இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 48

December 18, 2023

அடுத்தும் மழை வரும் அடுத்தும் வீட்டிற்குள் தண்ணீர் வரும்

 


எல்லா இடங்களுக்கும் இது பொருந்தும் என்றாலும்தெற்கே கொஞ்சம் கூடுதலாகப் பொருந்துகிறதுசாலை போட்டால்தான் கமிஷன் வரும் என்பதற்காகசாலை மேலே சாலை என்று போட்டுக் கொண்டே போகிறார்கள்ஒரு கட்டத்தில் மொட்டைமாடி உயரத்திற்கு சாலை வந்து விடுகிறதுமழை பெய்தால் தண்ணீர் வீட்டுகளுக்குள் வருவதற்கு இது ஒரு பெருங்காரணம்10 டன் ஜல்லி, மணல் தார் போட்டால்10 டன் பெயர்த்தெடுக்க வேண்டும் என்பது சட்டம்மழை நின்றதும்திரண்டு இதைக் கேட்க வேண்டும்இல்லாது போனால்அடுத்தும் மழை வரும்அடுத்தும் வீட்டிற்குள் தண்ணீர் வரும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2023 17:04

இரண்டுப் பேரிடர்கள் இரண்டு ஆட்சியர்கள்

 

இந்த நேரத்தில் இரண்டு பேரிடர்களையும் இரண்டு மாவட்ட ஆட்சித் தலைவர்களை அந்தந்தப் பேரிடர் காலத்து அவர்களது செயல்பாடுகளுக்காக நினைக்கவும் வணங்கவும் கடமைப் பட்டிருக்கிறோம்ஒரு பேரிடர் சுனாமிஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் சுனாமியின்போது நாகையின் அப்போதைய மாவட்ட ஆட்சித் தலைவரான திரு ராதாகிருஷ்ணன்அப்போது சுனாமிக்கு தங்களது அனைத்துக் குழந்தைகளையும் சில தாய்மார்கள் பறிகொடுத்து இருந்தனர் அவர்களில் சிலர் குடும்பக் கட்டுப்பாடு அறுவை செய்திருந்தனர் அவர்களை அன்போடு அரவணைத்து ஆறுதல் சொன்னதோடு அவர்களுக்கு மறு அறுவை செய்து மீண்டும் அவர்களுக்கு குழந்தைப் பேறு கிடைக்கச் செய்தவர் திரு ராதாகிருஷ்ணன்இப்போது தெந்தமிழ்நாட்டின் பேய்மழைப் பேரிடர்திருநெல்வேலி மாவட்ட ஆட்சித் தலைவர் தனது மாவட்டத்தில் மகப்பேற்றிற்காக காத்திருக்கும் தாய்மார்களை அடையாளம் கண்டுஅவர்களை இப்போதே மருத்துவ மனைகளில் சேர்த்து பாதுகாத்திருக்கிறார்இந்த இரண்டு செயல்களையும் நிர்வாக ரீதியாக குறிப்பிட வேண்டுமெனில் சிறப்பான பேரிடர் மேலாண்மை என்று குறிப்பிடலாம்ஆனால் இவை இரண்டு செயல்களும் எந்தப் பெயருக்குள்ளும் பொருந்தாத மேன்மையானவை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2023 16:56

November 17, 2023

இதை எழுதுகிறபோது கரிகாலனுக்கு 20 வயது

 

