Jeyamohan's Blog, page 661

December 15, 2022

ஒன்றும் செய்யாமலிருப்பதன் கலை

செந்தில்குமார்

அன்புள்ள ஜெ

நலமா?

தொடர்ச்சியாகப் பயணக்கட்டுரைகள். டிசம்பரில் நீங்கள் கோவையில் அவ்வளவு பெரிய விழாவை ஒருங்கிணைக்கிறீர்கள். அழைப்பாளர்களை திரட்டுவது முதல் அரங்குவரை ஏகப்பட்ட வேலைகள். நண்பர்களை ஒருங்கிணைப்பதே பெரிய வேலையாக இருக்கும். ஆனால் சம்பந்தமே இல்லாதவர் போல பயணம் செய்கிறீர்கள். எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். கூல் ஆக இருப்பது எப்படி என உங்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும் போலிருக்கிறது

ரவிச்சந்திரன் எம்

அன்புள்ள ரவி,

பெங்களூரில் சந்தித்ததில் மகிழ்ச்சி.

நான் சங்கர் பயிற்சிநிலைய உரையாடலில் ஒரு முக்கியமான விஷயம் சொல்லியிருந்தேன். மணி ரத்னத்தின் நிர்வாகம் பற்றி. அதுவே சிறந்த நிர்வாகம். ஒன்றும் செய்யாமலிருப்பதன் வழி அது. நான் அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசென்றவன். அவருக்காவது எவை எப்படி நிகழவேண்டும் என்று ஒரு திட்டம் உண்டு. அதற்குரிய வழிகாட்டலை அளிப்பதும், விளைவுகளை கண்காணிப்பதும் உண்டு. என்னுடைய வழி என்பது அதற்குரிய நபர்களை தெரிவுசெய்தபின் அப்படியே விலகிவிடுவது. தெரிவுகூட செய்வதில்லை. அவர்களே வந்தமைகிறார்கள். அவர்களே நடத்தி அவர்களே திருப்திப்பட்டுக்கொள்கிறார்கள்.

கோவை விழாவில் நான் பங்கேற்பாளன் மட்டுமே. உங்களைப்போல. என் பணி என அனேகமாக எதுவுமே இல்லை. முதன்மை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அல்லது குவிஸ் செந்தில். அவருடன் ராஜகோபாலன், ராம்குமார், நடராஜன், விஜய் சூரியன், மீனாம்பிகை, சுதா ஸ்ரீனிவாசன், ஸ்ரீனிவாசன், செல்வேந்திரன், பூபதி துரைசாமி, நரேன் என ஓர் அணியே உள்ளது. நான் எதற்கு வம்பு என அந்தப்பக்கமாக செல்வதே இல்லை. விழா சம்பந்தமாக அவர்கள் ஸூம் செயலியில் பல சந்திப்புகளை நடத்தினர். எதிலுமே கலந்துகொள்ளவில்லை. என்ன பேசினார்கள் என்றும் கேட்டுக்கொள்வதில்லை. அவர்கள் என்னிடம் அதிகபட்சமாக எதிர்பார்ப்பதும் தலையிடாமல் இருப்பதை மட்டும்தான்.

நம் வழி தனீ வழி

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:35

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு

சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல். ஒரு பெண் நூலகர் தனக்குக் கீழிருந்த வயதான அட்டெண்டர் ஒருவரைத் தரக்குறைவாக ஏசிக்கொண்டிருந்தார். “எத்தன தடவ சொன்னாலும் உனக்கெல்லாம் அறிவே வராதாய்யா, புத்தகத்த ஒழுங்கா கட்டக்கூடக் தெரியாதா, இதையெல்லாமா இந்த வயசுல ஒனக்குச் சொல்லிக்குடுப்பாங்க”. அந்தப் பெண்ணுக்கு அவரது மகள் வயதுதான் இருக்கும். அவ்வளவு விகாரமான ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. அந்த விகாரத்தை அவள் தன் தாய் தந்தையிடமிருந்து பெற்ற மரபணுக்களின் வாயிலாக அடையப்பெறவில்லை என்பது மட்டும் தெரிந்தது. அந்தப் பெண்ணின் எதிரே இருந்த வயதான அட்டெண்டர் கிட்டத்தட்ட அசடு வழிந்து கொண்டிருந்தார். சிரித்தபடி, “சாரி மேடம், இதோ இப்ப சரி பண்ணிடுறேன்” என்றபடி மீண்டும் பழைய புத்தகங்களை அடுக்கிக் கட்ட ஆரம்பித்தார். ஆளரவமற்ற அந்த நூலகத்தில் என்னைத் தவிர பெரியவர் அடைந்த அவமானத்தைக் கவனிக்க நேர்ந்தவர் வேறு எவரும் இல்லை என்றாலும், எனக்கு அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை. என்னெதிரே இருப்பவை புத்தக அடுக்குகள்தாமா? அந்த இடம் உண்மையில் நூலகம்தானா? நெருப்பின் நாவுகளுக்கு அப்பால் தெரியும் காட்சியைப் போல என்முன் இருந்த புத்தக அடுக்குகள் உருகியபடி காற்றில் மிதந்து செல்வது போல இருந்தது. நூலகத்திலிருந்து வெளியே நடந்து வருகையில் தோன்றியது, இந்தப் பெரியவரைப் போல இன்னொருவரை நமக்குத் தெரியுமே. சட்டென  நினைவில் எழுந்து வந்தார் கண்ணாயிரம் பெருமாள்.

சாருவின் ராஸ லீலா நாவலின் முதல் பாகமாக “கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்” இடம்பெறுகின்றன. பல வகையிலும் முக்கியமான நாவல் இது.

ஒரு அரசாங்க அலுவலகத்தைக் (குறிப்பாக, தபால்துறை அலுவலகம்) கதைக் களமாகக் கொண்டு, அதன் சகல வித இயக்கங்களையும் விரிவாக விவரிக்கும் நாவல் இதற்கு முன் தமிழில் வந்ததில்லை. நீல பத்மநாபனின் “ஃபைல்கள்” போன்ற சிறிய நாவல்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் அவற்றின் பேசுதளம் என்பது பிறிதொன்றாகவே இருக்கிறது. ராஸ லீலாவைப் போல இத்தனை விரிவாக அரசாங்க அலுவலகங்கள் அவற்றில் இடம்பெறவில்லை.அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களாகிய நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள், கனவான்கள் தோற்றத்தில் இருக்கும் சைத்தான்கள். அவர்களால் நிரம்பிய அலுவலகங்கள் என்பவை காரியாலயங்கள் அல்ல, வதைமுகாம்கள் என்பதை உணர்த்தும் நாவல் இது.தீண்டாமையின் பிறிதொரு வடிவம் அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாதி அடுக்குகளுக்குப் பதிலாக உத்தியோக அடுக்குகள். அவ்வளவே. மற்றபடி எதுவும் மாறவில்லை.

தமிழ் நவீன இலக்கியத்தில் கண்ணாயிரம் பெருமாள் மறக்க முடியாத கதாபாத்திரம். காரணம், இந்த நாவலை வாசிக்கையில் அவனது வியர்வையும், ரத்தமும், கண்ணீரும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வழிந்து நம் விரல்களை ஈரப்படுத்துவது போலிருக்கும். கண்ணாயிரம் பெருமாளை வாசிக்கையில், ஒவ்வொரு வாசகனுக்கும், அவர் விவரிக்கும் சம்பவங்கள் எவையும்  கற்பனையில்லை, எல்லாமே முழுமுற்றான உண்மை என்பது தெரிந்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அச்சம்பவங்கள் யாவும் மெய்யா, பொய்யா என்பதைக் காட்டிலும், அவற்றை ஜீரணிக்க முடிகிறதா என்பதே முக்கியமான வினாவாக எழுந்து நிற்கிறது. வாசிக்கக் கூட முடியாத அனுபவங்களை ஒருவர் வருடக்கணக்காக அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கவும் இயலவில்லை. கண்ணாயிரம் பெருமாளைப் போல எத்தனையோ மனிதர்கள், அவரது சக ஊழியர்களாக அதிகாரத்தின் முன் கூனிக்குறுகி அவமானப்பட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர் என்றபோதும், நுண்ணுணர்வுள்ள எழுத்தாளனான கண்ணாயிரம் பெருமாள் எப்படி இத்தனை வருடங்களை அந்த வதைமுகாமில் கழித்தார் என்பது உண்மையில் வியப்பளிக்கக் கூடியது. அவருக்கு எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருந்தது என்பது அதனினும் வியப்பூட்டக்கூடியது.

