Jeyamohan's Blog, page 137

April 2, 2025

க. பூரணச்சந்திரன்

[image error]க.பூரணச்சந்திரன் தமிழ் கல்வித்துறையில் இருந்து நவீன இலக்கியத்தை அணுகியவர். இலக்கிய விமர்சகர், அழகியல் கோட்பாட்டாளர், இலக்கிய வரலாற்றாசிரியர் ,மொழிபெயர்ப்பாளர் ஆகிய தளங்களில் பங்களிப்பாற்றியவர். தொடக்க காலகட்டத்தில் மார்க்ஸிய அழகியல் நோக்கை சார்ந்து இயங்கியவர், பின்னர் பின்நவீனத்துவ சிந்தனைகளை ஒட்டி ஆய்வுகள் செய்பவராக ஆனார். அமைப்புவாதம், பின்அமைப்புவாதம், பின்நவீனத்துவம் பற்றிய கல்வித்துறை சார்ந்த அறிமுகநூல்களை எழுதினார். நவீன தொடர்பியல்கொள்கைகள், ஏற்பியல்கொள்கைகள் சார்ந்தும் அறிமுகநூல்களை எழுதியிருக்கிறார். தமிழில் இலக்கியக் கோட்பாடுகள் சார்ந்த விவாதக்களத்தை உருவாக்குவதிலும், இலக்கியவரலாறு சார்ந்த பின்புலப்புரிதலை உருவாக்குவதிலும் முக்கியமான பங்களிப்பாற்றிய அறிஞராகக் கருதப்படுகிறார்.

க.பூரணச்சந்திரன் க.பூரணச்சந்திரன் க.பூரணச்சந்திரன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 11:34

மார்த்தாண்டம் மேன்

நாங்கள் மார்த்தாண்டம் ‘ஏரியா’க்காரர்கள். எங்கள் மொழி தமிழர், மலையாளிகள் இரு சாராரையுமே திகைக்கச் செய்வது. மையநிலத் தமிழை தெலுங்கு ஊடுருவல் அழித்தது. மலையாளத்தை சம்ஸ்கிருதம் ஒரு ஸ்குரூ போல ஆக்கிவிட்டது. நாங்கள் பேசுவதே செந்தமிழ்.

ஆகவே எங்கு போனாலும் எங்களை கேலி செய்கிறார்கள். ஆனால் அந்தக் கேலியால் தாழ்வுணர்ச்சி அடைவது எங்கள் இயல்பு அல்ல. எங்கள் பிரச்சினை மேலுணர்ச்சி. ஆகவே நாங்கள் பிறரை கேலி செய்து வென்று மேலே செல்வோம். இந்தியாவில் எங்கானாலும் மார்த்தாண்டம் வட்டாரர்களுக்கு அவர்களின் தொழிலில் தனித்தேர்ச்சி இருக்கும், பெரும்பாலும் செயல்வீரர்கள், வெற்றியாளர்கள்.

அந்த ‘மார்த்தாண்டம் ஆட்டிடியூட்’ அற்புதமாக வந்த வீடியோ இது. ஒரெ ஒரு திருத்தம், மார்த்தாண்டம் அல்ல- மாற்த்தாண்ண்டம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 11:31

ஆலயங்களை அறிதல் அவசியமா?

நம்மைச் சுற்றி ஏராளமான ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்களை நாம் அறிந்திருக்கிறோமா? உலகில் எங்காவது ஒரு சமூகம் தன்னுடைய பண்பாட்டின் மையமாகத் திகழும் இடத்தை அறியாமல் இருக்குமா? தன் வரலாற்றின் சின்னத்தை அறியாமல் வாழுமா? நாம் அப்படி வாழ்கிறோம் இல்லையா?

ஆலயங்களை அறிதல் அவசியமா?

I saw a video by you on the topic ‘Why do spiritualists need an introduction to literature?’. It seems a very important one. This is what we do not know in today’s environment.

Spirituality and Art -A Letter
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 11:30

பெங்களூரில் ஓர் உரையாடல்

Of Men Women and Witches

Book Talk about the new book written by eminent Tamil author Jeyamohan.

Venue: Attakalatta, Indira Nagar, Bangalore.

