இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 53
October 13, 2022
மழைக்கும் கால் வலிக்குமே என்று
கோர்ட்டாச்சு அவராச்சு
அறியப்பட்ட வருமான ஆதாரங்களில் இருந்து திரு ஆ.ராசாவின் சொத்து 579 சதவிகித அளவு உள்ளது என்று அவர்மீது குற்றம் சாட்டப்படுகிறதே
அதற்கென்ன?அதுபத்தியெல்லாம் பேசமாட்டியோ?ஏன், அதைபத்தி நீ பேசேன்நீ பேசமாட்டியா என்பதுதான் முதல் கேள்வி”மாப்ள அதை அவர் பார்த்துகுவார். கோர்ட்டாச்சு அவராச்சு. அதுமட்டுமில்லசனாதனத்தை வலுவா எதிர்க்கிற நான்கைந்து திமுககாரங்கள்ள அவரும் ஒருவர், அவர் பேசினா மதவெறியர்கள் அலறுறாங்க பாரு.அதற்காக அந்தப் புள்ளியில் அவரோடு இருப்பதே என் பணிஅப்ப ஊழலை பேசமாட்டியா?இப்பவும் சொல்கிறேன், அதை கோர்ட்டும் அவரும் பார்த்துக்குவாங்ககடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது, புரிஞ்சுக்கம்மா
80 கு 72 எடுத்துருக்கியே வெக்கமா இல்ல
உடும்மா முடிஞ்சததான என்னால எடுக்க முடியும்என்னாலயும் உனக்கு 200 ரூபாய்க்குதான் சட்டை எடுக்க முடியும். ஆனா கடன கிடன வாங்கியாச்சும் உனக்கு 500 ரூபாய்க்கு சட்டை வாங்கித் தரனுல்லகடனுக்கெல்லாம் மார்க்கு கிடைக்காது. புரிஞ்சுக்கம்மாஉங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டது சே
அன்பின் சேகுவேரா,
வணக்கமும் முத்தமும்அக்டோபர் 08, 1967உங்களது உடைமைகள் குறித்து பொலிவியா ஒவ்வொன்றாக வெளியிடத் தொடங்குகிறதுசில தகவல்களையும் வெளியிடுகிறார்கள்உங்களோடு இருந்தவர்கள் உறைகிறார்கள்ஆமாம்,அவை அவ்வளவு துல்லியமானவைபிடிபட்டுவிட்டீர்கள்உயிரோடு இருக்கிறீர்களா? இல்லையா? என்பதுதான் கேள்விபிடிபட்ட கணவாயிலேயே நீங்கள் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டதாக கசியவிடப்படுகிறதுபொலிவியாவைக் குறித்தும்பொலிவிய அதிபர் பாரியண்டோஸ் குறித்தும் நன்கு அறிந்தவர்களுக்கு ஒரு விஷயம் தீர்க்கமாகத் தெரிந்ததுஒன்று நீங்கள் பிடிபட்ட கணவாயிலேயே கொல்லப் பட்டிருக்க வேண்டும்அல்லது விசாரனைக்கு முன்பே நீங்கள் உறுதியாகக் கொல்லப்படுவீர்கள்அமாம்அமெரிக்காவே உங்களை உயிரோடு பனாமாவிற்கு கொண்டுபோக ஆசைப்பட்டதாக தகவல்கள் உண்டுபொலிவியாவில் வைத்து விசாரித்தாலும்விசாரனையை உங்கள் பக்கம் நகர்த்துவீர்கள்போக,பொலிவியாவில் மரண தண்டனை கிடையாதுநீங்கள் உயிரோடு இருப்பது மக்களை எப்போது வேண்டுமானலும் கிளர்ந்தெளச் செய்யும் என்பதைபாரியண்டோஸ் நன்கு உணர்ந்திருந்தான்ஆகவேபாரியண்டோஸ் உங்களைக் கொன்றுவிடுமாறு உத்தரவிடஅந்த உத்தரவு ரெக்டெரான் என்பவனுக்கு அனுப்பப் படுகிறதுஅவன் அதை செய்வதற்காகஉங்களை அடைத்துவைத்திருந்த பள்ளிக்கு வருகிறான்பாருங்கள் சே,பிடிபட்ட உங்களை அடைத்து வைப்பதற்காக பள்ளியை சிறையாக்கி இருக்கிறார்கள்சிறைகளை