Jeyamohan's Blog, page 657

December 22, 2022

கண்ணீரின் பாதை

கண்ணீரைப் பின்தொடர்தல்  வாங்க கண்ணீரைப் பின்தொடர்தல் மின்னூல் வாங்க 

கண்ணீரைப் பின்தொடர்தல் என்ற இந்த நூலை எழுதுவதற்கு காரணம் இரண்டு உந்துதல்கள். ஒன்று என்னுடைய நாவல் கோட்பாடு என்னும் நூலும் அது உருவாக்கிய பின்னணி விவாதமும். தமிழில் எழுதப்பட்டவை நவீனத்துவ பாணியிலான குறுநாவல்கள் அல்லது தொடர்கதைகள் மட்டுமே என்றும் நாவல் என்னும் தனித்த வடிவம் தமிழில் பெரும்பாலும் அடையப்படவில்லை என்றும் நான்  கூறிய கருத்து தொண்ணூற்று ஒன்றில் பெரிய விவாதத்துக்குள்ளாகியது அதை ஒட்டி நான் நாவல் கோட்பாடு என்ற நூலை எழுதினேன்.

நாவல் என்பது அடிப்படையான மையக்கேள்வி ஒன்றை சாத்தியமான அனைத்துக்களங்களிலும் விரித்துக்கொள்ளும் தொகுப்புத்தன்மையுடன் எழுதப்படுவது என்பது எனது தரப்பு. இந்திய மொழிகளில் தலைசிறந்த நாவல்கள் உள்ளன.  அவை தமிழில் கிடைக்கின்றன என்று அந்த விவாதத்தின்போது நான் சொன்னேன். அதன் பிறகு அவற்றை முன்வைக்கும்பொருட்டு சிறுகுறிப்புகளை ஆங்காங்கே எழுதினேன். அக்குறிப்புகளை விரிவுபடுத்தி எழுதப்பட்டது இந்நூல். இந்திய மொழியில் தலைசிறந்த நாவல்கள் என்று நான் எண்ணும் ஆரோக்ய நிகேதனம், மண்ணும் மனிதரும், சிக்கவீர ராஜேந்திரன், ஏணிப்படிகள் போன்றவற்றை இந்நூலில் முன்வைக்கிறேன்.

ஒரு  இந்திய தரிசனத்தை அளிக்கவேண்டும் என்னும் நோக்கத்துடன் ஒவ்வொரு மொழிக்கும் சிலநாவல்கள் என தெரிவு செய்ததனால் பல நாவல்கள் இப்பட்டியலில் வராமல் போயின. உதாரணமாக தாகூரின் கோரா எனக்கு மிகப்பிடித்த நாவலாயினும் இந்நூலில் அதைப்பற்றிய கட்டுரை இல்லை. இந்நூல் இந்தியாவின் வெவ்வேறு மொழிகளிலிருந்து இருபது நாவலாசிரியர்களின் படைப்புகளை முன்வைக்கிறது. அவற்றைப்பற்றிய ரசனைக்கட்டுரை என்று இவற்றை சொல்லலாம். அவை ஏன் மகத்தான நாவல்களாக இருக்கின்றன என்பதையே இக்கட்டுரைகள் ஆராய்கின்றன. எழுதப்பட்டு பல ஆண்டுகளுக்குப்பிறகு இக்கட்டுரைகள் அண்மையில் கனலி இணைய தளத்தில் மறுபிரசுரம் செய்யப்பட்டன. மீண்டும் அடுத்தடுத்த தலைமுறையால் இவை படிக்கப்படுகின்றன என்பதே இக்கட்டுரைகளின் தேவைக்கும் தரத்திற்கும் சுவாரசியத்திற்கும் சான்று என்று நினைக்கிறேன். இவை படைப்பாளி, படைப்பு,  அது உருவான களம் ஆகிய மூன்றையும் ஒரே பார்வையில் பார்க்கும் தன்மை கொண்டவை. ஆகவே அந்நூல்களை மிக விரிந்த களத்தில் வைத்து வாசகன் அணுக முடியும்.

உண்மையில் இந்நூல் வெளிவந்த காலத்தில் இதில் பேசப்படும் பல நூல்கள் இலக்கிய வாசகர்கள் கவனத்தில் படாமல் மறைந்துவிட்டிருந்தன. அக்னி நதி போன்ற நூல்கள் சில பிரதிகள் கூட விற்கப்படாமல் தேங்கி பல பத்தாண்டுகளாகக் கிடந்தன. இந்நூல் அந்நாவல்களை புத்துயிர் பெறச்செய்தது. அக்னி நதி வெறும் ஐந்து ரூபாய்க்கு -பத்தில் ஒரு பங்கு விலைக்கு -இந்நூல் வெளிவந்த காலகட்டத்தில் கிடைத்தது. இன்று பெரும்பாலான படைப்புகள் மறுபதிப்பாக வெளிவந்துவிட்டன. இன்றைய தலைமுறையில் பெரும்பாலான இளம் வாசகர்கள் இவற்றைப் படித்திருக்கிறார்கள். நீலகண்ட பறவையைத்தேடி, ஒரு குடும்பம் சிதைகிறது போன்ற பல படைப்புகள் தமிழ்ப் படைப்புகளுக்கு நிகரான இலக்கிய வாசிப்பை இன்று பெற்றிருக்கின்றன.