Date and Time: 20 April 2025 Evening 5 o’clock

Participants: Satish Chaprike, Kannada author

Sangeetha Puthiyedath (Translator)

and Jeyamohan, author 

Of Men, Women and Witches – Amazon

An extraordinary memoir from one of Tamil Nadu’s most acclaimed novelists

The great Tamil novelist Jeyamohan came from the region of Tamil Nadu that originally belonged to Travancore (in Kerala), and grew up in a unique, syncretic culture straddling two distinct worlds.

In this memoir, originally written in Malayalam, he draws a vivid picture of his family which followed the matriarchal family systems of Kerala. He especially focuses on his powerful mother and grandmother, who pitted their wills against and were constantly at odds with his abusive father. Moving between the stories of his parents’ marriage, his often-unhappy childhood, falling in love and becoming a writer, Jeyamohan also tells the story of the region he comes from, stretching the form of the memoir from family to history.

Beautifully written and profoundly imagined, Of Men, Women and Witches is another masterwork from this great novelist.

நண்பர்களை நிகழ்வுக்கு அழைக்கிறேன்

(இந்த அழைப்பிதழையும் செய்தியையும் தாங்கள் தொடர்புகொண்டுள்ள சமூகவலைத்தளங்களிலும், வாட்ஸப் குழுமங்களிலும் பகிரும்படி கோருகிறேன். பெங்களூருக்கு வரமுடியாதவர்களாக இருப்பினும் பகிரலாம். நூல் பற்றிய செய்தி சென்று சேர்வதே முக்கியம்.)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 02, 2025 09:35

April 1, 2025

சிறைமீறல்

அன்புள்ள ஜெ

முழுமையறிவு சார்ந்து தொடர்ச்சியாக இஸ்லாமிய மெய்யியல் பற்றியும் கிறிஸ்தவ இறையியல் பற்றியும் வகுப்புகள் நடத்தி வருகிறீர்கள். இப்போது உருது இலக்கிய வகுப்புகள் நிகழ்கின்றன. இவற்றை ஒரு balancing act ஆகத்தான் செய்கிறீர்கள் என்று சொல்லி மறுப்பவர்கள் உங்களிடம் பேசியிருப்பார்கள் என நினைக்கிறேன். உங்கள் தரப்பை அறிய விரும்புகிறேன்.

சரத்

அன்புள்ள சரத்,

மறுப்பவர்களில் ஒருவர் நீங்கள் என நினைக்கிறேன். நன்று.

என் முதல் மறுப்பு, உருது என்பது இஸ்லாமிய இலக்கியம் சார்ந்த மொழி அல்ல. உருது இலக்கியத்தின் பெரும்படைப்பாளிகளில் ராஜேந்திர சிங் பேதி போன்றவர்கள் பலர் உண்டு. உருது மொழி இலக்கியம் இந்திய முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் பெரும்பங்களிப்பை ஆற்றியது.

இந்த வகையான எளிய முன்முடிவுகளுக்கு எதிராகவே இந்த வகுப்புகளை நடத்துகிறோம் என்பதே இரண்டாவது மறுப்பு. மிகமிக எளிய புரிதல்களை மிக அறுதியானவையாகச் சமைத்துக்கொள்வது என்றுமே அறிவியக்கத்தின் எதிர்மறைப் பண்புகளில் ஒன்று. இன்றைய சமூகவலைத்தளச் சூழலில் அந்த அறுதிமுடிவுகளை ஒட்டி ஏராளமாக வாதாடியும் விடுவதனால் அந்த எல்லையை மீறாமலேயே வாழ்ந்து மடிகிறார்கள். இதைக் கருத்தியல்சிறை என்றே சொல்வேன். அந்தச் சிறையை உடைப்பதற்கான முயற்சிகள் இவை.

மிகக்குறைவாகவே இவற்றில் பங்கேற்பு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். பிற வகுப்புகளுக்கு முண்டியடிப்பவர்கள் இவ்வகுப்புகளுக்கு வருவதில்லை. இஸ்லாமிய வகுப்புகளுக்கு இஸ்லாமியர் எவரும் வருவதில்லை. கிறிஸ்தவ வகுப்புகளுக்கு கிறிஸ்வர்களும் வருவதில்லை. அவர்கள் அவற்றை தங்கள் மதம் சார்ந்த சம்பிரதாயமான அமைப்புகளிடமிருந்து கற்கவே விரும்புகிறார்கள். உருது இலக்கிய அறிமுக வகுப்பில்கூட இஸ்லாமியர் எவருமில்லை.

