இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 36

January 25, 2024

ஆனாலும் கிழவனை அழகாத்தான் கொடுத்திருக்க

 

[image error]

போ சாமி,போய் உன் வேரைத் தேடுஇப்படி ஒரு படம் செய்வதற்கான தொழில் நுட்ப அறிவு உனக்கு வருவதற்கான காரணங்களில் ஒருவன் இந்தக் கிழவன் என்பதும்உனக்கு அறிவே வந்துவிடக் கூடாது என்று போராடியவர்களும்நீ அறிவைப் பெற்றதும்உன் அறிவு கொண்டே உனக்கு அறிவு வரக் காரணமான இந்தக் கிழவனை இப்படிக் கேவலப் படுத்தத் தூண்டியவர்களும் அவர்கள் என்பதும் தெரிய வரும்போ சாமி,போய் உன் வேரைத் தேடி விழிப்படைய வழி தேடுஆனாலும் கிழவனை அழகாத்தான் கொடுத்திருக்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2024 01:51

January 24, 2024

சாண்டக் குடிக்கி




“அவள்வாய்வரை வந்துவிழுங்கியசொற்களின்எச்சங்கள்கண்ணீராய்க்கரைகிறது” 
என்று தனது “அந்தச் சித்தாளின் தலையில் வீடிருந்தது” தொகுப்பில் எழுதி இருப்பாள் இளமதி
ஆணின் அடக்குமுறைகளுக்கு எதிராக,
ஆதிக்கத்திற்கு எதிராக தொண்டைவரை வரும் சினச் சொற்கள் அதற்குமேல் கண்ணீராக மாறிவிடும் என்று இதைக் கொள்ளலாம்
ஒரு பெண்ணின் சினம் கண்ணீராக மாறிவிடும் என்பதை
இயலாமையாகவும் கொள்ளலாம்
அல்லது,
அவளது கண்ணீரை ஆணாதிக்கத்திற்கு எதிரான வாள் என்றும் கொள்ளலாம்
“ஏழை அழுத கண்ணீர் கூரிய வாளொக்கும்” என்பார்கள்
ஆனால்
தொண்டை வரை அல்ல
கடுஞ்சொற்களாகவே ஆணாதிக்கத்தின் மீதும் உழைக்கும் பெண்கள் பேசி இருக்கிறார்கள் 
ஆணாதிக்கத்தின் மீதான சம்மட்டியாகத்தான்  “சாண்டக்குடிக்கி” என்ற கெட்ட வார்த்தையே வந்தது என்று அந்த வார்த்தை வந்த வரலாற்றினை
20.01.2024 அன்று பெரம்பலூரில் நடைபெற்ற  அரசியல் வகுப்பில் வகுப்பெடுத்த திருச்சி புறநகர் மாவட்டத்தின் செயலாளர் தோழர் ஜெயசீலன் கூறினார்
எங்க அம்மாயி “சாண்டக் குடுக்கி” என்ற கெட்ட வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தும்
கிழவிக்கு இந்த ஆங்கிலம் மிக நன்றாக வரும்
சாண்டு என்றால் மூத்திரம்
ஆகவே ‘சாண்டக் குடிக்கி’ என்பதை மூத்திரக் குடிக்கி என்றும் கொள்ளலாம்
ஆனால் கிழவி ஒரு போதும் இந்த வார்த்தையை பெண்கள் மீது பிரயோகப் படுத்தியதே இல்லை
சரி, கிழவிக்கு ஆண்கள்மீது உள்ள கோவம் அப்படிப் போல என்று நினைத்துக் கொள்வேன்
தோழர் ஜெயசீலன் சொன்ன வரலாறு சிலிர்க்க வைத்தது
தஞ்சையில் ஆண்டைகளுக்கு தமது பண்ணையாள் மீது கோவம் வந்தால்விளாசுவார்களாம்
அப்போது அந்தப் பண்ணையாளின் மனைவியை அழைத்து அவளது கணவன் அடிபடுவதை வேடிக்கைப் பார்க்கச் செய்வார்களாம்
ஒருக் கட்டத்தில் ஒரு கலையத்தைக் கொடுத்து அவனது மனைவியை அதில் அவளது மூத்திரத்தைப் பிடித்துவரச் செய்வார்களாம்
அந்த மூத்திரத்தை அவனைக் குடிக்கச் செய்வார்களாம்
ஒருநாள் இரவு பண்ணையாள் ஒருவன் குடித்துவிட்டு வந்து தனது மனைவியை அடிக்க ஆரம்பித்திருக்கிறான்
அவன் அன்று காலை தனது பண்ணையாரிடம் அடிபட்டு தன் மனைவியின் மூத்திரத்தையும் குடித்திருக்கிறான்
அடி தாங்காத அந்தப் பெண் ஒரு கட்டத்தில்
காலையில அந்த மிதி வாங்குன என் சாண்டக் குடிச்சவனே. ஆம்பளன்னா உன் வீரத்தை அங்க போய்க் காட்டு என்றாளாம்
ஆக, சாண்டக் குடிக்கி என்பது பெண்ணெழுச்சியின் ஒரு கூறு  
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2024 21:46

