இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 44
December 31, 2023
78
உறவினர் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்நண்பர்கள் வீடுகளில் சாப்பிடுகிறீர்கள்உணவு விடுதிகளில் சாப்பிடுகிறீர்கள் தாமரை நண்பர்களேநேற்றும் இன்றும் தலித் வீடுகளில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் இரண்டே இரண்டு வித்தியாசங்களோடுஅங்கங்கு சமைத்ததைத்தான் அங்கங்கு உண்டீர்கள்தலித் வீடுகளைத் தவிர என்பது ஒன்றுகடைச் சாப்பாட்டை சாப்பிடதலித் வீடுகளுக்கு போகும்போது மட்டும்தான்
Published on December 31, 2023 12:31
79
துப்பிவிடு
தொண்டைக் குழிக்குள்
ஊசலாடும்
எனக்கான சொற்களில்
ஒன்றையேனும்
Published on December 31, 2023 12:24
80
எடுத்துத் தொலைத்திருக்கலாம்
மீட்ட மோதிரத்தோடு
ஒரு புகைப்படம்
மீண்டும் அடகு வைப்பதற்குமுன்
Published on December 31, 2023 12:20
81
மிரட்டுவாய் பேசினால்
பேசுவேன்
கரியள்ளிப் பூசுவாய்
சாணத்தால் குளிப்பாட்டுவாய்
எழுதினால்
ஆனாலும் எழுதுவேன்
தாக்குவாய் தெரியும்
ஆனாலும் பேசவே பேசுவேன்
எழுதவே எழுதுவேன்
என் நெஞ்சிறங்கும்
உன் கோடாரி பார்த்தபடியேயும்
பேசுவேன்தான்
போடா
பிஞ்சுகள் எரிந்ததையே
பார்த்து விட்டோம்
Published on December 31, 2023 12:17
முடியும் என்றே தோன்றுகிறது
2024 கு என்ன மாப்ள?ஏதுமில்லை”சாமங்கவிய” கொண்டு வரலாம்ல என்கிறான்65/66 என்ன ஆயிற்று? தொகுக்கலாமே என்கிறான் இன்னொருவன்”நாப்கின் பெண்கல்வியின் வலது கண் ”என்ன ஆயிற்று என்கிறார் ஒருவர்”சாமங்கவிய” முதல் தொகுதி65/66 காக்கைச் சிறகினிலே முதல் தொகுதி இரண்டையும் கோடைக்குள் கொண்டுவர வேண்டும்அதற்கு முன்னர்,முடிந்தால் பொங்கலுக்குள் “நாப்கின் பெண்கல்வியின் வலது கண்” கொண்டுவர வேண்டும்முடியும் என்றே தோன்றுகிறதுபார்ப்போம்
Published on December 31, 2023 04:17
பாத்துட்டே பேசலாம்ல
ஷீனாவிற்கு சுடி எடுப்பதற்காக நானும் கீர்த்தியும் சென்றிருந்தோம்சன்ன நடுத்தரக் குடும்பம் ஒன்று திருமணத்திற்கு துணி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்மகளுக்கு போலும்அந்த மனிதரின் முகத்தில் அப்படியொரு மகிழ்ச்சிதிடிரென்று பொடிசு ஒருத்தி செல்லோடு அவரிடம் ஓடி வருகிறாள்”அப்பா அண்ணன்”புடிங்கி காதில் வைத்தவர்,சாப்ட்டியாப்பாநெகிழ்கிறேன்அது வீடியோ கால்பார்த்துட்டே பேசுங்க சார் என்கிறேன் அவர் என் இனம்போலகாதுல வச்சாலே சரியா கேக்காதுங்களே என்கிறார்நான் பேசியது அந்தப் பிள்ளைக்கு கேட்டிருக்கும்போலயாராச்சும் வந்தா அப்பாக்கு நல்ல ஹெட்போன் அனுப்பனுங்க சார். பாத்துக்கிட்டே பேசுவார்லஇல்லப்பா, அதுக்கு மிசினே வாங்கித் தந்துடலாம்லசெவுட்டு மிசின்ங்களா. வெளியத் தெரியுமேதெரியாதுப்பா என்று சொல்லிவிட்டு காதுக்குள் இருந்த என் மிசின்களை எடுத்துக் காட்டுகிறேன்நீங்களும் செவிட்டு மிசின் வச்சிருக்கீங்களா?ஆமாம்பாஎவ்வளவு ஆகுங்கசொல்கிறேன்வரப்ப வாங்கித் தரனும். பாத்துட்டே பேசலாம்லகொஞ்சமும் போலி இல்லைஅன்புஅன்புஇப்படியே இருங்கப்பாவேறென்ன சொல்ல
Published on December 31, 2023 03:17
December 29, 2023
அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள்
28.12.2023 அன்று ”ஜேக்டோ ஜியோ” அமைப்பினர் தஙகளது கோரிக்கைகளை வலியுறித்தி முற்றுகைப் போராட்டம் நடத்தி கைதாகி விடுவிக்கப் பட்டிருக்கிறார்கள்உரிய முறையில் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் போராட்டத்தை அரசு எதிர்கொள்ளவில்லைகிட்டத்தட்ட 60 கும் மேற்பட்ட சங்கங்கள் ஒன்றுபட்டு போராடும்போது அதை தலைமைச் செயலர் மூலமாக அணுகுவதும்மூன்றே மூன்று பேர் வாருங்கள் பேசலாம் என்பதும்Unbecoming of Stalin sirநாம் இதுவரை பார்த்த ஸ்டாலின் சாராக இந்த அணுகுமுறையில் அவரைக் கொள்ள இயலவில்லைநியாயமாக,அன்போடு ,அனைத்து சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேசுங்கள் என்பது அரசிற்கும்என்னப் பிரச்சினை என்பதைப் புரிந்துகொண்டு அரசை வழி நடத்துங்கள் என்பது எதிர்க்கட்சிகளுக்குமான நமது கோரிக்கை
Published on December 29, 2023 09:20
ஸ்டாலினிடம் இங்கிதத்தைக் கற்க வேண்டும்
முற்றாக விடைபெற்றிருக்கிறார் திரு விஜயகாந்த்ஒரு குறையுமற்று மிக நிறைவானமிகவும் மரியாதைக்குரிய வழியனுப்பிற்கு ஏற்பாடு செய்திருக்கிறது அரசுஸ்டாலினிடம் இங்கிதத்தைக் கற்க வேண்டும் என்ற தோழர் Yamuna Rajendran அவர்களின் கருத்தை நான் ஏற்கிறேன்
Published on December 29, 2023 09:19
அந்த விழுமியம்கூட எனக்கு எங்கமாயி காளியம்மாள் போட்ட பிச்சை
காட்டம்மா எங்க அம்மாயிஅநேகமாக 102உள்ளே நுழைந்ததும்சாமி...எபீனுஎல்லோரையும் சாமி என்றுதான் நான் விளிக்கிறேன் என்கிறார்கள்அதனால்கிரிஷ் என்னை சாமி தாத்தா என்று அழைக்கிறான்அது என் விழுமியம் என்று பார்த்தால்அந்த விழுமியம்கூட எனக்கு எங்கமாயி காளியம்மாள் போட்ட பிச்சை
Published on December 29, 2023 09:17
திரு விஜயகாந்த் அவர்களுக்கு என் வணக்கமும் அஞ்சலியும்
Published on December 29, 2023 09:16
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)