இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 45
December 29, 2023
எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து
ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்து
புக்பேருக்கு ஏதும் இருக்கா எட்வின்?
நாளாச்சுதான்
தரவேண்டும்தான்
ஆனால் மூன்று மாதங்களாகும்
புக்பேருக்கு?
பாப்பா
"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"
கொண்டு வந்திருக்கா
தலைப்பே மிரட்டுதில்ல
எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து
விழா எடுக்க வேண்டும்
15 வருஷமா எங்கள்மீது கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்
கையிலிருப்பது கொண்டு தடுத்துக் கொண்டே இருக்கிறோம்
வாளும் கேடயமுமாய்
"மரிச்ஜாப்பி" பாரதி புத்தகாலயம் மூலமாக வருகிறது
கொண்டு சேர்க்க வேண்டும்
மால்கம் "பகை நன்று" தருகிறார்
கல்வி குறித்து அக்கறைப் படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்
இதுவும் பாரதி புத்தகாலய வெளியீடுதான்
அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது
மற்றும்
பகை நன்று
இரண்டின் அட்டைகளும் அவற்றிற்காகவும் பேச வைக்கும்
தோழர் Lark Bhaskaran மிரட்டி இருக்கிறார்
தருவோம் தோழர்

ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்துபுக்பேருக்கு ஏதும் இருக்...
ரொம்ப நாளாச்சே புத்தகம் கொடுத்து
புக்பேருக்கு ஏதும் இருக்கா எட்வின்?
நாளாச்சுதான்
தரவேண்டும்தான்
ஆனால் மூன்று மாதங்களாகும்
புக்பேருக்கு?
பாப்பா
"அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது"
கொண்டு வந்திருக்கா
தலைப்பே மிரட்டுதில்ல
எங்கள் வீட்டின் முதல் பெண்ணெழுத்து
விழா எடுக்க வேண்டும்
15 வருஷமா எங்கள்மீது கல்லெறிந்து கொண்டே இருக்கிறார்கள்
கையிலிருப்பது கொண்டு தடுத்துக் கொண்டே இருக்கிறோம்
வாளும் கேடயமுமாய்
"மரிச்ஜாப்பி" பாரதி புத்தகாலயம் மூலமாக வருகிறது
கொண்டு சேர்க்க வேண்டும்
மால்கம் "பகை நன்று" தருகிறார்
கல்வி குறித்து அக்கறைப் படுபவர்கள் அவசியம் படிக்க வேண்டும்
இதுவும் பாரதி புத்தகாலய வெளியீடுதான்
அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது
மற்றும்
பகை நன்று
இரண்டின் அட்டைகளும் அவற்றிற்காகவும் பேச வைக்கும்
தோழர் Lark Bhaskaran மிரட்டி இருக்கிறார்
தருவோம் தோழர்

இறங்கறவரைக்கும் நீங்கதான் தாத்தா

உணவுப் பட்டியல் தமிழில்
கோவை குனியமுத்தூரில் உள்ள அன்னபூரணா உணவகத்திற்கு சூரியா அழைத்துப் போனான்
எப்படி இருக்கும்னு வந்து பாருங்க அங்கிள் என்றான்
உணவெல்லாம் அப்புறம்
போனதும் உணவுப் பட்டியல் தமிழில் வந்தது
அப்படியொரு மகிழ்ச்சி

December 25, 2023
என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்
06.12.1952 இல் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களுக்கும் அம்பாள் அம்மாவிற்கும் திருமணம் நடக்கிறது