41

 
அகப்படவில்லையா
படிக்கிறமாதிரியெதுவும்
முடித்துவிட்டானா ஏற்கனவே
இருக்கிறதனைத்தையும்
அல்லது இதுதானா
அவனது குணமே
எதுவானால் என்ன
நிம்மதியை வைத்துவிட்டுப் போயிருக்கிறான்
புரட்டிக் கொண்டிருந்தபுத்தகங்களில் எதையும்
சுட்டெடுத்துப் போகாத புத்தன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2024 20:57

சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி

 

சுதந்திரத்திற்கு காரணம் காந்தியல்ல சுபாஷ்தான் என்பதை ஏற்பதில் சங்கடமில்லையார் கூடயார் குறைச்சல் என்பதல்ல எமக்கு பிரச்சினைஅது உண்மையெனில்சுபாசுக்கு வைக்காமல் பட்டேலுக்கு ஏன் சிலை வைத்தீர்கள் ரவி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2024 09:58

42

 
மேற்கிருந்து கிழக்காக நானும்
கிழக்கிருந்து மேற்காகஒருவரை ஒருவர் கடக்கிறோம்என்னசென்றுகொண்டிருந்த நானும்வந்துகொண்டிருந்த அவரும்இப்போதுசென்றுகொண்டிருக்கிறோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2024 05:30

January 23, 2024

அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்

 

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் ஒருவரின் மகளது திருமணத்திற்குப் போயிருந்தோம்காரில் இருந்து (வாடகைக் கார்தான்) இறங்குகிறோம்கண்ணில் படுபவர்கள் எல்லாம் புன்னகைக்கிறார்கள்தலையை அசைத்து “வாங்க” சொல்கிறார்கள்இன்னும் சிலர் கையெடுத்து வணங்கி வரவேற்கிறார்கள்யாரென்றே தெரியாதுஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும்போது “சாப்டீங்களா” கேட்கிறார்கள்நண்பரின் நெருங்கிய தோழர்கள் 75 பேர் யூனிஃபார்மில் சுழல்கிறார்கள்கொஞ்ச நேரத்தில் எங்களை அறியாமலே நாங்களும்“வாங்க” சொல்கிறோம்“சாப்டீங்களா” கேட்கிறோம்Kalai Mani நான்கைந்து பேரை ”வாங்க சாப்பிடலாம்” என்று டைனிங் ஹாலுக்கு அழைத்துப் போகிறாள்யாரென்று அவளுக்கும் தெரியாதுஅவள் யாரென்று அவர்களுக்கும் தெரியாதுபாப்பாவின் அம்மாவைப் பார்த்து“ஏம்மா, கல்யாணம் அவளுக்கா? உனக்கும் உங்க வீட்டுக்காரருக்குமா. சும்மா மெதக்கறீங்க” என்று கேட்கிறேன்வெட்கப் படுகிறார்அது ஒரு எளிய திருமணம்சம்பந்தப்பட்டவர்களிடம் மட்டுமல்லகலந்து கொண்ட எல்லோரது கண்களிலும் “அன்பு” தென்பட்டதுஎல்லோரிடத்தும் மகிழ்ச்சிபேரனந்தம்அப்படி ஒரு நிறைவை எல்லோரிடத்தும் காணமுடிந்ததுஇவை அத்தனையும் எங்களையும் அப்பிக் கொண்டதுஅப்பிக்கொண்ட அந்த அந்த அன்பும் சமாதானமும் இந்த வார்த்தையை தட்டச்சு செய்கிறவரை இருக்கிறதுஇன்னும் கொஞ்ச காலத்திற்கு இருக்கும்காரோட்டிய பிள்ளைக்கு அழைப்புமகிழ்ந்து பேசுகிறான். அப்படி கவனிச்சாங்கப்பா, சந்தோசம்னா சந்தோசம், வந்து சொல்கிறேன் என்கிறான்ஒரு எளிய திருமணம்போதாமை இருக்கும்கடன் இருக்கும்எல்லாம் கடந்துஅந்த அன்பு, புன்னகை, மகிழ்ச்சிநிறைவுஅன்பிற்குரிய என் நண்பர்களேஅவ்வளவு பெரிய ஆலயத் திறப்புஎவ்வளவு அதிகமான அன்பைத் தந்திருக்க வேண்டும்எவ்வளவு மகிழ்ச்சியைத் தந்திருக்க வேண்டும்எவ்வளவு ஆழமான சமாதானத்தைத் தந்திருக்க வேண்டும்ஆண்டவன் வீடு என்கிறீர்களேஎனில்,அந்தப் பேராலயத்தின் திறப்பு எத்தனை நிறைவைத் தந்திருக்க வேண்டும்
ஏன் இவை எல்லாம் விளையவில்லை?
ஏன் மண்ணெங்கும் வெறுப்பு?இப்போதும் சொல்கிறோம்ஆண்டவன் இல்லைஆனால் உண்டு என்று நம்பும் உங்கள் நம்பிக்கையை ஏற்கிறோம்உங்கள் தவறைச் சுட்டினால் ராமனை குற்றம் சொல்கிறோம் என்று தயவு செய்து திசை திருப்பாதீர்கள்அந்த ஆலயத்தின் மீது எங்களுக்கு புகார் இல்லைகட்டப்பட்ட இடம் மீதுதான்இப்போதாவது யோசியுங்கள்தவறு புரியும்எல்லோரையும் அரவணைத்து எதிர்காலத்தை அணுகுங்கள்”யாரொடும் பகை கொள்ளலன்” என்பது நீங்கள் கொண்டாடும் கம்பன் சொன்னதுஅன்புஅன்பு மட்டுமே இந்தியாவைக் கட்டும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2024 20:18

