இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 50

October 27, 2023

அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்

    


ஒன்று தெரியுமா ரவி

சென்னை வருகிறார் காந்திநாடு முழுமையும் ஏற்கிற போதும் தமிழர்கள் ஏன் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பது அவரிடம் வைக்கப்பட்ட கேள்விஅது சிறுபாண்மையினரின் கொடுங்கோண்மை என்கிறார் கிழவர்அந்தக் கிழவரையும் எதிர்கொண்டுதான் வந்திருக்கிறோம்அவர் யாரென்பதை யாரளவிற்கும் குறையாது அறிவோம்1947 ஆகஸ்ட் மத்தியில் நவகாளி நோக்கி நடந்து கொண்டிருந்த கிழவரை விட்டு விடுங்கள் ரவிஇந்தியா நாளைக்கு சிந்திக்க இருப்பதை வங்கம் முதல்நாளே சிந்திக்கத் தொடங்கும் என்பார்கள்நாங்கள் ஒரு வாரம் முன்னதாகவே சிந்திக்க ஆரம்பித்திருப்போம்அம்பலப்பட்டு அசிங்கப்பட வேண்டாம்[image error][image error]All reactions:21Eniyan Ramamoorthy, Ansari and 19 others1LikeCommentShare
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2023 22:47

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

டக்கர்

சிதார்த் நடித்த படம்

அதில் ஒரு காட்சி

பாரதிக்கும் வ.ரா விற்கும் இடையே 113 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த அவர்களுக்கிடையேயான முதல் உரையாடலை நினைவிற்கு கொண்டு வந்தது

பாரதியைச் சந்திக்க வ.ரா வந்திருப்பார்

பாரதியார் மாடியிலிருந்து கீழே வருகிறார்

பாரதியோடு ஆங்கிலத்தில் பேசினால் மகிழ்வார் என்று கருதிய வ.ரா ஆங்கிலத்தில் பேசுகிறார்

பாரதி திரும்புகிறார்

வ.ரா அழைக்கிறார்

பாரதி கேட்கிறார்,

"இன்னும் எத்தனை காலத்திற்குதான் ஒரு தமிழன் இன்னொரு தமிழனிடம் ஆங்கிலத்தில் பேசுவீர்கள்?"

இப்போது படத்திற்கு வருவோம்

ஒரு முடிதிருத்தும் கடைக்கு சித்தார்த் வருகிறார்

ஊழியரிடம்

ஒரு படத்தைக் காட்டுவார்

அதில் சன்னமாக முறுக்கிய மீசையும் குறுந்தாடியுமாக ஒருவர்

அதைக் காட்டி

இந்த முஷ்டேச் இருக்கட்டும்

பியர்ட் எடுத்திடு

அந்தத் தம்பி முடித்திட்டு

எப்படிங்கண்ணா இருக்கு என்று கேட்பார்

பார்த்த சித்தார்த் அதிர்ந்திடுவார்

மீசையை எடுத்துவிட்டு தாடியை வைத்திருப்பார்

அடிக்க ஆரம்பிப்பார்

முதலாளி தலையிடுவார்

இந்தண்ணன்தான் பியர்ட வச்சிட்டு முஷ்டேச்ச எடுக்க சொன்னார்

அதத்தான் செஞ்சேன்

அதான பியர்ட வச்சுட்டு முஷ்டேச்சதான எடுத்திருக்கான் நீங்க கேட்டபடி

பியர்ட்னா தாடின்னும் முஷ்டேச்னா மீசைன்னும் புரிய வைப்பார் சித்தார்த்

முதலாளி சொல்வார்

அத இப்படி புரியற மாதிரி தமிழ்ல சொல்லி இருக்கலாம்ல

All 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2023 08:47

October 26, 2023

அன்புடுத்தி அலைவோம்





நவராத்திரிப் பண்டிகை பாஜகவின் வயிற்றில் புளியைக் கறைத்திருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா?