இவ்வாறு இந்திய செவ்வியல்நோக்கி தமிழ் நவீன வாசகனை திருப்புவதில் இந்நூல் அடைந்த வெற்றி இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு பெருநிறைவை அளிக்கிறது. இதை முதலில் வெளியிட்ட உயிர்மை பதிப்பகம் மனுஷ்யபுத்திரனுக்கும் இப்போது வெளியிடும் விஷ்ணுபுரம் பதிப்பகத்திற்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

ஜெ

05.07.2022

குமரித்துறைவி வாங்கவான் நெசவு சிறூகதைத்தொகுப்பு வாங்கபத்துலட்சம் காலடிகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கதங்கப்புத்தகம் சிறுகதைத்தொகுப்பு வாங்கஆயிரம் ஊற்றுகள் சிறுகதைத்தொகுப்பு வாங்கவாசிப்பின் வழிகள் வாங்கஆனையில்லா சிறுகதைத்தொகுப்பு வாங்கஐந்து நெருப்பு சிறுகதைத்தொகுப்பு வாங்கதேவி சிறுகதைத்தொகுப்பு வாங்கஅந்த முகில் இந்த முகில் – நாவல் வாங்கஎழுகதிர் சிறுகதைத்தொகுப்பு வாங்கமுதுநாவல் சிறுகதைத்தொகுப்பு வாங்கபொலிவதும் கலைவதும் சிறுகதைத்தொகுப்பு வாங்கபின்தொடரும் நிழலின் குரல் அச்சுநூல் வாங்கஇருகலைஞர்கள் சிறுகதைத்தொகுப்பு வாங்கமலை பூத்தபோது சிறுகதைத்தொகுப்பு வாங்கஇலக்கியத்தின் நுழைவாயிலில் அச்சு நூல் வாங்கநத்தையின் பாதை அச்சு நூல் வாங்கமைத்ரி நாவல் வாங்கஆலயம் எவருடையது ஆன்லைனில் வாங்கஇந்துமெய்மை ஆன்லைனில் வாங்கசாதி – ஓர் உரையாடல் ஆன்லைனில் வாங்கவணிக இலக்கியம் ஆன்லைனில் வாங்கஈராறுகால் கொண்டெழும் புரவி ஆன்லைனில் வாங்ககதாநாயகி ஆன்லைனில் வாங்கஒருபாலுறவு ஆன்லைனில் வாங்கஅனல் காற்று ஆன்லைனில் வாங்கவெண்முரசு – நீர்ச்சுடர் (23) வாங்கஞானி ஆன்லைனில் வாங்கநான்காவது கொலை ஆன்லைனில் வாங்கவிசும்பு ஆன்லைனில் வாங்கவெண்முரசு – களிற்றியானை நிரை (24) வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 10:35

தேவாங்கர்

தேவாங்கர் தமிழகத்தில் ஆந்திரநிலத்தில் இருந்து குடியேறியவர்கள். அவர்களைப் பற்றிய ஆவணப்பதிவுகள் குறைவு. ஜப்பானிய ஆய்வாளரான யுமிகோ நானாமி எழுதியிருக்கிறார். தமிழிலும் பல்வேறு நூல்கள் வெளிவந்துள்ளன. விரிவான சமூகவியல்பதிவுகள் தமிழின் ஒவ்வொரு இனக்குழு பற்றியும் உருவாக்கப்படவேண்டும்.  இனக்குழு பேதங்களும் பூசல்களும் மறையவேண்டும். அவற்றின் பண்பாடுகள் பதிவுசெய்யப்படவேண்டும்.

தேவாங்கர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 10:34

விஷ்ணுபுரம் விழா 2022, கடிதங்கள்

கமலதேவி அரங்கு– தொகுப்பாளர் ரம்யா (நீலி மின்னிதழ் ஆசிரியர்)
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

விஷ்ணுபுரம் விழா 2022

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் விருது 2022 விழாவிற்கு சனிக்கிழமை இரவு ஒன்பது மணிக்கு பெங்களூரில் இருந்து வந்து சேர்ந்தேன். Quiz அருமையாக வடிவமைக்கப்பட்டு நடந்துக்கொண்டிருந்தது. கண்டு மகிழ்ந்தேன்.

இரண்டாம் நாள் நிகழ்சிகளுக்கு இடையில் பலரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டேன். நான் கலந்துகொள்ளும் முதல் விழா இது. ஆதலால்.சந்தோஷ், லோகமாதேவி அம்மா, கதிர்முருகன், ஷாகுல் ஹமீது, ஜி.எஸ்.எஸ்.வி நவீன், பெங்களூர் நண்பர்களை சந்தித்தேன். லட்சுமி மணிவண்ணன் அவர்களுடன் ஒரு நீண்ட உரையாடலை செய்ய முடிந்தது. நீங்கள் சொல்வது போல் அவரிடம் தருவதற்கு எப்போதும் இருக்கிறது. பெற்றுக்கொண்டேன். ஆழமான உரையாடல். நிறைவை அளித்தது.

விஜயா வேலாயுதம் அரங்கு— நடத்துபவர் எம்.கோபாலகிருஷ்ணன்

சனிக்கிழமை இரவு தங்கியது மற்ற வாசகர்களுடன் டாக்டர் பங்களாவில். நான் நாகர்கோயில் முத்துராமனுடன் அறையை பகிர்ந்துகொண்டேன். அவருடன் உரையாடியதும் நிறைவை அளித்தது. நீண்ட உரையாடல். இரண்டாம் நாளும் தொடர்ந்தது. அவர் செய்யும் உதவிகளைப் பற்றி கூறினார்.