அன்போடு எதிர்கொள்வோம்

 

அப்பாவின் உடல் கிடத்தப்பட்டிருக்கிறதுமேலே பைபிள் வைத்திருக்கிறார்கள்என்னைவிட வயது மூத்த, அப்பாவிடம் படித்த ஒரு அண்ணன் எட்டாம் வகுப்பு புத்தகங்களை எடுத்து வந்து பைபிளை ஒட்டி அடுக்குகிறார்என் தோளைப் பிடித்தபடி “எட்டாங்கிளாஸ் சார்”ததும்புகிறார்தெருக்காரர்கள் என்னைப் பார்க்க வேண்டும் என்று அழைப்பதாக கீர்த்தி சொல்கிறாள்போகிறேன்தம்பிசொல்லுங்க அண்ணேஅது வந்து, அப்பா எங்களோடதான் ஒன்னு மண்ணா இருந்தாங்கதெரியுங்ககண்ணேஅப்பாவ உரிய மரியாதையோட நாங்களே ஈமக்காரியம் செய்ய அனுமதிக்க வேண்டும்அப்பா இந்தத் தெருவோட சொத்துதெருவே செலவு உள்ளிட்டு எல்லாத்தையும் செய்ய நீங்க அனுமதிக்க வேண்டும்சரிங்கண்ணேகொஞ்ச நேரத்தில் தேங்காய் உடைக்கிறார்கள்பொதுவாகவே எங்கள் குடும்பத்தை சாதி கெட்ட குடும்பம், மதங்கெட்ட குடும்பம் என்று சொன்னவர்கள் உண்டுசாதி கெட்டு, மதம் கெட்டு இருப்பதில் திமிர் உண்டுஇந்து முறைப்படி இறுதிச் சடங்கு என்றதும் உறவினர்கள் சிலர் கோவத்தோடு கிளம்புகிறார்கள்ஒன்றே ஒன்றுதான்அவர்கள் தழு தழுத்து என்னிடம் கேட்டது அன்பின் உச்சம்உடனே நான் அதை ஏற்றதும் அன்புதான்எது வேண்டுமானாலும் நடக்கட்டும்அன்போடு எதிர்கொள்வோம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2024 05:11

January 22, 2024

கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது

 



