்கிறேன். மலையாளிகளுக்கு கேரளம் வேறு நிலம். ‘இதெல்லாம் கேரளத்திலே நடக்காது’ என்பார்கள்.

நூறு நாற்காலிகள் மலையாளத்தில் வெளியானபோது அதை ஒரு தமிழக நிலைமை என்றே அங்கே சொன்னார்கள். மேடையில் ஒருமுறை ஒருவர் ‘இதெல்லாம் கேரளத்தில் இல்லை’ என்றபோது நான் கேரளத்தில் இருந்து தொடர்ச்சியாக உதாரணங்களைச் சுட்டிக்காட்டினேன். அமைதியாகிவிட்டார்.

இன்று காலை ஒரு செய்தி வாசித்தேன். நாற்பதாண்டுகளுக்கு முன் ஒரு தலித் கிராமத்துக்குள் நுழைந்த உயர்சாதி (டாக்கூர்) கொள்ளையர்கள் அந்த மொத்த கிராமத்தையே சுட்டுத்தள்ளினர். பிரதமர் இந்திராகாந்தி நேரில் சென்று ‘உரிய நடவடிக்கை’ எடுக்கப்படும் என்றார். எதிர்கட்சித்தலைவர் வாஜ்பாய் கண்டித்தார். தலித் தலைவர்கள் கொதித்தனர்.

குற்றவாளிகள் மேல் வழக்கு தொடுக்கப்பட்டது. இப்போது தீர்ப்பு வந்துள்ளது, நாற்பதாண்டுகளுக்குப் பின். பெரும்பாலான குற்றவாளிகள் வயதாகி இயற்கை மரணம் அடைந்துவிட்டனர். பலர் அதன் பின்னரும் பல குற்றங்களில் ஈடுபட்டனர். பலர் அரசு வங்கி கடனெல்லாம் வாங்கி தொழில் செய்தனர். குடும்பம் குட்டியோடு வாழ்ந்து மடிந்தனர்.  மூன்று வயோதிகர்கள் எஞ்சியிருக்கிறார்கள். அவர்களுக்கும் பிரச்சினை இல்லை – இது முதல் தீர்ப்பு. இனி மூன்று மேல்முறையீடுகள் உள்ளன. உச்சநீதிமன்றம் வரைச் செல்லலாம். இன்னும் குறைந்தது இருபதாண்டுகள். அதற்குள் சுகமரணம் அடையலாம்.

‘ஆகா வடக்கனுங்களை பாருங்க’ என்று உற்சாகமடையலாம் என்றால் இங்கே இப்படி எத்தனை வழக்குகள் கிடக்கின்றன என்று எனக்கே தெரியும். ஆகவே பெருமூச்சு மட்டுமே விடமுடியும். வேண்டுமென்றால் ஒரு நாவல் எழுதலாம். நாலைந்து பிள்ளைப்பூச்சிகள் கிளம்பி வந்து “நம்பவே முடியலை…இதெல்லாம் நடக்குமா? கேள்விப்பட்டதே இல்லை…இதெல்லாம் எந்த ஊர்லே?” என்று விமர்சனமும் செய்வார்கள். நாலைந்து அரசியலாத்மாக்கள் வந்து “அய்யயோ தமிழ்நாடு முன்னேறிய மாநிலம்…நாம் ஐரோப்பாவுக்கே சமம். காரணம் எங்க தலைவர்கள்தான்…இதெல்லாம் அவதூறு” என்பார்கள்.

ஆலம் வாங்க

நூறு நாற்காலிகள் வாங்க  ஆலம் மின்னூல் வாங்க ஆலம் நூல் வாங்க – விஷ்ணுபுரம் பதிப்பகம் படுகளம் வாங்க ஆலம்- வி.எஸ். செந்தில்குமார் அழியா நஞ்சு- இ.ஆர்.சங்கரன் ஆதிநஞ்சின் கதை ஆலமும் படுகளமும்- கிருஷ்ணன் சங்கரன் படுகளம், வாசிப்பு பேருரு வீழ்தல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:35

எஸ்.ஶ்ரீகுமார்

பேராசிரியர் இரா. மோகனின்னின் மாணவரான முனைவர் ஸ்ரீகுமார், மோகனைப் போலவே ஆய்வு மாணவர்கள் பலரை ஊக்குவித்து ஆய்வியல் நிறைஞர், முனைவர் பட்டங்கள் பெற உதவினார். தமிழிலக்கியத்தின் பல்வேறு பரிமாணங்களை வெளிக் கொணர்வதில் ஆர்வம் கொண்டு செயல்பட்டார்

