Jeyamohan's Blog, page 664

December 11, 2022

அ.சிதம்பரநாதச் செட்டியார்

[image error]ஏ.சி.செட்டியார் என அழைக்கப்படும் அ.சிதம்பரநாதன் செட்டியார் தமிழகத்தின் குறிப்பிடத்தக்க கல்வியாளர்களில் ஒருவர். தமிழிலக்கிய ஆய்விலும், தமிழிலக்கியத்தை ஆங்கிலத்தில் அறிமுகம் செய்ததிலும் பங்களிப்பாற்றியவர். நவீன இலக்கிய அறிதலும் கொண்டிருந்தார். தமிழ்ச்சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் பற்றிய முதல் ஆய்வுநூலை எழுதினார்

ஏ.சி.செட்டியாரின் மறைவு இன்றளவும் தமிழ்ச்சூழலில் ஒரு மர்மமாக நீடிக்கிறது.

அ.சிதம்பரநாதச் செட்டியார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:34

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா. இதில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மன் என்ற வாதத்திற்கு செல்லவில்லை. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம் என்றுதான் இலக்கிய வாசகனாக நான் பார்த்தேன். படைப்புகளை படித்ததன் மூலம் எஸ். ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும், கண்டடைந்தேன், அல்லது அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன்.

ஒரு காணொளியைப் பார்த்ததன் மூலம் சாரு நிவேதிதாவைக் கண்டடைந்தேன். அவரது தோற்றத்தாலும் (எழுத்தாளர்களில் இப்படி ஒரு ஸ்டைலான ஆளா?), வெளிப்படையான பேச்சாலும் ஈர்க்கப்பட்டேன். நான் பெரிதும் போற்றும் அசோகமித்தரனை அவரும் பாராட்டி சீராட்டுவதையும், உலக இலக்கியங்கள் பற்றி அவர் பேசுவதையும் கேட்டு அவரது ரசிகனாகவும் ஆனேன். அவரது கட்டுரைகளை , குறிப்பாக அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆழமாக அதிகம் அவர் படைப்புகளை வாசித்திராததால், அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

‘ஸீரோ டிகிரி’ நாவல் எனது வாசிக்கவேண்டிய நூல்களில் பல வருடங்களாக இருந்தது.  நான், எப்பொழுதும் ஒரு எழுத்தாளனை நானாக வாசித்து ஒரு அவதானிப்பை ஏற்படுத்திக்கொளும் வரை அவரை தொடர்பு கொள்வதில்லை. இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது சாரு நிவேதிதாவிற்கு என்று அறிவித்த பிறகு, அவரது நூல்களை அமேசானில் வாங்குவதற்காக பார்த்தவன், ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பின் முதல் சில பக்கங்களை வாசித்தேன். பெண் வாசகியை அவர் விழித்து நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம். அதைச் செய்துகொண்டிருக்கலாம் என அவர் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையாக வெளிப்படையாக இருந்தது. ஆங்கிலத்தில்தான் வாசித்தேன் என்றாலும், அதன் தீவிரத்தால், இரண்டு முறை வாசித்தேன். Transgression, பின் நவீனத்துவம் என்ற இலக்கியக் கோட்பாடுகள் , பயிற்சிகள் என எதுவும் யோசிக்காமல் என்னால் நாவலினுள் இயல்பாக நுழைய முடிந்தது.

‘ஸீரோ டிகிரி’ நாவலில் 4-ம் அத்தியாயத்தில், கதைசொல்லி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதே, என்னுடைய விமர்சனமாக / வாசிப்பனுபவமாக முதலில் வைக்கிறேன்.

இந்நாவலில், குறிப்பிடப்பட்டிருக்கும், லத்தீன் அமெரிக்க நாவல்களைப் படிப்பது அவசியம் என்று கருதுகிறாயா?

இல்லை. ( இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்காக வேண்டியதில்லை)

ஆம்  (இலக்கிய வாசகனாக வேண்டும் என்றால் சொல்லலாம்).

இந்த நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்புகிறாயா?

ஆம்.

(ஜெயமோகன் சொல்வது செவ்விலக்கியம் வாசிக்கும்பொழுது ஒரு  நிறைவு வரும்.  நவீன இலக்கியம் தொந்தரவு செய்யும். இந்த நாவல் சரியான தொந்தரவு செய்கிறது. அப்புறம் என்ன?)

இந்நாவலை எழுதியவன் தண்டிக்கப்படவேண்டுமா?

இல்லை (இந்தக் கேள்வி எனக்கு அபத்தமாகப் படுகிறது)

இந்த நாவலில் ஒரிஜானலிட்டியை  நீ காணமுடிகிறதா ?

ஆம்.

(பால் கறக்கும் பெண்ணையும் குறிப்பிடுகிறீர்கள், தோழியுடன் புணர்ச்சியில் இருப்பவளையும் குறிப்பிட்டு என் நூலை வாசிக்கலாம் என்று எல்லோரையும் சம நிலையில் பார்க்கிறீர்கள். பதினெட்டு நிமிடங்களில் பதினெட்டு இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் சாவு என்று அரசுத் தரப்பிலும், நூற்றியெட்டுபேர் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது   என்று அரசியல் நியாயங்களை சொல்கிறீர்கள். கடல் ஆமை தொண்ணூறு முட்டையிட்டாலும் கடலில் சேர்வது என்னவோ பதினெட்டுதான் என்ற நிதர்சனத்தையும் சித்தரிக்கிறீர்கள். அவந்திகாவின் டி.என்.சி. அனுபவங்களை வாசிக்கும்பொழுது என் உடம்பெல்லாம் இரத்தம். நீங்கள் எழுத்தாளன் எனும் பித்து நிலையில் இல்லாமல் இதையெல்லாம் எப்படி எழுதமுடியும்?)

மஸாக் மற்றும் மார்க்கி தெ ஸாத் இவர்களை வாசிக்காமல் இந்த நாவலை வாசிக்க வேண்டாம் என்கிறான் முனியாண்டி.

ஒத்துக்கொள்கிறாயா?

இல்லை (இதை வாசித்துவிட்டுக்கூட அவர்களை வாசிக்கலாம் இல்லையா?)

***

நல்ல சிறுகதை /  நாவல் வாசித்து முடித்தபிறகு தரிசனம் கிடைக்கலாம். அதில் வரும் பாத்திரங்கள் மனதில் அழிந்துவிடா ஓவியங்களாக (தொந்தரவாக ?) நின்றுவிடலாம். ஜெயமோகனது தேவகிச் சித்தியின் டைரியின் தேவகி, அசோகமித்தரனின் தண்ணீர் நாவலின் ஜமுனா,  எஸ். ராமகிருஷ்ணனின், ‘உனக்கு முப்பது வயதாகிறது’ சுகந்தி, இவர்களுடன் ‘ஸீரோ டிகிரி’ நாவலில் வரும் அவந்திகாவும், ஆர்த்தியும் எனக்கு அறிமுகமான பெண்களின் நிரையில் நிற்கிறார்கள். ஆர்த்தியின் கதை என்று ஸீரோ டிகிரியில் வர, அவளின் முன்கதையை அறிந்துகொள்ள, ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’  நாவலையும் வாங்கி வாசித்தேன்.