பள்ளியாக்க நினைத்த மனிதனை அடைத்து வைக்க பள்ளியை சிறையாக மாற்றினார்கள்பள்ளியில் இருந்த உங்களுக்கு உணவு அளிப்பதற்கு அனுமதி கேட்கிறார் யூலியா கார்டினோஸ் என்கிற ஆசிரியைஆச்சரியம்,அனுமதி கிடைக்கிறதுஎன்ன செய்யப் போகிறார்கள் என்னை? என்று கேட்கிறீர்கள்தனக்குத் தெரியாதென்றும்கடவுள் உங்களைக் காப்பாற்றட்டட்டும் என்றும் அழுதுகொண்டே கூறியபடி அவர் ஓடிவிடுகிறார்கடவுள் என்று ஒருவர் இருந்திருந்தால் உங்களைக் காப்பாற்றி இருப்பார்தானே சே“tri continental" பத்திரிக்கைக்கு நீங்கள் ஒரு முறை பேட்டி தருகிறீர்கள்கடைநிலையில் இருக்கக்கூடிய உலக மக்களின் விடுதலையே லட்சியம் என்கிறீர்கள்நம்முடைய ஒவ்வொரு செயலும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான குரலாக இருக்க வேண்டும் என்றீர்கள் அதில்எவ்வளவு வித்தியாசம்எல்லோரும் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் தர வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோதுஏகாதிபத்தியத்திற்கு எதிரான செயலேஅதற்கு எதிரான குரல் என்று சரியாக சொன்னவர் நீங்கள்அதே பேட்டியில்நமது குரலை ஒரே ஒரு காது கேட்டாலும் போதும்ஒரே ஒரு கை துப்பாக்கியை ஏந்தினாலும் போதும் என்றும் கூறினீர்கள்துப்பாக்கி ஏந்த கைகளைத் தேடிய நீங்கள்தான்எதிரியே தூண்டினாலும் தேவைப்பட்டால் ஒழிய ஆயுதத்தை எடுக்கக் கூடாது என்றும் சரியாகக் கூறினீர்கள்உங்களிடமிருந்த டைரி ஒன்றைக் கைப்பற்றி பாரியண்டோசிடம் கொடுக்கிறார்கள்அதை அவர் CIA விற்கு கொடுக்கிறார்அது எப்படியோ கிடைத்து நூலாகவும் வருகிறதுஅய்யோ சே,07.10.1967 அன்றுகூட எழுதியிருக்கிறீர்கள்அதில்வீரமிருந்தாலும் தவறான தந்திரங்களை அவை மக்களை பலிவாங்கும் என்பதால் அவற்றை கையெடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தீர்கள்இதற்குள் ரெக்டெரான் உங்களைச் சுட வந்துவிட்டான்முடியாது தடுமாறுகிறான்போதையேற்றுகிறான்நீங்களே அவனை உங்களை சுடச் சொல்லி உற்சாகப்படுத்தியதாகவும் உறுதியில்லாத தகவல்கள் கூறுகின்றனநீங்கள் இறந்ததும்அசட்டு துணிச்சல்காரர் நீங்கள் என்றும்இனி லத்தின் அமெரிக்காவில் ஏதும் செய்ய இயலாது என்றும் கூறினார்கள்ஆனாலும் பாருங்கள் லத்தீன் அமெரிக்கா சிவந்துகொண்டே இருக்கிறதுஅந்த மக்கள் ஜனநாயகத்திலும் பக்குவப்பட்டு வருகிறார்கள்உலகம் முழுக்கஏன் அமெரிக்காவிலும்பிள்ளைகள் உங்கள் படம் இட்ட பனியன்களை அணிகிறார்கள்உங்களை சுடச் சொன்ன பாரியண்டேசை உலகம் மறந்துவிட்டதுஅவன் உத்தரவால் கொல்லப்பட்ட உங்களை உலகம் அது உள்ளவரைக் கொண்டாடும்வீர வணக்கம் சேஅன்புடன்,இரா.எட்வின்09.10.2022#சாமங்கவிய இரண்டுமணி பதினான்கு நிமிடங்கள்09.10.2022கிஷோரின் இணையேற்புக்குப் பிறகு என்னை மிகவும் மகிழ்ச்சிப்...