இரண்டு நாள்களும் கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட விழா. அனைவர் முகத்திலும் மகிழ்ச்சியும் நிறைவும். அமர்வுகள், சாரு அவர்கள் பற்றிய ஆவணப்படம், உங்கள் உரை, உணவு, தங்கும் இடம் அனைத்திலும் ஒரு சிறு குறை கூட இல்லை.

நீங்கள் இரண்டு நாளும் மிக உற்சாகமாக நண்பர்களுடன் உரையாடிக்கொண்டே இருந்தீர்கள்.

நாச்சியப்பன்

கார்த்திக் புகழேந்தி அரங்கு. நடத்துபவர் தாமரைக் கண்ணன் பாண்டிச்சேரி

அன்புள்ள ஜெ,

எட்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் இரண்டு நாள் கொண்டாட்டங்களிலும் விருது நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டேன். நிறைய மாற்றங்கள். நீங்கள் கூறியிருந்தது போலவே விழா வளர்ந்து கொண்டே தான் போயிருக்கிறது :-). தொடர்ந்து பன்முகத்தன்மை கொண்ட படைப்பாளிகளும் வாசகர்களும் கலந்து கொள்வதே இந்நிகழ்ச்சியின் தொடர்ந்த வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் காரணம் என்று  நினைக்கிறேன்.நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களின் அர்ப்பணிப்பு, நான் சொல்வது தேய்  வழக்காக  தோன்றினாலும்,  சற்றே பிரமிக்க தான்  வைக்கிறது.  என்ன, “இந்த பெரிய நிகழ்ச்சி வடிவம்” நீங்கள் பேசுவதை நிறைய கேட்க முடியாததாக ஆக்கி விட்டது.

அ.வெண்ணிலா அரங்கு. நடத்துபவர் யோகேஸ்வரன்

எட்டு ஆண்டுகள் கழித்த பங்கேற்பு மிகப்பெரும்பாலான பங்கேற்பாளர்களை என்னை விட வயதில் இளையோராக ஆக்கி விட்டது. :-) அந்த வருத்தம் முழுமையாக தீராத நிலையில், நண்பர் ஈரோடு கிருஷ்ணன் கேட்ட 2014 ராஜீவன்  அவர்களுடனான கலந்துரையாடல் பற்றிய கேள்விக்கு சிறுபிள்ளை தனமான பதில் ஒன்றை கொடுத்து  மேலும் வருத்தப்பட்டு கொண்டிருந்த  போது :-), அகர  முதல்வன் அவர்களை சந்தித்தேன். அவருடனான சற்றேறக்குறைய 1.5 மணி நேர சந்திப்பும் , துளி இயக்கத்து நண்பர்களுடனான உரையாடலும்  மிகுந்த மன நிறைவை அளித்தது.

அகர  முதல்வன், நான் சந்தித்து உரையாடும் முதல் ஈழத்து  (இன்றுவரை நான் இலங்கையின் என்றே சொல்லி வந்திருக்கிறேன்) படைப்பாளி.  முதல் நாள் கலந்துரையாடலிலேயே அவரின் நேர்முறை அணுகுமுறையும், அவரின் சத்தமான தொனியும் , அவரின் சரியான தமிழ் உச்சரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தன.

கார்த்திக் பாலசுப்ரமணியம் அரங்கு. நடத்துபவர். விஜயசாரதி.

ஓர்   ஈழத்து படைப்பாளியிடம் கேட்க எனக்கு பல கேள்விகள் இருந்தன. ஒரு தயக்கமும் இருந்தது.

அந்த தயக்கத்தை அவரின் நட்பார்ந்த குரல் உடைத்தது.  1991 க்கு  பிறகு ஈழத்தை பற்றிய என் மனநிலை  மிகப்பெரும்பான்மையான தமிழ் நாட்டு மக்களின் மனநிலையை ஓத்தே இருந்தாலும் புலிகள்  இயக்கத்தின் தொழில்நுட்ப சாதனைகள் பலவற்றையும் பற்றி எனக்கு மிகப்பெரிய வியப்பு உண்டு. “குண்டு வீசப்பட்ட மறுநாளே  அதே பள்ளிக்கு பரீட்சை எழுத செல்லும் யாழ்ப்பாண தமிழரை” குறித்த்தும் , எரியூட்டப்பட்ட யாழ்ப்பாண நூலகம்  மேலும் பெரிதாக எழுந்து நிற்பது குறித்தும்  அவர் விரிவாக பேசியது  என் பல கேள்விகளுக்கு பதிலாக அமைந்தன.

“எனக்கான இடம் இங்கு அகதி தானே” என்ற  அவரின் குரல் அத்தனை தருக்கண்களையும் தாண்டி தார்மிகத்தை தொட்டு பார்க்கும். அவரிடம் கேட்க எனக்கு மற்றொரு கேள்வியும் இருந்தது – கேட்கவில்லை. இந்த இளைஞனின் கனவுகளையும் அவர் போன்ற பலலட்ச கணக்கான ஈழ தமிழர்களின் கனவுகளையும் அவர் கூறியது போன்ற நேர்முறை எண்ணங்களும் அதற்கு காரணாமாக அவர் கூறிய மரபின் நீட்சியுமே நிறைவேற்றும் என்ற எண்ணத்துடனும்  பிரார்த்தனையுடனும் அவரிடம் விடை பெற்றேன்.