கி.ரா அவர்கள், நாட்டுப்புற பாலியல் கதைகள் அடங்கிய ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு நூலில், பாலியல் கதைகள் படிப்பதால் யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். அது சிரிப்பைத்தான் வரவைக்கும் என்று சொல்லியிருப்பார். ஸீரோ டிகிரி நாவலில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையின் கதையும் கதைக்குள் வரும் கதைகளும் அவ்வகைக் கதைகள்.

கி.பி.ஒ.நூ.செ.மூ-யின் நண்பன் குள்ளச் சித்தன் வைத்திருந்த ஓலை இப்படி இருந்தது என்று இரண்டு பக்கங்களுக்கு ஒற்று எழுத்துக்களை மேலே புள்ளியில்லாமல் எழுதியிருக்கிறார், சாரு. பழுப்பு நிறப் பக்கங்களில், உ.வே. சாமிநாத ஐயரைப் பற்றிய கட்டுரையில், “உ.வே.சா எழுதிய மகா வைத்தியநாதர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம்.” என்று கூறியிருப்பார். சாரு, அந்த அனுபவத்தை இங்கே வாசகனுக்கு கொடுக்கிறார்.

நாவல் வெளிவந்த சமயம் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் வாசித்திருந்தாலும், இந்த நாவலை இப்பொழுதுபோலவே வாசித்திருப்பேன் எனவே தோன்றுகிறது. வாழ்க்கையையும் நல்ல நாவல்களையும் ஒன்றென பார்க்கும் வாசகனாக நான் சொல்வது இதுதான். தெரியாமல் மலத்தில் கால் வைக்கும் அருவருப்பையல்ல கையூன்றீ குப்புற விழுந்துவிட்ட அனுபவத்தை, வாழ்வில் சந்தித்தவர்களும், அல்லது அப்படி விழுந்தவர்களை தானாக நினைத்து (empathy) துக்கப்படுபவர்களும் இந்த நாவலை எந்தவிதமான அயர்ச்சியுமில்லாமல் வாசிக்கமுடியும் என்பதே என் அனுமானம். வாழ்க்கை நாம் நினைத்தவாறா செல்கிறது? வாழ்வைச் சொல்லும் நாவலும் நினைத்தபடி இந்தக் கட்டுப்பாட்டில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? வாழ்வில்  என்றோ ஒரு நாள் நடந்ததற்கும், இன்று நடப்பதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பார்த்தால்தானே இருப்பதுபோல் இருக்கிறது. தொடர்பு இல்லையெனப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. எப்படிப் பார்த்தாலும், குறைந்தபட்ச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அபத்தமான வாழ்வைச் சித்தரிப்பதில் அதுவும் பகிரங்கமாக கூச்சமில்லாமல் விவரிப்பதில் ‘ஸீரோ டிகிரி’ வெற்றி பெற்றிருக்கிறது.

2022-ற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை வாழ்த்துகிறேன். அவரிடம், இனி நான் அவரது எழுத்துக்களை வாசித்தவனாக அணுக முடியும். விவாதிக்க முடியும்.

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

பகிரங்க சித்தரிப்பு, ஸீரோ டிகிரி-ஆஸ்டின் சௌந்தர்

முப்பத்து மூன்று வருடங்களுக்கு முன்னர் வெளியேறிச் சென்றவனாக, எனது ஆன்டெனாவை தமிழ்நாட்டை நோக்கித் திருப்பி வைக்க, நவீனத் தமிழ் இலக்கியத்தில் எனக்கு மூன்று மும்மூர்த்திகள் தெரிந்தார்கள் –ஜெயமோகன், எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் சாரு நிவேதிதா. இதில் யார் சிவன், யார் விஷ்ணு, யார் பிரம்மன் என்ற வாதத்திற்கு செல்லவில்லை. ஒவ்வொருவரது பங்கும் முக்கியம் என்றுதான் இலக்கிய வாசகனாக நான் பார்த்தேன். படைப்புகளை படித்ததன் மூலம் எஸ். ராமகிருஷ்ணனையும் ஜெயமோகனையும், கண்டடைந்தேன், அல்லது அவர்கள்பால் ஈர்க்கப்பட்டேன்.

ஒரு காணொளியைப் பார்த்ததன் மூலம் சாரு நிவேதிதாவைக் கண்டடைந்தேன். அவரது தோற்றத்தாலும் (எழுத்தாளர்களில் இப்படி ஒரு ஸ்டைலான ஆளா?), வெளிப்படையான பேச்சாலும் ஈர்க்கப்பட்டேன். நான் பெரிதும் போற்றும் அசோகமித்தரனை அவரும் பாராட்டி சீராட்டுவதையும், உலக இலக்கியங்கள் பற்றி அவர் பேசுவதையும் கேட்டு அவரது ரசிகனாகவும் ஆனேன். அவரது கட்டுரைகளை , குறிப்பாக அவரது தளத்தில் வாசித்திருக்கிறேன். ஆழமாக அதிகம் அவர் படைப்புகளை வாசித்திராததால், அவருக்கு கடிதம் எழுதி தொடர்பு ஏற்படுத்திக்கொள்ளவில்லை.

‘ஸீரோ டிகிரி’ நாவல் எனது வாசிக்கவேண்டிய நூல்களில் பல வருடங்களாக இருந்தது.  நான், எப்பொழுதும் ஒரு எழுத்தாளனை நானாக வாசித்து ஒரு அவதானிப்பை ஏற்படுத்திக்கொளும் வரை அவரை தொடர்பு கொள்வதில்லை. இந்த வருடத்திற்கான விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது சாரு நிவேதிதாவிற்கு என்று அறிவித்த பிறகு, அவரது நூல்களை அமேசானில் வாங்குவதற்காக பார்த்தவன், ‘ஸீரோ டிகிரி’ ஆங்கிலப் பதிப்பின் முதல் சில பக்கங்களை வாசித்தேன். பெண் வாசகியை அவர் விழித்து நீ இதைச் செய்துகொண்டிருக்கலாம். அதைச் செய்துகொண்டிருக்கலாம் என அவர் சொன்ன ஒவ்வொன்றும் உண்மையாக வெளிப்படையாக இருந்தது. ஆங்கிலத்தில்தான் வாசித்தேன் என்றாலும், அதன் தீவிரத்தால், இரண்டு முறை வாசித்தேன். Transgression, பின் நவீனத்துவம் என்ற இலக்கியக் கோட்பாடுகள் , பயிற்சிகள் என எதுவும் யோசிக்காமல் என்னால் நாவலினுள் இயல்பாக நுழைய முடிந்தது.

‘ஸீரோ டிகிரி’ நாவலில் 4-ம் அத்தியாயத்தில், கதைசொல்லி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்வதே, என்னுடைய விமர்சனமாக / வாசிப்பனுபவமாக முதலில் வைக்கிறேன்.

இந்நாவலில், குறிப்பிடப்பட்டிருக்கும், லத்தீன் அமெரிக்க நாவல்களைப் படிப்பது அவசியம் என்று கருதுகிறாயா?