தினக்கூலியே குறைவென்பதும்
அங்கன்வாடிகளில் உள்ள LKG மற்றும் UKG வகுப்பெடுப்பதற்கு தாற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு பள்ளிக்கல்வித்துறை உத்திரவிட்டிருக்கிறதுமாதத்திற்கு 5000 ரூபாய் தொகுப்பூதியம் என்றும்அதுவும் வருடத்திற்கு 11 மாதங்கள்தாம் என்றும் தெரிகிறதுஇது வன்மையன கண்டனத்திற்கு உரியதுஅரசு இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்சங்கங்கள் அரசிற்கு அழுத்தத்தைத் தர வேண்டும்தனியார் பள்ளிகளில் அதுதானே என்பார்கள் சிலர்அதுவும் தவறென்றும்அதற்கெதிராகவும் அழுத்தங்களைத் தரவேண்டும் என்பதே நமது கோரிக்கைஇதைக் கண்டிக்கிற வேளையில்இது தினக்கூலியைவிடக் குறைவாக இருக்கிறது என்றும்துப்புரவுத் தோழர்களின் சம்பளத்தைவிடக் குறைவென்றும் தோழர்கள் பதிவது வருத்தம் அளிக்கிறதுதொகுப்பூதியம் குறைவென்பதும்அது அநியாயமென்பதும்அது களையப்பட வேண்டும் என்பதுதான் அவர்கள் சொல்ல வருவதுஅதை சொல்ல வருகிறபோது தம்மையும் அறியாமல் தவறி விடுகிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறதுதினக்கூலியே குறைவென்பதும்துப்புரவுப் பணியாளர்களின் ஊதியம் குறைவென்பதையும் உணர முடியாதவர்கள் அல்ல நாம்100 நாள் வேலைத் திட்டத்தை முறைப்படுத்தி ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்அந்தப் பணிக்கான ஊதியமும்ஆண்டு முழுவதும் வேலை என்பதையும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதும் நாம் உணராதது அல்லகவனமாக கேட்போம்
October 7, 2022
ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை
அன்பின் மருத்துவர் கீர்த்தனா,
பிறந்தநாள் வாழ்த்துகள்
கடந்த பிறந்தநாட்கள் எதையும்விட இந்த பிறந்தநாள் உனக்கு மிகவும் முக்கியமானது என்று கருதுகிறேன்
ஆமாம்,
நான்கு நாட்களுக்கு முன்னர் BHMS தேர்வு முடிவு வந்தபோது உன் அருகில்தான் இருந்தேன்.