பாலாஜி என்.வி

பெங்களூர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 10:33

அ.முத்துலிங்கம் பேட்டி

I will stop when I feel I have emptied myself!

அ.முத்துலிங்கம் சாரங்கா இதழுக்கு அளித்துள்ள பேட்டி.

There was another incident in Somalia. The employees were paid a child allowance each month up to a maximum of six children per person. This particular employee brought a bundle of cash and wanted to return it. His child died a few months back and he received the allowances for a dead child and did not want that money.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 10:31

ரத்தசாட்சியின் வெற்றி

சினிமாவில் எப்போதுமே சில வழக்கங்கள் உண்டு, அதற்கான காரணங்களும் உண்டு. ஒன்று ஒரு கதை வெற்றிபெற்றால் அதே போல திரும்ப படைப்பது. படையப்பாவின் குட்டிகள் எத்தனை! வெற்றி என்பது முழுக்க முழுக்க நல்லநேரம், அதிருஷ்டம் சார்ந்தது என நம்பி அதை சார்ந்திருக்க முயல்வது.

தொடர்ச்சியாக மூன்று வெற்றிகள் –  வெந்து தணிந்தது காடு,  பொன்னியின் செல்வன் 1, ரத்தசாட்சி. ஆகவே இவ்விரண்டையும் எதிர்கொள்கிறேன். வெந்து தணிந்தது காடு, ரத்தசாட்சி ஆகியவற்றை அப்படியே திரும்ப எழுதித்தரக் கோருகிறார்கள். (அப்டியே அது போரும் சார். கதையில கொஞ்சம் மாற்றம் இருந்தா போரும், நல்லா போயிடும்). எனக்கு இப்போது நல்ல நேரம் என்று நம்புகிறார்கள். கடைசியில் வெந்து தணிந்தது காடு போல ’அப்படியே’ இன்னொன்று எழுத அட்வான்ஸ் வாங்கிவிட்டேன். வேறு வழி?

ரத்தசாட்சிதான் அண்மைக்காலத்தில் ஓடிடியில் நேரடியாக வெளிவந்த, பெரிய ஹீரோ இல்லாத படங்களில் முதன்மையான வெற்றி. உண்மையில் சிறு ஓடிடி படங்கள் அந்த தளங்களின் தொடர்தேவையை நிறைவேற்றுகின்றனவே ஒழிய அதற்கப்பால் கவனிக்கப்படுவதோ, பேசப்படுவதோ இல்லை. ரத்தசாட்சி ஒரு ’பொதுமக்கள் வெற்றி’ யாகவும் ஆகா தளத்திற்கே தமிழகத்தில் அடித்தளத்தை அமைத்து தந்த படமாகவும் ஆகிவிட்டது. அவ்வகையில் அது ஒரு முதன்மை வெற்றி.

பல காரணங்கள். முதன்மையாக ரபீக்கின் இயக்கமும் கண்ணா ரவி, குமரவேல் இருவருடைய நடிப்பும்தான் சுட்டிக்காட்டப்படவேண்டும். அதன் கதையோட்டம் எந்த பரீட்சார்த்த தன்மையும் இல்லாமல் பரபரப்பாகச் செல்கிறது. இறுதி நிகழ்வு நெஞ்சை தாக்குகிறது. ஆகவே மக்களுக்குப் பிடித்திருக்கிறது.

மக்கள் ரசனையும் சோட்டா விமர்சகர் மற்றும் அரசியல் குழுவினர் ரசனையும் எதிரெதிர் திசைகளில் செல்வன. சொல்லப்போனால் இங்கே இவர்கள் சிறப்பாக இருக்கிறது என்றால் அங்கே வசூலில் டப்பா காலி என்றே பொருள்.

ஒரு நண்பர் என்னிடம் ‘இது அப்புவோட கதையா?’ என்றார். நான் எங்குமே வரலாற்றை ஆவணப்படுத்த முயல்வதில்லை. ஆவணம் என்ற சொல்லே இலக்கியத்துக்கு எதிரானது. நான் ஒரு புனைவு யதார்த்தத்தை உருவாக்கவே முயல்வேன். அதன்பொருட்டு கதைமாந்தரை, நிகழ்வை தெளிவாகவே மாற்றியமைப்பேன். அண்மையில் ஒரு சர்வதேச இலக்கியவிழாவில் சொன்னேன். “பொய்யைச் சொல்லி உண்மையை நிலைநாட்டுவதே என் இலக்கியம்’

ஆனால் பொய் அல்ல. மையமாகத் திரளும் உண்மையின் பொருட்டு மாற்றியமைக்கப்பட்ட நேரடி யதார்த்தம் என்று சொல்லலாம். அந்த உண்மை நேரடி உண்மை அல்ல, அதியுண்மை (சூப்பர் ட்ருத்) அதுவே புராணங்களின், நாட்டார்கதைகளின் வழியும்கூட. ரத்தசாட்சி நேரடியாகவே ஒரு வாய்மொழித் தொன்மத்தில் இருந்து உருவானது.