சிறைத்துறையில் பணியைத் துவக்கும் கண்ணாயிரம் பெருமாளுக்கு அலுவலகமே நரகமாக இருக்கிறது. சிறை கண்காளிப்பாளர் செய்யும் அட்டூழியங்களுக்கு முன்னர் ஹிட்லர் தோற்றுவிடுவான். ரவுண்ட்ஸ் செல்லும்போது தன் எதிரே வந்த கைதியை அடித்து நொறுக்குபவன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் வக்கிரம் புரிபவன் என சிறைக் கண்காளிப்பாளன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சைக்கோவாக வலம் வருகிறான்.

அரசு அலுவலர்களுக்கு சனி ஞாயிறுகளில் வேலையிருக்காது. அவர்கள் ஓய்வில் இருப்பார்கள் என என்னைப் போன்று தனியார்த் துறையில் பணிபுரிபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சனி ஞாயிறுகளிலும் அரசு ஊழியர்கள், மேலதிகாரிகளால் பணிக்கு வரவழைக்கப்பட்டு பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு அதுவே வழக்கமாகிப் போய்விடுகிறது. ஞாயிற்றுக் கிழமை ஒரு ஊழியர் பணிக்கு வரத் தயக்கம் காட்டினால் அவர் தன்னுடைய மேலதிகாரியால் கட்டம் கட்டப்படுகிறார். கண்ணாயிரம் பெருமாளும் கட்டம் கட்டப்படுகிறார். ஆனால், அவர்மீது நடவடிக்கை பாய்வதற்கு முன், டில்லிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வருகிறார். இம்முறை அவர் வேலை செய்யவிருப்பது தபால் துறையில். (கண்ணாயிரம் பெருமாளின் டில்லி அலுவலக அனுபவங்கள் நாவலில் அதிகம் இடம்பெறவில்லை. சாரு இவற்றை வேறெந்த நாவலிலாவது விரிவாக எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.)

சிறைத் துறைதான் கொடூரமானது. தபால் துறை சாத்வீகமானது என்ற வாசகனின் எண்ணத்தை உடைத்துப் போட்டுவிடுகிறது கண்ணாயிரம் பெருமாளின் தபால்த்துறை அனுபவங்கள். சிறைக் கண்காணிப்பாளரைக் காட்டிலும் கொடூர சைக்கோக்கள் இங்குதான் இருக்கிறார்கள். தவறு செய்து விட்ட ஊழியரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து வரச்செய்யும் மேலதிகாரி, முதிய ஊழியர் ஒருவரை தரக்குறைவாக ஒருமையில் ஏசி, கழுத்தைப் பிடித்து வெளியேற்றி, இரவு வரை அலுவலக வாசலில் காத்திருக்க வைக்கும் இன்னொரு மேலதிகாரி. அதிகாரியுடைய மனைவிக்கு, பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலமாகச் சென்னைக்கு வரவழைக்கப்படும் தண்ணீர் பாட்டில். பிடிக்காத ஊழியருக்கு DIES-NON மற்றும் R.T (Rotational Transfer) கொடுப்பது என மனச்சிதைவுற்ற அதிகாரிகளின் கூடாரமாக இருக்கிறது அலுவலகம். அலுவலகத்தைக் குறிக்கையில் Mental asylum என்ற வார்த்தையையே அதிகம் பயன்படுத்துகிறார் பெருமாள்.

அதிகாரிகளின் இன்னொரு முகமும் நாவலில் வருகிறது. தொழிற்சங்க ஊழியர் வந்து மிரட்டியதும் அதுவரை அடாவடித்தனமாக நடந்து கொண்ட மேலதிகாரி சட்டென கண்ணாயிரம் பெருமாளிடம் குழைந்து பேசுவது, கல்கத்தாவில் வேலை செய்யப் பிடிக்காத அதிகாரி மீண்டும் பெருமாளிடம் வந்து கெஞ்சி கடிதம் டைப் செய்யச் சொல்லுவது,போன்ற காட்சிகளைச் சொல்லலாம். அதன் மறுபக்கமாக, கீழ்நிலை ஊழியர்கள் மேலதிகாரியிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக செய்யும் தந்திரங்களும் (மேலதிகாரியின் மனைவிக்கு வேலைக்காரனாகவே மாறிவிடுவது, மேலதிகாரியின் ஷூ லேஸைக் கட்டி விடுவது) நாவலில் இடம்பெறுகின்றன.

நாவல் இன்னொரு செய்தியையும் சொல்கிறது. அதிகார போதை என்பது பால் பேதமற்றது. மேலதிகாரியாக ஒரு பெண் வந்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்தால், அதைக் காட்டிலும் பிழை வேறொன்றில்லை. இந்த நாவலிலும் இந்திராணி என்ற பெண் அதிகாரி வருகிறார். பணியில் சேர்ந்த முதல் நாளே நான்கு கடைநிலை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டுத்தான் தன் அலுவல்களைத் துவங்குகிறார். முக்கிய வேலையாக இருக்கும்போது தன்னைப் பிறர் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய அறைக்கதவுக்கு வெளியே சிவப்பு விளக்கை எரியச் செய்பவர், பல சமயங்களில் அதை அணைக்க மறந்து, முகத்துக்கு பவுடர் போட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். இதனால், முக்கியக் கோப்புகளில் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் அவரது அறைக்கு வெளியில் கீழ்நிலை ஊழியர்கள் மணிக்கணக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஸ்டெனோக்களுக்கு அப்போது சங்கம் துவக்கவில்லை என்பதால், அவர்கள் பெரிதும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அந்தப் பெண் அதிகாரியின் செருப்பை வைப்பதற்கு தேக்கு மரத்தாலான பளபளக்கும் பலகை இருக்கிறது. ஆனால், ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை நரகமாக இருக்கிறது. கழிவறைக் கதவுக்குத் தாழ்பாள் இல்லை. அசுத்தமாக இருக்கிறது. அதில் மலம் கழிப்பது என்பதே ஒரு சாதனைதான்.

நாவலில் கண்ணாயிரம் பெருமாள் விவரிக்கும் அந்தக் கழிவறை என்பது வெறுமனே கழிவறை மட்டுமல்ல. அது அரசாங்க அலுவலகத்தின் குறியீடு. எந்த முன்னேற்றமும் இல்லாத, தேங்கிப் புழுத்துப் போன, நாற்றமெடுக்கும் அரசாங்க அலுவலகத்திற்கு இதற்கிணையான வேறொரு குறியீட்டைப் பயன்படுத்தவே முடியாது. கண்ணாயிரம் பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் அவர் மீது லாரி நிறைய மலம் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இக்கனவினால் வேதனையுற்று, அலறியபடியே உறக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார். கனவுகளை விளக்கும் இணையதளங்களில் தேடினால், கனவில் மலம் வருவது என்பது மனதிலுள்ள அழுத்தங்களிலிருந்து விடுபடுதலைக் குறிக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். உண்மையில் பெருமாள், தன் பால்யத்தின் துர்நினைவுகளின் அழுத்தங்களிலிருந்து இத்தனை ஆண்டுகளாக இன்னும் விடுபடவில்லை, ஒருவேளை விடுபடவே முடியாது என்பதைத்தான் அக்கனவுகள் உணர்த்துகின்றன என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலில் மாறிமாறி தகவல்களும் அனுபவங்களும் அதைச் சார்ந்த மனப்பதிவுகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.   கண்ணாயிரம் பெருமாளின் அலுவலக வாழ்க்கையும் தனி வாழ்க்கையும் இணைக்கோடுகளாகவும், சில இடங்களில் ஒன்றுக்கொன்று முயங்கிபடியும் வந்து கொண்டிருக்கின்றன. தாய்லாந்து பெண்கள், பெருமாளின் பெண் தோழிகள், பெண் தோழிகளுடனான பெருமாளின் நேரடி மற்றும் இணைய உரையாடல்கள், உறவும் பிணக்கும் என வேறொரு உலகமும் நாவலில் விரிவாக இடம்பெறுகின்றன. ஆனாலும், என்னைப் பாதித்தது அவரது அலுவலக அனுபவங்கள்தாம் என்பதால் அதைக் குறித்துத்தான் எழுத வருகிறது.