தேர்வு முடிவினைக் கண்ணுற்றதும் நீ கொண்டாடி மகிழ்ந்த விதம் எனக்குப் புதிதாக இருந்தது
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு வெளியானபோது நீ அப்பாயி வீட்டில் இருந்தாய். அப்போது 491/500 எடுத்திருந்தாய்,
மிகுந்த மகிழ்ச்சியோடும் ஒருவித படபடப்போடும் அதை உனக்கு அலைபேசிவழி தெரிவித்தபோது
எந்தவிதமான சலனமும் இன்றி,
இன்று வியாழன், எனவே நாளைக்கு வெள்ளி என்று யாரேனும் சொன்னால்
அந்த செய்தியை எப்படி எடுத்திருப்பாயோ அப்படி எடுத்த விதம் இன்னும் பசுமையாய் இருக்கிறது
ஒரு வகையில் unbecoming of keerthna வாக இருந்தாலும்
இந்தக் கொண்டாட்டத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது
ஹோமியோ மருத்துவர் என்பது உன் கனவு என்பது எனக்குத் தெரியும்
உன் கனவுகளில் ஒன்று நிறைவேறுவதற்கு ஏதோ ஒரு இடத்தில் உன் அம்மாவோடு நானும் இருந்திருக்கிறேன் என்பதில் பெரிய மகிழ்ச்சி எனக்கு
என் மகள் ஒரு மருத்துவர்
காட்டம்மா என்று அழைக்கப்படும் காளியம்மாளின் கொள்ளுப் பேத்தி
முனியம்மாள் ராஜரத்தினத்தின் பேத்தி
ஒரு மருத்துவர்
நம்முடைய குடும்பத்தைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய செய்திதான்
பெரிய பாரம்பரியம் மிக்க குடும்பமெல்லாம் இல்லை நமது குடும்பம்
உன் தாத்தா ஒரு இடைநிலை ஆசிரியர்
ஆனாலும் அப்பாவைவிட தாத்தாவிற்கு ஏகத்திற்கும் கடன்
என் அம்மாயி காட்டம்மா மாடு மேய்க்கும்
இன்று உன் அப்பா ஒரு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர். இதற்கும் உன் கொள்ளுப் பாட்டி மாடு மேய்த்ததற்கும் நேர்விகித உறவு இருக்கிறது கீர்த்தி
அது மாடுமேய்த்து சேர்த்த பால் காசில்லாது போயிருந்தால் உன் அப்பா இன்று இந்த அளவிற்கேனுமான நிலையில் இல்லை
இதை இதுவரைக்கும் உன் சித்தப்பாவிடமோ அத்தையிடமோகூட பகிர்ந்ததில்லை
இப்போது இவற்றை சொல்வதற்கு காரணம் இருக்கிறது
உன் வேர் உனக்குத் தெரிய வேண்டும்
என் இத்தனை ஆண்டுகால வாழ்க்கையில்
என் பணியிடத்தில், எனக்கான சமூக வெளியில்
என்னை ஒரு ஆசிரியரின் மகன் என்று மட்டும் வெளிப்படுத்திக் கொண்டதில்லைஒரு மாடு மேய்த்த கிழவியின் பேரனாக என்னை அடையாளப் படுத்திக் கொண்டிருக்கிறேன்
அன்பிற்குரிய கீர்த்தனா,
நீ,
ஒரு மாடு மேய்த்தக் கிழவியின் கொள்ளுப் பேத்தி
இவற்றை இவ்வளவு விளக்கமாக சொல்வதற்கு காரணமிருக்கிறது
அதை சொல்வதற்குமுன் இன்னொன்றையும் சொல்லிவிட வேண்டும்
அப்பாவிற்கு காது கேட்காது என்பது நீ அறிந்ததுதான்
காது கொஞ்சம் மந்தமாக இருக்கிறது என்பதை நானும் உன் தாத்தாவும் உணரத் தொடங்கியபோது நான் அநேகமாக பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்
விடுதியில் தங்கிப் படிக்கும் அளவிற்கு வசதி இல்லாததால் என் மாமா வீட்டில் தங்கிப் படித்துக் கொண்டிருக்கிறேன்
காது மருத்துவரைப் பார்ப்பதற்கே எங்களுக்கு காலம் ஆயிற்று
