இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 32

February 28, 2024

இதைத்தான் காந்தி செய்தார்

 காந்தி முஸ்லிம்களுக்காக மட்டுமே எப்போதும் பேசினார் என்பது காந்தியைக் குறித்து அவரது எதிரிகள் எப்போதும் வைக்கும் குற்றசாட்டுகளில் ஒன்று

கோட்சேயும் காந்தி மீதான தனது முக்கியமான குற்றச்சாட்டுகளுள் ஒன்றாக இதை வைத்தான்1947 ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் பகுதியில் இருந்து வெளிவந்துகொண்டிருந்த DAWN என்ற பத்திரிக்கையின் ஆசிரியர் பாகிஸ்தான் பகுதியில் இருக்கும் இந்துக்களின் பாதுகாப்பு குறித்து முஜிபுர் ரஹ்மானிடம் வாய் கிழிய பேசும் காந்தி, இந்தியாவில் உள்ள முஸ்லிம்களின் பாதுகாப்பு குறித்து பேசுவாரா? என்று கேட்டிருந்தார்காந்தி கோவமேப் படவில்லை. அவர் சொன்னார்நான் எந்தப் பகுதியில் வசிக்கும் எந்த வகை சிறுபான்மையினராயினும் அவர்களது பாதுகாப்பு குறித்து கவலைப் படவும் பேசவுமே செய்வேன்நான் முஜிபுரிடம் பேசுவதுபோலவே ஜவஹரிடமும் பேசிக்கொண்டுதான் இருக்கிறேன்என்று சொல்லியதோடு நிறுத்தாமல்டான் பத்திரிக்கையின் ஆசிரியரும் பாகிஸ்தானில் வாழும் சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து உத்திரவாதமளிக்கக் கடமைப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார்அவரும் இதை ஏற்கிறார்இதுதான் காந்திஒருக்கால் இலங்கையில் தமிழர்கள் பெரும்பான்மையாகவும் சிங்களவர்கள் சிறுபான்மையாகவும் இருந்து சிங்களவர்களை தமிழர்கள் தாக்கிக் கொண்டிருந்தால் தான் சிங்களவர்களுக்கு ஆதரவாகத்தான் எழுதுவேன் என்று ஒருமுறை தோழர் இன்குலாப் கூறினார்இதைத்தான் காந்தி செய்தார்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 28, 2024 23:23

February 24, 2024

February 22, 2024

உறுதியான குரலில் சொன்னார் பெரியார்

ஒரு கட்டத்தில் “காந்தி ஒழிக” என்றுகூட பேசியவர் பெரியார்
ஆனால், காந்தி இறந்தபொழுது அப்படி வருந்தினார். ஒருபடி மேலே சென்று இந்த தேசத்திற்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் கோரினார். பெரியாரை அதுவரை காந்தி எதிர்ப்பாளராகவே பார்த்து வந்தவர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.







ஏன், ஏனிந்த திடீர் மாற்றம்?
பெரியார் சொன்னார்,
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு”
இந்த ஆறு சொற்களும் ஆழமானவை. எதையும் போகிற போக்கில் சொல்லும் வழக்கமற்ற பெரியார் இதையும் கூர்ந்த கவனிப்பிற்குப் பிறகே சொல்கிறார்.
இந்திய சுதந்திரத்தை தந்தை பெரியார் கொண்டாடவில்லை. அதைத் துக்க நாளாக என்று அறிவிக்குமளவிற்கு சென்றார். அவரது இந்த முடிவை அண்ணாவேகூட ஏற்கவில்லை.
காந்தி இதைத் துக்க நாளாகவெல்லாம் அறிவிக்காவிட்டாலும் இந்த விடுதலையில் இருக்கும் போதாமையைத் தன் இறுதிக் காலத்தில் உணர்ந்தவராகவே இருந்தார்
விடுதலை நாள் நெருங்க நெருங்க காந்தி ஒருவித மனச்சோர்வோடு இருந்ததை துயரத்தோடும் இருந்ததை அவரைச் சந்தித்த நண்பர்கள் உணர்கிறார்கள். ஏன் என்று வினவுகிறார்கள்.
தாம் உண்மையில் உணராத ஒரு மகிழ்ச்சியை தம்மால் வெளிப்படுத்த முடியாது, தன்னால் ஒருபோதும் அப்படியெல்லாம் பாசாங்கு செய்ய முடியாது என்று  20.07.1947 அன்று காந்தி கூறுகிறார்.
ஆக, பெரியார் அளவிற்கு தீவிரமாக வரப்போகும் விடுதலைகுறித்து கோவம் இல்லாதவராக இருந்தபோதிலும் இது மக்களுக்கான விடுதலையாக இருக்கப்போவதில்லை என்பதை உணர்ந்தவராகவும் அதன்பொருட்டு துயறுற்றவராகவுமே இருந்தார்
“உண்மையான சுயார்ஜ்யம் என்பது ஒரு சிலர் அதிகாரம் பெறுவது அல்ல. அதிகாரம் பெற்றவர்கள் தவறு செய்யும்போது அதை எதிர்ப்பதற்கான பலத்தை அனைவரும் பெறுவது”  என்பதை வலியுறுத்தி வந்த அவர் விடுதலை நெருங்குகிற காலத்தில் அது அப்படியாக இருக்கப் போவதில்லை என்று உணர்ந்து நொந்துபோனவராகவே இருந்திருக்கிறார்.
சுரண்டவும் செய்வார்கள், சுரண்டுபவர்களின் கால்களில் விழுந்து கிடக்கவும் செய்வார்கள் என்பதை உணர்ந்தவராகவும் துயருற்றவராகவே இருந்திருக்கிறார்.
“இந்தியை சென்னை மாகாணம் மட்டும் ஏற்க மறுக்கிறதே. அதை எப்படிப் புரிந்து கொள்கிறீர்கள்  என்று 1925 வாக்கில் தம்மிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு “அது, சிறுபான்மையினரின் கொடுங்கோண்மை” என்று பதில் சொன்னவர் காந்தி.
இன்னும் எழுத்துவடிவம் இல்லாத மொழிகள் அழிந்து இந்தி வளம் பெற வேண்டும் என்றுகூட அந்தக் காலகட்டத்தில் ஆசைப்பட்டவர் அவர்.
ஆனால் அந்த சிந்தனை அவரது இறுதிக் காலத்தில் மாறி இருந்தது
வங்கப் பிரிவினை குறித்து அவரிடம் 1947 ஜூலை மாதத்தில் கேட்கப்பட்டபோது
இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் கிழக்கு வங்கம் என்றும் இந்துக்கள் அதிகம் வாழும் மேற்கு வங்கம் என்று பிரிக்கப்பட்டாலும் இரண்டு பகுதிகளிலும் வாழும் இஸ்லாமியரும் இந்துவும் வங்க மொழியைத்தான் பேசுவார்கள். அவர்கள் வங்காளிகள் என்ற பார்வை அவருக்கு வந்திருந்தது
இந்தியர்கள் அனைவரும் மற்ற இந்திய மக்களின் மொழி மற்ரும் பண்பாடு குறித்து அறிந்தவர்களாகவும் மதிப்பவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் கோருகிறார்
இந்த காந்தி நம்மிடம் வருவதற்கு காலமாகி இருக்கிறது
தந்தை பெரியாரோ காந்தியிடம் உருவாகிக் கொண்டிருந்த இந்த மாற்றக்கங்களை கவைத்தவராகவே இருந்திருக்கிறார்
அதனால்தான் உறுதியான குரலில் சொன்னார் 
“வாழ்ந்த காந்தி வேறு, செத்த காந்தி வேறு 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 22, 2024 20:47