நாமொன்று எழுதியிருப்போம்நமது பிள்ளைகளும் அதுகுறித்து எழுதுவார்கள்நம் குழந்தைகள் எழுதுவது தனது வீரியத்தால் நம்முடைய படைப்பைசின்னதாக்கும்அல்லதுஇல்லாமல் செய்யும்இரண்டில் எது நடந்தாலும்எழுதிய கிழவன் அதைக் கொண்டாட வேண்டும்தன்னிலும் தன் பிள்ளை வீரியமானவன் அல்லது வீரியமானவள் என்ற உண்மை தரும் மகிழ்ச்சிக் கொண்டாட்டம் அதுநம் தலைமுறையைவிட அடுத்த தலைமுறை பேரதிக விஷயத்தோடும் வீரியத்தோடும் இருக்கிறார்கள்நிச்சயம் விடியும் என்ற நம்பிக்கை தரும் கொண்டாட்டமாக இருக்க வேண்டும் அதுஅப்படியான ஒரு மகிழ்வு எனக்கும் வாய்த்திருக்கிறது“காக்கையும்குருவியும்எங்கள் சாதியும்எங்கள் சாதி”என்று ஒருமுறை எழுதினேன்ஏதோ பெரிதாய் எழுதிவிட்டாதாய் எனக்குள் இருந்த இருமாப்பை பிள்ளை Karikalan Kiru வின்“காக்கை குருவிஎங்கள் சாதிஇளவரசன்தலித் சாதி”என்ற கவிதைஎவ்வளவு நுட்பம். எவ்வளவு துல்லியம்இதை எழுதுகிறபோது கரிகாலனுக்கு 20 வயதுஅதை எழுதுகிறபோது எனக்கு வயது 5050 வயதுக் கிழவனை 20 வயதுக் குழந்தை ஒலி கொடுக்காமல் வழிபெற்று முந்துகிறான்இவன் 50 வயதில் காலம் தரும் அனுபவம் கொண்டு எப்படி எல்லாம் எழுதுவான்இந்தக் கவிதையை இவன் எழுதியபோதே அறிவுமதி அழைத்துப் பாராட்டி இருப்பதும் கொள்ளத் தக்கதுஎழுத்தைப் படித்தால்தான் நமக்கு பாராட்ட வரும்எழுதுவான் இவன் என்றுணர்ந்த மாத்திரத்திலேயே கொண்டாடும் நண்பன் மதிமைக்கும் வேண்டும் பேனாவும் வேண்டும் கரிகாலன்கரிகாலனுக்கும் மதிக்கும் முத்தம்All
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2023 22:43

தங்கிவிட்டுத்தான் போயேன்

 

காலையில் படித்த இந்தக் கவிதை திரும்பத் திரும்ப காதைப் பிடித்துத் திருகிக் கொண்டேயிருக்கிறதுவெறுமையின் வலியை எவ்வளவு அழகாக, சுகமாக..யார் எழுதியதென்று மறந்துபோனதுஇப்போதுதான் பிடிக்க முடிந்தது"கொஞ்சம் தங்கிவிட்டுத்தான் போயேன் என்னிடம் நானே இருந்து இருந்து அலுத்துவிட்டது"முத்தம் Suresh Suriya
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 17, 2023 22:41

November 9, 2023

எங்கள் மாவட்டத்தில், எங்களது கட்சியில், இன்னுமொரு எழுத்தாளர்

 

வசந்திஇவரிடமிருந்து நட்பழைப்பு வந்திருந்ததுயார் என உள்ளே போய்ப் பார்த்தால்பெரம்பலூர்இன்னும் உள்ளே போகிறேன்கட்சிக்காரர்பதிவுகளைப் பார்க்கிறேன்எளம்பலூரில் கல்விக்கடன் பெற்று ஒரு குழந்தை படும் அவஸ்தையை, அவமானத்தை ஒரு பதிவு சொல்கிறதுஇழவு வீடுகளில் செத்தவனுக்காக அழுவதா?இல்லை அடக்கம் செய்ய காசற்று இருக்கும் கையறு நிலையை நினைத்து அழுவதா?என்று அந்த ஏழையின் வலியைக் கடத்தும் இவருக்குமாலைக்கு பதில் காசைக் கொடுங்கப்பாஎன்று தீர்வு சொல்லவும் தெரிகிறதுபூ விற்றால் படிக்கலாம் என்று பூ விற்கும் குழந்தை அசதியில் தூங்கிவிடுவதாக ஒரு பதிவுதனது தந்தை இறந்த பொழுதுஅவரைக் காப்பாற்ற முயன்ற தன்னோடு உடன் இருந்தவர்களைநன்றியோடு பதிய வருகிறதுஎப்படி இவரை இவ்வளவு காலம் மிஸ் செய்தேன்எங்கள் மாவட்டத்தில்,எங்களது கட்சியில்இன்னுமொரு எழுத்தாளர்எழுதுங்க வசந்திநூலாக்கி விடலாம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2023 21:30