ஒரு அறுவை, அல்லது காது கேட்கும் கருவியை அவர் பரிந்துரைத்தபோது அதற்கான வசதி நம் குடும்பத்தில் இல்லை
பிறகு அப்படியேப் பழகிப் போனது
இப்போது காதுகேட்கும் கருவியைப் பொறுத்தியதும் அப்பாவிற்கு காது பெருமளவு தெளிவாகக் கேட்பதும் நீ அறிந்ததே
அதுவரையில் நான் பட்ட அவமானங்களும் நீ அறிந்ததுதான்
காது கேட்கும் கருவியை முன்னரே பொறுத்தி இருப்பின் பொதுத் தளத்தில் நான் இன்னும் கொஞ்சம் வளர்ந்திருக்கக் கூடும்
இப்போது உன்னிடம் வைப்பதற்கு ஒன்றிரண்டு கோரிக்கைகள் என்னிடம் உண்டு மகளே
நாம் என்பது இன்றைய நாம் மட்டும் அல்ல
உன்னை ஹோமியோ படிக்கவைத்ததற்கு என்னிடம் இரண்டு காரணங்கள் இருந்தன
1) ஹோமியோ என்பது மாற்று மருத்துவம்
2) அது ஏழைகளுக்கான மருத்துவம்
ஹோமியோவை மாற்று மருத்துவம் என்று கூறுவதற்கு அது அலோபதிக்கான மாற்று என்றோ, சித்தாவிற்கு மாற்று என்றோ பொருள் அல்ல
ஒன்றால் ஒன்றை இட்டு நிரப்பிவிட முடியாது என்பதும் எனக்குத் தெரியும்
அதனதற்கென்று தனிப்பட்ட லட்சணங்கள் உண்டு
எந்த மருத்துவமாயினும் அது மக்கள் மருத்துவமாக இருக்க வேண்டும் என்றும்
அனைத்துவகை மருத்துவமும் ஒன்றிணைந்து மக்களுக்கான ஆய்வுகளை செய்வதும்
ஏழைகளுக்கானதாக என்பதே தவறு
ஏதுமற்றவர்களுக்கானதாக மருத்துவத்தை மாற்றி அமைக்க வேண்டும்
ஹோமியோவை ஏதுமற்றவர்களுக்கான மருத்துவமாக நான் பார்க்கிறேன்
அல்லது அப்படியாக அது மாற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
40 வருடங்களுக்கு முந்தைய உன் அப்பா, அப்பாயி, பாட்டி ஆகியோர் இன்று ஓரளவு வசதியோடிருக்கலாம்
எந்தவிதமான மருத்துவத்திற்கும் கடன் பெற்றாவது சடுதியில் தயாராகிவிடக்கூடிய நிலையில் இருக்கலாம்
ஆனால்,
40 வருடங்களுக்கு முன்னர் உன் அப்பா இருந்த நிலையில் எத்தனையோ பேருடைய அப்பாக்கள், அப்பாயிகள், பாட்டிகள் ஏராளம் இன்றும் உண்டு
ஏதுமற்றவர்களும் உண்டு
அவர்களுக்கும் மருத்துவம் போக வேண்டும்
அதற்கு உன் பங்களிப்பும் இருக்க வேண்டும்
அது நடந்தால் அப்பாவின் கட்டை வேகும்
வாழ்த்துகள் கீர்த்தி
அன்புடன்,
இரா.எட்வின்
07.10.2022
October 6, 2022
அரசாங்கம் எங்கள் அரசாங்கம்
நாங்கள் அதைத் தருகிறோம்
இதைத் தருகிறோம்
சம்பளம் தருகிறோம் என்கிறீர்கள்நீங்கள் தருமளவு உங்களிடம் ஏது இவ்வளவுஅரசாங்கம் தருகிறதுஅரசாங்கம் எங்கள் அரசாங்கம் அது எந்தக் கட்சியின் அரசாங்கமானாலும்அரசாங்கத்தைக் கட்டமைத்து எங்களுக்கு பணி செய்யும் வேலையை உங்களுக்குத் தந்திருக்கிறோம்உங்களுக்கும் சம்பளம் தருகிறோம்கார் தருகிறோம்பெட்ரோல் தருகிறோம்வீடு தருகிறோம்இன்னும் என்னென்னமோ தருகிறோம்எங்களுக்குப் பிடிக்கவில்லை எனில் உங்களை வீட்டிற்கும் அனுப்புவோம்இதை முதல்வர் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்அதானால் அவரை நேசிக்கிறோம்புரிந்து வைத்திருக்கிற அமைச்சர்களையும் மதிக்கவும் நேசிக்கவுமே செய்கிறோம்இதை மற்ற அமைச்சர்களும் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?