சாரு பாலியலை மட்டும் விரிவாக எழுதக்கூடிய எழுத்தாளர் அல்ல. அதற்கு தஞ்சை பிரகாஷ் போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தஞ்சை பிரகாஷ் போன்றவர்களிடமிருந்து சாருவைப் பிரித்துக் காட்டும் கூறு என்பது சாருவால் தனிமனிதனின் ஆன்மிகத்தையும் பாலியல் அளவிற்கே சுவாரஸ்யமாகச் சொல்லமுடியும் என்பதே. இந்த ஆன்மிகம் என்பது கடவுள், பக்தி, தியானம் போன்றவற்றைத் தாண்டிய ஆன்மிகம். தன்னை உணர்தல் என்பதையும், தன்னை எவ்வாறாக உணர்கிறேன் என்பதையும் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருத்தல். அதே சமயம், தீவிர தத்துவ விவாதங்களுக்குள் அவர் செல்வதில்லை. அது தன் ஏரியா அல்ல என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து விடுகிறார். இந்த நாவலிலேயே அத்தகைய இடங்களையெல்லாம், “அது தன் சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருப்பது” என்று சொல்லியபடியே கண்ணாயிரம் பெருமாள் கடந்து செல்வதைக் காணலாம்.

ஒருபக்கம் தாய்லாந்து பெண்ணுடனான சம்போகம், மறுபக்கம், அறுவை சிகிச்சை முடிந்த பலவீனமான தேகத்தோடு பாபாவை நினைத்துக் கொண்டிருத்தல் என இந்த இரு எல்லைகளுக்கிடையேயான ஒரு படைப்பாளியின் உலகத்தை விரிவாகப் பதிவு செய்த நாவல் இது. சூன்யத்தில் இருந்து பிறந்து மீண்டும் சூன்யத்திற்கே திரும்பும் பயணம். ஒரு சார்வாகனின் வீரியத்துடன் இன்பத்தையே நாடிச் செல்லும் பயணம், மறு எல்லையில், விருட்சத்தின் கிளையில் தன் உடல் பாகங்களைத் தனித்தனியே துண்டித்து மீண்டும் இணைக்கும் ஒரு கண்ட யோகியின் பாதங்களில் நிறைவுறுகிறது.

கணேஷ் பாபு – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:34

அதிகார எந்திரத்தில் பிழியப்படும் கண்ணாயிரம் பெருமாள் -கணேஷ் பாபு

சென்னையின் அரசு நூலகம் ஒன்றிற்கு சமீபத்தில் சென்றிருந்தேன். புத்தக அடுக்குகளை மேய்ந்துகொண்டிருந்தபோது, அந்தச் சூழலின் மௌனத்தைக் கலைத்தது ஒரு பெண்குரல். உண்மையைச் சொல்வதாக இருந்தால், அது பெண்ணின் குரல் அல்ல, அதிகாரத்தின் குரல். ஒரு பெண் நூலகர் தனக்குக் கீழிருந்த வயதான அட்டெண்டர் ஒருவரைத் தரக்குறைவாக ஏசிக்கொண்டிருந்தார். “எத்தன தடவ சொன்னாலும் உனக்கெல்லாம் அறிவே வராதாய்யா, புத்தகத்த ஒழுங்கா கட்டக்கூடக் தெரியாதா, இதையெல்லாமா இந்த வயசுல ஒனக்குச் சொல்லிக்குடுப்பாங்க”. அந்தப் பெண்ணுக்கு அவரது மகள் வயதுதான் இருக்கும். அவ்வளவு விகாரமான ஒரு பெண்ணை நான் பார்த்ததேயில்லை. அந்த விகாரத்தை அவள் தன் தாய் தந்தையிடமிருந்து பெற்ற மரபணுக்களின் வாயிலாக அடையப்பெறவில்லை என்பது மட்டும் தெரிந்தது. அந்தப் பெண்ணின் எதிரே இருந்த வயதான அட்டெண்டர் கிட்டத்தட்ட அசடு வழிந்து கொண்டிருந்தார். சிரித்தபடி, சாரி மேடம், இதோ இப்ப சரி பண்ணிடுறேன்” என்றபடி மீண்டும் பழைய புத்தகங்களை அடுக்கிக் கட்ட ஆரம்பித்தார். ஆளரவமற்ற அந்த நூலகத்தில் என்னைத் தவிர பெரியவர் அடைந்த அவமானத்தைக் கவனிக்க நேர்ந்தவர் வேறு எவரும் இல்லை என்றாலும், எனக்கு அந்த இடத்தில் அதற்கு மேல் நிற்க முடியவில்லை. என்னெதிரே இருப்பவை புத்தக அடுக்குகள்தாமா? அந்த இடம் உண்மையில் நூலகம்தானா? நெருப்பின் நாவுகளுக்கு அப்பால் தெரியும் காட்சியைப் போல என்முன் இருந்த புத்தக அடுக்குகள் உருகியபடி காற்றில் மிதந்து செல்வது போல இருந்தது. நூலகத்திலிருந்து வெளியே நடந்து வருகையில் தோன்றியது, இந்தப் பெரியவரைப் போல இன்னொருவரை நமக்குத் தெரியுமே. சட்டென  நினைவில் எழுந்து வந்தார் கண்ணாயிரம் பெருமாள்.

சாருவின் ராஸ லீலா நாவலின் முதல் பாகமாக “கண்ணாயிரம் பெருமாளின் நாற்பது கதைகளும் சில பின்குறிப்புகளும்” இடம்பெறுகின்றன. பல வகையிலும் முக்கியமான நாவல் இது.

ஒரு அரசாங்க அலுவலகத்தைக் (குறிப்பாக, தபால்துறை அலுவலகம்) கதைக் களமாகக் கொண்டு, அதன் சகல வித இயக்கங்களையும் விரிவாக விவரிக்கும் நாவல் இதற்கு முன் தமிழில் வந்ததில்லை. நீல பத்மநாபனின் “ஃபைல்கள்” போன்ற சிறிய நாவல்கள் இதற்கு முன் வந்திருந்தாலும் அவற்றின் பேசுதளம் என்பது பிறிதொன்றாகவே இருக்கிறது. ராஸ லீலாவைப் போல இத்தனை விரிவாக அரசாங்க அலுவலகங்கள் அவற்றில் இடம்பெறவில்லை.அதிகாரிகள் என்பவர்கள் பொதுமக்களாகிய நாம் நினைத்துக்கொண்டிருப்பது போல அல்ல. அவர்களில் பெரும்பாலானவர்கள், கனவான்கள் தோற்றத்தில் இருக்கும் சைத்தான்கள். அவர்களால் நிரம்பிய அலுவலகங்கள் என்பவை காரியாலயங்கள் அல்ல, வதைமுகாம்கள் என்பதை உணர்த்தும் நாவல் இது.தீண்டாமையின் பிறிதொரு வடிவம் அரசு அலுவலகங்களில் நீக்கமற நிறைந்துள்ளது என்பதை இந்த நாவல் காட்டுகிறது. சாதி அடுக்குகளுக்குப் பதிலாக உத்தியோக அடுக்குகள். அவ்வளவே. மற்றபடி எதுவும் மாறவில்லை.