இல்லை. ( இந்த நாவலைப் புரிந்துகொள்வதற்காக வேண்டியதில்லை)

ஆம்  (இலக்கிய வாசகனாக வேண்டும் என்றால் சொல்லலாம்).

இந்த நாவல் தமிழ் நாவல்களில் குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என நம்புகிறாயா?

ஆம்.

(ஜெயமோகன் சொல்வது செவ்விலக்கியம் வாசிக்கும்பொழுது ஒரு  நிறைவு வரும்.  நவீன இலக்கியம் தொந்தரவு செய்யும். இந்த நாவல் சரியான தொந்தரவு செய்கிறது. அப்புறம் என்ன?)

இந்நாவலை எழுதியவன் தண்டிக்கப்படவேண்டுமா?

இல்லை (இந்தக் கேள்வி எனக்கு அபத்தமாகப் படுகிறது)

இந்த நாவலில் ஒரிஜானலிட்டியை  நீ காணமுடிகிறதா ?

ஆம்.

(பால் கறக்கும் பெண்ணையும் குறிப்பிடுகிறீர்கள், தோழியுடன் புணர்ச்சியில் இருப்பவளையும் குறிப்பிட்டு என் நூலை வாசிக்கலாம் என்று எல்லோரையும் சம நிலையில் பார்க்கிறீர்கள். பதினெட்டு நிமிடங்களில் பதினெட்டு இடங்களில் குண்டு வெடித்திருக்கிறது. பதினெட்டு பேர் சாவு என்று அரசுத் தரப்பிலும், நூற்றியெட்டுபேர் என்று எதிர்க்கட்சிகள் சார்பிலும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது   என்று அரசியல் நியாயங்களை சொல்கிறீர்கள். கடல் ஆமை தொண்ணூறு முட்டையிட்டாலும் கடலில் சேர்வது என்னவோ பதினெட்டுதான் என்ற நிதர்சனத்தையும் சித்தரிக்கிறீர்கள். அவந்திகாவின் டி.என்.சி. அனுபவங்களை வாசிக்கும்பொழுது என் உடம்பெல்லாம் இரத்தம். நீங்கள் எழுத்தாளன் எனும் பித்து நிலையில் இல்லாமல் இதையெல்லாம் எப்படி எழுதமுடியும்?)

மஸாக் மற்றும் மார்க்கி தெ ஸாத் இவர்களை வாசிக்காமல் இந்த நாவலை வாசிக்க வேண்டாம் என்கிறான் முனியாண்டி.

ஒத்துக்கொள்கிறாயா?

இல்லை (இதை வாசித்துவிட்டுக்கூட அவர்களை வாசிக்கலாம் இல்லையா?)

***

நல்ல சிறுகதை /  நாவல் வாசித்து முடித்தபிறகு தரிசனம் கிடைக்கலாம். அதில் வரும் பாத்திரங்கள் மனதில் அழிந்துவிடா ஓவியங்களாக (தொந்தரவாக ?) நின்றுவிடலாம். ஜெயமோகனது தேவகிச் சித்தியின் டைரியின் தேவகி, அசோகமித்தரனின் தண்ணீர் நாவலின் ஜமுனா,  எஸ். ராமகிருஷ்ணனின்,‘உனக்கு முப்பது வயதாகிறது’ சுகந்தி, இவர்களுடன் ‘ஸீரோ டிகிரி’ நாவலில் வரும் அவந்திகாவும், ஆர்த்தியும் எனக்கு அறிமுகமான பெண்களின் நிரையில் நிற்கிறார்கள். ஆர்த்தியின் கதை என்று ஸீரோ டிகிரியில் வர, அவளின் முன்கதையை அறிந்துகொள்ள, ‘எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும்’  நாவலையும் வாங்கி வாசித்தேன்.

கி.ரா அவர்கள், நாட்டுப்புற பாலியல் கதைகள் அடங்கிய ‘வயதுவந்தவர்களுக்கு மட்டும்’ தொகுப்பு நூலில் , பாலியல் கதைகள் படிப்பதால் யாரும் கெட்டுப்போகமாட்டார்கள். அது சிரிப்பைத்தான் வரவைக்கும் என்று சொல்லியிருப்பார். ஸீரோ டிகிரி நாவலில் கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு செத்த மூளையின் கதையும் கதைக்குள் வரும் கதைகளும் அவ்வகைக் கதைகள்.

கி.பி.ஒ.நூ.செ.மூ-யின் நண்பன் குள்ளச் சித்தன் வைத்திருந்த ஓலை இப்படி இருந்தது என்று இரண்டு பக்கங்களுக்கு ஒற்று எழுத்துக்களை மேலே புள்ளியில்லாமல் எழுதியிருக்கிறார், சாரு. பழுப்பு நிறப் பக்கங்களில், உ.வே. சாமிநாத ஐயரைப் பற்றிய கட்டுரையில், “உ.வே.சா எழுதிய மகா வைத்தியநாதர் என்ற நூலை உஸ்மானியா பல்கலைக்கழக நூலகத்திலிருந்து எடுத்துக் கொடுத்தார் என் நண்பர் ஒருவர். அதிலும் புத்தகம் நெடுகிலும் ஒற்றெழுத்துக்களுக்குப் புள்ளியே காணோம்.” என்று கூறியிருப்பார். சாரு, அந்த அனுபவத்தை இங்கே வாசகனுக்கு கொடுக்கிறார்.

நாவல் வெளிவந்த சமயம் இருபத்து நான்கு வருடங்களுக்கு முன்னால் வாசித்திருந்தாலும், இந்த நாவலை இப்பொழுதுபோலவே வாசித்திருப்பேன் எனவே தோன்றுகிறது. வாழ்க்கையையும் நல்ல நாவல்களையும் ஒன்றென பார்க்கும் வாசகனாக நான் சொல்வது இதுதான். தெரியாமல் மலத்தில் கால் வைக்கும் அருவருப்பையல்ல கையூன்றீ குப்புற விழுந்துவிட்ட அனுபவத்தை, வாழ்வில் சந்தித்தவர்களும், அல்லது அப்படி விழுந்தவர்களை தானாக நினைத்து (empathy) துக்கப்படுபவர்களும் இந்த நாவலை எந்தவிதமான அயர்ச்சியுமில்லாமல் வாசிக்கமுடியும் என்பதே என் அனுமானம். வாழ்க்கை நாம் நினைத்தவாறா செல்கிறது? வாழ்வைச் சொல்லும் நாவலும் நினைத்தபடி இந்தக் கட்டுப்பாட்டில் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கவேண்டும்? வாழ்வில்  என்றோ ஒரு நாள் நடந்ததற்கும், இன்று நடப்பதற்கும் ஏதோ தொடர்பு இருக்கிறது என்று பார்த்தால்தானே இருப்பதுபோல் இருக்கிறது. தொடர்பு இல்லையெனப் பார்த்தாலும் அப்படித்தான் இருக்கப் போகிறது. எப்படிப் பார்த்தாலும், குறைந்தபட்ச பாத்திரங்களை எடுத்துக்கொண்டு அபத்தமான வாழ்வைச் சித்தரிப்பதில் அதுவும் பகிரங்கமாக கூச்சமில்லாமல் விவரிப்பதில் ‘ஸீரோ டிகிரி’ வெற்றி பெற்றிருக்கிறது.