உலகம் கொஞ்சம் கொஞ்சமாய் சிவப்பது புரிகிறதா?
அமெரிக்காவை மீட்டெடுக்க அமெரிக்க கம்யூனிஸ்டுகள் போதும் பைடன்

October 5, 2022
சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா
1947 ஆகஸ்ட் 15 நள்ளிரவு
உலகமே இந்திய விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறதுபூனேவிலும் 500 பேர் கூடி இருக்கிறார்கள்அவர்களும் கொடி ஏற்றுகிறார்கள்ஆனால் அவர்கள் ஏற்றியது ஸ்வஸ்திக் கொடிஅவர்கள் முன்னால் கோட்சே வருகிறான்“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு.இதைச் செய்தது காங்கிரஸ். அதிலும் குறிப்பாக அதன் தலைவர் காந்திஜி”கோட்சே ஒரு பத்திரிக்கையாளன் என்பது நம்மில் எத்தனைபேருக்குத் தெரியும் என்பது அய்யமாக இருக்கிறது”அக்ரானி”, “இந்துராஷ்டிரா” ஆகிய இரண்டு பத்திரிக்கைகளை அவன் வெவ்வேறு காலகட்டங்களில் நடத்தி வந்தான்காந்தியார் கொலை செய்யப்படும் காலத்தில் அவன் “இந்துராஷ்டிரா” இதழின் ஆசிரியனாக இருந்தான்1947 ஆகஸ்ட் 15 நாளிட்ட இந்துராஷ்டிரா தலையங்கம் எழுதப்படாமல் அந்த இடம் கட்டம் கட்டப்பட்டு வெள்ளையாக விடப்பட்டிருந்தது1947 நவம்பர் ஒன்று“இந்துராஷ்டிரா” இதழின் பங்குதாரர்கள் கூட்டம் நடக்கிறதுஅதன் ஆசிரியரான கோட்சே பேசுகிறான்“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார்.இந்தியா பிளக்கப்பட்டுவிட்டதுஇன்னும் காந்தி உயிரோடு இருக்கிறார்” (தோழர் அருணனின் “கோட்சேயின் குருமார்கள்” பக்கம் 11)இதன் பொருள் என்ன? இதை கவனித்து உரிய நடவடிக்கை எடுத்திருந்தாலே காந்தியார் இன்னும் கொஞ்சம் காலத்திற்கு உயிரோடு இருந்திருப்பார்”நல்லவராக வாழ்வதும்கூட மிகவும் ஆபத்தானது” என்று காந்தியாரின் இறப்பு செய்தியை கேட்ட மாத்திரத்தில் பெர்னாட்ஷா கூறிய செய்தியை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பதிப்பித்த “காந்தியார் கொலை - அதிர்ச்சியூட்டும் தகவல்கள்” என்ற நூலின் 97 ஆவது பக்கத்தில் பார்க்கிறோம்இனி இந்தக் கட்டுரையில் (அந்த அளவிற்கு இது நகரும் பட்சத்தில்) பக்க எண் என்று மட்டுமே தருகிறேன். அது மேல்காண் நூலின் குறிப்பிட்ட பக்கம் என்று கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்ஒரு மகத்தான மனிதனின் பிறந்த நாளில் அவரது மரணம் குறித்தே நாம் தொடங்க வேண்டிய சூழல் இருக்கிறதுஇந்த சூழலுக்கு நம்மை அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள் என்கிற வகையில் அவர்களது வளர்ச்சியைஅதுவும் 2014 இல் ஒன்றியத்தை அவர்கள் கைப்பற்றிய பிறகு அவர்களது அசர வளர்ச்சியை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும்அவர்களுக்கான எதிர்வினையை நாம் போதுமான அளவு தரவில்லை என்பதையும் நாம் ஏற்க