தமிழ் நவீன இலக்கியத்தில் கண்ணாயிரம் பெருமாள் மறக்க முடியாத கதாபாத்திரம். காரணம், இந்த நாவலை வாசிக்கையில் அவனது வியர்வையும், ரத்தமும், கண்ணீரும் ஒவ்வொரு பக்கத்திலிருந்தும் வழிந்து நம் விரல்களை ஈரப்படுத்துவது போலிருக்கும். கண்ணாயிரம் பெருமாளை வாசிக்கையில், ஒவ்வொரு வாசகனுக்கும், அவர் விவரிக்கும் சம்பவங்கள் எவையும்  கற்பனையில்லை, எல்லாமே முழுமுற்றான உண்மை என்பது தெரிந்துவிடுகிறது. இன்னும் சொல்லப்போனால், அச்சம்பவங்கள் யாவும் மெய்யா, பொய்யா என்பதைக் காட்டிலும், அவற்றை ஜீரணிக்க முடிகிறதா என்பதே முக்கியமான வினாவாக எழுந்து நிற்கிறது. வாசிக்கக் கூட முடியாத அனுபவங்களை ஒருவர் வருடக்கணக்காக அனுபவித்துக் கொண்டிருந்திருக்கிறார் என்பதை யோசித்துப் பார்க்கவும் இயலவில்லை. கண்ணாயிரம் பெருமாளைப் போல எத்தனையோ மனிதர்கள், அவரது சக ஊழியர்களாக அதிகாரத்தின் முன் கூனிக்குறுகி அவமானப்பட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர் என்றபோதும், நுண்ணுணர்வுள்ள எழுத்தாளனான கண்ணாயிரம் பெருமாள் எப்படி இத்தனை வருடங்களை அந்த வதைமுகாமில் கழித்தார் என்பது உண்மையில் வியப்பளிக்கக் கூடியது. அவருக்கு எப்படி பைத்தியம் பிடிக்காமல் இருந்தது என்பது அதனினும் வியப்பூட்டக்கூடியது.

சிறைத்துறையில் பணியைத் துவக்கும் கண்ணாயிரம் பெருமாளுக்கு அலுவலகமே நரகமாக இருக்கிறது. சிறை கண்காளிப்பாளர் செய்யும் அட்டூழியங்களுக்கு முன்னர் ஹிட்லர் தோற்றுவிடுவான். ரவுண்ட்ஸ் செல்லும்போது தன் எதிரே வந்த கைதியை அடித்து நொறுக்குபவன், தனக்குக் கீழ் பணியாற்றும் பெண்களிடம் பாலியல் வக்கிரம் புரிபவன் என சிறைக் கண்காளிப்பாளன் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட சைக்கோவாக வலம் வருகிறான்.

அரசு அலுவலர்களுக்கு சனி ஞாயிறுகளில் வேலையிருக்காது. அவர்கள் ஓய்வில் இருப்பார்கள் என என்னைப் போன்று தனியார்த் துறையில் பணிபுரிபவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், சனி ஞாயிறுகளிலும் அரசு ஊழியர்கள், மேலதிகாரிகளால் பணிக்கு வரவழைக்கப்பட்டு பிழிந்தெடுக்கப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில், ஊழியர்களுக்கு அதுவே வழக்கமாகிப் போய்விடுகிறது. ஞாயிற்றுக் கிழமை ஒரு ஊழியர் பணிக்கு வரத் தயக்கம் காட்டினால் அவர் தன்னுடைய மேலதிகாரியால் கட்டம் கட்டப்படுகிறார். கண்ணாயிரம் பெருமாளும் கட்டம் கட்டப்படுகிறார். ஆனால், அவர்மீது நடவடிக்கை பாய்வதற்கு முன், டில்லிக்கு மாற்றலாகிச் சென்றுவிடுகிறார். பல வருடங்களுக்குப் பின்னர் மீண்டும் தமிழ்நாட்டுக்கு மாற்றலாகி வருகிறார். இம்முறை அவர் வேலை செய்யவிருப்பது தபால் துறையில். (கண்ணாயிரம் பெருமாளின் டில்லி அலுவலக அனுபவங்கள் நாவலில் அதிகம் இடம்பெறவில்லை. சாரு இவற்றை வேறெந்த நாவலிலாவது விரிவாக எழுதியிருக்கிறாரா எனத் தெரியவில்லை.)

சிறைத் துறைதான் கொடூரமானது. தபால் துறை சாத்வீகமானது என்ற வாசகனின் எண்ணத்தை உடைத்துப் போட்டுவிடுகிறது கண்ணாயிரம் பெருமாளின் தபால்த்துறை அனுபவங்கள். சிறைக் கண்காணிப்பாளரைக் காட்டிலும் கொடூர சைக்கோக்கள் இங்குதான் இருக்கிறார்கள். தவறு செய்து விட்ட ஊழியரின் மனைவியை படுக்கைக்கு அழைத்து வரச்செய்யும் மேலதிகாரி, முதிய ஊழியர் ஒருவரை தரக்குறைவாக ஒருமையில் ஏசி, கழுத்தைப் பிடித்து வெளியேற்றி, இரவு வரை அலுவலக வாசலில் காத்திருக்க வைக்கும் இன்னொரு மேலதிகாரி. அதிகாரியுடைய மனைவிக்கு, பெங்களூரில் இருந்து பிருந்தாவன் எக்ஸ்பிரஸ் மூலமாகச் சென்னைக்கு வரவழைக்கப்படும் தண்ணீர் பாட்டில். பிடிக்காத ஊழியருக்கு DIES-NON மற்றும் R.T (Rotational Transfer) கொடுப்பது என மனச்சிதைவுற்ற அதிகாரிகளின் கூடாரமாக இருக்கிறது அலுவலகம். அலுவலகத்தைக் குறிக்கையில் Mental asylum என்ற வார்த்தையையே அதிகம் பயன்படுத்துகிறார் பெருமாள்.

அதிகாரிகளின் இன்னொரு முகமும் நாவலில் வருகிறது. தொழிற்சங்க ஊழியர் வந்து மிரட்டியதும் அதுவரை அடாவடித்தனமாக நடந்து கொண்ட மேலதிகாரி சட்டென கண்ணாயிரம் பெருமாளிடம் குழைந்து பேசுவது, கல்கத்தாவில் வேலை செய்யப் பிடிக்காத அதிகாரி மீண்டும் பெருமாளிடம் வந்து கெஞ்சி கடிதம் டைப் செய்யச் சொல்லுவது,போன்ற காட்சிகளைச் சொல்லலாம். அதன் மறுபக்கமாக, கீழ்நிலை ஊழியர்கள் மேலதிகாரியிடம் செல்வாக்கைப் பெறுவதற்காக செய்யும் தந்திரங்களும் (மேலதிகாரியின் மனைவிக்கு வேலைக்காரனாகவே மாறிவிடுவது, மேலதிகாரியின் ஷூ லேஸைக் கட்டி விடுவது) நாவலில் இடம்பெறுகின்றன.

நாவல் இன்னொரு செய்தியையும் சொல்கிறது. அதிகார போதை என்பது பால் பேதமற்றது. மேலதிகாரியாக ஒரு பெண் வந்தால் நிலைமை மாறிவிடும் என்று நினைத்தால், அதைக் காட்டிலும் பிழை வேறொன்றில்லை. இந்த நாவலிலும் இந்திராணி என்ற பெண் அதிகாரி வருகிறார். பணியில் சேர்ந்த முதல் நாளே நான்கு கடைநிலை ஊழியர்களை சஸ்பெண்ட் செய்துவிட்டுத்தான் தன் அலுவல்களைத் துவங்குகிறார். முக்கிய வேலையாக இருக்கும்போது தன்னைப் பிறர் தொந்தரவு செய்துவிடக்கூடாது என்பதற்காக, தன்னுடைய அறைக்கதவுக்கு வெளியே சிவப்பு விளக்கை எரியச் செய்பவர், பல சமயங்களில் அதை அணைக்க மறந்து, முகத்துக்கு பவுடர் போட்டு அலங்கரித்துக் கொண்டிருக்கிறார். இதனால், முக்கியக் கோப்புகளில் அவரிடம் கையெழுத்து வாங்க முடியாமல் அவரது அறைக்கு வெளியில் கீழ்நிலை ஊழியர்கள் மணிக்கணக்காகக் காத்துக்கொண்டிருக்கின்றனர். ஸ்டெனோக்களுக்கு அப்போது சங்கம் துவக்கவில்லை என்பதால், அவர்கள் பெரிதும் ஆதரவற்ற நிலையிலேயே இருக்கிறார்கள். அந்தப் பெண் அதிகாரியின் செருப்பை வைப்பதற்கு தேக்கு மரத்தாலான பளபளக்கும் பலகை இருக்கிறது. ஆனால், ஊழியர்கள் பயன்படுத்தும் கழிவறை நரகமாக இருக்கிறது. கழிவறைக் கதவுக்குத் தாழ்பாள் இல்லை. அசுத்தமாக இருக்கிறது. அதில் மலம் கழிப்பது என்பதே ஒரு சாதனைதான்.