2022-ற்கான விஷ்ணுபுரம் விருது பெறும் எழுத்தாளர் சாரு நிவேதிதா அவர்களை வாழ்த்துகிறேன். அவரிடம், இனி நான் அவரது எழுத்துக்களை வாசித்தவனாக அணுக முடியும். விவாதிக்க முடியும்.

ஆஸ்டின் சௌந்தர்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

மலேசியா உரைகள்

மலேசியாவில் பிரம்மவித்யாரண்யத்தில் ஜார்ஜ்டவுன் லிட்ஃபெஸ்ட் – வல்லினம் சார்பில் டிசம்பர் 26ல் நடைபெற்ற தமிழ் விக்கி ஆய்வுக்கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரைகள்.

மனோகர் தேவதாஸ்- குக்கூ சிவராஜ்

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

அகவிழி ஓவியர் மனோகர் தேவதாஸ் அய்யாவின் தன்னனுபவப் பகிர்தல் காணொளி இது: பத்மஸ்ரீ மனோகர் தேவதாஸ் அய்யா நேற்று (07.12.22) காலமாகிவிட்டார். தூக்கத்தில் பிரிந்திருக்கிறது அவர் நல்லுயிர். எல்லோரும் போற்றும்படியான ஒளிவாழ்வை வாழ்ந்துமறைந்த மனிதர். அவரை முதன்முதலாக நண்பர்களோடு சேர்ந்து சென்று சந்தித்த நாட்கள் ஞாபகத்தில் எழுகிறது.

“எல்லாமே இருண்டுபோனதுக்கு பிறகுதான், நான் அவளை நேசிக்க ஆரம்பிச்சேன்” என்று சொல்லியே அச்சந்திப்பில் அவர் பேசத் தொடங்கினார். தன்னுடைய இரண்டு கண்களிலும் பார்வை இல்லாமல்போன நிலையிலும் பதினோராயிரத்து எண்ணூறுக்கும் மேலான மனிதர்களுக்கு கண்கள் கிடைக்கச்செய்த மனோகர் தேவதாஸ் அய்யாவுடனான சந்திப்பின் முதல்வரி அதுவாகவே இருந்தது. காலந்திரும்பிப் பார்த்தால், பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த எனது பத்தொன்பது வயதில் ஆனந்த விகடனில் ஒரு கட்டுரை வெளிவந்தது. அதில், அவருடைய மனைவி ஒரு சக்கர நாற்காலியில் கத்திரிப்பூநிற நைட்டி அணிந்து உட்கார்ந்திருப்பார். வெள்ளைச்சட்டை, கண்கண்ணாடி போட்டு பக்கத்தில் மனோகர் தேவதாஸ் அய்யா நின்றிருக்கும் புகைப்படம் முழுப்பக்க அளவில் அச்சாகியிருந்தது.

கண்பார்வையற்ற ஒருவரிடமிருந்து விரியும் ஓவியக்கலையின் கோடுகளால் நிறைய மனிதர்களுக்கு வாழ்க்கை கிடைக்கப்பெற்றதைப் பற்றியும், அவருக்கும் அவரின் மனைவிக்கும் நடுப்பட்ட காதலையும் பற்றியதான அழகான மென்னுணர்வையும் தாங்கியிருந்தது அந்த கட்டுரைப்பதிவு. மேலும், மறைந்துபோன இயக்குநர் திருப்பதிசாமி மாணவ நிருபராக இருந்த காலகட்டத்தில் எழுதிய நேர்காணல் கட்டுரை. வாசித்தபிறகு கணக்கில்லாமல் அதை நகலெடுத்து நகலெடுத்து அறிந்த மனிதர்கள் அத்தனைபேருக்கும் நான் கொடுத்துக்கொண்டே இருந்தேன். அதுமாதிரியான ஒரு காதலும், அதுமாதிரியான ஒரு வாழ்க்கையும் எனக்கு மிரட்சியாக இருந்தது அச்சிறுவயதில்.

அதன்பின் குக்கூ குழந்தைகள் வெளியின் பலவருடப் பயணத்திற்குப் பிறகு, நண்பர்கள் ராஜாராம், திரிபுரசுந்தரி, விஷ்ணுப்பிரியா ஆகியோரோடு யதேச்சையாக உரையாடுகையில் மனோகர் தேவதாஸ் அய்யாவைப்பற்றி பேச்சு எழுந்தது. அவருடைய ஓவியங்களை பல்வேறு மட்டங்களில் நாங்கள் வடிவமைப்பில் பயன்படுத்தி வந்திருக்கிறோம். அவரைப் பார்க்கச்சென்ற அச்சந்திப்பில்தான் தெரியவந்தது, அந்த ஒரு மனிதர் வரைந்த ஓவியங்களால் மட்டுமே இதுவரை பதினோராயித்து எண்ணூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண்பார்வை கிடைத்திருக்கிறது என்று.

 “நீங்க வரைஞ்ச ஓவியங்கள் எல்லாத்தையும் அரவிந்த் கண் ஆஸ்பித்திரிக்கு கொடுத்துட்டீங்களே? உங்களுக்கு கடைசிவரை கண்ணு கிடைக்கலயே, ஏன் அப்படி செஞ்சீங்க?” என்ற கேள்வியை கேட்டபொழுது, “இல்ல… இல்ல… எனக்கு கண்ணு கிடைக்க அவங்க என்மேல எடுத்துக்கிட்ட அக்கறை என்னை நிலைகுலைய செஞ்சிடுச்சு. அதான்…” எனச் சர்வசாதாரணமாகச் சொன்னார். மேலும், “நான் இறந்த பிறகு என்னுடைய இரண்டு கண்களும், எங்கோ இருக்கிற ஒரு குழந்தைக்கோ, ஒரு வயதானவருக்கோ போய்ச்சேரும்போதுதான் என் வாழ்க்கை முழுமையடையும்” என உணர்வுகலங்கிச் சொன்னார்.

நாங்கள் முதன்முதலில் சந்தித்தபோது அவருக்கு எண்பது வயது. அப்பவரையில் தொடர்ந்து புத்தகங்கள் எழுதிவந்தார். புதுப்புது நண்பர்களோடு உரையாடி வந்தார். இவ்வாழ்க்கை குறித்து எந்தவொரு குற்றச்சாட்டோ சலிப்போ அவரிடமில்லை. அவரிடத்தில் வேலைசெய்கிற ஒரு அம்மாவுக்கு காதுகேட்காது; ஒருவருக்கு கண்தெரியாது; இன்னொருவருக்கு கால் ஊனம். அவர் வீட்டில் அவ்வளவு கள்ளிச்செடிகளை வளர்த்துகிறார்! விதவிதமான கள்ளிச்செடிகளும் பூச்செடிகளும் பசுங்கொடிகளுமாக அவரது வாழ்விடம் நிறைந்துகிடக்கிறது. நேர்த்தியாகவும் அழகியலாகவும் பார்த்துப் பார்த்து தன் வீட்டை அவர் நேசித்துப் பாதுகாத்தார். தனது கால்களாலும் சத்தங்களாலுமே வீட்டை துல்லியமாகத் தனக்குள் பதிந்து வைத்திருந்தார்.