அவர்கள் இருவரும் இல்லறத்தில் இணைந்ததே ஒரு சுவையான கதை
அம்பாள் அம்மாவிற்கு மூன்று அக்காக்கள், ஒரு அண்ணன்
மூன்று அக்காக்களும் கட்சித் தோழர்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள்
இரண்டாவது அல்லது மூன்றாவது சகோதரி யமுனா
அவர் தோழர் K.M அவர்களை திருமணம் செய்து கொள்கிறார்
ஒருவர் மும்பையில் இருக்கிறார்
அம்மாவும் தன் சகோதரி வீட்டில் மும்பையில் கொஞ்ச காலம் தங்குகிறார்
அப்போது மும்பை தலைமறைவு அலுவலகத்தில் தங்கி வேலை பார்க்க வேண்டிய அவசியம் பிஆருக்கு வருகிறது
அப்போது அம்மா அறிமுகம் ஆகிறார்
இப்போது அம்மாவிற்கு சென்னையில் பணி கிடைத்து சென்னைக்கு வருகிறார்
தோழர் எதிர்க்கட்சித் தலைவராகிறார்
ஆகவே
நிறைய கடிதங்கள், கோரிக்கைகள்
அவர்களுக்கு பதில் எழுத வேண்டும்
அரசுக்கு அவை சம்பந்தமாக எழுத வேண்டும்
அவற்றை ஆவணப் படுத்த வேண்டும்
தமிழும் ஆங்கிலமும் நன்கு தெரிந்த அம்பாள் அம்மாவை தோழர் உதவக் கேட்கிறார்
அம்மா சொல்கிறார்
செய்கிறேன் தோழர்
என்னைக் கட்டிக்கிறதா இருந்தா செய்கிறேன் தோழர்
இந்தக் காட்சியை விஷுவலாக நினைத்துப் பார்க்கிறேன்
அய்ய்யோ
மேடைகளில் தோழருக்கும் அம்மாவிற்கும் திருமணம் நடந்ததாகவோ
அல்லது
தோழர் அம்மாவை திருமணம் செய்து கொண்டதாகவோதான் பெரும்பாலும் பேசுகிறார்கள்
தவறு,
உண்மை என்னவெனில்,
06.12.1952 அன்று அம்மா தோழர் பி.ராமமூர்த்தியைத் திருமணம் செய்து கொண்டார்
அம்மாக்களின் பிள்ளை நான்
அம்மாவிற்கு முத்தம்
December 24, 2023
சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு
சபர்மதி ஆசிரமத்தில் ஒன்றும் இல்லை என்று அதைக் கொஞ்ச காலம் நிர்வகித்து வந்த ராஜாஜியே சொல்லி இருக்கிறார் என்றால் நம்பமுடிகிறதா
ஆனால் அதுதான் உண்மை
1920 கல்கத்தா காங்கிரஸ் தீர்மானங்களில் ஒன்று
அரசு நடத்தும் அல்லது அரசு உதவியோடு நடத்தப்படும் பள்ளிகளில் இருந்து மாணவர்கள் வெளியேறி
தேசியப் பள்ளிகளில் சேர வேண்டும் என்பது
தோழர் பிஆர் தான் படித்து வந்த இந்து பள்ளியில் இருந்து விலகி
அலகாபாத்தில் நேருவும் புருஷோத்தம தாஸ் தாண்டனும் நடத்தி வந்த தேசியப் பள்ளியில் சேர்வது என்று முடிவெடுக்கிறார்
பள்ளிக்கு கிளம்புவதுபோல தோழர் பிஆர் ரயிலடிக்கு வருகிறார்
டிக்கட் எடுக்காமல் அப்படி இப்படி என்றெல்லாம் சுத்திவளைக்க விரும்பவில்லை
திருட்டு ரயில்தான்
திருட்டு ரயிலேதான்
பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு
திரும்ப ஏறி
திரும்பப் பிடிபட்டு இறக்கிவிடப்பட்டு
திரும்ப ஏறி
ஒருவழியாக அலகாபாத் வந்து பள்ளி என்று அழைக்கப்பட்ட அந்த வீட்டிற்கு வருகிறார்
புருஷோத்தம தாஸ் தாண்டனைப் பார்க்கிறார்
விந்தி விந்தி நடக்கும் சிறுவன்
அவ்வளவாக ஈர்க்கவில்லை
ஆனாலும் சேர்த்துக்கொள்ளப் படுகிறார்