ஒடுக்கப்பட்ட அனைவருக்குமாகக் கனியும் ஓர் உள்ளம் நோக்கி அந்த கதை செல்கிறது. அந்த ஒடுக்கப்பட்டோரில் புரட்சியாளனை ஆயுதமேந்தி கொல்லவருபவனும் உண்டு. அவனும் சுரண்டப்பட்டு, அவமதிக்கப்பட்டு , ஒடுக்கப்பட்டவனே. அதை உணரும் மனவிரிவுதான் மெய்யான மெய்யான புரட்சிகரம். அந்த மெய்நிலை வழியாகவே புரட்சியாளன் பலியாடாக அன்றி ரத்தசாட்சியாக ஆகிறான். கிறிஸ்துவின் சிலுவையேற்றத்துடன் இணையும் காட்சியமைப்புகள் வழி ரஃபீக் சொல்ல வருவது அதைத்தான்.

“அப்படியெல்லாம் நக்சலைட்டுகள் போலீஸுக்காக இரங்க மாட்டார்கள். இது கொச்சைப்படுத்துவது என்று சொல்கிறார்களே” என விஷ்ணுபுரம் விழாவில் ஓர் இளைஞர் கேட்டார்.

“யார் சொல்கிறார்கள்?” என்று நான் கேட்டேன்.

அவர் சிலர் பெயர்களைச் சொன்னார். “இவர்களுக்கு நக்சலைட்டுகளைப் பற்றி என்ன தெரியும்? இவர்கள் சினிமா பார்த்து கற்றுக்கொண்டவர்கள். சினிமாவேவிலேயே கூட நுட்பங்களும் உள்ளடுக்குகளும் பிடிகிடைக்காத அளவுக்கு மோட்டாவான ஆட்கள். சும்மா சில்லறை தொழில்கள் செய்து உயர்நடுத்தர வாழ்க்கைக்குள் பொருந்திக்கொண்டு முகநூலில் பாவலா காட்டும் பாமரர்கள். அவர்களுக்கு இதெல்லாம் புரியாது. அவர்களின் கற்பனைக்கே அப்பாற்பட்டது இது” என்றேன்

நான் இடதுசாரி இயக்கங்களை நன்கு அறிந்தவன். அதன் முதன்மை தலைவர்களில் ஒருவராக இருந்த சோதிப்பிரகாசம் என் அணுக்கமான நண்பராக இருந்தார். அவர் சொன்னவற்றின் வழியாக ஒரு முழுநாவலே எழுதும் எண்ணம் இருந்தது. ஒன்றை மட்டும் சொல்கிறேன். சோதிப்பிரகாசத்தின் தலைவராக இருந்த கோதண்டராமன் சிறையில் உண்ணாவிரதம் இருந்தார். எதற்காக என அவரே எழுதியிருக்கிறார். சிறையில் கடைநிலை ஊழியர்களான காவலர்கள் உயரதிகாரிகளால் அவமதிக்கப்படுவதற்கு எதிராக நீதிகேட்டு.

“இணைய அசடுகள்தான் இன்று இலக்கியம் சினிமா எல்லாவற்றுக்குமே எதிரிகள். ஆனால் சினிமா ஒரு மாஸ்மீடியா. அது அவர்களை தூசாகவே எண்ணும். அதேசமயம் இலக்கியம் அவர்களால் அழிக்கப்பட்டுவிட வாய்ப்புண்டு. கவனமாக இருங்கள்” என்று மட்டும் சொன்னேன்.

அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் ரத்தசாட்சி !

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 10:30

சாகித்ய அக்காதமி விருதுகள்

மு.ராஜேந்திரன் தமிழ் விக்கி

சாகித்ய அக்காதமி விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காளையார்கோயில் போரை அடிப்படையாகக் கொண்டு எழுத்தாளர் மு.ராஜேந்திரன் எழுதிய காலாபாணி நாவலுக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது. மு ராஜேந்திரன் ஏற்கனவே எழுதிய ‘1801’ என்ற நாவலின் தொடர்ச்சியாகவே காலா பாணி நூல் எழுதப்பட்டுள்ளது.

மு.ராஜேந்திரன் முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி. அவருடைய வடகரை என்னும் நாவலை நான் வாசித்துள்ளேன். ஓரளவு அவருடைய குடும்ப வரலாறு என சொல்லத்தக்க அப்படைப்பு ஒரு குறிப்பிடத்தக்க இலக்கிய ஆக்கம். அதை எழுதியுள்ளேன். மற்ற ஆக்கங்களை வாசித்ததில்லை.

மு.ராஜேந்திரன் அ.வெண்ணிலாவுடன் இணைந்து வந்தவாசிப் போர் என்னும் வரலாற்றாய்வு நூலை எழுதியவர். ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்புகளை பதிப்பித்தவர்.

மொழியாக்கத்துக்கான விருது கே.நல்லதம்பி அவர்களுக்கு, நேமிசந்த்ரா கன்னடத்தில் எழுதிய  யாத் வஷேம் என்னும் நூலின் மொழியாக்கத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மு.ராஜேந்திரன், கே.நல்லதம்பி இருவருக்கும் வாழ்த்துக்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2022 03:03

December 21, 2022

வெண்முரசு நிரல்குழு போட்டி

அன்புள்ள ஜெ,

நலமா? விஷ்ணுபுரம் விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்ச்சி.