November 7, 2023

மொழியைச் சிக்கெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்

 

பாடப் புத்தகத் தயாரிப்பு குறித்து ஓரளவு தெரியும்அதற்காக ஆசிரியர்களைக் கொண்டு வருவதுஒவ்வொரு கட்டத்திலும் அவர்களை பில்டர் செய்வதுஎழுதி வாங்குவதுமெய்த் தன்மையை சரி பார்ப்பதுகுழந்தைகளுக்கான மொழிக்கு நெருக்கமான மொழியில் தர முயற்சிப்பதுபடங்களை நேட்டிவிட்டியோடு தர முயற்சிப்பதுஆக்டிவிட்டிஸ் என்று அதில் உள்ள சிக்கல்கள் ஓரளவு புரியும்ஆசிரியர்களைக் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் தனிக் கட்டுரைக்கு உரியவைஇத்தோடு இன்னொரு விசயத்தை நானும் Shajahan னும் உதயசந்திரன் சாரிடம் பல முறை சொல்லி இருக்கிறோம்உருவாக்கிய புத்தகங்களை வாசித்துக் கொண்டே இருக்க வேண்டும்ஆசிரியர்கள் மட்டுமல்லஅனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாக இந்தக் குழுக்கள் அமைய வேண்டும்பிழைகளை சரி செய்ய வேண்டும்மொழியைச் சிக்கெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும்படங்களை ஆக்டிவிடிகளை அப்டேட் செய்ய வேண்டும்இன்று பிழைகள் இருப்பதை சுட்டி சரி செய்யக் கோரி இருக்கிறார் மகா ( "ர்" கு Maha Lakshmi மன்னிக்க வேண்டும்)
தோழர் Natarajan Sivaguru அவர்களும் தொடர்ந்து இந்தக் கோரிக்கையோடே இருக்கிறார்வழிமொழிகிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2023 22:31

குறைந்த பட்சம் லெவியக் கூட்டி விடுவோமா

 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அறுபதாவது ஆண்டு துவக்க விழாவை ஒட்டி மண்டலங்கள் மட்டத்தில் கருத்தரங்குகளை நடத்தியதுஅதில் ஒரு மண்டல கருத்தரங்கிற்கு பெரம்பலூர் பொறுப்பேற்கிறது05.11.2023 மாலை 05 மணிபெரம்,பலூர் அகிலா மஹால் மூன்று மணியில் இருந்தே தோழர்கள் வரத் தொடங்கி விட்டார்கள்இந்தக் கருத்தரங்கு என்னுள் ஏற்படுத்திய நான்கு அலைகளை அடுத்தடுத்த பதிவுகளில் வைத்து இணைத்து கட்டுரையாக்கிவிட வேண்டும்1) கலந்துகொண்ட தோழர்களின் உணர்வுப் பூர்வமான உற்சாகம், அது என்னுள் கொண்டுவந்த மாற்றம்2) மார்சிஸ்ட் கட்சி தோற்றுவிப்பதற்கான தேவை குறித்த தோழர் மாலியின் உரை3) என்னை என்னென்னவோ செய்த இரா.சிந்தனின் உரை 4) மிகச் செறிவான தோழர் பி.சண்முகத்தின் உரைஆண்களும் பெண்களுமாக தோழர்கள் மேடை ஏறி மேடையில் வைக்கப்பட்டுள்ள பெரிய ப்ளக்ஸ் முன்னால் நின்று செல்பி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்சிலர் யாரையாவது அழைத்து செல்லைக் கொடுத்து தங்களைப் படம் எடுக்கச் சொல்கிறார்கள்