ஆனால் நேருவிற்கு இவரது சூட்டிகையும் அறிவும் பிடித்துப் போகிறது
ஞாயிறுகளில் வீட்டிற்கு அழைத்து உடன் சாப்பிடுமளவிற்கு நேருவிற்கு பிரியம் ஏற்படுகிறது
இந்த சமயத்தில்
சௌரிசௌரா நிகழ்ச்சி குறித்த காந்தியின் எதிர்வினைமீது ஏற்பட்ட விரக்தியில் பள்ளியில் இருந்து அனைவரும் வெளியேறுகின்றனர்
( இளைய பிள்ளைகள் யாரேனும் சௌரிசௌரா என்றால் என்ன என்று கேட்டால் அது குறித்தும் எழுதுவோம்)
வேறு வழி இல்லாமல் பிஆரும் வெளியேறுவதைத் தெரிவிக்க நேருவிடம் வருகிறார்
நேருவிற்கும் அது சரி என்றே படுகிறது
பயணத்திற்கும் செலவிற்கும் என்று பணம் கொடுத்து அனுப்புகிறார்
மீண்டும் ரயிலடி
இப்போது பிஆர் வேறு நினைக்கிறார்
எதற்கு வீட்டிற்கு
காந்தியின் சபர்மதி ஆசிரமம் போகலாமே என்று எண்ணுகிறார்
சென்னைக்கு பதில் டிக்கெட் எடுத்து அகமதாபாத் போகிறார்
அப்போது சபர்மதி ஆசிரமத்தை ராஜாஜி நிர்வகிக்கிறார்
அவரை பிஆர் சந்திக்கிறார்
இங்கு நூல் நூற்பதைத் தவிர வேறு என்ன நடக்கிறது
அது உனக்கு நன்றாகத் தெரியும்
நீ கற்றுக் கொள்ள இங்கு ஏதும் இல்லை
ஊருக்கு ஓடு என்று விரட்டுகிறார்
இவ்வளவுதான் சபர்மதி குறித்த ராஜாஜியின் மதிப்பீடு
தந்தை பெரியாருக்கும் தோழர் பிஆர் அவர்களுக்குமான
1936ஒருநாள் தோழர் பி.ராமமூர்த்தி அவர்களும் ஜெயபிரகாஷ் நாராயணன் அவர்களும் தந்தை பெரியாரை சந்திக்கிறார்கள்காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியில் சேருமாறு பெரியாரைக் கேட்டுக் கொள்வது அவர்கள் சந்திப்பிற்கான நோக்கம்தடாலடியாக பெரியார் மறுத்துவிடுகிறார்அவர்களது உரையாடலினூடே பிஆர் குறித்த விசாரனையை ஆரம்பிக்கிறார் பெரியார்அவர்களது சாதியில் 22 வயதானாலேயே கல்யாணத்தை முடிச்சு வைத்துவிடுவார்களே. அவரை எப்படி விட்டு வைத்திருக்கிறார்கள் என்று ஆச்சரியப்படுகிறார்விரட்டிக்கொண்டுதான் இருப்பதாகவும், தான்தான் பிடி கொடுப்பதில்லை என்றும் கூறுகிறார் பிஆர்ஒருக்கால் தோழர் ராமமூர்த்திக்கு திருமணத்தில் பிரியம் இல்லையோ என்ற எண்ணாம் வந்துவிடுகிறது பெரியாருக்குஅப்படி இல்லீங்க அய்யா என்ற தோழர்படித்து பெரிய வேலைக்குப் போவார் என்று தன் அம்மா நினைத்தார்கள் என்றும்உல்டாவாக ஆனாலும் தான் செய்யும் வேலைக்கு அவர்கள் ஒத்தாசையாக இருப்பதாகவும்எனவே,தனது கருத்தின்படி கலப்புத் திருமணம் செய்துகொள்வதன் மூலம் அவர்களது மனதைப் புண்படுத்த விரும்பவில்லை என்றும்அவரது மறைவிற்குப் பிறகு திருமணம் செய்துகொள்ள விரும்புவாதாகவும் கூறுகிறார்அப்படி நெகிழ்ந்து போகிறார் பெரியார்வழக்கமாக குழந்தைகளைக்கூட “ங்க” போட்டு மரியாதையாகப் பேசும் பெரியார்“தம்பி நீ செய்த முடிவு நல்ல முடிவு. உன் தாயாரை மெச்சுகிறேன். இப்படிப்பட்ட பழைய காலத்து தாய்மார்களைப் பார்ப்பது அரிது.