நம்புங்கள்

நடந்திருக்கிறது

ஆமாம்,

உத்திரப் பிரதேசம் மாநிலம்

தியோரியா மாவட்டம்

புஜோலி கிராமம்

நவராத்திரியின் ஒரு கொண்டாட்டமான “கன்யா பூஜை” கொண்டாடப் படுகிறது

1500 மக்கள்

சிறப்பான விருந்து

குழந்தைகளுக்கு உடைகள், பரிசுகள்

இதிலென்ன நீ கொண்டாடவும் பாஜக அதிர்ச்சியடையவும் இருக்கிறது

இந்த நிகழ்ச்சியில் பங்குகொண்ட 1500 மக்களும் இந்துக்கள்

விழாவை ஏற்பாடு செய்து நடத்தியவர் இஸ்லாமியர்

மும்பை

நவராத்திரியின் இன்னொரு முக்கிய நிகழ்வான “கர்பா”

மும்பையின் மூன்று பிரபல இஸ்லாமியப் பாடகர்கள் துர்காவை வணங்கிவிட்டு இசை நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்

இஸ்லாமியர்களும் இந்துக்களுமாக பங்கேற்கிறார்கள்

சத்தீஸ்கரிலும் இஸ்லாமியர்கள் ”மா தண்டேஸ்வரி” என்ற பிரபலமான இந்துக் கோவிலுக்குள் சென்று நெய்விளக்கு ஏற்றி வைத்திருக்கிறார்கள்

இந்தச் செய்திகளோடு வயிற்றில் பால் வார்த்திருக்கிறது 27.10.2023 தீக்கதிரின் மூன்றாம் பக்கம் 

அன்புடுத்தி அலைவோம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 26, 2023 21:27

October 10, 2023

ஒருவரும் கை உயர்த்தவில்லை

 சாதிவாரிக் கணக்கெடுப்பு ஒன்றாக இருக்கிற மக்களை பிளவுபடுத்தாதா ராகுல்

பல இடங்களில் ஒருத்தர்கூட இல்லபல இடங்களில் ஒருத்தராவே இருக்கீங்களேப்பாஅர்த்தமே இல்லிங்க ராகுல்அப்படியாஇங்க இருக்கிற பத்திரிக்கையாளர்களில் எத்தனை பேர் ஓபிசிஒருவரும் கை உயர்த்தவில்லைசரி, எத்தனைபேர் பட்டியல் இனம்இப்போதும் யாரும் கை உயர்த்தவல்லைஇதற்காகத்தான் நண்பர்களேமுத்தம் ராகுல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 10, 2023 21:48

October 9, 2023

தேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்

 

அன்பின் முதல்வருக்கு,

வணக்கம்எக்ஸ்-ரே விலிருந்துஅறுவைக் கூடம் வரை ஒரே இடத்தில்நம்பவே நம்ப முடியவில்லை என்றும்வானளவு உயர்ந்து நிற்கிறது தமிழ்நாடு மருத்துவத் துறை என்றும் வியப்பின் உச்சியில் மயக்கம் போடாத குறையாக வாயைப் பிளக்கிறது குஜராத்தில் இருந்து வந்துள்ள மருத்துவர் குழுபிரதமர் மாநிலம் மாநிலமாக சென்று தமிழ்நாடு குறித்து கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கிறார் பிரதமர்பிரியத்திற்குரிய முதல்வர் அவர்களேதேர்தலின்போது குஜராத் செல்லுங்கள்குழந்தைகளுக்கான காலை உணவுமகளிருக்கு கட்டணமில்லா பேருந்துகுடும்பத் தலைவிகளுக்கான உரிமைத் தொகைநமது மருத்துவக் கட்டமைப்புகல்விக் கட்டமைப்புஇந்து அறநிலையத்துறை செயல்பாடுஇங்குள்ள அன்பின் ஈரம்அனைத்தையும் எடுத்து வையுங்கள்பிரசுரங்களை கொண்டு செல்லுங்கள்குஜராத் முதலாளிகள் வளர்ந்து கொண்டே இருக்க மக்கள் தேய்வதை எடுத்துச் சொல்லுங்கள்அதற்கு காரணமான பாஜகவை அம்பலப் படுத்துங்கள்விடக்கூடாது ஸ்டாலின் சார்நன்றிஅன்புடன்,இரா.எட்வின்09.10.2023#கடிதம்edn
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 09, 2023 22:26