இங்கே ஒரு வகுப்பில் பங்கேற்பவர்கள் அது ‘பயனுள்ளது’ ஆக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள். பயன் என்பது தங்களுடைய வினாக்களுக்கான விடைநோக்கிச் செல்லுதல். அந்த வினாக்கள் அவர்களின் மதம், பண்பாடு, அன்றாடவாழ்க்கை, உடல்நலம் சார்ந்தவை. ஆகவே அவர்கள் தெரிவுசெய்யும் வகுப்புகளும் அவ்வாறே உள்ளன. அதுவே இயல்பு. அந்த பொதுப்போக்கில் ஓர் உடைவை உருவாக்கவே முயல்கிறோம்.

இத்தகைய முயற்சி இதுவரை இந்தியச் சூழலில் நிகழ்ந்ததில்லை என்பதை நீங்கள் கருத்தில்கொள்ளவேண்டும். ஓர் இடத்தில் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மெய்யியல்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு. மறுப்பும் வெறுப்பும் இன்றி அவை கற்பிக்கப்படும் அமைப்பு. அவ்வாறொன்று உருவாக்கப்படவேண்டும் என்பது குரு நித்யாவின் முயற்சியாக இருந்தது. மிகக்குறுகியகாலமே அவரால் அதை நிகழ்த்தவும் இயன்றது- அம்முயற்சி அவருக்கு அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலுமே வெற்றியாக அமைந்தது.

[image error]

ஏனென்றால் இந்தியாவில் நமக்கு பல தடைகள் உள்ளன. அகத்தடைகள்தான். மதச்சார்பின்றி தத்துவம் – மெய்யியல் ஆகியவற்றைக் கற்றுக்கொள்ள மெய்யான சுதந்திரவாதச் (Liberalism )சிந்தனையாளர்களாலேயே இயலும். அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் ஆஸ்திரேலியாவிலும் எல்லாம் சுதந்திரவாதச் சிந்தனையாளர்களின் வலுவான சமூகம் உள்ளது. குறிப்பாக நடராஜகுரு, நித்யா ஆகியோர் பணியாற்றிய காலங்களில் ஹிப்பி இயக்கம் இருந்தது. அவர்கள் அதனுடன் இணைந்தே செயலாற்றினர். அவர்கள அடைந்த பல தீவிர மாணவர்கள் ஹிப்பி இயக்கத்தில் இருந்து வந்தவர்கள்.

இன்று அமெரிக்காவில்கூட அவ்வியக்கம் மங்கலாகிவிட்டிருக்கிறது. பழமைவாதம் ஒருபக்கம், அதீதத் தொழில்நுட்பவாதம் இன்னொரு பக்கம் என அங்குள்ள அரசியல், கருத்தியல் இரண்டும் உருமாறிவிட்டிருக்கின்றன. தாராளவாதம் என்பது பொருளியலில் மட்டுமே, கருத்தியலில் அல்ல என ஆகிவிட்டிருக்கிறது. பழைய ஹிப்பி இயக்கத்தினர் முதியவர்களாகி ஒடுங்கிவிட்டிருக்கிறார்கள்.

இந்திய சூழலில் சுதந்திரவாதச் சிந்தனை என்பது மிக அரிது. ஒரு மொழிப்பண்பாட்டிலேயே சிலநூறுபேர் கூட அப்படிப்பட்டவர்கள் இருக்க மாட்டார்கள். நம்முடைய சூழலில் சுதந்திரவாதம் அறிமுகமாகி நூறாண்டுகூட ஆகவில்லை. நாம் இன்னும் நம்முடைய சாதி, மதம், இனம், மொழிச் சூழல்களுக்குள் வாழ்பவர்கள். நம் அகத்தின் எல்லா அடிப்படைப் படிமங்களும் அவ்வாறு நமக்கு அளிக்கப்பட்டவை. நம் பார்வை இயல்பாகவே கட்டுண்டது.

