இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 42

January 3, 2024

70


எரித்தீர்கள்கரியானோம்
மழை நனைக்க
கருஞ்சாந்துப் பெருக்கானோம்
கருக்கவில்லை பூமி
கிழித்தீர்கள்
வெட்டினீர்கள்
கொத்தினீர்கள்
ஆசைதீர
ரத்தச் சாந்தானோம்
சிவக்கவுமில்லை பூமி
நீங்கள் மகிழ ஏதுமில்லை ஆனாலும்
காவியாகாது
எம் பூமி ஒருபோதும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 21:25

தெரிந்து கொள்ளும் ஆவல்தான்

 



கீழடியைவிட பழமையான நகரங்கள் ராஜஸ்தானில் இருப்பதாக சார் சொல்லி இருந்தார்தரவுகளோடு வருமாறும், உரையாடவும் விவாதிக்கவும் காத்திருப்பதாகவும் சொல்லி இருந்தேன்சாரிடம் தேதியும் இடமும் கேட்க மறந்து விட்டேன்இப்பவும் சொல்கிறேன்கீழடியை நிறுவ வேண்டும் என்பதற்காக இதைக் கோரவில்லைதெரிந்து கொள்ளும் ஆவல்தான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 19:50

இஸ்மாயில் ராவுத்தர் அவகளால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறது

 

நேற்று “ஆற்றுப்படை” மின்னிதழில் அய்யா சதீஷ் எழுதியிருந்த “நவாப் அமைத்த லிங்கம்” கட்டுரை குறித்து எழுதியிருந்தேன்முருகனின் ஐந்தாம் படை வீடான திருத்தணியின் நான்காம் திருச்சுற்றில் நவாப் அவர்கள் அமைத்துக் கொடுத்த லிங்கம் இருப்பதைக் குறித்து அந்தக் கட்டுரை பேசும்அந்தக் கோவில் எந்த நூற்றாண்டைச் சேர்ந்தது என்று தெரியவில்லைஅது தேவையும் இல்லைஆனால் இந்துக்களின் வழிபாட்டிற்காக கடவுள் சிலைகளை, ஏன் கோவில்களை, வழிபாட்டிற்கான செலவிற்காக பணத்தை, நிலத்தை, நகையை இஸ்லாமியர்கள் கொடுப்பதும் வாடிக்கைஇது, இந்த மண்ணின் மிகப்பெரும் விழுமியம்இதுதான் சிலருக்கு எரிச்சலாக இருக்கிறதுஇந்த எரிச்சலுக்கு எண்ணெய் ஊற்றுவதுபோல ஒரு செய்தியை அண்ணன் G G Rajan Balachandran ஒரு தகவலைத் தருகிறார்எங்கள் ஊருக்கும் அருகில் உள்ள தோகைமலையில் 03.10.1968 இல் இஸ்மாயில் ராவுத்தர் அவகளால் ஒரு பிள்ளையார் கோவில் தரப்பட்டிருக்கிறதுஅந்தக் கோவிலும் இன்னும் இருக்கிறது



ஆதாரமான கல்வெட்டும் இருக்கிறது


இதுபோல் இன்னும் இன்னும் நிறைய இருக்கும்அறியத் தருவோம்இஸ்லாமியத் திருத்தளங்களுக்கும் இந்துக்கள் செய்தது ஏராளம் உண்டுநமது வேலைஅவற்றைத் தேடி எடுத்து அறியத் தருவதுதான்இது அன்பின் விளை நிலம்வெறுப்பால் ஒன்றும் செய்ய இயலாது என்பதை சொல்லிக்கொண்டே இருப்போம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 19:46

தரவுகளோடு வாங்க சார்

 

தரவுகளோடு வாங்க சார்உரையாடலாம்விவாதிக்கலாம்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2024 19:42

January 2, 2024

சிலையை உடைப்பவன் எப்படி சிற்பி ஆவான்?