எஸ்.ஶ்ரீகுமார் எஸ்.ஶ்ரீகுமார் எஸ்.ஶ்ரீகுமார் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:34

நாறும்பூநாதன், தமிழ்விக்கி

அன்புள்ள ஜெ

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நெல்லை புத்தகவிழாவில் (நீங்கள் கலந்துகொண்டீர்கள் என்று நினைவு. யுவன் சந்திரசேகரும் வந்திருந்தார்.) நாறும்பூநாதனும் நீங்களும் பேசிக்கொண்டிருந்தீர்கள். அப்போது ஒரு முற்போக்கு இலக்கிய எழுத்தாளர் உங்களை மிகக்கடுமையாக விமர்சித்தார். அவன் இவன் என்றெல்லாம் வசை. தமிழ்விக்கி என்ற அதிகாரத்தைக் கட்டமைக்கிறீர்கள், அதன் வழியாக எழுத்தாளர்களை மதிப்பிட்டு தீர்ப்புசொல்லும் பீடமாக உங்களை ஆக்கிக்கொள்கிறீர்கள் என்றெல்லாம் சொன்னார். தமிழ்விக்கியை உடனே தடை செய்யவேண்டும், அதிலுள்ள தகவல்கள் மேல் வழக்குபோடவேண்டும் என்றெல்லாம் சொன்னார். கூட இரண்டு பேர் நின்று அதை ஆதரித்தார்கள்.

முற்போக்கு எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைந்தபோது கூகிளில் தேடினால் வந்த முதல் பதிவு தமிழ்விக்கி போட்டது. நான் உட்பட அத்தனை இதழாளர்களும் அதைக்கொண்டுதான் செய்தி போட்டோம். எல்லா இடங்களிலும் தமிழ்விக்கியின் அடிப்படையில்தான் அஞ்சலி, புகழ்மொழி எல்லாம் வந்துகொண்டிருந்தது. (ஆனால் தமிழ்விக்கியை எவரும் குறிப்பிடவுமில்லை. இணையத்தில் இருந்து எடுத்த தரவுகள் என்றுதான் சொன்னார்கள்)

வசைபாடியவர்கள் தமிழுக்கு எதுவுமே செய்ததில்லை. செய்யவும் ஏலில்லை. ஆனால் செய்பவர்கள் மேல் அப்படி ஒரு காழ்ப்புடன் அலைகிறார்கள். மனநோயாளிகள் என்றுதான் சொல்லவேண்டும். இத்தனை மனச்சிக்கல்களையும் பொருட்படுத்தாமல் உங்கள் பணிகளில் முன்னால்சென்றுகொண்டே இருக்கிறீர்கள். அந்த அர்ப்பணிப்பும் சேவையும் தலைவணங்கத்தக்கவை

ஆர்

இரா நாறும்பூநாதன் தமிழ் விக்கி

அன்புள்ள ஆர்,

தமிழ்விக்கியை குறிப்பிடவேண்டியதில்லை. இணையவெளியில் தரவுகள் கிடைக்கவேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஒரு காலகட்டத்தில் தமிழிலக்கியவாதிகள் பற்றிய தரவுகளே எங்கும் இல்லை. நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் எழுதும்போது நான் நேரில் ஒவ்வொருவரையாகக்கூப்பிட்டு அவர்களின் பிறந்த ஊர், தேதி போன்ற செய்திகளை கேட்டு பதிவுசெய்தேன். தமிழ்விக்கியிலும் அப்படித்தான்.

அந்த ஆவணப்பதிவுதான் எழுத்தாளர்களை வரலாற்றில் வாழவைக்கிறது. அதிலும் முன்னோடிகள் பற்றிய மதிப்பீடுகளில் திட்டவட்டமாக அவர்களின் இடம் வகுக்கப்பட்டிருப்பதைக் காணலாம், அதைத்தான் இன்று கல்வித்துறைகூட பின் தொடர்கிறது.

புகழ்மொழி செல்லவேண்டியது பெயர்கூட பதிவாகாது என்று தெரிந்தும் எந்த தனிப்பட்ட பயனும் இல்லாமல் இதில் பங்களிப்பாற்றும் என் நண்பர்களுக்கே. (அவர்களில் பலர் இங்கே பங்களிப்பாற்றுவதையே வெளியே சொல்வதில்லை. தெரிந்தால் பலர் வசைபாடுகிறார்கள் என்பதனால்)