February 21, 2024

அன்பற்று இருத்தல் குற்றம்


”அறம்” என்பது நமது கல்வியின் அடிப்படைக் கூறுகளுள் ஒன்று. மற்ற எந்த பூமியை விடவும் தமிழ் மண் அறத்தின்பால் விருப்பத்தோடு நிற்கக்கூடியது. அதனால்தான்தனது பச்சைக் குழந்தைகளுக்கு எழுதச் சொல்லித்தரும் முன்பே ‘அறம்செய விரும்பு’ என சொல்வதற்கு சொல்லித் தருகிறது

 

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில்  ‘அறம் செய்’ என்று குழந்தைகளுக்கு சொல்லித் தரவில்லை,

 

‘அறம் செய விரும்பு’ என்று கற்பிக்கப்படுகிறது

 

அறம் செய்வதன்பது ஒரு செயல். அறம் செய விரும்பு என்பது ஒரு செயல். விருப்பத்தோடு அறத்தை செய்வதென்பது மற்றுமொரு செயல்.

 

இது மூன்றையும் ஒன்றெனக் குழப்பிக் கொள்வது பிழையானது

 

அறம் என்பது ஒரு செயல் என்பதை சொல்லித் தருகிறோம். அதன் பிறகு அந்த விழுமியங்கள் மிக்க அறத்தை செய்வதற்கு ஆசைப்பட வேண்டும் என்று குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம். உச்சமாக, விருப்பத்தோடு அதை செய்ய வேண்டும் என்று நாம் நமது குழந்தைகளுக்கு சொல்லித் தருகிறோம்  

 

மற்ற இடங்களில் அறம் என்பது சட்டம், நிபந்தனை அல்லது இதுபோன்று கட்டாயமாக செய்ய வேண்டிய வேறு எதுவோ ஒன்று

 

தமிழ் மண்ணில் அறம் என்பது விருப்பம்

 

கல்வி கற்பதன் முக்கியமான இரண்டு நோக்கங்களாக

 

1)  அறத்தின் வழி நிற்பது
2)  அறம் மறுப்பதை செய்யாது நிற்பது  

 

என்பவை முன்வைக்கப்படுகின்றன

 

சுருக்கமாகச் சொல்வதெனில் அறம் எவற்றை எல்லாம் செய்யச் சொல்கிறதோ அவற்றை விருப்பத்தோடுசெய்வதும், அறம் எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்று சுட்டுகிறதோ அவற்றை செய்யாது அவற்றினிடமிருந்துவிலகி நிற்பதும் கல்வியின் இரண்டு முக்கிய நோக்கங்களாகக் கொள்ளப்படுகிறது

 

“செயத்தக்க அல்ல செயக்கெடும் செயத்தக்க
செய்யாமையானும் கெடும்” என்கிறார் வள்ளுவர்

 

எனவே செயத் தக்கவற்றை செய்வதும் செயத்தக்க அல்லாதவற்றை செய்யாது இருப்பதும் அறம்என்றும் கொள்வதற்கு இடமிருக்கிறது

 

இந்த இடத்தில் செயத்தக்க அனைத்தையும் என்று இதற்கு பொருள் கொள்வதைவிட செயத்தக்கஅறச் செயல்களை என்று கொள்ளுதல் நலம்

 

எழுத்துக் கூட்டி வாசிக்கக் கற்பதற்கு முன்னமே நமது குழந்தைகளுக்கு “அறம் செய விரும்பு” என்று பிழையற சொல்வதற்கு கற்றுக்கொடுக்கப் படுகிறது

 

”பிழையற சொல்வதற்கு” என்பதை அடிக்கோடு போட்டு வாசிப்பதுஉத்தமம்

 

இன்னும் ஒரு உண்மையை சொல்வதெனில் “அறம் செய விரும்பு” என்பது பல இடங்களில் அடித்தே சொல்லித் தரப்படுகிறது

 

எங்கள் காலத்தில் சிலர் சொல்லத் தெரியாமல் “அறம் செய விரும்பு” என்பதற்கு பதில் “அறம் செய இரும்பு” என்று சொன்னதும் உண்டு. அதற்காக டீச்சரிடம் அடி ஸ்கேலால் செமையாக வாங்கிய நினைவுகள் இப்போது நினைத்தால் சுவையானவை

 

அப்போது வலித்திருக்க்க் கூடும்

 

கொஞ்சம் நகைச்சுவையோடு பார்த்தால்,

 

அறம் செய இரும்பு என்பதும் சரிதான்

 

அடிப்பதற்கான ஸ்கேல் என்ற வகையில் அடி-ஸ்கேல் என்பதும் சரிதான்

 

அறம் செய விரும்பு என்பதை பிழையாக உச்சரித்தால் அடியே விழும் என்றால் அறம் என்றால் என்ன?