வளர்ப்பு பிராணிபோல அவ்வீடு அவரிடம் பழகியிருக்கிறது என்பதை அன்று நேரில் கண்டோம்.நண்பர் பூபாளன் ராகவன், அடிக்கடி மனோகர் தேவதாஸ் அய்யாவைப்பற்றி பேசுவதுண்டு. தன் அப்பாவின் வழி அய்யாவை அறிமுகமடைந்திருக்கிறான் அவன். அந்தச் சந்திப்பில் அவரிடம் ‘ஜே.சி. குமரப்பாவின் காந்தியத் தொழில்முறை’ சார்ந்து இயங்குபவனாகத் தெரியப்படுத்தியவுடன், அவர் “குமரப்பா என்னுடைய மனைவியின் உறவினர்தான். அவர் மூன்று கடிதங்கள்கூட எழுதியிருக்கிறார்” எனக் கண்மகிழச் சொல்லியிருக்கிறார்.  ஒரு நல்லதிர்வின் சுழற்சியையும், ஒன்றடுத்து ஒன்றாக, அந்த விடுபட்ட புள்ளிகளை மையஅச்சு இணைப்பதையும் கண்கூடாக எங்களால் பார்க்கமுடிந்தது. அன்றைய சந்திப்பில் நூற்பு ஆடை, கருப்பட்டி கல்லமிட்டாய், தும்பி இதழ் எனக் கையில் கொண்டுபோனதை எல்லாம் அவரிடம் அளித்தோம். அவைகளை வாங்கித் தடவிக்கொண்டே காந்தி குறித்தும், குமரப்பா குறித்தும் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்தார்.

வண்ணதாசன் அய்யாவைப்பற்றி பேசி, அவருடைய சில கவிதைகளை அவருக்கு அன்று சொன்னோம். அவைகளைக் கேட்டு, நினைவுகளை அசைபோட்டு “என்னுடைய கனவுகளில் எப்பவுமே வருகிற சிற்றுயிர் தும்பிதான்” என அமைதியாகச் சொன்னார். மேலும், “அந்தப் புத்தகத்தின் பதினேழாவது பக்கத்தில் ஆனைமலைக்கு கீழே ஒரு மண்சாலை இருக்கும். அந்த மண்சாலையில் சின்னதாக ஒரு குடிசை இருக்கும். அந்த குடிசைக்கு அருகில் இரண்டுபேர் பர்தா அணிந்து நடந்துபோவார்கள். அவர்களுக்குப் பக்கத்தில் சின்னதாக ஒரு நீர்குட்டை இருக்கும். அதற்கு நெருக்கமாக ஒரு புதர் இருக்கும். அப்புதர் நாணல் புதர். அந்நாணல் புதரில் ஒன்றிரண்டு பூ பூத்திருக்கும். அந்த பூவுக்கு மேலே பட்டாம்பூச்சி பறக்கும். அந்த பூவுக்கு கீழே, அந்தப் புதருக்குள் இரண்டு தும்பி இருக்கும். நான் வரைந்திப்பேன், பாருங்கள்” என்று தன்னுடைய ஓவியக்கோடுகளை அவ்வளவு துல்லியமாகச் சொற்படுத்தினார்.

அவரைப் பொறுத்தவரை ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு தருணமும் முக்கியம்தான். அதற்கான நன்றியோடே அவர் வாழ்வை அணுகி வந்தார். தன் எந்நிலையிலும் இந்த முடிவை அவர் கைவிட்டதே இல்லை. நண்பர் தியாகு, அச்சந்திப்பை புகைப்படங்களாக எடுத்துக்கொண்டிருக்க, கிளம்பும் நேரத்தில் தயங்கித்தயங்கி அவரிடம் கையெழுத்து கேட்டான். மனோகர் தேவதாஸ் அய்யாவால் கையெழுத்திட இயலுமா என்ற தயக்கம் எங்கள் நெஞ்சுக்குள் இருக்க, அவர் தியாகுவைப் பார்த்து “உங்களை என்னவாக சொல்லிக்கொள்ள விரும்புகிறீர்கள்?” எனக் கேட்டார். அதற்குத் தியாகு “புகைப்படக்கலைஞன்” என்றான். கையெழுத்துக்காக கொடுத்த புத்தகத்தில், ‘புகைப்படக்கலைஞன்’ என்று எழுதி அதில் சின்னதாக ஒரு கேமிரா வரைந்து கையொப்பமிட்டு புத்தகத்தைத் தந்தார்.

அனைத்துக்கும் மேலானதாக அவருக்கும் அவருடைய மனைவி மஹிமாவுக்குமான காதல் அத்தனை அன்பு நிறைந்தவொன்று. அவர்கள் இருவரது மணவாழ்வு பற்றி பல புத்தகங்கள்  எழுதும் அளவுக்கு காதல்மிகு தருணங்களால் நிறைந்தது. முதல்சந்திப்பு முடிந்து அவரிடம் விடைபெற்று அவ்வீட்டுத் தெருவின் தேநீர் கடையில் ஒதுங்கிய நேரம், இரண்டு அரசுப்பள்ளிச் சிறுவர்கள் “நம்ம புத்தகத்துல வர ஓவியர் தாத்தா வீடுடா” என்று அந்த வீட்டை விரல்காட்டிச் சொல்லிப் போனார்கள். பாடப்புத்தகத்தில் மனோகர் தேவதாஸ் அய்யா பற்றிய தகவல்குறிப்பு இருக்கக்கூடும். “நான் இறந்தபிறகு என்னுடைய சாம்பலை, என மனைவியின் சமாதியிலுள்ள சிறிய துளைக்குள் போட்டுவிடுங்கள்” என்று தன் கடைசி ஆசையை வெளிப்படுத்திய அவர் குரல் காலத்துக்குமான கனிவையும் காதலையும் கொண்டிருந்தது.

குக்கூ குழந்தைகள் வெளி மற்றும் தன்னறம் நூல்வெளியின் பெரும்பானமையான நிகழ்வுகளில் மனோகர் தேவதாஸ் அய்யா அவர்கள் தந்தைக்கு நிகரான இடத்தில் இருந்துவந்தார். அவருடைய ஆசியைப் பெற்று ஒரு காரியத்தைத் துவங்குதல் என்பது எங்களுக்கான நம்பிக்கைக் குறியீடாகவே மாறிப்போனது. தும்பி சிறார் இதழின் பிரெய்ல் அச்சுப் புத்தகத்தையும், அரவிந்த் கண்மருத்துவமனை நிறுவனர் கோவிந்தப்ப வேங்கடசாமி பற்றிய சிறுநூலான ‘வெளிச்சத்தின் சந்நிதி’யையும் மனோகர் தேவதாஸ் அய்யாவே அவர் வீட்டில் தொட்டு ஆசீர்வதித்து வெளியிட்டார்.