எல்லா காலகட்டத்திலும் பெரிய முயற்சிகளுக்கு எதிராகச் சிறிய உள்ளங்கள் இப்படித்தான் செயல்பட்டுள்ளன. உ.வெ.சா, எஸ்.வையாபுரிப்பிள்ளை, மு.அருணாசலம், பெரியசாமித் தூரன் உட்பட அனைவரும் சந்தித்தச் சிறுமைதான் இது. நான் எம்மாத்திரம்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:31

அருமருந்து

பிப்.28, மார்ச் 1,2 தேதிகளில் உளக்குவிப்பு பயிற்சி வெள்ளிமலையில் என்ற அறிவிப்பு உங்கள் தளத்தில் கண்டேன். சென்ற வருடமே கிளம்ப ஆயத்தமாகி இந்த முறை கைகூடியது. நெடுநாட்களாக தூக்கமின்மை, மனம் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தேன். புதுவையில் இருந்து யார் யார் வருகிறார்கள் என்று தெரியாத நிலையிலும் தனி ஒருத்தியாக வெள்ளிமலை கிளம்பிவிட்டேன்.

அருமருந்து

Guru Nitya Chaidhanya Yati once said, “Advaita Vedanta is like sulfuric acid. We can’t use it for our routine tasks because it’s so fierce. We have to dilute it. It has a chemical faculty, it absorbs humidity from the air, and it dilutes itself. You can only find water in that vessel if you keep it open in a room for some time. Sankara’s Advaita vision was immediately diluted by his disciples. For more than a thousand years, scholars have worked hard to add water to it. Now we have just water in the vessel with the Advaida brand name on it.

 

The Young Advaita
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2025 11:30

March 22, 2025

அபிநயதர்ப்பணம்

[image error]நாட்டியக் கலை பற்றிய வடமொழி நூல். நந்திகேஸ்வரரால் இயற்றப்பட்டது. இதன் காலம் பத்தாம் நூற்றாண்டு. வீரராகவையன் என்பவர் அபிநய தர்ப்பணத்தைத் தமிழில் மொழிபெயர்த்தார். உ.வே.சா. நூல் நிலையம் இம்மொழிபெயர்ப்பை வெளியிட்டது. நாட்டியத் தோற்றம், நாட்டிய இலக்கணம் பற்றிய முழுமையான செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

அபிநயதர்ப்பணம் அபிநயதர்ப்பணம் அபிநயதர்ப்பணம் – தமிழ் விக்கி
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 11:34

கண்ணகியின் நகர்

கொடுங்கோளூர் கண்ணகி வாங்க

முனைவர் வி.ஆர்.சந்திரன் எழுதிய இந்த ஆய்வு நூலை கொற்றவை நாவல் வெளிவந்த காலகட்டத்தில், ஜெயமோகன் அந்நாவலை புரிந்து கொள்ள உதவும் என்ற நோக்கில் மலையாளத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

      இந்த ஆலயம் எப்போது யாரால் கட்டப்பட்டது என்பதற்கான திட்டமான ஆதாரம் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. கேரள மகாத்மியம் என்னும் நூலில் இக்கோயிலை பற்றிய புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது. இவ்வாலயத்தின் தெற்கே சுமார் ஒரு கிமி தொலைவில் மூலப்பதிட்டை ஒன்று இருந்ததாகவும் அங்கு பரசுராமர் பராசக்தியை நேரில் கண்டதாகவும் அன்னைக்கு ஆயிரம் குடம் மதுவும் ஆயிரம் கோழிகளை பலியாகத் தந்து அன்னையை அங்கு நிறுவியதாகக் கூறப்படுகிறது. பழந்தமிழகத்தில் வாழ்ந்த நாகர்களின் தெய்வம் தான் காளி அல்லது கொற்றவை. நாகர்கள் தான் ஆரம்ப காலத்தைய காளிகாவுகளை நிறுவியவர்கள் . (காவு என்றால் காடு என்று பொருள்)

      கண்ணகி மதுரையை எரித்த பிறகு வைகை வழியாகவே சென்று சேர நாட்டின் செங்குன்று மலை மீது ஏறி நின்றாள். ஒரு வேங்கை மரத்தின் அடியில் நின்ற போது கோவலன் தேவர்கள் சூழ விண்ணகர ஊர்தியில் கண்ணகியை தன்னுடன் அழைத்துச் சென்றான்.காடு காணும் பொருட்டு சென்ற சேரன் செங்குட்டுவனிடம் காட்டுக் குறும்பர்கள் கண்ணகியை பார்த்த கதையை சொல்ல சேர மன்னன் இமயத்திலிருந்து கல் கொண்டு வந்து தனது தலைநகரான வஞ்சியில் தற்போதைய கொடுங்கல்லூரில் கண்ணகிக்கு கோயில் எழுப்பினான்.