சுதந்திரவாதம் என்பதற்கான வரையறையை இப்படிச் சொல்லலாம். யார் சுதந்திரவாதி? ‘தன்னுடைய பிறப்பாலோ சூழலாலோ அளிக்கப்படும் சிந்தனைகள், நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தன் அடையாளத்தையும் கருத்துநிலையையும் வகுத்துக்கொள்ளாமல் தனக்கான தேடலை தன் ரசனை, அறவியல் மற்றும் தர்க்கத்தை மட்டுமே கருவியாகக்கொண்டு முன்னெடுப்பவர், தான் அடைந்த விடைகளை மட்டுமே சார்ந்திருப்பவர்”

அத்தகைய ஒருவரால்தான் உண்மையில் வேதாந்தத்தை கற்றுக்கொள்ள முடியும். அது ‘அனைத்தில் இருந்தும்’ விடுதலையை அளிக்கும் ஒரு பிரபஞ்ச தரிசனம். முழுமுதன்மை (The absolute)  என அது கூறும் பிரபஞ்சசாரம் ஒன்றை அன்றி அனைத்தையுமே சார்புநிலையானது, முழுமையற்றது (relative, incomplete)  என வகுப்பது. அதை ஒருவர் தன்னந்தனியாக மட்டுமே உணரமுடியும். தன் நுண்ணுணர்வாலும் கல்வியாலும். அப்பயணத்தில் அவருடைய ஆசிரியர் கூட உடன்வரமுடியாது. தனக்கான எல்லா அடையாளங்களையும் துறப்பதனூடாக மட்டுமே அந்த தரிசனம் அல்லது உணர்தலை நோக்கிச் செல்லமுடியும்.

இந்நோக்கிலேயே இந்திய தத்துவம் கற்க வரும் ஒருவர் ‘எல்லா’ தரிசனங்களையும் கற்றாகவேண்டும் என்கிறோம். ‘தத்து சமன்வயாத்’ என பிரம்மசூத்திரம் ஆணையிடுவது அதையே. அது சமன்வயம் ஒருங்கிணைவினூடாக மட்டுமே அறியப்படும் ஒன்று.  பாதராயணர் முதல் நாராயணகுரு வரையிலானவர்கள் ‘தத்துவ சமன்வயம்’ செய்ததும் அதற்காகவே. நடராஜகுருவும் நித்யாவும் மேலைச்சிந்தனைகளையும் இணைத்துக்கொண்டதும் அதன்பொருட்டே.

ஆனால் இந்தியதத்துவம் கற்க வந்தமரும் ஒருவரிடம் அதை வலியுறுத்த முடியாது. அவர் இந்திய தத்துவம் ‘தன்னுடையது’ என நினைக்கிறார். ’பிற’ தத்துவங்கள் மேல் விலக்கம் கொண்டிருக்கிறார். அந்த ’பிற’ என்னும் உணர்வை உதறாமல் அவரால் மெய்யாகவே தத்துவஞானத்தை அடையமுடியாது. அதன்பொருட்டே இஸ்லாம், கிறிஸ்தவம், பௌத்தம், மேலைத்தத்துவம் என எல்லா தரப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் கற்கவருபவர் தன்னை குறுக்கிக்கொள்ளவே முயல்வார். “அதெல்லாம் நமக்கு எதுக்கு?” என்று சுருங்கிக்கொள்வார். அது இயல்பானது. ஏனென்றால் அந்த மனநிலைக்கு இங்கே பல்லாயிரமாண்டுகளாக சாமானியர்களிடம் வேரூன்றியது. அத்வைதிகள் அன்றி எவருமே அந்த உட்சுருங்கலில் இருந்து வெளியேற முயன்றதில்லை, வெளியேறியதில்லை. ஒன்றைப்பற்றி அதனுடனேயே செல்வதே முறை என இங்கே நிறுவப்பட்டுள்ளது.

அதை உடைக்கவே முயல்கிறோம். நூற்றில் ஒருவரிடமே அந்த சிறைவிடுதலை நிகழும். எஞ்சியோர் அவர்கள் ஏற்கனவே இருக்கும் மத, கருத்தியல் நம்பிக்கைகளுக்குள்ளேயே இருப்பார்கள், கற்கும் தத்துவக்கொள்கைகளை உள்ளே இழுத்து கூடுதலாக வைத்துக்கொள்வார்கள். சிறைமீறுபவர்களே மெய்யாக தத்துவத்தை உணர்கிறார்கள். அளிக்கப்பட்டவற்றைக் கைவிட்டு கைவிட்டு முன்நகர்பவர்கள் அவர்கள். நாம் விதைகளை வீசவே முடியும், முளைத்துக் கதிர்விடுபவை சிலவே. அதுவே பிரபஞ்ச யதார்த்தம்.