வேண்டும்அப்போதுதான் நாம் செய்ய வேண்டியதை இனியாவது சரியாக செய்ய இயலும்காந்தியைக் கொன்றது கோட்சே என்ற தனி மனிதன் அல்லஅவரைக் கொன்ற கோட்சே ஒரு கூட்டத்தின் பிரதிநிதிஅந்தக் கூட்டத்தை இயக்கியது ஒரு மிகக் கொடிய மதப் பாசிசத்தின் பிரதிநிதிஆக,காந்தியைக் கொன்றது ஒரு சித்தாந்தம்இதை காந்தி கொல்லப்பட்டபோதே சரியாகப் புரிந்து கொண்டவர் தந்தை பெரியார்ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்உலகமே அதிர்ந்த ஒரு கொலையை செய்திருக்கிறார்கள்கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள்ஆக,தாங்கள் செய்த ஒரு மகா மனிதனின் கொலையைகொலையாளியை கையில் வைத்துக் கொண்டு தங்களை இந்த அளவிற்கு வளர்த்துக் கொண்டு0210.2022 அன்று அமைதி ஊர்வலம் நடத்த அனுமதி கோருகிற தைரியத்தைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை வெறும் தற்செயலான வளர்ச்சி என்று கொள்வோமானால் நாம் இன்னும் பின்னடைவுகளை சந்திக்க நேரும்அவர்கள் அனுமதி கேட்கும் தைரியத்தைப் பெற்றிருப்பது கண்டு அதிர்ச்சியுற்றாலும்“அவர்கள் அவர்களது சீருடையோடு தெருவிற்கு வருகிறார்கள்இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுஅதோ வருகிறார்களே அவர்கள்தான் காந்தியைக் கொன்றவர்கள்அவர்கள்தான் காமராசரைக் கொன்றவர்கள்அவர்கள்தான் எல்லோருக்குமான கல்விக்கு எதிராக நிற்பவர்கள்”என்பதை நம் மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டும் என்று சரியாகக் கூறி இருக்கிறார் தோழர் Thirumurugan Gandhi இதை நாம் முறையாக இதுவரை செய்யவில்லை“பிரிவினையின்போது இந்து அகதிகளின் துயரைப் பாராது, இந்த நாட்டிலேயே தங்கிவிட்ட முஸ்லிம்களின்மேல் காந்தியார் பரிவு காட்டினார்” என்றும்“பாரத மாதாவைக் காப்பாற்ருவதற்கு காந்தியைக் கொல்வதைத் தவிர வேறு வழி இல்லை, அவரைக் கொன்றது சரியே” என்றும் அவர்கள் காந்தியாரின்மீதான தாக்குதல்களைத் தொடுத்தபோதுகாந்தியர்கள் தம் மறு கன்னத்தைத் திருப்பிக் காட்டியவாறே இருந்தனர்”என்று துசார் ஏ. காந்தி கூறுவதை (பக்கம் 83) நம்மால் மறுக்க முடியாதுகாந்தியைக் கொன்றவர்கள் காந்தியின் பிறந்த நாளைக் கையெடுக்க முன் வந்ததும் தமிழகத்தில் அதை முதலில் எதிர்கொண்டவர் தோழர் திருமா அவர்கள்அக்டோபர் 02, 2022 அன்று தங்கள் கட்சி தமிழகம் முழுவதும் அமைதிப் பேரணி நடத்தும் என்றும் அறிவித்தார்காந்திக்கு ஆதரவாக திருமா வரலாமா?காந்தியே சனாதனத்தை ஏற்றவராயிற்றேதிருமா சனாதனத்தை எதிர்ப்பவராயிற்றேஎரவாடா மறந்துபோயிற்றா திருமாவிற்குஎன்றெல்லாம் நமது பக்கம் இருந்தும்திருமா தீயசக்தி என்று திரு H.