     கோவிலின் ஸ்ரீமூலஸ்தானம் என்று கூறப்படும் மேற்கு நோக்கி இருக்கும் மூலக்கருவரை இன்று முழுவதுமாக மூடப்பட்டிருக்கிறது.இங்குதான் ஆதிசங்கரர் ஸ்ரீ மகாமேரு சக்கரத்தை வைத்து தேவியை பதிட்டை செய்ததாக நம்பப்படுகிறது. ஆதியில் இந்த கருவறையே வழிபடப்பட்டிருக்கிறது ஆனால் பின்னர் என்ன காரணத்தினாலோ முற்று முழுதாக இந்த கருவறை மூடப்பட்டு வடக்கு முகம் பார்த்து உருவாக்கப்பட்ட புதிய கருவறையில் தேவி நிர்மாணிக்கப்பட்டு அந்த கருவறையே இப்பொழுது வணங்கப்படுகிறது.

       எட்டு கைகள் கொண்ட தேவியின் சிலையில் ஒரு கையில் சிலம்பு இருக்கிறது. இது கண்ணகி சிலை என்பதை ஊர்ஜிதப்படுத்தும் அத்தாட்சியாக இது இருக்கிறது.அம்மையின் வலது காதில் தங்கத்தால் ஆன சிம்மமும் இடது காதில் யானையும் குழைகளாக அணியப்பட்டுள்ளன. கோயிலுக்கு வெளியே கோயிற் காவலனான ஷேத்திரபாலனின் சிலை நிறுவப்பட்டுள்ளது. இச்சிலை சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதத்தின் சிலையாக இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது.

      வருடத்தில் மூன்று திருவிழாக்கள் மிக முக்கியமாக கொண்டாடப்படுகின்றன. புரட்டாசி ( கன்னி) மாதத்தில் கொண்டாடப்படும் நவராத்திரி திருவிழா கலைகளுக்காகவும் அறிவு வளர்ச்சிக்காகவும் ஆடல் பாடலுடன் கொண்டாடப்படுகின்றது. இரண்டாவது மார்கழி மாதம் முதல் நான்கு நாட்கள் கொண்டாடப்படும் தாலப்பொலித் திருவிழாவாகும். பல்வேறு கோவில்களில் இருந்து கொண்டு வரப்படும் தாலங்கள் யானைகளின் மீது ஏற்றப்பட்டு ஊர்கோலமாக கொண்டு செல்லப்படுகின்றன.

       மீன மாதம் நடைபெறும் பரணி திருவிழா தான் மிக முக்கியமான திருவிழா ஆகும். இது தமோ குணம் ஓங்கிய திருவிழா என்பது மரபு. ஏகப்பட்ட சடங்குகளும் சம்பிரதாயங்களும் சமூகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள சாதி மக்களால் முறையாகவும் விட்டுக் கொடுக்கப்படாமலும் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு மக்களுக்கும் தனித்தனியாக உகுந்த மரியாதை தரப்படுகின்றன. ஒவ்வொரு சடங்கு சம்பிரதாயங்களுக்கும் பின்னாலும் வரலாற்று நிகழ்வுகளும் அந்த சடங்குகள் ஏன் ஏற்பட்டன என்பதற்கான காரண காரியங்களும் மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளன. மிகப் பழமையான இந்த கோயில் காலத்தின் பல்வேறு சரித்திர சம்பவங்களையும் பார்த்து வந்துள்ளது. இதனால் சமூகத்தின் பல்வேறு நிலையில் உள்ள மக்களும் இந்த கோயிலில் உள்ள திருவிழாக்களினால் மிகவும் இறுக்கமாக பிணைக்கப்பட்டுள்ளனர். ஒரு சமூக மக்கள் இல்லை என்றால் திருவிழாவே இல்லை என்று ஆகும் அளவிற்கு ஒவ்வொரு சடங்குகளும் மிக முக்கியமாக செய்யப்படுகின்றன.

     கேரள வரலாறு மட்டுமல்லாமல் தமிழக வரலாற்றுக்கும் மிக முக்கியமான இடத்தை இந்த கொடுங்கல்லூர் பகவதி அம்மன் கோவில் கொண்டுள்ளது. பல லட்சக்கணக்கான மக்களால் வழிபடப்படும் இந்த கோவில் பக்திக்கு மட்டுமல்ல சரித்திரத்திற்கும் மிகப் புகழ்பெற்று விளங்குகிறது.

