இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 38

January 15, 2024

உங்களுக்குள் இருக்கும் ஓராயிரம் விஷயங்களை எப்போதுத் தரப் போகிறீர்கள்

 
அன்புத் தோழர் மார்க்கண்டன் அவர்களுக்கு,
வணக்கம்
கணிணியில் எதையோ துழாவிக் கொண்டிருந்தபோது இந்தப் படம் கிடைத்தது

எப்படி இது இவ்வளவு நாள் என் கண்களில் படவில்லை என்று தெரியவில்லை
இனி என் இறுதிவரை இந்தப் படம் என்னிடம் பத்திரமாக இருக்கும்
அப்படிப் பிடிக்கும் தோழர் எனக்கு உங்களை
பேருந்தில் எனக்கான வேலைகள் இரண்டு
ஒன்று வாசிப்பது
அல்லது அலைபேசுவது
அன்று வாசித்துக் கொண்டிருக்கிறேன்
சிறுவாச்சூர்
ஏறிய நீங்கள் உங்களை அறிமுகம் செய்து கொள்கிறீர்கள்
எனது உரைகளைக் கேட்டிருப்பதாகவும் முகநூலில் வாசித்து வருவதாகவும்
சொல்கிறீர்கள்
அதன் பிறகுதான் முகநூலில் உன்னிப்பாக உங்களைக் கவனிக்க ஆரம்பிக்கிறேன்
உங்களது வாசிப்பின் கனம் கண்டு வியப்பின் உச்சிக்குப் போகிறேன்
தன்னடக்கம் எல்லாம் இல்லை
வாசிப்பவன்தான்
சமயத்தில் பிசாசு மாதிரி வாசிப்பவன்தான்
என்னைவிட ஆழமாகவும்
என்னைவிட அதிகமாகவும் வாசிக்கிற மனிதன் ஒருவர் எங்கள் ஊரில் இருக்கிறார் மதி என்று இளமதியிடம் சொல்கிறேன்
இந்த நேரத்தில் தம்பிகள் முருகதீட்சண்யாவும், துவாரகா சாமிநாதனும் என்னையும் யவனிக்காவையும் சிறப்பு செய்யும் விதமாக மயிலாடுதுறையில் ஒரு நிகழ்ச்சி செய்கிறார்கள்
நீங்கள் வருகிறீர்கள்
ஏதோ எனக்காக வந்துவிட்டீர்கள் போல என்று நினைக்கிறேன்
யவனிக்காவிற்காக வந்ததாக சொல்கிறீர்கள்
சிரிக்கிறேன்
ஒருமுறை தோழர் விஜயசங்கருடனான உரையாடல் கிட்டத்தட்ட ஒரு அரைமணி நேரம் உங்களைச் சுற்றியே வருகிறது
உங்களது கோவம் குறித்தே எஙகளது உரையாடல் நிகழ்கிறது
நான் மட்டும் அல்ல அவரும் உங்களது கோவத்தின் ரசிகர்தான்
ஆனால் அதை நீங்கள் வெளிப்படுத்தும் விதம் குறித்து இருவருமே கவலைப் பட்டோம்
யார்மீது வேண்டுமானாலும் சத்தியம் செய்து சொல்கிறேன்
பெரம்பலூரின் ஆகச் சிறந்த படிப்பாளியும் ஞானவானும் நீங்கள்தான்
எவ்வளவு இருக்கிறது உங்களிடம்
ஞானப் பொதி மூட்டையை உள்ளுக்குள் சுமந்தப்டி குழந்தைபோல சிரிக்கும் வெள்ளந்தி மனிதர் நீங்கள்
ஒன்று சொல்லவா
சமூகத்திற்கு,
குறைந்த பட்சம் முகநூல் சமூகத்திற்கு அப்படியே முழுதாக தன்னை ஒளிவு மறைவின்றி ஒப்படைத்துக் கொண்ட உன்னத மனிதர் நீங்கள்
ஒரு கட்டுரையை, கவிதையை, புதினத்தை, சிறுகதையை யார் சிறப்பாகத் தந்தாலும் கொண்டாடும் ரகம்
உங்களுக்குள் இருக்கும் ஓராயிரம் விஷயங்களை எப்போதுத்  தரப் போகிறீர்கள்  
உங்களது ஞானத்தில் எல்லோருக்கும் பங்கு உண்டு என்பதை நீங்கள் அவசியம் உணர வேண்டும்போக,இப்போது கோவம் குறைந்திருக்கிறது
உங்களது மொழி ஏகத்திற்கும் பக்குவப்பட்டிருக்கிறது
இதுதான் சிறந்த தருணம்
எழுதுங்கள்
கையேந்திக் கேட்கிறேன்
குழந்தைகளுக்கு என் முத்தம்
சகோதரிக்கு என் விசாரிப்புகள்
மீண்டும் ஒருமுறை கையேந்திக் கேட்கிறேன்
எழுதுங்கள்
நன்றி
அன்புடன்,இரா.எட்வின்15.01.2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 15, 2024 10:42

January 14, 2024

என்ன நியாயம் இது?

