இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 37
January 18, 2024
"என் நண்பர்களையோ எதிரிகளையோ என் மரணத்தின் பொருட்டு துன்புறுத்தாதீர்கள்"
"என் நண்பர்களையோ எதிரிகளையோ என் மரணத்தின் பொருட்டு துன்புறுத்தாதீர்கள்" ரோஹித் வெமுலா.உன் எதிரிகள் விஷயத்தில் உன் கோரிக்கைக்கு தேவை இருக்கும் என்று நினைத்தாயா மகனே?
Published on January 18, 2024 10:03
“நல்லா பேசினீங்க அங்கிள்”
நேற்று முற்றிலும் புதிய அனுபவம் ஒன்று கிடைத்தது
பொங்கல் விழாக்களில் பேசிக்கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது
இப்போது அதைத் தவிர்த்திருக்கிறேன்
பொங்கல் விழாக்களின் மீது கோவம் என்றெல்லாம் நமக்கு ஏதும் இல்லை
ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களாக குழந்தைகள் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டிருப்பார்கள்
நிறைவு விழா என்பது குழந்தைகளுக்கானத் திருவிழா
அன்று குழந்தைகள் பரிசுகளைப் பெறுவதும்
மேடையில் அவர்கள் ஆடுவதும் பாடுவதுமான அனுபவம் இருக்கிறதே
அப்பப்பா...
அதில் சென்று பேசுவதென்பது இருக்கிறதே
அது,
குழந்தைகளின் மீதான வன்முறை என்பதை நான் புரிந்து கொள்வதற்கு கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் ஆனது
என்றால்,
கொண்டாட மட்டும்தானா தோழர்?
அரசியல் படுத்த வேண்டாமா?
விவரப்படுத்த வேண்டாமா?
ஒன்றும் வேண்டாம் என்பதே என் பதில்
அதை வேறு நாட்களில் வேறு வகையில் செய்ய வேண்டும்
அன்று ஒருநாள் அந்தக் குழந்தைகளோடு கரைந்து விடுங்கள் என்பதும்
பிறகொருநாள் கூப்பிடுங்கள்
வந்து பேசிவிட்டு வருகிறோம் என்பதும்தான் DYFI பிள்ளைகளுக்கான எனது வேண்டுகோளாக இருக்கிறது
கடந்த மூன்று வருடங்களாக எங்கள் தெருவில் பொன்கல் விழாவை நண்டுகளும் நடுசுகளும் கொண்டாடுகின்றனர்
ரெண்டு நோட்டு உசரமே இருக்கிற வாண்டுகள் நோட்டைத் தூக்கிக் கொண்டு வசூலுக்கு வருவதும்
விழாவை நடத்துவதும்
மீண்டுமொரு அப்பப்பா
நேற்று விழா
பரிசுகள் கொடுக்க 11.30
பேசுங்கறாங்க
மறுக்கிறேன்
ஊர் ஊர்ரா பேசப் போறீங்கன்னு டீச்சர் சொல்றாங்க. எங்களுக்கு பேச மாட்டீங்களா?
இல்லீங்கம்மா, நாளைக்கு பசங்க பள்ளிக்கூடம் போகனும்ல...
”அத நாங்க பாத்துக்கறோம் அங்கிள், நீங்க பேசுங்க”
விழாவிற்காக யூனிஃபாமோடு இருந்த பெண் குழந்தைகள் கத்துகிறார்கள்
இது ஆச்சரியமானது
இப்ப நான் யாருக்குப் பேசறது?
பெரியவங்களுக்கா?
பொடிசுங்களுக்கா?