நாவலில் கண்ணாயிரம் பெருமாள் விவரிக்கும் அந்தக் கழிவறை என்பது வெறுமனே கழிவறை மட்டுமல்ல. அது அரசாங்க அலுவலகத்தின் குறியீடு. எந்த முன்னேற்றமும் இல்லாத, தேங்கிப் புழுத்துப் போன, நாற்றமெடுக்கும் அரசாங்க அலுவலகத்திற்கு இதற்கிணையான வேறொரு குறியீட்டைப் பயன்படுத்தவே முடியாது. கண்ணாயிரம் பெருமாளுக்கு அடிக்கடி ஒரு கனவு வருகிறது. அந்தக் கனவில் அவர் மீது லாரி நிறைய மலம் கொட்டப்படுகிறது. ஒவ்வொரு முறையும் இக்கனவினால் வேதனையுற்று, அலறியபடியே உறக்கத்திலிருந்து எழுந்து கொள்கிறார். கனவுகளை விளக்கும் இணையதளங்களில் தேடினால், கனவில் மலம் வருவது என்பது மனதிலுள்ள அழுத்தங்களிலிருந்து விடுபடுதலைக் குறிக்கிறது என்று போட்டிருக்கிறார்கள். உண்மையில் பெருமாள், தன் பால்யத்தின் துர்நினைவுகளின் அழுத்தங்களிலிருந்து இத்தனை ஆண்டுகளாக இன்னும் விடுபடவில்லை, ஒருவேளை விடுபடவே முடியாது என்பதைத்தான் அக்கனவுகள் உணர்த்துகின்றன என்றும் தோன்றுகிறது.

இந்த நாவலில் மாறிமாறி தகவல்களும் அனுபவங்களும் அதைச் சார்ந்த மனப்பதிவுகளும் வந்துகொண்டேயிருக்கின்றன.   கண்ணாயிரம் பெருமாளின் அலுவலக வாழ்க்கையும் தனி வாழ்க்கையும் இணைக்கோடுகளாகவும், சில இடங்களில் ஒன்றுக்கொன்று முயங்கிபடியும் வந்து கொண்டிருக்கின்றன. தாய்லாந்து பெண்கள், பெருமாளின் பெண் தோழிகள், பெண் தோழிகளுடனான பெருமாளின் நேரடி மற்றும் இணைய உரையாடல்கள், உறவும் பிணக்கும் என வேறொரு உலகமும் நாவலில் விரிவாக இடம்பெறுகின்றன. ஆனாலும், என்னைப் பாதித்தது அவரது அலுவலக அனுபவங்கள்தாம் என்பதால் அதைக் குறித்துத்தான் எழுத வருகிறது.

சாரு பாலியலை மட்டும் விரிவாக எழுதக்கூடிய எழுத்தாளர் அல்ல. அதற்கு தஞ்சை பிரகாஷ் போன்ற எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். தஞ்சை பிரகாஷ் போன்றவர்களிடமிருந்து சாருவைப் பிரித்துக் காட்டும் கூறு என்பது சாருவால் தனிமனிதனின் ஆன்மிகத்தையும் பாலியல் அளவிற்கே சுவாரஸ்யமாகச் சொல்லமுடியும் என்பதே. இந்த ஆன்மிகம் என்பது கடவுள், பக்தி, தியானம் போன்றவற்றைத் தாண்டிய ஆன்மிகம். தன்னை உணர்தல் என்பதையும், தன்னை எவ்வாறாக உணர்கிறேன் என்பதையும் தொடர்ந்து முன்வைத்துக்கொண்டே இருத்தல். அதே சமயம், தீவிர தத்துவ விவாதங்களுக்குள் அவர் செல்வதில்லை. அது தன் ஏரியா அல்ல என்பதையும் வெளிப்படையாக தெரிவித்து விடுகிறார். இந்த நாவலிலேயே அத்தகைய இடங்களையெல்லாம், “அது தன் சிந்தனை வட்டத்திற்கு வெளியே இருப்பது” என்று சொல்லியபடியே கண்ணாயிரம் பெருமாள் கடந்து செல்வதைக் காணலாம்.

ஒருபக்கம் தாய்லாந்து பெண்ணுடனான சம்போகம், மறுபக்கம், அறுவை சிகிச்சை முடிந்த பலவீனமான தேகத்தோடு பாபாவை நினைத்துக் கொண்டிருத்தல் என இந்த இரு எல்லைகளுக்கிடையேயான ஒரு படைப்பாளியின் உலகத்தை விரிவாகப் பதிவு செய்த நாவல் இது. சூன்யத்தில் இருந்து பிறந்து மீண்டும் சூன்யத்திற்கே திரும்பும் பயணம். ஒரு சார்வாகனின் வீரியத்துடன் இன்பத்தையே நாடிச் செல்லும் பயணம், மறு எல்லையில், விருட்சத்தின் கிளையில் தன் உடல் பாகங்களைத் தனித்தனியே துண்டித்து மீண்டும் இணைக்கும் ஒரு கண்ட யோகியின் பாதங்களில் நிறைவுறுகிறது.

கணேஷ் பாபு – தமிழ் விக்கி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:34

நட்சத்திரவாசிகள் – ஆமருவி தேவநாதன்

அன்புள்ள ஜெயமோகன், நலமாயிருக்கிறீர்களா ?

விஷ்ணுபுரம் விழாவில் கார்த்திக் பாலசுப்பிரமணியம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்கிறார் என்று அறிந்தேன். நான் சமீபத்தில் வாசித்த, துறை சார்ந்த, தரமான புனைவெழுத்து அவருடையது. அவரது ‘நட்சத்திரவாசிகள்’ நாவல் குறித்த என் பார்வையை எழுதியிருக்கிறேன். (பெரிய அளவில் மற்ற மொழி இலக்கிய வாசகர்களையும் அந்த நாவல் சென்று அடைய வேண்டும் என்பதால் வேண்டுமென்றே ஆங்கிலத்தில்) இந்த நாவலையும், ‘மறுபடியும்’ என்னும் நாவலையும் தவிர்த்துத் தமிழில் தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிறிதொரு நல்ல நாவல் இருப்பதாகத் தோன்றவில்லை.

நட்சத்திரவாசிகள் (Starlings) – a review நன்றிஆமருவி.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:31

யூசுப், கடிதம்

விஷ்ணுபுரம் விருந்தினர்: குளச்சல் மு யூசுப்  

வைக்கம் முகமது பஷீர் தமிழ் விக்கி

அன்புள்ள ஜெ

இந்த விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எனக்கு தனிப்பட்ட முறையில் மிகுந்த பெருமை அளிக்கும் விஷயம் மு.யூசுப் அவர்களின் அமர்வு. விஷ்ணுபுரம் மேடையிலே ஒரு மொழிபெயர்ப்பாளர் இடம்பெறுவது இதுதான் முதல்முறை என நினைக்கிறேன். வரும் நாட்களில் குறிஞ்சிவேலன், நிர்மால்யா, நல்லதம்பி போன்ற மொழிபெயர்ப்பாளர்களுக்கும் இடமளிக்கப்படவேண்டும். அவர்களுடைய பங்களிப்பு மிக முக்கியமானது.

மொழிபெயர்ப்பாளகள்தான் தமிழிலக்கியத்தின் நுரையீரல் என்று சொல்லலாம். அவர்கள் வழியாகத்தான் வெளிக்காற்று உள்ளே வருகிறது. நம் மூச்சு வெளியே செல்கிறது. தமிழிலிருந்து மொழிபெயர்ப்பு செய்யும் கல்யாணராமன், பிரியம்வதா, வசந்தசூரியா போன்றவர்களுக்கும் அரங்கு வைக்கப்படவேண்டும்.

நான் வைக்கம் முகமது பஷீரின் ரசிகன். ஏற்கனவே அவருடைய கதைகளை பலர் மொழிபெயர்ப்பு செய்துள்ளனர். குகாரி சி.எஸ்.விஜயம் மொழிபெயர்ப்பு செய்து என்பிடி வெளியிட்ட நூலையே நான் வாசித்துள்ளேன். ஆனால் யூசுப் மொழிபெயர்த்த பிறகுதான் வைக்கம் முகமது பஷீர் உண்மையான வடிவிலே தமிழில் அறிமுகம் ஆனார்.