இந்த வருடத்திற்கான வெண்முரசு நிரல்குழு போட்டி குறித்த தகவல்கள் பகிர்வதற்காக இந்த கடிதம். போட்டியை டிசம்பர் 31 அன்று நடத்துகிறோம். அன்று காலை 8:00 மணிக்கு போட்டி விதிகள் அறிவிக்கப்பட்டு இரவு 8:00 மணிக்குள் நிரல்களை சமர்பிக்க வேண்டும். போட்டிக்கான ஏற்பாடுகளை பிஎஸ்ஜி கல்லூரி பேராசிரியர்கள் சாராதாம்பிகை மற்றும் வைரம் செய்கிறார்கள். இருவருக்கும் நன்றி. விவரங்களுக்கு: https://vpt.ai/2022/12/20/2022-vpt-contest/

சென்ற ஆண்டு போட்டியில் பங்கு பெற்றவர்களை வைத்து சில கணினி திட்டங்களை துவங்கினோம். மொத்தம் ஆறு குழுக்கள். நான்கு மாதங்கள். நிரல் போட்டியில் முதல் இரண்டு பரிசு பெற்ற குழுக்கள் ஒரு மாதம் பங்கெடுத்தபின் தொடரவில்லை. மூன்றாம் பரிசு பெற்ற குழுக்கள்தான் தொடர்ந்து பங்கெடுத்தன. நிரல் போட்டியில் அவர்கள் சமர்பித்த நிரலின் தரம் சுமார், ஆனால் நான்கு மாதங்கள் தொடர்ந்து செயல்பட்ட பின் அவர்களுடைய நிரல் எழுதும் திறன் மேம்பட்டது. ஒரு குழுவாக எப்படி வெற்றிகரமாக செயல்படுவது என்பதையும் கற்று கொண்டார்கள். செப்டம்பர் மாதம் அகில இந்திய அளவில்  நடைபெற்ற “ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான்” போட்டியில் முதல் பரிசு (ஒரு லட்ச ரூபாய்) வென்றார்கள். வெண்முரசு நிரல் போட்டியில் பங்கு பெற்றதும் குறிப்பாக நான்கு மாதங்கள் தொடர்ந்து செயல்பட்டதும்தான் அகில இந்திய போட்டியில் வெல்வதற்கு ஒரு காரணம் என்று அந்த மாணவர்கள் சொன்னார்கள்.

சுட்டிகள்:

https://www.linkedin.com/posts/akash-s-p_smartindiahackathon2022-psgct-activity-6969270733847875584-4nxo?utm_source=share&utm_medium=member_desktop

https://twitter.com/spakash182/status/1566960881866608642

இந்த வருடம் நிரல் போட்டி முடிந்தவுடன் பரிசு கிடையாது. தொடர்ந்து நான்கு மாதங்களும் கணினி திட்டங்களில் சிறப்பாக செயல்பட்டால்தான் பரிசு. பரிசுத்தொகை: 25,000 ரூபாய். ஏற்கனவே துவங்கிய கணினி திட்டங்களின் தொடர்ச்சியாகவே இந்த கணினி திட்டங்கள் இருக்கும். திட்டங்களை பற்றி https://vpt.ai/ தளத்தில் பதிவிடுகிறோம். மேலும் மதுசூதனன் சம்பத்திடமும் ஆலோசனைகளை பெற்று தமிழ்.விக்கி தொடர்பான தொழில்நுட்ப திட்டங்களையும் சேர்க்கிறோம்.  சென்ற ஆண்டு உங்கள் தளத்தில் வெளியிட்ட அறிவிப்பை பார்த்து அருள்ராஜ் மகேந்திரராஜனை தொடர்பு கொண்டார். இப்போது அருள்ராஜ், திரு மற்றும் விஜயபாரதிதான் தமிழ்.விக்கி தொழில்நுட்ப குழுவின் மையம்.

நம் வாசகர்களில், NLP துறையில் அனுபவம் உள்ள நண்பர்கள் இருந்தால், எங்களை தொடர்பு கொள்ளவும். We are looking for mentors. Please reach out to us – hello@vpt.ai – If you have:

Working experience (at least 2 years) in NLP for Indian languages, especially Tamil.Understanding of state of the art methods and models in NLP:
— For example, how multilingual models work, what is multi-task training, exploiting information from high-resource languages for low-resource languages.
— Understanding on how Transformer-based attention models work.Interest in mentoring students for open source Tamil NLP projects (mostly during weekends).[Bonus] If you have open source contributions, experience in publishing research works.

கல்லூரி பேராசிரியர்களின் ஒத்துழைப்பும், அனுபவம் வாய்ந்த நண்பர்களின் உதவியும் கிடைக்கும் போது போட்டியை விரிவுபடுத்துவோம். உங்கள் ஆசிகளும், ஆலோசனைகளும் வேண்டும் ஜெ.

அன்புடன்,

விசு & மகேந்திரராஜன்.

https://visu.me/

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:36

விஷ்ணுபுரம் நாவல் வெள்ளிவிழா

விஷ்ணுபுரம் மின்னூல் வாங்க

விஷ்ணுபுரம் வெள்ளிவிழா பதிப்பு வாங்க

விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து வெள்ளிவிழா ஆண்டு இது. நான்கு வெவ்வேறு பதிப்பகங்கள் வழியாக பல்வேறு பதிப்புகள் வெளிவந்த இந்நூல் இப்போது இந்நாவலின் பெயராலேயே அமைந்த பதிப்பகத்தில் இருந்து வெளிவருகிறது.