அம்மா மனசு காயப்படக்கூடாதுன்னு நெனைக்கிற பாரு. அது நல்ல மனசு. நீ எப்பயாச்சும் கல்யாணம் செய்தா நான் இருந்தா வருவேன்”என்று தோழர் பிஆர் அவர்களை ஒருமையில் அழைத்து சொல்கிறார்இரண்டு விஷயங்கள் தோழர் ராமமூர்த்தியை நெகிழ்த்துகிறதுஒன்று தன்னை பெரியார் ஒருமையில் அழைத்ததுஇரண்டு வழக்கமாக இப்படி செண்டிமெண்டெல்லாம் பார்க்காத பெரியார் தோழருக்கு திருமணம் நடந்தால் வருவதாக சொன்னதுஒருவழியாக 06.12.1952 திருமண பதிவு அலுவலகத்தில் தோழர் பி.ராமமூர்த்திக்கும் அம்பாள் அவர்களுக்கும் பதிவுத் திருமணம் நடக்கிறதுயாருக்கும் சொல்லவில்லைதிருமணத்தை முடித்துவிட்டு சட்டமன்றம் வருகிறார்அமைச்சர் சி.சுப்பிரமணியம் அவர்கள் அவரை வாழ்த்த அனைவருக்கும் விஷயம் தெரிகிறதுசெய்தியைக் கேள்விபட்டதும்கட்சித் தோழர்கள் அடுத்த நாள் சித்தாதிரிப் பேட்டையில் ஒரு மண்டபத்தில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்கிறார்கள்பெரியாருக்கு தொலைபேசியில் செய்தி சொல்லப்படுகிறதுஅந்த நேரம் திகவிற்கும் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அவ்வளவாக பொருந்திப் போகாத நேரம்ஆனாலும் அழைக்கிறார்தந்தை பெரியாரும் வருகிறார்தலைமையேற்று வரவேற்பு நிகழ்ச்சியை நடத்திக் கொடுக்கிறார்சில கம்யூனிஸ்ட் தலைவர்கள் நிகழ்ச்சிக்கு வரவில்லைதந்தை பெரியாருக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கக் கூடும்தந்தை பெரியாருக்கும் தோழர் பிஆர் அவர்களுக்குமான அன்பும் உறவும் அப்படியானது
December 23, 2023
தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகளில் ஒன்று

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழ்நாடு பள்ளிகளில் காணப்படும் 28 விதமான சாதிய பாகுபாடுகள் குறித்து ஆய்வு நடத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது
இது மிகவும் சவால் வாய்ந்த ஒரு முயற்சி
களம் சென்ற TNUEF தோழர்களையும் இப்படி ஒரு முடிவெடுத்த மாநிலக்குழுவையும் கைகளைப் பற்றி நன்றி சொல்கிறேன்
இந்த அளவிலான அந்த அறிக்கையே அதிர்ச்சி அளிக்கிறது
இப்படி சொல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது
இந்த அறிக்கை பொய் என்று யாரும் சொல்ல முடியாது
ஆனால் குறைவுதான்
அவர்களது வாய்ப்புகள் அளவிற்கும் மேலான முயற்சி இது
கயிறு விஷயத்தில் திருச்சி விடுபட்டிருக்கிறது
அனுபவத்தில் சொல்கிறேன்
இங்கு அதிகம்
ஒவ்வொன்றாகப் பார்ப்போம்
தலித் சமூகத்தை சேர்ந்த குழந்தைகளைக் கொண்டு கழிவறைகளை சுத்தம் செய்யும் பள்ளிகளின் எண்ணிக்கை 15 என்கிறது அறிக்கை

ஒன்று என்று இருந்தாலே நாம் இதற்காக வெட்கப்பட வேண்டும்
பதினைந்து
9 மாவட்டங்களில் இப்படி என்று அறிக்கை கூறுகிறது
கட்சி தனது கவனத்தை அங்கு குவிக்க வேடும்
பள்ளிகளின் பட்டியல் நிச்சயம் இருக்கும்
வாசலை மறிப்போம்
கேள்வி கேட்போம்
மால்கம் “பகை நன்று” ஒரு குறுநாவல் எழுதியிருக்கிறார்
அதிலும் இதுகுறித்து நுட்பமாக வரும்
அணிந்துரையிலும் இது குறித்தே நானும் பேசி இருக்கிறேன்