ஆனால் இந்த தமிழகத்தில் ‘மற்ற தரப்பை’ அறிய ஒவ்வொருமுறையும் இருபதுபேர் வந்தமர்வதே பெரும் அதிசயம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. அவர்கள் அளிக்கும் நம்பிக்கை பெரிய வெளிச்சமெனத் தெரிகிறது.

ஜெ

கிறிஸ்தவ மெய்யியல் அறிமுகம்நாள் ஏப்ரல் 11, 12 மற்றும் 13தொடர்புக்கு programsvishnupuram@gmail.com

 

உருது இலக்கிய அறிமுகம் 

நாள் ஏப்ரல் 4,5 மற்றும் 6

தொடர்புக்கு programsvishnupuram@gmail.com 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 11:35

ஞாநி

எழுத்து, ஓவியம், நாடகம், இதழ் ஆசிரியர், பதிப்பாளர், அரசியல் விமர்சகர், சமூகப் போராளி என்று பன்முகங்கள் கொண்டவர். சமூக விமர்சன நோக்குள்ள வீதிநாடகங்களும், மேடைநாடகங்களும் நடத்தி வந்தவர். சிறுவர்களுக்கான இதழியலில் பல புதுமைகளைச் செய்தவர்.

ஞாநி ஞாநி ஞாநி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 11:34

இர்பான், அலை அறிந்தது- கடிதம்

அன்புள்ள ஜெ

அண்மையில் ரம்ஸானை ஒட்டி இன்ஸ்டா பிரபலர் இர்பான் Irfan’s view என்பவர் சாலையோரமாக தானதர்மங்களை வீசியெறிந்து கொண்டு ஆணவமாகச் சென்றது விவாதமாக ஆகியது. வாங்குபவர்களின் தன்மரியாதையை இழிவுசெய்யும்படியாக இந்த தானதர்மங்கள் செய்யப்பட்டன என்று எனக்கும் தோன்றியது. அப்போது என் சீனியர் நண்பர் ஒருவர் நீங்கள் எழுதிய இந்தக் கதையை சுட்டி நல்கினார். அலை அறிந்தது. அற்புதமான கதை.

ஷாகுல் அமீத்

அன்புள்ள ஷாகுல்

இர்ஃபான் என்பவரை அறிந்துகொண்டேன். பிரபலமாக இருக்கிறார் போல. ஆனால் இந்த நடத்தை நிலப்பிரபுத்துவ காலம் முதல் இருந்து வருவது. புதுப்பணக்காரர்களிடம் நீடிப்பது.  தமிழில் பல  ‘கொடைவள்ளல்‘ நடிகர்கள் இந்தப்பட்டியலில் வருபவர்கள்.  நானறிந்து இன்றைய சினிமாவின் உண்மையான கொடைவள்ளல்கள் சிவக்குமார் மகன்கள். அவர்கள் வெளியே காட்டிக்கொள்வதே இல்லை. 

இர்பானின் இந்த மனநிலை இன்றைய இளைய தலைமுறையின் போக்கு. எதையும் மிதமிஞ்சிய அலட்டலாக ஆக்கிக்கொள்கிறார்கள். ஆகவேதான் மேலோட்டமான உள்ளம் கொண்ட இளைஞர்களில் பலருக்கு அவரைப்பிடிக்கிறது என நினைக்கிறேன்.