 

இந்த இடத்தில் இரண்டைப் பேசிவிடுவது மிகச் சரியானது

 

1)  அறம் செய விரும்பு என சொல்லக் கற்றுக் கொடுத்த அளவிற்கு அறத்தை செய்வதற்கு குழந்தைகளுக்கு நாம் கற்றுக் கொடுத்தோமில்லை
2)  எது அறம் என்பதையும் குழந்தைகளுக்கு நாம் தெளிவாக சொல்லிக் கொடுத்தோம் இல்லை

 

உண்மையைச் சொல்வதெனில்,

 

திருக்குறள் அறம் என்று சொல்கிற ஒன்றை தங்களது விருப்பக் கடமையாகசெய்வதற்கு குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும் என்பதை அழுத்தவே இந்தக் கட்டுரை

 

பொதுவாக உண்மை, நேர்மை, களவாடாது இருத்தல், புறம் பேசாது இருத்தல், சக மனிதனை எதன் பொருட்டும் இழிவுபடுத்தாது இருத்தல், பெண்மையையைப் போற்றுதல், சக மனிதனின் வலியைத் தன் வலியாகக் கருதுதல் போன்றவை எல்லாம் அறம் என்று கொள்ளப்படுகிறது

 

இந்தப் பட்டியல் இன்னும் ஆயிரம் சொற்களைக் கடந்தும் நீளக் கூடும்

 

எது உண்மை என்பதில்கூட மாறுபட்டு நிற்க முடியும். எது அறிவு என்பதில்கூட மாறுபட்டு நிற்க முடியும்

 

வள்ளுவரேகூட ”பொய்மையும் வய்மையிடத்து” என்கிறார். பொய்யான ஒரு சொல் நன்மையைத் தருமானால் அந்த சொல்தான் உண்மை வள்ளுவருக்கு

 

ஒரு உண்மையான சொல் சில நேரங்களில் ஒரு உயிரைக் கொல்லக் கூடும். பொய்யான ஒரு சொல் சில நேரங்களில் ஒரு உயிரைக் காப்பாற்றும். என்றால், அந்தப் பொய்தான் உண்மை என்கிறார் வள்ளுவர்

 

அது எப்படி ஒரு உண்மை உயிரைக் கொல்லும்?, ஒரு பொய் உயிரைக் காப்பாற்றும்?

 

ஒரு கலவரத்தைச் சந்திக்கிறோம். உயிரைக் கையில் பிடித்தபடி ஒரு இளைஞன் கிழக்குப் பக்கமாக ஓடி மறைகிறான். அவன் சென்ற சில நேரத்தில் ஒரு கூட்டம் வந்து ஒரு இளைஞன் இந்தப் பக்கம் வந்தானா என்று கேட்கிறது என்று கொள்வோம்

 

இல்லை என்று சொல்ல முடியாது. காரணம் அவன் இந்த வழியாகத்தான் அவன் வந்திருக்க முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். இல்லை என்று பொய் சொன்னால் நம்மைக் கொன்று போடுவார்கள்.

 

ஆமாம் என்று உண்மையை சொல்கிறோம்

 

அந்த உண்மை நம்மைக் காப்பாற்றுகிறது

 

அவன் எந்தப் பக்கம் ஓடினான் என்று கேட்கிறார்கள். கிழக்குப் பக்கமாகப் போனான் என்பதுதான் உண்மை. அந்த உண்மையை சொன்னால் அவனைக் கொன்று போடுவார்கள்

 

தெற்குப் பக்கமாகப் போனான் என்று சொல்கிறோம். இது பொய். ஆனால் நாம் சொன்ன இந்தப் பொய்யினால் கிழக்குப் பக்கமாக உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடியப் பிள்ளைப் பிழைத்துக் கொள்வான்

 

இப்போது நாம் முதலில் சொன்ன உண்மையும் உண்மை. இரண்டாவதாக சொன்ன பொய்யும் உண்மை

 

கிட்டத்தட்ட அறிவையும் இப்படியாக நம்மால் மாற்றிப் பார்க்க முடியும். அறிவு என்பது அறிவியலோடும், தொழில் நுட்பத்தோடும், மருத்துவத்தோடும், வானவியல் மற்றும் புயியல் நிபுணத்துவத்தோடும், தத்துவ ஆராய்ச்சிப் போன்றவற்றோடும் பொருத்திப் பார்க்கப்படுகிறது.

 

நாகசாகி, ஹிரோஷிமா போன்றா பேரழிவுகளை அறிவுதான் கொடுத்தது

 

இவற்றில் இருந்து முற்றாக மாறுபட்டு அறிவைப் பார்த்தவர் வள்ளுவர். “பிரிதின் நோய் தன் நோய்போல் போற்றாக் கடை” என்றார்

 

அணுகுண்டு போடு. அனைத்தையும் அழி என்பதும் அறிவுதான். அடிபட்டுக் கிடக்கும் மனிதன் எதிரியே ஆயினும் அவனுக்கு மருந்திட்டு, ஆறுதலாகப் பேசி, அவன் வலி தீர பாடுபடு என்பதும் அறிவுதான். மனிதனை அழிவில் இருந்து காப்பாற்று என்பது இரண்டாயிரம் வருடத்து தமிழ் அறிவு

 

இவைபோல் அல்லாமல் அன்பு என்பதை இப்படிப் பிரித்துப் பொறுத்திப் பார்க்கவே இயலாது

 

அன்பு என்றால் எங்கும் அன்புதான்

 

அன்பை அறமாகக் கொள்ளும் மொழியும் மக்களும் இருக்கக் கூடும்.

 

அன்போடு இருத்தல் அறம் என்று மட்டும் சொல்லித் தரவில்லை தமிழ். “அன்புடுத்தி அலை” என்று சொல்வதோடு நின்றிருந்தால் தமிழும் சராசரிதான். அது கடந்தும் தமிழ் நமக்கு கட்டளையிடுகிறது

 

கொஞ்சமும் நெளிவு சுழிவு இல்லாமல் கறாராக சொல்கிறது

 

“என்பிலதனை காயும் வெயில்போல காயுமே
அன்பிலதனை அறம்”

 

எலும்பு இல்லாத உயிர்களை வெயில் சுடுவதுபோல் அன்பு செய்யாதவனை தண்டித்தலே அறம் என்கிறார் வள்ளுவர்.

 

திருடுதல் போல், கொலை செய்வது போல், கொள்ளையடிப்பது போல், பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்துவது போல் அன்பற்று இருப்பதும் குற்றம் என்கிறது தமிழ் மரபு

 

அன்பற்று இருப்பதை தண்டனைக்குரிய குற்றம் என்றும் கூறுகிறது. எலும்பே இல்லை என்பதற்காக வெயில் அந்த உயிர்களை சுடாமல் இருப்பதில்லை. அதுபோல அன்பு இல்லாதவர்கள் அவர்கள் எவ்வளவு பலவீனமானவர்களாக இருந்தாலும் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்.