October 7, 2023

நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம்

 “எங்கு சென்றாலும் தமிழ்நாட்டை மறக்க முடியாதவராகவே பிரதமர் இருக்கிறார்”

என்று அவருக்கே உரிய தொனியில் நக்கல் செய்திருக்கிறார் முதல்வர்

நக்கல்தான் என்றாலும் அதற்குள் குழைந்து கிடக்கும் கோவத்தின் வெப்பத்தை தமிழ் மக்கள் உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள்

இன்னும் சரியாக சொல்வதெனில்,

அவரது கோவம் குழைந்த பகடிக்கு நான் உள்ளிட்ட தமிழர்கள் ரசிகர்களாக மாறிக் கொண்டிருக்கிறோம்

அவர் 

இன்னும் உக்கிரமாக

இன்னும் பேரதிக நக்கலைக் குழைத்து

பிரதமரை எதிர்கொள்ள வேண்டும் என்பது

நான் உள்ளிட்ட தமிழ் மக்களின் நேயர் விருப்பம் 

தமிழ் மண்ணில் உள்ள “இந்து அறநிலையத் துறை” குறித்து ஏதும் அறியாதவராக

கிட்டத்தட்ட அண்ணாமலைக்கும் திரு H.ராஜா அளவிற்கும் இறங்கி பிரதமர் பேசுவது

அவர் நமக்கும் பிரதமர் என்பதால் கொஞ்சம் வலியைக் கொடுக்கிறது

அசிங்கமாக இருக்கிறது

தெற்குப் பகுதியில் மக்கள் அசிங்கமாகத்தான் இதைப் பார்ப்பார்கள் என்பது அவருக்கும் தெரியும்

பிறகு ஏன் அசிங்கப்படுகிறோம் என்று தெரிந்தும் இப்படி பேசுகிறார்?

இது வடக்கிற்கான அவரது பிரச்சார யுக்தி

தெற்கில் இது பொய் என்று புலப்படுவது மாதிரி வடக்கில் புலப்படாது என்பது அவருக்குத் தெரியும்

கோவிலை திமுக ஆட்டையப் போடுகிறது என்று சொன்னால் தெற்கில் சிரிப்பார்கள்

அடப் போயா என்று நக்கலிப்பார்கள்

ஆனால் வடக்கில் அப்படியா என்று வியப்பார்கள்

அப்படியாகவே அவர்களை படாத பாடுபட்டு பாதுகாத்து வருகிறார்கள்

அவர்களிடம்

எங்களை விட்டால் உங்கள் கோவிலுக்கு பாதுகாப்பில்லை என்கிறார்

ஆகவே எங்களைத்தான் நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிறார்

இந்தியாவை வெற்றி கொள்ளாமல் மாநிலத்தை மட்டும் வென்றால் அவர்கள் 

ரவியை அனுப்புவார்கள்

தமிழிசையை அனுப்புவார்கள்

பெரியாரை

அம்பேத்காரை

வைகுந்தரை

நாராயண குருவை 

அவர்களுடைய பாஷையில் அவர்களிடம் கொண்டுபோக வேண்டும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 23:48

ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக



 அக்ரானி பத்திரிக்கையில் 1945 ஆண்டு வெளி வந்த கார்டூன் படத்தை தோழர் ஷாஜி (Shahjahan R) தனது முகநூல் பக்கத்தில் வைத்திருக்கிறார்