பெரம்பலூரில் ”தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” திறக்கிறார்கள்.
அதற்கென்ன?
வீடு வீடாக வந்து அழைப்பிதழைத் தந்து போனார்கள்
அதற்குமென்ன?
இருக்கிறது
கொஞ்சம் கடவுள், கொஞ்சம் மொழி என்று இருக்கிறது
தேவராயன் நகைக் கடை சென்னை சில்க்சின் பகுதி
அவர்களுக்குத்தான் ”ஸ்ரீகுமரன் தங்க மாளிகை” என்று இருக்கிறதே. பிறகு ஏன் “தேவராயன் கோல்ட் அண்ட் டைமண்ட்ஸ்” என்று பெயர் வைக்க வேண்டும்
வேறொன்றும் இல்லை,
இவர்கள் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நகைக் கடைகளை திறக்க இருக்கிறார்கள். அந்த மக்கள் தமிழ்க் கடவுளை ஏற்கத் தயங்குவார்கள் என்பதாலும்
தங்க மாளிகை என்பதை அவர்கள் உச்சரிக்க ஏதுவாக இல்லாததாலும்
தேவராயன் என்று பெயரை மாற்றி இருக்கிறார்கள்
 




 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2024 23:35

43

 

பெய்துகொண்டிருந்த மழை நிற்கத் துவங்குவதாகவும்
நின்று கொண்டிருந்ததால் தனக்கு கால் வலிப்பதாகவும்பாட்டி நாற்காலியில் அமர நின்றால் மழைக்கும் கால் வலிக்குமே என்று நாற்காலி வரைகிறாள் பேத்தி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 22, 2024 23:00

January 21, 2024

மாறாக வெறுப்பல்லவா இருக்கிறது

 

இதே மாதிரி ஜனவரி மாதத்தில் ஒருநாள்தங்கை தீபாவின் பையனுக்கு மேஜர் அறுவைபிறந்து மூன்றாவது நாள்தீபா மணப்பாறையில் ஒரு மருத்துவமனையில்குழந்தை திருச்சி அமெரிக்கன் மருத்துவமனையில்மால் ரொட்டேஷன்பள்ளிக்கு வந்து இருக்கிற சன்ன சன்னமான வேலைகளை அழுதுகொண்டே முடித்துவிட்டு விடுப்பெடுத்துக் கொண்டு கிளம்ப எத்தனிக்கையில்ராஜா வந்து விடுப்பு கேட்கிறான்எங்க சாரோட பாப்பாக் குழந்தைக்கு ஆபரேஷன் சார்கூட இருக்கனும்பொத்துக் கொள்கிறதுஅவனது கைகளைப் பற்றிக் கொள்கிறேன்நாற்பது அறுபது என்பதுதான் வாய்ப்பு என்பதை நானும் தோழர் கணேசும் மட்டுமே அறிவோம்அப்போது ஒரு அம்மா வருகிறார்தெரிந்தவர்தான்ரெண்டு நாளா அழுதுட்டே இருக்கியாமே சாமி, கொஞ்சம் குனி என்கிறார்நெற்றியில் துன்னூறை கோடாக கிழிக்கிறார்நீ நம்ப மாட்ட, ஆனா கிழக்கமா திரும்பி இருக்கிற ஏந்தாயி கைவிடமாட்டாஅவளாச்சு நானாச்சு என்கிறார்கை எடுத்து கும்பிட்டு நன்றி சொல்லிவிட்டு சுந்தரபாண்டியனை அழைத்து அநேகமாக கல்விச் சான்றிதழ்தான் கேட்பார், கேட்டால் செலவத்திடம் கையொப்பம் பெற்று அந்த அம்மாவிடம் கொடுக்குமாறு கூறுகிறேன்ராஜா வண்டியை எடுக்கிறான்அந்த அம்மா அறியாதவாறு துன்னூறை அழித்துக் கொண்டு கிளம்புகிறேன்போகும் போதும் விசும்பி இருக்கிறேன்”ஒன்னும் ஆகாது சார், நான் கிறிஸ்டியன்தான் ஆனா அந்த அம்மா வேண்டுதலே போதும் சார். பவரான ஆத்தா சார்” என்கிறான் ராஜாஇது பக்திஇது சக மனிதன்மீதான அன்புஇது சக மனிதனின் துயர் நீங்குவதற்கான வேண்டுதல், பிரார்த்தனை”ஆத்தா” என்ற அந்தத் தாயின் கத்தல் நம்பிக்கைஉங்களது ஜெய்ஸ்ரீராம் கோஷத்தில் இவை ஏதும் இல்லை நண்பர்களேமாறாக வெறுப்பல்லவா இருக்கிறதுஇதுவும் ஒரு டிசம்பர் ஆறுதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 21, 2024 20:16

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.