 

இந்த ஆண்டின் துவக்கத்தில் என்னை மகிழ்வித்தவற்றில் முக்கியமான ஒன்று தனது கட்டுரை ”கீழக்குறிச்சி புத்தர்”
“ஆற்றுப்படை” மின்னிதழில் வந்திருப்பதாக தனது பக்கத்தில் தோழர் செல்வ பாண்டியன் வைத்திருந்தது
மிகவும் மகிழ்ந்தவனாக அந்த இதழுக்குள் நுழைந்து
அய்யா சதீஷ் குமார் அவர்கள் எழுதிய ”காதர் நவாப் அமைத்த லிங்கம்” என்ற கட்டுரையையும்
செல்வ பாண்டியனின் கீழக்குறிச்சி புத்தரையும் வாசித்தேன்
மற்றவற்றை வாசிக்க வேண்டும்
சதீஷ் அவர்கள் திருத்தணியில் நான்கு திருச்சுற்றுகள் இருப்பதாகக் கூறுகிறார்
நான்காவது சுற்று குறித்து முடிக்கும்போது ஒற்றை வரியில் மிக முக்கியமான ஒன்றைச் சொல்கிறார்
நான்காம் சுற்றில் காதர் நவாப் என்பவர் அமைத்த லிங்கம் இருப்பதாகப் போகிற போக்கில் சொல்லிவிட்டு சென்று விடுகிறார்
காதர் நவாப் அமைத்த லிங்கம் என்பது ஒரு செய்திதான்
ஆனால் நமக்கோ மதநேயத்தின் அடிவேர்
ஒரு இஸ்லாமியர் லிங்கம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்
இது தமிழ் மண்ணின் விழுமியம்
தேட வேண்டும்
கொண்டுபோக வேண்டும்
நன்றி சதீஷ் சார்
அடுத்து நம்ம தோழரின் கட்டுரை
தமிழ்நாட்டில் புத்தருக்கு எங்கெங்கு சிலைகள் இருக்கின்றன?
அவற்றில் எத்தனை சேதமடைந்திருக்கின்றன?
தலையற்ற புத்தர் சிலைகள் எங்கெங்கு உள்ளன?
புத்தர் சிலையின் தலைகள் மட்டும் எங்கெங்கு உள்ளன?
எந்தெந்த புத்தர் சிலைகள் யார் யார் பொறுப்பில் உள்ளன?
போன்றவற்றிற்கு தூக்கத்தில் இருக்கும் தோழரை எழுப்பிக் கேட்டாலும் சரியாக சொல்வார்
கீழக்குறிச்சி நான் விளையாடிய ஊருக்குப் பக்கத்து ஊர்
பொன்மலை இருக்கும் ஊர் பொன்மலைப்பட்டி
பக்கத்து ஊர் பொன்மலை
புத்தரை பூதம் என்கிறார்கள்
புத்தர் சிலையைத் தொட்டால் அழிந்து போவோம், அல்லது கெட்டது நடக்கும் என்கிறார்கள்
புத்தர் தலையை வெட்டியவர்கள் செய்நேர்த்திமிக்க தச்சர்களும் சிற்பிகளும் என்கிறார் செல்வபாண்டியன்
புத்தரை பூதம் என்றும் அவரைத் தொட்டால் அழிந்துபோவோம் என்ற கற்பிதத்தை யார் செய்தார்கள்
அதன் பின்னுள்ள அரசியல் என்ன?
சிலையை உடைப்பவன் எப்படி சிற்பி ஆவான்?
புத்தரைப் பற்றிய இந்த கற்பிதங்கள், மற்றும் அரசியலுக்கான பின்னணியை நன்கு அறிந்தவர் செல்வ பாண்டியன்
நமக்கு அவர் கட்டுரைகளாகத் தரவேண்டும்
வச்சிக்கிட்டு வஞ்சனை செய்யாதீங்க பாண்டியன்
Activ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2024 08:01

போவதற்குள் ஒரு முறையேனும் அரிவாள் சுத்தியலுக்கு வாக்களித்துவிட வேண்டும்

 

1989 இல் இருந்து இதுவரை நிறைவேறாததும்அநேகமாக எப்போதுமே அதற்கு சாத்தியமே இல்லாததுமான ஒரு ஆசைபோவதற்குள் ஒரு முறையேனும் அரிவாள் சுத்தியலுக்கு வாக்களித்துவிட வேண்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2024 07:56

நம்பிக்கையோடு உறங்கப் போகிறேன்

 