அவரே அந்தப் பகுதியில் எழுதியிருப்பதுபோல அது ”இந்துராஷ்ட்ரா” வாக மாறுகிறது”அக்ரானி” தடை செய்யப்பட்டதுதான் காரணம்01.11.1947 அன்று நடைபெற்ற இந்துராஷ்ட்ரா இதழின் பங்குதாரர்களின் கூட்டத்தில் கோட்சே பேசியதை தோழர் அருணன் தனது “கோட்சேயின் குருமார்கள்” என்ற நூலின் 11 ஆம் பக்கத்தில் தருகிறார்கோட்சே பேசுகிறான்“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியும் என்று காந்தி கூறினார். இந்தியா பிளக்கப் பட்டு விட்டது. காந்தி இன்னும் உயிரோடுதான் இருக்கிறார்”அதன் பிறகு 100 நாட்களுக்குள் கோட்சே காந்தியைக் கொன்றான்இப்போது ராகுலையும் ராவணனாக பாஜக சித்தரித்திருப்பதாக கேள்விப்படுகிறேன்


ராகுலை காந்தி அளவிற்கு உயரிய அளவில் சமமாக வைத்துப் பார்க்கிறதா என்று தெரியவில்லைஆனால் ஒன்று சொல்ல வேண்டும்ராகுல் கவனமாக இருக்க வேண்டும்ஒன்று சொல்லி முடிக்கலாம்ராகுலைப் பார்த்து பயப்பட ஆரம்பித்துவிட்டது பாஜக
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 07, 2023 09:57

October 5, 2023

அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில்

 


அன்பின் முதல்வர் அவர்களுக்கு,

வணக்கம்

“வள்ளலார் 200” நிகழ்வில் உங்களது உரையைக் கேட்டேன்




அதில் இருந்தே இந்தக் கடிதத்தைத் துவங்கிவிடலாம் என்றே கருதுகிறேன்

முதலில் உங்களது அந்த உரை குறித்து ஒன்று சொல்லிவிட வேண்டும்

அந்த உரையில் உங்களது செழுமையான ஹோம் ஒர்க்கைக் காணா முடிகிறது

வழக்கமாக உங்களது உரையை கிண்டலடிப்பவர்களுக்கு

அடிகளாரின்24 வது பாடலான

“சாதியயிலே                                                                                                                                    மதங்களிலே                                                                                                                                              சாத்திரச் சந்தடிகளிலே                                                                                                                     கோத்திரச் சண்டையிலே”

என்பதை அச்சுப் பிசகாமல் நீங்கள் கூரியது உங்கள் எதிரிகளுக்கு  ஆச்சரியத்தையும் எரிச்சலையும் தந்திருக்கக் கூடும்

எங்களுக்கு ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் தந்தது

நீங்கள் சொன்னதுதான்

தமிழ்நாட்டுக்காரர்கள் பெரியாரையும் எடுக்கிறார்கள் வள்ளலாரையும் எடுக்கிறார்கள் என்பதுதான் நமது எதிரிகளுக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது

அந்த உரையின் ஓரிடத்தில்

எந்த மாநிலத்திற்குப் போனாலும் பிரதமர் தமிழ்நாடு குறித்தே பேசுகிறார் என்று கூறினீர்கள்

ஆமாம் சார்,

தமிழ்நாடு பிரதமரை தூங்க விடாமல் தொந்தரவு செய்து கொண்டே இருக்கிறது என்பதுதான் உண்மை

ஒரு மாநிலத்தில் உரையாற்றும்போது இன்னொரு மாநிலத்தைக் குறித்து பிரதமர் விமர்சிப்பது சரியல்ல என்று மிகச் சரியாக சொன்னீர்கள்

இந்த இடத்தைதான் இந்தக் கடிதத்திற்கான சரியான இடமாக நான் பார்க்கிறேன்

அவர் இந்தியா முழுமைக்கும் பிரதமர் என்பதை அவர் உணராத போதும் அவர்தான் நமக்கும் பிரதமர் என்பதை தமிழ்நாடு உணர்ந்தே இருக்கிறது

நமக்கும் பிரதமரான அவரே பிற மாநிலத்தில் நிற்கும்போது நம்மை விமர்சிப்பது தவறு

அதுவும் தப்புத் தப்பாக விமர்சிப்பது என்பது பெருந்தவறு

அப்படி இருக்க,

உத்திரப் பிரதேசத்தில் இருந்து 

அந்த மாநிலத்தின் தற்போதைய முதல்வரின் படத்தினை அட்டைப் படமாகக் கொண்ட இரண்டு புத்தகங்கள் நமது பள்ளிகளுக்கு அனுப்பப் படுகின்றன