கிரிதரன்’

வாசிப்பை நேசிப்போம் குழுமம்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 11:31

சென்றகாலக் கொடுங்கனவு- கடிதம்

வெள்ளையானை வாங்க வெள்ளையானை மின்னூல் வாங்க

அன்புள்ள ஜெ,

சமீபத்தில் நீண்ட நாளுக்கு பிறகு ஒரு நாவலை படித்து முடித்தேன். வெள்ளை யானை ஆச்சரியம் என்னவென்றால் படிக்கத் தொடங்கிய முதல் வரியிலிருந்து கடைசி வரை முழுக்க முழுக்க அந்தக் காலத்தில் பயணிக்க முடிந்தது. நாவல் முழுக்கவே ஹைடன் பார்வையிலேயே அந்த காலத்து மெட்ராஸ் இருந்தது. அவன் அனுபவிக்கிற   அனுபவித்த உணர்வுகள் அனைத்தும் உங்கள் எழுத்து மூலமாக எனக்கு கடத்தப்பட்டது. 

உண்மையிலேயே இப்படி ஒருவன் இருந்து இது போன்ற ஒரு உணர்வுகளோடு வாழ்ந்திருப்பான் என்பதை என் ஆழ்மனம் மிகவும் அழுத்தமாக நம்புகிறது. நம்முடைய காலகட்டம் மனித வாழ்வியலில் மிகச்சிறந்த காலகட்டம் என்பதை நீங்கள் பல்வேறு தருணங்களில் வலியுறுத்துவதை இந்த நாவலில் மனிதர்கள் மன்னிக்கவும் மனிதர்கள் என்ற போர்வையில் அந்த ஜீவன்கள் நகரத்திலும் நகரத்துக்கு வெளியிலும் கையாளப்பட்டதை பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது. பரதேசி படத்தில் ஆங்கிலேய முதலாளிகள் சந்தித்து கொண்டு அவளுடைய தோட்டத்திலே விளைந்த அளவுகளையும் மறைந்த மனிதர்கள் எண்ணிக்கையும் விருந்துக்கு மத்தியிலே கேள்வி உடன் சொல்லிக் கொள்வார்கள். அதைக் கேட்ட கணத்தை நான் நினைவு கொண்டேன் . மனித வாழ்விற்கு அவ்வளவு தான் மரியாதை இந்த காலத்தில். இப்போது இந்த புனைவு மேலும் அழுத்தம் திருத்தமாக நாம் கடந்து வந்த பாதைகளை தெளிவாகத் தெரிய வைக்கிறது. சமூக ஏற்றத்தாழ்வுகள் நம்முடைய நாட்டை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது நாம் எந்த அளவிற்கு அதில் இருந்து வெளியே வர தேவை இருக்கிறது என்பதை வெள்ளை யானை மிக ஆழமாக எனக்கு புரிய வைக்கிறது. 

இந்தப் புனைவை வாசித்த பின் ஜாதிப் பற்றாளர்களை கண்டால் நீலமேகமும் துரைசாமியும் என் கண்முன்னே வந்து நிற்கிறார்கள். 

Fort St George on the Coromandel Coast. Belonging to the East India Company of England

வேறு யாரும் கொண்டு வர முடியாத வரிகளில் வலியை உணர்த்தக்கூடிய எழுத்து உங்களுடையது. சூழல் மாறும் பொழுது மனிதன் சற்று மாறுவது இயல்புதான் என்பதை இந்த நாவலின் கடைசியில் சொல்லி இருப்பது சிறப்பு. அந்தக் காலத்து சுதந்திரப் போராட்டத்தை விட சமூகம் எந்த அளவுக்கு ஜாதியால் பிரிந்து இருந்தது என்பதை பார்க்கும் பொழுது என் மனம் மீண்டும் மிக உறுதியாக இந்த ஏற்ற தாழ்வுகளுக்கு எந்த சூழலிலும் இடம் அளிக்கக் கூடாது என்பதை உணர்ந்தேன் 

நன்றி 

S.நடராஜன்

கோவை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 11:31

Is Bhakti movement against Indian philosophical tradition?

The cultural movement that is flourishing in India is the Bhakti movement. Indilogista may say that India itself is the creation of the Bhakti movement. Hundreds of sages and poets have emerged and kept the Bhakti movement alive to this day.

Is Bhakti movement against Indian philosophical tradition?

 

 

For want of a nail, a war is lost.என்ற ஆங்கில சொல்லாடல் ஞாபகத்திற்கு வந்தது.Social Conformity பற்றி எடுத்துரைத்தீர்கள்.Max weber என்ற சமூகவியலாளர் Functionalism என்ற சமுகவியல் கோட்பாட்டில் இதைத்தான் கூறுகிறார்.

ஒத்திசைவு- கடிதம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 22, 2025 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.