 

பாலின் கொள்முதல் விலையை மூன்று ரூபாய் உயர்த்தி இருக்கிறது மாநில அரசு

நாங்கள் பெரம்பலூர் பால் உற்பத்தியாளர் சங்கத்தில் இருந்துதான் பால் வாங்குகிறோம்

மாதா மாதம் முதல் தேதில் இருந்து நான்காம் தேதி வரைதான் பால் அட்டை வழங்கப்படும்

இந்த மாதம் அட்டை வாங்கிய பிறகுதான் கொள்முதல் விலையை அரசு உயர்த்துகிறது

மிக நல்ல விஷயம்

கொள்முதல் விலை உயர்ந்ததால் விற்பனை விலையை நான்கு ரூபாய் உயர்த்தியது பால் உற்பத்தியாளர் சங்கம்

இதுவும் சரி

அட்டை வாங்கியவர்கள் மிச்சத் தொகையை செலுத்தினால்தான் பால் தொடர்ந்து பெற முடியும் என்று பா. உ.சங்கம் பால் விநியோகிப்பவர்கள் மூலம் தெரிவித்தது

இதுவும் சரி

கட்டி விட்டோம்





அட்டையில் இரண்டாவதாக PAID என்று வைத்திருக்கும் சீல் அதற்கானது

எல்லாமே சரி

அரசு கொள்முதல் விலையை உயர்த்துகிறது

நீங்கள் விற்பனை விலையை உயர்த்துகிறீர்கள்

அரசு உயர்த்திய கொள்முதல் விலை தங்களுக்கு வரவில்லை பால் உற்பத்தியாளார்கள் பெரம்பலூரில் போராட்டம் நடத்தியதை14.01.2024 நாளிட்ட தீக்கதிர் கூறுகிறது

என்ன நியாயம் இது?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 22:40

48

 

ஒரு எட்டு நீ வந்து போனதுபோகிற போக்கில் நிகழ்ந்ததோஎன்னைப் பார்ப்பதற்கென்றேவோஎதுவாயினும்இனித்தது நீ வந்ததால்கனவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 21:01

‘பெரியாரியம்’ பெரியாருக்கு முன்பிருந்தே இருக்கிறது

 

பெரியார் மறைந்து அரை நூற்றாண்டு கடந்தும் ’பெரியாரியம்’ நீள்கிறதுஇன்னும் சொல்லப்போனால் அதற்கான தேவை இப்போது இன்னும் பேரதிகமாகக் கூடி இருக்கிறதுதமிழை இந்துவிற்குள் அடக்கும் பெருமுயற்சி பெரியாரை இன்னும் கூர்ப்படுத்திக் கொண்டுசெல்ல வேண்டியத் தேவையை நமக்குத் தருகிறதுஆனால்‘பெரியாரியம்’ பெரியாருக்கு முன்பிருந்தே இருக்கிறது என்கிறார் தோழர் தொ.பஉரையாடவும் வரலாறைக் கொள்ளவும் கடத்தவும் தேவை இருக்கிறதுஇருக்கிறதுதானே
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 14, 2024 08:51

January 13, 2024

49

 
தீண்ட
விரல்கள் தேவையில்லைதீண்டாத விரல்களும் தேவையில்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2024 22:46

50



அப்பா மாதிரியானஇன்னொருவரும்ஞாயிறு மதியம் செத்துப் போக
காரியம் இன்று
வாசலில்தேநீர்ப் பருகிக் கொண்டிருப்பவர்களாஇக் கடக்கையில்என்னைப் பார்த்துப் புன்னகைக்கிறார் அவர்
அவர்தான் செத்துப் போனாரேயாரது பின்ன?
யாராவாவது இருக்கும்இருக்கட்டும்
அவராகவே கொள்தல் மாயயையாக இருக்கட்டும்
மாயயைகள் சமயத்தில் இனிக்கும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2024 22:40

January 12, 2024

51

கீழே கிடந்த வண்ணத்துப்பூச்சி ஸ்டிக்கரை எடுத்த கிரிஷ்”இந்தா தாத்தா பட்டர்ஃப்ளை”
நீட்டியவாறே ஓடிவருகிறான்
தூக்கி அணைக்கிறேன்
பட்டர்ஃப்ளை படத்திற்கு முத்தமிட்டவன்எனக்கும் ஒன்று தருகிறான்
எட்டு கிலோ பட்டர்ஃப்ளையின் முத்த எச்சில் வரம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2024 19:57

52

 
எவ்வளவு அதட்டியும்
அடங்காமல்காட்டுக் கத்தலாய்க் கத்தும்மழைமீதான கோவத்தில்வகுப்புத் தலைவி ஒருத்திதனது ரஃப் நோட்டில்குறித்து வைக்கிறாள்
மழை AV
(AV - அடங்கவில்லை) 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2024 19:51

January 11, 2024

53

 

வீடு வந்ததும்பேத்தியிடம் காண்பிக்கிறேன்கொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேத்தியாய் என் சட்டையில் ஒட்டிக் கொண்ட அந்த வண்ணத்துப்பூச்சியை
”நோட்லதான வரைஞ்சேன்தாத்தாட்ட ஏன் போன”
அதட்டலுக்கு பயந்து மீண்டும் அதுபேத்தியின் நோட்டில் படமானது “ஐ, குட் பாய்” என்று கைதட்டி குதித்து குதூகலிக்கிறாள் பேத்திகொள்ளுத்தாத்தனின் நெஞ்சில் ஒட்டிக்கொள்ளும் கொள்ளுப்பேரனாய்’ என்று அருள்கூர்ந்து மாற்றித் தொடங்குங்கள்இரண்டாவது பத்தியை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2024 18:40

54

 டீ மாஸ்டரைகொஞ்சம் ஒதுங்க சொல்லிடீ போட்டுக் கொடுத்துவாக்கு கேட்டுவிட்டு நகரும் உங்கள் கண்களில்இஸ்திரிக்காரர்நாற்றுநடும் அக்காசித்தாள் எனஎல்லோரும் படுகிறார்கள்
மலக்குழி இறங்கும்என் தோழர்களைத் தவிர
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2024 18:31

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.