 

அன்பில்லாதவனைத் தண்டிப்பதே அறம் என்கிறது தமிழ் மரபு

 

அன்பற்றவனுக்கே இது கதி என்றால் வெறுப்பை விதைப்பவர்களை என்ன செய்வது

 

இந்த மன்னை ஆளும் மகா மனிதரே இது எண்பதிற்கும் இருபதிற்கும் நடக்கும் யுத்தம் என்கிறார்

 

இங்கு அவர்கள் எண்பது என்பது இந்துக்கள். இருபது என்பவர்கள் மற்ற சிறுபான்மையினர்

 

எண்பது இருபதை எதிரியாகக் கொள்ள வேண்டும் என்பதை தனது மகத்தான பதவியின் மாண்பு கருதிக்கூட ஒளித்து மறைத்து சொல்லாமல் கூச்ச நாச்சமே இன்றி வெளிப்படையாகப் பேசும் வெறுப்பை எப்படி எதிர்கொள்வது என்று கவலைப்பட வேண்டும்

 

தான் வெற்றிபெற வேண்டும் என்பதற்காக கடவுளிடம் முறையிடலாம். அதில் எந்தப் பிழையும் இல்லை. அதை போட்டியில் இருக்கும் அனைவருமே செய்வதற்குப் பாத்தியதை உள்ளவர்கள் என்பதால் போட்டியில் நிற்கும் அனைவரும் அல்லது பெரும்பாலானவர்கள் செய்யக் கூடும். கடவுள் பாடு அவர்கள் பாடு அது என்பதால் நமக்கு அதில் பிரச்சினை இல்லை

 

ஆனால், அந்தக் கடவுளையே சிலர் போட்டிக்காக தங்கள் கைகளில் சுமந்து கொண்டு திரிவதும். கடவள் அவர்கள் கடவுள் என்றும். தம்மை ஆதரிக்காதவர்கள் அந்தக் கடவுளின் எதிரிகள் என்றும் அந்தக் கடவுளின் எதிரிகள் இந்த மண்ணின் எதிரிகள் என்று திரிக்கிறார்கள்

 

அப்படியாக அவர்கள் சுட்டும் எதிரிகள் அழித்தொழிக்கப்பட வேண்டும் என்று வெறுப்பை மனசாட்சியே இல்லாமல் விதைத்துக் கொண்டு இருக்கிறார்கள்

 

ஆயிரக் கணக்கானோர் கொலை செய்யப்படுகிறார்களே என்ன சொல்கிறீர்கள் என்று அந்த மகத்தான தலைவரைக் கேட்கிறார்கள். அன்றைய குஜராத் ரத்தச் சகதியில் அவரது பங்கு குறித்தான கேள்வி அது

 

காரில் போகிறோம், ஒரு நாய் அடிபட்டு விட்டது, அதற்காக அழுதுகொண்டா இருக்க முடியும் என்கிறார் அந்தத் தலைவர்.

 

மணிப்பூரில் ஒரு பெண் நிர்வாணமாக இழுத்து வரப்பட்ட காணொலிக் காட்சி வைரலாகிறது. பதறி அழுகிறோம். அந்த மண்ணின் முதல்வரைக் கேட்கிறோம்.

 

“அடப் போங்க, இது மாதிரி எத்தனையோ நடக்கிறது இங்கு. ஒரு காட்சியைப் பார்த்துவிட்டு இப்படிப் பதறினால் நான் என்ன செய்வது” என்பது மாதிரி பதில் தருகிறார்

 

அன்புடுத்தி அலவதற்கு பதில் வெறுப்புடுத்தி அலைகிறார்கள்.

 

அனைவரையும் வெறுப்புடுத்தக் கேட்கிறார்கள்

 

அன்பிற்கும் வெறுப்பிற்கும் இடையே ஒரு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறது

 

எலும்பில்லாதவற்றை சுடும் வெயில்போல அன்பு இல்லாதவர்களைத் தண்டிக்க வேண்டும் என்பது வள்ளுவம்

 

அதுதான் தமிழ் மரபு

 

வெறுப்பாளர்களை அடையாளம் காண வேண்டியதையும், அன்பைத் தெரிவு செய்வதையும் சொல்லித் தர வேண்டும்  

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2024 20:29

இது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினை

 

பொதுவாகவே எல்லா மொழிகளும் வாழ்வாங்கு வாழவேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் நாம்

இந்தியும் வாழ வேண்டும்சமஸ்கிருதமும் வாழ வேண்டும்என்னதென்றே பெயர் தெரியாத எந்தவொரு மொழியும் சிறந்து வாழவேண்டும் என்பதே நம் ஆசைமொழிகளிடையே பகையை விதைத்துக் கொண்டிருப்பவர்கள் நாமல்லஅதை அவர்கள் செய்துகொண்டிருக்கிறார்கள்சமஸ்கிருதத்தை இந்திய ஒன்றியத்தின் ஒற்றை மொழியாக்க படாதபாடு படுகிறார்கள்அதற்கு முன்காப்பாக இந்தியை முன்னெடுக்கிறார்கள்அதற்கான எதிர்வினைதான் ஒன்றியரசின் மொழிக்கொள்கை மீதானது நமது கோவம்மற்றபடி உலகின் எந்தவொரு மொழிமீதும் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லைஇது அவர்களது மொழியாதிக்கத்தின் மீதான நமது எதிர்வினைஉலகின் எல்லா மொழிபேசும் மனிதர்களுக்குமானது நமது தாய்மொழிநாள் வாழ்த்துஇப்படி முடிக்கிறேன்ஆதிக்கம் எதுவாயினும் எதிர்க்கவே எதிர்ப்போம் என்ற வகையில்எம் மீதான இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்பை எதிர்ப்போம்தான்ஆனாலும் அந்த மொழிகளின் மக்களுக்கும் அனைத்து மொழி மக்களுக்கும்எமது தாய்மொழிநாள் வாழ்த்துகள்All reactions
[image error]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 21, 2024 08:13

February 19, 2024

”பே…” எனும் பேரன்புப் பிரவாகம்



 “Great thingsare done
when
men and mountains meet”

 

என்ற ப்ளேக்கின் வரிகளோடு கவிக்கோவின் 

“உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்” என்ற நூலிற்கான தன்னுடைய முன்னுரையைத் தொடங்குவார் சிற்பி

அதையே அச்சுப் பிசகாமல் தோழர் தேனி சுந்தர் அவர்களுடைய இந்தநூலுக்கு செய்துவிட ஆசைப்படுகிறேன்




அதுதான் பொருத்தமும்கூட

மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மகத்துவங்கள் நிகழ்கின்றன

மனிதனும் மலைகளும் சந்திக்கும்போது மட்டுமே மகத்துவங்கள் நிகழும்

இன்னும் தெளிவுபட சொல்ல வேண்டும் எனில்,

மனிதனும் மலைகளும் ஒருவரை ஒருவர் சந்திப்பதற்கான பயணப்பட்டு இருவரும் சந்திக்கும் அந்தப் புள்ளியில்தான் மகத்து வம்நிகழும்

இங்கு ஒவ்வொரு முறையும் அதுதான் நிகழ்கிறது

பிள்ளைகளிடம் சுந்தர் வருகிறாரா என்றால்

ஆமாம்,

வருகிறார்தான்

அப்படி மட்டும்தான் எனில் கற்றல் கற்பித்தல் மட்டுமே நிகழ்ந்திருக்கும்

ஆனால்,

இங்குள்ள ஒவ்வொரு கட்டுரையும் மகத்துவத்தின் ஆவணத் தழும்புகளாக உள்ளன.  