ஜெ

அலை அறிந்தது…

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 11:31

பெரியநூல்களை வாசித்தல்- கவிஞர் இளம்பிறை

எனது  நூலகத்தில் மிகப்பெரிய புத்தகங்கள் சில அதன் பெரிய உருவத்தால் வாசிக்கப்படாமல் இருக்கின்றன. அவ்வப்போது புத்தகங்கள் சிலவற்றை எடுத்து வாசிக்கும் போதெல்லாம் இவற்றையெல்லாம் எப்போது வாசிக்க போகிறோமோ என்று   நினைப்பதோடு சரி. இத்தனைக்கும்  புத்துயிர்ப்பு  .தாய். மார்க்சிய நூல்கள் என பெரிய புத்தகங்கள் வாசித்த அனுபவம் எனக்கிருக்கிறது என்றாலும் , சில நேரங்களில் பெரிய புத்தகத்தை எடுத்து  முதலில் அது எத்தனைப் பக்கங்கள் என்று எப்போதும் கடைசி பக்கத்தையே பார்க்கிறேன். விரைவாக படித்து விடலாமா என்ற  ஆவலில். அப்புறம் எனக்கு நானே சொல்லிக் கொள்வேன் இந்த புத்தகத்தை எடுத்து படிப்பதற்கே நாம் மலைக்கிறோம். ஆனால் இப்படி  பெரிய புத்தகத்தை எழுதி இருக்கிறார்களே அவர்களுக்கு எவ்வளவு பெரிய மனவலிமை இருந்திருக்க வேண்டும் என்று.  வீட்டில் உள்ள பெரிய புத்தகங்களில்  ரூபாய் நோட்டுகளை ஒளித்து வைப்பதுண்டு அவசர பயன்பாட்டிற்கு. பெரிய புத்தகங்களை  யாரும்  எடுக்க மாட்டார்கள் என்பதால்.   

 மூன்று தினங்களுக்கு முன் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் விஷ்ணுபுரம் நாவலை கையில் எடுத்தேன் . அடங்கல்‘ என்ற கடைசி பக்கத்துடன் சேர்த்து 848 பக்கங்கள். நேற்று இரவே படித்து முடித்து விட்டேன். கவிதைகளும் நாவல்களுமே.. எனக்கு வாசிக்க ஆர்வமாக இருக்கும் இலக்கிய வடிவங்களளில் முதன்மையானவை  என்பதால் . 

“விஷ்ணுபுரத்‘தின்  கதைக்களமும் தருக்கங்களும் காட்சிகளும் இதுவரை படித்திராத பார்த்திராத  புதிய உலகமாக இருந்ததை கண்டேன்.  

ஒரு பெரிய வனத்தில் அவ்வப்போது பெய்யும் கனமழையில் நனைந்தபடி  அச்சமூட்டும் ஒலிகள்  கேட்க என்ன ஒலி அது என்று சற்றே புதிரான மனநிலையுடன் நடந்து கொண்டே இருப்பதைப் போல்  என் மனநிலை இருந்ததை கவனித்தேன் வாசிப்பின் போது.

 ஜெயமோகன் தனது முன்னுரையில் “நாவல் தகவல்களில் இருந்து உருவாவது அதே சமயம் ,அது தகவல்களுக்கு எதிரானதும் தகவல்களை தாண்டிச் செல்வதும் ஆகும் ‘என குறிப்பிடுவது  விஷ்ணுபுரத்திற்கு பெரிதும் பொருந்திப் போகிறது. இந் நாவலில் கவிதைகளும்  இடம்பெற்றிருக்கின்றன.  நாவலின் போக்கு  வருணனைகளும் விவாதங்களுமாக செல்கிறது .விவாதங்கள் மனதை வெளிச்சப்படுத்துபவைகளாக இருக்கின்றன .

உதாரணத்திற்கு 

“படிப்பினால் என்ன பயன் இது இன்னொருவர் தருக்கம். உங்கள் தருக்கம் நீங்கள் கொள்ளும் மனப்பயிற்சி மூலமே கிடைக்கும்‘

” இலை நுனிகளை வருடியெழும் காற்றில் 

எவர் பூத்த சொற்கள்  இவை‘

” தான் நீருக்குள் இருப்பதை மீன் எப்படி நிரூபிக்க முடியும்‘

“உன் கர்வத்தால் நீ அழிந்து கொண்டிருக்கிறாய் உன்னை ஒரு மேதை என்றும் உன் மேதமையை உலகம் அறியவில்லை என்றும் எண்ணி உன்னை ஏமாற்றிக் கொண்டிருந்தாய்‘