ராஜாவிடமிருந்தும் குரல்கள் கிளம்பின எதையும் பொருட்படுத்தாமல் திருமாவின் முன்னெடுப்பை வரவேற்று இரண்டு பொது உடமைக் கட்சிகளும் அவரோடு இணைந்தனமே 17 இயக்கம் அதில் தன்னையும் இணைத்துக் கொள்ளும் என்று தோழர் திருமுருகன் காந்தி அறிவித்தார்”மனிதச் சங்கிலி”யாக மாறியதுஇரண்டையும் தடுத்திருக்கிறது மாநில அரசுஇரண்டிற்கும் தடை நியாயமா? என்பது பற்றி பிறகு பேசுவோம்ஏன் தோழர் திருமா காந்தியைக் கையில் எடுக்கிறார்?”வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு” என்று தந்தை பெரியார் சொன்னதை அவர் மிகச் சரியாக உள்வாங்கி இருக்கிறார்காந்தி வாழும்போது வர்ணாசிரமத்தை ஏற்கிறவராகவே இருந்தார் என்பது உண்மைஅதை அவர் நம்பினார்தான் நம்பிய ஒன்றை அவர் எடுத்து வைத்தார்அது தவறு என்று பட்ட மாத்திரத்தில் அவர் தன்னை மாற்றிக் கொண்டார்அப்படியாக அவர் மாறியதுதான் அவரது கொலைக்கான காரணங்களுள் முக்கியமானதுஅப்போது ஓமாந்தூரார் தலைமையிலான காங்கிரச் ஆட்சிஅவரது ஆட்சியை ”தாடி இல்லாத ராமசாமியின் ஆட்சி என்றும்பார்ப்பனர்களுக்கு உரிய கல்வி மறுக்கப்படுவதாகவும்“சுதந்திரா” பத்திரிக்கையிலும் “THE HINDU" விலும் எழுதுகிறார்கள்இதுகுறித்தும் “வகுப்புவாரி” முறையை ரத்து செய்ய வேண்டும் என்றும் காந்தியிடம் முறையிடுகிறார்கள்இதுகுறித்து ஓமாந்தூராரிடம் காந்தியார் விசாரிக்கிறார்ஓமாந்தூரார் மிகத் தெளிவான விளக்கத்தை அளிக்கிறார்பார்ப்பனர்களிடமிருந்து எதையும் பிடுங்கவில்லைஅவர்கள் முழுவதையும் அபகரித்து வைத்துள்ள நிலையில் மற்றவர்கள் தமக்கானதை ஓரளவேனும் பெறுவதற்கான முயற்சியே ”வகுப்புவாரிமுறை” என்பதை விளக்குகிறார்காந்தியார் புரிந்துகொள்கிறார்பார்ப்பனர்களைப் பார்த்து“வேதம் ஓதுதல்தானே வேதியர்க்கழகுதர்பையும் பஞ்சாங்கமும் பிடிக்க வேண்டிய நீங்கள் ஏன் சனாதனத்தையும் வைதிக நெறிகளையும் விட்டுவிடு ச்டெதாஸ்கோப்பையும் டி-ஸ்கொயரையும் எடுக்க விரும்புகிறீர்கள் இது நியாயம் அல்ல”என்கிறார்07.10.1947 அன்று “இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு” என்கிறார்அவர் உயிரோடு இருந்தால் இந்தியா சுயமரியாதை நாடாக மாறிவிடும் என்று பயந்தவர்கள் காந்தியை அவர்கள் சுட்டுக் கொல்கிறார்கள் (பக்கங்கள்1X மற்றும்X)காந்தியாருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக நன்னிலம் அருகே உள்ள சன்னாநல்லூரில் பெரியார் பேசுகிறார்அப்போது அன்றைக்கு இளைஞராக இருந்த கலைஞர் கொஞ்சம் கோவமாக எதையோ பேச குறுக்கிட்ட பெரியார்“சுட்டதற்காக துப்பாக்கி மீது ஆத்திரப்படலாமா?” என்று ஆற்றுப்படுத்துகிறார்ஆமாம் துப்பாக்கிக்கு பின்னால் உள்ள சித்தாந்தத்தின் அரசியலை பேசுவோம்உரக்கப் பேசுவோம்ஒன்று சேர்ந்து இன்னும் இன்னுமாய் உரக்கப் பேசுவோம்இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)