இதுஎப்படிசாத்தியம்?

சுந்தரும் பிள்ளைகளை நோக்கிப் போகிறார். 

குழந்தைகளும் சுந்தரை நோக்கி வருகிறார்கள். 

இருவரும் சந்திக்கும் ஒவ்வொரு முறையும் சந்திப்பிடம் மாண்பால் நிறைகிறது.

பிள்ளைகளும் பயணப்படுகிறார்கள் என்கிறாய், 

சுந்தரும் பயணப்படுகிறார் என்கிறாய். 

சந்திப்பு மட்டும் சரியாய் வகுப்பறையில் நிகழ்கிறதே. அதுஎப்படி?

குழந்தைகள் கிளம்ப எத்தனிக்கும் நேரத்தில் சுந்தர் வந்தடைந்து விடுகிறார்.  

அவரது வேகமும் குழந்தைகளைக் காண அவருக்கிருக்கும் தாகமும் அப்படி

மனிதன் யார்?, 

மலைகள்யார்?

மலைகள் குழந்தைகள்

அவர்களின் மறுபுறத்தைக் காணவேண்டும் எனில்,

உச்சி ஏறி அந்தப் புறம் இறங்க வேண்டும். அற்புதங்கள் நிறைந்தது மலை, 

ஆனால் ஏறுவது சிரமம்.

அதிகாரியின் வருகை குறித்த கட்டுரை,

“சார் ,காலைல வந்தார்ல, 

அவர்லாம் நம்ம ஸ்கூலுக்கு ஹெச்.எம்மா வர்றதா இருந்தா முன்னமே சொல்லிருங்கசார். நாங்கல்லாம் வேற ஸ்கூலுக்கு போய்க்கிறோம்”

இதுதான் குழந்தை. 

அதுமாதிரி ஒரு முசுடு வந்தால் சுந்தரே இருந்தாலும் குழந்தைகள் இடை நிற்பார்கள்

”பே…” என இவரை குழந்தைகள் பயமுறுத்தும் கட்டுரை இருக்கிறதே. வாசித்துப்பாருங்கள். அப்படி ஒரு அழகான கவிதை

காமராஜ் தாத்தா தனது வீட்டிற்கு வந்து வகைவகையாய் சாப்பிட்டதாக சொல்லும் அம்முவிற்கு என் முத்தம்

பிரியாணி வரைக்கும் போகிறது

நானும் பிள்ளைகளால் வருபட்டவன் என்கிற முறையில் இந்த நூல் அப்படி சுவைக்கிறது எனக்கு

குழந்தைகள் அளவிற்கு குனியத் தெரிகிறது தோழர் சுந்தருக்கு

இது ஒரு தேவையான ஆசிரியக் குணம்

அருகி வருகிற அதிசயமாகி வருகிறது

இந்தநூலை ஆசிரியர்களிடம், 

குறிப்பாகத் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களிடம் கொண்டு சேர்ப்போம்