இறுதியாக, இருபத்தைந்து நாட்கள் முன்னதாக அவருடைய வீட்டில் iGene VFX பயிற்சி வகுப்பைத் துவங்கி வைத்து ஆசிவழங்கி பேசுகையில்கூட, “மரணத்துக்கு நான் தயாராகத்தான் இருக்கேன். மஹிமாவோடு கைகள் கோர்த்து பேசிக்கொண்டிருக்கும் கனவில் என் உயிர் பிரியணும். அவ்வளவுதான்” என்றார். தன் மரணத்தைக்கூட அம்மனிதர் மனதுக்குள் ஓவியப்படுத்தி வரைந்துகொண்டார் என்றே எண்ணித் தொழத் தோன்றுகிறது. தனது ஓவியக்கோடுகளாலும் ஒளியுயிர்க்கும் நினைவுகளாலும் மனோகர் தேவதாஸ் அய்யா நெடுங்காலத்திற்கு நம் அகத்தில் எஞ்சுவார். வீட்டில் அவரை காதுகேளாத ஒரு அம்மா கவனித்துக்கொண்ட சூழ்நிலையில், அவர் பங்கேற்க விரும்பிய எல்லா நிகழ்வுகளுக்கும் இடங்களுக்கும் உறுதுணையாக உடனின்று அவரை அழைத்துச் சென்ற தாயுள்ளமான தோழமை திரிபுரசுந்தரியை இக்கணம் அகத்தில் நிறைக்கிறோம்.

“ஆம், வாழ்க்கை அல்ல, வாழ்க்கையின் சாரமென ஊறும் தேன் மட்டும் போதும் அவனுக்கு. காட்டை அதன் தேன் வழியாகவே அறிய அவனால் முடியும். அந்தக்காடு அவன் வழியாகவே காய்த்துக் கனிகிறது. ஒரு செடியின் ஆன்மாவை மகரந்தமாக ஆக்கி இன்னொரு செடிக்குக் கொண்டுசெல்லக்கூடியவன் அவன் இல்லையா?” என்கிற உங்களது வரிகள்தான் ஆளுமைமிகு ஓர் படைப்பாளியைக் கண்டுணரும்போதெல்லாம் எங்கள் நெஞ்சில் தோன்றும். கனிந்து சாய்ந்த முதுவாழை போல மனோகர் தேவதாஸ் அய்யா இவ்வாழ்வைவிட்டு நீங்கி இயற்கையோடு சேர்ந்திருக்கிறார். அவரது ஒளிக்கோடுகள் நம்மை வழிநடத்தும். மனோகர் தேவதாஸ் அய்யாவுக்கு நம் நெஞ்சார்ந்த அஞ்சலிகள், அவரது நல்லான்மா அமைதியில் இறைநிழல் அடைக!

நன்றியுடன்,

சிவராஜ்

குக்கூ காட்டுப்பள்ளி 

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 10:31

யோகப்பயிற்சி முகாம்

ஏற்கனவே அறிவிக்கப்பட்டு ஒத்திவைக்கப்பட்ட யோகப்பயிற்சி முகாம் ஈரோடு அருகே மலைத்தங்குமிடத்தில் வரும் டிசம்பர் 23 ,24,25 ஆம் தேதிகளில் நிகழவிருக்கிறது. புகழ்பெற்ற யோக குரு சௌந்தர் ராஜன் நடத்துகிறார்.

அதில் பதிவுசெய்துகொண்ட சிலர் வரமுடியாமலானமையால் புதியவர்களுக்கு இடமுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்

jeyamohan.writerpoet@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 11, 2022 07:10

December 10, 2022

ரத்தசாட்சி, ஓர் உரையாடல்

சில படங்களில் ஒரு ஏமாற்றம் நிகழும். அதிலொன்று, ஓடிடி படம் இது என நம்பி ஒன்றை சுமாரான முதலீட்டில் எடுத்து வெளியிடுவார்கள். நல்ல எதிர்வினைகள் வந்ததும் ‘அடாடா தியேட்டரில் வெளிவந்திருந்தால் அள்ளியிருக்குமே’ என பிலாக்காணம் வைப்பார்கள்.

இப்போது திரையரங்கில் வெற்றிகரமான படங்கள் இல்லை. ஆகா ஓடிடி தளத்தில் ரத்தசாட்சி பார்த்துவிட்டு, எதிர்வினைகளையும் கவனித்துவிட்டு வினியோகஸ்தர்கள் ‘ஏன் சார் ஓடிடிக்கு குடுத்தீங்க? இப்ப தியேட்டர்ல வந்திருந்தா பணம் பாத்திருக்கலாம்சார், எங்களுக்கெல்லாம் நஷ்டமாப்போச்சு சார்” என்றனர்.

“நான் எங்க ரிலீஸ் பண்ணினேன்? எனக்கு அந்த படத்தோட தயாரிப்பிலே சம்பந்தமே இல்லை” என்றேன். “இருந்தாலும் நீங்க சொல்லியிருக்கலாமே” என்றனர். அதெப்படி என்று நான் கேட்கவில்லை.

ஒன்றும் செய்வதற்கில்லை. இப்படியாவது மக்களிடம் சென்று சேர்ந்தால் சரி. ஒருவேளை தெலுங்கில் மறுஆக்கம் செய்யப்படலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2022 10:36

மலேசியா வாரம்-3

Jeyamohan: The Free and Ferocious Elephant of Tamil Literature

Stories Of the True

இலக்கியப் பெருவிழாக்களில் கலந்துகொள்வது பற்றிய ஒரு தயக்கம் எனக்கு எப்போதுமே உண்டு. அவை பெருவிருந்துகள், களியாட்டங்கள். அங்கே ஆழமான இலக்கிய விவாதங்களுக்கு இடமில்லை. பெரும்பாலும் அதற்கான பொழுதும் அளிக்கப்படுவதில்லை. பல விழாக்களில் ஒரே சமயம் வெவ்வேறு அரங்குகள் நடைபெறும். எவற்றிலும் ஆளிருக்க மாட்டார்கள். பெரும்பாலும் அடுத்த அரங்குக்கான பங்கேற்பாளர்களே அமர்ந்திருப்பார்கள்.

அத்துடன் இந்தவகையான விழாக்களில் அதிகக் கவனம்பெறுபவர்கள் பொதுவாக ஆங்கிலத்தில் எழுதும், பிரபல ஆங்கில ஊடகங்களில் தொடர்ந்து இடம்பெறும் ஆளுமைகள்தான். அதுவும் இயல்பானதே. விருந்துகள், உரையாடல்கள் என தன்னை புறவயமாகத் திறந்துகொள்ளாதவர்களுக்கு இந்த விழாக்களில் பெரிய இடமிருப்பதில்லை.

அ.பாண்டியன்

ஆனால் இலக்கியவிழாக்களால் ஒரு நன்மை உண்டு, அவை இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கின்றன. பொதுப்பெருக்காக வந்துசெல்லும் பார்வையாளர்கள் நடுவே இலக்கிய ஆர்வமும், பயிற்சியும் கொண்ட சிலர் இருந்தால் அவர்கள் புதிய இலக்கிய ஆளுமைகளை அறிமுகம் செய்துகொள்ள முடியும்.