பஷீர் மலையாளத்திலே மாப்ளா வழக்கிலே எழுதுபவர். அவரை இங்கே செந்தமிழிலோ நம்முடைய பேச்சுவழக்கிலோ மொழிபெயர்த்தால் சரியாக வராது. யூசுப் அதை தேங்காப்பட்டணம் மொழியிலே மொழிபெயர்ப்பு செய்கிறர். அது தோப்பில் முகமது மீரான் வழியாக நமக்கு அறிமுகமான மொழி. அதோடு அது மாப்ளா மொழிக்கும் மிக நெருக்கமானது. ஆகவே உரையாடல்கள் நம்பகமாகவும் நுணுக்கமான பகடியெல்லாம் வெளிப்படும்படியாகவும் உள்ளன. பஷீரின் மூலக்கதையை படிப்பதுபோன்றே உள்ளது.

முஸ்லீம்பாஷை என்றால் நமக்கு இங்கே காயல்பட்டினம் பாஷைதான். அதில் அரபு கொஞ்சமாகவே உள்ளது. தேங்காப்பட்டினம் மொழியிலேதான் நல்ல அரபு ஊடுருவல் உள்ளது. அதை அழகாக யூசுப் மொழிபெயர்த்துள்ளார். அந்த மொழிபெயர்ப்புக்காகவே யூசுப் தமிழிலே என்றென்றைக்கும் நினைக்கப்படுவார்.

ஜி.சாந்தகுமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

போகன் -அபூர்வங்களையும், அபத்தங்களையும் காட்சிப்படுத்தும் கலைஞன்

விஜயராகவன் நெறியாள்கையில் போகன்விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 

போகன் சங்கர் என்ற எழுத்தாளரை வகைப்படுத்துவது மிகக் கடினமான செயல். அவர் ஒரு கவிஞரா, கட்டுரையாளரா, சிறுகதை ஆசிரியரா, குறுங்கதைகளின் முக்கியப் புள்ளியா அல்லது விமர்சகரா? இவை அனைத்தும் ஒருங்கிணைந்த கலவை அவர். ஆனால் அவர் கவிஞர் என நவீன தமிழிலக்கியச் சூழலில் அறியப்படுவதால் அதனையே முதன்மையாகக் கொண்டு அவருடைய எழுத்துக்கள் குறித்த வாசிப்புப் பார்வையாக இக்கட்டுரையைத் தொடங்குகிறேன்.

கவிஞர்:

போகனின் கவிதைகளுக்காகவே அவரைப் பின் தொடர்பவர்கள் ஏராளம். போகனின் எழுத்துக்களின் சிறப்பு என நான் கருதுவது அவருடைய சொற்தேர்ச்சி. மிகவும் சிக்கலான கருத்துக்களை விளக்க எளிமையான கவிதை நயமிக்க சொற்களைக் கொண்டு தான் சொல்ல வந்த செய்தியை மிக நேர்த்தியாக வாசகனுக்குக் கடத்தி விடுகிறார். இதை அவரின் நண்பர் சொற்சிக்கனம் எனக் குறிக்கிறார். உதாரணமாக ஒரு மனிதன் தன் வாழ்வில் எதிர்கொண்ட முக்குணப் பெண்களைப் பற்றிய கவிதையிலுள்ள படிமம் கூற வந்த மிக முக்கியமான கருதுகோளை வாசகனுக்கு எப்படிக் கடத்துகிறது எனப் பார்ப்போம்:

மறைந்து போன வானவில்லைப் பார்க்கச்
சென்ற முட்டாள் சிறுவனைப் போல
நின்றிருந்தேன்.

என்னும் முட்டாள் சிறுவன் படிமம்தவறவிட்ட அரிய தருணத்தை, இழப்பின் துயரை மிக அழகாகக் காட்சிப்படுத்துகிறது. மிக அரிதாக ஒரு மனிதனின் வாழ்வில் எதிர்ப்படும் சத்துவத்தின் நிதானம் கொண்ட பிரதிபலன் எதிர்பாராத பெண்ணின் அன்பின் சொற்களை நிகழும் கணத்தில் அதன் அருமையை உணராமல், அவள் மறைந்த சில வருடங்களுக்குப் பிறகு குப்பைக்கூடையில் தேடியலையும் ஒருவனை மறைந்த வானவில்லை விளையாட்டுப் புத்தியால் நிகழ் கணத்தில் தவற விட்டுப் பிறகு பார்க்க முடியாமால் சோர்ந்து, திகைத்து நிற்கும்சிறுவனுக்கு ஒப்பிட்டு காட்டும் கவிதை அழகிய காட்சிப் படிமம். அபூர்வத் தருணங்கள் அரிதாகவே கிடைக்கும் என்பதற்கு இதை விட நல்ல சான்று கிடைக்குமா?

இந்தியத் தொன்மங்களில் இப்பிரபஞ்சத்தின் முதல் சலனம் ஒலி வடிவிலானது என்ற கோட்பாடு உண்டு. பிரபஞ்சத்தின் இறுதி என்பது சலனமின்மையே எனக் கூறுவோரும் உண்டு. மானுட வாழ்வென்பதும் சலனத்தில் (ஒலியில்) தொடங்கி சலனமின்மையில் (மவுனம்) முடியக்கூடியது. இதை கிருஷ்ணனும் சிவனும் என்ற கவிதையில் எழுதியிருக்கிறார்.

கிருஷ்ணனும் சிவனும்.

‘அவன் விடாது
ஒலிக்கும் த்ருபத் இசை”
என்றார் அவர்.
“விடாது என்னை
இசைய வைக்கும்
ஒரு பாடகன்.
ஒவ்வொரு இலையாய்ப்
பார்த்துப் பார்த்துச்
சலசலக்கவைக்கும் காற்று.
கூவியே இரவை விடிய வைக்கும்
பறவை .

மூச்சு முட்டுகிறது எனக்கு.
நெகிழ்ந்து நெகிழ்ந்து
கரைந்து
நான் என்பதே சிறுத்து சிறுத்து இல்லாமல்
போய்விடுவேனோ என்ற பயம்
வந்துவிட்டது எனக்கு.

நான் உன்னிடம் வந்தேன்

அசையாது
வசந்தகால நதியொழுக்கை
சரத் கால வெள்ளப்பெருக்கை
வறள்கால வெறுமையை
உச்சியிலிருந்து
உற்று நோக்கி நிற்கும்
ஆதிக்கல் போல
உன்னிடம் உறைந்திருக்கும்
மவுனம் தேடி…

கல் தெய்வமாவது எப்படி?
என்று
இப்போது புரிகிறது எனக்கு.”

போகனின் கவிதைகளில் பெண் குழந்தைகள் அடிக்கடி வருவார்கள். அவர்கள் இடம்பெறும் கவிதைகளெல்லாம் நெகிழ்ச்சியான தருணங்களை வாசகர்களின் மனதில் விட்டுச் சென்றிருப்பவை. ஊழ் என்னும் பெரு வலி முன்பு தகப்பன் எனும் பாத்திரம் ஏந்திய மனிதனின் இயலாமையையும், எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாத வாழ்வின் அபத்தத்தையும் எரிக் பெர்ன் எனத் தொடங்கும் நீள் கவிதையில் விவரிக்கிறார், கவிதையின் பிற்பாதியை மட்டும் கீழே தருகிறேன். மகள்களைப் பெற்ற அனைத்து தந்தைகளையும் இக்கவிதை நெகிழ்வூட்டக்கூடியது.

எல்லா பாத்திரங்களையும் முயன்றுவிட்டு
இறுதியாக நான் மிகவும் முயன்றேன்
ஒரு நல்ல தகப்பன் பாத்திரம் வகிப்பதற்காகவும்.
ஆனாலும் நான் அறிவேன்
நான் இதையும் மோசமாகச் செய்கிறேன்.

இதை நினைக்கையில் என் கண்கள் பொங்குகின்றன.
ஹரிணி என் மகளே
இந்த பாத்திரத்துக்கு என்னை
ஏன் தேர்ந்தெடுத்தாய்?
உன் அளவுகடந்த கருணையினால்
நீ
நான் உன் கைகளைப் பற்றிச்
சாலைகளைக் கடக்க உதவ அனுமதித்தாய்.

என் மீது நீ வைத்திருக்கும்
தூய நம்பிக்கையை
உன் கண்களில் காணும்போதெல்லாம்
நான் என் நடுக்கத்தை மறைத்துக் கொள்கிறேன்.
இந்தப் பாரத்தால்
என் மனம் தளும்பும்போதெல்லாம்
நான் கோவில்களில் போய்ப் போய் நின்றுகொள்கிறேன்.