இந்த இருபத்தைந்து ஆண்டுகளில் இந்நாவலின் பெயரால் தமிழகத்தின் முதன்மையான இலக்கிய அமைப்பான விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் உருவாகியிருக்கிறது. அமெரிக்காவிலும் பிறநாடுகளிலும் கிளைகள் கொண்ட இலக்கிய அமைப்பு அது. தமிழகத்தின் பெருமைக்குரிய இலக்கியவிருதுகளில் ஒன்றாகிய விஷ்ணுபுரம் விருது பதிமூன்று ஆண்டுகளாக அளிக்கப்படுகிறது. ஒரு நாவல் ஓர் இலக்கியப் படைப்பு என்னும் நிலையை கடந்து ஒரு கலாச்சார அடையாளமாகவும் ஆகும் நிலை இது.

சென்ற கால்நூற்றாண்டில் இந்நாவல் பலதரப்பட்டவர்களால் வாசிக்கப்பட்டுள்ளது. இலக்கியவிமர்சகர்கள், மூத்த எழுத்தாளர்கள் தமிழில் எழுதப்பட்ட தலைசிறந்த நாவல் இதுவே கூறியிருக்கிறார்கள். இன்று மூன்றாம் தலைமுறை வாசகர்களால் முற்றிலும் புதியதாகக் கண்டடையப் படுகிறது. இந்நாவலின் தத்துவத் தளங்கள், பண்பாட்டுக் குறிப்புகள், கவித்துவ வாய்ப்புகள் இன்னமும்கூட முழுமையாக வாசித்து அடையப்படவில்லை. கடந்துசெல்ல முடியாத படைப்பு என்றே இன்றும் கருதப்படுகிறது.

இந்திய காவியமரபை உள்வாங்கி எழுதப்பட்ட இந்நாவல் பின்நவீனத்துவ எழுத்துமுறையான வரலாற்றையும் பண்பாட்டையும் புதியதாகப் புனைதல், இணைவரலாற்றை  உருவாக்குதல் ஆகிய தன்மைகள் கொண்டது. மீபுனைவு என்னும் கதைக்குள் கதை, கதைபற்றிய கதை என்னும் உட்சுழற்சித் தன்மை கொண்டது. தமிழின் பெருமைக்குரிய படைப்புகளில் ஒன்றாகிய இது விரைவில்  ஆங்கிலத்தில் உலகவாசகர்களுக்காக வரவுள்ளது.

 

(விஷ்ணுபுரம் நாவல் குறிப்பு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:35

புது வெள்ளம்- பிரபு மயிலாடுதுறை

விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 – தொகுப்பு

விஷ்ணுபுரம் விழா 2022

விஷ்ணுபுரம் விழா 2022, எண்ணங்கள் எழுச்சிகள்

விஷ்ணுபுரம் அரங்கில் வெளியிடப்பட்ட நூல்கள்

டிசம்பர் 17,18 ஆகிய இரு தேதிகளும் கோவையில் நடைபெற்ற விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டேன். இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களுக்கு வழங்கப்பட்டது.  கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக டிசம்பர் கடைசி வாரம் நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழாவில் கலந்து கொண்டு வருகிறேன்.

தமிழ்ச்சூழலில் இவ்வளவு திட்டமிடலுடன் இத்தனை நேர்த்தியாக நடைபெறும் இன்னொரு நிகழ்வென எதனையும் கூறி விட முடியாது. வட இந்தியாவிலிருந்து வருகை புரியும் எழுத்தாளர்கள் வாசகர்கள் இத்தனை ஆர்வத்துடன் பங்கெடுக்கும் இவ்வாறான ஒரு நிகழ்ச்சியை தங்கள் வாழ்நாளில் கண்டதில்லை என்று சொல்கிறார்கள். வட இந்திய – வட கிழக்கு இந்திய எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை தமிழ் வாசகர்கள் வாசித்து விட்டு அவர்கள் படைப்புகளின் நுட்பங்களைச் சுட்டிக் காட்டி உரையாடும் போது – வினா எழுப்பும் போது அவர்கள் அடையும் உவகை என்பது மிகப் பெரியது.

நமது மரபில் 14 ஆண்டுகளை ஒரு தலைமுறை எனக் கருதும் வழக்கம் உண்டு. இந்த விருது அளிக்கத் துவங்கிய போது எட்டு வயது சிறுவனாக இருந்த ஒருவன் இப்போது கல்லூரிப் படிப்பை நிறைவு செய்து பொருளீட்டும் நிலைக்கு வந்திருப்பான். அவ்வாறான இளைஞர்கள் பலரை இந்த ஆண்டு காண முடிந்தது. இத்தனை இளைஞர்களும் ஆர்வமாக தமிழ் வாசிக்கிறார்கள் என்பது நம்பிக்கையளிக்கக் கூடிய ஒரு அம்சம்.

நிகழ்ச்சிகளுக்கு இடையில் இருக்கும் இடைவேளைகளில் வாசகர்கள் படைப்பாளிகள் எனப் பலருடன் உரையாடக் கிடைக்கும் வாய்ப்பு என்பது தமிழ்ச்சூழலில் அரிதானது. இந்த ஆண்டு நான் சந்தித்த பலரில் மூவரைக் குறித்து பதிவு செய்யலாம் என நினைக்கிறேன். மூவருமே இளைஞர்கள்.