அதேசமயம் இத்தகைய இலக்கியவிழாக்களில் பங்குபெறவேண்டும் என்றால் நம் கதை ஆங்கிலத்தில் கிடைக்கவேண்டும். ஓரளவேனும் வாசிக்கப்பட்டிருக்கவும் வேண்டும். நான் பல விழாக்களில் கலந்துகொண்டிருந்தாலும் அஸிம்டோட் இதழின் விருது பெற்ற பின்னரே என் இருப்பு சற்றேனும் கவனிக்கப்பட்டது.

பினாங்கில் நடைபெற்ற ஜார்ஜ்டவுன் லிட் பெஸ்ட் உலகளாவிய புகழ் கொண்டது. சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேயத்தமிழர்கள் அதில் பங்கெடுப்பது நின்றுவிட்டது. தமிழ்நூல்கள் ஆங்கிலம் அல்லது மலாய் மொழியில் கிடைக்காதது ஒரு காரணம். அதற்குரிய ஆளுமைகள் அமையவில்லை என்பது இன்னொரு காரணம்.

இம்முறை நவீன் அதன் அமைப்பாளர்களில் ஒருவர். அண்மையில் அவருடைய கதைகள் மலாய் மற்றும் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தமையால் அவருடைய இலக்கிய அறிவும் இடமும் ஏற்பு கொண்டன. அவர் மலேசிய, மற்றும் தமிழ்நாட்டு இலக்கியத்திற்கும் இடம் உருவாக்கினார்.

காலை பத்துமணிக்கு என்னுடைய நிகழ்வு. நவீன் என்னை பேட்டி எடுப்பதாக திட்டம். ஆனால் அமைப்பாளர் பாலின் அந்நிகழ்வு ஆங்கிலத்தில் நிகழவேண்டும் என்றார். ஆகவே கனகலதா கேள்விகளை மொழியாக்கம் செய்வதென்றும் நான் தமிழிலும் ஆங்கிலத்திலும் பேசுவதென்றும் முடிவாகியது.

ஒன்றரை மணிநேரம் கலந்துரையாடல் நிகழ்ந்தது. நான் பதில்களை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலுமாக கூறினேன். வாசகர்களின் கேள்விகளுக்கும் பதில் சொன்னேன். அதன்பின் என்னுடைய Stories Of the True நூல் அங்கே வெளியிடப்பட்டது. அந்நூல் மலேசிய சிங்கைச் சூழலில் கவனிக்கப்படவேண்டும் என்பதே நான் அந்நிகழ்வுக்கு விரும்பிச் சென்றமைக்கான காரணம்.

அது நிகழ்ந்தது என தெரிந்தது. விற்பனைக்கிருந்த எல்லா பிரதிகளும் உடனே விற்றுமுடிந்தன. மேலும் பிரதிகளுக்கான கோரிக்கைகள் வந்துகொண்டிருந்தன. கிழக்காசியாவுக்கு மேலும் பிரதிகளுக்கான ஆணைகள் வந்தன என்றனர்.

நவீன் என்னிடம் கேட்ட கேள்விகள் பெரும்பாலும் மரபிலக்கியங்களையும் தொன்மங்களையும் மறு ஆக்கம் செய்வது குறித்தவை. அடிப்படை விழுமியங்களை உசாவுவதற்கு, மறுபரிசீலனை செய்வதற்கு அவ்விழுமியங்களை நிலைநிறுத்தியிருக்கும் செவ்விலக்கியங்கள் மேல் மறுவாசிப்பு நிகழவேண்டும் என்று நான் சொன்னேன்.

ஆனால் அவற்றை மாற்றிப் புனைவதில் எனக்கு ஆர்வமில்லை. நான்கு வகை மறுபுனைவுகள் இந்தியச் சூழலில் உள்ளன. ஒன்று அமிஷ், ஆனந்த் நீலகண்டன் பாணியிலான பொதுவாசிப்புக்குரிய மறுபுனைவுகள். அவை ஒருவகையான மிகைக்கற்பனையின் சுவாரசியத்துக்காகவே பேரிலக்கியங்களை அணுகுகின்றன.

இன்னொருவகை மறுபுனைவுகள் பிரதீபா ராய் போன்றவர்கள் எழுதுபவை. அவர்கள் தங்கள் சமகால, முற்போக்குக் கருத்துக்களை திரௌபதியைக் கொண்டு சொல்லவைக்கிறார்கள். வில்லன்களை நல்லவர்களும் நல்லவர்களை வில்லன்களுமாக ஆக்கி விளையாடுகிறார்கள்.

எஸ்.எல்.பைரப்பா போன்றவர்கலால் உருவாக்கப்படும் நவீனத்துவ மறு ஆக்கங்கள் மூன்றாவது வகைமை. அவையே இலக்கிய ரீதியாக முக்கியமானவையாக உள்ளன. எம்.டி.வாசுதேவன் நாயர், பி.கே.பாலகிருஷ்ணன் போன்றவர்கள் அந்த வகை.

நான் உருவாக்குவது முற்றிலும் புதிய ஒரு எழுத்தை. இது செவ்வியல். வியாசன் எழுதியதுபோன்றே செவ்வியல், ஆனால் நவீன இலக்கியம். செவ்வியலுக்குரிய பரந்துபட்ட தன்மை, ஒவ்வொரு தருணத்திலும் உச்சம் தேடும் இயல்பு, ஒன்றை இன்னொன்றால் சமநிலைப்படுத்திக்கொள்ளும் போக்கு, தத்துவ – ஆன்மிக உசாவல் ஆகியவை கொண்டது.

வாசிப்பு பற்றி, பொதுவாசிப்புக்கான இடம் பற்றி மேலும் கேள்விகள் வந்தன. என் பதில்களை நான் கொஞ்சம் என்னை மறந்தபோது வழக்கம்போல சரளமாகவே சொன்னேன். அவை அரங்கிலிருந்த தமிழரல்லாத வாசகர்களை கவர்ந்திருப்பதை மறுநாள்தான் தெரிந்துகொண்டேன்.

டேவன் சாஸ்த்ரா என்னும் இலக்கிய இதழின் ஆசிரியரான ஃபடில் அலி தன் முகநூல் பக்கத்தில் அந்த உரையாடலைப் பற்றி இரு பதிவுகள் போட்டிருந்தார். “எழுத்தாளர் ஜெயமோகன் எனும் ஆளுமையின் தோற்றமே மொத்தக் கூட்டத்தையும் வசீகரித்தது. அவருடைய கருத்தாழமிக்க உணர்வுபூர்வமான கலந்துரையாடல் எனது சிந்தனையை ஒரு முகப்படுத்தியது.

ஜெயமோகன் முன் வைக்கும் தமிழ் இலக்கியம்  அதன் பண்பாட்டுக்கு  (பண்டைய இலக்கியங்கள் மற்றும் புராதான கதைகள்) மிகவும் நெருக்கமாக உள்ளது.  அவரது பார்வையில் இருந்து தற்போதைய புனைவுலகம் ஒரு தத்துவ பிரதிபலிப்போடு விவாதிக்கப்பட்டது.