எங்கள் மாவட்ட செயலாளர் தோழர் Ramesh Perumaldyfi, தோழர் Kalaiyarasi உள்ளிட்டு 15 தோழர்கள் பண்டகப்பாடி, ஆலந்தூர், பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் உண்டியலடித்திருக்கிறார்கள்கிட்டத்தட்ட 7500 ரூபாய் வசூல் எனத் தெரிகிறதுஇந்தத் தொகை அல்லரமேஷ் 15 ஆண்டுகளுக்கு முன்னால் என்ஃபீல்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்வேலையை விடாதப்பா என்று எத்தனையோ தடவை கேட்டும் விடாப்பிடியாக கைநிறையத் தந்துகொண்டிருந்த வேலையை உதறிவிட்டு முழுநேர ஊழியராக வேலைக்கு வந்தவர்படத்தில் இருப்பவர்களில் சிலர் ஒருநாள் சம்பளத்தை தியாகம் செய்து உண்டியலடிக்க வந்திருக்கிறார்கள்மாறாக இவர்கள் இன்று வேலைக்கு போய் அந்த சம்பளத்தைக் கொடுத்திருந்தாலே இதைவிட அதிகம் சேர்ந்திருக்கும்இப்படி வீடு வீடாக, கடைக் கடையாக அலையத் தேவை இல்லைநாடு எப்படி இருக்கிறது,நாங்கள் யார்,என்ன செய்கிறோம்மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை வீடு வீடாக, கடைக் கடையாகக் கொண்டு சேர்க்கிறார்கள்நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்இருக்கிறோம்என்ற தைரியத்தைத் தந்துகொண்டு இருக்கிறார்கள்வேறென்ன வேண்டும்நம்பிக்கையோடு உறங்கப் போகிறேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2024 05:15

அல்லது சிலருக்கும் பலருக்கும் இடைப்பட்ட ஒரு திரள்

 

ஒன்று பலர்அல்லது சிலர்ஒன்று பலர்அல்லது சிலர்அல்லது சிலருக்கும் பலருக்கும் இடைப்பட்ட ஒரு திரள்இந்தத் திரள் மிக முக்கியமான திரள்அவர்களிடம் அவர்களைவிட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வயது மூத்த கேள்வியை வைப்போம்ஏன் கட்சிக்கு வந்தீங்க?பதில்களை நமக்குப் புரிகிற மாதிரி எளிமையாக, இரண்டாக வகைப்படுத்தலாம்இந்தக் கட்சியவிட்டா வேறு நம்பிக்கை இல்லை தோழர் என்பது ஒரு வகையான பதில்இவர்கள் நேரிலும், இவ்வளவு மறைப்புகளுக்குப் பிறகும் கிடைக்கிற செய்திகளின் அடிப்படையிலும்மக்களுக்காக களத்தில் நிற்பதுஊழலற்று அல்லது பெருமளவு ஊழலற்று இருப்பதுசாதி மத ஒற்றுமைக்காகஅல்லது சாத மத ஒற்றுமைக்காக பெருமளவு உழைப்பதுபெண்களை மதிப்பது போன்றவைகளுக்காக கட்சிக்குள் வந்தவர்கள்இன்னொரு பிரிவினர்மார்க்சியமே தீர்வு என்று கருதுவதால் கட்சிக்குள் வந்தவர்கள்இப்போது முதல் மூன்று வரிகளைப் பார்ப்போம்பலரோ, சிலரோ, இடையில் ஒரு திரளோமார்க்சியம் குறித்து ஏதும் தெரியாதவர்கள்மார்க்சியமே தீர்வு என்று சொல்லும் நம் பிள்ளைகளில் ஒரு திரளுக்கு மார்க்சியம் தெரியாதுகடுமையாக உழைக்கும் சில பிள்ளைகள் சொன்னார்கள்மார்க்சியம்னா மக்களுக்கு உழைப்பதுமக்களுக்காகப் போராடுவதுமக்களுக்காகத் தியாகம் செய்வதுஇவற்றைத் தவறென்று யாரும் சொல்ல முடியாதுஆனால் இவ்வளவுதானாஇல்லை என்பதும்நாம் இங்கு பரிசீலித்த எதார்த்தமும் உண்மை என்றும் கட்சிக்குத் தெரியும்கட்சிக்கு இன்னும் ஷார்ப்பாகத் தெரியும்ஏதாவது செய்ய வேண்டும்கட்சி மட்டுமல்லநாமும்இந்தத் திரள் மிக முக்கியமான திரள்அவர்களிடம் அவர்களைவிட இரண்டு மடங்கு அல்லது மூன்று மடங்கு வயது மூத்த கேள்வியை வைப்போம்ஏன் கட்சிக்கு வந்தீங்க?பதில்களை நமக்குப் புரிகிற மாதிரி எளிமையாக, இரண்டாக வகைப்படுத்தலாம்இந்தக் கட்சியவிட்டா வேறு நம்பிக்கை இல்லை தோழர் என்பது ஒரு வகையான பதில்இவர்கள் நேரிலும், இவ்வளவு மறைப்புகளுக்குப் பிறகும் கிடைக்கிற செய்திகளின் அடிப்படையிலும்மக்களுக்காக களத்தில் நிற்பதுஊழலற்று அல்லது பெருமளவு ஊழலற்று இருப்பதுசாதி மத ஒற்றுமைக்காகஅல்லது சாத மத ஒற்றுமைக்காக பெருமளவு உழைப்பதுபெண்களை மதிப்பது போன்றவைகளுக்காக கட்சிக்குள் வந்தவர்கள்இன்னொரு பிரிவினர்மார்க்சியமே தீர்வு என்று கருதுவதால் கட்சிக்குள் வந்தவர்கள்இப்போது முதல் மூன்று வரிகளைப் பார்ப்போம்பலரோ, சிலரோ, இடையில் ஒரு திரளோமார்க்சியம் குறித்து ஏதும் தெரியாதவர்கள்மார்க்சியமே தீர்வு என்று சொல்லும் நம் பிள்ளைகளில் ஒரு திரளுக்கு மார்க்சியம் தெரியாதுகடுமையாக உழைக்கும் சில பிள்ளைகள் சொன்னார்கள்மார்க்சியம்னா மக்களுக்கு உழைப்பதுமக்களுக்காகப் போராடுவதுமக்களுக்காகத் தியாகம் செய்வதுஇவற்றைத் தவறென்று யாரும் சொல்ல முடியாதுஆனால் இவ்வளவுதானாஇல்லை என்பதும்நாம் இங்கு பரிசீலித்த எதார்த்தமும் உண்மை என்றும் கட்சிக்குத் தெரியும்கட்சிக்கு இன்னும் ஷார்ப்பாகத் தெரியும்ஏதாவது செய்ய வேண்டும்கட்சி மட்டுமல்லநாமும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 02, 2024 05:10