ஒரு கடிதமும் இருக்கிறது

அனைத்தும் இந்தியில்

அந்தக் கடிதத்தை கூகிலில் வைத்து மொழி பெயர்த்தால்

யோகி

பெண்களுக்காக,

விவசாயிகளுக்காக

இளைஞர்களுக்காக

புவிசார்ந்த சகிப்புத் தன்மைக்காக

பாடுபட்டு வருகிறார் என்று இருக்கிறது

இவை எல்லாம் பொய் என்பது ஒரு புறம் இருக்கட்டும்

அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன?

அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்

இரண்டு அய்யங்கள் எம் அன்பிற்குரிய முதல்வர் அவர்களே

ஒன்று யோகி இப்போதோ அடுத்தோ பிரதமர் வேட்பாளராக நிற்கக் கூடும் 

அதற்கான தயாரிப்பாகவும் இருக்கக் கூடும்

அல்லது,

தமிழ்நாட்டில் மதக் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகவும் இருக்கக் கூடும்

இவை இரண்டும் யூகம்தான்

வெறுமனே யோகியை இந்திரன் சந்திரன் என்றுகூட இருக்கலாம்

இருந்துவிட்டு போகட்டும்

அதை ஏன் நமக்கு அனுப்ப வேண்டும்

இவை இந்தியில் இருப்பதை

வெறும் திணிப்பாகவும் கொள்ளலாம்

இந்தியில் அனுப்பினால் யார் படிப்பார்கள். கிறுக்குத் தனம் என்று அலட்சியமாகவும் தள்ளலாம்

வாலி சிஹாவிற்கு தந்தை அம்பேத்கர் எழுதிய கடிதத்தில்

”பிக்குகள் மக்களின் மொழியை அறிந்திருக்க வில்லை”

என்று குறிப்பிடுவார்

இவர்கள் நம் மொழியில் அனுப்பாமல் இந்தியில் அனுப்புவதைக் கூட மொழி அரசியலாகவே நான் பார்க்கிறேன்

அனைவருக்கும் இது புரிந்துவிடக் கூடாது என்பதில் இவர்கள் தெளிவாக இருக்கிறார்கள்

அனைவரும் படித்துவிட்டால் கொந்தளிப்பு கிளம்பும் என்பதை அவர்கள் அறிந்தே இருக்கிறார்கள்

அவர்கள் அனுதாபிகள் 10 பேருக்குப் போனால் போதும்

அவர்கள் தேடுவார்கள்

தொடர்பு கொள்வார்கள்

அவர்களை அடையாளம் கண்டு அணிதிரட்டலாம் என்ற ஏற்பாடாகவே இதை நான் அய்யுறுகிறேன்

தொடர்ந்து கத்திக் கொண்டே இருக்கிறேன் சார்

கத்திக் கொண்டும் இருப்பேன் ஸ்டாலின் சார்

நன்றி, 

அன்புடன்,                                                               

இரா.எட்வின்                                                             

06.10.2023


                

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 05, 2023 19:46

October 4, 2023

தைரியமாக சாகலாம்

 