இது வழக்கமாக எல்லா நிகழ்வுகளிலும் நடப்பதுதான்ஆனால் அந்த உணர்வுக் கலவையில் நான் முதல் முறையாகக் கரையத் தொடங்கியது அன்றுதான்அப்படி படம் எடுத்துக் கொண்டு இறங்கி வந்த தோழரிடம், (அவர் மாவட்ட செயற்குழு உறுப்பினர்)தோழர் காப்பியன்,ஏதோ கல்யாணத்துல போட்டோ எடுக்கற மாதிரி எடுக்கறீங்க தோழர் என்று கேட்டதும்ஆமாந்தோழர்,இதுதான் எங்க விஷேசமே. எங்க வீட்டுல இவ்வளவு க்ராண்டால்லாம் விழா நடத்த முடியாது தோழர் என்கிறார்சன்னமாக கண்கள் உடைகின்றனஅந்த நேரம் பார்த்து தோழர் சுதா அழைத்து நிகழ்ச்சி ஆரம்பிக்கலையா இன்னும் என்று கேட்கவேநான் அந்தத் தோழர் சொன்னதை சொல்கிறேன்குரலும் உடைந்திருக்கிறதுஅவரும் உடைகிறார்நமக்கு அவசியம் என்பது பல முழுநேர ஊழியர்களுக்கு ஆடம்பரச் செலவுதான் போலப்பாஎன்ன சுதா இதுஏதாவது செய்யனுமே தோழர்ஒன்னு செய்யலாம் என்று அவர் முடிப்பதற்குள்குறைந்த பட்சம் லெவியக் கூட்டி விடுவோமாசெய்வோம் தோழர்இது மட்டும் தீர்வல்ல என்பது தெரியும். நாம் சம்பாரிப்பதில் கட்சிக்கானதை அநியாயத்திற்கு ஆட்டையப் போடுகிறோம் என்ற உறுத்தலில் இருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ள வேண்டும்அடுத்த மாதத்தில் இருந்து 500 ரூபாய் சேர்த்துடனும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 07, 2023 06:10

November 6, 2023

”தேன்சிட்டு”

 

”தேன்சிட்டு” வந்திருக்கிறது



இது ஆறு முதல் ஒன்பதாம் வகுப்புவரை படிக்கும் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கான இதழ்அட்டை முதல் அட்டைவரை அந்தக் குழந்தைகளே படைப்பாளிகள்இந்த இதழில்,பின் பக்கத்தில் 61 குழந்தைப் படைப்பாளிகளின் படங்களோடு வந்திருக்கிறது


புதுச்சாம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு குழந்தை இளமதி ஸ்டேப்ளர் குறித்து எழுதிய பதிவுஅந்தக் குழந்தை அளவில் அதை கட்டுரை என்றுதான் கொள்ள வேண்டும்அந்தக் கட்டுரை குறிப்பிடத்தக்கதுஅதிலும் ஸ்டேப்ளர் என்பதற்கு ”பிணைப்பி” என்று தமிழ்ப்படுத்தி இருக்கிறாள்அந்தக் குழந்தையை வாரி அணைத்துக் கொள்கிறேன்“பிணைப்பான்” என்று வைக்காமல் “பிணைப்பி” என்று பெயர் வைத்ததன் மூலம் ஸ்டேப்ளரை பெண்பாலாக்கி இருக்கிறாள்தரணீஸ்வரியின் தனது ஊரான “உமரிக்காடு” குறித்த கட்டுரையும் மிக மிக அற்புதமானதுவாசித்ததில் பிடித்தது, நூல் அறிமுகம், தகவல்கள் என்று நிரம்பி வழிகிறதுமாதா மாதம் கிட்டத்தட்ட 120 படைப்பாளிகளை உருவாக்குவது என்பது ஆச்சரியம்தமிழ்நாடு அரசின் ஆச்சரியங்களில் “தேன்சிட்டு” முக்கியமானதுபின்பக்கத்தில் குழந்தைகளின் பெயர் மற்றும் முகவரிகளோடும் வைத்தால் இன்னும் சிறக்கு
All reactio
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2023 20:21