” காடு மனித சஞ்சாரமில்லாதிருப்பதன் சுதந்திரத்தை தாவரங்கள் கொண்டாடுகின்றன“

” குளத்தில் நீந்தியபடி குளத்தை கவனிக்க முடியுமா ? நீ பார்த்தது குளத்தின் அலைகளை மட்டும் தான்‘”

“பூத்த மரமல்லி மரம் போல் நட்சத்திர வானம்“

“மரணம் என்பது இரண்டு பிரிவு.  பிறிதின் மரணம் , தன் மரணம். பிறிதின் மரணம் எவருக்கும் ஒரு பொருட்டல்ல. அது மரணமே அல்ல அது ஓர் இழப்பு இழப்பின் தன்மையை பொறுத்து துக்கம். ஈடு செய்ய முடியாத இழப்பு என்று எதுவும் இல்லை. மரணம் என்பது தன் மரணம் மட்டுமே .அது பயங்கரமானது விவரிக்க முடியாதது. அதற்கு ஒரே அர்த்தம் தான் .இல்லாமலாதல்  அது எப்படி நான் இல்லாமலாக முடியும்” ‘

இப்படியாக ஆங்காங்கே நாவல் முழுதும் மனதை குடைந்து குடைந்து கண்டறியப்பட்ட தத்துவார்த்த மெய்களுடன் சித்தர்கள் பாடல் போன்ற ஒரு பாடலும் இந்நாவலில் இடம்  பெற்றுள்ளது .

அந்த பாடல் 

“ஏட்டில் படித்த அறிவென்ன அறிவடா 

எமன் வரா பெருவழி எவ்வழி  சொல்லடா 

பூட்டி வைக்கும் பொருள் என்ன பொருளடா 

பூண்ட அணியெலாம் சிதையிலே நீறடா

 நாட்டி அசைக்கும் கொடிமரக் காம்படா 

 நாலு தினத்தில் துருவேறும் சதையடா

 ஈட்டி வாள்முனை வேலியும் எதுக்கடா

 எமன் வரும் வாசலில் ஏது கதவடா”  என்று 

அவரது “அறம் சிறுகதை தொகுப்பில் எப்படி “யானை டாக்டரை” யாராலும் மறக்கவே முடியாதோ அப்படி   இந்த நாவிலும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் இருக்கின்றனர்.  வெவ்வேறு தளங்களில் இடையறாது நிறைய நிறைய எழுதிக் கொண்டே இருக்கும்  ஜெயமோகன்  படைப்புகளை பார்க்கும்போது    இவ்வளவு எழுத்து  எப்படி சாத்தியம் என்று ‘வியக்க வைக்க காரணம் அவர் வாழ்வில் ஏதோ சில கணங்களில் எழுதுபவராக இல்லாமல் 

எழுத்தில் எப்போதுமே வாழ்பவராக இருப்பதன்றி வேறென்ன இருக்க முடியும்.

     இளம்பிறை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 11:31

ஆயுர்வேதம் நிகழ்த்திய ரசவாதம்

நான் ஏற்கனவே எல்.மகாதேவன் அவர்களின் “ஆயுர்வேதத்தின் அடிப்படைகள்” புத்தகம் படித்து, திரிதோஷம் எனும் வாதம், பித்தம், கபம், ஏழு தாதுக்கள் போன்ற சில அடிப்படைகளை தெரிந்து வைத்திருந்தாலும் அவற்றை உணர்ந்து புரிந்து கொள்ள ஒரு ஆசிரியர் அவசியம் என்பதை வகுப்பில் உணர்ந்தேன்.

ஆயுர்வேதம் நிகழ்த்திய ரசவாதம்

The motivational videos on your channel are extremely useful. There is no professional attire or style in your talks. You are so natural and easy, and your accounts are very personal.

A personal voice
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 01, 2025 11:30

March 31, 2025

நீலம் விருது, சிவகாமிக்கு

2024 ஆம் ஆண்டுக்கான நீலம் பண்பாட்டு விருது எழுத்தாளர் சிவகாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழில் எண்பதுகளின் இறுதியில் உருவான முக்கியமான அரசியல்சார்ந்த எழுத்தாளர்களில் ஒருவர் சிவகாமி. விருது அவரால் பெருமைகொள்கிறது. வாழ்த்துக்கள்

ப. சிவகாமி (தமிழ் விக்கி)

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2025 21:57

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.