சுந்தர்கள் கிடைப்பார்கள்

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 19, 2024 01:10

February 16, 2024

எழுதும் செயலை எளிதாக்கிய பெரியார்


பெரியார் என்ன செய்து கிழித்தார்? அண்ணல் என்ன செய்து கிழித்தார்? என்ற கேள்விகள் பொதுத் தளத்தில் இன்று அதிகமாக வைக்கப்படுகின்றன. இவற்றை பாஜக போன்ற சனாதனத்தைத் தூக்கிப் பிடிக்கிற அமைப்புகள் வைப்பதில் ஒரு நியாயம் இருக்கிறது. ஆனால் பெரியார் என்ன செய்து கிழித்தார்? என்று அம்பேத்கரியர்களும் அண்ணல் என்ன செய்து கிழித்தார்? என்று பெரியாரியர்களும் பெருங்குரலெடுத்து குற்றம் சாட்டுவது பேரதிகமாய் கவலை கொள்ளச் செய்கிறது.இரண்டு கேள்விகளையுமே சாதி அழிப்பில், சமத்துவத்தில் அக்கறை உள்ள ஒவ்வொருவரும் எதிர்கொள்ள வேண்டியதும் எதிர்விணையாற்ற வேண்டியதும் அவசியமாகிறது. இவற்றுள் முதலில் தந்தை பெரியார் செய்து கிழித்தவற்றுள் ஒரு சிறு விஷயம் குறித்து இப்போது இங்கு உரையாடலாம் என்று படுகிறது. முடியுமானால் அடுத்தடுத்து அண்ணல் குறித்தும் பெரியார் குறித்தும் தொடர்ந்து எடுத்து செல்லவும் ஆசை இருக்கிறது.பெரியார்மீது வைக்கப்படுகிற குற்றச்சாட்டுகளுள் அவர் தமிழரல்ல என்பதும் ஆகவே அவர் தமிழுக்கு எதிராக நடந்து கொண்டவர் என்பதும் மாதிரியானவையும் உண்டு. ”தமிழைக் காட்டுமிராண்டி மொழி” என்று சொன்ன தமிழ் எதிரி என்றும் அவரது எதிரிகள் சொல்லித் திரிகிறார்கள்.ஆனால் பெரியாரின் மொழி குறித்த பார்வை நம்மை வியக்க வைக்கிறது”பெரியாரின் பார்வை பிழையானது , அவரிடம் அறிவியல் பார்வை இல்லை” என்றெல்லாம் பெரியாரது ‘கம்பராமாயண எரிப்பு குறித்து பேசும்போது கடுமையாக சாடுபவர் தோழர் மணியரசன். அவரே “சங்கராச்சாரி தமிழை ‘நீஷ பாஷை’ என்பதற்கும், பெரியார் தமிழைக் ‘காட்டுமிராண்டி மொழி’ என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. அது எதிரியின் சாபம்; இது தாயின் கோபம்” என்று சரியாக முன்வைப்பதை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?” என்ற நூலின் முதல் தொகுதிக்கான முன்னுரையில் அதன் தொகுப்பாசிரியர் தோழர் பசு.கவுதமன் அவர்கள் எடுத்து வைக்கிறார்.ஒரு மொழி வளர்வதற்கும் செல்வாக்கோடு திகழ்வதற்கும் உரிய காரணங்களை எந்தவிதமான வாசனைத் திரவியங்களையும் தெளிக்காமல் பாமரத்தனமான, எளிய மொழியில் கீழ்க்கண்டவாறு குடியரசு பதிப்பகம் 1948 இல் வெளியிட்ட தனது ’மொழி-எழுத்து’ என்ற நூலில் பெரியார் முன்வைக்கிறார் 1) ஒரு மொழி வளர்ந்து சிறக்க அது சுலபமாக கற்றுக் கொள்கிறமாதிரி இருக்க வேண்டும்2) எழுத்துக்கள் சுலபத்தில் எழுதக்கூடிய வகையில் இருக்க வேண்டும்3) எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாக இருக்க வேண்டும்4) அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் இருக்க வேண்டும்நல்ல இலக்கிய வளம் போன்ற பல்வேறு காரணங்களை மொழியின் வளர்ச்சிக்கும் சிறப்பிற்கும் பண்டிதர்களும் மொழி அறிஞர்களும் எடுத்து வைப்பார்கள். அவை தவிர்க்கவே முடியாத முக்கிய காரணங்களே ஆகும். ஆனால் பெரியார் இவற்றில் இருந்து விலகி மொழி வளர்வதற்கும் செழிப்பதற்குமான அடிப்படைக் காரணங்களை பாமரனும் புரிந்துகொள்கிற வகையில் அவனது மொழியிலேயே சொல்கிறார்.இன்னும் சொல்லப்போனால் எப்போதும்போலவே தான் கூறுவது இறுதியானது அல்ல என்றும் கூறுகிறார். இந்த நூலின் தொடக்கத்திலேயே,“எனக்குத் தோன்றிய, என் அநுபவத்திற்கு எட்டிய விசயங்களைத்தான் உங்களுக்கு எடுத்துச் சொல்லப் போகிறேன். அவற்றில் பெரும்பாலும் உங்களுக்குக் குற்றமாகப் படலாம். ஆகவே நான் கூறுவதை நீங்களும், உங்கள் அறிவையும், அநுபவத்தையும், மற்றும் இதுவிசயத்தில், அநுபவமும் ஆராய்ச்சியும் உள்ள பெரியோர்கள் கருத்தையும் கொண்டு சிந்தித்துப் பார்த்து ஏற்கக் கூடியவற்றை ஏற்றும் ஏற்கக் கூடாதவற்றை தள்ளியும் தெளிவுபெற வேண்டுகிறேன்”என்கிறார். அவரவரும் அவரவர் கருத்தோடு இதுவிசயத்தில் ஞானமும் அக்கறையும் கொண்டுள்ள சான்றோர்களின் கருத்தோடும் தம்முடைய கருத்தையும் கலந்து ஆராய்ந்து தெளிவுபெறுமாறு கோரிக்கை வைக்கிறார். ஆனாலும் அவரது மேற்சொன்ன கருத்துக்களை யாராலும் போகிற போக்கில் புறந்தள்ளிவிட்டுப் போய்விட முடியாது.கற்றுக் கொள்கிறமாதிரி இருந்தால்தான் ஒரு மொழி வளரும், சிறக்கும் என்கிறார். எவ்வளவுதான் இலக்கிய, இலக்கண வளத்தோடு ஒரு மொழி இருந்தாலும் அந்த மொழியின் புழக்கமே அதனை கொண்டு செல்லும். திருக்குறளை உலகப் பொதுமறை என்கிறோம். இதைச் சொல்லவும் நிறுவவும் ஒருவனுக்கு அந்த மொழியைத் தெரிந்திருக்க வேண்டும். அதற்கு அவன் அந்த மொழியைக் கற்றறிய வேண்டும். ஒரு மொழியைக் கற்றறிய வேண்டுமானால் அவன் கற்கிற மாதிரி அந்த மொழி எளிமையாக இருக்க வேண்டும்.மொழியின் எளிமை குறித்து விளக்கக்கூட அவர் பெரிது பெரிதாய் அலட்டிக் கொள்ளவே இல்லை. எளிதில் கற்றுக் கொள்ளக்கூடிய வகையில் எழுத்துக்களைக் கொண்ட மொழியே எளிய மொழி என்கிறார். எனில் கற்றுக்கொள்ள இயலாத வகையில் கடினமான எழுத்துக்களைக் கொண்டுள்ள மொழி சிறுகச் சிறுக அழிந்துபோகும் என்பதையும் அவர் இதன்வழி சுட்டுணர்த்துகிறார்.