முடிக்கவில்லை,
ரெண்டுபேருக்கும் பேசுங்க அங்கிள் என்கிறாள் ஜனா
எதிரே கலைந்தது போக 150 பேர்
அங்கங்கே வீட்டு வாசலி மக்கள்
ஜாதி பார்க்காத, மதம் பார்க்காத எங்கள் தெரு குறித்து பேசுகிறேன்
விசிலடிச்சுக்கிட்டே இருக்கிறாங்க பெண் பிள்ளைகள்
அரை மணி நேரத்திற்கும் மேல் பேசுகிறேன்
யாரும் எழுவில்லை
முடிச்சிட்டு வரேன்
வாசிப்பு முகாம் எப்ப அங்கிள் என்கிறா லேகா
வருகிறேன்
விட்டு வாசலில் அமர்ந்திருக்கிறது
மூன்றாவது படிக்கும் குழந்தை ஒருத்தி வந்து கை கொடுத்து
“நல்லா பேசினீங்க அங்கிள்” என்கிறாள்
உனக்கென்னா புரிஞ்சுது என்று வியந்து சிரித்தபடி கேட்ட விட்டுவிடம்
ஆடுங்க சொன்னாங்க, பாடுங்க சொன்னாங்க, விளையாடுங்க சொன்னாங்க, படிங்க சொன்னாங்க, அல்லா, ராமர்னு சண்ட போடாதிங்க சொன்னாங்க
அய்யோ சாமி
எங்க தெருவில் எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு போல
ஆனால் இப்பவும் சொல்கிறேன்
குழந்தைகளின் கொண்டாட்டத்தில் குறுக்கிட வேண்டாம் நாம்
சன்னமான நெறிப்படுத்துதல் போதும்
Published on January 18, 2024 00:28
003
இருக்கிறேன்என்பதைக்கூடஇல்லையென்று யாரும்நினைத்துவிடக் கூடாதுஎன்பதற்காகவேசொல்ல வேண்டியிருக்கிறது
Published on January 18, 2024 00:01
January 17, 2024
45
பொம்மைக்காக ஏந்தப்பட்ட
குழந்தையின் கைகளில் பணக்கட்டும்பணத்திற்காக ஏந்தப்பட்டமனிதனின் கைகளில் பொம்மையும் விழகடாசி எறிந்துவிட்டுகடந்து போயினர் இருவரும்
Published on January 17, 2024 19:50
ஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாது
காந்திமதி அக்கா விஷயமாக நானும் கலையும் தோழர் அன்பரசுவிடம் பேசிவிட்டுக் கிளம்பும்போது Kalai Mani யிடம் டீ சாப்பிடலாமா”ஒரு முறைப்புஅது என்னமோ தெரியல டீ கேட்டாக்க எல்லாப் புள்ளைங்களுமே இப்படித்தான் மொறைக்கிறாங்கஆனாலும் உடனே சிரித்தபடி வாங்கித் தருகிறாள்இந்த ஈர மனசுதான் கலை. நூறு வருஷம் நீ இப்படியே நோய் நொடி இல்லாம இரு கலைடீ குடித்து முடித்ததும் இருவரும் கிளம்பறோம் ஒரு அம்மாவும் பிள்ளையும் வண்டியில் இருந்து இறங்குகிறார்கள்நான் குழந்தையைப் பார்த்து சிரித்தபடியே ஹாய் சொல்லுகிறேன்குழந்தை கண்டுகொள்ளவே இல்லைஅந்தப் பிள்ளையின் அம்மா அந்தக் குழந்தையை அழைத்து யார் சிரிச்சாலும் சிரிக்கனும் சொல்லி இருக்கேன்ல தாத்தாட்ட ஹாய் சொல்லு என்று சொல்லவே ஹாய் சொன்னான்வரம்கலை நினைத்திருக்கக் கூடும்இது ஒன்னு மட்டும் லூசு இல்லலூசுங்களாலதான் உலகம் இயங்குது தாயேநீ நல்லா இரு தாயேஒரு டீக்கெல்லாம் ரெண்டுதரம் எல்லாம் வாழ்த்த முடியாதுஇது எனக்கு ஒரு ஹாய் வாங்கிக் கொடுத்த அந்தப் பொண்ணுக்குAll reaction
Published on January 17, 2024 02:45
January 16, 2024
ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்
இதுவரை என் புத்தகம் எதுவும் பாரதி புத்தகாலயம் வழி வரவில்லை என்ற குறை எனக்கு எப்போதும் உண்டுஇன்னும் கொஞ்சம் எழுதக் கற்றுக் கொண்டுதான் தோழர் சிராஜிடம் வம்பு செய்ய வேண்டும்கொஞ்சம் காலம் ஆகும் அதற்குஅந்தக் குறையைதோழர் மால்கம் எழுதிய “பகை நன்று” மற்றும்தோழர் Theni Sundar அவர்களின் ”மாணவர் மனசு”ஆகிய இரண்டு பாரதி வெளியீடுகளுக்கும் முன்னுரை எழுதி தீர்த்துக் கொண்டிருக்கிறேன்ஒரு வழியாக எமது பதிப்பகத்தின் வழி என் எழுத்தும்
Published on January 16, 2024 22:17
புள்ளையோட கோவத்த சரி பண்ணுங்கப்பா என்பது இரண்டு

தோழர் யாழ் தண்விகா விற்கு அவரது மகள் தனு எழுதிய கடிதம்சொல்ல ரெண்டுநான் படித்த நல்ல பத்து கடிதங்களில் இதுவும் ஒன்று என்பது ஒன்றுபுள்ளையோட கோவத்த சரி பண்ணுங்கப்பா என்பது இரண்டுஇந்தக் கடிதம் படித்து இரண்டு ஆண்டுகளாக இதன் ரேட்டிங் குறையவே இல்லை என்பது மூன்று
Published on January 16, 2024 21:28
January 15, 2024
47
தற்கொலை செய்யத் தெரியாது
யாரையும் எங்களுக்கென்ற
தைரியத்தில்
எத்தனை காலத்துக்கு
எங்களை
தற்கொலை செய்வீர்கள்
Published on January 15, 2024 22:03
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author
(yet),
but they
do have a blog,
so here are some recent posts imported from
their feed.
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)