அங்கே நிற்கிறது
என்னைப்போலவே
தன் பாத்திரத்தைச்
சரியாகச் செய்யாததொரு தெய்வம்.

உச்சியிலிருந்து உற்று நோக்கும் ஆதிக்கல்லில் உறைந்திருக்கும் மௌனம், தானேற்ற பாத்திரத்தைச் சரியாக செய்யாத தெய்வம் போன்ற வரிகள் வாசகனின் உள்ளத்தில் பல்வேறு வாசிப்புக்கான சாத்தியங்களை வழங்கி மீண்டும் மீண்டும் படிக்குந்தோறும் அவனுக்கு புதிய திறப்புகளை அளிக்கும் முடிவுறாச் சொற்கள்.

கட்டுரையாளர்:

போகன் அவர்களது கட்டுரைகள் அவரது பரந்த வாசிப்பின் விஸ்தீரனத்தைக் காட்டுபவை. எப்பொருளை எடுத்துக்கொண்டாலும் அதில் தனக்கே உரிய புதிய பார்வையுடன் அதன் முழுக்கோணத்தையும் (360°) அணுகுபவர். உதாரணமாக எதுவும் கடந்து போகும் என்ற தலைப்பில் சில மாதங்களுக்கு முன் ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையைப் பார்ப்போம். இக்கட்டுரையில் இவ்வாக்கியத்தின் மூலம் இரண்டாயிரமாண்டுகளுக்கு முன்பான பெர்சிய, யூதத் தொன்மங்களில் இருக்கலாம் எனத் தொடங்குபவர் அவ்வாக்கியத்தை பிரபலமாக்கிய எட்வர்ட் பிட்ஜெரால்ட் வழியாக தமிழின் திருக்குறள், திருமந்திர உதாரணங்களைக் கொண்டு நிலையாமையை இது குறிக்கும் என நிறுவுகிறார். அதன் முழுமைப் பொருளை Stocism மற்றும் மார்க்கஸ் அரேலியஸின் படைப்பைச் சுட்டி விளக்குபவர் அது எப்படி தன் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது இரு பிரிவுகளாக விவரிக்கிறார்.
தாரளமயமாக்கலுக்கு முன்பான தென் தமிழக, கேரள வாழ்வின் காத்திருப்புகளை கலாப்ரியா, பாரதிமணி, எம். டி. வாசுதேவன் நாயர், கே. பாலச்சந்தர் படைப்புகளைக் கொண்டு விளக்கி, கிராமங்களில் உறைந்திருந்த காலம் கடப்பதின் பிரக்ஞை இல்லாமலே கடந்ததையும், 1990களுக்குப் பின் அதி வேகமாகக் கடந்து செல்லும் காலத்தினால் மனித உறவுகளில் ஏற்படும் சிக்கல்களையும், நுகர்வுக் கலாச்சாரம் உண்டாக்கும் நிறைவின்மையையும் காட்டி யுவால் நோவா ஹராரியின் உதாரணம் வழி சிக்கலிருந்து மீள வழிகாட்டி கலாப் பிரியாவின் கவிதை வழியாக இதுவும் பழகிப் போகும் என முடிக்கிறார். 50 வருட வாழ்வை ஒற்றை வாக்கியம் கொண்டு முழுமையாகக் காண்பிக்கிறார். இதுவே போகனின் கட்டுரைகளின் சிறப்பு.

சிறுகதை, குறுங்கதை ஆசிரியர்:

போகனின் குறுங்கதைகளைப் பொருத்தவரையில் கவிதைகளின் நீட்சியே அவை. கவித்துவமான உரைநடை வழியாக இவை குறுங்கதைகளாக பரிமணிப்பதாகத் தோன்றுகிறது. இவற்றைப் பேய்க்கதைகள், பகடிக் கதைகள், உலகியலில் ஈடுபடும் கலைஞனின் அகச் சிக்கல்களைப் பேசும் கதைகள் என மேலோட்டமாகப் பிரிக்கலாம். இக்குறுங்கதைகளின் வழியாக முன்னோடி எழுத்தாளர்களையும் கவர்ந்த பாருக்குட்டி என்ற புனைவுக் கதாபாத்திரம் மிகுந்த பிரபலம். இக்கதாபாத்திரம் ஒரு தேவதை வடிவம் என எண்ணுகிறேன். ஆனால் போகன் யட்சி எனச் சொல்லக்கூடும். ஆணின் பகல் கனவுகளில் தோன்றும் பள்ளியறையில் தாசியாய், உலகியல் வாழ்வில் தோழியாய், நோயுற்ற போது தாதியாய், உளச்சோர்வு அடையும் போது ஊக்கமளிக்கும் ஆசிரியையாய் நேர்மறைப் பண்புகள் மிகுந்த பிரபலமான இப்பாத்திரத்தை அவர் பெரும்பாலான குறுங்கதைகளில் பயன்படுத்தி உள்ளார். கதையின் முக்கியத் தருணங்களை பாருக்குட்டியின் இயல்பான அப்பாவித்தனமான செயல்கள் மற்றும் சொற்கள் வழியாக வாசகனுக்கு எளிதில் புரிய வைத்து விடுவது இக்கதைகளின் பலம். சமீபத்தில் எழுதிய இஷ்டம் கதையில் பாருக்குட்டித் தன் வழக்கமான செயல்களின் வழியாகவே கதை சொல்லியின் தற்கொலை எண்ணத்தைத் தடுக்கிறார்.

கார்வை என்ற கதையில் ஒரு எழுத்தாளரைச் சந்திக்கும் கதை சொல்லி அவருடைய படைப்புகளின் பெறுமதியை உணராமல் உரையாடிவிட்டு வீடு திரும்பிய பின் விமர்சகர்களால் அவ்வெழுத்தாளரின் சுமாரான படைப்பு எனச் சொல்லப்பட்ட ஒரு நூலை வாசிக்கிறார். அந்நூல் அவரைக் கலங்கடித்து விடுகிறது. குற்றவுணர்வில் எழுத்தாளரைச் சந்தித்தது குறித்தும், அவருடைய படைப்பு குறித்தும் கண்ணீருடன் இரவெல்லாம் உறங்காமல் பாருவிடம் பகிர்ந்து கொள்கிறார். விடிகாலையில் அக்காக் குருவி கூவுகிறது. அப்போது பாரு சொல்கிறாள்:

‘அக்காக்குருவியின் ஆழ்ந்த சோகத்தை கொண்டுவர முடிகிற வாத்தியத்தை இன்னும் கண்டுபிடிக்கவில்லை என்பதுதான் உண்மை.இல்லையா?’

அவ்வெழுத்தாளரும் சற்றேறக்குறைய அதே போன்ற ஒன்றை சொல்லியிருப்பார். அதை கதைசொல்லி பாருக்குட்டியிடம் சொல்லாத போதும் இரவு முழுதும் நடந்த உரையாடல் வழியாக அவர் சொல்ல வததின் சாரத்தைப் புரிந்து கேள்வியாக்குவது கதையின் தனி அறிதல் தருணம்.கர்மயோக வாழ்வைப் பற்றிய கதையாக பின்வரும் வரிகளுடன் போகன் இக்கதையை முடிக்கிறார்.அக்காக் குருவி யாருக்காகவும் பாடுவதில்லை. அது தன்னையேதான் பாடிப் பாடி அழைத்துக்கொள்கிறது.