ஒருவர் திருக்கோஷ்டியூர் திருப்பத்தூரைச் சேர்ந்த இளைஞர். பட்டப்படிப்பு படித்து விட்டு சர்வீஸ் கமிஷன் தேர்வுகளுக்கு தயார் செய்து வருகிறார். பிரிலிமினரி தேர்வுகளில் தேர்ச்சி அடைந்து விட்டு மெயின் தேர்வுக்கான தயாரிப்பில் இருக்கிறார்.  உ.வே.சா குடந்தைக் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த போது அதே கல்லூரியில் சமஸ்கிருதப் பேராசிரியராக இருந்த ம.வீ. ராமானுஜாச்சாரின் ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை முழுமையாக வாசித்திருப்பதாகச் சொன்னார். சாந்தி பர்வத்தில் இன்னும் சில பக்கங்கள் மட்டுமே உள்ளன. ஓரிரு வாரத்தில் அந்த காவியத்தை வாசித்து நிறைவு செய்வேன் என சொன்னார். தமிழின் மகத்தான ஆக்கங்களில் ஒன்று அந்த மொழிபெயர்ப்பு. தன் வாழ்நாள் முழுதும் அந்த பணிக்காக அர்ப்பணித்து தனது சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் பொருள் செலவழித்து பெரும் இடர்களுக்குள்ளாகி ‘’ஸ்ரீ மகாபாரத பர்வங்கள்’’ நூலை மொழிபெயர்ப்பு செய்து கொண்டு வந்தவர் ம.வீ. ராமானுஜாச்சார். என்றும் தமிழ்ச் சமூகத்தின் வணக்கத்துக்குரியவர்.

இன்னொரு இளைஞர் சென்னையைச் சேர்ந்தவர். கம்ப ராமாயண வாசிப்புக்காக ஒரு வாசிப்பு குழுவை உருவாக்கியிருக்கிறார். வாரத்துக்கு மூன்று நாட்கள் அந்த குழு இணையம் மூலம் சந்திக்கிறது. அந்த குழுவில் இந்தியாவில் தமிழ்நாட்டில் இருக்கும் வாச்கர்களுடன் சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், அரபு நாடுகளில் வசிக்கும் தமிழ் வாசகர்களும் இருப்பதாகச் சொன்னார். கம்ப ராமாயணத்தில் ஒரு காண்டம் நிறைவு பெற்றதும் ஒரு ஞாயிற்றுக்கிழமையில் முழு காண்டத்தையும் ‘’முற்றோதல்’’ செய்கிறோம் என்று சொன்னார். அதில் இசைத்தன்மை கொண்ட கம்பன் பாடல்களைப் பாடுவதும் உண்டு என்று கூறினார். பத்தாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்துக்காக ஒரு இளைஞர் இத்தனை ஆர்வத்துடனும் தீவிரத்துடனும் செயலாற்றுவது என்பது மகத்தானது. குழுவில் உற்சாகமாகப் பங்கு பெறும் உலகின் பல பகுதிகளில் வசிக்கும் கம்பனின் வாசகர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

மூன்றாவது இளைஞர் ஒரு கடலோர கிராமத்தில் வசிப்பவர். ஐந்து ஆண்டுகளாக நவீன தமிழ் இலக்கியத்துடன் பரிச்சயம் கொண்டிருக்கிறார். கணிசமான அளவு நவீன தமிழ் இலக்கிய நாவல்களையும் அ-புனைவுகளையும் வாசித்திருக்கிறார். தனது பாட்டனாருக்கு கடலில் ஏற்பட்ட – கடலுடன் ஏற்பட்ட  அனுபவம் ஒன்றைக் குறித்து என்னிடம் மிகத் தீவிரமாகக் கூறிக் கொண்டிருந்தார். என்னிடம் அவர் தெரிவித்த அந்த விஷயத்தை ஒரு குறுநாவலாக எழுதும் படி சொன்னேன். அவர் என்னிடம் சொன்ன விஷயம் ஒரு குறுநாவலுக்குரிய உள்ளட்க்கம் கொண்டது. அதனை நிச்சயம் ஒரு குறுநாவலாக எழுத முடியும். நான் கூறியதைக் கேட்டதும் மிகவும் உணர்ச்சிகரமாகி விட்டார். விரைவில் எழுதத் தொடங்குகிறேன் என்று என்னிடம் உறுதி அளித்தார்.

ஆடி மாதத்தில் காவிரியில் பொங்கி வரும் புதுவெள்ளம் போன்றவர்கள் இந்த மூன்று இளைஞர்கள். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சாதித்திருப்பது என்ன என்ற வினாவுக்கு விடையாக விளங்கக் கூடியவர்கள்.

பிரபு மயிலாடுதுறை

புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்- பார்க்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:34

மணி திருநாவுக்கரசு

சிலசமயம் நாம் அறிவியக்கத்தின் மையமாக எண்ணுபவர்களைக் கொண்டே சிந்தனைப்போக்குகளை வரையறை செய்துவிடுவோம். பல தளங்களில் அவற்றைக் கொண்டுசென்றவர்கள் வரலாற்றில் மறக்கப்படுவார்கள். தமிழியக்க ஆளுமைகளில் ஒருவரான மணி திருநாவுக்கரசு நூலாசிரியர், பேச்சாளர், ஆய்வாளர் என்றெல்லாம் சொல்லத்தக்கவரல்ல. ஆனால் தனித்தமிழ் பாடநூல்களை உருவாக்கி நிலைநிறுத்திய பெரும்பணி அவருக்குரியது. தமிழ்க்கல்வியில், தமிழ் மீட்பில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு

மணி திருநாவுக்கரசு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2022 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.