அன்பின் முதல்வர் அவர்களுக்கு,வணக்கம்சத்தமே இல்லாமல்,எந்தவிதமான விளம்பரமும் இல்லாமல் நீங்கள் செய்திருக்கும் ஒரு விஷயம் குறித்து நெகிழ்ந்து போயிருக்கிறேன்சென்னை சைதை பகுதியில் உள்ள 150 பெண்களுக்கு நாளை நீங்கள் ஆட்டோ வழங்க இருக்கிறீர்கள் தீவுத் திடலில் நிகழ்ச்சிஆட்டோவிற்காக ஒரு லட்சம் ரூபாய் மான்யம்மீதித் தொகை வங்கிக் கடன்அதிலும் இரண்டு தவனைகளை பஜாஜிடமே வாங்கி அந்தத் தொகையை நாளை பயனாளிகளிடம் வழங்குகிறீர்கள்இவை எல்லாம்கூட சாதாரணம்தான்பயானாளிகளுக்கு ஆட்டோ ஓட்ட கற்றுக் கொடுப்பதற்கு அமைச்சர் மா.சு அவர்கள் ஏற்பாடு செய்கிறார்பயிற்சி கொடுத்து லைசென்ஸ் பெற்று பேச் வாங்குவதற்கான தொகையையும் அமைச்சர் ஏற்பாடு செய்கிறார்பயனாளிகள் சிலர் பயிற்சி பெறுவதை நான் பார்க்க வாய்த்ததுபயிற்சி கொடுப்பபவர்களுள் ஒருவரான புஷ்பராஜ் என் தோழர்அவரது இணையர் அஞ்சலியும் ஒருவர்நேற்று சென்னை வந்திருந்த என்னை அழைத்துக் கொண்உ போகும்போதுதான் பயனாளிகளுக்கான பேச் வாங்கினார்


இதிலும் தவறுகள் நிகழ வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்ல இயலாதுதானே பயன்படுத்தாமல் வாடகைக்கு விடக்கூடும்கணவன்மார்கள் ஓட்டக்கூடும்ஆனாலும் இவற்றைக்கூட தவறென்று சொல்ல முடியாதுபுஷ்பராஜ் சொன்னார்,”இனி அஞ்சலி என்னை எதிர்பார்த்து இருக்கத் தேவையில்லை தோழர்நான் இல்லாவிட்டாலும் சமாளிச்சிடுவாங்கதைரியமாக சாகலாம்”இந்த வார்த்தைகளுக்குப் பின்னால் உள்ள நம்பிக்கையை எந்த டிக்‌ஷனரியிலும் தேட இயலாதுநமக்குப் பின்னால் குடும்பம் என்ன ஆகுமோ என்ற பயம் இருக்கிறது பாருங்கள்அது மிக மிகக் கொடுமையானதுஅந்தக் கொடுமையான பயத்தைப் போக்கி ஒரு 150 குடும்பங்களில் நாளை நிம்மதியை விதைக்கிறீர்கள்நெகிழ்ந்து உங்கள் கைகளைப் பற்றிக் கொள்கிறேன்மகிழ்ந்திருங்க சார்மிக்க நன்றிஅன்புடன், இரா.எட்வின்04.10.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 04, 2023 07:01

September 29, 2023

ஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்

 