எழுத்துமொழிகள் வழக்கழிந்து போனதற்கான காரணங்களுள் மிக முக்கியமான காரணம் அதைப் புழங்குவதற்கு ஆட்களற்றுப் போனதே ஆகும். புழங்குவதற்கு ஆட்களற்றுப் போனதற்கு அவை கற்பதற்கு கடினமாக இருந்ததும் காரணமாக இருக்கக் கூடும்.எளிய மொழிக்கான அடுத்த காரணமாக பெரியார் முன்வைப்பது ‘குறைந்த எண்ணிக்கையிலான எழுத்துக்கள்’. இலக்கிய இலக்கணங்கள் நிறைந்தமொழி சிறந்த மொழி என்பது சான்றோர்கள் முன்வைக்கும் நியாயமான தர்க்கம். எந்த மொழியில் எழுத்துக்கள் எழுதுகிறமாதிரி எளிமையாகவும் குறைந்த எண்ணிக்கையிலும் இருக்கிறதோ அந்த மொழியில் இலக்கியமும் இலக்கணமும் வளார்ந்து செழிக்கும் என்பது எதார்த்தம்.இதோடு நிறுத்தவில்லை, ஒரு மொழிக்கு அரசாங்கத்தின் சலுகையும் ஆதரவும் அவசியம் என்கிறார். மொழி குறித்த அக்கறை உள்ளவர்கள் அந்த மொழிமீதான அரசாங்கத்தின் ஆதரவை ஈர்ப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்பதும் இதன் உள்ளடக்கமே ஆகும். இதை மிகச் சரியாகப் புரிந்துகொண்டுள்ளதால்தான் இன்றைய மத்திய பாஜக அரசு தனது ஆதரவைக் கொண்டு மட்டுமே சமஸ்கிருதத்தையும் இந்தியையும் இந்தியாவில் நிலைநாட்டிவிட எத்தனிக்கிறது. அனைத்து மொழிக்காரர்களும் இதனைப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றாமல் இன்னுமொருமுறை பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளும் மிகக்கடுமையான பின்னடைவுகளைச் சந்திக்க நேரும். இதைத்தான் பெரியார் நாற்பத்தி எட்டிலேயே தெளிவு படுத்தியிருக்கிறார்.மொழியின் வளர்ச்சிக்கான காரணங்களாக அவர் எவற்றையெல்லாம் கருதியிருக்கிறாரோ அவற்றை எல்லாம் அவர் தமிழுக்காக தன்னால் இயன்ற அளவு செய்திருக்கிறார். இதைத்தான் அவர் தெலுங்கர், தமிழுக்கு எதிரானவர் என்றெல்லாம் அவர்மீது குற்றம் சுமத்துபவர்களின் மேலான பரிசீலனைக்கு கொண்டுசெல்ல ஆசைப்படுகிறோம்.அவர் தமிழைக் ’காட்டுமிராண்டி மொழி’ என்றார். எனவே அவர் தமிழ் மொழியின் விரோதி என்றுகூட அவர்மீது வன்மமாக குறை கூறுகிறார்கள். சமூக வலைதளங்கள் வந்தபிறகு இது இன்னுமாய் விரிந்திருக்கிறது. பெரியாரை வாசிக்காமலே பெரியார் குறித்தான அவதூறுகளை மட்டுமே வாசித்துவிட்டு பல பிள்ளைகள் அவர்மீதான சாடல்களை வைப்பதுதான் வருத்தமளிக்கிறது. அதிலும் பலர் பெரியார் குறித்தான அவதூறுகளைக்கூட முழுதாக உள்வாங்காமல் வினையாற்றுகின்றனர். அவர்கள் அப்படித்தான் என்று கடந்துவிடவும் முடியவில்லை. அவர்கள் நம் பிள்ளைகள். அவர்கள் தெளிவு பெற்றால்தான் நாளைய சமூகம் நல்லபடியாக இருக்கும். ஆகவே அவர்களைத் தெளிவுபடுத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.பெரும்பான்மை அறிஞர்கள் தமிழில் இருந்து சிதறியவையே திராவிட மொழிகள் என்கிறார்கள். தமிழில் இருந்து சிதறியவையே திராவிட மொழிகள் என்பதால் தமிழை ’திராவிட மொழிக் குடும்பத்தின் தாய்” என்கிறார்கள். எல்லாவற்றிற்கும் இருப்பதுபோலவே இதற்கும் எதிர்வினைகளும் உண்டு.தனித்தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தேசியத் தோழர்களும் இந்த அளவில் தமிழை திராவிட மொழிகளின் தாய் என்கிற அளவில் நின்றுகொள்ள பெரியாரோ இதைக் கடந்து மேலே நகர்கிறார். வேறுவேறு பகுதிகளில் வேறுவேறு மாதிரி பேசப்படும் தமிழே திராவிட மொழிகள் என்கிறார் அவர்.இன்றைய தமிழ்நாட்டிலேயே தமிழ் வேவேறுவிதமாகப் புரிந்து கொள்ளப்படுவதை அவர் சுட்டுகிறார். உதாரணமாக ‘நான் தோட்டத்திற்குப் போகிறேன்’ என்றால் வயலுக்குப் போவதாக ஒரு இடத்திலும் கழிவறைக்குப் போவதாக மறு இடத்திலும் புரிந்துகொள்ளப்படுவதாக கூறுகிறார். ‘தோட்டம்’ வயலாகக் கொள்ளப்படும் இடத்தில் ‘கொள்ளை’ கழிவறையாகவும் ‘கொள்ளை’ தோட்டமாக்க் கொள்ளப்படும் இடத்தில் ‘தோட்டம்’ கழிவறையாகவும் கொள்ளப்படுவதை அவர் சுட்டிக் காட்டுகிறார்.ஒரே தமிழ்ச் சொல் இறு வேறு இடங்களில் இருவேறு பொருள்களில் பயன்படுத்தப் படுவதைப்போல்தான் தமிழில் வீடு என்பதுதெலுங்கில் ‘இல்’ என்றும் கன்னடத்தில் ‘மனை’ என்றும் மலையாளத்தில் ‘பொறை’ என்றும் வழங்கப்படுவதாகக் கூறுகிறார்.இதேபோல்தான் தமிழில் ‘நீர்’ எனப்படுவது தெலுங்கில் ‘நீரு’ என்றும் தெலுங்கில் ‘நீள்ளு’ என்றும் மலையாளத்தில் ‘வெள்ளம்’ என்றும் வழங்கப்படுவதையும் சுட்டிக் காட்டுகிறார்.’இல்’, ’மனை’, ‘பொறை’ வீட்டிற்கான மற்ற தமிழ்ச் சொற்கள் என்றும் ‘நீரு’ , ‘நீள்ளு’, ‘வெள்ளம்’ ஆகியவர் நீருக்கான மற்றத் தமிழ்ச் சொற்கள் என்றும் கூறுகிறார். இவற்றை அகராதிகளைக் கொண்டு உறுதிப்படுத்திக் கொள்ள ஏதுவாகும் என்றும் கூறுகிறார்.ஆனால் தெலுங்கர்களும், கன்னடர்களும், மலையாளிகளும் இதை மறுப்பதற்கு காரணமே அந்த மொழிகளில் அங்கங்கு குடியேறிய ஆரியர்கள் கடவுளைத் துணைக்கழைத்து தமது மொழியை அந்த மொழிகளோடு ஏகத்திற்கும் கலந்து விட்டதுதான் என்றும் கூறுகிறார். இந்த ஆரிய மொழிக் கலப்பே அந்த மொழிகளை தமிழில் இருந்து வெறுபட்ட மொழிகள் போன்று தோன்றச் செய்வதாகவும் கூறுகிறார்.