(தமிழ் விக்கி மலேசியா விழா உரை)

பண்பாடும் மொழியும் ஒருங்கே இணைந்திருந்த தோற்றம் அதனுள் இருக்கும் இலக்கியத்தை இன்றைய நிலையில் அறிந்துக் கொள்ள பேருதவியாக அமைந்தது.

சமகால இந்தியாவின் தலை சிறந்த படைப்பாகக் கருதப்படும் இந்த நூல், பண்பாட்டு பொக்கிஷமாகவும், சமுதாயத்தின் கல்வி மேம்பாட்டிற்கும் அடித்தளம் அமைக்கும்.

இந்திய கலாச்சாரத்தையும், ஜெயமோகனின் நூலையும் ஒவ்வொருவரும் கொண்டாட்டமாக்கி மகிழும் தருணம்”

பின்னர் டேவன் சாஸ்த்ரா இதழில் விரிவான கட்டுரை ஒன்றும் வெளியாகியது. (டேவன் சாஸ்த்ரா இதழ் கட்டுரை)

இந்த வகையான விழாக்களின் பெறுபயன் இதுவே. எங்கோ எவரோ இலக்கியமறிந்த ஒருவர் கவனிக்கிறார். அவர் நம்மை கொண்டுசெல்கிறார். இன்று உலக இலக்கியமே விற்பனை சார்ந்ததாக ஆகிவிட்டது. Stories of The True விற்பனையாவதனால்தான் அதற்கு மதிப்பு. விற்பனையாகவேண்டும் என்பதனால்தான் அறம் முதலில் வெளியிடப்பட்டது. எடுத்த எடுப்பில் கொற்றவையோ விஷ்ணுபுரமோ வெளிவந்திருந்தால் காணமலாகியிருக்கும். ஆனால் விற்பனைக்கும் அப்பாலிருப்பது இத்தகைய சில ஏற்புகள்.

மாலையில் பினாங்கில் ஒரு நடை சுற்றிவந்தோம். ஜார்ஜ் டவுன் கீழைநாடுகளில் என் மனம் கவர்ந்த நகரப்பகுதியாக ஆகிவிட்டிருக்கிறது. இங்கே எதன்பொருட்டு தங்குவதென்றாலும் கிளம்பி வந்துவிடுவேன் என நினைக்கிறேன்.

மறுநாள் மீண்டும் பிரம்ம வித்யாரண்யம். அங்கே ஒரு தத்துவ வகுப்பை நடத்தமுடியுமா என்று சுவாமி பிரம்மானந்தர் கேட்டிருந்தார். காலையில் கிளம்பி கூலிம் சென்று ஓர் உணவகத்தில் சாப்பிட்டோம். ஆச்சரியமான சமையல்.காலையிலேயே பொரித்த மீனும் மீன்கறியும் தயாராக இருந்தது. தமிழர் உணவகம்.

பிரம்ம வித்யாரண்யத்தில் மூன்று ஒருமணிநேர அமர்வுகளாக இந்திய தத்துவ மரபின் ஒட்டுமொத்த வரைபடத்தை அறிமுகம் செய்யும் வகுப்புகளை நடத்தினேன். மதிய உணவுடன் நிகழ்ச்சி முடிந்தது. கொரோனாவுக்கு முன் சந்தித்த நண்பர் சு.யுவராஜனையும் அவருடைய மனைவியையும் பையன்களையும் சந்தித்தேன். ஓர் இடைவெளியில் எழுதாமலாகிவிட்டிருந்தவர் தீவிரமாக எழுதவிருப்பதாகச் சொன்னார்.

(பி.கிருஷ்ணன் நூல் வெளியீடு, உரை)

மீண்டும் ஜார்ஜ் டவுன். சிங்கப்பூரில் இருந்து வந்திருந்த விஜியும் அழகுநிலாவும் கிளம்பிச் சென்றனர். மாலையில் நானும் அருண்மொழியும் கனகலதாவும் அருண் மகிழ்நனும் பினாங்கின் புகழ்பெற்ற தெரு உணவகச் சந்தைக்குச் சென்றோம். நான் அங்கே சீனமுறைப்படி பொரித்த ஆட்டிறைச்சியையும் பல்வகை பழங்கள்மேல் கருப்பட்டி சாறு ஊற்றிய ரோஜாக் என்னும் உணவையும் சாப்பிட்டேன்.

மெல்லிய மழைத்தூறல் இருந்தது. ஆகவே கூட்டம் குறைவு. அந்த இடத்தின் இனிமை என்பது விதவிதமான மனிதர்கள். கூடவே வெவ்வேறு வகைச் சமையல்கள். உணவு சமைக்கப்படுவதை கண்ணெதிரில் காணலாம். உலகமெங்குமே திறந்தவெளியில் அமர்ந்து உண்பது மக்களால் பெரிதும் விரும்பப்படுகிறது. வீட்டில் எப்போதுமே உள்ளே அமர்ந்து சாப்பிடுகிறோம். இது அதற்கு மாற்று.

இந்தியாவிலும் இந்தவகையான திறந்தவெளி உணவகங்களை அமைக்க அரசு முன்முயற்சி எடுக்கலாம். ஆனால் நம்மூர் கையேந்திபவன்கள் போல அசுத்தமான உணவாக இருக்கலாகாது. உணவின் தரத்தில் கடுமையான கட்டுப்பாடுகள் தேவை. அரசின் கட்டுப்பாடும், அந்த அமைப்பே தனக்கு விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடும். மெரினாவை ஒட்டி அவ்வாறு ஓர் இடம் அமையும் என்றால் சென்னையின் முக்கியமான மையமாக அது மாறும்.

மறுநாள் அதிகாலை ஆறுமணிக்கு பினாங்கில் இருந்து விமானம். மூன்றரை மணிக்கு கார்வரும் என்றனர். மூன்றுக்காவது எழவேண்டும். அறைக்கு வந்தது பத்துமணிக்கு. நான் தூங்காமலிருக்க முடிவுசெய்தேன். விடிய விடிய தமிழ்விக்கி பதிவுகள் போட்டேன். 12 பதிவுகள் போட்டு முடித்தபோது மூன்று மணி. குளித்து உடைமாற்றி விமானநிலையம் கிளம்பினோம்.

அன்று பதினொரு மணிக்கு சென்னை. மாலை ஐந்தரைக்கு எனக்கு நாகர்கோயில் ரயில். தூங்கினால் சரிவராது. ஆகவே மீண்டும் தமிழ் விக்கி பதிவுகள். மூன்றுமணிக்கு கிளம்பி ரயிலை பிடித்தேன். ரயிலிலும் தமிழ்விக்கி. என்னை அறியாமல் என் வாசகர் எவரோ ஒரு படம் எடுத்து அதை நண்பர் ஷாஜி சென்னைக்கு அனுப்பி அவர் எனக்கு அனுப்பியிருந்தார்.

மறுநாள் நாகர்கோயில். பதினொன்றாம் தேதி தொடங்கிய பயணம். ஆர்ட்டிக் எல்லையில் இருந்து பூமத்தியரேகைப் பகுதிவரை இரு கண்டங்கள். மூன்றுநாடுகள். எவ்வளவோ முகங்கள். உலகைச் சுற்றிவந்த உணர்வு.

(நிறைவு)

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 10, 2022 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.