November 5, 2023

இன்னொன்று தெரியுமா ரஞ்சனா

 

திமிறோடும், நெஞ்சுரத்தோடும் உறுதியாக பாரதியை வழிமொழிகிறேன்,கல்வி சிறந்த தமிழ்நாடு வெறுமனே சொல்லவில்லையாரோடும் இதுகுறித்து உரையாடவும் சித்தமாகவே இருக்கிறேன்இது சாத்தியப்பட்டதற்கான பல காரணங்களுள்பள்ளிக் குழந்தைகளுக்கான கட்டணமில்லா பேருந்து வசதி மிக முக்கியமானதுஇது சாத்தியப்பட்டதற்கான முக்கிய காரணங்களுள் முதன்மையானது அரசிடம் பேருந்து இருந்ததுஎத்தனைபேர் அப்போது என்னைப் போலவே கத்தினார்கள் என்று தெரியாதுஜெயலலிதா அவர்கள் பள்ளி நேரத்தை 9 மணிக்கு மாற்றியபோதுஇது மோசமான விளைவுகளைத் தரும் என்று கத்தினேன்ஏன் ஆசிரியர்கள் ஒருமணி நேரம் முன்னதாக வர மாட்டீர்களோ என்று எமது குரலின் ஆன்மாவைக் கொச்சைப் படுத்தினார்கள்பிரச்சினை வேறு தளத்தில் இருந்து வரும் என்று நாம் எதிர்பார்த்ததைப் போலவே வந்ததுமாணவர்களின் வருகை பாதித்ததுகாரணம்குழந்தைகளின் பள்ளி நேரத்தைப் பொறுத்து முன்னர் வந்து கொண்டிருந்த பேருந்துகளின் நேரம் மாற்றப்படவில்லைபேருந்து இல்லாத காரணத்தால் குழந்தைகளால் வர முடியவில்லைஇப்படி கல்வி பாதிக்கப்பட்ட குழந்தைகளில் பெரும்பகுதி யார் என்பது புரியும்நேரடியாகக் கல்வி இல்லை என்று சொன்னால் மக்கள் எழுவார்கள்பள்ளிக்கு வர முடியாத நிலையை செய்துவிட்டல்...என்று சூது இருந்திருக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் கூறுவதற்கு இல்லைஆக,கல்வி சிறந்த தமிழ்நாடகவே இருக்க வேண்டும் எனில் குழந்தைகளுக்கு கட்டணமில்லாத பேருந்து அவசியம்அதற்கு,பேருந்து அரசிடம் இருக்க வேண்டும்இரண்டு நட்களுக்கு முன்புகுழந்தைகளும் இளைஞர்களும் தொங்கிக் கொண்டு சென்ற பேருந்தை மடக்கி ரஞ்சனா என்ற பெண்மாணவர்களைத் தாக்கி இருக்கிறர்ஓட்டுனரையும் நடத்துனரையும் அசிங்கமாக பேசி இருக்கிறார்கைதும் செய்யப்பட்டிருக்கிறார்கொஞ்சம் குசும்பும் குழந்தைகளிடம் உண்டுஇல்லை என்று மறுப்பதற்கு இல்லைஏன் குழந்தைகள் தொங்க வேண்டும்?பேருந்தில் இடம் இல்லைஏன் இடம் இல்லை?பேருந்துகள் போதவில்லை?பள்ளி கல்லூரி நேர்த்தில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டிய தேவை இருக்கிற நேரத்தில்இயங்கிக் கொண்டிருக்கிற பேருந்துகளையும் குறைக்கிறோம்ரஞ்சனாவோ அவரது அமைப்போ என்ன செய்திருக்க வேண்டும்கூடுதல் பேருந்து கேட்டல்லவா போராடி இருக்க வேண்டும்அது எப்படி ரஞ்சனா, கேமராவோடு வந்திருக்கிறீர்கள்எனில், உங்களிடம் திட்டம் இருந்திருக்கிறதுஇந்தத் திட்டம் தேர்தல் நேரத்தில் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தி தேர்தலுக்கு சாதகமாக்கும் திட்டம்இன்னொன்று தெரியுமா ரஞ்சனாஈரோடு மாவட்டம் கெம்பனூர் என்ற ஊரில் இருக்கும் 18 பழங்குடியின குழந்தைகள் மழை காரணமாக பேருந்து வராத காரணத்தால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிப்பதாக ஒரு செய்தித் துணுக்கை எனக்கு Anandhi அனுப்பி வைத்திருக்கிறார்ஏன் அங்கெல்லாம் பேருந்து கேட்டு போராட மறுக்கிறீர்கள்கூடுதல் பேருந்துகள்குழந்தைகள் தொங்கத் தேவை இல்லாத அளவிற்கான கூடுதல் பேருந்துகள் அவசியம் முதல்வர் சார்இதை செய்யுங்கள்அதன் பிறகு தொங்கக் கூடாது என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருவோம்இதை செய்யுங்கள்தறுதலைத் தனங்கள் தலை தூக்காது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2023 20:46