பாரதி புத்தக வெளியீடு
குழந்தைகளை அவர்கள் பிறப்பின் பொருட்டு கழிவறைகளைக் கழுவச் சொன்னவர்களை
தூக்கிலேகூட போடலாம்
நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்
30.06.1952 அன்று ஹிந்து வெளியிட்ட செய்தி இது என்பதை அடிக்கோடு இட்டு வாசிக்க வேண்டுமாய் அன்போடு கேட்கிறேன்“அவனவன் ஜாதித் தொழிலை அவனவன் செய்ய வேண்டும், வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியதில்லை,குலத் தொழிலை செய்தால் போதும்,எல்லோரும் படித்தால் எங்கிருந்து வேலை கிடைக்கும்”என்று சென்னைக்கருகில் உள்ள திருவான்மியூர் கிராமத்தில் நடைபெற்ற தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டில் உயர்திரு முதலமைச்சர் அவர்கள் கூறியிருக்கிறார்என்ற இந்த செய்தியை தோழர்கள் கா.கருமலையப்பன், ந.பிரகாசு, மற்றும் இரா. மனோகரன் ஆகியோர் தொகுத்துள்ள “குலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற நூலில் வைத்திருக்கிறார்கள்நடந்தது என்னவெனில்அழையா விருந்தாளியாக வந்திருந்த ராஜாஜி அவர்களிடம் தங்களது பிள்ளைகள் நான்காவது வரைக்கும் படிப்பதற்கு ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை வைக்கப்பட்டதாகவும்அதற்கு பதில் அளிக்கும் முகத்தான்தான் ராஜாஜி அப்படி பேசியதாகவும் அறிய முடிகிறதுதோழர் சாரோன் இதுகுறித்து என்னோடு பேசிய ஒரு பொழுதில்அன்றைய முதல்வர் ராஜாஜி அவர்கள் சலவைத் தொழிலாளர்கள் மாநாட்டிற்கு அழைக்கப்படவே இல்லை என்றும்“இந்த மாநாட்டிற்கு அழையா விருந்தாளியாகத்தான் வந்திருக்கிறேன் என்றுதான் அவர் தனது உரையத் தொடங்கியதாகவும் கூறினார்இதனை ஒட்டி காஞ்சிபுரத்தில் ”சென்னை மாகாண யாதவ மாணவர் மாநாடு” நடக்கிறதுஅன்றைய சென்னை மாகான விவசாய மந்திரியான திரு சென்னகவுடா இதில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்“இளைஞர்கள் படிப்பை முடித்தவுடன் வேலை தேடக்கூடாதுநவீன பால்பண்ணைகளைத் தொடங்குங்கள்பால் உற்பத்தியைப் பெருக்குங்கள்கிராமப் பிள்ளைகள் காலையில் பள்ளியிலும் மாலையில் குலத்தொழிலும் கற்கவேண்டும் என்கிறார் ராஜாஜிஅதை நான் ஆமோதிக்கிறேன்”இப்போதில் இருந்தே தந்தை பெரியார் மக்களை எச்சரிக்கத் தொடங்கி விட்டார்இந்த நிலையில் 20.03.1953 அன்று சட்டமன்றத்தில் அன்றைய கல்வி அமைச்சர் திரு MV கிருஷ்ணமூர்த்தி குலக் கல்வியை பாதி நேரம் கற்கிறமாதிரி கல்வித் திட்டத்தை முன்வைக்கிறார்ஆஹா,பூனை வெளியே வந்துவிட்டதுஇந்த நேரத்தில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களைக் கலக்காமலே ராஜாஜி இதைக் கொண்டுவந்தத்ஹாகக் குறை கூறுகின்றனர்தான் யாரையும் கேட்கத் தேவை இல்லை என்றும். இது விஷயத்தில் எது நடந்தாலும் தாமே பொறுப்பேற்பதாகவும் கொஞ்சம் ஆணவம் பொங்கக் கூறுகிறார்இதே சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்டத்தில் எங்கே