அன்பின் முதல்வர் அவர்களுக்கு,வணக்கம்இது விஷயமாக மூன்றாவது முறையாக நான் உங்களுக்கு எழுதும் கடிதம்இதற்கு முன்னர் இதுகுறித்து நான் எழுதிய இரண்டு கடிதங்களும் உங்களை வந்து சேர்ந்திருக்க வாய்ப்பில்லைசேர்ந்திருந்தால்இதுகுறித்து நிச்சயமாக நீங்கள் வினையாற்றி இருப்பீர்கள் என்பது உங்கள்மீதான என்னுடைய மலைபோன்ற நம்பிக்கைநான் எழுதுவது உங்களை வந்து சேர்கிறதா?நீங்கள் இது விஷயத்தில் வினையாற்றி இருக்கிறீர்களாஎதையும் அறிந்துகொள்கிற பின்புலம் எனக்கு இல்லைஆனாலும்போய் சேர்ந்துவிடாதா?ஏதேனும் நிகழ்ந்து விடாதா? என்ற எதிர்பார்ப்பில் ஒரு லூசு மாதிரி எழுதிக் கொண்டே இருக்கிறேன்எழுதிக் கொண்டே இருப்பேன்இந்த மாதிரி லூசுகளால்தான் பூமி இயங்குகிறது என்று எண்ணியபடி என்னை சமாதானம் செய்து கொள்கிறேன்இரண்டு விஷயங்கள்உத்திரப் பிரதேசத்தில் குரா என்றொரு கிராமம் ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ளதுஅந்தக் கிராமத்தில் 17.09.2023 அன்று தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டுள்ளது150 பேர் கலந்து கொண்டிருக்கிறார்கள்அமர்சிங், மருத்துவர் சுரேஷ், அவதேஷ், மற்றுமசோக் வித்யார்த்தி ஆகியோர் தந்தை பெரியார் குறித்து உரையாற்றி உள்ளார்கள்குழந்தைகளுக்கு இனிப்பும் பேனா மற்றும் நோட்டுப் புத்தகங்களும் வழங்கப்பட்டிருக்கிறதுஅப்போது எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகி உள்ளதுஎரிச்சலடைந்த யோகி அரசுபெரியார் பிறந்த நாளன்று உரையாற்ரிய அந்த நால்வர் மீதும் 295, 153 ஏ, ஆகிய பிரிவுகளின் மேல் வழக்குப் பதிந்துள்ளது என்ற தகவலை 27.09.2023 நாளிட்ட தீக்கதிர் தெரிவிக்கிறதுதந்தை பெரியாரின் பிறந்தநாள் விழாவில் அவர் குறித்து உரையாற்றுவதே தவறென்று உரையாற்றியவர்கள் மீது வழக்குப் போடுகிறது யோகி அரசுஅதே உத்திரப் பிரதேசத்தில் இருந்துஉங்கள் ஆளுகைக்கு உட்பட்ட நமது பள்ளிகளுக்கு திரு யோகி ஆதித்தியநாத் அவர்களின் புகைப்படங்களை அட்டைப்படங்களாகக் கொண்ட இரண்டு நூல்கள் அனுப்பப்பட்டு வருகின்றன


இப்போது அந்தப் புத்தகங்களோடு சேர்த்து அனுப்பப்பட்டுள்ள இந்தியில் எழுதப்பட்டுள்ள கடிதமும் நமக்கு கிடைத்திருக்கிறது


அந்தக் கடிதத்தை கூகுலில் போட்டு தமிழ்ப்படுத்தினால் இப்படி வருகிறது


யோகி அவர்களின் சிறப்பான நிர்வாகத்தினால் உத்திரப் பிரதேசம் மிகச் சிறப்பாக முன்னேறி வருவதாகவும்அனைத்து மக்களின் வளர்ச்சிக்காகப் பாடுபடும் யோகியின்மீது மக்கள் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்திருப்பதாகவும்அனைத்து மக்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் அவருக்கு இருப்பதாகவும்பெண்கள், விவசாயிகள், மற்றும் இளைஞர்களின் நலனுக்காக அவர் பாடுபடுவதாகவும்கலாச்சார ஒற்றுமைக்காக அவர் பாடுபடுவதாகவும்பெண்களுக்காகவும் விவசாயிகளுக்காகவும் அவர் தனது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டுள்ளதாகவும்அவரது சித்தனைத் தெறிப்புகளும் உரைகளுமே அந்த நூல்கள் என்று அந்தக் கடிதத்தின்வழி நம்மால் அறிய முடிகிறதுஇவை அனைத்துமே பொய்பன்முகத் தன்மைக்கும் இவருக்கும் சம்பந்தமே இல்லைஅதற்கு எதிராகக் களமாடுபவர் இவர்வீரஞ்செறிந்த போராட்டத்தை விவசாயிகள் நடத்தியபோது எவ்வளவு வன்மமாக அதை இவர் எதிர்கொண்ஆர் என்பதையும் நாம் அறிவோம் பெண்கள் குறித்தான இவரது பார்வை எவ்வளவு கேவலமானது என்பதையும் நாம் அறிவோம் என்பதெல்லாம் ஒன்றுஇவற்றை ஏன் நமக்கு அனுப்புகிறார்கள்?இவை அத்துமீறல் அல்லவா? என்பது இரண்டுஏதாவது செய்யுங்கள் ஸ்டாலின் சார்மிக்க நன்றிஅன்புடன்,இரா,எட்வின்29.09.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2023 07:26

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.