November 4, 2023

சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை

 

இரண்டு நாட்களுக்கு முன்பு பேராவூரணியில் ஒரு பள்ளிக் கட்டிடம் பழுதடைந்த நிலையில் தகரக் கொட்டகை நிறுவி பள்ளியை நடத்திவந்த நிலையில்குழந்தைகளின் பாதுகாப்பு கருதி தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோரோடு சட்டமன்ற உறுப்பினர் பேச்சுவார்த்தை நடத்தி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப செய்ததை வைத்திருந்தேன்04.11.2023 அன்றைய தமிழ் இந்துவில் இன்னொரு செய்தி வந்திருக்கிறதுமருதூர் தெற்குப்பட்டி,அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகில் உள்ள கிராமம்அங்கு உள்ள தொடக்கப் பள்ளியில் 100 குழந்தைகள் படித்து வருகிறார்கள்அந்தப் பள்ளியில் கூரைப் பூச்சும் சுவர்ப் பூச்சும் பெயர்ந்து விழுந்து குழந்தைகளின் மேலும் விழுவதால்பெற்றோர்கள் பாதுகாப்பு கருதி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த சூழலில்மாவட்ட ஆட்சித் தலைவர் திருமிகு ஆனிமேரி ஸ்வர்ணா அவர்கள் 06.11.2023 முதல் வேறு இடத்தை ஏற்பாடு செய்து பள்ளியை நடத்த உத்தரவிட்டுள்ளார்நமக்கு எழும் கேள்வி வயதான கட்டங்களை இடித்துவிட்டு புதிய பள்ளிக் கட்டடங்களை கட்ட ஏற்பாடு செய்ய வேண்டும்சொடக்குகிற பொழுதில் மருத்துவமனைகளை, விளையாட்டுத் தளங்களை ஏற்பாடு செய்கிற முதல்வர் இதில் பேரதிகமாக கவனம் குவிக்க வேண்டுமாய் வேண்டுகிறேன்அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களையும் அழைத்துஅல்லது மாவட்ட ஆட்சித் தலைவர்களை அழைத்துதங்களது எல்லைக்குட்பட்ட பகுதியில்இடிந்து விழும் நிலையில் உள்ளஅல்லது,குழந்தைகள் அமர்ந்து படிக்க பாதுகாப்பற்ற பள்ளிகளின் விவரங்களைக் கண்டறிய வேண்டும்சரி செய்ய வேண்டும்
04.11.2023
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 04, 2023 21:45

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.