ராஜாஜி சட்டச்மன்றத்தைக் கலைத்துவிடுவாரோ என்று அச்சப்படுகிறார்கள்அப்படிக் கலைத்துவிட்டால் தங்களுக்கு வரும் ஊதியம் நின்றுபோகுமே என்ற கவலை அவர்களைத் தொற்ரிக் கொண்டதுநாம செய்யற வேலையை நம்ம பிள்ளைகளாவது செய்யாமல் படிக்க வேண்டும் என்பதற்காகத்தானே மக்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள்அவர்களை தங்கள் தகப்பன்மார்கள் செய்கிற தொழில் நோக்கி அனுப்பும் கல்வித் திட்டம்அயோக்கியத்தனமானது என்கிறார் பெரியார்சனாதனம் ஒழிய வேண்டும்புதியக் கல்வித் திட்டம் சனாதனத்தைக் கெட்டிப்படுத்தும்ஆகவே சனாதனம் முற்றாக ஒழிய வேண்டும் என்றால் புதியக் கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார் பெரியார்ஆசிரியர்களைத் தூண்டுகிறார்பிள்ளைகள் நலமாக கௌரவமாக வாழ வேண்டும் அவர்களை அப்படி உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் சம்பளம் வாங்கிகிறீர்கள்அவர்களை மீண்டும் குலத்தொழிலுக்கு அனுப்புகிற ஒரு கல்வித் திட்டத்தை ஏன் கண்டிக்க மறுக்கிறீர்கள் என்று கேட்கிறார்ராஜாஜிக்கு எதிராக ஓமாந்தூராரை, காமராசரை, பக்தவச்சலத்தை கிளப்பிப் பார்க்கிறார்பேரணி நடத்துகிறார்குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமாட்டோம் என்ற போராட்டம் நடத்துகிறார்ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பினால்தான் குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க முடியும் என்று குத்தூசி சொல்வதை ஏற்கிறார்ராஜாஜி வீட்டிற்கு போக வேண்டும்நாம் அனுப்பினால் என்னகாமராசர் அனுப்பினால் என்ன?என்று கேட்கிறார்இதை ஒட்டி நடந்த சம்பவங்களே ராஜாஜியை ராஜினாமா செய்ய வைக்கிறதுஆக,குலக்கல்வி இருந்திருந்தால் நானும் இதை வாசிக்கிறவர்களில் பலரும் படித்திருக்க முடியாது
நாம் படித்ததற்கான பெரிய காரணங்களுள் பெரியார் முக்கியமானவர்இன்று அவரது ஐம்பதாவது நினைவுநாள்நன்றியோடு வணங்குகிறேன்
பிள்ளைகள் பெரிசாக வருகிறார்கள்
”அறம் வெல்லும்” 2021 தேர்தலுக்காக திமுக வெளியிட்ட புத்தகம்40 கட்டுரைகள்என்னுடைய “குலக்கல்வி ஒருபோதும்” என்ற கட்டுரையும் இருந்ததுஅதுகுறித்து அந்தப் புத்தகத்தை தொகுத்தவர்களுள் ஒருவரான திரைப்பட இயக்குனர் சந்திரா ஒரு எழுத்தைக்கூட மாற்றாமல் வைத்த கட்டுரை அது என்றார்அந்தக் கட்டுரையை “காட்பரிஸ் கல்வியும் கமர்கட் கல்வியும்” நூலில் வைத்திருக்கிறேன்அது குறித்து எழுதும்போது சந்திரா அப்படி சொன்னபோது வெற்றிமாறன் LKG யில் வெரிகுட் வாங்கியபோது கிடைத்த மகிழ்ச்சி மாதிரி இருந்தது என்று எழுதினேன்இப்போது வெற்றிமாறனின் அரையாண்டுத் தேர்வுத் தாளில் “வெரி குட்”இதுமாதிரி நானும் ஒரு வெரிகுட் வாங்க வேண்டும்பிள்ளைகள் பெரிசாக வருகிறார்கள்பார்த்துவிட்டுப் போக வேண்டும்
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)