January 1, 2024

அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து

                                                                                                                                                                               காரைக்குடியின் குறுக்கும் நெடுக்குமாய்
சின்னச் சின்னக் குவியல்களாய்க்
கையேந்தித் திரியும் குழந்தைகள் குறித்து வைத்திருந்தேன்
என்ன நடக்கும் என்று இப்படி புலம்பற என்று
பொதுவில் வைப்பதற்குத் தயங்கி
அழைத்து அறிவுரை கூறிய நண்பர்கள் உண்டு
ஏதும் நடக்குமா?
அப்படியே நடந்தாலும் முழு நிவாரணமாக அது அமையுமா?
”அவர்கள்” நம்புவதுபோல ஏதுமே நடக்காதா?
முடிவு சொல்கிற தெளிவோ அறிவோ எனக்கில்லை
புவியரசு அய்யா ஒருமுறை சொன்னார்,
”ஒரு குழந்தையும் அம்மாவும் நடந்து போகிறார்கள்
அம்மாவை ஒரு சிறு கூட்டம் தொந்தரவு செய்கிறார்கள்
என்ன நடக்கிறது என்று குழந்தைக்குத் தெரியாது
ஆனால் அம்மாவிற்கு ஏதோ ஆபத்து என்பதை அந்தக் குழந்தை உணர்கிறாள்
தன்னால் காப்பாற்ற முடியாது
அழுகிறாள்
சத்தமாய் அழுகிறாள்
அந்தச் சத்தம் அவளது அம்மாவைக் காப்பாற்றும் என்று நம்புகிறாள்
அந்த அழுகைச்சத்தமாக வருகிற எழுத்துதான் எழுத்து”என்று
அதைத்தான் செய்ய முயற்சிக்கிறேன்
சத்தம் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அவர்களுக்கு கேட்டிருக்கிறது
நிச்சயமாக ஏதேனும் நடக்கும் என்ற நம்பிக்கைத் துளிர்க்கிறது
அதன் பொருட்டே ஒரு கோப்பை தேநீர் குடித்தேன்
எல்லோரும் சத்தம் போட்டால் இன்னும் கொஞ்சம் உரத்துக் கேட்கும்
அவ்வளவுதான்
பெரியார் மண்
திராவிடம் ஆள்கிற பூமி
பண்டிதருக்கும், திராவிடத்திற்கும், இடதுசாரிகளுக்கும், அம்பேத்கரிஸ்டுகளுக்கும் நிச்சயமாக சொந்தமான பூமி
இந்தப் பூமியில் எந்தக் குழந்தையும்
அது எந்த மண்ணைச் சேர்ந்த குழந்தையாக இருந்தாலும்
கையேந்தக் கூடாது
புத்தகம் கையெடுக்க வேண்டும்
கூட்டம் கூட்டமாக குழந்தைகள் கையேந்துகிறார்கள் என்று கதறுவதும் அதற்காகத்தான்