அத்தோடுகூட அவர் திருப்தி படவில்லை. அந்தந்த மொழிகளின் பண்டிதர்களைக் கொண்டு அந்தந்த மொழிகளில் இருக்கும் வடமொழி சொற்கள் அனைத்தையும் நீக்கிவிடச் சொல்ல வேண்டும். அவ்வாறு நீக்கிய பிறகு அந்த மூன்று மொழிகளும் தமிழாகவே இருப்பதை நிறுவ முடியும் என்கிறார்.இவை சரியா தவறா என்றெல்லாம் அறுதியிட்டுக் கூற எனக்கு அறிவு இல்லை என்றே படுகிறது. ஆனால் இதுகுறித்து சான்றோர்கள் ஆய்வு செய்து ஒரு முடிவிற்கு வர வேண்டும் என்றே தோன்றுகிறது. பெரியாரும் இதையேதான் விரும்புகிறார்.நாம் சொல்ல விரும்புவது வேறு. திராவிட மொழிகளின் தாய் தமிழ். தமிழில் இருந்துதான் திராவிட மொழிகள் சிதறித் தோன்றின என்கிற அளவில்தான் தமிழறிஞர்களில் ஆகப் பெரும்பாலோர் நிற்கும்போது ‘திராவிட மொழிகள்’ அனைத்தும் தமிழே என்று முரட்டடியாக பெரியார் கூறுகிறார். இந்த பெரியார் எப்படி தமிழ் விரோதியாக இருக்க முடியும்?ஒரு மொழி வளர வேண்டும் என்றால் அதன் எழுத்துக்கள் எளிதில் கற்றுக் கொள்ளுகிற மாதிரியும் எழுதுவதற்கு எளிதானதாகவும் இருக்க வேண்டும். எழுத்துக்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருக்க வேண்டும் என்று கூறிய பெரியார் அப்படியான மொழியாக தமிழை மாற்றுவதற்கு தன்னாலானதை செய்தும் தந்திருக்கிறார்.எழுதுவதற்கு மிக எளிமையான மொழியாக இன்றைக்கு தமிழ் இருக்கிறது. “கணினிக்கு மிகவும் ஏற்ற மொழி தமிழ்” என்று ஒருமுறை சுஜாதா கூறினார்.நாற்பது வயதிற்கு குறைவான தோழர்களும் இளைய பிள்ளைகளும் ஏதோ தமிழ் காலங்காலமாகவே எழுதுவதற்கு இவ்வளவு எளிதாக இருந்த மொழி என்றே கருதக்கூடும்.( படம் பார்க்க)மேற்காணும் எழுத்துக்களை நாற்பதிற்கும் கீழ் உள்ள தோழர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நாங்கள் பள்ளியில் படிக்கும்பொழுது ‘னா’ “ணா’ ‘னை’ ‘ணை’ ‘லை’ ‘ளை’ ‘றா’ போன்ற எழுத்துக்களுக்கு மேலே பட்த்தில் உள்ள எழுத்துக்களைத்தான் பயன்படுத்தினோம். அது எவ்வளவு கடினம் என்பதும் இப்போதைய எழுத்துமுறை எவ்வளவு சுலபம் என்பதையும் அதை எழுதிப் பார்த்தவர்கள் அறிவார்கள். தட்டச்சு செய்வதற்கு படத்தில் உள்ள ஏழு எழுத்துக்களும் அவ்வளவு சிரமம்.என்னைப் போன்றவர்கள்கூட இந்த அளவிற்கு எழுத முடிகிறது என்றால் அதற்கான காரணங்களுள் எளிதான இன்றைய எழுத்து முறையும் ஒன்று.இதைச் செய்தவர் பெரியார்.13.01.1935 அன்றுமுதல் குடியரசு வெளி வருகிறது. அதற்கு முன்னர் அது ”பகுத்தறிவு” என்று வந்த்து என்று தோன்றுகிறது.“பகுத்தறிவு” கடைசி இதழுக்கு முந்தைய இதழில் இந்த எழுத்துச் சீர்திருத்தம் குறித்து தலையங்கம் எழுதுகிறார் பெரியார். அதுதான் பகுத்தறிவின் கடைசி இதழ் என்றும் அடுத்த இதழ் முதல் அது “குடியரசு” என்று பெயர் மாற்றம் பெறும் என்றும் அந்த இதழில் குறிப்பிடுகிறார்கள்.ஆனால் அரசு அனுமதி கிடைக்காத காரணத்தால் பகுத்தறிவின் எண்ணிக்கை ஒன்று கூடுகிறது.13.01.1935 அன்று வந்த “குடியரசு” இதழ்தான் முதன் முதலில் எழுத்துச் சீர்திருத்தத்தோடு வெளிவந்த முதல் இதழ்.நிறைய எதிர்ப்புகள். இறுதியாக மரியாதைக்குரிய எம்.ஜி. ஆர் அவர்கள் முதல்வராக வந்த பிறகுதான் இந்த எழுத்துச் சீர்திருத்தம் நடைமுறைக்கு வருகிறது.ஏற்கனவே பழைய எழுத்து முறையில் எழுதிப் படித்துப் பழகியிருந்த எங்களுக்கு இதில் ஆரம்பத்தில் சிரமம் இருந்தது. ஆனால் பழகப் பழக பாய்வதற்கு ஏற்ற எழுத்து வடிவம் இது என்பதை எங்களால் உணர முடிந்தது.ஆக,1) தமிழில் எழுத்து வடிவத்தில் சீர்த்திருத்தம் செய்ததன் மூலம் எழுத்தை எளிமைபடுத்தியவர் தந்தை பெரியார்2) அப்படிச் செய்ததன் மூலம் எழுதும் செயலை எளிதாக்கியவர் பெரியார்3) தமிழ்ப் பண்டிதர்களே தமிழை திராவிட மொழிகளின் தாய் என்பதோடு நின்றுகொண்ட நேரத்தில் திராவிட மொழிகள் அனைத்தும் தமிழே என்று கொஞ்சம் முரட்டுத் தனத்தோடு கூறியவர் பெரியார்4) உலகப் பொதுமொழி இந்தியப் பொது மொழி என்பதெல்லாம் தமிழ் உள்ளிட்ட மொழிகளை அழிப்பதற்கான முயற்சி (இதுகுறித்து அடுத்த இதழில் எழுதுவேன்) என்று சரியாகக் கணித்தவர்அந்தப் பெரியாரை போகிற போக்கில் அவரையே வாசிக்காமல், அவர்மீதான அவதூறுகளையும் முழுமையாக வாசிக்காமல் சாட வேண்டும் என்றும் மிகுந்த அன்போடும் தயவோடும் வேண்டுகிறேன். மற்றபடி அவரை ஏற்பதும் தள்ளுவதும் விமர்சிப்பதும் அவரே விரும்புவதுபோல நாமும் விரும்புவதுதான். No photo description available. All reactions
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 16, 2024 19:52

February 15, 2024

அந்த இரண்டு அப்புறமும் ’வள்ளுவர்’ எழுத மறந்தது

 

ஏ சாமி தாத்தா சீக்கிரமா கேளுஅப்புறம் மறந்துடும்சொல்லு கிரிஷ்அது வந்துஅகர...முதல...எழுத்தெல்லாம்...அப்புறம்ஆதிபகவன்அப்புறம்முதற்றேஉலகுஅப்புறம்அந்த இரண்டு அப்புறமும் வள்ளுவர் எழுத மறந்தது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2024 03:34

28

 
முதல் மழைக்கும்
இரண்டாவது மழைக்கும்
இடையேயான
இடைவெளி நீ
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on February 15, 2024 03:27

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.