மேலும் ஒரு கதையில் திருச்செந்தூர் கோயில் மண்டபத்தில் “சாச்சா” என்று கை நீட்டும் வட இந்தியச் சிறுமியின் வழியாக பசியின் துயரையும்,”மாப் கரோ சாப்” எனக் குழந்தையின் தாய் தடுப்பதையும் இரவச்சம் என வள்ளுவர் கூறும் விழுமியத்தையும் வட இந்தியப் பெண் வழியாகக் காட்டுவது இந்நிலம் பண்பாடுகள் வழி ஒருங்கிணைந்திருப்பதைக் குறிப்பதாகத் தெரிகிறது. வாழ்வின் இறுதிக் கணத்தில் நோயுற்ற குழந்தைகள் பெற்றோரைத் தேற்றுவது, பேருந்தில் நூறு ரூபாய் மதிப்புள்ள விளையாட்டுப் பொருளை வாங்கித் தரத் தயங்கும் தந்தையின் இயலாமையைக் காட்டுவது. ஆனாலும் அவர் இரக்கத்துடன் உதவ முன்வருபவரின் உதவியை ஏற்க மறுப்பது. உதவ முன்வந்தவரும், ஏற்க மறுத்தவரும், சம்பந்தப்பட்டக் குழந்தையின் ஏக்கத்தைப் பார்த்து மருகுவது என நுட்பமான அகச் சிக்கல்களைப் பேசும் அன்றாட தன் வரலாற்றுக் கதைகள் மனிதனின் ஆபூர்வ குணங்களையும், அபத்தமானமான, குற்ற உணர்வுகளையும் ஒருங்கே காட்டுபவை. இவற்றைப் பெரும்பாலும் குறுங்கதை வடிவிலேயே போகன் எழுதுகிறார். ஒரு நாவலுக்கான பேசு பொருள் உள்ள கருவைச் சுருக்கி குறுங்கதையாக மாற்றுகிறார் எனப் பல கதைகளிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது. இதுவே ( சுருங்கச் சொல்லுதலே) போகன் படைப்புகளின் சிறப்பு எனலாம்,

அடுத்து போகனின் சிறுகதைகளில்தான் கதையின் பகைப்புலன், சூழல் சித்திரிப்புகளைப் பற்றிய விரிவான அணுகுமுறையைக் காணலாம். ஆரம்ப காலச் சிறுகதைகளில் சூழல் குறித்து விரிவாக எழுதியவர் சமீபங்களில் கதையின் தேவைக்கு மீறி ஓரிரு சித்தரிப்புகளைச் செய்வதைக் கூட தவிர்க்க முனைகிறார் எனத் தோன்றுகிறது. பூ, சிறுத்தை நடை போன்ற கதைகளில் எழுதப்பட்ட சூழல், களன் பற்றிய சித்தரிப்பை சமீபத்திய பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளில் காண முடியவில்லை. சிறுத்தை நடை கதையில் காட்டும் வால்பாறை மலைப் பின்னணியில் திடீரென மின்மினிகளால் தோன்றும் ஒளி ஓவியம் நாயகன், நாயகி உள்ளங்களில் உருவாக்கும் எண்ணங்களின் மாறுதல் கதையின் போக்கையே மாற்றும். அதே போல் பூ கதையில் அம்மனின் உருவம் வழி கதை மாந்தரில் அகத்தில் உருவாகும் எண்ணத் திறப்புகளை சமீபத்திய கதைகளில் காண முடியவில்லை. நவீன இலக்கியம் மானுடத்தின் குரூரத்தையே ஒளி கூட்டிக் காண்பிக்கிறது என்ற கருதுகோளை போகனின் படைப்புகள் மறுதலிக்கின்றன என்றே தோன்றுகிறது. பொட்டை, மெல்லுடலிகள் ஆகிய கதைகளின் மொழி நடை அதிர்ச்சியூட்டக் கூடியதாக இருந்தாலும், கசப்புணர்வை தோற்றுவிப்பதில்லை. மாறாக பொட்டை கையறு நிலையையும், மெல்லுடலிகள் பிரதிபலன் எதிர்பாரத உதவி எனும் மானுடத்தின் மகத்தான விழுமியத்தையுமே காட்டி முடிகிறது.

போகனின் ஒரு சில கதைகளைக் கொண்டு அவர் ஒரு பெண் வெறுப்பாளர் அல்லது ஆணியவாதி என்போர் உண்டு. போகனின் பெண் கதை மாந்தர் பெரும்பாலும் மரபான பெண்கள். முனைந்து பெண்ணியம் பேசும் பெண்களை அவர் காட்டுவதில்லை. யதார்தத்தில் நாம் அன்றாடம் எதிர் கொள்ளும் பெண்களே அவரது கதை மாந்தர்கள். கசப்பின் கனிகள் என்று அவர் தன் அன்னையைப் பற்றி எழுதியது மிக அப்பட்டமாக யதார்தத்தைப் பேசுவது மற்றும் சென்ற தலைமுறைப் பெண்களின் மனவோட்டத்தைச் சொல்லும் அழகிய ஆவணம்.

விமர்சகர் :

சுஜாதாவிற்குப் பின் அமெரிக்க வாழ் ஆங்கிலக் கவிஞர்களையும், எழுத்தாளர்களையும் தமிழில் அதிகம் அறிமுகப்படுத்தியவர் போகன் என்றே நினைக்கிறேன். விக்கிரமாத்தியத்தன் கவிதைகள், எம். கோபால கிருஷ்ணனின் தீர்த்த யாத்திரை, ஜெய மோகனின் பத்து லட்சம் காலடிகள் ஆகிய படைப்புகள் குறித்தும் மற்றும் சாருவின் படைப்புலகு பற்றி சமீபத்தில் எழுதிய விமர்சனம், கொரனோ காலத்தில் காலச்சுவடில் எஸ்.ரா எழுதிய குறுங்கதைகள் பற்றிய பார்வை ஆகியன போகன் விமர்சகராக கூர்ந்து கவனிக்கப் படுகிறார் எனத் தோன்றுகிறது. குமரகுருபரன் விருது விழாவில் விருது பெற்ற கவிஞர்கள் பற்றி அவர் ஆற்றிய உரை, அன்றைய கலந்துரையாடவில் கார்ல் மார்க்ஸ் வீரான் குட்டியிடம் கேட்ட கவிதையின் சமூகக் கடப்பாடு குறித்து போகன் அவரது பேச்சில் கவிதை உள்ளுறையாக தனக்கான ஒரு நீதியைக் கொண்டுள்ளது. நீதியை, உண்மையை அல்லது அறத்தை மறுதலிக்கும் ஒரு விசயம் கவிதையாக நிலைபெறாது என முன்னோடிக் கவிஞர்களின் படைப்புகள் கொண்டு நிறுவியது கவிதை பற்றி சமீப காலத்தில் வெளியான மிக முக்கியமான கருத்து.

சமகாலத்தின் மிக முக்கிய இலக்கியப் படைப்பாளி போகன் சங்கர் என்பதில் ஐயமேதுமில்லை. அவருடைய குளம் போல் நடிக்கும் கடல் கவிதைத் தொகுப்பிற்கு வாழ்த்துகள்.

தேவதாஸ்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம் 

விஷ்ணுபுரம் விருந்தினர்: 7 குளச்சல் மு யூசுப்  

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்.போகன் சங்கர் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:30

விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

விஷ்ணுபுரம் விருதை ஒட்டி ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் ஞானக்கூத்தனுக்கு விருது வழங்கப்பட்டதை ஒட்டி தோன்றியது. கே.பி.வினோத் வெறும் 16000 ரூ செலவில் தனியொருவராக, ஒளிப்பதிவும் இயக்கமும் செய்து அதை தயாரித்தார். அத்தனை சுருக்கமான செலவில் ஆவணப்படங்களை எடுக்கமுடியும் என அறிந்தபின் விருதுவிழாவின் ஒரு பகுதியாக ஆவணப்படங்களை எடுக்கலானோம். இன்று அவை ஓர் அரிய சேமிப்பாக ஆகியுள்ளன. சாகித்ய அக்காதமி மட்டுமே எழுத்தாளர்களை ஆவணப்படம் எடுக்கும் இன்னொரு அமைப்பாக தமிழ்நாட்டில் உள்ளது.

ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து

இயக்கம் கே.பி,வினோத்

தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்

இயக்கம் சரவணவேல் 

வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்

இயக்கம் செல்வேந்திரன்

பாட்டும் தொகையும். ராஜ் கௌதமன் ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை பி.சி.சிவன்

சீ.முத்துசாமி தமிழ் விக்கி

சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்

இயக்கம் ம.நவீன்

தற்செயல்களின் வரைபடம் சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

அந்தரநடை அபி ஆவணப்படம்

எழுத்து இயக்கம் கே.பி.வினோத்

இசை ராஜன் சோமசுந்தரம்

வீடும் வீதிகளும். விக்ரமாதித்யன் ஆவணப்படம்

ஒளிப்பதிவு இயக்கம் ஆனந்த் குமார்

இசை ராஜன் சோமசுந்தரம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.