All rea
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 20:03

எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்

 

30.12.2023காலை ஏழரை மணிகாரைக்குடிக்குள் நுழைந்ததும் ஒரு கடை ஓரமாக காரை நிறுத்திவிட்டு முகவரியை விசாரிக்க இறங்குகிறேன்ஐந்து அல்லது ஆறு குழந்தைகள் இருக்கும்கையேந்துகிறார்கள்இது இயல்பானதாகத் தெரியவில்லையாரோ பின்னிருக்கிறார்கள் என்று தோன்றுகிறதுஎல்லோரும் காரில் ஏறுங்க ஸ்கூலுக்குப் போகலாம் என்றதும் பறந்து விட்டார்கள்சராசரி வயது எட்டு இருக்கலாம்நமக்கும் அவசரம்பிறகு 12 மணி வாக்கில் நானும் செல்வராஜும் இளநீர் பருக அலைகிறோம்கடைக்கு வந்தால்அங்கும் மூன்றுபேர் கை ஏந்துகிறார்கள்அதே வயதுபடிக்கிறீங்களா சாமி?பறந்து விடுகிறார்கள்மதிய உணவிற்கு மல்லி ஓட்டல் வந்தால்சைவம் அசைவம் என்று இரண்டு ஓட்டல்கள் அடுத்தடுத்துஇரண்டின் வாயில்களிலும் பத்துப் பேருக்கும் அதிகமாககண்ணதாசன் மணி மண்டபம் அருகில்எங்கு பார்த்தாலும் கையேந்தும் குழந்தைகள்நிச்சயமாக இது ஒரு நெட்வொர்க்எந்த ஊர்க் குழந்தைகள்?எந்த மாநிலத்துக் குழந்தைகள் இவர்கள்?பின்னே யார்உடனே பதிவு போடுகிறேன்காரணம் நான்கு வருடங்களுக்கு முன் சென்னையில்இதேபோல ஒரு ஜனவரி ஒன்றில் நான்கைந்து சிக்னல்களில் இதேபோல குழந்தைகளைப் பார்க்கிறேன்ஆட்டோவில் அமர்ந்தபடி அழுகிறேன்தோழர் புஷ்பராஜ் தேற்றுகிறார்என்ன முடியும் என்னால்ஒன்று முடியும்எழுதுகிறேன்அடுத்த நாள் தோழர் வளவன் வசந்தா சித்தார்த்தா அழைத்து சில தகவல்கள் கேட்கிறார் தெரிந்ததை சொல்கிறேன்அடுத்தநாள்கிட்டத்தட்ட 10 குழந்தைகளை மீட்டுள்ளதாகவும்விடுதிக்கும் பள்ளிக்கும் ஏற்பாடுகள் நடப்பதாகவும் சொல்கிறார்போனிலேயே அழுகிறேன்வேறென்ன முடியும் நம்மால்?இப்போதும் நம்பிக்கை வருகிறதுஇதைப் படிக்கும் யாராவது ஏதாவது செய்ய முடியும்”பசி இல்லாத காரைக்குடி” என்ற அமைப்பின் தோழர் ஒருவர் உரையாடிக் கொண்டிருக்கிறார்அவர்கள் வெளியூர்ப் பிள்ளைகள் என்கிறார்கலக்டரிடம் பேசலாமே என்கிறேன்அந்தக் குழந்தைகள் அமைச்சரிடமே கையேந்தும் என்கிறார்
அந்தக் குழந்தைகளை எப்பாடு பட்டேனும் பள்ளிக்குள் கொண்டு சேர்த்துவிட வேண்டும்என்ன செய்வதெனத் தெரியவில்லை?யாராவது சொல்லுங்களேன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2024 16:15

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.